Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை Jan 10, 2026 - 11:07 AM வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைககளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது. குறித்த வழக்கு தீர்ப்புக்காக நேற்றைய தினம் (09) திகதிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது. இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார். குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cmk7vicnv03qwo29nud96yvrj
  3. கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 1 🏡 பாகம் 01 – வெல்வின் கார்டன் சிட்டியில் ஏற்பட்ட முதல் ஆரவாரமும் ஆச்சரியமும் காலைக் கதிரவன் மெதுவாக எழுந்து, வெல்வின் கார்டன் சிட்டியின் [Welwyn Garden City] வீதிகளைத் தங்க நிற ஒளியால் அலங்கரித்தது. ஐந்து வயதிற்கும் சற்று குறைவான 'நிலன்', அரை உறக்கத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டு, கார் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் தாத்தா ஏன் அவர்களை காரில் கூட்டிக் கொண்டு போகிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. குட்டி 'ஆரின்' தனது குழந்தை இருக்கையில் பாதி தூக்கத்தில் இருந்தான்; ஆனால் மூத்த அண்ணன் 'திரேன்' மகிழ்ச்சியுடன் துள்ளிக் கொண்டிருந்தான். உறக்கம் கலந்த குரலில், ஆர்வத்துடன், “தாத்தா, நாம் எங்கே போறோம்?” என நிலன் கேட்டான். “என் சிறிய ஆராய்ச்சியாளனே, அதை நீயே விரைவில் பார்ப்பாய்” என்று தாத்தா சிரித்தபடி “இது ஒரு பெரிய ஆச்சரியம்!” என்று சொன்னார். வெல்வின் கார்டன் சிட்டியின் தெருக்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட புதர்கள், அழகாக சுத்தமான வீடுகளுடன், ஒரு குழந்தைப் புத்தகக் கதையைப் போல் தோன்றின. பறவைகள் கீதம் பாட, மர இலைகள் மெதுவாக அசைந்தன. தாத்தா மெதுவாக காரை ஓட்டிச் சென்றார். வழியில், அங்கு காணப்பட்ட சிறிய, அழகான விவரங்களையும் மற்றும் மனதில் தோன்றிய சிறு சிறு விடயங்களையும் சுட்டிக்காட்டினார் – ஒரு தோட்டத்தில், சோம்பேறித்தனமாக கால்களைக் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பூனை, ஒரு வேலியுடன், அனாதரவாக சாய்ந்து நின்ற சிவப்பு மிதிவண்டி, மற்றும் நடைபாதையில் குறுக்கே வேகமாகச் செல்லும் ஒரு சிறிய அணில் போன்றவற்றைப் பார்த்துக் கொண்டு சென்றனர். தாத்தா கூட்டிக் கொண்டு போன இடத்தை அடைந்ததும் நிலனின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. "இது... ஒரு பூங்காவா?" அவன் தன் இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு கிசுகிசுத்தான். “ஆம், ஆனால் இது சாதாரண பூங்கா அல்ல,” என்று தாத்தா கார் கதவைத் திறந்தார். குழந்தைகள் கற்களால் ஆன ஒரு பாதையில் ஒன்றாகப் பாய்ந்து ஓடினர். அங்கு உயரமான வேலிகளுக்குப் பின்னால் ஒரு இரகசிய தோட்டம் மறைந்திருந்தது. சிவப்பு, மஞ்சள், ஊதா நிற மலர்கள் வானவில் போல் மலர்ந்திருந்தன. லாவெண்டர் [lavender] மற்றும் ரோஜாக்களின் வாசனை காற்றை நிரப்பியது. திடீரென்று, ஒரு மென்மையான சிரிப்பு நிலனின் கவனத்தை ஈர்த்தது. “Welcome to Adventure Grove” ["சாகச தோப்புக்கு வருக"] என்று ஒரு சிறிய மர பலகையில் எழுதப்பட்டிருந்தது. அது அவர்களை புன்னகையுடன் பேசி வரவேற்றது. அதன் பின் சிறிய பாதைகள், பாலங்கள், ஓடைகள், விலங்குகளின் சிற்பங்கள் — எல்லாம் சேர்ந்து ஒரு கற்பனை உலகம் போல விரிந்து பரவி இருந்தது. “தாத்தா! பாருங்க!” என்று திரேன் கத்தினான். தோட்டத்தின் மையத்தில் உள்ள ஒரு சிறிய கோட்டையை சுட்டிக்காட்டினான். அதில் கோபுரங்களும், காற்றில் பறக்கும் சிறிய கொடிகளும் இருந்தன. "நாம் உள்ளே போகலாமா?” என்று கேட்டான். "நிச்சயமாக!" என்று தாத்தா பதிலளித்தார். அங்கு தான் முதல் அதிசயமான அனுபவம் அவர்களுக்கு ஆரம்பமானது. குழந்தைகள் வளைந்து நெளிந்து ஓடி, மறைந்திருக்கும் மூலைகளைக் கண்டுபிடித்தனர்: வாத்துக் குஞ்சுகள் மிதக்கும் ஒரு சிறிய குளம், ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்திருந்து எட்டிப்பார்க்கும் ஒரு செதுக்கப்பட்ட மர நரி சிற்பம், மற்றும் அவர்களுக்காகவே செய்யப்பட்டதாகத் தோன்றும் ஒரு வில்லோ மரத்தின் [அலரி மரம் or காற்றாடி வகை மரம் / willow tree] கீழ் மறைந்திருக்கும் ஒரு ஊஞ்சல் என பலவற்றை மூலை முடுக்குகளில் கண்டு பிடித்தனர். எப்போதும் ஆர்வமுள்ள நிலன், ஒரு மலர் படுக்கையின் அருகே ஏதோ மின்னுவதைக் கவனித்தான். மண்டியிட்டு [குனிந்து] அவன் பார்த்த பொழுது, வண்ணமயமான கூழாங்கற்களால் [colorful pebbles] அமைக்கப்பட்ட சிறிய ரகசிய பாதை ஒன்றைக் கண்டான். "புதையல் வேட்டை!" என்று அவன் கூச்சலிட்டான். தாத்தா சிரித்துக்கொண்டே ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய