Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் க்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  3. நான் நினைக்கிறேன் பாணில், பணிசில் சின்ன வண்டு (கோதுமை மாவில் இருக்கும் வண்டு), பீடித் துண்டு போன்றவற்றை கண்டு அவற்றை அலாக்கா தூக்கி எறிந்து விட்டு மிச்ச பாணை சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நாங்கள் தான் போல...
  4. Today
  5. அதிகரிக்கும் வெப்பநிலை: சிறுவர்களுக்கு தோல் பிரச்சினை மற்றும் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை Published By: Digital Desk 3 09 Mar, 2026 | 02:40 PM நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்களிடையே தோல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உடலில் நீர்சத்து இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக தோல் வெடிப்புகள், எரிச்சல், பூஞ்சை தொற்று போன்ற பொதுவான தோல் நோய்கள் ஏற்படக்கூடும். மென்மையான சருமம் கொண்ட சிறுவர்கள் மற்றும் வெளிப்புற சூழலில் அதிக நேரம் செலவிடும் சிறுவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகமாக ஆளாகக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிக வெப்பநிலையினால் சிறுவர்களில் நீர்சத்து இழப்பு அபாயம் அதிகரிப்பதுடன், தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முறையான மேற்பார்வையின் கீழ் நீரில் விளையாடுவதன் மூலம் சிறுவர்களுக்கு குளிர்ச்சியளிக்க முடியும் எனவும், இது வெப்பமான வானிலையில் உடல் வெப்பத்தை குறைக்க உதவும் எனவும் சுகாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், பல பாடசாலைகளில் ஆண்டு தோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளினால் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும் போது வெப்பச் சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விளையாட்டுகளின் போது அதிகமாக வியர்வை வெளியேறுவதால் சோடியம் மற்றும் பொற்றாசியம் போன்ற அத்தியாவசிய உடல் உப்புகள் இழக்கப்படலாம். இது மூளை மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, சிறுவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்தோடு, விளையாட்டு நடவடிக்கைகளின் போது இடைவேளைகளை எடுக்கவும், அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதை தவிர்க்கவும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளின் அதிக வெப்பநிலை காணப்படும் நேரங்களில் சிறுவர்களை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும், நீரேற்றமாக இருக்க அதிகளவு நீர் மற்றும் இயற்கை குளிர்பானங்களை குடிக்க ஊக்குவிக்கவும் சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/240533
  6. அமெரிக்கா - இரானின் ஆயுத கையிருப்பு குறைந்தால் போர் எப்படி மாறும்? பட மூலாதாரம்,US Navy via Getty Images கட்டுரை தகவல் ஜோனாதன் பீல் பாதுகாப்பு செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிடம் முக்கியமான ஆயுதங்கள் 'கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளன' என்று கூறியுள்ளார். மறுபுறம், அமெரிக்கா திட்டமிட்டதை விட நீண்ட காலம் 'எதிரியை எதிர்த்து நிற்கும் திறன்' எங்களிடம் உள்ளது என்று இரானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுத கையிருப்பு மற்றும் விநியோகம் மட்டும் இந்த மோதலின் முடிவை தீர்மானிக்காது. யுக்ரேன் நீண்ட காலமாக ரஷ்யாவைவிட குறைந்த வீரர்கள் மற்றும் குறைந்த ஆயுதங்களுடனும் போராடி வருகிறது. இருப்பினும் ஆயுதங்கள் ஒரு முக்கிய அம்சமாகும். தொடக்கத்திலிருந்தே இந்த ராணுவ நடவடிக்கைகளின் வேகம் மிக அதிகமாக உள்ளது. உற்பத்தி செய்யப்படுவதை விட வேகமான விகிதத்தில் இரு தரப்பினரும் ஏற்கனவே தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். டெல் அவீவை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மதிப்பீட்டுப்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே 2,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒவ்வொரு தாக்குதலிலும் பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரான் ஏற்கனவே 571 ஏவுகணைகளையும் 1,391 டிரோன்களையும் ஏவியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியது. அவற்றில் பல இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கலாம். போர் நீண்ட காலம் நீடிக்கும் பட்சத்தில், இரு தரப்பிற்கும் இந்த அளவிலான மோதலை தொடர்ந்து பராமரிப்பது கடினமான ஒன்றாக மாறும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் பாதிப்பை காட்டும் படம் இரான் நிலை என்ன? இரான் ஏவும் ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை ஏற்கனவே கவனித்துள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். போரின் முதல் நாளில் நூற்றுக்கணக்கில் இருந்த ஏவுகணைகள் தற்போது டஜன் கணக்காக குறைந்துள்ளன. போருக்கு முன்னதாக, இரானிடம் 2,000-க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் கையிருப்பில் இருந்ததாக மதிப்பிடப்பட்டது. எதிரிகளை குழப்பத்தில் வைத்திருப்பதற்காக இத்தகைய புள்ளிவிவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், எந்தவொரு ராணுவமும் தங்களிடம் உள்ள ஆயுதங்களின் துல்லியமான எண்ணிக்கையை வெளியிடுவதில்லை. இந்த போர் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28 முதல் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல்கள் 86% குறைந்துள்ளதாக அமெரிக்க மூத்த தளபதி ஜெனரல் டான் கெய்ன் புதன்கிழமையன்று கூறினார். போருக்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான 'ஷாஹெத்' டிரோன்களை இரான் தயாரித்ததாகக் கருதப்படுகிறது. இந்த வடிவமைப்பு ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ரஷ்யா தனது சொந்த ஷாஹெத் பதிப்பை பயன்படுத்தி யுக்ரேனில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா கூட இந்த வடிவமைப்பை நகலெடுத்துள்ளது. ஆனால் மோதல் தொடங்கிய முதல் நாளில் இருந்து இரானின் டிரோன் ஏவுதல்கள் 73% குறைந்துள்ளதாக கெய்ன் கடந்த வாரம் கூறினார். இரான் தனது செயல்பாடுகளின் வேகத்தை தக்கவைக்க போராடி வருவதாகத் தெரிகிறது. இந்த வியத்தகு சரிவு, கையிருப்புகளை பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். ஆனால் உற்பத்தியைத் தொடர்வது இனி கடினமாகவே இருக்கும். பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,இரானில் பாதிப்பை காட்டும் படம் வான்வழி தாக்குதல் வரம்புகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இப்போது இரான் மீது வான்வழி ஆதிக்கத்தை பெற்றுள்ளன. இரானின் பெரும்பாலான வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது இரான் விமானப்படையும் வலிமையாக இல்லை. போரின் அடுத்த கட்டம் இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்களை அழிப்பது மற்றும் ஆயுதக் கிடங்குகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அழிப்பதில் கவனம் செலுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. இரானின் போர் புரியும் திறனைக் குறைப்பது இப்போது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எளிதாக இருக்கலாம். ஆனால் அதன் அனைத்து ஆயுதக் கிடங்குகளையும் அழிப்பது கடினமாக இருக்கும். இரான் ஒரு பெரிய நாடு. ஆயுதங்களை மறைக்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன. சமீபத்திய வரலாறு வான்வழியாக நடத்தப்படும் போர்களின் வரம்புகளையும் காட்டுகிறது. இராண்டு ஆண்டுகள் நடத்திய தீவிர குண்டுவீச்சுக்கு பிறகும் காஸாவில் ஹமாஸை இஸ்ரேல் ராணுவம் இன்னும் அழிக்கவில்லை. ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஒரு வருட கால அமெரிக்க குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைத்தனர். அவர்களின் சில ஆயுதங்களும் அவ்வாறே தப்பின. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் தாக்குதலால் மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு அமெரிக்கா அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமாகத் தொடர்கிறது. அதன் ஆயுத கையிருப்பு மற்ற எந்த நாட்டையும் விட அதிகமானதாக இருக்கும். ஆனால் அமெரிக்க ராணுவம் பெரும்பாலும் விலையுயர்ந்த நவீன ஆயுதங்களையே நம்பியுள்ளது. அவை குறைந்த அளவில் தயாரிக்கப்படுகின்றன. உற்பத்தியை விரைவுபடுத்துமாறு வலியுறுத்துவதற்காக பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களை டிரம்ப் சந்தித்தார். இந்த போர் அமெரிக்க ஆயுத வளங்களில் அழுத்தத்தை உண்டாக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். அமெரிக்காவிற்கு இப்போது நெருக்கமான தூரத்தில் இருந்து தாக்குதல்களை நடத்துவதற்கு சுதந்திரம் கிடைத்துள்ளதால், அந்த அழுத்தம் ஓரளவு குறைந்திருக்கலாம். டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகள் போன்ற அதிக விலை கொண்ட மற்றும் அதிநவீன நீண்ட தூரம் செல்லும் ஆயுதங்களான "ஸ்டாண்ட்-ஆஃப் ஆயுதங்களை" பயன்படுத்துவதை அமெரிக்கா ஏற்கனவே நிறுத்திவிட்டதாக கெய்ன் கூறினார். அமெரிக்க விமானப்படை இப்போது குறைந்த விலையிலான "ஸ்டாண்ட்-இன்" ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. அதாவது, இவை இலக்கின் மீது நேரடியாக வீசக்கூடிய ஜே.டி.ஏ.எம் குண்டுகள் போன்றவை. மார்க் கான்சியன் என்ற முன்னாள் அமெரிக்க கடற்படை கர்னல், உத்தி மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். ''ஆரம்பத்தில் தொலைதூரத்திலிருந்து தாக்குதல் நடத்திய பிறகு, இப்போது அமெரிக்க ராணுவம் அதிக விலை உள்ள நீண்ட தூர ஆயுதங்களுக்கு பதிலாக குறைந்த செலவான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை பயன்படுத்த முடியும்.'' என்றார் மார்க் கான்சியன் அமெரிக்காவால் இந்த அளவிலான போரை "கிட்டத்தட்ட காலவரையின்றி" தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார். போர் நீண்ட காலம் நீடிக்கும் போது, இலக்குகளின் பட்டியலும் சிறியதாகிறது. அதாவது செயல்பாடுகளின் வேகம் படிப்படியாகக் குறையும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் தாக்குதலால் பஹ்ரைனில் ஏற்பட்ட பாதிப்பு வான் பாதுகாப்பு அமெரிக்காவிடம் பல்லாயிரக்கணக்கான ஜே.டி.ஏ.எம் குண்டுகள் இருப்பதாகவும், ஆனால் விலையுயர்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பு குறைவாக இருப்பதாகவும் கான்சியன் கூறுகிறார். மோதலின் ஆரம்ப கட்டங்களில், இரானின் பதிலடி தாக்குதல்களின் அச்சுறுத்தலை முறியடிக்க அவை அவசியமாக இருந்தன. பேட்ரியாட் ஏவுகணைகளுக்கு அதிக தேவை உள்ளது. அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அதன் அரபு நட்பு நாடுகளுக்கும் யுக்ரேனுக்கும் கூட அதிகமான தேவை உள்ளது. ஒவ்வொரு இடைமறிப்பு ஏவுகணையும் 4 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக செலவாகும். மேலும் அமெரிக்கா தற்போது ஆண்டுக்கு சுமார் 700 ஏவுகணைகளை உற்பத்தி செய்வதாக நம்பப்படுகிறது. இரானால் இன்னும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ முடிந்தால், அது இந்த வரையறுக்கப்பட்ட கையிருப்புகளை குறைக்கும். அமெரிக்காவிடம் சுமார் 1,600 பேட்ரியாட் ஏவுகணைகள் கையிருப்பில் இருக்கலாம் என்று கான்சியன் மதிப்பிடுகிறார். ஆனால் சமீப நாட்களில் அவை பயன்படுத்தப்பட்டதால் குறைந்து இருக்கலாம். வானிலிருந்து தரையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்கா "நீண்ட காலம்" தொடர்ந்து நடத்த முடியும் என அவர் கூறுகிறார். ஆனால் எதிரியின் தாக்குதலில் இருந்து காக்கும் வான்வழி பாதுகாப்பு என்பது "சற்றே உறுதியற்றதாக" உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "அதிபர் டிரம்ப் பேட்ரியாட் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்த முடிவெடுத்தால், இரானியர்களை விட அமெரிக்காவால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இதனைச் செய்வதில் ஒர் அபாயம் உள்ளது. அப்படி செய்தால், பசிபிக் பகுதியில் ஏற்படக்கூடிய மற்றொரு சாத்தியமான மோதலை சமாளிக்க அமெரிக்காவிடம் குறைவான பேட்ரியாட் ஏவுகணைகளே இருக்கலாம்'' ஆனால்,"இரானால் எங்களை விட நீண்ட காலம் நீடிக்க முடியாது" என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிபடக் கூறுகிறார். இதுகுறித்து அவர் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம். https://www.bbc.com/tamil/articles/cj988kexznjo
