Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இரான்: பள்ளி தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளுக்கு இறுதிச்சடங்கு - தாய், தந்தையர் கண்ணீர் பட மூலாதாரம்,ISNA/WANA via Reuters கட்டுரை தகவல் கேப்ரியலா போமராய் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் தெற்கு இரானில் உள்ள ஒரு பள்ளியின் மீது அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இரானிய அதிகாரிகள் கூறும் நிகழ்வில் கொல்லப்பட்ட மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. மினாப் நகரில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இரானின் ராணுவத் தளங்கள் மற்றும் தலைமையை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் பரவலான தாக்குதல்களை நடத்தியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ள உயிரிழப்பு எண்ணிக்கையை பிபிசி நியூஸால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. அந்தப் பள்ளி இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளத்திற்கு அருகில் அமைந்திருந்தது. இந்தச் சம்பவம் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம், அந்தப் பகுதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் "தெரியவில்லை" என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த இறுதிச் சடங்கில், நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்டனர். தங்கள் மகள்களை இழந்த தாய்மார்கள் மற்றும் தந்தையரின் துயரத்தை பின்னணியில் ஒருவர் விவரித்துக் கொண்டிருக்க, இஸ்லாமியக் குடியரசின் தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் கூட்டத்திற்கு நடுவே சுமந்து செல்லப்பட்டன. பட மூலாதாரம்,Shutterstock ஐஆர்ஜிசி தளத்திற்கு அருகே பள்ளி இருந்தது சனிக்கிழமை காலை பள்ளியை மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு ஐஆர்ஜிசி தளத்திலிருந்து சுமார் 600 மீட்டர் (1970 அடி) தொலைவில் அமைந்திருந்தது. இரானில் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான ஆறு நாட்கள் வேலை நாட்களாகும், வெள்ளிக்கிழமை மட்டுமே அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாகும். அப்படி என்றால், தாக்குதல் நடந்தபோது பள்ளியில் மாணவர்கள் இருந்திருக்கக் கூடும். இந்தச் சம்பவத்தை "காட்டுமிராண்டித்தனமான செயல்" என்றும், "ஆக்கிரமிப்பாளர்கள் செய்த எண்ணற்ற குற்றங்களின் பதிவில் மற்றொரு கருப்புப் பக்கம்" என்றும் இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் அழைத்தார். நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, 160 பேருக்காகக் கல்லறைகள் தோண்டப்படும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, " டிரம்ப் வாக்குறுதி அளித்த 'மீட்பு' என்பது உண்மையில் இப்படித்தான் இருக்கிறது" என்று கருத்துத் தெரிவித்துள்ளார். வெடிப்புச் சம்பவத்திற்குப் பிந்தைய காட்சிகளை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வீடியோக்களில், மக்கள் பீதியில் அலறிக் கொண்டிருக்க, ஒரு கட்டிடத்திலிருந்து புகை எழுவதும் அதன் அருகே மக்கள் கூடி நிற்பதும் தெரிகிறது. பட மூலாதாரம்,Mehr News/WANA via Reuters படக்குறிப்பு,பள்ளியின் இடிபாடுகளுக்குள் உயிர் பிழைத்தவர்களை உள்ளூர் மக்களும் மீட்புப் பணியாளர்களும் தேடிய