All Activity
- Past hour
-
ட்ரம்பின் முடிவை வரவேற்கிறோம் : ஆனால் லெபனான் சேர்க்கப்படவில்லை: நெதன்யாகு
போருக்கான அடிப்படை என்றும் மாறாது போல உள்ளது.
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
அடியான் என்பவரின் காணொளி நான் பார்த்து பல மாதங்களாகிவிட்டது 😂 இந்த மத மயக்க பெரும் கூட்டத்தை குதூகலிப்படைய வைப்பதின் மூலம் தாங்கள் பயன்பெற்று கொள்கின்ற நோக்கத்தில் தான் பல தமிழ் யுரியுப் காணொளிகள் அதற்கேற்ப கதைகள் எழுதி பெற்று கொண்டிருக்கின்றது.
-
கல்வி உரிமையை ஆளுநர்பறிக்கிறாரா: ? அர்ச்சுனா கேள்வி
ஆளுனரை அவர் வேலையில் ( உதவ அரசாங்க அதிபராக சேர்ந்த அன்றிலிருந்து எனக்கத்தெரியும். மிகவும் நேர்மையான அடக்கமான மனிதர். எனது அப்பாவும் interview panel இல் இருந்தவர். அன்று எங்களுக்கு அப்பா சொன்னவர், இவர் யாழ்மாவட்ட அரசாங்க அதிபராக மட்டுமல்ல அதேனிலும் மேலாக செல்லுவார் ( அரசியல் அழுத்ங்கள் பாவிக்கபடாமல் இருந்தால்) என்று. அது மட்டுமல்ல இவர் கொக்குவில் ( எமது ஊர்) மாப்பிள்ளை. இந்த அர்ச்சுனா ஒரு ஒரு கொடிய கிருமி…இது சும்மா உளறிக்கொன்றிருக்கும் , அதுன்ற கதைகளை கருத்தில் எடுக்காதீர்கள்.
-
யாழில் நடைபெற்ற போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் மாநாடு!
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலைஞர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வில் “வரலாற்றின் வேர்கள்” எனும் விருதினை பெற்ற பின்னர் தாயகத்தின் மூத்த பாடகி பார்வதி சிவபாதம் பாடிய பாடல் https://web.facebook.com/reel/1693541788331300 அலையே நீயும் பொங்காதே "அலையே நீயும் பொங்காதே" என்ற பாடலானது 1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் வெளிவந்த "நெய்தல்" என்னும் பாடல் தொகுப்பில் இடம்பெற்ற பாடலாகும். இசைவாணர் கண்ணனின் இசையில் பார்வதி சிவபாதம் பாடிய இப்பாடலை எழுதியவர் போராளிக் கவிஞர் உதயலட்சுமி அவர்கள். இது உதயலட்சுமியின் முதலாவது பாடலாகும். பாடல் பிறந்த கதை இப்பாடல் உருவான காலப்பகுதியில் பெண் போராளிகள் கடற்புலிகள் அணியில் இணைக்கப்பட்டிருக்கவில்லை, கடற்பயிற்சி அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால் இவர்கள் கடற்கரையோரத்தில் நின்று காப்பரண்களை அமைத்து சிறிலங்காப் படைகளின் கடற்கலன்களில் இருந்து பாதுகாப்பது வழக்கமாயிருந்தது. உதயலட்சுமியும் சக பெண் போராளிகளும் பாதுக்கப்புப் பணிக்காக நாயாற்றுக் கடற்கரையோர அரண்களுக்குச் சென்றிருந்தனர். உதயலட்சுமிக்குத் தூரத்திலிருந்து சிறிலாங்காப் படைகளின் கடற்கலங்கள் தெரியாமல் வெறும் அலைகள் மட்டும் தான் தெரிந்துவிட்டன. ஆகையால் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற உதயலட்சுமிக்கு அலைகள் தடையாய் இருந்ததினால், கடலன்னையை நோக்கி “அலையே நீயும் பொங்காதே” என்ற பாடலை எழுதத் தொடங்கினார். பின்னர் இப்பாடல் விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரைக்கு அனுப்பப்பட்டு, ‘நெய்தல்’ என்னும் பாடல் தொகுப்புக்காக அறிமுகப்பட்டது. முழுப் பாடல் பல்லவி அலையே நீயும் பொங்காதே - என் இலக்கினை இனியும் மறைக்காதே சிலைபோல் இப்போது இருக்கின்றேன் - கொடுஞ் சிங்களம் வந்தால் சிதைத்திடுவேன் சரணம் மறைந்த நம் வீரர் கனவேந்தி - அவர் நினைவுடன் கருவியும் கைப்பிடித்தேன் கத்தாதே அலையே கணப்பொழுது - ஏதோ சத்தங்கள் கேட்குதே கடல்மீது கருவியை ஏந்திக் கரையினிலே - பகைப் படகினை உடைக்கவே நிலையெடுத்தேன் திரையே நீ ஏன் ஒலிக்கின்றாய் - பெருந் திரை போட்டென்னை மறைக்கின்றாய் வேதனை கொண்டுதான் ஒலித்தாயா - வேங்கை வெல்வதால் வேகம் பெற்றாயா சற்றே நீ அமைதியாய் இருந்துவிடு - பகை முற்றையும் பொடிப் பொடியாக்கிடலாம் மேற்கோள்கள் ஈழநாதம் 1992.07.10 பக். 5-6. 'வெளிச்சம்' இதழ் வைகாசி-ஆனி 1992 - பக். 35. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