கூடையைக் கொடுத்தார். அவர்கள் கூழாங்கற்களைச் சேகரிக்கத் தொடங்கினர். அப்பொழுது அங்கே, அந்த ரகசிய பாதையில், ஒவ்வொரு முறையும் ஒரு பட்டாம்பூச்சி கலைந்து பறந்து செல்லும்போதும் அல்லது ஒரு பறவை கலைந்து குரல் கொடுக்கும் போதும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் பசுமையான புல்வெளியில் அமர்ந்தனர். தாத்தா ஒரு சாப்பாட்டு கூடையை திறந்தார். அதில் சாண்ட்விச் [sandwich], பழங்கள், பிஸ்கட்டுகள் [Biscuits] என பல சிற்றுண்டிகள் இருந்தன. தாத்தா சிரித்தபடியே, “இது என் சிறிய சாகச வீரர்களுக்கான காலை விருந்து,” என்றார். நிலன் ஒரு ஸ்ட்ராபெர்ரி [strawberry] எடுத்து, அதன் இனிப்பை ருசித்தான். திரேன் "புதையல் வேட்டையின்" [“Treasure Hunt”] வெற்றியை பெருமையுடன் எல்லோருக்கும் விவரிக்க, குட்டி ஆரின் தாத்தாவின் மடியில் கைத்தட்டி கைத்தட்டி விளையாடிக் கொண்டு இருந்தான். ஆனால் அவர்களுக்கு இன்னும் ஒரு அதிசயம் [ஆச்சரியம்] காத்திருந்தது. தாத்தா குழந்தைகளை ஒரு மறைக்கப்பட்ட மூலையில், ஒரு சிறிய மர மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு திரைக்குப் பின்னால் இருந்து, ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி தொடங்கியது - பேசும் விலங்குகள் மற்றும் மாயாஜால சாகசங்கள் பல அங்கு நிறைந்து இருந்தது. ஒவ்வொரு காட்சியும் அவற்றின் பெயர்களைச் சேர்த்து கவனமாக விபரமாக கொடுத்தது. ஒரு பொம்மை டிராகன் [a puppet dragon], அங்கே நிலனை வணங்கிய பொழுது, நிலன் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டான். கூச்ச சுபாவமுள்ள குட்டி ஆரின் கூட தனது தாத்தாவின் கைகளிலிருந்து சிரித்தான். நேரம் செல்லச் செல்ல, கதிரவன் மேலே மேலே ஏறினான். குழந்தைகள் கதிரவனின் வெப்பத்தை, ஒரு வெதுவெதுப்பான அரவணைப்பை, உணர்ந்து, அதில் மகிழ்ச்சியிலும் அன்பிலும் மூழ்கினர் — உண்மையில் சூரிய ஒளியிலிருந்து மட்டுமல்ல, கண்டுபிடிப்பின் சிலிர்ப்பாலும், குடும்பத்தின் ஆறுதலாலும், அவர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் காலையில் அனுபவித்த மாயாஜாலத்தாலும் மூழ்கி இருந்தனர். தாத்தா, சிரித்துக் கொண்டே, இவை தான் வாழ்க்கையின் உண்மையான செல்வம் என எண்ணினார். சாகச தோப்பை விட்டு, வீட்டிற்குத் திரும்பும்போது, குழந்தைகள் சோர்வாக இருந்தனர், ஆனால் மகிழ்ச்சியாக இருந்தனர், அவர்களின் மனம் அரண்மனைகள், ரகசிய பாதைகள் மற்றும் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களால் நிறைந்திருந்தது. "நன்றி தாத்தா," நிலன் மெதுவாக தனது இருக்கையில் சாய்ந்து அரைத்தூக்கத்தில் கூறினான். “இது என் வாழ்நாள் சிறந்த அதிசயம்." தாத்தா என்றான், சோம்பல் முறித்தபடி. தாத்தா மனம் நிறைந்த புன்னகையுடன் கூறினார். "சாகசம் இப்போதுதான் தொடங்கியுள்ளது, குழந்தைகளே. அது தொடரவேண்டும் என்றால், அடுத்த வாரம் தொடங்கும், உங்கள் கோடை விடுமுறை வரை காத்திருங்கள்." என்றார். இரகசிய தோட்டத்தையும் சிரிப்பின் எதிரொலிகளையும் ஒருபுறம் தள்ளி விட்டுவிட்டு, அவர்களின் அற்புதமான பயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்குத் தயாராக கார் வீடு நோக்கி மெதுவாகச் சென்றது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 02 தொடரும் துளி/DROP: 1978 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 1 https://www.facebook.com/groups/978753388866632/posts/33171634115818475/? கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 2 🏡பாகம் 02 – வெல்வின் கார்டன் சிட்டியில் மீண்டும் ஒரு ஆச்சரியம் அது ஒரு ஒளிமிகுந்த, தென்றல் காற்று வீசிய சனிக்கிழமை காலை. மேகங்கள் கூட மகிழ்ச்சியாகத் தெரிந்த ஒரு காலைப் பொழுதாக வெல்வின் கார்டன் சிட்டி [Welwyn Garden City] இருந்தது. மார்பு சிவந்த சிறுபறவைகளான ராபின் [Robins] தோட்ட வேலியில் இருந்து பாட, தபால்காரர் விசில் அடிக்க, வீட்டிற்குள், மூன்று சிறுவர்கள் ஏற்கனவே ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் [இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டமாகும் / Hertfordshire] உள்ள அனைத்து பறவைகளையும் விட அதிக சத்தம் எழுப்பிக் கொண்டு, அவர்களது கோடை விடுமுறையின் முதல் நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். மூத்த பேரனும் மற்றும் பத்துவயது நிரம்பிய திரேன் ஒரு அறிவியல் பணியில் [scientific mission] தன்பாட்டில் விளையாடிக்கொண்டு இருந்தான். ஆர்சனல் கால்பந்து கிளப்பின் [Arsenal F.C] அதிதீவீர ஆதரவாளனான அவன், கையில் ஒரு டார்ச்சுடன் [torch] சோபாவின் கீழ் ஊர்ந்து சென்று, கிசுகிசுத்தான். “காணாமல் போன கால்பந்து இந்தக் காட்டில் எங்காவது ஒளிந்து கொண்டிருக்க வேண்டும்!” என்று காட்டில் தேடுவது போல பாசாங்கு செய்தான். ஐந்து வயது நிலன், ஒரு துணிச்சலான