Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. நான் பல திரிகளில் அவதானித்ததை இங்கே பகிர விரும்புகின்றேன். இது இந்த திரிக்கு சம்பந்தம் இல்லாது விட்டாலும்.... தனிமனித தாக்குதல் இல்லாமல் எழுத முயற்சிக்கின்றேன். நான் பல திரிகளில் ரஷ்யா போன்ற நாடுகளுக்காக ஆதரவாக என்பதை விட அவர்கள் பக்கம் இருக்கும் நியாத்தை பிரதிபலித்து எழுதுபவன்.அதே போல் மற்றவர்களுக்கும் நீதி,நேர்மை நியாயங்கள் இருக்கும். ஒருவர் தனது கருத்தை எழுதும் போது அதற்கு பதில் கருத்து எழுதிவது நியாயம். அதை விட்டு மாற்று கருத்து எழுதுபவரை விமர்ச்சித்து மட்டுமே இங்கே பலர் கருத்து எழுதுகின்றார்கள்.விமர்சிப்பவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் எழுதினால் தடைகளும் தண்டனைகளுமே மிச்சமாக வருகின்றது. சரி பிரச்சனைகளுக்கு வருவோம். நான் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதினால் ரஷ்யாவிற்கு போ எனும் பாணியில் எழுதுகின்றார்கள். இதே திரியிலும் அதே தொனி கருத்துக்கள் உள்ளது. மாற்றுக்கருத்தை எதிர் கொள்ள முடியவில்லையா? அல்லது இங்கே மாற்றுக்கருத்துக்கள் எழுதக்கூடாதா எனவும் தெரியவில்லை. ரஷ்ய பொருளாதாரத்தை தடை செய்ததின் விளைவுகளை ஐரோப்பிய நாடுகள் நன்றாக அனுபவிக்கின்றன. இதை நாங்கள் கண்கூடாகவே பார்க்கின்றோம். இதை ஐரோப்பிய மக்கள் நன்கு உணருகின்றனர். உலகம் அரசியலில் தங்கியிருப்பதில்லை. பொருளாதாரத்தில் மட்டுமே தங்கியுள்ளது. இதை உணராதவர்களே ரஷ்யாவிற்கு போ என்கிறார்கள். கம்யூனிசத்தை வெறுப்பவர்களே நீங்கள் வசிக்கும் முதலாளித்துவ நாடுகளுக்கு எத்தனை ஆயிரம் கொள்கலன்கள் கம்யூனிச நாடுகளில் இருந்து வந்து இறங்குகின்றன என கணக்கு பார்த்தீர்களா? ஜேர்மனிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் ருமேனியாவிலும் பல்கேரியாவிலும் முக்கிய பொருட்களை தயாரிக்கின்றன. அதை விட ஜேர்மனிய ஓய்வூதியர்கள் ஏராளமானோர் பிரேசில்,கியூபா,பல்கேரியா,ருமேனியா போன்ற நாடுகளிலேயே வாழ்கின்றனர். அவுஸ்ரேலியா,கனடா,அமெரிக்கா,ஜேர்மனி,இங்கிலாந்து,பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு கம்யூனிச நாடுகளுடன் இருக்கும் பொருளாதார உறவுகள் பற்றி தெரியாமல் உளறுவோர்களே. நான் எனது ரஷ்யா சார்பான சொந்த கருத்துக்களை சொல்ல ரஷ்யா செல்ல வேண்டுமென்றால் நீங்களும் உங்கள் நாடான ஸ்ரீலங்கா பற்றிய கருத்துக்களுக்கு சொந்த மண்ணிலேயே நிற்க வேண்டும். நான் விடும் பிழைகளை விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஏனென்றால் இது கருத்துக்களம்.