போர் நிறுத்தத்தினை அனைவரும் விரும்புகிறார்கள், அதனால் அதற்கு ஏற்பாடு செய்யும் தரப்புக்கள் அனைத்திற்கும் நன்றிகள்.
-
சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் முக்கிய நகரங்கள் இதோ? Apr 8, 2026 - 06:43 AM மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. சூரியனின் தோற்ற வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கமைய, இன்று (08) நண்பகல் 12:12 மணிக்கு நீர்கொழும்பு, வரக்காபொல, அரநாயக்க, கம்பளை, பிபிலை, இகினியாகல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnpcf1xc0006356plnw5cp3r
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
ஈரான் மீதான குண்டுவீச்சை இடைநிறுத்த இஸ்ரேல் இணக்கம்! Apr 8, 2026 - 06:23 AM டொனால்ட் ட்ரம்ப் தற்காலிக போர்நிறுத்தம் ஒன்றை அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறக்க வேண்டும் என்பதற்காக, பிரித்தானிய நேரப்படி இன்று (08) அதிகாலை 1 மணி வரை ட்ரம்ப் வழங்கியிருந்த கால அவகாசம் முடிவடைய 90 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, போர்நிறுத்தக் காலப்பகுதியில் நீரிணை வழியாக "பாதுகாப்பான பயணத்தை" அனுமதிப்பதற்கு ஈரான் உடன்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்திருந்ததுடன், இஸ்ரேலில் எச்சரிக்கை சைரன் ஒலிகளும் இடைமறிப்புத் தாக்குதல்களும் கேட்டதாக ஸ்கை நியூஸ் செய்தியாளர்கள் தெரிவித்திருந்தனர். https://adaderanatamil.lk/news/cmnpc0ieg0004356p346nsf4e
-
-
ட்ரம்பின் முடிவை வரவேற்கிறோம் : ஆனால் லெபனான் சேர்க்கப்படவில்லை: நெதன்யாகு
ட்ரம்பின் முடிவை வரவேற்கிறோம் : ஆனால் லெபனான் சேர்க்கப்படவில்லை: நெதன்யாகு 08 Apr, 2026 | 10:40 AM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தியுள்ள முடிவை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. எனினும், இந்த போர்நிறுத்தம் லெபனான் மீது பொருந்தாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், சில முக்கிய நிபந்தனைகளையும் வலியுறுத்தியுள்ளது. அதன்படி, ஈரான் உடனடியாக ஹோர்மூஸ் நீரிணை கடல் வழித்தடத்தை திறக்க வேண்டும் என்பதோடு, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா முன்னெடுத்து வரும் பதற்ற தணிப்பு முயற்சிகளுக்கும், பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கும் இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் அரபு அண்டை நாடுகளுக்கு ஈரான் இனி அணு ஆயுதம், ஏவுகணை அல்லது “பயங்கரவாத” அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்ற அமெரிக்காவின் நோக்கத்தையும் ஆதரிப்பதாக இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளது. இதனை அடைய எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் இணைந்து செயல்பட உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி இஸ்லாமபாத் நகரில் தொடங்கவுள்ளதாக ஈரான் தரப்பு அறிவித்துள்ளது. இந்த முன்னேற்றங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையை குறைக்கும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றன. https://www.virakesari.lk/article/243009
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
தம்பர் வாய்ச்சவடால்காரன் என்பது இதன் மூலம் வெளிப்பட்டு விட்டது.பேசாமல் இருந்திருக்கலாம் கண்டபடி வாயை விட்டு விட்டு இப்பொழுது பின்வாங்கி அமெரிக்காவின் மானத்தை வாங்கி விட்டார்.போர்நிறுத்தம் லெபானான் உட்பட அனைத்து மோதல்களும் இடைநிறுத்தப்படவேண்டும் என்று இருக்கிறது. ஆனால் இஸ்ரேல் போர்நிறுத்தத்தை வரவேற்கும் வேளை இந்த யுத்த நிறுத்ததறிற்குள் லெபனான் உள்ளடக்கப்பட வில்லை என்று கூறுகிறது. ஆக ஈரான் இஸ்ரேலுக்கு அடிக்கக்கூடாது அதற்கு யுத்த நிறுத்தம் தேவை. ஆனால் இஸ்ரேல் லெபானானுக்கு அடிக்கலாமாம்.தன்னைத்தயார் படுத்திக் கொண்டவுடன் இந்த யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் முறிக்கும்.இருந்தாலும் தற்போதைய நிலையில் இந்தியாவை விட பாகிஸ்தான் ஒருபடி மேலே போய் விட்டது.
