stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
அதிசயக்குதிரை
Sdreopontsfi30323mg5i9a:1g s1m72cac1 021689cr6l82 te00à 72L7 · ரு I.T மேனேஜர் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார். எமன் சொன்னான், "நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?. நரகமா? எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீட்டு கணிணியிலும் வைரஸை புகுத்தி விட்டு விட்டாய். அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன். உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். " "நல்லது கடவுளே! ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" " ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்!, வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்! " "அப்படியே செய்வோம் எமதர்மராஜா! வாருங்கள் போகலாம்" நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் ஐடி மேனேஜர். இதுவா நரகம்?. தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி. "ஆஹா! அருமை! " இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை. " என்று ஐடி மேனேஜர் சொன்னபோதும் "வா சொர்கத்தை பார்க்கலாம். " என சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் எமன். அங்கே, நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க. அருமை. ஆனால் மேனேஜருக்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை. நீண்ட யோசனைக்குப்பின், "தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் ஐடி மேனேஜர். "உன் விருப்பம்", எமன். இரண்டு வாரங்களுக்குப் பின், ஐடி மேனேஜர் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார். அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் ஐடி மேனேஜரை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள். "எப்படி இருக்கே?" என்றான் எமன். ஐடி மேனேஜர் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில், "முடியல. நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?" எமன் சொன்னான், "அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !!!" 😂" All that glitters are not gold, How many of us are believing this >?? Voir la traduction.....!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அதே தான் உறுதியாக நடைபெறும் அந்த ஊழல் மோசடி அழுகிய வாசனை இலங்கைக்கும் வீசும். நாம் தழிழர் பாசறையில் இருந்து வந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் சீமான் வீட்டு மாத வாடகை 3 இலட்சம் / ஒரு மில்லியன் இலங்கை ரூபா / 3200 டொலர் என்று குற்றம் சாட்டுகின்றார். ஒரு கவுன்சிலர் கூட இல்லாத சீமான் வேலைக்கு செல்லாத மனைவி. முன்பு நமது உறவு வீரபையன் தெரித்திருந்தார் சீமான் மனைவி செல்வந்தர் ஆனால் பல சொத்துக்கள் இப்போது செல்வம் வந்து தான் வாங்கபட்டுள்ளன என்பதை காண முடிகின்றது
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அருமை ஐயா. அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். குண்டர்களை ஏவி விட்டு கழுத்தை பிடிக்கவைத்த பின், அவரை கேள்வி கேட்க விடுங்கள் என சீமான் சொன்னது… கட்டுமரத்தின் உண்ணாவிரத டிராமாவின் தரத்துக்கு நிகரானது… இதை விளங்கி கொள்ளாதவர் போல் சிலர் இங்கே யாழில் நடிப்பது… கட்டுமரம், சீமான் இருவரையும் தூக்கி சாப்பிடும் ஆஸ்கார் நடிப்பு.
-
குட்டிக் கதைகள்.
tposrondeSia22 g0i65002u43lsLmu7à1 ef5r6hc4m :75326902haa16 · 🚗" ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.. சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்.. அற்புதம் என்றார் மேலாளர்.. இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்.. முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி.. காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது.. காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்.. ஆஹா.. இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்.. ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்.. வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்.. பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்.. காரை கஷ்டப்பட்டு இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்.. முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை.. அனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும் .. இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டு செல்ல முடியலையே.. இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம் "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்.. அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன சொல்லப்போகிறான் என்று.. ம்..ம்..ம்.. சொல்லு.. சொல்லு.. வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்கொள்ளலாம்.. அடடே.. எவ்வளவு சுலபமான வழி.. எந்த சேதமும் இன்றி.. வாழ்க்கை மிக சுலபமானது.. வாழ்வது ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்.. ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச் கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி விடுவதைப்போல் கழட்டி எறியலாம் தானே.. Voir la traduction.....!
-
நீளீரா - Trailer
Trailerஐப் பார்க்கும் போதே படம் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. சோமிதரன் குழுவினருக்கு வாழ்த்துகள்👏🏽
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
நான் அப்படி எங்கும் எழுதவில்லை. ஆதாரத்துடன் நிரூபிக்கவும். அந்த அனுர பாசத்தை எப்படி உணர்கின்றீர்கள்? யார் குணா கமல்? ஓ கமலகாசன் நடித்த குணா திரைப்படத்தை சொல்ல வருகின்றீர்களா? அது நல்லபடமாச்சே? கண்மணி அன்போட காதலன் பாடலும் அருமையோ அருமை😎
- Today
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சீர்காழியார் போலவும் இருக்கின்றது . ..... அவருக்கு பல கிளைகள் கிடையாது......அவர் ரோல்ராய்ஸ்,ரோலெக்ஸ் மாதிரி...... ரி . எம் . எஸ் சுக்கு எம் . ஜி.ஆர் ......சிவாஜி என்று பல கிளைகள் உண்டு.....அதனால் அவர் சீர்காழி போலவும் ட்ரை பண்ணியிருக்கலாம் . .......! 🙂 உங்களை வரவேற்பதில் இந்தத் தளம் பெருமையடைகிறது ......... நன்றி கவி ......! நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ .........! 😍 பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்.....!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 31.03.2026
-
கருத்துப்படம் 30.03.2026
-
கருத்துப்படம் 28.03.2026
-
கருத்துப்படம் 22.03.2026
-
கருத்துப்படம் 19.03.2026
-
கருத்துப்படம் 13.03.2026
-
கருத்துப்படம் 12.03.2026
-
கருத்துப்படம் 11.03.2026
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
- சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க இன்று முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு அறிமுகம்!
சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க இன்று முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு அறிமுகம்! Published By: Digital Desk 1 31 Mar, 2026 | 09:42 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை (31) முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு திறக்கப்படுவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இந்த மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் இந்த மத்திய மின்னணு கட்டமைப்பு, இன்று காலை 10.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்தக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்ததன் பின்னர், சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களும், தமது விபரங்களை இந்தக் கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/242364- மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
மின்சாரம் மற்றும் வலுசக்தி முகாமைத்துவம் : அரசு இரண்டாவது வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் வெளியீடு Published By: Vishnu 31 Mar, 2026 | 04:33 AM (இராஜதுரை ஹஷான்) மின்சாரம் மற்றும் வலுசக்தியை முகாமைத்துவம் செய்யும் பொருட்டு மாலை 3 மணிக்கு பின்னர் அரச நிறுவனங்களில் சகல குளிரூட்டி சாதனங்களையும், மாலை 06 -10 மணிவரையான காலப்பகுதியில் வீதி விளக்குகளை அணைத்தல் வேண்டும் என பல அறிவுறுத்தல்களை முன்வைத்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் இரண்டாவது வழிகாட்டல் அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தியின் கையொப்பத்துடன் குறித்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டல் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பால் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சகல அரச நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் மாலை 3.00 மணிக்க பின்னர் சகல குளிரூட்டி சாதனங்களையும் செயலிழக்கச் செய்தல் வேண்டும். தனியார் துறையினரும் இந்த வழிகாட்டலை பின்பற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இரவு 08 மணிக்குப் பின்னர் சந்தைப்படுத்தல் விளம்பரங்களை பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின் திரைகளை அணைத்தல் வேண்டும். மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள வீதி விளக்குகளை மாலை 06 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் அணைப்பதற்குரிய பொருத்தமான விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சகல வழிகளிலும் பாரியளவில் நடத்தப்படும் (100 நபர்களுக்கு மேல் பங்குப்பற்றலுடன்) நிகழ்வுகள், இசை நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு தேசிய மின் கட்டமைப்பில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளாமல் அவற்றை நடத்த வேண்டும். https://www.virakesari.lk/article/242355- ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
15 வயது சூர்யவன்ஷி அதிரடி காட்டிய ஆடுகளத்தில் சிஎஸ்கே குறைந்த ரன்களில் சுருண்டது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2026 சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுடன் தொடங்கியிருக்கிறது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் சிஎஸ்கே முன்னாள் வீரர் 31 மார்ச் 2026, 02:43 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2026 சீசன் மிகவும் மோசமாகத் தொடங்கியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. 2025-ஆம் ஆண்டு அவர்களின் பேட்டிங் எப்படி ஏமாற்றமளித்ததோ, அதுபோலத்தான் இந்தப் போட்டியும் தொடங்கியிருக்கிறது. எந்தவொரு தொடராக இருந்தாலும் அதன் முதல் போட்டியில் தங்களின் மிகச் சிறந்த, பலமான அணியை விளையாட வைக்க வேண்டும் என்றுதான் எந்த அணியுமே விரும்பும். ஆனால், சூப்பர் கிங்ஸால் அப்படியொரு லெவனைக் களமிறக்க முடியவில்லை. காயம் காரணமாக மஹேந்திர சிங் தோனி 2 வாரங்களுக்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் டெவால் பிரெவிஸும் காயம் காரணமாக விளையாடாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் தடுமாறிக் கொண்டிருந்த போது பிரெவிஸ் வந்துதான் அந்த நிலைமையை மாற்றினார். இப்படி இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாதது ஆரம்பம் முதலே சிஎஸ்கே-வை பின்தங்க வைத்திருந்தது. அதன்பிறகு ஆடுகளத்தின் தன்மையையும் சூழலையும் புரிந்துகொள்ளாமல் பேட்டிங் செய்து பெரும் சரிவை சந்தித்தது சூப்பர் கிங்ஸ். ஏமாற்றம் தரும் ஒரு பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தியது சிஎஸ்கே அணி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தோனி & பிரெவிஸ் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை (கோப்புப் படம்) பேட்டிங் & ஃபீல்டிங் ஏமாற்றம் இந்தப் போட்டியில் டாஸ் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது. போட்டிக்கு முந்தைய நாள்களில் மழை பெய்திருந்தது. ஆடுகளம் மூடப்பட்டிருந்தது. அதனால் ஆடுகளத்தில் நல்ல ஈரப்பதம் இருந்தது. அதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு 'சீம், மூவ்மென்ட், ஸ்விங்' அனைத்தும் நன்றாகக் கிடைத்தது. அதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஜோஃப்ரா ஆர்ச்சர், நாந்த்ரே பர்கர் இருவருமே மிகச் சிறப்பாக பந்துவீசினார்கள். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர்களால் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை. அந்த இரு வீரர்களையும் எப்படி எதிர்கொள்வது என்ற திட்டமே சிஎஸ்கே டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு இருக்கவில்லை. மோசமான பேட்டிங் என்று சொல்லிவிட மாட்டேன். ஆனால், அதே சமயம் 'இன்டென்ட்' இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. புதிய அணிக்கு முதல் போட்டியில் சாம்சன் நல்ல பங்களிப்பைக் கொடுப்பார் என்றும், கடந்த ஆண்டு காயத்தால் அவதிப்பட்ட ருதுராஜ் மீண்டும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இன்னொரு பக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா தன் புதிய அணிக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார். சர்ஃபராஸ் கான் மற்றும் ஷிவம் துபே என ஸ்பின்னை சிறப்பாக விளையாடும் இரண்டு வீரர்களின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். எப்போதும் ஸ்பின்னை சிறப்பாக விளையாடும் துபே ஏன் அந்த நேரத்தில் அப்படியொரு ஷாட் ஆடினார் என்று தெரியவில்லை. ஏற்கெனவே அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் வந்துவிட்டதால் அவர் அதைத் தவிர்த்திருக்கலாம். இது, ஒட்டுமொத்த அணியும் நெருக்கடியில் இருந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. பேட்டிங் மட்டுமல்ல இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங்குமே