  3. ட்ரம்ப், ஈரானை வெனிசுலா போன்றே நினைத்து மற்றைய நாடுகளை ஆச்சரியப்படுத்த நினைத்து தொடங்கியிருப்பார், அதைவிட, எல்லா நாடுகளும் தானாகவே தனக்கு ஆதரவு தருமெனவும் கனவு கண்டிருப்பார். ட்ரம்ப் மற்றைய நாடுகள் மீது தேவையற்ற வரிகளை சுமத்தி அவர்களை கடுப்பேற்றிவிட்டு உதவியை எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம். இப்போ சீனா, ஜப்பானை கெஞ்சவேண்டிய நிலைமை. "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி" என்பதுபோல் இவ்வளவு காலமும் வல்லரசு கனவில் மிதந்த அமெரிக்காவுக்கு அவமானம். இனி வருங்காலத்தில் அரபு நாடுகள் அமெரிக்காவை நம்பவோ அல்லது தமது நாடுகளுக்குள் அனுமதிக்கவோ விரும்பாது. அமெரிக்காவின் படை பலமோ, அதிகாரமோ அவர்களை பாதுகாக்கவில்லை. மாறாக அமெரிக்காவை உள்நுழைத்ததன் விளைவை அது தனது சக்திக்கு மேல் சந்தித்துள்ளது. வருங்காலத்தில் வளைகுடா நாடுகள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கூட்டாகசெயற்பட முயற்சிக்க வேண்டும்.
  4. Today
  5. 😂 ஓம் பழைய சர்வாதிகாரிகள் மற்றும் புதிய ஈரான் காமெனி வட கொரிய கிம் ஜொங்-உன் இவாகளை பார்த்து தான் இவருக்கு தானும் சர்வாதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை வந்திருக்கின்றது
  6. சக் நோரிஸ் இறக்கவில்லை என ஒரு ஜேர்மனிய ஊடகம் தெரிவிக்கின்றது. உண்மை பொய் தெரியவில்லை. இருந்தாலும் சக் நோரிஸ்- புரூஷ்லி சண்டைக்காட்சி பிரசித்தி பெற்றவை. இலங்கையில் இந்த சண்டைக்காகவே பலர் வீடியோ காட்சிகள் பார்த்ததுண்டு. https://youtu.be/NtoVjRq0YIs?si=WX9xs-yLaM20A9TZ
  7. அப்பிடி ஒரு மாற்றத்தை கொண்டுவந்தாலும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும் ஐயா....அது என்றும் மாறது. இது கற்காலத்திலிருந்து இன்று வரைக்கும் ஏதோ ஒரு காரணத்தை வைத்து போர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சூரிய சக்தியிலும் சண்டை பிடிப்பார்கள்.😂 உவங்கள் எப்பிடி ,என்ன கோதாரிக்கு சண்டை பிடிச்சாலும் .... என்ர சோசல் காசிலை கை வைக்காத வரைக்கும் சந்தோசம்.😎😁
  8. உங்கள் கருத்தும் தர்க்க ரீதியாகவே உள்ளது. தரையிறக்கம் மட்டுப்பட்டதாக இருக்கலாம் என்பதை நானும் ஏற்கிறேன். நிச்சயமாக ஈரானில் இவர்களுக்கு சாதகமானவர் பலர் இருக்கிறார்கள் என்பது தெளிவு. சதாமின் உள்ளக வட்டத்தை அவரை பிடிக்கும் வரை நெருங்கவில்லை, ஆனால் ஈரானில் கிட்டதட்ட உயர் பீடத்தை சொல்லி, சொல்லி அடிக்கிறது இஸ்ரேல். இஸ்ரேலை பொறுத்தவரை - ஈரானின் அணு ஆயுத வல்லமை, மிசைல் வல்லமையை உடைத்தால் போதும். அணு வல்லமை இப்போதே 20 வருடமாவது