  7. G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி Mar 9, 2026 - 12:48 PM உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விலை உயர்வுக்குத் தீர்வாக, அவசரகால எரிபொருள் இருப்புகளை சந்தையில் வெளியிடும் முன்மொழிவு குறித்து அவர்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா ஏற்கனவே தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் G7 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. எவ்வாறாயினும், இந்தச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயர் ஒன்றின் விலை 117.65 அமெரிக்க டொலரில் இருந்து 104 டொலராக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmmiumjwx000h356puipnd3it
  8. ரயிலில் யானைகள் அடிபடாமல் டிரோன், ஏஐ தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு தடுக்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் கோவை வனக்கோட்டத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் ஆளில்லா டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு டிரோன்களின் உதவியுடன், ரயில் வரும் போது யானைகள் ரயில் பாதை அருகிலேயே வராமல் துரத்தும் புதிய திட்டம் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இந்த டிரோன்கள் 24 மணி நேரமும் 2 ரயில் பாதைகளை டிரோன் மூலமாகக் கண்காணித்து, ரயில் பாதைக்கு அருகில் வரும் யானைகளை சைரன் சத்தம் எழுப்பி துரத்துவதை பிபிசி தமிழ் மேற்கொண்ட களஆய்வில் அறிய முடிந்தது. இந்தியாவில் 14 ஆண்டுகளில் ரயில் மோதி 186 யானைகள் பலி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2010-2024 காலகட்டத்தில் 186 யானைகள் ரயில்கள் மோதி உயிரிழந்துள்ளன. ரயில்வே அமைச்சகம் மற்றும் மாநில வனத்துறைகள் உடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வில், 77 ரயில் பாதைகளில் அதிகமான காட்டுயிர் உயிரிழப்புகள் நடப்பதை அறிந்து பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. அதன்படி, தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதிகளில் காட்டுப்பகுதி மற்றும் பட்டா நிலங்களில் அமைந்துள்ள 2 ரயில் வழித்தடங்களில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பது அதிகமாக நடந்துள்ளது. தமிழக எல்லையிலுள்ள எட்டிமடை ரயில் நிலையம், கேரளா எல்லையிலுள்ள வாளையார் ரயில் நிலையம் ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏ மற்றும் பி என 2 வழித்தடங்கள் 7 கி.மீ. தூரத்துக்கு அமைந்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர், இவ்விரு ரயில் வழித்தடங்களும் மதுக்கரை வனச்சரகம் சோளக்கரை காப்புக்காட்டுப் பகுதியை மூன்று துண்டுகளாக பிரிக்கின்றன. இவற்றில் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்கு தண்டவாளத்தை கடக்கும்போதுதான் ரயில்கள் மோதி காட்டு யானைகள் இறந்துள்ளன. கடந்த 2008 லிருந்து 2021 வரையிலும் 6 ரயில் மோதல் நிகழ்வுகளில் 11 யானைகள் உயிரிழந்துள்ளதாக பிபிசியிடம் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பின் நீதிமன்ற உத்தரவு காரணமாக, வனத்துறை மற்றும் ரயில்வே துறை இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. தமிழக வனப்பகுதியில் ரயில் பாதைகள் அமைந்துள்ள இடங்களில், கனமான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டன. யானைகள் ஒரு புறமிருந்து மறுபுறமுள்ள காட்டுப்பகுதிக்கு பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில், ரயில்வே இருப்புப்பாதைக்கு கீழே 2 சுரங்கப்பாதைகள் ரயில்வே துறையால் கட்டப்பட்டுள்ளன. ரயில் பாதைகளை ஒட்டி யானைகள் வரும்போது, அவற்றை சியர்ச் லைட் மற்றும் பட்டாசுகள் வெடித்து துரத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள வழித்தடக் காவலர்கள் (Track Watchers) நியமிக்கப்பட்டனர். இதற்கு ஓரளவுக்குப் பலன் கிடைத்தது. இருப்பினும் 7 கி.மீ. தூரமுள்ள 2 ரயில் வழித்தடங்களிலும் ரயில்கள் வரும்போதெல்லாம் ஆட்களை வைத்து, யானைகளைக் கண்காணித்து துரத்துவதில் பல நடைமுறைச் சிரமங்கள் இருந்தன. ஏஐ கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது? படக்குறிப்பு,ஏஐ கட்டுப்பாட்டு மையம் 2023-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை வைத்து, யானைகளைக் கண்காணிக்க தமிழக வனத்துறை திட்டமிட்டது. அதற்காக வாளையார் அருகேயுள்ள நவக்கரை வனப்பகுதியில் ஏஐ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது. ஏ மற்றும் பி வழித்தடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் இரவு நேரங்களிலும், யானையின் உடல் வெப்பத்தை வைத்து, அவற்றைக் கண்டறியும் திறனுள்ளவை. இந்த கேமராக்கள் ஏஐ கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தலா 2 பேர் வீதமாக 24 மணி நேரமும் இவற்றைக் கண்காணித்து வருகின்றனர். "யானைகள் ரயில் தடத்துக்கு அருகில் செல்லும்பட்சத்தில் மையத்திலுள்ள அலாரம் அலறுகிறது. உடனடியாக எந்த வழித்தடத்தில் எந்த இடத்தில் எவ்வளவு தூரத்தில் யானை இருக்கிறது என்பது ஏஐ தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்டு, தானியங்கி முறையில் (Automatic Messages) ரயில்வே துறையினருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது." "உடனடியாக லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநருக்கு, ரயில் நிலைய மேலாளரிடமிருந்து தகவல் தரப்பட்டு, குறிப்பிட்ட பகுதியில் ரயிலை நிறுத்தவோ அல்லது மிகவும் மெதுவாக இயக்கவோ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த தகவல் தமிழக வனத்துறையின் வனவருக்கும் செல்கிறது. இவ்விரு வழித்தடங்களிலும் 25 டிராக் வாச்சர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் அப்பகுதியில் பணியில் இருப்பவர்களுக்கு வாக்கி டாக்கி அல்லது அலைபேசியில் தகவல் தரப்பட்டு, ரயில் தடத்திற்கு அருகிலுள்ள யானைகளைத் துரத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. படக்குறிப்பு,ஏஐ கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர் சந்தோஷ் இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஏஐ கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர் சந்தோஷ், ''2024 பிப்ரவரியிலிருந்து இந்த மையம் செயல்படுகிறது. தமிழக வனத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து எடுத்துள்ள இந்த கூட்டு முயற்சியால் அப்போதிலிருந்து இப்போது வரையிலும் 8750 முறை, யானைகள் இவ்விரு ரயில் பாதைகளைக் கடந்தும் ரயில் மோதி காட்டுயானை இறக்கும் நிகழ்வு நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.'' என்றார். கட்டுப்பாட்டு மையத்தின் பராமரிப்பு மேலாளரும், வனத்துறை தொழில்நுட்ப உதவியாளருமான நித்தியானந்தம், ''இதில் ரயில்வே துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ஆம் ஆண்டில் ஒரே நாளில் ரயில் மோதி 3 யானைகள் இறப்பதற்கு முன்பு வரையிலும், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இப்பகுதியில் 100–120 கி.மீ. வேகத்திலும், சரக்கு ரயில்கள் 60–70 கி.மீ. வேகத்திலும் சென்று கொண்டிருந்தன. அதன்பின்பு இந்த வேகத்தை முறையே 40–45 கி.மீ. மற்றும் 25–30 கி.மீ. வேகமாகக் குறைத்துவிட்டனர்.'' என்றார். இவ்வாறு வேகத்தைக் குறைத்ததன் காரணமாகவே, ஏஐ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தகவல் சென்றதும், யானைகள் மீது ரயில் மோதாத வகையில் நிறுத்தவோ அல்லது மெதுவாகக் கடந்து செல்லவோ வழிவகை செய்ய முடிவதாக ஏஐ கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த மையம் செயல்படத் துவங்கியதிலிருந்து இப்போது வரை ரயில் மோதி காட்டுயானை இறந்ததாக ஒரு நிகழ்வும் பதிவாகவில்லை என்று தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூவும் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் விரிவான தகவல்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். தேனீக்கள் ரீங்கார ஒலியால் யானைகளை துரத்தும் டிரோன்கள் படக்குறிப்பு,தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்தின் டிரோன் பொறியாளர் பாலமுருகன் இந்நிலையில், ரயில் பாதைக்கு அருகிலேயே யானைகள் வராத வகையில் தடுத்து துரத்துவதற்கு, அதே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதியதொரு திட்டத்தை தமிழக வனத்துறை செயல்படுத்தியுள்ளது. தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்துடன் (TNUAVTC-Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation) தமிழக வனத்துறை இணைந்து ரூ.8.3 கோடி மதிப்பில் இத்திட்டத்தைத் துவக்கியுள்ளது. இதற்காக தனியார் நிறுவன உதவியுடன் இத்திட்டத்துக்காக 3 வயர் இணைப்புள்ள (Tethered Drone) டிரோன்களையும், 3 கண்காணிப்பு டிரோன்களையும் (Surveillance Drone) ஆளில்லா வானூர்தி கழகம் உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே நவக்கரையில் செயல்பட்டு வரும் ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கு அருகிலேயே இதற்காக கட்டுப்பாட்டு அறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இரு ரயில் வழித்தடங்களையும் கண்காணிக்க அவற்றை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இந்த 3 இடங்களிலிருந்தும் கேபிள் உதவியுடன் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட 3 டிரோன்கள் 24 X 7 மணி நேரமும் 100–150 மீட்டர் வரை உயரத்தில் ஒரே இடத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. மின்தடை ஏற்பட்டால் தொடர்ந்து இயங்க 6 மணி நேரம் இயங்கும் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் செயல்படும் அந்த டிரோன்களில் உள்ள கேமராக்களில் 2 தண்டவாளங்களை ஒட்டியுள்ள பகுதிகளும், அதையொட்டிய காட்டுப்பகுதிகளும் அதனுடன் இணைக்கப்பட்ட லேப் டாப்பில் தெரிகின்றன. இந்த லேப் டாப்கள், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. தெர்மல் முறையில் இரவிலும் உருவங்கள் துல்லியமாகத் தெரியும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் கேமராக்கள் செயல்படுகின்றன. இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்தின் டிரோன் பொறியாளர் பாலமுருகன், ''இந்த வகை வயர் இணைப்புள்ள டிரோனில் (Tethered Drone) உள்ள மோட்டார் எல்லாமே DC மின்சாரத்தில் இயங்குவதால் சூடாகாது. இதில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் புவியமைப்பு சார்ந்த அனைத்து தகவல்களையும் துல்லியமாகத் தரும். தூரல் மழையிலும் இந்த டிரோன் இயங்கும். மிகக்கனமான காற்று மற்றும் மழையில் மட்டுமே இது இயங்காது.'' என்றார். ''இதிலுள்ள ஜூம் கேமரா 180 டிகிரியில் கண்காணிக்கும். வீடியோ கண்ட்ரோல் யூனிட்டில் பதிவாகும் காட்சிகள், லேப்டாப் மூலமாக கட்டுப்பாட்டு அறைக்கு வரும். அதனால் அனைத்து டிரோன்களின் தகவல்களும் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகிக் கொண்டே இருக்கும். இந்த டிரோன் பரவலாக 2.5 கி.