ஏமாற்றமளிப்பதாக இருந்தது. முதல் ஓவரிலேயே சர்ஃபராஸ் கான் ஒரு பந்தைத் தவறவிட்டார். வைபவ் சூர்யவன்ஷி சந்தித்த முதல் பந்திலேயே அவர் கொடுத்த கேட்சை கார்த்திக் ஷர்மா பிடிக்கத் தவறினார். இதுபோக மேலும் சில தவறுகளும் ஃபீல்டிங்கில் நடந்தது. எதிரணிக்கு இலக்கு எளிதானதாக இருக்கும்போதுதான் ஃபீல்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். சூப்பர் கிங்ஸ் இந்த இடத்தில் உடனடியாக முன்னேற்றம் காணவேண்டியது மிகவும் முக்கியம். அவர்கள் ஒரு மிகச் சிறந்த ஃபீல்டிங் யூனிட்டாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒரு புத்திசாலித்தனமான ஃபீல்டிங் யூனிட்டாகத் திகழவேண்டும். இந்த சீசனின் முதல் போட்டியில் ஆர்சிபி வீரர் ஃபில் சால்ட் தன் ஃபீல்டிங்கால் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதைப் பார்த்தோம். ஃபீல்டிங் அந்த அளவுக்கு அணியில் செயல்பாட்டில் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இதற்காக உடனே 500 கேட்ச்கள் பிடித்து பயிற்சி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை சரிசெய்ய ஒரு உளவியல் மாற்றம் தான் தேவை. உளவியல் ரீதியாக அடுத்த 2 தினங்களில் மாற்றம் நிகழ வேண்டும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராயல்ஸுக்கு எதிராக 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் ருதுராஜ் கெய்க்வாட் (கோப்புப் படம்) முடிவு மாறக்கூடியதுதான் என்னதான் இதுவொரு மோசமான தோல்வியாக அமைந்தாலும், நான் இதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட மாட்டேன். இது ஒரு மோசமான போட்டி என்று நினைத்து மறந்துவிட வேண்டும். திறமையான, அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவார்கள். இப்படியொரு தோல்வி தொடரின் கடைசி கட்டத்தில் ஏற்படாமல் ஆரம்ப கட்டத்திலேயே வந்துவிட்டதே என்று நேர்மறையாக நினைத்துக்கொள்ளலாம். இந்தத் தோல்வியிலிருந்து சூப்பர் கிங்ஸ் நிச்சயம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம். சூப்பர் கிங்ஸ் தங்கள் அடுத்த போட்டியை (பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக) சேப்பாக்கத்தில் விளையாடப்போகிறார்கள். அங்கு ஆடுகளம் எப்படியும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அது சூப்பர் கிங்ஸுக்கு உகந்தது தான். என்னதான் இந்தப் போட்டியில் அவர்களின் பேட்டிங் சொதப்பியிருந்தாலும், அவர்களுடைய மிகப் பெரிய பலமும் அதுதான். அது நிச்சயம் சிஎஸ்கேவின் சொந்த மண்ணில் அவர்களுக்கு சாதகமான முடிவைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால், அதற்கு சிஎஸ்கே அந்த தோல்வியில் இருந்து நகர்ந்து செல்லவேண்டும். வைபவ் சூர்யவன்ஷி - இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தப் போட்டியில் 15 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார் வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப் படம்) 15 வயது இளம் வீரர் எப்படியான ஒரு ஆட்டத்தை ஆடினார். 15 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார் சூர்யவன்ஷி. அவரது ஆட்டத்தை இன்னும் நம்பமுடியவில்லை. அவர் கோடியில் ஒருவர். நம்பர் ஒன் டி20 பேட்டரான அபிஷேக் ஷர்மாவின் பேட் வேகம், பேட் ஸ்விங் பற்றியெல்லாம் நிறைய பேசியிருக்கிறோம். அதுபோல் இவருடைய பேட் வேகம், பேட் ஸ்விங் இரண்டும் மிகச் சிறப்பாக இருக்கிறது. இன்னொரு ஒப்பீட்டை நிறையப் பேர் செய்திருக்கிறார்கள். அதைச் செய்வது சரியா என்றும் தெரியவில்லை; வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் கிரிக்கெட்டின் ஆகச் சிறந்த ஆல்ரவுண்டரான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸின் பேட் ஸ்விங்கைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. நான் அவர்களை ஒப்பிடவில்லை. ஆனால், சோபர்ஸ் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த வீடியோவையெல்லாம் பார்த்துவிட்டு சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங்கைப் பார்த்தால் பல ஒற்றுமைகள் தெரிகின்றன. திரும்பவும் சொல்கிறேன், 0.1% கூட நான் அவர்கள் இருவரையும் ஒப்பீடு செய்யவில்லை. ஆனால், இந்த சிறு வயதில் வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் அசாத்தியமாக இருந்தது. அவரால் எல்லாப் பக்கமும் அடிக்க முடிகிறது. அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு வேகப்பந்துவீச்சாளரின் பந்தை பாயிண்ட் திசையில் சிக்ஸர் அடிப்பதே கடினம். அப்படியிருக்கையில் மேட் ஹென்றி வீசிய ஸ்லோயர் பாலை பாயிண்ட் திசையில் சூர்யவன்ஷி சிக்ஸர் ஆக்கினார். அப்படியொரு ஷாட்டை உருவாக்குவதெல்லாம் அசாத்திய திறமை இருந்தால் மட்டுமே முடியும். அதையெல்லாம் விட முக்கியமாக அவருடைய தைரியம்! எந்த பௌலர், என்ன சூழ்நிலை என்பதைப் பற்றியெல்லாம் பயப்படாமல் விளையாடுகிறார். சொல்லப்போனால், சிஎஸ்கே சூர்யவன்ஷியின் அந்த குணத்தை அவர்களும் சற்று வெளிக்கொண்டுவரலாம் ராஜஸ்தான் ராயல்ஸ் முழுமையான செயல்பாடு ஒட்டுமொத்தமாக ராயல்ஸ் அணி ஒரு முழுமையான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறது. பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட் வீழ்த்தி அசத்த, சூர்யவன்ஷி தனது அசாத்திய திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். ஏலத்திற்கு பின்பு ராயல்ஸ் மீது பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்திருந்த நிலையில், தற்போது அந்த அணியின் செயல்பாட்டைப் பார்க்கும்போது அந்த அணி தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்றே தோன்றுகிறது. புதிய இளம் கேப்டன் ரியான் பராக்கும் இந்தப் போட்டியில் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அதனால், ராயல்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் நல்ல முன்னேற்றம் காண்பதைப் பார்க்க முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62jxj1395qo- கொழும்பு மைய அரசியலும் இணக்க அரசியலும் குற்றமா? — கருணாகரன் —