காட்சி. பள்ளியை அமெரிக்க ஏவுகணை தாக்கியதா? ரூபியோ பதில் சர்வதேச செய்தி நிறுவனங்கள் இரானுக்குள் சென்று தகவல்களைச் சேகரிப்பதை, அந்நாடு விசா வழங்க மறுப்பது கடுமையாகக் மட்டுப்படுத்துகிறது. திங்களன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், அந்தப் பள்ளி கட்டடம் அமெரிக்க ஏவுகணையால் தாக்கப்பட்டதா என்று பிபிசி கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த ரூபியோ, "அமெரிக்கா வேண்டுமென்றே ஒரு பள்ளியை இலக்கு வைக்காது. பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, சொல்லப் போனால் அதற்கான தூண்டுதலும் இல்லை," என்று கூறினார். "எதனால் இது நடந்தது என்பது குறித்த விவரங்கள் என்னிடம் இல்லை, ஆனால் அமெரிக்கா ஒரு பள்ளியை இலக்கு வைக்காது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது," என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க ஊடகங்களில் வெளியான அறிக்கையின்படி, அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மைய செய்தித் தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், "இந்த அறிக்கைகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்" என்றார். "பொதுமக்களை பாதுகாப்பது மிக முக்கியமானது, எதிர்பாராத பாதிப்புகளை குறைக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்"எனவும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre00zdz9y0o
  3. சூழல் மாசு பற்றி உங்களின் அனுபவங்கள் ........எழுதுங்கள் . .....! வசந்தம் வரமுதலே இந்த ஒவ்வாமைக்கு ஒரு ஊசி இங்கு போடுவார்கள் இலவசமாக ........அதனால் அது அவர்களுக்கு கொஞ்சம் சுகமாய் இருக்கும் . ...... அங்கு அப்படி இல்லையா .........!
  4. ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு Mar 4, 2026 - 11:40 AM காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை விமானப்படை கண்காணிப்பு விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இதனிடையே, இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த கப்பல் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகவில்லை என்று தெரிவித்தார். குறித்த கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாக கடற்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
  5. மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! துபாய் வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL231 விமானங்களும், துபாயிலிருந்து கொழும்புக்கு UL232 விமானங்களும் இன்று இயக்கப்படும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமலில் இருக்கும். சேவைகள் படிப்படியாக மீட்டெடுக்கப்படுவதால், பயணிகளின் பாதுகாப்பு அதன் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று விமான நிறுவனம் வலியுறுத்தியது. https://athavannews.com/2026/1467109
  6. இருக்க முடியாது இலங்கையில் இருப்பது salafi (சுனியில் ஓர் பகுதி) இஸ்லாம். அனால் 100% என்று இல்லை முஸ்லிம்கள் இருந்து வந்த பகுதியில் (இப்போதைய தமிழ்நாடு, கேரளம், ஆந்திராவின் தென் பகுதி) அப்போதே salafi வந்து விட்டது . இது ஒரு காரணம், தென்னிந்த்திய, இலங்கை, ஏன் இந்தோனேசிய மற்றும் அந்த பகுதியில் உள்ள முஸ்லிகள், modernity ஐ இலகுவாக உள்வாங்குவது. ஏனெனில் ஸலபி இஸ்லாம், சுனி இஸ்லாமை (மறு)சீரமைப்பது. இரான் ஷியா தலைமையை வெறுத்து ஒதுக்கி இருக்கும். 80 களில் தானே சவூதி, மத்தியகிழக்குக்கு (வேலைக்கு) போக தொடங்கியது. இதிலே தான் முஸ்லிம்கள் Wahhabism தின் செல்வாக்கின் கீழ் வந்து இருக்க கூடிய சாத்திய கூறுகள்