-
- Today
-
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை 08 Apr, 2026 | 10:52 AM யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என செவ்வாய்க்கிழமை (07) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வெளிப்பட்டது. செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று (7) யாழ். நீதிவான் லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜராகி இருந்ததுடன் இந்த மனித புதைகுழி தொடர்பிலான அகழ்வு பணிகளை மேற்பார்வை செய்யும் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன் நீதிமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தார். பாதிக்கப்பட்ட தரப்பினர் சார் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா ஆஜரான தலைமையிலான குழுவினர் ஆஜரானதுடன் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி பூரணி ஆஜராகி இருந்தார். இதன்போது நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த அகழ்வு பணிகளை மேற்பார்வை செய்யும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியுமான சூழல் இருப்பதாக அவர் இதன்போது நீதிமன்றில் குறிப்பிட்டார். இந்த நிலையில் குறித்த மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்ட செலவீனங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை எனவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவதானம் செலுத்திய யாழ். நீதிவான் லெனின் குமார் நீதி அமைச்சுக்கு இது தொடர்பில் ஞாபகமூட்டும் கடிதம் ஒன்றினை அனுப்ப உடனடியாக உத்தரவிட்டார். எதிர்வரும் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பாதீட்டுக்கு அனுமதி கிடைக்காத நிலையில் அவ்வாறான அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் தற்போது சந்தேகம் நிலவுகிறது. எனினும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பாதீட்டுக்கு அனுமதி பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் மீண்டும் ஒருமுறை ஆராய இந்த வழக்கை எதிர்வரும் 21ஆம் தேதி மீள விசாரணைக்கு அழைக்குமாறு நீதிவான் லெனின் குமார் உத்தரவிட்டார். இதன்போது காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பூரணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் செம்மணி மனித புதைகுழி வளாகத்தை பார்வையிட அனுமதி கோரியுள்ளதாக நீதிமன்றில் குறிப்பிட்டு அதற்காக அனுமதி கோரினார். இது தொடர்பாக கவனம் செலுத்திய நீதிவான் லெனின் குமார் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு முதலோ அல்லது அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு பிறகோ குறித்த வளாகத்தை பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார். இதேவேளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான அதிகாரிகள் இதுவரை முன்னெடுத்த விசாரணை அறிக்கை ஒன்றினை மன்றில் சமர்ப்பித்து செம்மணி மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட வழக்கு பொருட்களின் கால நிர்ணயம் தொடர்பில் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு கட்டளை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரினர். இது தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்பித்திருந்த நிலையில் அது தொடர்பில் அவதானம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேநேரம் இதுவரையில் செம்மணி மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக மேலதிக ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான செலவீனங்கள் குறித்த பாதீட்டுக்கும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்ற விடயம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் திருத்தப்பட்ட பாதீடு ஒன்றை அது தொடர்பில் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்வைத்து அதற்கு அனுமதி கோரினார். இது தொடர்பில் அவதானம் செலுத்திய யாழ். நீதிவான் லெனின் குமார் அந்த பாதீட்டுக்கும் அனுமதி அளித்தார். இந்த நிலையில் இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை தீர்மானிப்பது தொடர்பான விடயத்துக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. https://www.virakesari.lk/article/243005