கொழும்பு மைய அரசியலும் இணக்க அரசியலும் குற்றமா? March 28, 2026 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியலை ‘கொழும்பு மைய அரசியல்’ பலவீனப்படுத்துகிறது என்ற பெருங்கவலை ‘தீவிரத் தமிழ்த்தேசிய அரசியல் விருப்பாளர்’களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா. சம்பந்தனும் அவரால் தமிழ் அரசியற் பரப்பிற்குள் கொண்டு வரப்பட்ட மதியாபரணம் சுமந்திரனும்தான் கொழும்பு மைய அரசியலுக்கான கதவைத் திறந்தவர்கள் என்ற அபிப்பிராயமும் கோபமும் இவர்களிடமுண்டு. தங்களுடைய இந்தக் கவலையையும் கோபத்தையும் பல்வேறு வழிகளில் அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ‘கொழும்பு மைய அரசியல்’ என்று இப்பொழுது அடையாளப்படுத்துவது, சுமந்திரனை மனதில் கொண்டே. சுமந்திரனுக்கு முன்பு, சம்பந்தன் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனால்தான் சம்பந்தன் இறந்தபோது, ஒரு தலைவர் இறந்த உணர்வை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் சம்பந்தனின் மறைவுக்கு மதிப்பளிக்கவும் இந்தத் தரப்பினர் பின்னின்றனர். மட்டுமல்ல, சம்பந்தனின் இறுதி நிகழ்வைப் புறக்கணித்து, தங்கள் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டனர். சம்பந்தன் மறைந்த பிறகு, சுமந்திரன் மீது அந்தக் கோபம் மடைமாற்றம் செய்யப்படுகிறது. இவர்களுடைய கருத்தின்படி ‘கொழும்பு மைய அரசியல்’ என்பது, தமிழீழத்துக்கு எதிரானது; விடுதலைப்புலிகளுக்கு எதிரானது. ஒரு நாடு இரு தேசம் என்பதற்கு எதிரானது. தாயகக் கோட்பாட்டுக்கு எதிரானது. சமஸ்டிக்கு எதிரானது… என்றெல்லாம் வியாக்கியானப் படுத்தப்படுகிறது. இன்னொரு விதமாகச் சொன்னால், சம்பந்தனும் சுமந்திரனும் செய்து வருவது விட்டுக்கொடுப்பு அரசியல். மறுவளமாக அது ஒடுக்குமுறையை ஏற்றுக் கொள்ளும் அரசியல். அதாவது தமிழ் மக்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுத்தல். சிங்கள மேலாதிக்கத்தை நிபந்தனைகளின்றி ஏற்றுக் கொள்ளல் என. இதனை இவர்கள் எங்கே இருந்து கண்டுபிடித்தார்கள் என்றால், ‘நல்லாட்சி’க் காலத்தில் (2015 – 2019) ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற அடிப்படையில் அரசியல் அமைப்புக்கான வரைபை இலங்கை அரசு முன்வைக்க முயன்றபோது, அதனை நியாயப்படுத்தும் வகையில் சம்பந்தனும் சுமந்திரனும் செயற்பட்டனர், அன்றைய ரணில் – மைத்திரிபால அரசாங்கத்துக்கு நிபந்தனையின்றி ஆதவளித்தனர் என்பதிலிருந்தே. அப்பொழுது சுமந்திரன், சம்பந்தன் ஆகியோரின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்பதை நினைவிற் கொள்ளலாம். அப்பொழுதான் மேற்படி இருவரும் கொழும்பை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகின்றனர் என்ற அபிப்பிராயம் அல்லது சந்தேகம் தீவிர தமிழ்த்தேசியவாதிகளிடத்தில் உருவானது. அது பின்னர் அவர்கள் இருவருக்கும் எதிரான அரசியலாக வளர்த்தெடுக்கப்பட்டது. என்பதால் சம்பந்தனையும் சுமந்திரனையும் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களும் எதிர்கொள்ள முடியாதிருந்தோரும் அதனைப் பெரிதாக்கினர். இப்பொழுதும் இதுவே நிலைமை. இவர்களுடைய அபிப்பிராயத்தின்படி பார்த்தால் ‘கொழும்பு மைய அரசியலை’ச் செய்வதன் மூலம் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் கிடைத்த லாபங்கள் என்ன? இதன் மூலம் தொடர்ந்து சுமந்திரன் பெற்றுக் கொள்வதென்ன? அதை எவரும் இதுவரையில் முன்வைத்தில்லை. பதிலாக தீவிரத் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை முன்னெடுப்பதாகத் தோற்றம் காட்டும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், சிறிதரன் போன்றோர் பல சந்தர்ப்பங்களில் அரசுடன் இணங்கி சில பல சலுகைகளைப் பெற்றுள்ளனர் என்பது பலராலும் கூறப்பட்டு வருவதை இவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஒரு அரசியல் நிலைப்பாட்டை ஒருவரோ அல்லது ஒரு தரப்பினரோ எடுப்பதன் மூலம் நன்மைகளும் தீமைகளும் நிகழ்வதுண்டு. ஒன்று, அந்த நபருக்கு அல்லது அவருடைய அணிக்கு நன்மைகள் கிட்டும். அல்லது அந்தக் கட்சிக்கு நன்மைகள் கிடைக்கும். அதைப்போலவே தீமைகளும் ஏற்படும். சம்பந்தனும் சுமந்திரனும் எடுத்த நிலைப்பாடு தமிழ் மக்களுடைய உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் எதிரானதா? அப்படியென்றால் அது எந்த வகையில் எதிரானது? என்பதை குற்றச்சாட்டை முன்வைப்போர் சொல்ல வேண்டும். பதிலாக அதற்கு மாற்றான அரசியல் நிலைப்பாட்டையும் அதனுடைய சாத்தியத்தையும் அதற்கான வழிமுறைகளையும் அவர்கள் தெளிவுறுத்துவது அவசியமாகும். ஜனநாயக அரசியற் களத்தில் பல்வேறு சிந்தனைப் போக்குகளும் நிலைப்பாடுகளும் உருவாகுவது இயல்பு. அது தவிர்க்க முடியாதது. இந்தப் புரிதலற்று, இந்த அடிப்படையை மறுதலிப்பதும் மாற்று அபிப்பிராயத்தை அல்லது மாற்று நிலைப்பாட்டை துரோகமாக – எதிராகப் பார்ப்பது ஜனநாயக விரோதமாகும். அது பாசிச உணர்வின் அடிப்படையைச் சேரும். நான் மட்டும் சரி, என்னுடைய நிலைப்பாடு மட்டுமே உண்மையானது, மற்றதெல்லாம் தவறானது, ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது பாசிசமே. சம்மந்தனும் சுமந்திரனும் மேற்கொண்டது ‘கொழும்பு மைய அரசியல்’ அல்ல. அவர்கள் இருவரும் யதார்த்த நிலை அரசியலையே மேற்கொண்டனர். போருக்குப் பிந்திய சூழல், சர்வதேச, பிராந்திய நிலைப்பாடுகள், நடைமுறை அனுபவங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிநேகபூர்வமான அரசியல். விட்டுக் கொடுப்புகளற்ற, அதேவேளை முரண்பிடிக்காத ஒரு மென்னிலை அரசியல். இன்னொரு விதமாகச் சொன்னால், சிங்களத் தரப்பை வளைத்துப் பிடிக்கும் ஒருவகையான தந்திரோபாய அரசியலை முயற்சித்தனர். அதில் போதாமைகளும் குறைபாடுகளும் இருந்தன. ஆகவே, அதில் விமர்சனத்துக்கும் கவனத்திற்கும் உரிய இடங்கள் உண்டு. இந்தக் கட்டுரையாளர் அதைத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார். இப்பொழுதும் விமர்சனத்துக்குரிய இடங்கள் இருக்கிறது. ஆனால், விட்டுக் கொடுப்புகள் ஏதும் அதில் இல்லை என்பது கவனத்திற்குரியது. சம்பந்தனுடைய பாராளுமன்ற உரைகளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தலைவர்களுடனான சந்திப்புகளின்போது சம்பந்தன் தெரிவித்த விடயங்களும் வெளியிட்ட அறிக்கைகளும் இதற்கு ஆதாரம். என்பதால்தான் சம்மந்தனுக்கும் சுமந்திரனுக்கும் இலங்கையில் சிங்கள, மலையக, முஸ்லிம் அரசியற் தரப்புகளிடத்திலும் அந்தச் சமூகங்களிடத்திலும் மதிப்பு உண்டாகியது. மட்டுமல்ல, சர்வதேச ரீதியான மதிப்பும் (கவனிப்பும்) தமிழ் அரசியற்பரப்பில் இவர்கள் இருவருக்குமே இருந்தது. இப்பொழுது சுமந்திரனையே அவர்கள் தமிழ்ப் பரப்பின் பிரதிநிதியாக நோக்கும் – கருதும் நிலை உண்டு. இவ்வளவுக்கும் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. ஒரு கட்சியின் செயலாளர் மட்டுமே. இதற்கு அப்பால், கடந்த கால ஆட்சித்தரப்புகளோடும் எதிரணிகளோடும் சம்பந்தனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் நடந்து கொண்ட முறைமைகள், உடன்பாடுகள் (இரகசிய – வெளிப்படையான) பற்றி விவாதிப்பதற்கு நிறைய உண்டு. எளிய உதாரணங்கள் இரண்டு. 1. யுத்தத்தைத் தலைமையேற்று நடத்திய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தது. 