விண்வெளி வீரனாகத் தன்னை தயார் படுத்திக் கொண்டு, தலைக்கவசத்திற்குப் பதிலாக ஒரு பாத்திரத்தை தலையில் கவிழ்த்து போட்டுக் கொண்டு, ஒரு துணி துவைக்கும் கூடையில் அமர்ந்து, அதை விண்வெளி நோக்கி போகும் ராக்கெட் கப்பலாக கற்பனை செய்து, பெருமையாகக் சத்தம் போட்டு, “மூன்று… இரண்டு… ஒன்று… புறப்படு நிலா நோக்கி!” என்று கூவினான். இதற்கிடையில், ஒரு வயதான குட்டி ஆரின், தாத்தாவின் பழைய கம்பள சாக்ஸை [old woolly sock] கண்டு பிடித்து, அதைக் கடித்து மகிழ்ந்து கொண்டிருந்தான். இந்த மகிழ்ச்சிகரமான பேரப்பிள்ளைகளின் குறும்புகளுக்கு நடுவில், தாத்தா 'கந்தையா தில்லை' அமைதியாக தனது காலை தேநீரைப் பருகிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியும் பெருமையும் கலந்த புன்னகையுடன் பேரப்பிள்ளைகளின் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த போது, அவரது கண்ணாடிகள் கூட மூக்கின் நுனி வரை நழுவி சென்று எட்டிப்பார்த்தது. வாழ்க்கை அவருக்கு பல சாகசங்களைக் கொடுத்திருந்தாலும், இந்த மூன்று சிறு புயல்களே அவருக்கு மிகப் பிரியமானவையாக இன்று இருந்தது “சரி என் சிறு சூறாவளிகளே,” என்று தாத்தா தேநீர் அருந்தியதும் மெல்லக் கூறி, “அனைவரும் தயாராகுங்கள் — நாம் இனி உடுப்புகளை அடுக்கி, பயணப்பெட்டிகளை [suitcases] தயார் செய்ய வேண்டும்" என்றார் மூன்று பேரப்பிள்ளைகளின் தலைகளும் ஒரே நேரத்தில் ஆச்சரியத்தில் மேலெழுந்தன. “உடுப்பு அடுக்குதல்?” — திரேன் ஆவலாக, தன் கண்களை அகல விரித்துக்கொண்டு தாத்தாவிடம் கேட்டான். “வீடு மாறப் போகிறோமா?” — நிலன் தன் கூடையில் இருந்து குதித்து எழும்பினான். “பா-பா!” [“Baa-ba!”] என்று ஆரின் கத்தினான் — தன்னுடைய பால் எங்கே என்று? தாத்தா சிரித்தார். “இல்லை இல்லை, நாம் வீடு மாறவில்லை — பயணம் போகப் போகிறோம்! நான் ஒரு அற்புதமான இடத்துக்கு ஆச்சரியமான சாகசத்தைத் திட்டமிட்டுள்ளேன், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் [ஆச்சரியம் / surprise] ஆக" என்றார். வெப்பமாய் வெளிச்சமாய் இருக்கும் ஒரு நாட்டுக்கு, அங்கே நீங்கள் கடித்து சுவைத்து உண்ண நிறைய கூக்கீஸ்களும் ["பிஸ்கட்" அல்லது "இனிப்பு அப்பம்" / cookies] இருக்கும்!” “கூக்கீஸா?” என்று நிலனின் கண்கள் ஒளிர்ந்தன. “அது பாட்டியின் சமையலறையா?” என்று கேட்டான். “அதையும் விட சிறந்தது,” என்று தாத்தா கண் சிமிட்டினார். “மணல் தங்கமாக ஒளிவிடும் இடம், கோபுரங்கள் மேகங்களைத் தொடும் இடம், கடலும் நகரத்தைக் கட்டி அணைக்கும் இடம்!” என்று கூறிவிட்டு" சொல்லுங்கள் பார்ப்பம் என்றார். திரேன் முதலில் கத்தினான், “துபாய்?”. தாத்தா பெருமையாகத் தலைஅசைத்தார். “ஆம், துபாய் தான் — நம்முடைய அடுத்த குடும்ப சாகசம்!” என்றார். ஒரு கணம் திகைப்பூட்டும் அமைதி நிலவியது, அதைத் தொடர்ந்து அடுத்த கணமே வீடே குலுங்கும் அளவுக்கு சத்தம் கேட்டது! அந்த அலறலில், வேலியில் அமர்ந்து இருந்த ராபின் பறவைகள் பயம் கொண்டு அங்கிருந்து பறந்து சென்றன. திரேன் உலக வரைபடத்தை எடுக்க ஓடினான். நிலன் துள்ளிக் குதித்து, “துபாய்! துபாய்! துபாய்!” என்று ஏதேதோ சொல்லி சொல்லி கோஷமிட்டான். ஆரினும் தன் சிறு கைகளால்த் தட்டியபடி தாத்தாவின் முழங்காலில் முத்தம் கொடுத்து மகிழ்ந்தான். “இப்போ எல்லோரும் உங்கள் உங்கள் பயணப் பெட்டியை அடுக்க ஆரம்பியுங்கள்,” என்று தாத்தா மகிழ்ச்சியுடன் கட்டளை இட்டார். “ திரேன், உன் எக்ஸ்ப்ளோரர் தொப்பியை [ஆய்வுப்பயணத் தொப்பி / explorer hat] எடுத்து வா. நிலன், உன் பாத்திரத் தொப்பியை வீட்டிலேயே விட்டுவிட்டு வா — இல்லை யென்றால் விமான நிலையத்திலே, உன்னைச் சமையல் காரன் [குக் / chef] என நினைப்பார்கள்! ஆரின், நீ உன் புன்னகையை மறக்காமல் எடுத்துக்கொண்டு வா, அழாமல் மகிழ்வாக இருக்க.” என்று தாத்தா எல்லோருக்கும் அன்பான வேண்டுகோள் வழங்கினார். நேரம் செல்லச் செல்ல சாளரத்தின் [யன்னல்] திரைச்சீலைகள் வழியாக சூரிய ஒளி வீட்டுக்குள் பரவின. விமான நிலையம் போகும் நேரம் நெருங்குகிறது என்பதை இது நினைவூட்டியது. வெல்வின் கார்டன் சிட்டியில் உள்ள அவர்களின் வீடு இதனால், உற்சாகத்தால் சலசலத்தது. விமான நிலையத்திற்குப் புறப்படத் தயாராகும் இந்த வேளையில், சூட்கேஸ்கள் (சக்கரங்களுடன்) இழுக்கப்பட அல்லது தள்ளப்பட தொடங்கின. சாக்ஸ் [காலுறை / socks] மீண்டும் காணாமல் போயின, தாத்தா தனக்குள் மெதுவாகச் சிரித்தார். "இன்னொரு சாகசம் தொடங்குகிறது - இந்த முறை, என் மூன்று சிறிய ஹீரோக்களுடன் [கதாநாயகர்களுடன்]." என்று தாத்தா பெருமையுடன் அறிவித்தார் 🌞 நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 03 தொடரும் துளி/DROP: 1984 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 2] https://www.facebook.com/groups/978753388866632/posts/33216229664692253/?