-
-
அன்பை மறந்த உலகமே - பா.உதயன்-
- இந்தியப் படகுகளிலிருந்து அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள் ஏலம்
இந்தியப் படகுகளிலிருந்து அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள் ஏலம் Apr 8, 2026 - 08:23 AM இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள், யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் (07) இந்த ஏலம் நடத்தப்பட்டது. இந்தியப் படகுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புகள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டன. நீண்டகாலமாக ஏலம் விடப்படாமல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் பொருட்கள் அனைத்தும் அன்றைய தினம் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஏலத்தில் பெருமளவிலானோர் கலந்துகொண்டு, போட்டி விலைக் கோரல்கள் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்தனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmnpgasdq000c356payn8nwsw- கருத்து படங்கள்
- ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்
‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம். வடமாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் , எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்காகவும் கூட்டத்தின் முடிவில் 3 விசேட உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.அதன் போதே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறித்த கூட்டமானது வடக்கு மாகாணத்தின் பொருளாதாரச் சுழற்சியை மேம்படுத்துவதற்காக அரச, தனியார், நிதி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கிடையில் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது மாகாணத்தின் வணிகச் சூழலை ஆரோக்கியமானதாக்குவதற்குத் தடையாக உள்ள பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மாகாணத்தின் வளங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்பான தரவுகள் சேகரிப்பு முறையாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது. வங்கித்துறையினருக்கும் உள்ளூர் தொழில்முயற்சியாளர்களுக்கும் இடையில் இடைவெளி காணப்படுவதால், முயற்சியாளர்கள் நிதியுதவிகளைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் ஆழமாக விவாதிக்கப்பட்டது. மாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும், எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்காகவும் கூட்டத்தின் முடிவில் 3 விசேட உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. மாகாணத்தின் வர்த்தகம், வளங்கள் மற்றும் தொழில்முயற்சிகள் தொடர்பான தரவுகளை முறையாகச் சேகரித்து ஒழுங்கமைப்பதற்கான குழு. வடக்கு மாகாணத்திலிருந்து எந்தெந்தத் துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் குழு. தற்போதைய உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலால் வடக்கு மாகாணத்திலுள்ள தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்களை முன்கூட்டியே ஆராய்ந்து, அவற்றைத் தணிப்பதற்கான உத்திகளை வகுக்கும் குழு. இந்தக் கூட்டத்தில் மாகாண அரச உயர்மட்ட அதிகாரிகள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு வடக்கு மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தமது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். https://athavannews.com/2026/1471297- மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது
மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக ஆறு பணியாளர்களை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் (SLRC) இணைத்துக்கொண்டமை மற்றும் அவர்களை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாகப் பணியில் அமர்த்தி, அதற்கான கொடுப்பனவுகளை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு 14.32 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1471249- வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
2 வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட அமெரிக்கா, ஈரான்; ஹார்முஸ் நீரிணையை திறக்க உடன்பாடு! ஈரான் தனது குடிமக்கள் உள்கட்டமைப்புகள் மீது பேரழிவுகரமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருந்த காலக்கெடுவுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திற்கு முன்பு, செவ்வாயன்று (07) ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். இது 40 நாள் மோதலைத் தணிப்பதற்கான ஒரு இராஜதந்திர வாய்ப்பைத் திறந்தது. மேலும், ஈரானும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டு, ஹார்முஸ் நீரிணையை நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க ஒப்புக்கொண்டது. ஈரான் முன்வைத்த, செயல்படுத்தக்கூடிய 10 அம்ச சமாதானத் திட்டத்தைத் தொடர்ந்து, ஈரானியப் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற பொதுமக்கள் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதை அமெரிக்கா நிறுத்தி வைக்கும் என்று ட்ரம்ப் கூறினார். மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட மேலதிகப் பேச்சுவார்த்தைகள், வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளன. இந்த போர் நிறுத்தம், லெபனானில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த வேண்டும் என்று கோருகிறது என பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். இராஜதந்திர முயற்சிகள் வேகம் பெற்றபோதிலும், களத்தில் நிச்சயமற்ற தன்மையும் வன்முறையும் தொடர்ந்தன. போர் நிறுத்தக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டதை ஈரான் உறுதிப்படுத்திய போதிலும், வளைகுடா முழுவதும் ஏவுகணை எச்சரிக்கைகள் தொடர்ந்து பதிவாகி வந்தன. ஹார்முஸ் நீரிணையில் கப்பல் கட்டணம் வசூலிக்க தயாராகும் ஈரான், ஓமான் ஈரானிய இராணுவ நிர்வாகத்தின் கீழ் அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்று தெஹ்ரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, கூறினார். இதன் பொருள், அந்த நீர்வழிப்பாதையின் மீதான தனது இறுக்கமான பிடியை ஈரான் முழுமையாகத் தளர்த்துமா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. தாங்கள் நேரடியாக ஈடுபட்டிருந்த பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிப்பதற்காக, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பிராந்திய அதிகாரியின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் ஈரான் மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளும் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கிறது. இதன்மூலம் திரட்டப்படும் பணத்தை ஈரான் புனரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் என்றும் அந்த அதிகாரி கூறினார். நீரிணையின் மீதான கட்டுப்பாடு மட்டுமின்றி, அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் போர்ப் படைகளைத் திரும்பப் பெறுதல், தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட அதன் சொத்துக்களை விடுவித்தல் ஆகியவையும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரானின் கோரிக்கைகளில் அடங்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இராணுவத் திறன்கள், தலைமை