2. ‘நல்லாட்சி’ என்ற பேரில் ரணில் – மைத்திரிபால சேனநாயக்க ஆட்சிக்காலத்தில் அந்த ஆட்சியுடன் நெருக்கிச் செயற்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்திருக்க வேண்டிய, செயற்படுத்தியிருக்க வேண்டிய பல விடயங்களைச் செய்யத் தவறியமை. இது சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் மீதான தனியான குற்றச்சாட்டு மட்டுமல்ல, தமிழரசுக் கட்சியினுடைய இயல்பின் மீதும் அதனுடைய அரசியல் நிலைப்பாட்டின் மீதும் வைக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டாகும். தமிழரசுக் கட்சி தலைமை தாங்கியதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டாகவும் விமர்சனமாகவும் ஆகிறது. அப்படையில் தமிழரசுக் கட்சியானது, கொழும்புடன் (ஐக்கிய தேசியக் கட்சியுடன்)நெருக்கமான உள நிலையையும் உறவையும் கொண்டது. இது அதனுடைய தொடக்க காலத் தலைவரான எஸ். ஜே. வி. செல்வநாயம் காலத்திலிருந்து வழிவழியாக வருகின்ற ஒரு நிலையாகும். செல்வநாயகத்துக்குப் பின்னர் தமிழர்களின் அரசியலுக்குத் தலைமை தாங்கிய அல்லது தமிழர்களால் தலைவராகக் கருதப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் இதே வழிமுறையைப் பின்பற்றினார். அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கொழும்புடன் இணங்கி மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக் கொண்டது இதற்கு உதாரணம். இதனை அன்றைய ஆயுதமேந்திய விடுதலை இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன என்பது வரலாறு. ஆகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டின் மீதும் அதனுடைய இயல்பின் மீதுமே விமர்சனத்தை வைக்க முடியுமே தவிர, அதைத் தவிர்த்து, அதில் உள்ள தனியான (தலைமை) உறுப்பினர்களின் மீது விமர்சனங்களை வைப்பது பொருத்தமானதல்ல. அது பயனுடையதும் அல்ல. தமிழரசுக் கட்சியில் சம்பந்தன், சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம், சாணக்கியன் போன்றோர் மென்போக்கிலான அரசியலை மேற்கொள்கின்றனர். கொழும்பில் உள்ள சிங்களக் கட்சிகளோடும் தலைவர்களோடும் நெருக்கமான உறவில் உள்ளனர். அதைப்போல முஸ்லிம், மலையகக் கட்சிகளோடும் அவற்றின் தலைவர்களோடும் நெருக்கமாக அல்லது புரிந்துணர்வுடன் கூடிய உறவில் உள்ளனர். அப்படித்தான் தமிழரசுக் கட்சிக்கு வெளியே உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், சமத்துவக் கட்சி, ரெலோ, ஜனநாயகப்போராளிகள் போன்ற கட்சிகளோடும் உறவைப் பேணுகின்றனர். ஒரு கட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபையில் தமது தரப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பணிமனைக்குச் சென்று, அதனுடைய தலைவரான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்திருந்தார். இதெல்லாம் யதார்த்த அரசியலின்பாற்பட்ட விளைவுகள் – நடவடிக்கைகளாகும். இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, தனியே நின்று ‘அடைந்தால் மகாதேவி, இல்லையென்றால் மரணதேவி’என வீம்புக்குக் கம்பு சுத்தலாம். அப்படித்தான் தீவிரத் தமிழ்த் தேசியவாத தரப்புகள் கற்பனையில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் முன்வைக்கின்ற ஒரு நாடு இரு தேசம் என்பதற்கும் சமஸ்டிக்கு மேலான தீர்வுக்கும் சாத்தியமென்ன? அதற்கான வழிமுறை என்ன? அதற்கான பிராந்திய – சர்வதேச ஆதரவு அல்லது மதிப்பு என்ன? என்று இதுவரையில் எவரும் சொன்னதில்லை. இனியும் சொல்லப்போவதில்லை. அல்லது தாம் கருதுகின்ற – சொல்கின்ற அந்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு அவர்கள் அதற்கான வழியில் செயற்படுவதாகவும் இல்லை. இதற்காக அவ்வப்போது புதிய புதிய அமைப்புகளை உருவாக்குவது, அறிக்கைகளை வெளியிடுவது, ஊடகச் சந்திப்புகளை நடத்துவது. ஊடகங்களில் பிரகடனங்களைச் செய்வது, ‘கருத்துருவாக்கம்’ என்ற கற்பனையில் புனைவுக் கட்டுரைகளை எழுதுவதோடு தங்களுடைய மேலான புரட்சிகரப் பணிகளை நிறைவு செய்து கொள்கின்றனர். மிகவும் வலுப்பெற்றிருக்கும் இனவாதத்தையும் அந்த இனவாதத்தை மீறிச் செயற்பட முடியாமல் தடுமாறும் ஆட்சித் தரப்புகளையும் சிங்களக் கட்சிகளையும் எப்படிக் கையாள்வது என்று புரிதலற்றிருக்கும் வரையில் தமிழ் அரசியலில் முன்னேற்றத்தையோ மாற்றத்தையோ காண முடியாது. இன்றைய யதார்த்தம், மாகாணசபைகளை இயங்க வைக்கவே முடியாத நிலையாகும். இன்றைய உண்மை, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த முடியாத சூழலாகும். இந்த நிலையில் ‘தாயகக் கோட்பாடு’என்பதை 1970, 1980, 1990, 2000 போன்ற காலகட்டத்தில் கருதியதைப்போல இப்பொழுதும் கொள்ள முடியுமா? கொழும்பு மைய அரசியலும் தமிழீழ தாயகக் கோட்பாடும் என்று இரண்டு வேறு கொள்கை நிலைகள் உள்ளதாக சுவாரசியத்துக்காகப் பட்டிமன்ற விவாதங்களை நடத்திக் கொள்ளலாம். நடைமுறை அரசியலில் சாத்தியமானவற்றுக்கே வலிமை அதிகம். வரலாறும் உண்டு. கற்பனைக் குதிரைகள் ஓடுவதுமில்லை. களைப்பதுமில்லை. அப்படியான குதிரைகளை ஓட்டிக் கொள்வோர் சுய இன்பம் காண்பதன்றி வேறொன்றும் நிகழ்வதில்லை. https://arangamnews.com/?p=12784- இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் — அ. வரதராஜா பெருமாள் —
இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் March 28, 2026 — அ. வரதராஜா பெருமாள் — (இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்) மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலென்ன அல்லது ஆளுநரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலென்ன அது அரசியல் யாப்பின்படி – வரையறுக்கப்பட்ட அளவிலாயினும் – சுயாதீனமானமாக செயற்பட வேண்டிய அரச கட்டமைப்பாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண அரசாங்கங்கள் செயற்படுகின்ற நிலைமை எப்போது இலங்கையில் ஏற்படும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. அது ஒருபுறமிருக்க, மாகாண ஆட்சி அமைப்பானது அரசியல் யாப்பின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும கொண்டதாக ஆளுநர் ஆட்சியின் போதும் செயற்பட முடியும் – செயற்பட வேண்டும். இங்கே அது பற்றி சில விடயங்களை அவதானிக்கலாம். ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவராயிருப்பினும் அவர் அந்தப் பதவியில் இருக்கும் போது எந்தக் கட்சியினதும் பிரதிநிதியாக, எந்தக் கட்சிக்கும் சார்பானவராக, எந்தக் கட்சியினது நலன்களையும் பிரதிபலிப்பவராக அல்லது எந்தக் கட்சியினதும் செல்வாக்குக்கு வெளிப்படையாக உட்பட்டவராக இருக்க முடியாது – இருக்கக் கூடாது. மாகாண ஆட்சியின் ஆளுநராக இருக்கும் ஒருவர் அந்தப் பதவியைப் பெறுவதற்கு முதலில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தார் என்பதோ அரசாங்கத்தின் எந்த உத்தியோக பதவியில் இருந்தார் என்பதோ முக்கியமில்லை. ஆளுநராக அமர்ந்திருக்கும் காலகட்டத்தில் அவர் எந்தக் கட்சியையும் சாராதவரராக இருக்க வேண்டும்.– எந்தக் கட்சிக்கும் சார்பானவராக இருக்க கூடாது. 