  7. Today
  8. இரான் விடயத்தில் இங்கு சிலருக்கு காமாலைக் கண். விவிலியாக் கிருமிகளின் பிரச்சாரத்தை அப்படியே எந்தக் கேள்வியும் ஏற்று, இப்பொது தாம் சொல்வது ஈரானுக்கு பொருந்துகிறது என்பதை கூட புரிய முடியாத, புத்தி மழுங்கி, உறைந்து போன நிலை. 6 நாடுகள் ஐ,நா சார்பாக சேந்து போட்ட ஒப்பந்தத்தை, இரான் எந்த குழப்பம்ம் இன்றி ஒத்துழைத்து , அமுல்படுத்த, ஒப்பந்தப்படி நீக்கப்படவவேண்டிய பொருளாதார தடைகளை நீக்காது, மேலும் இறுக்கி, US விவிலிய பிரளய கிருமி கிழித்து எறிந்து , ஐரோப்பிய விவிலிய பிரளய கிருமி வால்களுக்கும் அந்த கிழிப்புக்கு உடன்பட்டு ... சரி அதை விடுவோம், அவர்கள் (கள உறுப்பினர்கள்) சொல்லுவது அந்தந்த நாடுகள் தொழில்நுட்பத்தை அதுவுமாக வளர்த்தால் வைத்த இருக்கலாம் இரான் அதுவாக விருத்தி செய்த அணுசெறிவாக்கால் தொழில்நுட்பம். ஐ.நாவின் இறுக்கமான கண்கண்ணிப்பின் கீழ் வைத்து இருக்கலாம் என்றே முடிகிறது. இங்கே சிலர் சொல்லுவது, இரான் அதுவாக அந்த தொழில்நுஉட்பத்தை விருத்தி செய்யவில்லை என்பது, மேற்றுகின் , us, இஸ்ரேல் விவிலிய பிரளய கிருமிகளின் பிரசாரத்தை ஒப்புவித்து சொல்ழும் முழுப்பொய். ஏன் ஈரான் அதுவாக வளர்த்த மரபு ஏவுகணை தொழில்நுட்பத்தை கைவிட்ட வேண்டும்? ஏனெனில், இவற்றுறை எடுத்து விட்டு இரானை தாக்கி அழித்து, நான் முன்ப சொன்ன சமூகத்தை அழிப்பது, நலிவடையச்செய்து, உள்ளனர் குழப்ப / யுத்த விளிம்பில், வளங்களை, நிதிஅமைப்பு போன்றவற்றை இந்த விவிலிய பிரளய கிருமிகளின் கட்படின் கீழ் கொண்டு வந்து, வெற்றுக் கோது பொம்மை நிர்வாகத்தை உருவாக்கி, இஸ்ரேல் எந்த நேரத்திலும் தாக்க கூடிய நிலை, தாக்கப்படும் நாடு திருப்பி தாக்க முடியாத நிலையில் கொன்டு வருவது. இப்பொது நிலைமை அமெரிக்கா, குர்திஸ் ஐ இறக்கி ஆட்சி கவிழ்ப்பை இரானில் நடத்த ஆயத்தம் செய்ய. அறிந்த ஈரான் குர்திஸ் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தி உ ள்ளது. (தனிப்பட்ட முறையில் இரானுக்கு எனது பிரார்தனைகள், இறை பலத்தை வழங்குமாறு, அமெரிக்கா, ஐரோப்பிய, இஸ்ரேல் விவிலிய பிரளய கிருமிகளை இந்த பூமியில் இருந்து சுவடுகள் இல்லது அழிப்பதற்கு.) இரான் இவர்களை அழிக்காது விட்டால், இந்த பூமியில் மனித வர்க்கமும், வாழ்வும் அழிக்கப்படும். கீழே இருக்கிறது காரணம் - அமெரிக்கா, மேற்கு, இஸ்ரேல் விவிலிய பிரளய கிருமிகளின் ன்மையான திட்டத்தை இஸ்ரேல் இப்போது வெளியில் சொல்லி இருக்கிறது. அனால், இதை இங்கே முதலே நான் சொல்லிவிட்டேன். கீழே இருக்கும் யூகோடிபே வீடியோ, நான் முதலில் சோனா மேற்கு, us , இஸ்ரேல் விவிலியக் பிரளயக் கிருமிகள், apocalyptic evils, துருக்கி, பாகிஸ்தானை அழிகக்கும் திட்டம், இஸ்ரேல் வெளியில் இப்போது சொல்லி ள்ளது இதை இந்த வீடியோ ஐ பார்த்து சொல்லவில்லை, முதலே நான் சொல்லிவிட்டேன். (அதாவது என்ன நடக்கிறது என்பதை நாடிபிடிக்க தெரிந்ததால்) புதிய தகவல் US படை தலைமையிலும் இந்த விவிலிய பிரளய கிருமித்தன்மை தொற்றி இருப்பது