மற்றும் அணுசக்தித் திட்டம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டைக் கடுமையாகத் தாக்கியுள்ளன. இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா அரபு அண்டை நாடுகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி, பிராந்தியத்தில் குழப்பத்தையும் மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆயுதங்களின் அதிநவீனத் தன்மைக்கோ அல்லது வான்வழியில் அவற்றின் ஆதிக்கத்திற்கோ ஈரான் ஈடாக முடியாது என்றாலும், பெப்ரவரி பிற்பகுதியில் போர் தொடங்கியதிலிருந்து நீரிணையின் மீதான அதன் இறுக்கமான பிடி உலகப் பொருளாதாரத்தைக் கலக்கி வருகிறது. மேலும், இந்த முட்டுக்கட்டையிலிருந்து ஒரு வழியைக் கண்டறியுமாறு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ட்ரம்ப் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. https://athavannews.com/2026/1471263- வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
அடியான் எடுத்துவிடுகிற கதைகளைக் கேட்டாலே சரியான கடுப்பாயிடுவேன். இரண்டாவது விமானியைத் தேடி வெறும் 24 அமெரிக்க வீரர்கள் காட்டுக்குள் ஒளிந்திருப்பதாகவும் அவர்களை ஆயிரக்கணக்கான ஈரானிய இராணுவத்தினர் சுற்றிவளைத்திருப்பதாகவும் ஒரு புலுடாவை விட்டார். உடனே பலர் வந்து "அழிந்தார்கள் அமெரிக்கர்கள்" என்று குதூகலித்தார்கள். பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய மதத்தவர்கள். மறுநாள் அமெரிக்க இராணுவம் அந்த விமானியைக் கடுமையான சண்டைக்கு மத்தியில் மீட்டுச் சென்றிருந்தது. தனது படையல் பிழைத்துப்போனதுபற்றி வாயே திறக்காத அடியான், அமெரிக்க வீரர்கள் ஈரானுக்குள் போகவே அஞ்சினார்கள், அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அவர்களைக் கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டார்கள் என்று ஒரு புதிய புலுடாவை விட்டார். அவரது அடியார்களோ அப்பாவித்தனமாக அவரது அவியலை சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்கள். இப்போது ஈரானுக்கு வெற்றி, வெற்றி, வெற்றிவேல், வீரவேல் என்று கம்பு சுத்திக்கொண்டு வருகிறார். எப்போதுபார்த்தாலும் அரைபோதையில் இருக்கும் இவரது உளறளை உண்மையென்று நம்பி ஏமாந்துபோகும் அப்பாவிகளை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. இதற்கு இப்படியொரு கோணமும் இருக்கின்றதா? ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களும், விமானியின் மீட்பும் அமெரிக்காவின் இராணுவ வல்லமையினைப் பறைசாட்டுவதாகவே எனக்குப் பட்டது. உக்ரேனுக்குள் ரஸ்ஸியா தவழ்ந்து தவழ்ந்து சேடையிழுக்கும் நிலையினையும், ஈரானுக்குள் அமெரிக்க நடத்தும் தாக்குதல்களின் வீரியத்தையும் பார்க்கும்போது உலகில் ஒரு வல்லரசே இருப்பது போன்ற உணர்வினையே தருகிறது. அப்படியிருக்க, தம்பர் அமெரிக்காவின் ஒற்றை வல்லரசுக் கனவினைச் சிதைக்க இப்போரைப் எப்படிப் பயன்படுத்த முடியும்?- வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
இதையும் தம்பருக்கு ஒருக்கா அனுப்பிவிடுங்கோ ...தம்பருக்கு தமிழில் விளங்கியாவது ரோசம் வருகுதா என்று பார்ப்பம் ...அடியானும் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காளியாம்- திடீரென யாருக்கும் தெரியாமல் மறைந்து போய்விட வேண்டும் - ஜி உமாஜி
"திடீரென்று யாருக்கும் தெரியாமல் எந்த அடையாளமுமே இல்லாமல் மறைந்து போய்விட வேண்டும்" - நண்பன் ஒருவன் அவ்வப்போது சாதாரணமாகக் கூறும் வார்த்தைகள்! அவனையறிந்த, அவன்வாழ்வின் அத்தனையும் தெரிந்த என்னிடம் எந்த வார்த்தையும் இருப்பதில்லை! தனது அம்மா, அப்பா வெளியே சென்று திரும்பி வந்து கதவைத் திறக்கும்போது தூக்கில் தொங்கிய நிலையில் தன்னைக் காணவேண்டும் என உறுதியாக ஒருமுறை சொன்னான். அவனுக்கு அறிவுரை சொல்ல எல்லாம் எந்த அவசியமுமில்லை. சற்று நேரம் அமைதியாகச் சென்றது. "ஒரு பழிவாங்கல் அல்லது வாழ்நாள் அதிர்ச்சியைக் கொடுக்கவேண்டும் என