1978ம் ஆண்டு ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் உருவாக்கிய நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை என்பது அமெரிக்க அரசியல் முறையையும் பிரெஞ்சு அரசியல் முறையையும் கலந்து ஆக்கப்பட்ட கலவையே என அரசியல் விஞ்ஞான அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இலங்கையின் அரசியற் கட்டமைப்பில் உள்ள மாகாண ஆட்சி முறை அவ்வாறானதல்ல இந்திய அரசியலமைப்பு முறைப்படி – இங்கிலாந்து பாராளுமன்ற ஆட்சிமுறையின் அடிப்படையில் செயற்பட வகுக்கப்பட்டதாகும். இங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரும் மாகாண அமைச்சர்களும் இருக்கும்போது ஆளுநர் என்பவர் மாகாண ஆட்சியின் பெயரளவிலான தலைவரே. மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்டத்தை தவறான முறையிலும் தீய நோக்கங்களோடும் பிரயோகித்து மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் அரசாங்கத்தைக் கொண்டதான மாகாண ஆட்சிகள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறைக்கு வர முடியாமல் ஆக்கப்பட்டிருப்பதோடு, மத்திய அரசாங்கத்தினர் தங்களது அரசாங்கத்தின் ஆட்சியின் கீழானதாக மாகாண ஆட்சிகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். மாகாணங்களின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இல்லாத போது மாகாண ஆட்சிக்கான அரசாங்கமாக இருக்கும் ஆளுநர் ஜனாதிபதியின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்று மாகாண ஆட்சிக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் இங்கு மத்திய அரசாங்கம் மாகாண ஆட்சியை கபளீகரம் செய்து விட்டதாகவே உள்ளது. மாகாண ஆட்சியின் அமைச்சு நிர்வாக கட்டமைப்புகளை மத்திய அமைச்சர்கள் தமது அமைச்சுகளின் நிர்வாக கட்டமைப்புகளின் பகுதிகளாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஆளுநர் என்பவர் மாவட்டச் செயலாளர்களுக்கு சற்று மேலான தரம் கொண்ட ஓர் அரச அதிகாரியாகவே ஆக்கப்பட்டிருக்கிறார். இது மாகாண ஆட்சி முறையையே சிறுமைப் படுத்திவிடுகிற – அர்த்தமிழக்கச் செய்கிற வேலையே. இதனையே ராஜபக்சாக்களும், விக்கிரமசிங்காக்களும் செய்தார்கள் இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினரும் அதனையே செய்கிறார்கள். மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களிலும், பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களிலும் அமைச்சர்களே முதற் பிரஜைகளாக – தலைவர்களாக அமர்கிறார்கள். எந்தவொரு மாவட்டத்தினதும் ஒட்டுமொத்த அபிவிருத்தி தொடர்பாக உறுதி செய்யவோ, உத்தரவாதம் வழங்கவோ அல்லது ஆணையிடவோ எந்தவொரு மத்திய அமைச்சருக்கும் சட்டரீதியான அதிகாரம் கிடையாது. இப்போதுள்ள விதமான மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்கள் எந்தவகையிலும் உருப்படியான செயற்பாடுகளுக்கான அரச கட்டமைப்பாக அமைய மாட்டாது என்பதோடு, இவ்வகையான கூட்டங்கள் ஆளுநர்களின் தராதரங்களை குறைக்கின்றன -அவர்களின் பெறுமதிகளையும் அர்த்தமற்றதாக்குகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களின் கீழ்:- ● சுமார் 80000 அரச உத்தியேகத்தர்கள் மற்றும் அரச ஊழியர்கள் சேவை செய்கிறார்கள், ● இதை விட 1800 க்கு மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் என கல்வி நிலையங்கள் உள்ளன, ● போதனா வைத்திய சாலைகள் மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கைகள் கொண்ட விசேட வைத்திய சாலைகள் என்பவை தவிர ஏனைய வகைகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அத்தனை வைத்திய சாலைகளினதும் ஆட்சி மாகாண ஆட்சியிடமே உள்ளன. ● அரசியல் யாப்பின்படி மாகாணத்திலுள்ள பொலிஸ் அமைப்பானது ஆளுநருக்கு கட்டுப்பட்டது – மாகாண பொலிஸ் மாகாண ஆளுநருக்கு பொறுப்புக் கூற வேண்டியது: ● தனியார் உடைமைகளாக உள்ள காணிகள் அனைத்தினதும் மீதான அனைத்து அதிகாரங்களும் மாகாண ஆட்சிக்கே உண்டு: ● மது விற்பனைகளை, போக்குவரத்துக்களை நெறிப்படுத்தவும் கட்டுப்படுத்தவுமான அதிகாரங்கள் மாகாண ஆட்சிக்கு உண்டு. ● அத்தனை கூட்டுறவு அமைப்புகளையும் அத்தனை உள்ளுராட்சி சபைகளையும் நெறிப்படுத்தவும் வழிப்படுத்தவும் அதிகாரங்கள் மாகாண ஆட்சிக்கு உண்டு. இப்படியாக மாகாணங்களுக்கு வெளிப்படையாகவும் தெளிவாகவும் உள்ள அதிகாரங்களை அடுக்கினால் நீண்டு போகும். ஆனால் இவ்வளவு விடயங்கள் இப்போதும் நடைமுறையில் மாகாண ஆட்சியின் கீழ் – ஆளுநரின் கீழ் உள்ளனவா? தமக்குரிய அதிகாரங்களை பிரயோகித்து தமது பொறுப்புகளையும் கடமைகளையும் ஆளுநர்கள் நிறைவேற்றுகிறார்களா? நிறைவேற்றுவதை ஜனாதிபதி உறுதிபபடுத்துகிறாரா? ஆளுநருக்கு என்ன தடை? அமைச்சர்கள் தடையா? அதிகாரங்கள் இல்லாமை தடையா? இலங்கையின் அரசமைப்பில் ஜனாதிபதிதானே அனைத்துமாக இருக்கிறார். அப்படியிருக்கையில் அவரது விருப்பத்துக்கும் அரவணைப்புக்கும் உரிய ஆளுநருக்கு ஏது பிரச்சினைகள்? அபிவிருத்திக் கூட்டங்கள் நடக்கின்றன! ஆலோசனைக் கூட்டங்கள் நாழும் பொழுதும் நடக்கின்றன! அரசாங்கத்தால் அடிக்கல் நாட்டல்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. ஆனால் உருப்படியாக நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திகளின் பட்டியலை இன்னமும் காணமுடியவில்லை. அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்துக்கும் ஒரே கால அளவு தேவைப்படுபவதில்லை. ஒரே வாரத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன ஒரே மாதத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன! ஒரே வருடத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன. மாகாண ஆட்சிகளை ஜனாதிபதியே நேரடியாக வழிகாட்டி ஆளுநரைக் கொண்டு செயற்படுத்துகின்ற போதிலும் மாகாண ஆட்சி முறை மக்களுக்கு பயனற்றவை – அவற்றால் காத்திரமாக செயற்பட முடியாது – அவை வெள்ளை யானைகள் என முன்னிருந்தவர்களைப் போல இப்போதுள்ள ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நிரூபிக்க முயலுகிறார்களா என்ற கேள்வி இங்கு நியாயமாகவே எழுகிறது. இதுதான் இன்றைய அரசாங்கத்தின் இலக்காக இருந்தால் இது இலங்கையில் ஜனநாயக கட்டமைப்பின் முன்னேற்றத்துக்கு தடையாகவே அமையும் – அதிகாரங்கள் அனைத்தும் குவிந்த மத்திய ஆட்சியின் எதேச்சாதிகாதிகாரம் தொடரும் இலக்கையே வெளிப்படுத்தும். இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளில் முன்னேற்றகரமான வளர்ச்சிக்குத் தடையாகும். இலங்கைவாழ் சிறுபான்மையான தேசிய இனங்களின் அடிப்படையான அரசியல் பொருளாதார அபிலாஸைகள் தொடர்பான குறைந்த பட்ச அரசியல் ஏற்பாடாக இந்த மாகாண ஆட்சி முறையே சாத்தியமாக உள்ளது. சிங்கள பேரினவாத சகதியில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி வெளியே வந்துவிட்டதா இல்லையா என்பதை நிரூபிப்பதற்கு இந்த மாகாண ஆட்சி முறையில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களே சாட்சியாகும். பல்லினங்கள் வாழும் இலங்கை ஒரு நாடாக – அழகான நாடாக – வளமான நாடாக வளர்ச்சி அடைவதை உண்மையாக்குவதற்கு மாகாண ஆட்சி அமைப்பின் பயன்பாட்டையும், அதன் காத்திரமான செயற் திறன்களையும் உறுதிப்படுத்துவதும் மேம்படுத்துவதும், இலங்கையின் மத்திய ஆட்சி அமைப்பில் அமர்ந்திருக்கும் தலைவர்களின் குறிப்பாக ஜனாதிபதியின் பொறுப்பும் கடமையும் ஆகும். https://arangamnews.com/?p=12781- கருத்து படங்கள்
- உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! இன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியமைக்க அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படுகிறது. அதன்படி, ஃபிரைடு ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பால் தேநீர் மற்றும் பிளேன் டீ ஆகியவற்றின் விலைகளும் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2026/1470523- துபாய்க்கு அருகே பிரம்மாண்டமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
துபாய்க்கு அருகே பிரம்மாண்டமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்! துபாய் கடற்பரப்பில் திங்களன்று (30) மசகு எண்ணெய் நிரம்பியிருந்த ஒரு கப்பலை ஈரான் தாக்கித் தீ வைத்துக் கொளுத்தியது. இந்நிலையில் ஈரான், ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், அதன் எரிசக்தி ஆலைகளையும் எண்ணெய் கிணறுகளையும் அமெரிக்கா அழித்துவிடும் என்று ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, ஹார்முஸ் வளைகுடா மற்றும் நீரிணையில் ஏவுகணைகள் அல்லது வெடிகுண்டு வீசும் வான் மற்றும் கடல் ட்ரோன்கள் மூலம் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் அண்மைய நிகழ்வு இதுவாகும். ஒரு மாதத்துக்கும் காலமாக நீடித்து வரும் இந்த மோதல், மத்திய கிழக்கு முழுவதும் பரவி, ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்து, எரிசக்தி விநியோகத்தைப் பாதித்து, உலகப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய விலையில் 200 மில்லியன் டொலருக்கும் அதிகம் பெறுமதியான சுமார் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெயை ஏற்றிச் செல்லக்கூடிய அந்த எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதல் குறித்து குவைத்தின் அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் சிறிது நேரம் உயர்ந்தன. சேதத்தை மதிப்பிடும் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருவதாகவும், எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கப்பலின் உரிமையாளரான குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் எச்சரித்தது. பின்னர், துபாயில் உள்ள அதிகாரிகள், எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவித்தனர். எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். எண்ணெய் மற்றும் எரிபொருள் விலையேற்றம், அமெரிக்கக் குடும்பங்களின் நிதிநிலையைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரம், எரிசக்தி விலைகளைக் குறைத்து அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதாக உறுதியளித்திருந்த ட்ரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சிக்கு நவம்பர் மாத இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு அரசியல் தலைவலியாகவும் மாறியுள்ளது. உலகளாவிய விநியோக இறுக்கம் அமெரிக்க மசகு எண்ணெய் விலையை ஒரு பீப்பாயக்கு 101 டொலருக்கும் மேல் உயர்த்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் தேசிய சராசரி சில்லறை பெட்ரோல் விலை, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக திங்களன்று ஒரு கேலனுக்கு 4 டொலரை தாண்டியது என விலை கண்காணிப்பு சேவையான GasBuddy-யின் தரவுகள் காட்டின. இரு தரப்புத் தாக்குதல்களும் தணியும் அறிகுறிகள் தென்படாத நிலையில், ஒரு பரந்த மோதல் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. அண்மைய நாட்களில், ஈரான் ஆதரவு ஹவுத்திகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் வீசி போரில் நுழைந்தனர். மேலும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை துருக்கிய வான்வெளிக்குள் நுழைந்ததாகவும், பின்னர் நேட்டோவின் வான் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்த மூன்று ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க இராணுவத்தின் உயரடுக்கு 82 ஆவது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மத்திய கிழக்குக்கு வரத் தொடங்கியுள்ளனர் என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் திங்களன்று ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்தனர். தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் அதே வேளையில், ஈரானிய எல்லைக்குள் படைகளை நிலைநிறுத்துவது உட்பட ட்ரம்பின் விருப்பங்களை விரிவுபடுத்தும் ஒரு வலுவூட்டலின் பகுதியாக இது உள்ளது. உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் குறுகிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு அவர் நிர்ணயித்திருந்த முந்தைய காலக்கெடுவை நீட்டித்த பின்னர், கடந்த வாரம் அவர் நிர்ணயித்த ஏப்ரல் 6 ஆம் திகதி காலக்கெடுவுக்குள் தெஹ்ரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட ட்ரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் பின்னர் கூறினார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக லெவிட் கூறினார். மேலும், தெஹ்ரான் பகிரங்கமாகக் கூறுவதற்கும், அமெரிக்க அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் கூறுவதற்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நீரிணை பெரும்பாலும் மூடப்பட்டிருந்தாலும், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாகவும், அதை மீண்டும் திறப்பதற்கான சிக்கலான நடவடிக்கையை பிற்காலத்தில் மேற்கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் தனது உதவியாளர்களிடம் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பின்னர் செய்தி வெளியிட்டது. பாகிஸ்தான், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இடைத்தரகர்கள் மூலம் அமெரிக்காவின் சமாதான முன்மொழிவுகளைப் பெற்றதாக ஈரான் திங்கள்கிழமை முன்னதாகத் தெரிவித்தது. போரின் செலவை ஏற்குமாறு அரபு நாடுகளைக் கேட்பது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. ட்ரம்ப் நிர்வாகம் போருக்காக மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதியைக் கோரியுள்ளது. புதிய செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அமெரிக்க காங்கிரஸில் இந்தக் கோரிக்கை கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறது. https://athavannews.com/2026/1470499- மத்திய கிழக்கு போர்: 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அலுமினியம் விலை அதிகரித்தது