மீ. துாரமுள்ள ரயில் பாதையை ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கும் திறனுடையது. ரயில் பாதை மட்டுமின்றி, மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் யானைகள் செல்வதையும் இதன் மூலமாகக் கண்காணித்து, அவற்றைத் துரத்த முடியும்.'' என்றார் பாலமுருகன். படக்குறிப்பு,டிரோன் பைலட் ஷெர்பின் ரயில் தடத்திற்கு இரு புறமும் 100 மீட்டர் வரையுள்ள தூரத்தை சிவப்புப் பகுதி (Red Zone) என்றும், 200–300 மீட்டர் வரையுள்ள பகுதிகளை ஆரஞ்சு பகுதி (Orange Zone) என்றும் பிரித்துள்ளனர். மதுக்கரை வனச்சரகத்தில் சோளக்கரை காப்புக்காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கோபுரங்களிலும் (Watch Tower) இடங்களிலும் தலா 2 பேர் வீதமாக, 3 ஷிப்ட்களில் மொத்தம் 18 பேர் 24 மணி நேரமும் இந்த டிரோன்களை இயக்கி வருகின்றனர். வயர் டிரோன்கள் தவிர்த்து, பேட்டரியில் இயங்கும் டிரோன்களாலும் கண்காணிக்கின்றனர். இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய டிரோன் பைலட் ஷெர்பின், ''ஏற்கெனவே ரயில் வழித்தடங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள ஏஐ கேமராக்கள், யானைகள் மிக அருகில் வரும்போதுதான் அவற்றைக் கண்டறிந்து, ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தரும். ஆனால் இந்த கேபிள் இணைப்பு டிரோன்களால் 24 X 7 நேரமும் ரயில் பாதையைக் கண்காணிக்கும் போது 200 மீட்டர் தூரத்தில் யானை வரும்போதே கண்டறிந்து, அதை டிரோன் கட்டுப்பாட்டு அறைக்கும், ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கும் தகவல் தருகிறோம்.'' என்றார். "யானை இருப்பது தெரிந்துவிட்டால் ஏஐ தொழில்நுட்பத்தை அதில் பயன்படுத்தும்போது, ரயில் தடத்திலிருந்து எந்த திசையில் எவ்வளவு தூரத்தில் யானை இருக்கிறது என்பதைக் காண்பிக்கும். உடனடியாக நாங்கள் கண்காணிப்பு டிரோனை வைத்து, அந்த யானைக்கு மேலாகக் கொண்டு சென்று, சைரன் அல்லது தேனீக்கள் ரீங்காரமிடும் சத்தத்தை ஒலிக்க விட்டு, யானையை காட்டுக்குள் துரத்திவிடுவோம்.'' என்றார் ஷெர்பின். படக்குறிப்பு,யானைகள் செல்வதற்கான சுரங்கப் பாதை 2024-ஆம் ஆண்டிலிருந்து ஏஐ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, ரயில்வே மற்றும் தமிழக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டதுடன், டிராக் வாச்சர்களால் யானைகளை துரத்தும் பணி நடந்துவந்தது. அதில் பல சிரமங்கள், ஆபத்துகள் இருந்ததை டிராக் வாச்சர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய டிராக் வாச்சர் மாதேஷ், ''ரயில்களில் யானைகள் அடிபடாமலிருக்க, இந்த 2 தண்டவாளங்களையும் 25 டிராக் வாச்சர்கள் கண்காணித்து வருகிறோம். ஏஐ தொழில்நுட்பம் வந்தபின்பு, எங்களுடைய பணிக்கு பெரிதும் உதவியாகவுள்ளது. இப்போது டிரோன்களை வைத்தே யானைகளைத் துரத்த முடியும் என்பது இந்த பணியை மேலும் எளிதாக்கியுள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள கேரள வனப்பகுதியில் சமீபத்தில் ஒரு யானை ரயில் மோதி இறந்தது.'' என்றார். தமிழகத்தில் யானை–மனித மோதல் அதிகமாக நடக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் மற்றும் கோவையின் வேறு சில பகுதிகளிலும் இரவு, பகலாக யானைகளைக் கண்காணித்து, அவற்றைத் துரத்துவதற்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு இந்த ஏஐ தொழில்நுட்பத்தையும், டிரோன்களையும் இணைத்து ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்கிறார் கோவை மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் பிரபு. பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய டிஎஃப்ஓ வெங்கடேஷ் பிரபு, ''கூடலூரில் இந்த ஏஐ தொழில்நுட்பம், யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து, யானைகளையும், யானைகளிடமிருந்து மக்களையும் காப்பதற்கு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது ரயில்களில் அடிபடாமல் யானைகளைக் காப்பதற்கு இதே தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கிறது.'' என்றார். ''இரவு நேரங்களில்தான் யானைகள் ரயிலில் அடிபடும் நிகழ்வுகள் அதிகமாக நடந்துள்ளன. இந்த ஏஐ தொழில் நுட்பத்தில் தெர்மல் முறையில் இரவிலும் யானைகள் நடமாட்டம் தெரிவதால், யானைகளை டிராக் வாச்சர்கள் மூலமாக ரயில்வே கீழ்பாலங்கள் வழியாக எளிதாகத் துரத்த முடிகிறது. இப்போது டிரோன்களை வைத்தே சத்தம் எழுப்பி யானைகளைத் துரத்த முடியும் என்பதால் எங்களது பணி இன்னும் முழுமையடைந்துள்ளது,'' என்றார் டிஎஃப்ஓ வெங்கடேஷ் பிரபு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz6e7qg078wo
  9. '44 நாட்களுக்கு பிறகு மீண்டும்' - நியூசிலாந்து கேப்டனின் ஒரு முடிவு வரலாற்று தவறானதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மிட்செல் சான்ட்னர் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 56 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் நியூசிலாந்து - இன்னொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது அந்த அணி. பெரிய போட்டிகள் என்று வரும்போது பொதுவாகவே நெருக்கடி அதிகமாக இருக்கும். அதனால், மற்ற போட்டிகளில் வருவது போல் அதிகமாக ரன்கள் வராது என்பார்கள். இந்த இறுதிப் போட்டியில் ஆமதாபாத்தில் இந்திய அணி களமிறங்கியபோது 180-190 ரன்களை இந்தியா டார்கெட் செய்ய வேண்டும் என்ற பேச்சுதான் எழுந்தது. ஆனால், இந்திய அணியோ 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது. பட மூலாதாரம்,Getty Images ஒருமுறை கூட 4 ஓவர்களைக் கடக்காத இந்திய தொடக்க ஜோடி, இறுதி போட்டியில் நான்கு ஓவர்களின் முடிவிலேயே 50 ரன்களைக் கடந்து கம்பீரமாக விளையாடிக்கொண்டிருந்தது. மேலும், பவர்பிளேவில் மட்டும் 92 ரன்கள் விளாசி சாதனை படைத்தது. சொல்லப்போனால், அந்த பவர்பிளே முடிவிலேயே கோப்பையில் ஒரு கை வைத்துவிட்டது இந்தியா. இப்படி பவர்பிளேவுக்குள்ளாக நியூசிலாந்து பெரும் பின்னடைவை சந்தித்ததற்கு அந்த அணி எடுத்து முடிவுகள் முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக கேப்டன் மிட்செல் சான்ட்னர் இரண்டாவது ஓவருக்குப் பின் எடுத்த முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்ததாகவும் பலர் விமர்சித்திருக்கிறார்கள். சொல்லப்போனால், ஜனவரி மாதம் நடந்த ஒரு டி20 போட்டியில் கூட நியூசிலாந்தின் தோல்விக்குப் பிறகு சான்ட்னரின் இதே முடிவுகள் விமர்சிக்கப்பட்டன. நாமும் கூட இதைப் பற்றி விரிவாக அப்போது விவாதித்திருந்தோம். இப்போது, 44 நாள்கள் கழித்து அதே தவறுகளை சான்ட்னர் மறுபடியும் நிகழ்த்தியிருக்கிறாரா? நியூசிலாந்து கேப்டன் தன் முடிவுகளின் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டாரா? பட மூலாதாரம்,Getty Images மெக்கான்கீ எங்கே? இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக ஆஃப் ஸ்பின்னுக்கு எதிரான இந்தியாவின் தடுமாற்றம் பெரிதாக விவாதிக்கப்பட்டது. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுபடி சூப்பர் 8 சுற்றில் ஆடிய 8 அணிகளில் ஆஃப் ஸ்பின்னுக்கு எதிராக குறைந்த சராசரி (15.87) வைத்திருந்த அணி இந்தியாதான். 20-கும் கீழ் சராசரி கொண்டிருந்த ஒரே அணி இந்தியா தான். இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா போன்ற பேட்டர்களின் சராசரி ஆஃப் ஸ்பின்னுக்கு எதிராக 13 அல்லது அதற்கும் குறைவு தான். அதனால் நியூசிலாந்து அணியின் கோல் மெக்கான்கீ இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரோடு கிளென் ஃபிலிப்ஸும் ஆஃப் ஸ்பின் வீசக்கூடியவர் என்பதால் இந்தியா பெரும் சிக்கலைச் சந்திக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், நியூசிலாந்து வேறு திட்டங்கள் வைத்திருந்தது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சான்ட்னர், பிளேயிங் லெவனில் மெக்கான்கீ நீக்கப்பட்டு ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டதாகக் கூறினார். இந்தியாவின் பெரும் சவாலாக இருப்பார் என்று கருதப்பட்ட வீரர் அணியிலேயே இல்லாதது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்று நினைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருந்தாலும் பல வல்லுநர்கள் அந்த முடிவு தங்களுக்கு ஆச்சர்யம் அளித்ததாகக் குறிப்பிட்டனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் பவர்பிளேவில் வீசிய ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்துக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் கோல் மெக்கான்கீ சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் யோ மஹேஷ், "மெக்கான்கீ இல்லை!! அபிஷேக் ஷர்மாவிற்கு சாதகமான சூழல் அமைகிறதா?அல்லது நியூசிலாந்து அணியினரிடம் ஏதேனும் ரகசியத் திட்டம் உள்ளதா?" என்று டாஸுக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பத்திரிகையாளர் பரத் சுந்தரேசன், "இந்த தொடரில் இந்திய இன்னிங்ஸின் ஆரம்பத்தில் ஆஃப்-ஸ்பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை கவனிக்கும்போது, நியூசிலாந்து கோல் மெக்கான்கீயை சேர்க்காதது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இன்று இரவு கிளென் ஃபிலிப்ஸுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம்" என்று தன் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருந்தார். இப்படி, மெக்கான்கீ சேர்க்கப்படாதது குறித்து பலரும் தங்கள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். மாறிய ஸ்பெல், மாறிய ஆட்டம் வழக்கம்போல், 'நியூ பால் ஸ்பெஷலிஸ்ட்' மேட் ஹென்றியோடு ஆட்டத்தைத் தொடங்கிய சான்ட்னர், இரண்டாவது ஓவரை கிளென் ஃபிலிப்ஸுக்குக் கொடுத்தார். இந்த இரண்டு ஓவர்களிலுமே இந்திய ஓப்பனர்கள் நிதானமாகத்தான் ஆடினார்கள். ஹென்றியின் வேகப்பந்துவீச்சை சாம்சன் கவனமாக எதிர்கொள்ள, கிளென் ஃபிலிப்ஸின் ஆஃப் ஸ்பின்னை கூடுதல் நிதானத்தோடு ஆடினார் அபிஷேக் ஷர்மா. 