  9. அமெரிக்காவின் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் மாணவி பலி! Published By: Vishnu 04 Mar, 2026 | 03:24 AM அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆவார். ஆஸ்டினில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இந்திய-அமெரிக்க மாணவி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 53 வயதான நிடியாகா டியாக்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடையில் ஈரானியக் கொடி வடிவமைப்பும் "அல்லாஹ்வின் சொத்து" என்ற வாசகங்களும் இருந்தன என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வார இறுதியில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிய மோதல் வெடித்த நிலையில், துப்பாக்கிச் சூடு மற்றும் தற்போது உயிரிழந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் ஈரானுடனான தொடர்புகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240100
  10. ஈரானில் 1,000 பொதுமக்கள் உயிரிழப்பு - மனித உரிமைகள் குழு தெரிவிப்பு 04 Mar, 2026 | 09:27 AM கடந்த 28 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன. இந்த தாக்குதலில் ஈரானில் சிறுவர்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையான காலப்பகுதியில் 181 சிறுவர்கள் உட்பட குறைந்தது 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அத்துடன், 100 சிறுவர்கள்உட்பட 5,400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தக் குழு தனது அறிக்கை முதற்கட்டமானது எனவும், மேலும் நூற்றுக்கணக்கான இறப்புகளைச் சரிபார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/240103
  11. இப்படி எல்லாருக்கும் ஒரு தூசண சொல்லில் ஒரு எழுத்தை மாத்தி விட்டு எழுத முடியும் புலவர். நீங்கள் மேலே சொன்ன சொல்லை சமூகவலைதளங்களில் நாதக காவாலிகள் எப்படி பயன்படுத்துவது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. உங்கள் பெயரை கூட இப்படி விரசமாக் எழுத முடியும். இதைத்தான் செய்ய வேண்டாம் என நீங்கள் அறிவுத்தப்பட்டீர்கள். அதன் பின்னும் செய்து குட்டு வாங்கினீர்கள். இப்போதும் விளங்காத மாதிரி நடித்து கொண்டு அதையே செய்கிறீர்கள்😂. ஏன் இந்த சின்ன பிள்ளைதனம்? மட்டுறுதினர் பார்வையில் விடப்படுவீர்கள் என எச்சரிக்க பட்ட பின்னும் இது தொடர்ந்தால் நிர்வாகம் என்ன செய்ய முடியும்? அப்படி ஏதும் செய்தால் அதை நிர்வாக எதேச்சாதிகாரம் என்பீர்கள். மட்டுறுதினர் பார்வையில் விடப்படுவது எவ்வளவு அசெளகரியமானது என்பதை இதற்கு உள்ளாகி இருக்கும் சக தம்பி ஒருவரிடம் தனி மடலில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் 😂
  12. மேலே தெளிவாக சொல்லி உள்ளேன். இன்னும் அடைய வேண்டிய தூரம் அதிகம் ஆனால் இதுவரை அடைந்து விட்ட தூரமும் கணிசமானதே. ஒரு சின்ன உதாரணம். தமிழ் நாட்டு கிரிகெட் அணி. இதில் உள்ளூர் போட்டிகளில் விளையாட கூட அதிகம் பிராமணர் ஆதிக்க சாதியினர்தான் தேர்வாகிறனர். தமிழ் நாட்டு கிரிகெட் நிர்வாகம் மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை. இதையே மாநில அரசின் கையில் இருக்கும் ஒரு அமைப்பில், துறையில் பார்த்தீர்களானால் பல பிற்படுத்த, மிகவும் பிற்படுத்தபட்ட, பட்டியல் இன மக்கள் எல்லாம் இருப்பார்கள். மாநில (திராவிட) கட்சிகள் ஆட்சிக்கு வந்திராவிடில் கிரிகெட் போலவே ஏனைய தமிழ்நாட்டு நிறுவனங்களும் இருந்திருக்கும். இதுதான் சாதி எதிர்ப்பு சாதித்தது.