மத்திய கிழக்கு போர்: 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அலுமினியம் விலை அதிகரித்தது 31 Mar, 2026 | 11:41 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கின் முக்கிய அலுமினிய உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களினால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அலுமினியத்தின் விலை 4.7 சதவீதம் அதிகரித்து, ஒரு மெற்றிக் தொன் 3,453 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் இது 3,492 டொலர் வரையிலும் அதிகரித்தது. இதற்கு முன்னர் 2022 மார்ச் மாதம் ரஷ்யா - உக்ரேன் போரின் போது ஒரு தொன் அலுமினியம் 4,073.50 டொலர் என்ற உச்சத்தைத் தொட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அலுமினியத்தைத் தொடர்ந்து செம்பு ஒரு தொன் 12,231 டொலராகவும், துத்தநாகம் 3,168 டொலராகவும் விலை அதிகரித்துள்ளன. மத்திய கிழக்கின் இரு பெரும் உற்பத்தி நிறுவனங்கள் ஈரானின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான பஹ்ரைனிலுள்ள அல்பா நிறுவனம் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு வருகிறது. ஏற்கனவே தனது உற்பத்தித் திறனில் 19 சதவீதத்தை மூடுவதாக அல்பா நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம், தனது ஆலை சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் போரினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கான அலுமினிய ஏற்றுமதியை முடக்கியுள்ளது. லண்டன் உலோகச் சந்தையின் களஞ்சியங்களில் உள்ள அலுமினிய கையிருப்பு கடந்த மே மாதத்திலிருந்து 60 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளதால், சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. உலகின் மிகப்பெரிய நுகர்வு நாடான சீனாவில் தொழிற்சாலை நடவடிக்கைகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், அலுமினியத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் பொதியிடல் துறைகளில் அலுமினியம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், இந்த விலை அதிகரிப்பு சர்வதேச ரீதியில் பல பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். https://www.virakesari.lk/article/242380- மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்து கும்பலிடம் இருந்து சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மீட்பு - ஒருவர் கைது
மட்டக்களப்பு கடத்தல் விவகாரம்: மயக்க மருந்து விநியோகித்தவருக்கு தடுப்புக்காவல் மட்டக்களப்பில் பெண்களைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையிட்ட பின் கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழாவது சந்தேக நபரை, எதிர்வரும் 02ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், கொழும்பு - வத்தளைப் பகுதியில் வைத்து இந்த 7ஆவது சந்தேக நபரை கைது செய்தனர். குறித்த நபர் இந்த கடத்தல் கும்பலுக்கு மயக்க மருந்துகளை விநியோகித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் பின்னர், கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் சந்தேக நபர்கள் நேற்று மாலை (30) மட்டக்களப்பு நீதிவான் நீதமன்ற நீதிபதி அ.தர்சினியின் அறையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது முதலாவது மற்றும் ஏழாவது சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். பொலிஸாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஏழாவது சந்தேக நபரை ஏப்ரல் 02ஆம் திகதி வரை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர். அத்துடன் அந்த இளம் தாயின் 3 வயது சிறுமி வயல் பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் கண்காணிப்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளைவாக, காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், அவர்களின் உறவினர், கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய இரு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது 7ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmne27vza0007356p5d6v6mnr- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ஆனால் இவை எல்லாமுமே அவர் அரசியலுக்கு வர முன்பே உழைத்து வரியும் கட்டிய வருமானம். ஆகவே இது வருமான வரித்துறைக்கு தெரிந்தே வைத்திருக்கும் சொத்து. ஒரு தனி நபராக இதை பொதுவெளியில் போட வேண்டிய தேவை இதுவரை இல்லை. இப்போ உள்ளது எனவே வெளியிடுகிறார். ஆகவே… விஜை இதை வேறு வழியில்லாமல் வெளியிடவில்லை. ஏற்கனவே வரி கட்டி சேர்த்த சொத்தை - இப்போ அனைவருக்கும் தெரியபடுத்துகிறார். இதில் அரசியலுக்கு வர முன்பே பானவிடயத்தில் ஒரு தூய்மை, சட்டத்துக்கு கட்டுபட்டு நடந்த விதம் என்பன தெரிகிறன. விஜைக்கு சம்பளம் கொடுக்கும் ரெட்ஜயண்டின் 21 வயது ஓனரின் பாட்டனும், தகப்பனும்… சோத்துக்கு வழியில்லை என கணக்கு காட்டுவதும் இதுவும் ஒன்றல்ல: 😂 ஆனால் உலக ஜனநாயகத்தின் தலைமகன் தம்பர் இன்னும் வருமான வரி கணக்கைன்காட்டவில்லைனென நினைக்கிறேன். குடும்ப சொத்து விபரமும் அப்படியே.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அதுதான் புலிகள் விடயத்தில் இந்தியா நடந்து கொண்டது சரி என எழுதிய போதே உங்கள் தற்போதைய பாதை என்ன என்பதை காட்டி விட்டீர்களே. அனுர மீதும் கொள்ளை பாசம் இருப்பதை உணர முடிகிறது… ஆனால் குணா கமல் போல் அதை வார்த்தையில் எழுத முடியாமல் தவிக்கிறீர்கள் என்பதும் புரிகிறது. கேட்டும் கொடார்…சிறியர் கேட்டதும் கொடுப்பார்…மனிதர் கேட்காமலே கொடுப்பார்…பெரியர் வேண்டாம், வேண்டாம் என கதற, கதற கொடுப்பார்…...- நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
யார் சுழியோடிகள் கைப்பற்றினரா? நீருக்கடியில் உற்பத்தி நிலையமாம், போலீசார் கைப்பற்றினராம், கதை நன்றாகத்தான் இருக்கிறது.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அது குண்டர்கள் கேள்வி கேட்பவரை சூழ்ந்து கொண்டு இழுத்து போக ஆரம்பித்த பின் சொல்கிறார். ஆனால் அந்த நபர் கேள்வி கேட்க எழுந்தத்தும், சீமான் முதலில் சொல்வது, நீ இப்படி திமுகவை கேட்பாயா ? என்பதே. இதுதான் “ஆளை அப்புறப் படுத்துங்கள்” என சீமான் குண்டர்களுக்கு கொடுத்த சமிக்ஞை. அதன் படி குண்டர்கள் ஆளை அப்புறப்படுத்த ஆரம்பித்த பின், அட விடுங்க அவர் கேள்வி கேட்கட்டும் என டிராமா போடுகிறார். குண்டர்களுக்கும், பார்வையாளருக்கும் கூட அண்ணன் விளையாடும் விளையாட்டு புரிகிறது. நீங்கள்தான் பாவம் எப்படியாவது முட்டு கொடுத்தாக வேச்ண்டுமே😂 தமிழ்நாட்டில் யாரை ஆதரிக்கிறேன் என்பதில் நான் தலைவர் பிரபாகரன் வழியில்தான் என்றுமே. அவர் மதில் மேல் புலி, நான் ம.மே. பூனை. ஆனால் இருவருமே மதில் மேல்தான். ஆனால் நான் யாரை எதிர்கிறேன் என்பதில் மிக வெளிப்படையாக, உறுதியாக உள்ளேன்.- விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
அதே நேரம் ஆளில்லாத விமானங்களை வீழ்த்த அமெரிக்க இஸ்ரேலிய படைகளுக்கு வகுப்பெடுக்க உக்ரேனிய வீரர்கள் போனதாகவும் செய்தி வந்ததே. இது எப்படி?வாத்தியாருக்கே வகுப்பு. நம்ம பாசையில் திருப்பதிக்கே லட்டு.- நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
கா.குடி பெயரை....பாவிப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் ....அவ்வூரவர் ஈரானுக்கு இந்த பங்கர் அமைப்பு முறையை பரீட்ட்சித்துப் பார்க்க செய்த இடத்தில்...யாரோ விசமிகள் இதில் புகுந்து கசிப்பை செய்திருக்கிறார்கள்...என்று புல்லாவோ ..கக்கிமோ அறிக்கை விடலாம் ...எனவே மற்ற இனம் அடக்கி வாசிக்கவும் இதை வைத்து ஒரு சினிமாவே எடுக்கலாம். - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.