2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 12 ரன்கள் எடுத்திருந்தது. நன்றாகத் தொடங்கிய அந்த இரு பௌலர்களின் ஸ்பெல் தொடரும் என்று நினைத்திருந்த நிலையில் தான் சான்ட்னர் ஒரு முடிவை எடுத்தார். மூன்றாவது ஓவரை ஜேக்கப் டஃபியிடமும், நான்காவது ஓவரை லாகி ஃபெர்குசனிடமும் கொடுத்தார் அவர். அந்த ஓவர்களில் முறையே 15, 24 ரன்கள் எடுக்கப்பட்டன. இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்தியா ஆடிய 8 ஆட்டங்களில், இந்தியாவின் தொடக்க ஜோடி அதிகபட்சமாக ஆடியத 3.4 ஓவர்கள் தான். அதேபோல் அந்த எட்டில் 4 முறை ஒரு ஆஃப் ஸ்பின்னர் தான் இந்தியாவின் தொடக்க ஜோடியை வெளியேற்றியிருந்தார். ஒரு போட்டியில் இடது கை ஸ்பின்னராலும், 3 போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளராலும் இந்தியாவின் தொடக்க ஜோடி வெளியேற்றப்பட்டிருந்தது. அரையிறுதியில் ஒரு வலது கை பேட்டர், ஒரு இடது கை பேட்டர் என்ற காம்பினேஷன் இருந்தும்கூட இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் ஜேக்ஸை வைத்தே இந்த ஜோடியைப் பிரித்தது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா, இந்த உலகக் கோப்பையில் (இறுதிப் போட்டிக்கு முன்பு வரை) ஆஃப் ஸ்பின்னை எதிர்கொண்ட 5 இன்னிங்ஸ்களில் 3 முறை அதற்கே தன் விக்கெட்டை இழந்திருந்தார். அப்படியிருந்தும், ஃபிலிப்ஸை மீண்டும் பயன்படுத்தாதது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இறுதிப் போட்டியில் கிளென் ஃபிலிப்ஸுக்கு இரண்டாவது ஓவர் கொடுக்காதது அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது ஃபிலில்ப்ஸுக்குக் கொடுக்காமல் டஃபிக்கும், ஃபெர்குசனுக்கும் சான்ட்னர் ஓவர் கொடுக்க, அந்த இரு பௌலர்களும் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேல் பந்துவீச, அது யோ மஹேஷ் சொன்னதுபோல் அபிஷேக் ஷர்மாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. வேகமான பந்துகளை விரும்பி ஆடும் அபிஷேக் ஷர்மா, இந்த உலகக் கோப்பையில் நல்ல ஃபார்மிலேயே இல்லாத அபிஷேக் ஷர்மா, தன் வழக்கமான ஆட்டத்தை ஆட அந்த இரண்டு ஓவர்கள் வித்திட்டன. இதன் விளைவாக முதல் முறையாக இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி 4 ஓவர்களைக் கடந்து விளையாடியது. முதல் முறையாக அரைசதமும் அடித்தது. நியூசிலாந்தின் முடிவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் யோ மஹேஷ், "பவர்பிளேவில் முதலிரு ஓவர்களில் மேட் ஹென்றி, கிளென் ஃபிலிப்ஸ் இருவரும் நன்றாகவே தொடங்கியிருந்தார்கள். ஆனால், அதன்பிறகு அவர்களின் ஸ்பெல்லை தொடரவில்லை. அந்த பவர்பிளேவிலேயே வெளியே வெளியே போடத் தொடங்கிவிட்டார்கள். அபிஷேக் ஷர்மா நன்கு செட்டில் ஆகிவிட்டார். மெக்கான்கீ ஆடவில்லை என்றதுமே அவர் சந்தோஷமடைந்திருப்பார். நியூசிலாந்தைப் பொறுத்தவரை அவர்கள் சிறந்த லெவனும் ஆடவில்லை. அவர்கள் திட்டங்களும் சரியாக இருக்கவில்லை." என்று கூறினார். அதேபோல், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, "மிட்செல் சான்ட்னர் மிக விரைவாக பல விஷயங்களை முயற்சித்தது போல் தோன்றியது. முதல் இரண்டு ஓவர்கள் மிகவும் சிக்கனமாக இருந்தபோதிலும், முதல் நான்கு ஓவர்களிலேயே 4 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார்... ஒரு நல்ல வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார். ஆனால் நாங்கள் (இந்தியா) புகார் கூறப்போவதில்லை" என்று பதிவிட்டார். அதுமட்டுமல்ல, தொடர்ந்து இந்தியாவின் இடது கை பேட்டர்கள் அடுத்தடுத்து வந்தபோதிலும், ஃபிலிப்ஸ் அதன்பிறகு பந்துவீசவே வரவில்லை. சான்ட்னர் அவருக்கு மறுபடியும் ஒரு ஓவர் கூடக் கொடுக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில், ஆஃப் ஸ்பின்னை எதிர்கொண்ட 6 போட்டிகளில் 5 முறை அதற்கே தன் விக்கெட்டை பறிகொடுத்திருந்த இஷான் கிஷன் இந்த இறுதிப் போட்டியில் ஆஃப் ஸ்பின்னரின் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளவில்லை. பட மூலாதாரம்,Getty Images பவர்பிளேவுக்குள்ளேயே முடிந்துவிட்ட ஆட்டம் அந்த மூன்றாவது மட்டும் நான்காவது ஓவரில் மொத்தம் 39 ரன்கள் சென்றுவிட்டதாலும், இரண்டு பேட்டர்களுமே நன்றாக ஆடியதாலும், அடுத்த வந்த நியூசிலாந்து பௌலர்களுமே பெரும் நெருக்கடியை சந்திக்கவேண்டியதாக இருந்தது. ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரைப் பந்துவீச வந்த மேட் ஹென்றி, 'ஸ்லோயர் பால்களாக' தொடர்ந்து வீசினார். அதுவும் வைட் லைனிலேயெ அவர் தொடர்ச்சியாக முயற்சிசெய்தார். அதன் விளைவாக அந்த ஓவரில் 4 வைட்களும் வீசினார். மேலும், அவர் அதையே தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்க, அபிஷேக் ஷர்மா அதை நன்கு கணித்து வெளியே வந்து சிக்ஸர் அடித்தார். நீண்ட நேரம் சென்ற அந்த ஓவரிலும் 21 ரன்கள் எடுக்கப்பட்டன. அப்போது வர்ணனையில் இருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டூல், "இங்கு 'ஸ்லோயர் பால்கள்' அதிகம் விக்கெட் எடுக்கின்றன, அதனால் நாம் அதையே வீசுவோம் என்று முடிவு செய்துவிட்டு வந்து அதை மட்டுமே செய்கின்றனர்" என்று குறிப்பிட்டார். மேலும், அவருக்கு மூன்றாவது ஓவர் கொடுக்காமல், ஐந்தாவது ஓவரில் பந்துவீச வைத்த முடிவையும் அவர் விமர்சித்தார். "பந்து ஓரளவு புதிதாக இருக்கும்போது ஹென்றி அதைப் பயன்படுத்தி நன்றாக வீசுவார். அப்படியிருக்கும்போது மூன்றாவது ஓவரை அவருக்குக் கொடுத்திருக்கவேண்டும். அது பெரிய தவறு" என்று வர்ணனையின்போது தெரிவித்தார் சைமன் டூல். இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் மேட் ஹென்றியை முதல் மற்றும் மூன்றாவது ஓவரில் தான் பயன்படுத்தியிருந்தார் சான்ட்னர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் சுற்றுப் போட்டியில் மட்டும், ஹென்றி முதல் ஓவரில் 13 ரன்கள் கொடுத்துவிட, அவருக்கு மூன்றாவது ஓவர் கொடுக்காமல் நான்காவது ஓவர் கொடுத்து 'பௌலிங் எண்ட்' மாற்றினார். அதைத் தவிர்த்து ஹென்றி மூன்றாவது ஓவர் போடாத போட்டி இந்த ஃபைனல் தான். மேட் ஹென்றி மூன்றாவது ஓவரை வீசாத இரண்டு போட்டிகளுமே நியூசிலாந்து தோற்ற போட்டிகள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மேட் ஹென்றிக்கு மூன்றாவது ஓவரைக் கொடுக்காமல் ஸ்பெல்லை மாற்றியது இந்தியாவை ஆட்டத்துக்குள் எடுத்து வந்தது இப்படி மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்கள் ஏற்படுத்திய நெருக்கடியில் ஹென்றி ரன் கொடுக்க, அதே நெருக்கடியோடு வந்து ஆறாவது ஓவரிலும் 20 ரன்கள் கொடுத்தார் ஜேக்கப் டஃபி. இப்படியாக பவர்பிளேவில் விக்கெட்டே இழக்காமல் 92 ரன்கள் எடுத்தது. அது இந்தியாவை ஆதிக்க நிலையில் கொண்டு சென்று நிறுத்தியது. போட்டிக்குப் பின்பு பிபிசி தமிழிடம் பேசிய வர்ணனையாளர் பகவதி பிரசாத், "நியூசிலாந்து அணி எப்போதுமே தெளிவான திட்டமிடலோடு களமிறங்கும் அணி. ஆனால், இந்த இறுதிப் போட்டியில் அப்படி இருக்கவில்லை. மிட்செல் சான்ட்னரின் கேப்டன்சியும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். உதாரணமாக, ஏன் மெக்கான்கீ ஆடவில்லை என்ற கேள்விக்குறி எழுந்தது. ஏனெனில், இந்திய பேட்டர்களுக்கு எதிராக, குறிப்பாக அபிஷேக் ஷர்மாவுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர்கள் நன்றாக செயல்படும்போது அவரை ஆடவைத்திருக்கலாமோ என்று கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும், அவர் நல்ல பேட்டரும் கூட.'' ''அதுமட்டுமல்லாமல், கிளென் ஃபிலிப்ஸ் நன்றாக செயல்பட்டிருக்கும்போது எதற்காக ஸ்பெல்லை மாற்றி வேகத்தைக் கொடுக்கவேண்டும்? இதுபோன்ற ஒரு சில இடங்களில் சான்ட்னரின் கேப்டன்சி இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். ஏனெனில், கோப்பையே ஆறு ஓவர்களில் கைவிட்டுப் போனதுபோல் இருந்தது. ஒரு பௌலராக அவர் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், ஒரு கேப்டனாக அவரது சில முடிவுகள் தவறாக அமைந்துவிட்டன" என்று கூறினார். 44 நாள்களுக்கு முன் நடந்த அதே தவறு பவர்பிளேவில் நல்லதொரு தொடக்கத்துக்குப் பிறகு அந்த ஸ்பெல்லைத் தொடராமல் ஆட்டத்தை சான்ட்னர் கைநழுவவிடுவது இது முதல் முறையல்ல. 44 நாள்களுக்கு முன் - ஜனவரி 23.... இதே இந்தியா - நியூசிலாந்து டி20 போட்டியில் இதேபோன்றதொரு நிகழ்வு அரங்கேறியது. 209 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி முதல் 7 பந்துகளிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இரண்டு ஓவர்கள் முடிந்தபோது ஸ்கோர் போர்டு 8/2 எனக் காட்டியது. 12 பந்துகளில் 9 டாட் பால்கள். சூர்யகுமார் யாதவ் 4 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். இஷான் கிஷன் 2 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். முதல் ஓவரை வீசிய மேட் ஹென்றி, இரண்டாவது ஓவரை வீசிய ஜேக்கப் டஃபி இருவருமே தலா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவிடம் தோல்வியடைந்திருந்தது விக்கெட் எடுத்து நன்றாகத் தொடங்கியிருந்த பௌலர்கள் தங்கள் ஸ்பெல்லைத் தொடர்ந்திருந்தால் இந்தியாவுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீச ஜேக் ஃபோக்ஸ் கையில் பந்தைக் கொடுத்தார் சான்ட்னர். ஃபோக்ஸ் நோ பாலோடு அந்த ஓவரைத் தொடங்க, இஷான் கிஷன் அதிரடி காட்ட, அந்த ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த 3 ஓவர்களில் முறையே 10, 12, 21 என ரன்கள் வர, 8/2 என்ற நிலையில் இருந்த இந்திய அணி, பவர்பிளே முடிவில் 75/2 என்ற நல்ல நிலைக்குச் சென்றது. இப்போது அபிஷேக் ஷர்மா செய்ததைப் போல், அந்தப் போட்டியின் பவர்பிளேவுக்குள்ளாகவே இஷான் கிஷன் அரைசதம் அடித்திருந்தார். அதன்பிறகு இந்தியாவின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் போக, 15.2 ஓவர்களிலேயே சேஸ் செய்து 200-க்கும் மேற்பட்ட வெற்றி இலக்கை அதிவேகமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. அந்தப் போட்டியின்போதும் சான்ட்னர் எடுத்த முடிவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக விமர்சித்திருந்தார்கள். அன்று ராய்ப்பூரில் நடந்த தவறு, 44 நாள்களுக்குப் பின் ஆமதாபாத்தில் மீண்டும் நடக்க, நியூசிலாந்துக்கு ஒரு கோப்பை வெல்வதற்கான வாய்ப்பையும் பறித்துவிட்டது. சான்ட்னர் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், "இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் சீம், ஸ்விங் எதுவும் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. அதனால், பேட்டர்கள் அடிக்கக்கூடிய இடங்களுக்கு வெளியே பந்துவீச முயற்சி செய்தோம். அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் எவ்வளவு சிறப்பாக ஆடக்கூடியவர்கள் என்று நமக்குத் தெரியும். எப்படி பார்த்தாலும், அவர்கள் ஆடிய விதத்துக்கு பெர்ஃபெக்டான திட்டமே எதுவும் கிடையாது. அவர்கள் ஆடிய விதத்துக்கு, அவர்களை நிறுத்துவது எளிதானதல்ல. சில வைட்கள், சில லெக் சைட் பந்துகள் என கிட்டத்தட்ட எல்லாமே முயற்சி செய்துவிட்டோம். அதேசமயம் அவர்கள் பவர்பிளே ஆடிய விதத்தை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். அவர்கள் அப்படி ஆடியபிறகு அங்கிருந்து தொடர்ந்து அதிரடி காட்டி ஒரு பெரிய ஸ்கோரை அடிக்க அது உதவி செய்துவிட்டது" என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/c5ykz6e9nnvo
  10. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 7ஆக உயர்வு 09 Mar, 2026 | 12:15 PM ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மார்ச் 1ஆம் திகதி சவூதி அரேபியாவில் அமெரிக்க இராணுவ வீரர்களை இலக்குவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த வீரர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீரரோடு, உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானில் பலர் உயிரிழந்தவர். ஈரான் உயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். பொதுமக்களில் பலர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் ஈரான் அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ள இடங்களுக்கும் அமெரிக்க நட்பு நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளிலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் சவூதியிலும் குவைத்திலும் அமெரிக்க இராணுவ வீரர்களை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240521
  11. CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்! Mar 9, 2026 - 08:40 PM 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சக்தித் துறை சீர்திருத்தங்களின் கீழ், இலங்கை மின்சார சபை (CEB) மூலம் மேற்கொள்ளப்பட்ட மின் விநியோகப் பணிகளுக்கான பொறுப்பு எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (பிரைவேட்) லிமிடெட்டுக்கு (EDL)மாற்றப்பட்டுள்ளது. மின்விநியோகத் துறையினுள் வினைத்திறன், நம்பகத்தன்மை மற்றும் சேவையின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக EDL நிறுவனத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் பதிலளிக்கக்கூடிய மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மின்சார விநியோக சேவை உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்!