  13. முழு ஆவணம்:
  14. தென்னாபிரிக்கா முற்று முழுதான அணி. அவர்களை குறைத்து எடைபோட்டு விட்டேன். இந்தியா, அவுஸ்திரேலியாவோடு ஒரே குழுவில் வந்ததால், அவர்கள்தான் அரை இறுதிக்கு வரமாட்டார்கள் என்று தெரிவு செய்துவிட்டேன். அவர்கள் அந்த chockers என்ற நிலையிலிருந்து மீண்டுவிட்டார்கள். அவர்கள்தான் வெல்வதற்கு வாய்ப்புக் கூட.
  15. கவனமாக இருங்கள். உடம்பைக் கவனியுங்கள் சுவை.
  16. Yesterday
  17. வளர்ந்துவிட்ட இந்திய வல்லரசினதும், குட்டி வல்லரசாக மாறிவரும் சிறிலங்கவினதும் ஆழம் புரியாது நகைச்சுவையா? இவர்களது ஒத்திகையை அடுத்து றம்பே சற்றுத் தயங்கிநிற்பதாகப் பிந்திய செய்திகள் கூறுகின்றனவாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. எண்ணை விலைகூடீட்டாம், தட்டுப்பாடு வரப்போகிதாம். திரும்பி போகும்போது எண்ணை வாங்கிக்கொண்டு செல்லுங்கள்.
  19. விகாரையில் கடத்திவிடப்படும் சிறுவர்களை பராமரிக்கவும் இல்லம் அமையுங்கள். அறியாத வயதில் வறுமை காரணமாக பெற்றோரால் கடத்திவிடப்படும் சிறுவர், தாங்கள் விரும்பாமலேயே தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே பிக்குகளாக மாற்றி விடப்படுகிறார்கள். அவர்களுக்குள் எத்தனையோ திறமைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருந்தாலும் யாரும் அதை ஏற்றுக்கொள்வதில்லை, தங்கள் எண்ணங்களை திணித்து விடுகிறார்கள். தங்களின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாதவர்கள், தங்களை ஏற்றுக்கொள்ளாத உலகில் அவர்களால் எதை சாதிக்க முடியும்? விரும்பாமலேயே மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களும் சிறுவர்களுக்குரிய குறும்புத்தனம், விளையாட்டுகளை செய்து, சுயமாக கல்வி கற்று, அறிவு தெளிந்து தாங்களாகவே விரும்பிய துறையை தெரிவு செய்யும் வயதுவரை அவர்களை பராமரிப்பதற்கு இல்லங்கள் நிறுவப்படவேண்டும். அப்பொழுதே அறிவுள்ள, பண்புள்ள மத தலைவர்களை உருவாக்க முடியும், உருவாகுவார்கள்.
  20. ம், எரிக் சொல்ஹெய்ம் சாதித்து விட்டுப்போன மிகுதியை தொடரும்படி பேசுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதில்லை, பேசுவதில்லை. இதில அவர்களின் பிரச்சனை என்னவென்று விளங்கப்படுத்துவர்? மக்களால், கட்சியால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்ல வெட்கம், அதனால் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எனும் பதவியை அடாத்தாக பற்றிப்பிடித்துக்கொண்டு படம் போட்டு அலைகிறார்கள் ஒவ்வொரு தூதுவர்களுக்கும் பின்னால். ஒரு தூதுவரையும் வெளியில் நடமாட விடுவதில்லை. அவர்கள் இனி தூதுவர் வெளியில் சென்றிருக்கிறார் எனும் அறிவித்தலை கதவில் மாட்டி விடப்போகிறார்கள். "ஆடின காலும் பாடின வாயும் சும்மா கிடவாது."