பின்னோக்கி தள்ளபட்டிருக்கும். செறிவாக்க பட்ட யுரேனியம் 450 கிலோவை மீட்டு விட்டால் - போதும். இந்த இலக்குகள் அடையபட்டால்- அதாவது ஈரானின் அணு, மிசைல் வல்லமை நீக்கப்பட்டால், அதன் பின் ஈரானில்: இஸ்ரேலுக்கு சார்பான அரசு அல்லது குழப்ப நிலை எது அமைந்தாலும் இஸ்ரேலுக்கு ஓக்கேதான். நேற்று ஒரு இஸ்ரேலி சொன்னார், we can live with chaos. We lived with chaos in Gaza, we lived with chaos in Lebanon, Syria, we can live with chaos in Iran too. ஆனால் ஸ்திரமான, எதிர்வினை காட்டும் ஈரான் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆபத்து. அதை நீக்கும் ஒரு மட்டுப்பட்ட தரை இறக்கத்தை இந்த முறை செய்யலாம். இப்படியான நகர்வுகளில் இஸ்ரேல் ஸ்பெசலிஸ்ட் என்பதையும், அமெரிக்கா போல் இஸ்ரேல் அகல கால்வைத்து மூக்குடைவது இல்லை என்பதையும் கூட கருத்தில் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். பிகு இங்கே யூடியூப் வீடியோ பகிர, அல்லது நிர்வாகத்தை குறை சொல்ல, குதர்கம் கதைக்க மட்டும் வரும் பூமர் அங்கிள் இதை வாசித்து விட்டு, எம்மை யாழ்கள இராணுவ ஆய்வாளர் என கிண்டல் செய்யலாம். இது ஆய்வு ஒண்டும் அல்ல, சந்தியில் குந்தி இருந்து முன்பு நீங்கள் பேய் கதை கதைத்தை இப்போ நாம் இணையத்தில் செய்கிறோம். அம்மட்டும்தான்😂
  9. இந்த அமெரிக்க ஈரான்போர் உலக நடைமுறையில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரலாம். இயந்திரங்களை உருவாக்கும் தொழிற்சாலைகள், இயந்திரங்களை இயக்குவதற்கு எண்ணைக்குப் பதிலாக வேறு மாற்றுவழிகளைத் தேடவும் முயற்சிக்கலாம். சூரிய ஒளியைப் பாவிக்கும் தொழில் நுட்பம் போன்றவை.🤩
  10. ஒரு காலத்தில் எனது சும்மா கிறுக்கலே ஆயிரம் பார்வையாளர்களை கடந்து செல்லும்🤣 ..இன்று நூறு பார்வையாளர்களை எட்டுவதே கடினமாக உள்ளது...செய்திகளுக்கும் அதே நிலை தான்.. இன்று வட்சப்,யூடியுப்,முகபுத்தகம் போன்றவற்றில் பலர் (நான் உட்பட) நேரத்தை செல்வு செய்வதால் இங்கு எட்டி பார்ப்பது குறைந்து கொண்டு செல்லுகிறது .. யூடியுப் போடும் தலையங்கம் வேற கவர்ச்சியாக இருக்குது...அதிரடி,நொருங்கியது,டமால்,புளுடா,செய்த செயல்,😅
  11. மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றிகள்
  12. இந்தியாவில் உள்நாட்டில் நிலவும் மத குரோதத்திற்காக ஆர் எஸ் எஸ் அமைப்பினை சர்வதேச மத சுதந்திரத்திற்காக தடை விதிக்க கோருவது சரியாக இருந்தாலும் இந்திய உளவுத்துறையான றோவினை தடை செய்ய கோருவது அந்த லிஸ்டில் வராது போல உள்ளது அல்லது றோவிற்கு தடை விதிப்பதற்கு சாட்டாக RSS உடன் சேர்த்துள்ளார்களா?