  12. சமாதான நீதவான் நியமனங்கள் இனி அரசியல் ரீதியாக வழங்கப்படாது - நீதியமைச்சர் Published By: Vishnu 09 Mar, 2026 | 04:08 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சமாதான நீதவான் நியமனங்கள் இனி அரசியல் ரீதியாக வழங்கப்படாது.கல்வி தகைமையை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே நியமனங்கள் வழங்கப்படும். நியமனத்தின் பின்னர் நீதியமைச்சின் ஊடாக போதுமான பயிற்சிகள் வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாட்டில் சமாதான நீதவான்களுக்கான பயிற்சி வழங்குதல், தற்போதுள்ள சமாதான நீதவான்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் புதிதாக நியமிக்கப்படும் சமாதான நீதவான்களின் எண்ணிக்கை மற்றும் சமாதான நீதவான் பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வேளையின் போது முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நீதியமைச்சர் மேலும் பதிலளித்ததாவது, 2025 ஆம் ஆண்டு வரை சமாதான நீதவான்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான அமைப்பு இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களை நியமிப்பதற்கான முறையான அமைப்பும் இல்லை. இதற்கான முறையான அமைப்பை இப்போது உருவாக்கியுள்ளோம். இருப்பினும் அவர்களை வழிநடத்தும் தொடர்புடைய விஷயங்கள் 'சமாதான நீதிபதிகளின் பங்கு' என்ற கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் சமாதான நீதிபதிகளுக்கு நியமனங்கள் வழங்கும்போது நீதி அமைச்சினால் இந்த கையேடு வழங்கப்பட்டது, மேலும் 2025 ஆம் ஆண்டு முதல், இந்த கையேட்டை நீதி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம், மேலும் சம்பந்தப்பட்ட சமாதான நீதிபதிக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்டா குறியீடு மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம். 2013 ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்படும் தரவு தகவல் அமைப்பின் படி,நாடு முழுவதும் அதிகார வரம்புகளுக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்ட சமாதான நீதிபதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியாது. மேலும் 2013 ஆம் ஆண்டு முதல் 66,315 சமாதான நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பராமரிக்கப்பட்ட தரவுத்தள அமைப்பு முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட்டதால்இ அதை முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறோம். 2025 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவின் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் நிலப்பரப்பின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சமாதான நீதிபதிகள் (200:1 என்ற விகிதத்தில்) தீர்மானிக்கப்பட்டது.அதன்படி, சுமார் 40,000 சமாதான நீதிபதிகள் காலியாக உள்ள நியமனங்களை வழங்க முடியும் என்பதால், மாதத்திற்கு 500-750 நியமனங்கள் வழங்குவது ஜூன் 2025 முதல் தொடங்கப்பட்டது. சமாதான நீதிபதி சேவையை நெறிப்படுத்தி தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, விண்ணப்பதாரர்கள் 2025 முதல் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன்படி, விண்ணப்பதாரர் க.பொ.த. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 6 பாடங்களில் சாதாரண தரப் பரீட்சை எழுதி, தாய்மொழி (சிங்களம்/ தமிழ்) உட்பட வேறு ஒரு பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஏதேனும் ஒரு வழியில் சான்றளிக்கப்பட்டால், விண்ணப்பதாரர் தேர்ச்சி பெற்ற 06 பாடங்களுக்குள் மற்றொரு பாடத்திற்கு கூடுதலாக ஆங்கில மொழியைக் கொண்டிருக்க வேண்டும். முழு தீவுக்கும் சமாதான நீதவான் நியமனங்களை வழங்குவதில், நியமனம் வழங்கப்பட்ட பிராந்தியத்தில் சமாதான நீதவான் பதவியில் 5 ஆண்டுகள் சேவையாற்றியிருக்க வேண்டும் மற்றும் கல்வித் தகுதியாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் குறைந்தது ஒரு பாடத்திலேனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 30 வயது பூர்த்தி செய்திருத்தலுடன், விண்ணப்பதாரர் 75 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.நியமனத்தின் போது நபர் நல்ல உடல் மற்றும் மன நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், எந்தவொரு குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் கொண்ட நபராக இருக்கக்கூடாது மற்றும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படக்கூடாது. மேலும், அவர்களின் சேவையை பொதுமக்களுக்கு ஏற்றதாக மாற்றும் நோக்கத்துடன், ஒரு சமாதான நீதவானின் எந்தவொரு செயல்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எழும் ஏதேனும் சிக்கல்கள் அல்லது புகார்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க ஒரு வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, நீதி அமைச்சின் சீர்திருத்தப் பிரிவுக்கு கடிதம் மூலம் புகார் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் விசாரிக்கப்பட்டு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.2025. நவம்பர் முதல் நியமிக்கப்படும் சமாதான நீதவான்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். https://www.virakesari.lk/article/240486
  13. இது விவகாரமான கேள்வியாகத் தெரிகிறது😂! "மாமனிதர்" என்பது இறந்த பின்னர் வழங்கப் படும் பட்டம். அர்ச்சுனா திட்டும் சத்தியமூர்த்தி இன்னும் யாழ் போதனாவில் பணிப்பாளராக இருக்கிறார். எனவே, நிச்சயமாக இவர்கள் இரு வேறு நபர்களாகத் தானே இருக்க வேண்டும்?
  14. பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த @Newbalance @கந்தப்பு அண்ணை @நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அவர்களுக்கம் நன்றியும் வாழ்த்துக்களும். நான் அதிகம் கருத்துக்கள் எழுதாவிட்டாலும், பலரின் கருத்துக்களை வாசித்து வருகின்றேன். குறிப்பாக @ஈழப்பிரியன் அண்ணா, @செம்பாட்டான் , @வீரப் பையன்26 @goshan_che இன்னும் பலருக்கும் நன்றிகள்
  15. அவுஸ்ரேலியாவும் இலங்கையும் ஆப்கானிஸ்தானும் தான் என்னை ஏமாற்றியது (குறிப்பு; இலங்கையைத் தெரிவுசெய்தது விருப்பத்தின் காரணமாக மட்டுமே)
  16. ptenosrodS7l013120h2t2hhmiu1l1a7t071i8 f17683302122u1au9f9lu · #தங்கமனசு எத்தன இட்லினு சாப்பிட்டவங்கதான் கணக்கு சொல்வாங்க! நெகிழவைக்கும் 2 ரூபாய் இட்லிக்கடை பாட்டி!! புதுக்கோட்டை, காந்தி நகரில் இருக்கிறது தனம் பாட்டியின் குடிசை வீடு. 2 அடி குனிந்து உள்ளே சென்றால், சிறிய குடிசைக்குள்ளே விறகு அடுப்பில் சுடச்சுட இட்லி தயாராகிக் கொண்டிருக்கிறது. நாற்காலி, மேசை எதுவும் இல்லை. திண்ணையில், பாட்டியின் அருகே அமர்ந்து பலர் பசியாறிக் கொண்டிருக்கின்றனர். ஒரு இட்லி ரூ.10க்கு விற்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு இட்லி ரூ.2க்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனம் பாட்டி. 10 ரூபாயிலேயே பலருக்கும் வயிறு நிறைந்து போகிறது. மாவு அரைப்பது, சட்னி, சாம்பார், சுண்டல் வைப்பது, இட்லி அவிப்பது வரையிலும் எல்லாமும் தனம் பாட்டி தான். 84 வயதிலும் சுறுசுறுப்புடன் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டிருந்த பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தோம். நான் பொறந்து, வளர்ந்தது எல்லாம் அறந்தாங்கி பக்கத்துல இருக்க சிதம்பரவிடுதிங்கிற சின்ன கிராமம். வீட்டுக்காரருக்கு ஊரு பட்டுக்கோட்டை. அவரு புதுக்கோட்டையில சின்னதா ஒரு டீக்கடை வச்சிருந்தாரு. 1960-ல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணம் முடிச்ச கையோட புதுக்கோட்டைக்கு கூட்டிக்கிட்டு வந்திட்டாரு. டீக்கடையை வச்சி பிழைப்பு ஓட்டிக்கிட்டு இருந்தோம். சமாளிக்க முடியலை. கொஞ்ச வருஷம் கழிச்சி இட்லிக்கடை ஆரம்பிச்சோம். கடை ஆரம்பிச்சப்ப இட்லி ரூ.10 காசு. மத்த கடைகளைவிட எப்பவும் நம்ம கடையில விலை கொஞ்சம் குறைவாத்தான் இருக்கும். நாம போதும்னு சொல்ற ஒரே விஷயம். சாப்பாடுதான். எவ்ளோ நல்ல சாப்பாடா இருந்தாலும், யாரா இருந்தாலும், வயிறு நிறைஞ்சதுக்கு அப்புறம் சாப்பிட முடியாதே. பணத்தை விட, நம்மள தேடி வர்றவங்களோட பசியை போக்குறது தான் முக்கியம்னு நினைச்சோம். அதனாலயே என்னவோ எங்களைத் தேடி நிறைய பிள்ளைங்க வருவாங்க. பலர் உங்களுக்கு எப்படி கட்டுப்பிடியாகுது?னு கேட்பாங்க. குறைஞ்ச லாபம் கிடைச்சா போதும்னு நினைக்கிறதாலதான் சமாளிக்க முடிஞ்சது. இப்பவும் முடியுது. டீ, இட்லி வியாபாரம் செஞ்சே தான் பிள்ளைங்க மூணு பேரையும் வளர்த்தோம். மூணு பேரும் கல்யாணம் முடிஞ்சு நல்லாயிருக்காங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, வீட்டுக்காரருக்கு கண்ணு ஆபரேசன் செஞ்சோம். அப்புறம் அவருக்கு கிட்னியில பிரச்னை வந்ததால டீக்கடையை நிறுத்திட்டோம். இட்லி கடையை மட்டும் நிறுத்தவே இல்லை. காலையில 5 மணிக்கெல்லாம் வேலைய ஆரம்பிச்சிடுவேன். ஸ்கூல் பிள்ளைங்க, ஆபிஸ்ல வேலை பார்க்கிறவங்க, கூலிக்கு வேலை பார்க்கிறவங்கன்னு தினசரி வாடிக்கையாளர்கள் பலர் வருவாங்க. அதிகபட்சமா ஒருநாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும். ஒரு சிலநாள் வியாபாரம் பெருசா இருக்காது. அடுத்த நாள் உளுந்து, அரிசி வாங்கிறதுக்குக் கொஞ்சம் சிரமமா இருக்கும். ஆனாலும், எல்லாத்தையும் சமாளிச்சிடுவேன். விறகு அடுப்புக்கு, சாயந்தர நேரத்துல காடு, கரைக்கு போய் விறகு எடுத்துக்கிட்டு வந்துடுவேன். மாவுக்கல்லு இருக்கு. இப்போ பையன் கிரைண்டரும் வாங்கிக் கொடுத்திருக்கான். பெரும்பாலும், மாவுக் கல்லுலயே மாவு ஆட்டிக்கிடுவேன். நாலு பேருக்கு தினமும் இட்லி கொடுத்துப் பழகிட்டேன். அவங்களும் சாப்பிட்டுப் பழகிட்டாங்க. நான் சாப்பிடுற பிள்ளைங்ககிட்ட கணக்கு கேட்கிறதேயில்லை. வேணுங்கிற இட்லியை எடுத்து வச்சிக்குவாங்க. சாப்பிட்டுட்டு சரியா கணக்குப் போட்டு கொடுத்துட்டு போயிடுவாங்க ரொம்ப வருஷமா ஒரு ரூபாய்க்குத்தான் இட்லி கொடுத்துக்கிட்டு இருந்தேன். விலைவாசி உயர்ந்துகிட்டே இருந்தாலும் நான் மட்டும் விலையை ஏத்தாம தான் இருந்தேன். இப்போ ரெண்டு வருஷமாதான் ரெண்டு ரூபாய்க்குக் கொடுக்குறேன். அதுகூட, தினமும் இங்க சாப்பிட வர்ற பிள்ளைங்கதான், உன் உழைப்புக்காகவது இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுக்கணும்னு சொல்லி, அவங்களா விலையை ஏத்தி கொடுத்துட்டுப் போக ஆரம்பிச்சாங்க. அது அப்படியே மாறிருச்சு. சாப்பிட வர்ற பிள்ளைங்க பலர், `உன் குடிசையை எடுத்துக் கட்டித் தர்றேன்'னு சொல்லுவாங்க. அதெல்லாம் வேண்டாம் ராசா, இந்த கிழவிக்கு இதுவே போதும்னு சொல்லிடுவேன். முடியாம இருந்த வீட்டுக்காரரை இட்லி வேலை செஞ்சே பார்த்துக்கிட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அவரு என்னை மட்டும் தனியா விட்டுட்டுப் போயிட்டாரு. இப்ப கூட என் பிள்ளைங்க, எங்களோட வந்து ஓய்வு எடுங்கம்மான்னு சொல்லிக் கூப்பிடுறாங்க. ஆனா, இட்லி கடையையும், கடைக்கு வர்ற இந்த பிள்ளைகளையும் விட்டுப்போக மனசில்ல. இந்த கிழவியோட உயிரும் இட்லி கடையிலயே போகட்டும் ராசான்னு சொல்லி அவங்களை அனுப்பிடுவேன். வெந்த இட்லிகளை தட்டுக்கு மாற்றுகிறார் தனம் பாட்டி. சிலரது வாழ்க்கை இப்படித்தான் அழகாகிக் கிடக்கிறது உழைப்பாலும் அன்பாலும். பதிவு மாணிக்கவாசகம் சம்மந்தம்் #idlypatti #idly #pudukottai #tamilnadu #Thanjavur #thanjai #tanjore #choladesam #cholaninsorgaboomi #ilovethanjavur #trending #viral யானை.......!