  21. எனக்கு தெரிந்தவர்கள் சில ஈரானியர்கள் அவர்கள் அத்தனை பேருமே பயங்கர கொடிய அசுரன் ஒழிந்ததாக கொண்டாடுகின்றனர் ஒறிஜினல் முஸ்லிம்கள் அப்படி கொண்டாட பின்பு மதம் மாறிய இலங்கை இந்திய முஸ்லிம்களின் போக்கு 😭 அவ்வளவு மத வெறி . இந்தியாவில் சென்னையில் திருமாவளவன் கண்டண போராட்டம் நடத்தினாராம் நல்ல காலம் இதுவரை சீமான் அப்படி ஒன்றும் நடத்தவில்லை .இங்கே ஈழத்து எப்போது தமிழன் வேறு 😄
  22. ஏமனில் வான்வழித் தாக்குதல்களில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஹவுத்திகளுடன் அமெரிக்கா போர்நிறுத்தத்தை ஒப்புக்கொண்டது. இந்தக் கட்டுரை 9 மாதங்களுக்கும் மேலானது. செங்கடலில் வணிகக் கப்பல் போக்குவரத்தை குறிவைப்பதை நிறுத்த ஹவுத்திகள் ஒப்புக்கொண்டுள்ளனர், ஆனால் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்றார். பீட்டர் பியூமாண்ட் புதன் 7 மே 2025 04.34 AEST பகிர் கூகிளில் கார்டியனை விரும்புங்கள் ஈரானுடன் இணைந்த குழு செங்கடலில் கப்பல் போக்குவரத்தை குறிவைப்பதை நிறுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து, ஏமனின் ஹவுத்திகளுக்கு எதிரான குண்டுவீச்சு பிரச்சாரத்தை அமெரிக்கா நிறுத்தும். கனடாவின் பிரதமர் மார்க் கார்னி உடனான ஓவல் அலுவலக சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த இந்த நிறுத்தம், ஞாயிற்றுக்கிழமை டெல் அவிவின் பென் குரியன் விமான நிலையத்தின் சுற்றளவுக்குள் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, தரையில் இருந்த மூன்று சிவிலியன் விமானங்கள் உட்பட, ஏமனின் முக்கிய விமான நிலையத்தை இஸ்ரேல் தனது ஜெட் விமானங்கள் முழுமையாக முடக்கியதாகக் கூறிய நாளில் வந்தது. "ஹவுத்திகள் ... இனிமேல் சண்டையிட விரும்பவில்லை என்று அறிவித்துள்ளனர். அவர்கள் சண்டையிட விரும்பவில்லை. நாங்கள் அதை மதிக்கிறோம், குண்டுவெடிப்புகளை நிறுத்துவோம், அவர்கள் சரணடைந்துவிட்டார்கள்," என்று டிரம்ப் கூறினார். அவர் ஒப்பந்தத்தின் குறைந்தபட்ச விவரங்களை வழங்கினார் மற்றும் அவர் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டதை மறுத்தார். "நாங்கள் இப்போதுதான் அதைப் பற்றிக் கண்டுபிடித்தோம். எனவே அது மிகவும், மிகவும் நேர்மறையானது என்று நான் நினைக்கிறேன்... நான் அவர்களின் வார்த்தையை ஏற்றுக்கொள்வேன், மேலும் குண்டுவெடிப்பை நிறுத்தப் போகிறோம்... உடனடியாக அமலுக்கு வரும்," என்று அவர் கூறினார். அமெரிக்காவிற்கும் ஹவுத்திகளுக்கும் இடையிலான தொடர்புகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் ஓமன், செங்கடலில் "கடல் போக்குவரத்து சுதந்திரத்தை" உறுதி செய்யும் என்று கூறிய இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியது. ஓமானின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைடி ஒரு ஆன்லைன் அறிக்கையில் கூறியதாவது: “சமீபத்திய விவாதங்கள் மற்றும் தொடர்புகளைத் தொடர்ந்து... பதற்றத்தைத் தணிக்கும் நோக்கத்துடன், இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.” அவர் மேலும் கூறினார்: “இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குறிவைக்க மாட்டார்கள் ... செங்கடலில் சுதந்திரமான வழிசெலுத்தல் மற்றும் சர்வதேச வணிகக் கப்பல் போக்குவரத்தை சீராக ஓட்டுவதை