  13. ஈரான் தனது பலமாக நினைக்கும்நிறுத்தமுடியாத (Off switch) தொடர் தாக்குதலை நடத்தும் 31 மானிலங்களுக்கும் தனித்தனியான கட்டளை அமைப்பு கொண்ட மொசைக் பாதுகாப்பு உத்தியே அவர்களுக்கு பாதகமாக அமையலாம். இறங்கும் போதே பெருமளவான எதிர்ப்பு இருக்காது என்றே நினைக்கிறேன், வான் மேலாதிக்கம், கடல் மேலாதிக்கம் அமெரிக்க துருப்புகளுக்கு உண்டு, இரஸ்சியாவின் கேர்க்ஸ் பிராந்தியத்தில் ஊடுருவல் தாக்குதலில் மேற்கினால் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவிணைந்த வேகமான முன்னேற்றம், ஈரானை நிலை குலைய செய்யும். தனித்தனி கட்டளைப்பீடங்கள் கொண்ட ஈரான் தற்காப்பு அணி மட்டுப்படுத்தப்பட்ட வளங்கல் மற்றும் தொடர்பாடல் இருப்பதால் அது அவர்களுக்கு சிக்கலாக இருக்கும். ஆனால் ஈரான் தரைத்தாக்குதலை மையமாக கொண்டு இந்த மொசைக் பாதுகாப்பு திட்டம் வரைந்திருந்தால் அவர்களின் திட்டம் ஒரு நீண்ட கெரில்லா யுத்தமாகவிருக்கும் என கருதுகிறேன். அமெரிக்க தரப்பு இறங்குவது பிரச்சினையாக இருக்காது என கருதுகிறேன் ஆனால் ஈரானின் மொசைக் திட்டம் வியட்நாமினை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கலாம். இது ஒரு தற்கொலை தாக்குதல் முயற்சியாகவும் இருக்கலாம், தமக்கு தேவையான எதிர்கால தரவுகளை திரட்டுவதற்காக ஒரு சிறிய அணியினை தரை இறக்கி ஈரானின் தனித்தனி கட்டளைப்பீடங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என உண்மையான தரவு திரட்டும் முயற்சியாக இருக்கலாம் (இவ்வளவு வந்தாயிற்கு அதனையும் செய்துவிட்டு கையினை தூக்கலாம் அதன் மூலம் எதிர்காலத்திற்கு தேவையான தரவுகளை திரட்டுவதற்கு என முயற்சிக்கலாம்).
  14. தம்பர் அமெரிக்காவை ஈரானில் தரை இறக்க தயாராகிவிட்டார் என செய்திகள் வருகிறது. ஈராக்கில் இரெண்டு தரம், ஆப்கானிஸ்தானில் ஒரு தரம்- இறங்க முன் பல மாத ஆயத்தம் நடந்தது. தம்பர் இதை விரைவாக செய்கிறார். ஈராக் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு வெற்றியாகியது. தொடர்ந்து நிலைத்ததில்தான் தோல்வி. ஈரானில் இறங்கும் போதே பலத்த எதிர்ப்பு இருக்கும். ஈராக்கில் பிரிட்டன் கூடப்போனது. ஆப்கானிஸ்தானில் முழு நேட்டோவும் அவுஸ் போன்ற நாடுகளும் கூட போயின. இப்ப இஸ்ரேலோடு சேர்ந்து இறங்க போகினம். வியட்நாம் வெர்சன் 2.0?
  15. https://www.reuters.com/business/energy/south-korea-considers-importing-russian-oil-naphtha-industry-ministry-says-2026-03-19/ தென் கொரியா, மீண்டும் இரஸ்சியாவிடம் எண்ணெய் மற்றும் நப்தா வாங்குவது பற்றி சிந்திப்பதாக கூறப்படுகிறது, நியுசவுத்வேல்ஸ் அரசு உள்ளூர் இரு ஆலைகளுக்கு மானியம் வழங்குவதாக பிரிமியர் கூறியதாக செய்தியில் கூறினார்கள் (காரோட்டும் பொது மேலோட்டமாக புரிந்து கொண்டது), சில இடங்களில் பெட்ரோல் விலை 2.47 வரை அதிகரித்துள்ளது (1.30 பவுண்ஸ்). விலை தளம்பல் பெரிதாக ஏற்படாது என கருதுகிறேன்.