  17. அர்ச்சுனா அர்ச்சனை செய்த டொக்டர் சத்தியமூர்த்தி அவர்களும், மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி அவர்களும் ஒருவரா? அன்றி வேறு வேறான இருவரா?? கவி அருனாசலம் அவர்களே???
  18. அண்ணை நீங்களாச்சும் கேட்டது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கு. அவுஸ்திரேலியாவையும் நன்றாக விளையாடுவினம் என்று நான் கருதிய அணிகளும் தோற்றது ஒரு காரணம். அதிக ஓட்டம், அதிக விக்கெட் போன்ற குண்டக்கமண்டக்க(உபயம் தம்பி @வீரப் பையன்26) கேள்விகளில் சறுக்கியதும் மற்றொரு காரணம். எனக்கு நல்ல துணை தம்பி @வாதவூரான் இருக்கிறபடியால பயமில்லாமல் இருக்கிறேன்! @goshan_che அண்ணை தான் ஏமாத்திப்போட்டார்!
  19. கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” பாகம் – 7 / “அதிகாரம் மிகவும் அமைதியாக பேசக் கற்றுக்கொண்டது” உடப்பு பள்ளியில் அன்று மணி ஏற்கனவே அடிக்கப்பட்டு மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அது பிந்திய மதியம். பணியாளர்கள் அறை வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. ஆதன் தனியாக வகுப்பறையில் அமர்ந்து இருந்து, குறிப்பேடுகளைத் [notebooks] திருத்திக் கொண்டிருந்தான். அவனது கையில் சிவப்பு மை பேனா [எழுதுகோல்] அசைந்தது, ஆனால் அவனது மனம் அசையாமல் இருந்தது. அன்று படிப்பித்தில் முடிக்கும் தருவாயில், “தயவுசெய்து பள்ளிக்குப் பிறகு கொஞ்சம் காத்து இருங்கள். கூடுதல் கல்வி அதிகாரி [Additional Education Officer] இங்கு வந்து உள்ளார்.” என்று ஒரு செய்தி அவனுக்கு வந்திருந்தது. அது தான் ஆதன் அந்தநேரத்தை பயன் உள்ள வழியில் செலவழித்துக் கொண்டு இருந்தான். அந்த செய்தியை கேட்டு அவன் பெருமூச்சு விடவில்லை. அவன் அதை எதிர்க்கவில்லை. அவன், கூடுதல் கல்வி அதிகாரியை துணிந்து எதிர்கொள்ள நின்றான். அவன் அலுவலகம் சென்ற போது அங்கு இம்முறை, மேசையில் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. ஆனால் கோப்புகள் [files] மட்டுமே இருந்தன. அங்கு கூடுதல் கல்வி அதிகாரி அமைதியாக அமர்ந்து இருந்தார். தலைமை ஆசிரியர் அவருக்கு அருகில் நின்றார். ஆனால் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினரோ அல்லது ஆலய குருவோ, எவரும் அங்கு இல்லை. இது ஒரு ஒழுக்கக் கூட்டம் அல்ல. இது நிர்வாகக் கூட்டம். அதிகாரி மெதுவாகப் பேசினார்: “திரு. ஆதன், உங்கள் கற்பித்தல் பதிவு [teaching record] சிறப்பாக உள்ளது. மாணவர்கள் உங்களை மதிக்கிறார்கள். இதில் ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் படிப்பிக்கும் பொழுது கொஞ்சம் கூடுதலான உணர்வுபூர்வமாக வரலாறு கற்பிக்கப்படுகிறது. அதனால்தான் நாம் கொஞ்சம் கவனமாக இருக்கிறோம்.” என்றார். ஆதன் அமைதியாக அதிகாரி சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தான். அதிகாரி ஒரு கோப்பைத் தன முன் திறந்தார் — ஆனால் அதைப் படித்துக் காட்டவில்லை. “உங்களைப் போன்றவர்கள்,” அவர் தொடர்ந்தார், “தண்டனை தேவையில்லை. ஆனால் அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை.” என்றார். உடனே ஆதன் அமைதியாகக் கேட்டான்: “எதை நோக்கி வழிகாட்டுதல், ஐயா?” அதிகாரி சிரித்தார். “நடுநிலையை நோக்கி.” ஒரு இடைநிறுத்தத்திருக்குப் பின் அவர் மீண்டும் தொடர்ந்தார் “வரலாறு, இந்த மாவட்டத்தில் உணர்ச்சிபூர்வமானது. அது போலவே மொழியும் காணப்படுகிறது. இங்கு நடந்தவை நடந்தவையே . ஆனால் கருத்தில் கொள்ளுங்கள், உணர்ச்சி சீரமைப்பை அல்லது ஒருமிப்பு ஒன்றை, அதாவது ஒன்றுசேர்தலை உருவாக்குகிறது. அது தான் நாம் கவனிக்க வேண்டியதாக உள்ளது.” என்றார் ஆதன் பதிலளித்தான்: “உணர்ச்சி புரிதலையும் உருவாக்குகிறது.[Emotion also creates understanding.] ” அதிகாரி கோப்பை மூடினார். "அடுத்த வரும் காலகட்டத்தில், உங்கள் பாடங்கள் பாடத்திட்டத்தின்படி கண்டிப்பாக இருக்கவேண்டும். அதற்கு மேலதிகமான கூடுதல் விளக்கங்கள் தேவை இல்லை. அது மட்டும் அல்ல, தனிப்பட்ட, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று சான்றுகள் மற்றும் இலக்கியங்களின் ஊடாக விளக்கங்கள் தேவை இல்லை. அரசு ஏற்றுக் கொண்ட மகாவம்சத்தின் ஊடாக மட்டும் வரலாறு இருக்கட்டும், அதில் தவறு, பிழைகள் சுட்டிக்காட்டுவது உங்கள் வேலை இல்லை." அதன் பின் இடைநிறுத்தத்தின் பின், அவர் தொடர்ந்தார்: "இது கண்காணிப்பு அல்ல," என்று அவர் மேலும் கூறி, "இது கட்டுப்படுத்துதல்." மட்டுமே என்றார். ஆதன் மேலே பார்த்தான். தீபவம்சம், மகாவம்சம் மற்றும் சூளவம்சம் என்பவை புத்த சமயத்தை பரப்பவென அன்று பாளியில் எழுதப்பட்ட இனவாதம் கக்கும் பல பொய்களை உள்ளடக்கிய, புத்தரின் போதனைக்கு எதிராக, சோடிக்கப்படட ஒரு வரலாற்றுத் தொகுப்பு என்பது அவனுக்குத் தெரியும். புத்தர் மூன்று முறை இலங்கைக்கு பறந்து வந்தார் என்ற கட்டுக்கதையுடன் ஆரம்பிக்கும் தொகுப்பே இவை. இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, அங்கேயே இறந்த புத்தரைப் பற்றி, இந்திய நூல்களுக்கு முற்றிலும் மாறாக இந்த ஆரம்பமே இருப்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. இவ்வாறான பல வரலாற்று பொய்களைப் பற்றி அவன் மனம் தனக்குள் முணுமுணுத்தது. அதை இன்று, குறிப்பாக சிங்கள அதிகாரிகளையும் புத்த பிக்குகளையும் கொண்ட தொல்பொருள் திணைக்களம் செய்யும் கூத்துக்கள் அவன் அறிவான். பாவம் புத்தர் அங்கெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு, சிலையாக முளைக்கிறார். "ஐயா," அவன் கூறினான், "உயிருள்ள ஒன்று வளரும்போது மட்டுமே கட்டுப்படுத்துதல் தேவை.[containment is only required when something alive is growing.], இங்கே நான் வரலாற்றை மட்டுமே படிப்பிக்கிறேன், அதை உண்மையான வாதங்களுடன் எடுத்துக் காட்டுகிறேன். அப்படி என்றால் உண்மையை சொல்லாமல் கட்டுப்படுத்து கிறீர்களா ?" என்று கேட்டான். அதிகாரி பதிலளிக்கவில்லை. கூட்டம் எந்தவித சலசலப்பும் இன்றி அமைதியாக முடிந்தது. ஆனால், அது தான் அவனை கோபத்தை விட அதிகமாகப் பயமுறுத்தியது. பள்ளிக்கு வெளியே, வேப்பமரம் மட்டும் அசையாமல் நின்றது. ஆதன் தனது மரத்துடன் சாய்த்து வைத்த சைக்கிளை வெளியே எடுத்தான். ஒரு இளைய ஆசிரியர் அமைதியாக ஆதனை அணுகினான். "சார் ... அவர்கள் உங்களைப் பார்த்து கத்தவில்லையா ?." ஆதன் தலையசைத்தார். "அப்படி என்றால் அவர்கள் பயப்படுகிறார்கள்," என்று அவன் கூறினான். அன்று மாலை - கடற்கரை அமைதியாக இருந்தது. அலைகள் ஒன்றும் கொந்தளிக்கவில்லை. மழை நின்று விட்டது. சூரியன் அடிவானத்திற்குக் கீழே மறையும் போது, வானம் பெரும்பாலும் சூடான ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களிலிருந்து குளிர் நீலம் மற்றும் ஊதா நிறங்களுக்கு மாறியது. கடல் இந்த வண்ணங்களைப் பிரதிபலிக்கிறது, அவை ஆழமான நீலம் அல்லது ஊதா நிற வண்ணச்சாயமாக தோன்றியது. அந்த ஒளிக்குள் யாரோ தோணியில் நின்றபடி வலை வீசிக் கொண்டிருந்தார். அது ஒரு நிழல் மாதிரி இருந்தது. அவர் எதோ ஒரு பாடலை மெதுவாகப் பாடினார். பாடலின் வார்த்தைகள் காற்றில் கலந்து, அவன் காதிலும் மோதியது. அருகில் நின்ற இன்னும் ஒரு மீனவன், ஆதனிடம் சொன்னான், "சார் - தோணியில்லாத கடல், வலையில்லாத கையைப் போல," என்று. ஆதன் தலையாட்டினான். தொலைவில் அந்த நிழல் தோணியும் நகர்ந்தது. வலையில் சில கருப்பு மீன்கள் மின்னின. ஆதன் மனம் அதை ரசிக்கும் நிலையில் இல்லை. காற்று வாங்கவும் ஒரு மன ஆறுதலுக்கு மட்டுமே அங்கு வந்தான். அவன் சமந்தியைக் கூட அழைக்கவில்லை. அவன் தனியாக நடந்தான். அலைகள் இன்னும் அமைதியாகவே இருந்தன. அப்பொழுது முதல் முறையாக, ஒரு கேள்வி அவன் மனதுக்குள் நுழைந்தது: மற்றவர்களை உடைக்காமல்... அல்லது தன்னைத்தானே உடைக்காமல் எவ்வளவு உண்மையை ஒருவர் சுமக்க முடியும் [How much truth can one carry without breaking others… or oneself?]