  4. இங்கிலாந்து முழுவதும் கடும் பனி ; 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை 10 Jan, 2026 | 10:17 AM இங்கிலாந்து உட்பட மேலும் பல நாடுகளில் பனி மழை மற்றும் கடும் குளிர் காரணமாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், பத்தாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து முழுவதும் கனமான பனி, மற்றும் பலத்த காற்று வீசியுள்ள நிலையில், மேலும் கடுமையான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்கொட்லாந்து மற்றும் வட இங்கிலாந்திலுள்ள பகுதிக்கு பனி மற்றும் கடும் குளிர் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை (11) வரை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு இங்கிலாந்தில் மட்டும் 34,000க்கும் மேற்பட்ட இடங்களில் இன்னும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மிட்லாண்ட்ஸ் மற்றும் வேல்ஸிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் மின்தடை தொடர்கிறது. மேற்கு மிட்லாண்ட்ஸில் சுமார் 2,000 இடங்களிலும், கிழக்கு மிட்லாண்ட்ஸில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களிலும், வேல்ஸில் 130 இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (09) காலை ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பெரும்பாலானவை குறுகிய தூரப் பயண விமானங்களாகும். தேசிய ரயில்வே நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை (11) வரை ரயில் சேவைகள் பாதிக்கப்படலாம் என எச்சரித்து, பயணிகள் முன்கூட்டியே பயண விவரங்களை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகளில் பனியுடன் கூடிய மழை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிறு பிற்பகலில் தென் மேற்கு பகுதிகளில் வெப்பநிலை 12°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமைக்குள் மிதமான வானிலை நாடு முழுவதும் பரவும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/235653
  5. எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. Jan 10, 2026 - 07:00 AM தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கணொளி ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்த வகையில் எனது விடுதலையையிட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், பல்வேறு வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் பல காரணங்களுக்காக. அதேபோன்று, எனது தரப்பு நியாயங்களை நீதிமன்றில் எடுத்துரைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், அந்த நியாயங்களை உணர்ந்து தீர்ப்பளித்த கம்பஹா மாவட்ட நீதவான் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்." என்றார். 2001ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் நேற்றைய தினம் அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmk7moi8a03qmo29nsw0hd480
  6. இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு Jan 9, 2026 - 11:35 PM இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தனது விஜயத்தை நிறைவு செய்து இன்று (09) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விஜயத்தின் போது, ஜெனரல் திவேதி இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி, தொழில்முறை இராணுவக் கல்வி மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தினார். இதன்போது இந்திய இராணுவத் தளபதி, இலங்கை இராணுவத்தின் முக்கிய நிறுவனங்கள் சிலவற்றிற்கு விஜயம் செய்ததுடன், இலங்கை இராணுவத்திற்கு 20 நவீன கெப் ரக வாகனங்கள், நான்கு நோயாளர் காவு வண்டிகள் மற்றும் சில பயிற்சி உருவகப்படுத்திகளை நன்கொடையாக வழங்கினார். அத்துடன், புத்தல இலங்கை இராணுவ போர் கல்லூரியின் பயன்பாட்டிற்காக இந்திய உதவியின் கீழ் முழுமையான விளையாட்டு வளாகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் இதன்போது நட்டி வைக்கப்பட்டது. இது இந்திய - இலங்கை இராணுவ நட்புறவின் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்ததுடன், இலங்கை இராணுவத் தளபதி மற்றும் இந்திய இராணுவத் தளபதி ஆகியோருக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவும் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmk76t3r603qjo29nvfspwfk2
  7. மத்திய பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, ஏழு பேர் காயம், 27 பேர் மாயம் 10 Jan, 2026 | 09:09 AM மத்திய பிலிப்பைன்ஸின் செபு நகரின் பினாலிவ் பகுதியில் கழிவு பிரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட குப்பைச் சரிவில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் 27 காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றுள்ளதுடன், அந்த பகுதியில் பெரும் அளவிலான குப்பை மற்றும் இடிபாடுகள் சரிந்து விழுந்ததாகவும், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதுவரை எட்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குப்பை மேடையில் பணியாற்றிய தொழிலாளர்களே எனத் தெரிவிக்கப்பட்டாலும், தொழிலாளர்கள் அல்லாதவர்கள் உள்ளனரா என்பது தெளிவாக தெரியவரவில்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்களில் பெண் தொழிலாளி ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் மற்றவர்கள் அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன் வரலாற்றில் இதுவரை நடந்த மிக மோசமான இத்தகைய விபத்து, திறந்த குப்பை மேடைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/235651
  8. டென்மார்க்குக்கு வேற வழி இல்லை. புட்டினிடம் பேசி - கிரின்லாந்தை தொட்டால் மாஸ்கோ சிறார் வீடியோ வெளிவரும் என மிரட்ட சொல்வதே ஒரே வழி. அல்லது கிரீன்லாந்தை எப்ஸ்டீன் ஐலண்ட் என பெயர்மாற்றினாலும் தம்பர் அதை பற்றி கதைக்க மாட்டார்😉.