உறுதிசெய்வது”. ஹவுத்திகளிடமிருந்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் இல்லை, ஆனால் கிளர்ச்சியாளர்களின் அரசியல் தலைவர் மஹ்தி அல்-மஷாத், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று கூறினார். ஹவுத்திகளின் பதில் "இஸ்ரேலிய எதிரி தாங்கக்கூடியதை விட அதிகமாக இருக்கும்" என்று மஷாட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கடந்த வாரம் பிரிட்டிஷ் படைகளின் பங்களிப்புடன் ஏமன் மீதான வான்வழித் தாக்குதல்கள் சமீபத்தில் தீவிரப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது . அந்தத் தாக்குதல்களில் சில பொதுமக்களின் உயிர்களையும், ஹவுதி போராளிகளின் உயிரையும் பறித்தன. 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனிய போராளிக்குழு இஸ்ரேல் மீது நடத்திய கொடிய தாக்குதலுக்குப் பிறகு, காசாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து ஹவுத்திகள் இஸ்ரேல் மீதும், செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். மார்ச் மாத நடுப்பகுதியில் டிரம்ப் நிர்வாகம் தனது நடவடிக்கையைத் தொடங்கியது , அவ்வப்போது நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு, ஏமனுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. அப்போதிருந்து அமெரிக்க இராணுவம் ஏமனில் "1,000 க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக" கூறுகிறது, ஹவுத்தி போராளிகள் மற்றும் தலைவர்களைக் கொன்றதாகக் கூறுகிறது, "மூத்த ஹவுத்தி ஏவுகணை மற்றும் UAV அதிகாரிகள் உட்பட, அவர்களின் திறன்களைக் குறைத்துவிட்டதாகவும்" கூறுகிறது. கடந்த வாரம் சாடாவில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கான தடுப்பு மையத்தை அமெரிக்கா தாக்கியதாகவும் , குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறியது உட்பட, ஏராளமான பொதுமக்கள் இறப்புகள் பதிவாகியுள்ளன . ஏப்ரல் 18 ஆம் தேதி ராஸ் இசா எரிபொருள் துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர். அமெரிக்க வணிக மற்றும் கடற்படைக் கப்பல்கள் மீதான ஹவுத்தி தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் வாதிட்டுள்ளது. ஆறு வார பிரச்சாரத்திற்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவையில்லை என்பதை அவர்கள் மறுத்துள்ளனர். ஹவுத்திகளின் தாக்குதல்கள், உலகின் கப்பல் போக்குவரத்தில் சுமார் 12% ஐ பொதுவாகக் கொண்டு செல்லும் ஒரு முக்கிய பாதையான சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் செல்வதைத் தடுத்துள்ளன. காசா போர் தொடங்கியதிலிருந்து ஹவுத்திகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகமாக உள்ளன - அவர்கள் மீது தாக்குதல்களைத் தொடங்கியதாகக் குழு கூறியது - ஆனால் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு அருகில் ஹவுத்தி ஏவுகணை விழுந்ததிலிருந்து மேலும் அதிகரித்துள்ளது, இதனால் திங்களன்று ஏமனின் ஹொடைடா துறைமுகத்திலும் செவ்வாயன்று சனா விமான நிலையத்திலும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடந்தன. ஏமனுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க், இரு தரப்பினரும் நடத்திய தாக்குதல்கள் "ஏற்கனவே பலவீனமான மற்றும் நிலையற்ற பிராந்திய சூழலில் கடுமையான அதிகரிப்பைக்" குறிக்கின்றன என்றார். படத்தை முழுத்திரையில் காண்க