? அவன் வீடு திரும்பியதும் தனது நாட்குறிப்பில் [டைரி], ஆதன் நிதானமாக, மெதுவாக எழுதினான்: “அவர்கள் இனி என்னைக் குற்றம் சாட்ட மாட்டார்கள். அவர்கள் இனி என்னை எச்சரிக்க மாட்டார்கள். வாயைத் தொடாமல் அல்லது கிளறிவிடாமல் ஒரு குரலை எப்படி அமைதிப்படுத்துவது என்பதை இப்ப கற்றுக்கொண்டார்கள். இது நேரடியான தண்டனை அல்ல. இது அதற்கான ஒரு தயாரிப்பு. நாளை, போராட்டம் பகிரங்கமாக இருக்காது. ஆனால் உள்ளே இருக்கும். [Tomorrow, the struggle will not be public. It will be inside]” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 08 தொடரும் துளி/DROP: 2077 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 7 https://www.facebook.com/groups/978753388866632/posts/34171930912455452/? கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 8 பாகம் – 8 / “உளவியல் மற்றும் நெறிமுறைகளில் மனதுக்குள் ஒரு முறிவு” அன்று எந்த கடிதங்களும் வரவில்லை. எச்சரிக்கைகள் இல்லை. புதிய உத்தரவுகள் இல்லை. ஆனால் அந்த அமைதி தண்டனையை விட கனமானது. ஏனன்றால் புலி பதுங்குவது பாய்வதற்கு என்பது போல ஆதனுக்கு இருந்தது. உடப்பு பள்ளியில், ஆதன், தனது வகுப்பறையில் கரும்பலகைக்கு அருகில் படிப்பித்தலை தொடங்குவதற்கு நின்றான். அவன் கையில் சுண்ணக்கோல் [chalk] இருந்தது, ஆனால் அவன் மனம், இம்முறை கொஞ்சம் தயங்கியது. அவனுக்கு நன்றாகத் தெரியும் — இப்போது ஒவ்வொரு வார்த்தையும் இனி எடை கொண்டது. ஒவ்வொரு வாக்கியமும் அதிகாரிகளுக்குச் சான்றாக மாறக்கூடும். எனவே அவன் யோசித்து மெதுவாக எழுதினான்: “மொழி என்பது நாம் கற்றுக்கொள்வதுதான்.” அத்துடன் ஆதன் நிறுத்தினான். முன்பு என்றால், அவன் இன்னும் அதிகமாக, விளக்கமாக எழுதியிருப்பான். அவன் மொழியின் நினைவாற்றல் பற்றி, வரலாறு பற்றி, அடையாளம் பற்றி பேசியிருப்பான். ஆனால், இன்று, அவன் எழுதிய வரிசையை பாதியிலேயே அழித்துவிட்டான். உடனே ஒரு மாணவன் கையை உயர்த்தினான். “சார் ... நேற்று தமிழ் ஞாபக சக்தியைக் கொண்டு வரும் என்று சொன்னீர்கள். இன்று ... நிறுத்தி விட்டீர்கள்.” என்று கேட்டான் வ குப்பறை அமைதியாக இருந்தது. ஆதன் இளம் மாணவ முகங்களைப் பார்த்தான். அவர்கள் அதிகாரிகள் அல்ல. அவர்கள் கோப்புகள் அல்ல. அவர்கள் உண்மைக்காகக் காத்திருக்கும் குழந்தைகள். ஆதன் அமைதியாகச் சொன்னார்: “சில உண்மைகள் அழிக்கப் படுவதில்லை. அவை காத்திருக்கின்றன.” அப்பொழுது மணி ஒலித்தது. என்றாலும் மாணவர்கள் யாரும் அசையவில்லை. அதேவேளை, சிலாபம் மருத்துவமனையில் சமந்தி தனது கைகளை சிங்க்கில் [sink] கழுவிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவள் மனது அவளிடம் இல்லை, அது யோசனைகளுக்குள் மாட்டிக் கொண்டு இருந்தது. தண்ணீர் தொடர்ந்து ஓடிக் கொண்டு இருப்பதைக் கூட அவள் கவனிக்கவில்லை. ஒரு ஜூனியர் நர்ஸ் [junior nurse] அவள் பின்னால் கிசுகிசுத்தாள்: “உன்னை கண்காணிப்பதாக, அருட்சகோதரிகள் சொல்கிறார்கள்.” சமந்தி தலையசைத்தாள். “எனக்குத் தெரியும்.” அப்பொழுது இன்னொரு குரல் பின்னால் கேட்டது : “நீ ஏன் கொஞ்ச நாள் அமைதியாக இருக்கக் கூடாது?” சமந்தி திரும்பினாள். “நான் இப்போது அமைதியாக இருந்தால், என் சொந்தக் குரலை நான் மீண்டும் ஒருபோதும் கேட்க மாட்டேன்.” அன்றிரவு, அவளால் தூங்க முடியவில்லை. பயத்தின் காரணமாக அல்ல— ஆனால் அவள் தேர்ந்து எடுத்த பாதையின் காரணமாக [because of choice]. அவள் திருப்பி கதைத்தால், அவள் குடும்பத்தினர் அருட்சகோதரிகளின் எதிர்கால நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவார்கள். ஆனால், அவள் அமைதியாக இருந்தால், அவள் தான் யார் என்பதையே அல்லது தன்னையே மறைந்துவிடுவாள். அந்த எண்ண அலை அவள் மார்பில் ஓடியது. அன்று இரவு இருவரும் கடற்கரையில் சந்தித்தார்கள். அந்த இரவு நேரத்தில் கடற்கரை அலைகளின் மெல்லிய ஓசையுடன் அமைதி தவழும் ஓர் இடமாக இருந்ததுடன், பயோலுமினென்சென்ஸ் (Bioluminescence) எனப்படும் இயற்கையால் நீல நிறத்தில் ஒளிரும் உயிரினங்களால் மாயாஜாலக் காட்சியையும் அளித்தது. அவர்கள் வழக்கத்தை விட தாமதமாக சந்தித்தனர். அன்றிரவு அலைகள் கூட பெரிதாக இருக்கவில்லை. இருண்ட நீர் மட்டுமே, ஆனால் சில நீல நிறத் தோற்றமும் இருந்தன. அவர்கள் இருவரும் கடலின் மாயாஜாலக் காட்சியை பார்த்தபடி வெள்ளை மணலில் பக்கத்தில் பக்கத்தில் இருந்தாலும், கொஞ்சம் இடைவெளி விட்டே இருந்தனர். ஆதன், சமந்தியை பார்க்காமல் கடலை பார்த்தபடி, முதலில் பேசத் தொடங்கினான்: "இன்று பாதியிலேயே நான் எழுதுவதை நிறுத்தி விட்டேன், என் கையில் சுண்ணக்கோல் [சாக்கு / chalk] இன்னும் சூடாக இருந்தது. ஆனால் யாரும் என்னிடம் கேள்வி கேட்பதற்கு முன்பே நான் என் சொந்த வாக்கியத்தை அழித்துவிட்டேன். “நான் இப்பொழுது என்னையே கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.[I am censoring myself]. வேறுவழி, இந்த சூழ்நிலையில் எனக்குத் தோன்றவில்லை.” என்றான். சமந்தி தலையசைத்தாள். அவள் ஆச்சரியப்படவில்லை. “தெரியும்,” என்றாள். அவள் சற்று யோசனையின் பின் அவனுக்கு பதிலளித்தாள்: “நேற்று நான் வீட்டிற்கு, வழமையான குறுக்கு வழியை தவிர்த்து, நீண்ட பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அத்துடன் நான் வழக்கமாகச் செய்யும் உரையாடல்களையும் தவிர்த்தேன். நான் கேள்விகள் கேட்க விரும்பும் இடத்தில், கேள்விகளைக் கேட்காமல் மௌனமாக சிரித்தேன்.” என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் நிறுத்தினாள். பின், "நான் என் வாழ்க்கையின் அர்த்தத்தைத் திருத்துகிறேன் [I am editing my life]” என தன் பதிலை முடித்தாள். ஒரு கணம், அவர்கள் இருவரும் அமைதியாக சிரித்தனர். சிரிப்பு மகிழ்ச்சியிலிருந்து எழவில்லை. இரு உடல்களிலும் ஒரே பிளவு ஓடிக் கொண்டிருப்பதை அறிந்த தருணத்திலிருந்து வந்தது. ஆதன் மெதுவாக மூச்சை விட்டான்: “என் வகுப்பில் அவர்கள் தாராளமாக அமரலாம், ஒவ்வொரு சொல்லையும் எழுதி வைத்துக் கொள்ளலாம். அது எனக்குப் பிரச்சனை இல்லை, என்னால் அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியும், ஏன் என்றால் நான் என்னை கட்டுப்படுத்த பழகிவிட்டேன், ஆனால் இதன் மூலம் நான் சுருங்குவதை என்னால் தாங்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.” என்றான். ஆதனை கவனமாக காது கொடுத்து கேட்டபின், சமந்தி தாழ்ந்த குரலில் சொன்னாள்: “என்னால் வதந்திகளைத் தாங்க முடியும். அதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் சந்தேகத்தையும், அவர்களின் மௌனத்தையும், அவர்களின் பயத்தையும் நான் ஏற்றுக்கொண்டால் — அந்த அவமானம் என்னை விட்டு என்றுமே போகாது." என்று கூறிவிட்டு ஆதனைப் பார்த்து அவள் தலையாட்டினாள். “எனக்கு உரியதல்லாத அவமானத்தை நான் என்றும் சுமக்க மாட்டேன்.” என்று திடமாகக் கூறினாள். அதன் பின் அவர்கள் இருவரும் தங்கள் தங்கள் வீடு திரும்ப எழும்பினர். ஆனால் அப்பொழுது கூட அவர்கள் விலகியே நின்றனர். காதல் பலவீனமடைந்ததால் அல்ல - ஆனால் நெருக்கம் வெளிப்படத் தொடங்கியதால். அன்பைக் கூட பதிவு செய்யலாம், தவறாகப் படிக்கலாம், பயன்படுத்தலாம் என்பதால். அப்பொழுது இரவுக் காற்று அவர்களின் மார்பில் அழுத்தியது. கூர்மையாக இல்லை. - படிப்படியாக. - எலும்பில் ஏதோ ஒன்று படிவது போல. இருவரும் கை அசைத்து விலகிச் சென்றனர். அந்த இரவு யாரும் எழுதவில்லை. யாரும் பிரார்த்திக்கவில்லை. யாரும் அழவில்லை. ஆனால் மாற்றமில்லாத ஒன்று நடந்தது. “எப்படி தப்பிக்கலாம்?” என்ற கேள்வி மறைந்தது. “எதைச் சொல்லவேண்டும்?” என்ற கேள்வி பிறந்தது. அந்தக் கேள்வி பயத்தைவிட சத்தமாக இருந்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 09 தொடரும் துளி/DROP: 2081 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 8 https://www.facebook.com/groups/978753388866632/posts/34204542762527600/?