நினைக்கிறாயா?" "இல்லை வாழ்நாள் துயரத்தை" என்றான். வாய்ப்பில்லை எனத் தோன்றியது. ஆனால் சொல்லவில்லை. பிறகு அவன் சொன்னான் "இல்லை. நான் அதை செய்ய மாட்டேன். எனக்காக அவர்கள் துயருறுவதை என் உடலைப் பார்த்து அழும் காட்சியைக் கற்பனை செய்தேன். அப்படி ஒரு துயரை அது என்னால் கொடுக்க முடியாது." "நல்லது. நானும் ஒரு காட்சியைக் கற்பனை செய்தேன். அது உன் முடிவை இன்னும் உறுதியாக்கும். அதைக் கற்பனை என்றுகூடச் சொல்ல முடியாது. அதுதான் உண்மை. எல்லா இடங்களிலும். எல்லாருக்குமே!" "என்ன அது?" "உன் உடல் அங்கே இல்லை. அடக்கமாகி விட்டிருக்கலாம். அது இங்கே முக்கியமில்லை. அழுது அழுது ஓய்ந்து களைத்துப் பின் தெளிந்து கண்களைத் துடைத்துக்கொண்டே உன் அம்மா பக்கத்திலிருந்த பெண்மணியிடம் மெதுவாகக் கேட்கிறார், "இண்டைக்கு ஆராம் சாப்பாடு?" சிரித்தோம். அவ்வளவுதான்! அப்படித்தான் நாங்கள் பேசிக்கொள்ளும் வழக்கம். பிறகு ஒருமுறை அவன் மிகத் தீவிரமான முடிவில் இருந்தபோது நான் தடுத்துவிட்டிருந்தேன். அவ்வப்போது சொல்வான், உன்னால்தான் நான் உயிருடன் இருக்கிறேன் என. நான் ஊரை விட்டு வந்த பின்பும் அவ்வப்போது பேசும்போதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தான். பின்னொரு நாள் அவன் எந்த அறிவித்தலுமின்றிக் காணாமல் போய்விட்டான். எந்தத் தடயமுமின்றி மறைந்து விட்டான். வருடங்கள் கழித்து அவன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மெலிதான கேற் திறக்கும் சத்தத்துக்கே வராந்தாவுக்கு வந்துவிட்டிருந்த அவன் அம்மா முகத்தில் ஆச்சரியம் மகிழ்ச்சிக்கு முதல் ஒரு சிறு ஏமாற்றம் தோன்றி மறைந்தது. வயதான இளைஞனாகவே பார்த்த அவன் அப்பா இயல்புக்குமீறி மிக அதிகமாகவே தளர்ந்து போயிருந்தார். எந்த உணர்ச்சிகளையும் காட்டாது மிக நிதானமாகப் பேசுவது மட்டும் மாறவில்லை. கண்கள் மட்டும் சிறு சலனத்துடன் அலைபாய்ந்து கொண்டிருந்ததுபோல் தோன்றியது. அப்படி அவரைப் பார்த்ததேயில்லை. வெளியில் கேட்கும் சிறு சத்தத்துக்கும் பார்வை சடுதியாக வெளிக்கதவு சென்று மீண்டது. அவர் அமைதியைக் குலைத்தது, அலைக்கழிக்கிறது எனத் தெரிந்தது. ஏதோ எதிர்பார்ப்பையும் உடனடி ஏமாற்றத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தது. விடைபெற்று வந்து அதீத கவனத்துடன் மிக மெதுவாக எந்தச் சிறு சத்தமும் எழுந்துவிடாதபடி கேற்றை மூடினேன். முன்பு அவனை நான் தடுத்திருக்க வேண்டாமெனத் தோன்றியது. https://www.facebook.com/share/p/1AwbB2b8CC/- வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
இங்கே… கோஷானின் சதி கோட்பாடான… தம்பர் ஒரு ரஸ்ய ஏஜெண்ட், அவர் அமெரிகாவின் ஒற்றை வல்லரசு நிலையை உடைக்க வென அம்ந்ரிக்காவுக்குள் ரஸ்யா அனுப்பிய Trojan horse … என்பதை பொருத்தி பாருங்கள்…. இதுதான் இந்த போர் ஆரம்பிக்க பட்டதன் உண்மையான காரணமாய் இருக்கலாம்.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால் வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால் -வாலி- 😂😂😂 பொதுவாக நல்ல விடயங்கள் அதிக நாள் ஆனாலும், சிறியது போலவும்… கடுப்பானவை சில நேரமே ஆனாலும் யுகம் போலவும் இருக்கும் என்பார்கள்😂😂😂- வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் பல மர்மங்கள் இருக்கின்றன. ஏனென்றால், அமெரிக்க முன்னர் முன்வைத்த 15 அம்சக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்த ஈரான் தன் பங்கிற்கு 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. இவற்றுள் ஈரானில் இருக்கும் 416 கிலோகிராம் 60 வீதம் செறிவூட்டப்பட்ட யுரேணியத்தைப் பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை. அதேவேளை ஈரான் மீதான தாக்குதல் இனிமேல் இடம்பெறக்கூடாது, ஈரான் மீதான சர்வதேசத் தடைகள் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும், ஈரானின் ஆதரவு நாடுகளையோ அமைப்புக்களையோ தாக்கக் கூடாது, ஹோர்மூஸ் நீரிணை மீதான ஈரானின் செல்வாக்குத் தொடர்ந்தும் இருக்கும், ஒவ்வொரு கப்பலுக்கும் தலா இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை அறவிடுவோம், அதனை இன்னொரு நாட்டுடன் பகிர்ந்துகொள்ள முடியும் மீதியை ஈரானின் மீள்கட்டுமாணத்திற்காகப் பயன்படுத்துவோம் என்றெல்லாம் ஈரான் கோரியிருந்தது. ஈரான் முன்வைத்த கோரிக்கைகளை பார்ப்பவர்களுக்கு அமெரிக்காவோ இஸ்ரேலோ நிச்சயமாக இதற்கு உடன்படப்போவதில்லை என்று தெரிந்திருக்கும். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்கா இக்கோரிக்கைகளை "நல்ல யோசனைகள், இதனை அடிப்படையாக வைத்து, தொடர்ந்து பேசலாம்" என்று ஏற்றுக்கொண்டு இருவார யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால், இந்த யுத்தநிறுத்தம் தனக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்றும், ஈரானின் பலம் சர்வதேசத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும், தனது அணுவாயுதச் செறிவூட்டல் நடவடிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றும், ஹோர்மூஸ் நீரிணை மீதான ஈரானின் ஆதிக்கத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றும் ஈரான் கூறத் தொடங்கியிருக்கிறது. இது போதாதென்று இஸ்ரேல் மீதும் இன்னும் சில வளைகுடா நாடுகள் மீதும் ஏவுகணைத் தாக்குதல்கள் யுத்த நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் நடந்திருக்கின்றன. ஈரானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு யுத்த நிறுத்தத்திற்குச் செல்வதென்றால், இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்கள் எதுவுமே இதுவரை அடையப்படவில்லையே? அணுவாயுதக் களைவு, அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புக்களுக்கான உதவிகளை நிறுத்துதல் முதற்கொண்டு எதுவுமே நடைபெறவில்லையே? முன்னரே திறந்திருந்த ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டு மீளவும் திறக்கப்பட்டிருக்கிறது. என்னவோ செய்துவிட்டுப் போகட்டும். தம்பருக்கு மரை கழன்றுவிட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.- அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
சமாதானத்தக்காக பாகிஸ்தான் மட்டுமல்ல எகிப்து துருக்கியும் சேரந்தே உழைத்ததாக சொல்கிறார்கள்.- ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது
நீங்கள் நான் சொன்ன கருத்தை விளங்கி கொள்ளவே இல்லை. மீண்டும் ஒரு தடவை சொல்கிறேன். கனடாவில் பல ஆயிரம் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப், நிக்காப் கூட அணிவது சர்வ சாதாரணம். கொமெய்னியினால் உருவாக்கப்பட்ட ஈரான் அரசு, ஈரானில் இதை கடுமையான சட்டம் மூலம் அமல் படுத்துகிறது. கமெய்னியின் பூட்டி ஈரானில் இருக்கும் போது இந்த சட்டப்படிதான் உடை உடுத்த வேண்டும். அதே உடையை அவர் கனடாவிலும் உடுத்தலாம். ஆனல் அவர் மேற்கத்திய பாணியில் உடை அணிகிறார். அவரின் தாயார் அதை போட்டோஷொப் பண்ணி பேஸ்புக்கில் போடுகிறார். இதைதான் நான் ஈரானிய அதிகாரவர்க்கத்தின் ஹிப்போகிரசி என்கிறேன். சகோதரி மாஷா அமினியை அடித்து கொண்டவ அதிகார வர்க்கம், அவர்களின் பூட்டிகளுக்கு மட்டும் ஆடை சுதந்திரத்தை வெளி நாட்டுக்கு அனுப்பி கொடுக்கிறது. இதுதான் என் கருத்து. இதில் நீங்கள் ஏன் diplomatic protocol, politically exposed person போன்றவற்றை இழுத்தீர்கள் என புரியவில்லை. இப்படி ஒரு diplomatic protocol இல்லை, இந்த பெண் ஒரு politically exposed person உம்மில்லை என்கிரேன் நான். ஆனால்… அப்படியே உங்கள் வாதப்படி பார்த்தாலும் இவை இரெண்டும் இருந்தால் - அது இந்த பெண் கனடாவில் இஸ்லாமிய உடை அணிவதைதான் உறுதி செய்யும். மாறாக அவர் மேற்கத்திய உடை அணிய வேண்டும் என வற்புறுத்தாது. புரிகிறதா? - இந்தியப் படகுகளிலிருந்து அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள் ஏலம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.