  16. அப்படி ஒரு எண்ணமும் இல்லை. முன்பே சொன்னது போல் ஆதாரம் இல்லாமல் எவர் மீதும் பழி சொல்ல நான் தயாரும் இல்லை. ஆனால்… பொதுவில் திரட்டிய பணத்தை ஒருவர் தனிப்பட்ட சுக வாழ்வுக்கு பயன்படுத்துகிறார் என நான் சொன்னால்… பதிலாக நீங்கள் அவருக்கு பணம் கொடுக்கவில்லை, எனவே அதை பற்றி நீங்கள் கவலை படத்தேவையில்லை என எழுதுவதற்கும்…. இயக்கப்பணம் பற்றி நீங்கள் யாரும் கேட்க முடியாது, தலைவர் வரும் போது கணக்கு கொடுப்போம் என சொல்லியதற்கும் ஒரு வேறுபாடும் என்னால் காண முடியவில்லை. பொதுப்பணத்தை முறைகேடாக பாவிக்கிறார் சீமான் என்று நான் சொன்னதற்கு, நீங்கள் கூறிய பதில், நீ அந்த பொதுபணத்தில் பங்காளி இல்லை, எனவே உனக்கு கேள்வி கேட்க அருகைதை இல்லை என்பது. இந்த உங்கள் நிலைப்பாடு 2 வகையில் வெட்கக்கேடானது. பொதுப்பணத்தை நிர்வகிக்கும் போது உள்ள பொறுப்புகூறல் பற்றிய உங்கள் நிலைப்பாடு, ஏனைய சந்தேகங்களுக்கு வழிகோல கூடியது. பணம் இருந்தால்தான் கொடுக்க முடியும். ஆகவே கொடுத்தவனுக்கு மட்டுமே அரசியல் உரிமை கேள்வி கேட்கும் அதிகாரம் உள்ளது எனில். அது பணம் இல்லாதவன் ஊழலை கண்டும் மெளனியாக இருக்க வேண்டும் என சொல்லுவது ஆகும். இரெண்டுமே வெட்கி நிற்க வேண்டிய நிலைப்பாடு.
  17. இதுக்கெல்லாம் ..ரோட்டுப் போடமுன்னம் ப்லகை நாட்டுற அடியார் கூட்டம் என்ன சொல்லப் போகினம் ...அம்மாச்சி ..திறக்கிறதோடை ..அபிவிருத்தி முடிஞ்சுவிடும்
  18. உடப்பு கிராமம் 'குட்டி வல்வெட்டித்துறை' என்றும் சொல்லப்படுகின்றது. சில வருடங்களின் முன்னர் நான் அங்கே போயிருந்தேன். என் மனைவி அங்கேயுள்ள கோவிலில் ஏதோ நேர்த்தி வைத்ததாக கூட்டிப் போனார். அந்த மக்கள், அந்தக் கோவில், கோவிலின் அமைப்பு, உள்ளிருக்கும் வர்ண வேலைகள் என்று எல்லாமே எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகவே இருந்தன. ஆனாலும் நான் அதற்கு முன்னர் அங்கு போயிருக்கவில்லை. நான் கவனித்த இன்னொரு விடயம், இரண்டு கோவில்களிலும் பல புதிய உபயங்களை செய்ததாக சிங்கள மக்களின் பெயர்களே இருந்தன. உடப்பைச் சுற்றியிருக்கும் பல கிராமங்கள் சிங்கள மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் இடங்களாக மாறிவிட்டன. அங்கிருந்து திரும்பும் போது உடப்பு எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்ற யோசனையும் சேர்ந்திருந்தது.
  19. புலத்தில் தலைவருக்கு உதவியவர்களுக்கும் தலைவர் சயனற்றை தந்து உடன் கட்டை ஏற கேட்டிருக்க வேண்டும் என்பது தான் உங்கள் நெஞ்சில் இருக்கிறது. எனக்கும் உயிருடன் இருந்து வதை படாமல் ஒரு நொடியில் போய்ச்சேர்ந்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது 😡
  20. ஹொர்மூஸ் நீரிணையை திறக்க தம்பர் கைவசம் உள்ள தெரிவுகள் 👇
  21. அலுங்குப்பிடி என்று சொல்வோமே........ அவர்தான் இவர் . ........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.