  20. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 127 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" “யானும் ஒரு கற்புடைய பெண் என்பது உறுதி யானால் யானும் அற்புதம் நிகழ்விப்பேன்; இந்த அரசை அடியோடு அழிப்பேன். இந் நகரையும் முழுவதும் எரிப்பேன்; என் செயல் திறத்தை நீகாண்பாய்” என்று கூறி அரசவையை விட்டு அகன்றாள் கண்ணகி. தன் இட முலையைக் கையால் திருகிப் பிய்த்து எடுத்து நகரை வலம் வந்தாள். மும் முறை சுற்றினாள்; மணம் மிக்க மதுரை மாநகர்த்தெருவில் அலமந்து [சுழன்று] தன் முலையை வட்டித்து எறிந்தாள் [வட்டித்துவிட்டா ளெறிந்தாள்: இதன் பொருள் "பிரதிக்கினை பண்ணி எறிந்தாள்" என்பதாகும். அதாவது, அவள் ஒரு உறுதிமொழியைச் சொல்லிவிட்டு, அதை நிறைவேற்றும் விதமாக ஏதாவது ஒன்றை எறிந்தாள் என்று அர்த்தம்.]. எரி நெருப்பு தெய்வ வடிவில் அவள் முன் வந்து நின்றது. நீலநிறமேனி, சிவந்தசடைமுடி, பால்போலும் வெண்பற்கள் உடைய பார்ப்பனனாக அவள் முன் வந்து தோன்றியது. பத்தினியாகிய கண்ணகி முன் நின்றது; “இந்த நகர் எரியுண்ணும்; அதற்கு ஒரு சாபம் எற்கனவே உள்ளது. யாரை விட்டு வைப்பது?” என்று கேட்டு நின்றது. “பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், முத்தோர், குழவி ஆகிய இவர்களை விட்டு விட்டுத் தீயவர்கள் பக்கமே போய்ச் சேர்க” என்று ஏவினாள். புகையோடு கூடிய நெருப்பு மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டது; அது மூண்டு எழுந்து அழிக்கத் தொடங்கியது. காலப்போக்கில், அவள் பத்தினி தெய்வமாக மாறினாள், மேலும் நோய்களைக் கட்டுப்படுத்துவதாகவும், நாட்டிற்கு செழிப்பை ஏற்படுத்தக் கூடியவள் என்றும் அவளை நம்பினர். கண்ணகி வானுலகம் செல்வதற்கு நின்றிருந்த மலை, சேர நாட்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் சேர நாட்டைச் சேரன் - செங்குட்டுவன் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற சேரப் பேரரசனுக்கு மகன் ஆவான்; இளங்கோ அடிகள் என்ற புலவர் பெருமானுக்கு அண்ணன் ஆவன். ஒருமுறை, துயரம் மிகுந்த கண்ணகி வரலாற்றைக் கேட்ட செங்குட்டுவன் பெருமூச்சு விட்டான்; “பொற்கொல்லன் பேச்சைக கேட்டதால் பாண்டியன் செங்கோல் வளைந்தது; ஆயின் அவன் தன் தவற்றை உணர்ந்தவுடனே இறந்ததால் வளைந்த செங்கோல் நிமிர்ந்தது" என்றான். பின்னர் அவன் தன் பட்டதரசியைப் பார்த்து, “நன்னுதால் கணவனுடன் இறந்த கோப்பெருந்தேவி போற்றத்தக்கவளா? தன் கணவன் குற்றவாளி அல்லன் என்பதை உணர்த்திப் பழிக்குப்பழி வாங்கிய கண்ணகி போறறத் தக்கவளா?” என்று கேட்டான். பட்டத்தரசி, ஐயனே, இருவரும் போறறத்தக்கவரே. ஒருத்தி அறக்கற்பு உடையவள்; மற்றவள மறக்கற்பு உடையவள். நாம், நமது நாடு அடைந்து துறக்கம் புகுந்து பத்தினிக் கடவுளைப் பரவுதல் வேண்டும். அவள் தெய்வமாகத் தொழத் தக்க தகுதியுடையவள்,” என்று பதில் அளித்தாள். எனவே, உடனே சேரர் பெருமான் பத்தினிக்குரிய கல்லைப் இமயத்திலிருந்து கொணர்ந்து கங்கையில் நீராட்ட, சேர மன்னன் செங்குட்டுவன், வட இந்திய மன்னர்களுக்கு எதிராகப் படையெடுத்து வடக்கு நோக்கிச் சென்று, இமயமலையிலிருந்து கற்களை தோற்கடிக்கப்பட்ட மன்னர்களின் தலையில் சுமப்பித்துக் கொண்டு வந்தான். அந்தக் கற்களைக் கொண்டு கண்ணகிக்கு ஒரு பத்தினி கோயில் கட்டினான். இலங்கை மன்னன் கஜபாகுவும் இந்த விழாவில் கலந்து கொண்டான். சேரன் செங்குட்டுவனின் பிறந்த நாளில் தான் நடத்தவிருந்த விழாவிற்கு பத்தினி தேவி வர வேண்டும் என்று அவன் வரம் கேட்டான். உடனே அதற்க்கு செவிசாய்த்து ஒரு குரல் கேட்டது. அந்த பாடல் அல்லது வசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: "கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்" ‘தந்தேன் வரம்’ என்று எழுந்த குரலைக் கேட்டு மகிழ்ந்த கஜபாகு, கண்ணகியின் சக்தியை, அவள் பெருமையை நினைவுகூர்ந்து, அவளை கௌரவப் படுத்த தன்னுடைய நாட்டுக்குச்சென்று பத்தினிக்குக் கோட்டம் அமைத்து தானும் அங்கே விழா நடத்தினான் என்பது வரலாறு ஆகும். இதனால் அவனது இராச்சியம் ஒருபோதும் தவறாத மழையும், வளமான பயிர்களுமாக காணப்பட்டது. இந்த பத்தினி வழிபாட்டுப் பண்டிகை 1775ஆம் ஆண்டு வரை சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டதும் ஆகும். இந்த விழா தான் பின்னாளில் 'பெரகரா' ['Perahera'] விழாவாக மாறியது எனலாம். Part: 127 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" Kannaki wrenched her left breast, came right round the city three times, and threw it to burn the City of Madurai. She, in due course, became the Goddess Pattini, and believed to have control over disease and could cause prosperity to the country. The king Kajavahu of Lanka heard of her power, and performed festival on her honour, and his kingdom became blest with never failing rain and abundant crops. This festival became the ‘Perahera’ festival. The Chera king, Seng Kudduvan, went north on expedition against the north Indian kings, and brought stones from the mount Himalaya on the heads of the defeated kings. He made a temple for Kannaki, Pattini temple, with those stones. The king of Lanka, Kajavahu, too attended this festival. He requested a boon from the Goddess Pattini that she should come to the festival he intended to have on the day of the birthday of Cheran Seng Kudduvan. A voice ‘granted’ was heard. The verses related to this are given below. "கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்" The monarch of the world circumambulated the shrine thrice and stood proffering his respects. In front of him the Arya kings'’ released from prison, kings removed from the central jail, the Kongu ruler of the Kudagxi, the king of Malva and ’Kayavagu (Gajabhau), the king of sea girt Ceylon, prayed reverentially to the deity thus: Please grace our countries by your presence just as have done this auspicious day, a fete day of Imayavaramban’s sacrifice. ’ Then a voice from the welkin issued forth: ‘I have granted the boon.’ The Perahera festival is the continuation of this worship of the Goddess Pattini till about 1775 A. D. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 128 தொடரும் / Will follow துளி/DROP: 2082 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127 https://www.facebook.com/groups/978753388866632/posts/34206389789009564/?
  21. கடஞ்சா "விவிலிய" என்று விளித்து தீவிரமாக எழுதி வருவதால் அதைப் பற்றிய ஒரு பின்னணி அவசியமாகிறது. போனவாரம், ஈரானிய தாக்குதல் ஆரம்பித்த பின்னர், அமெரிக்க இராணுவத்தின்கீழ் நிலை அதிகாரிகளிடமிருந்து பல முறைப்பாடுகள் சென்றிருக்கின்றன. விவிலியத்தின் "உலக முடிவு" பற்றிப் பேசும் பகுதிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்கப் படைகளின் சில அதிகாரிகள் தங்கள் துருப்பினருக்கு இது விவிலியத்தின் படி நடக்கும் போர், ட்ரம்பைக் கடவுள் இதற்காகவே எமக்குத் தந்திருக்கிறார் என்பதாக உரையாற்றியிருக்கிறார்கள். Military Religious Freedom FoundationMRFF Inundated with Complaints of Gleeful Commanders Tell...“This morning our commander opened up the combat readiness status briefing by urging us to not be “afraid” as to what is happening with our combat operations in Iran right now. He urged us to tell ourபல ஆயிரம் அதிகாரிகள் இருக்கும் அமெரிக்க இராணுவத்தில், சில பத்து "மறை கழண்ட கேஸ்கள்" அதிகாரிகளாக இருப்பது ஒன்றும் ஆச்சரியம் தரும் விடயமல்ல. இந்த முறைப்பாடுகள் வெளியே தெரிய வந்த பின்னர் தான் ஈரானுக்கு ஆதரவான தரப்புகள் இதை முன்னிறுத்தி, "முழு ஈரானிய நடவடிக்கையும் விவிலியத்தின் மீதான நம்பிக்கையின் படி நடக்கிறது!" என எழுதி வருகிறார்கள். 2015 இல் உருவான JCOPA, அதில் இருந்த ஓட்டைகளை ஈரான் பயன்படுத்தி அணுவாயுதம் நோக்கி நகர முற்பட்டமை, பின்னர் ட்ரம்ப் என்ன செய்வார் என்று புரிந்த பின்னரும் அணு ஆயுதத்தைக் கைவிட மறுத்தமை - ஆகிய முக்கியமான காரணங்களை இப்படியான ஒரு ஒற்றைச் "சணல் நூலை" ஆட்டி மடை மாற்ற, கடஞ்சா போன்ற ஆர்வக் கோளாறுடைய பூனைக்குட்டிகள் "சணல் நூலின்" பின்னால் துள்ளி கொண்டிருக்கிறார்கள்😂!
  22. வருடா வருடம் விளையாட்டுப்போட்டியை திறம்பட நடத்தி யாழ் களத்தை கல கலப்பாக்கும் கிருபனுக்கும் இம்முறை முதலாம் ரெண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கும் என்னை கீழே மிதிப்படாமல் காத்த வாதவூரானுக்கும் என் நன்றிகள் . கிருபனுக்கு மேலதிக பாராட்டுக்கள்.
  23. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஜயவேவா. - சீலரத்ன தேரர்.- காணொளி: 👉 https://www.facebook.com/reel/907114451932584 👈
  24. பகிர்வுக்கும், பங்களிப்புக்கும் மிக்க நன்றி.....!
  25. ஒவ்வாமை என்பது ஒரு அசௌகரியம் தான் என்றாலும் இக்காலத்தில் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் படியாக நாம் அனுமதிக்கக் கூடாது. நித்திரைத் தூக்கம் ஏற்படுத்தாத (non-drowsy) ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் பல வந்து விட்டன. கீழ் வரும் மருந்துகளில் எவையாவது உங்கள் நாட்டில் கிடைக்கின்றனவா என்று தேடிப் பாருங்கள், மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே இவை மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடும். fexofenadine centrizine levocentrizine loratadine desloratadine

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.