  9. ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா களத்துக்கு வந்தால் சந்தம் கேட்காதுதான். டிரம்ப் தேர்தலில் வெல்ல 2 வருடம் முன்பே வந்த மிட்டேர்ம் எலக்சனின் போதே டிரம்ப் அடுத்த தேர்தலில் வென்றால் இது நடக்கும் என எதிர்வுகூறப்பட்டது. அதன்படியேதான் நடக்கிறது. கிரின்லாந்து முதல், நேட்டோ உடைப்பு வரை, புட்டின் வீடியோக்களுக்கு பயந்து, டிரம்ப் எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஐரோப்பா-அமெரிக்கா உறவை சீர்குலைப்பனவாகவே அமைகிறன. இதை எதிர்கொள்ள ஈயூ அமரிக்காவில் இருந்து விலகி கொஞ்சம் ரஸ்யா பக்கம் நகர்வது தவிர்க்க முடியாதது. இதுதான் டிரம்பினதும் அவரின் முதலாளி புட்டினதும் நோக்கமும். அதாவது ஐரோப்பாவில் அமெரிக்காவை விட ரஸ்யாவை பலமான நாடாக்குவது. செத்த கிளிக்கு இராணுவ பலம் சொல்லி கொள்ளும்படி இல்லை எனிலும், டிரம்ப், அவர் மஸ்கோவில் சிறார் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் அணுகுண்டை விட கூடிய பலத்தை கொடுக்கிறன. அந்தவகையில் இது செத்த கிளிக்கு வெற்றிதான். ஆனால் இதை யாழ்களத்தில் எவரும் கதைக்கவில்லை என்பது போல் அடி முட்டாள்தனமான கருத்து வரக்கூடாது. ஏன் எனில் டிரம்ப் வென்றால் அச்சொட்டாக இப்படித்தான் நடக்கும் என 3 வருடம் முன்பே யாழில் எழுதபட்டு விட்டது.
  10. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திருகோணமலைக்கு அருகில் Jan 9, 2026 - 11:10 PM தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) இரவு 10.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது. இது நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய நாளை (10) வட மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmk75w0jp03qio29n4dni5s5x
  11. Today
  12. 🏝️ புயல் வந்து போன பின்னும் 🏡 🏝️
  13. ரசியா தரமான அடி ஒன்று முதன் முதலாக கொடுத்திருக்கு யாழ் களத்தில் ஒரு செய்தியையும் காணோம்.
  14. அந்த குட்டி தீவில் முழுசா வளர்ந்த ஒரு பெண்ணை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு .......... தனியா சந்திச்சு? ஒரு விதத்தில் அந்த பெண் ஒரு சமூக சேவைதான் செய்து இருக்கிறார். இனி கள்ளகாதலியுடன் தனியா சந்திக்க எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும்
  15. தமிழரின் இழிநிலை தெரியாமல் தமிழருக்கு தாயகம் வேண்டும் என்று போராடி உயிர்நீத்த மாவீர்ர்கள், பொதுமக்களை நினைத்தால் கவலையாக உள்ளது. இப்படியான கயவர்கள். அவர்களின் நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களை புறக்கணிப்பதன் மூலம் இவர்களை உளரீதியாக, சட்டம் தண்டிக்கமுதல் கனடாவாழ் மக்கள் தண்டிக்க வேண்டும்
  16. டாக்குத்தர்மார், வைத்தியசாலைகள் தங்கட சுகத்துக்கும் வசதிக்கும் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பிக்கின்றார்கள் இயற்கையாக குழந்தை பிரசவிக்கும் என்றாலும். பிறகு ஆபரேசன் செய்தால் இரண்டு வருடங்களுக்கு குழந்தைக்கு முயற்சி செய்யக்கூடாது என்று சொல்வார்கள். வயிற்றை வெட்டித்தான் எடுப்பது வழமை என்றால் பிறகு எப்படி பிறப்பு விகிதம் கூடும்? சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பெறுவதை ஊக்குவித்தால் நல்ல காசு பார்க்கலாம். தங்களுக்கு காசு வரும் வழியைத்தானே ஊக்குவிப்பார்கள்!
  17. Yesterday
  18. நன்றி அண்ணை சட்டதிட்டம் என்றில்லை. நிதி சேகரிப்பில் நீங்கள் கில்லி என அறிவேன். முன்னோடிக்கு இப்படி ஒருவர் இன்றியமையாத சொத்து 😎.
  19. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று கனடா, தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையி, இவர்கள் அதிகாரத்திற்காக கொலை செய்யும் போது அவர்களும் தங்கள் கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும். அதெல்லாம் நமக்கு கவலையில்லை, நமக்கு வேண்டியது; அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும். நாடு கடந்து சென்றாலும் எங்கள் சுயநலத்தையும் எங்களோடு கொண்டே செல்கிறோம். "தலைவனாய் இருக்க விரும்புகிறவர், சுயநலம் களைந்து, தன்னை தாழ்த்தி மற்றவர்களுக்கு ஊழியம் செய்கிறவர்களாய் இருக்கவேண்டும்." அதுவே உண்மையான தலைமைத்துவம். ஒருவரை கொலை செய்து அல்லது நற்பெயரை கொலை செய்து பதவியை கைப்பற்றுவது நல்ல தமைமைத்துவ பண்பு கிடையாது. இவரது சுயநலம், பணபலம் இப்போது இவரை சிறைக்கு கொண்டு செல்லப்போகிறது, அனிஞாயமாக நாட்டில் வாழும் இருவரையும் சேர்த்து விட்டிருக்கிறது.
  20. நாங்களும் தான் கொக்குவிலில் வசித்து வந்த நாங்கள் சங்கானைக்குத்தான் சென்றோம் முதலில்
  21. ஒரு பிரச்சனையுமில்லை. ஏராளன், இந்த திட்டம் சம்பந்தமாக முதல் ஒரு மலசல கூடம் கட்டும் நிர்மாண செய்தியை தந்திருந்தார். அதில் குறிப்பிட்ட தொகையையும் தெரிவித்திருந்தார். அதை நான் பொறுப்பெடுத்திருந்தேன். அதை மீறி எதையும் புதிதாக எதையும் தனிப்பட செய்ய மாட்டேன். ஏனைய பங்களிப்புகளும் திட்டங்களும் முன்னோடியின் சட்ட திட்டங்களின் கீழ் செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன்.
  22. எங்கும், எதிலும் அதிகாரப்போட்டி நாடுகடந்தும் கொலை செய்யுமளவிற்கு போயிருக்கிறது. எப்போதும் தாங்களே தலைமைப்பீடத்தில் இருக்கவேண்டும் என்கிற அதிகார வெறி. கோயிலிலுமா? இதென்ன மனநிலை?
  23. முதலில் விசேட தேவை உள்ளவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யலாம் அதே வேளை எங்களால் பயன்பெறும் பயனாளர்கள் வேறு அமைக்களிடம் இருந்து பெரிய அளவில் உதவியையும் பெறாதவர்களாக இருக்க வேண்டும். சிலர் பல இடங்களில் உதவிகளை பெற்றுக் கொண்டு தொடர்ந்தும் ஒன்றுமில்லாதவர்கள் போல இருப்பார்கள் இவர்களை எல்லாம் அந்தப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அல்லது கிராம சேவை அலுவலர்கள் மூலம் அறிந்து உண்மையான வறுமை உள்ள குடும்பங்களைத் தெரிவு செய்யலாம்
  24. உக்கிரேன் இரஸ்சிய யுத்தத்தின் பின்னர் உலகமயமாதலில் இருந்து நாடுகளின் தொகுதிகள் கொண்ட அமைப்பு நோக்கி உலகு நகர்வதாக ஐ எம் எப் கூறியது (பல்துருவ உலக ஒழுங்கு). அந்த நிலை 2024 உலக பொருளாதாரத்தில் 7% அழித்துவிட்டதாக கூறியதாக நினைவுள்ளது (ஆண்டு, புள்ளிவிபரத்தில் மாற்றம் இருக்கலாம்) ஆனால் தற்போது உலகம் அதன் இடைவெளியினை குறைக்கும் முயற்சியாக இந்த ஒப்பந்தத்தினை கருதுகிறேன். இந்த ஒப்பந்தங்களால் அதிக நன்மை பெற போகும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட தென்னமரிக்க நாடுகளாகும், அவாஇ பிரிக்ஸ் இலும் உள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் அவர்களுக்கு மேலதிக நன்மையினை வழங்குகிறது. அதிக நலனை பெறும் வகையில் தம்மை தகவமைத்த (Repositioning) தென்னமரிக்க நாடுகள் பொருளாதார பிராந்திய அரசியலில் ஒரு மாற்றீட்டினை உருவாக்க முடியும் அதற்கு இந்த ஒப்பந்தம் தடையின்றி நிறைவேற்றப்படவேண்டும். கால மாற்றத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்று முன்னோக்கி செல்வது நல்ல முயற்சி. CNBCIMF says fragmentation could cost global economy up to 7%...Fragmentation across the world could cost the global economy up to 7% of GDP, according to a new report by the IMF.ஆண்டு 2023
  25. இது ஒரு முன்னுரிமை கருதுபொருள் என்பதை தாண்டி, உதவி கிடைக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் means testing (வருவாய் சோதனை) யாக இருக்க வேண்டும். வசதி இருந்தால் அவர்களே கட்டி கொள்ள வேண்டும்.
  26. EU-Mercosur மெகா வர்த்தக ஒப்பந்தம்: வெற்றியாளர்களும் தோல்வியுற்றவர்களும் மால்பெக்கை யார் அவிழ்க்கிறார்கள் - யார் அவர்களின் போர்டியாக்ஸில் அழுகிறார்கள் (இருமல், இம்மானுவேல் மக்ரோன், இருமல்) என்று POLITICO பகுப்பாய்வு செய்கிறது. கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மீதான 90 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை நீக்கும். | நடாலியா டெல்கடோவின் புகைப்படம்-விளக்கப்படம். ஜனவரி 9, 2026 மாலை 4:57 CET கார்லோ மார்டஸ்செல்லி , கோயன் வெர்ஹெல்ஸ்ட் மற்றும் டக்ளஸ் புஸ்வின் மூலம் 25 ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் கிடைத்தது . அங்கு செல்வதற்கு இரத்தம், வியர்வை, கண்ணீர் மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட விவாதங்கள் தேவைப்பட்டன, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறுதியாக மெர்கோசூர் கூட்டணியுடனான ஒப்பந்தத்தை ஆதரித்தன - ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் 700 மில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய ஒரு சுதந்திர வர்த்தகப் பகுதியை உருவாக்க வழி வகுத்தன. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மீதான 90 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை நீக்கும். ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் அர்ஜென்டினாவின் பம்பாக்களில் இருந்து புல் மேய்க்கப்பட்ட மாட்டிறைச்சியை சாப்பிட முடியும். பிரேசிலிய ஓட்டுநர்கள் ஜெர்மன் மோட்டார்கள் மீதான இறக்குமதி வரிகள் குறைவதைக் காண்பார்கள். இந்த ஒப்பந்தத்தின் பொருளாதார தாக்கத்தைப் பொறுத்தவரை, அதன் மீதான காவியப் போர்களுடன் ஒப்பிடுகையில் அது மங்கிவிட்டது: ஐரோப்பிய ஆணையம் 2040 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரத்தில் €77.6 பில்லியன் (அல்லது 0.05 சதவீதம்) சேர்க்கும் என்று மதிப்பிடுகிறது. எந்த ஒப்பந்தத்திலும் இருப்பது போல, வெற்றியாளர்களும் தோல்வியாளர்களும் உள்ளனர். POLITICO, யார் தங்கள் மால்பெக்கை அவிழ்க்கிறார்கள், மறுபுறம், போர்டியாக்ஸில் யார் அழுகிறார்கள் என்பதை உங்களுக்குக் காட்டுகிறது. வெற்றியாளர்கள் ஜார்ஜியா மெலோனி இத்தாலிய பிரதமர் அதை மீண்டும் செய்துள்ளார். அரசியல் காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதைக் கண்ட ஜியோர்ஜியா மெலோனி, ஒப்பந்தத்திற்கு எதிரான பிரெஞ்சு எதிர்ப்பின் பின்னால் தனது பலத்தை செலுத்துவதாக அச்சுறுத்திய பின்னர், இத்தாலிய விவசாயிகளுக்கு கடைசி நிமிட சலுகைகளை திறமையாகப் பெற்றார். இறுதி முடிவு? அதன் ஆதரவிற்கு ஈடாக, ரோம் விவசாய சந்தை பாதுகாப்புகளையும் ஐரோப்பிய ஆணையத்திடமிருந்து புதிய விவசாய நிதியுதவிக்கான வாக்குறுதிகளையும் பெற முடிந்தது - அரசாங்கம் தங்கள் சொந்த நாட்டில் வாக்காளர்கள் முன் எக்காளம் முழங்கக்கூடிய வெற்றிகள். கடைசி நிமிட இழுபறி இருந்தபோதிலும், மெலோனி மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்ற அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதையும் இது குறிக்கிறது. மொத்தத்தில், ரோமின் கிரீடத்தில் மற்றொரு பதக்கம். ஜெர்மன் கார் தொழில் தாஸ் ஆட்டோ சமீபத்தில் ஆரவாரம் செய்ய அதிக காரணம் இல்லை, ஆனால் மெர்கோசூர் இறுதியாக கொண்டாட ஒரு காரணத்தைக் கொடுக்கிறது. ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆட்டோமொடிவ் துறை, லாட்ஆமில் நுகர்வோரை எளிதாக அணுகும். குறைந்த கட்டணங்கள் என்பது, எல்லாம் சமமாக இருந்தால், அதிக விற்பனை மற்றும் வோக்ஸ்வாகன் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டும். சில சிக்கல்கள் உள்ளன. தற்போது 35 சதவீதமாக உள்ள கட்டணங்கள் உடனடியாகக் குறையவில்லை. சொந்தமாக ஒரு ஆட்டோமொபைல் துறையை நடத்தும் பிரேசிலின் உத்தரவின் பேரில், வர்த்தகத் தடைகள் நீக்கம் செய்யப்படும். ஐரோப்பா பின்தங்கியிருக்கும் ஒரு பகுதியான மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உர்சுலா வான் டெர் லேயன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு மெர்கோசூர் ஒரு கசப்பான, இனிப்பு நிறைந்த வெற்றியாகும். ஒரு வருடத்திற்கு முன்பு மெர்கோசூர் தலைவர்களுடன் ஒப்பந்தத்தில் கைகுலுக்கியதிலிருந்து , அவரது குழு சந்தேக நபர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், வெள்ளிக்கிழமை இறுதியாக நிறைவேறிய அனைத்து முக்கியமான தகுதிவாய்ந்த பெரும்பான்மையை உருவாக்கவும் பின்னோக்கி சாய்ந்துள்ளது. அடுத்த வாரம் பெர்லேமாண்ட் முதலாளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட பராகுவேவுக்குச் செல்லும்போது, வெற்றிச் சுற்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதைக் கண்ட ஜியோர்ஜியா மெலோனி, ஒப்பந்தத்திற்கு எதிரான பிரெஞ்சு எதிர்ப்பிற்கு ஆதரவாக தனது பலத்தை செலுத்துவதாக அச்சுறுத்திய பின்னர், இத்தாலிய விவசாயிகளுக்கு கடைசி நிமிட சலுகைகளை திறமையாகப் பெற்றார். | எட்டோர் ஃபெராரி/EPA சர்வதேச அரங்கில், அமெரிக்கா மற்றும் சீனாவால் தொடர்ந்து சூழ்ச்சி செய்யப்பட்டு, ஒரு மரத்துப்போன டைனோசரைப் போல தோற்றமளிக்கும் நேரத்தில், பிரஸ்ஸல்ஸின் நிலையை இது மெருகூட்ட உதவுகிறது. ஒரு பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் போற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு இன்னும் உயிருடன் இருப்பதைக் காட்டுகிறது, அமெரிக்கா ஒரு தென் அமெரிக்கத் தலைவரை சங்கிலிகளால் பிணைத்து விரட்டியடித்தாலும் கூட. ஆனால் இந்த ஒப்பந்தம் மிக அதிக செலவில் வந்தது . ஐரோப்பிய ஒன்றிய விவசாயிகளை ஈர்க்க வான் டெர் லேயன் €45 பில்லியன் மானியங்களை உறுதியளிக்க வேண்டியிருந்தது, ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டில் விவசாய ஆதரவைக் கட்டுப்படுத்தவும், புதுமை மற்றும் வளர்ச்சியில் அதிக முதலீடு செய்யவும் எடுத்த முயற்சிகளில் இருந்து பின்வாங்கினார். ஐரோப்பிய விவசாயிகள் விவசாயிகளைப் பற்றிப் பேசுகையில், தலைப்புச் செய்திகளைப் பார்க்கும்போது, மெர்கோசர் ஒரு தவிர்க்க முடியாத பேரழிவு என்று நீங்கள் நினைத்ததற்கு மன்னிக்கப்படலாம். மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் எண்ணற்ற டன் தென் அமெரிக்க விளைபொருள்கள், கடின உழைப்பாளி பிரெஞ்சு அல்லது போலந்து உழவரை அவரது நிலத்திலிருந்து விரட்டப் போகிறது, இல்லையா? யதார்த்தம் சற்று சிக்கலானது. இந்த ஒப்பந்தம் மாட்டிறைச்சி முதல் கோழி வரையிலான வகைகளுக்கு கடுமையான ஒதுக்கீடுகளுடன் வருகிறது . இதன் விளைவாக, லத்தீன் அமெரிக்க விவசாயிகள் ஒரு ஐரோப்பிய நபருக்கு ஆண்டுக்கு இரண்டு கோழி மார்பகங்களை ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமே வரம்பிடப்படுவார்கள். இதற்கிடையில், விரிவாக்கப்பட்ட சந்தையிலிருந்து பயனடையவிருக்கும் இத்தாலிய பார்மேசன் அல்லது பிரெஞ்சு ஒயின் போன்ற சிறப்பு தயாரிப்புகளுக்கான ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கான சிறப்புப் பாதுகாப்புகளை இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கிறது. இப்போது வேளாண்-போகல்பைஸுக்கு இவ்வளவு. மெர்கோசூர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு ஒரு கசப்பான வெற்றியாகும். | ஆலிவர் மேத்திஸ்/இபிஏ பின்னர் €45 பில்லியன் மானியங்கள் விவசாயிகளின் பைகளுக்குள் செல்லும் விஷயம் உள்ளது, மேலும் பிரஸ்ஸல்ஸ் நகர மையத்தில் டிராக்டர் போராட்டங்கள் மற்றும் உரச் சண்டைகள் அனைத்தையும் மீறி, இந்த ஒப்பந்தம் அவ்வளவு மோசமாக இல்லை என்று முடிவு செய்யாமல் இருப்பது கடினம். தோற்றவர்கள் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை விட வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரான தனது உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தும் உயர்மட்ட அரசியல்வாதி வேறு யாரும் இல்லை, அவர் மிகப்பெரிய உள்நாட்டு அரசியல் அழுத்தத்தின் கீழ், இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து எதிர்த்தார். எனவே பிரான்ஸ் போலந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து மற்றும் ஹங்கேரியுடன் இணைந்து மெர்கோசூருக்கு எதிராக வாக்களித்ததில் ஆச்சரியமில்லை. முன்னாள் முதலீட்டு வங்கியாளர் மனதளவில் ஒரு சுதந்திர வர்த்தக முதலாளியாக இருக்கலாம், ஆனால் உள்நாட்டில், இந்த ஒப்பந்தம் நீண்டகாலமாக பொறுமையாக இருக்கும் காலிக் விவசாயிகளின் முதுகில் ஒரு கத்தியாகக் கருதப்படுகிறது என்பதை அவர் நன்கு அறிவார். இத்தாலி போன்ற அரசியல் கூடை வழக்குகளுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட விகிதங்களில் பிரதமர்களை எரித்து வரும் மக்ரோன், சமீபத்தில் விலைமதிப்பற்ற சில வெற்றிகளைப் பெற்றுள்ளார். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை டார்பிடோ செய்வது அல்லது குறைந்தபட்சம் அதை மேலும் தாமதப்படுத்துவது, பிரெஞ்சு ஜனாதிபதிக்கு ஐரோப்பிய அரங்கில் இன்னும் சில ஆதிக்கங்கள் உள்ளன என்பதற்கான சான்றாக இருந்திருக்கும். தென் அமெரிக்க விளைபொருட்களில் எண்ணற்ற டன்கள் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுவது, கடின உழைப்பாளி பிரெஞ்சு அல்லது போலந்து உழவரை அவரது நிலத்திலிருந்து விரட்டப் போகிறது, இல்லையா? | டேரெக் டெல்மானோவிச்/இபிஏ கடைசி நிமிட எதிர் தாக்குதலுக்கு துருப்புக்களை அணிதிரட்ட மக்ரோன் ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டார், ஒரு கட்டத்தில் இத்தாலியின் மெலோனியை கவர்ந்த பிறகு, வேலையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்ததாகத் தோன்றியது. அதெல்லாம் வீணானது. இந்த சமீபத்திய தோல்விக்குப் பிறகு, எலிசே அரண்மனையின் ஒலிம்பிக் உயரங்களிலிருந்து மக்ரோன் மெதுவாக கீழே விழுவதைத் தொடரும்போது, தேசிய ஊடகங்களில் பிரெஞ்சு ஜனாதிபதியைப் பற்றி மேலும் கடுமையாக விமர்சிக்க எதிர்பார்க்கலாம். டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவின் வலிமைமிக்க தலைவர் நிக்கோலஸ் மதுரோவைப் பிடித்து நியூயார்க்கில் விசாரணைக்கு உட்படுத்தும் அமெரிக்கப் பணியின் சில நாட்களுக்குள் வந்த மெர்கோசூர் ஒப்பந்தம், ஐரோப்பாவிற்கு ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதற்கான மென்மையான சக்திக்கு பஞ்சமில்லை என்பதைக் காட்டுகிறது - உண்மையில் அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அறிவு இருந்தால். எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் இரு தரப்பினருக்கும் வெற்றி-வெற்றி என்ற கருத்தாகக் கருதப்பட வேண்டும், மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் அவரது புவிசார் அரசியல் குலுக்கலின் கலையும் செயல்படும் விதம் அதுவல்ல. இது அவரது எதிரிகளை வலுப்படுத்தும் தற்செயலான நன்மையையும் கொண்டுள்ளது - பிரேசில் ஜனாதிபதி மற்றும் மெர்கோசூர் தலைவர் ஹான்ச்சோ லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உட்பட - ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் செயலை ஒன்றிணைக்கும் வரை காத்திருந்தபோது அசாதாரண பொறுமையைக் காட்டினார் (மேலும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையாக இருந்தபோதும் மக்ரோனுடன் ஒரு பொது நட்பை வளர்த்துக் கொண்டார் ). சீனா ஐரோப்பிய ஒன்றியம் மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி வந்த பல தசாப்தங்களில், சீனா லத்தீன் அமெரிக்காவிற்கு, குறிப்பாக பிரேசிலுக்கு ஏற்றுமதிகளை விரிவுபடுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம்-மெர்கோசூர் ஒப்பந்தம் ஐரோப்பாவிற்கு சில சந்தைப் பங்கை மீண்டும் பெற ஒரு வாய்ப்பாகும், குறிப்பாக ஆட்டோமொபைல், இயந்திரங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற போட்டித் துறைகளில். இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் சீனப் போட்டியாளர்களை இன்னும் மிஞ்சும் நேரடி முதலீடுகளைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியம் முதலிடத்தில் இருப்பதற்கான அதன் கையை வலுப்படுத்துகிறது. கடைசி நிமிட எதிர் தாக்குதலுக்கு துருப்புக்களை அணிதிரட்ட இம்மானுவேல் மக்ரோன் ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டார், ஒரு கட்டத்தில் இத்தாலியின் மெலோனியை கவர்ந்த பிறகு, அவர் வேலைகளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததாகத் தோன்றியது. | லுடோவிக் மரின்/EPA எடுத்த பூல் புகைப்படம். அரசியல் ரீதியாக, பிரேசில் போன்ற நாடுகளை மேற்கத்தியக் கண்ணோட்டங்களிலிருந்து விலக்குவதில் சீனா ஓரளவு வெற்றி பெற்றுள்ளது, எடுத்துக்காட்டாக, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் பிற வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட BRICS குழு மூலம். இந்த ஒப்பந்தம் வர்த்தகம் பற்றியது மட்டுமல்ல, ஆழமான அரசியல் ஒத்துழைப்பையும் உருவாக்குவதால், லூலாவும் அவரது மெர்கோசூர் சகாக்களும் ஐரோப்பாவுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளனர். அமேசான் மழைக்காடுகள் துரதிர்ஷ்டவசமாக, உலக சுற்றுச்சூழல் அமைப்பைப் பொறுத்தவரை, மெர்கோசூர் என்பது ஒரு பொருளைக் குறிக்கிறது: எரி, குழந்தை, எரி. பிரேசிலின் மந்தைகளுக்கு உணவளிக்கும் மேய்ச்சல் நிலங்கள், ஒரு காலத்தில் பரந்து விரிந்து, இப்போது சுருங்கி வரும் வெப்பமண்டல மழைக்காடுகளின் இழப்பில் வருகின்றன. எளிமையாகச் சொன்னால், ஐரோப்பாவிற்கு அதிக மாட்டிறைச்சி என்பது உலகிற்கு குறைவான மரங்களைக் குறிக்கிறது. காலநிலைக்கு இது எல்லாம் மோசமான செய்தி அல்ல. சட்டவிரோத காடழிப்புக்கு எதிரான கட்டாய பாதுகாப்புகள் மற்றும் அதன் கையொப்பமிட்டவர்களுக்கான பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திற்கான உறுதிப்பாடு ஆகிய இரண்டும் வர்த்தக ஒப்பந்தத்தில் அடங்கும். https://www.politico.eu/article/eu-mercosur-trade-deal-the-winners-and-losers/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.