ஹொடைடாவில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்கிறார்கள். புகைப்படம்: அல்-மசிர்சா தொலைக்காட்சி/EPA. ஏமனின் பிரதான விமான நிலையத்தின் மீதான வான்வழித் தாக்குதல் தங்கள் விமானப் பயணத்தை முடக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாயன்று கூறியது. "பென் குரியன் விமான நிலையத்தின் மீது ஹவுத்தி பயங்கரவாத ஆட்சி நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது" என்று இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "விமான நிலைய ஓடுபாதைகள், விமானங்கள் மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டன," என்று அது மேலும் கூறியது. தாக்குதல்களால் விமான நிலையம் "முற்றிலும் அழிக்கப்பட்டது" என்று யேமன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "யேமன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான ஏழு விமானங்களில் மூன்று சனா விமான நிலையத்தில் அழிக்கப்பட்டன, மேலும் சனா சர்வதேச விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது" என்று அந்த அதிகாரி கூறினார். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இந்த தாக்குதலை "ஈரானிய ஆக்டோபஸின் தலைக்கு" ஒரு எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என்று கூறினார், இஸ்ரேலுக்கு எதிரான ஹவுத்திகளின் தாக்குதல்களுக்கு ஈரானிய ஆக்டோபஸ் நேரடிப் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். விமான நிலையம், ஒரு சிமென்ட் தொழிற்சாலை மற்றும் ஹாசிஸ் மின் நிலையம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 38 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளுடன் இணைந்த அல்-மசிரா தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைக்கு AP, ராய்ட்டர்ஸ் மற்றும் AFP ஆகியவை பங்களித்தன. https://www.theguardian.com/world/2025/may/06/us-to-halt-bombing-campaign-against-houthis-in-yemen-trump-says கடந்த ஆண்டு பங்குனி மாத நடுப்பகுதியில் குத்தீஸினை முழுவதுமாக துடைத்தழிப்பதாக கூறி போரில் குதித்த அமெரிக்க அரசு மே மாதத்தில் குத்தீஸின் மேல் தொடர்ந்தும் தாக்க போவதில்லை என முடிவெடுத்தது (2 மாதத்திற்குள்ளாகவே) அதே போல் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஈரானிய அணுவாயுத தயாரிப்பு நிலைகளின் மேல் குண்டு வீசியழித்துவிட்டதாக கூறிய அமெரிக்க அரசு.
  23. ஈரானில் 1953 ஆட்சிக் கவிழ்ப்பு ஃபிட் பேக்ஹவுஸ் மற்றும் பிற பிரிட்டானிக்கா ஆசிரியர்கள் வரலாறு பிரிட்டானிக்கா AI எதையும் கேளுங்கள் ஈரானில் 1953 ஆட்சிக் கவிழ்ப்பு , ஆகஸ்ட் 1953 இல் ஈரானில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு . அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தால் நிதியளிக்கப்பட்டு, அது நீக்கப்பட்டதுமுகமது மொசாடெக் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் பதவியேற்றார்.ஈரானின் தலைவராக முகமது ரெசா ஷா பஹ்லவி . தெஹ்ரானில் நடந்த சண்டையில் சுமார் 300 பேர் இறந்தனர் . அதன் மூலோபாய இருப்பிடம் மற்றும் பரந்த எண்ணெய் இருப்புகளுடன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற சக்திகளுக்கு ஈரான் சிறப்பு ஆர்வமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் தனது நட்பு நாடான சோவியத் யூனியனுக்கு ஒரு முக்கிய விநியோக பாதையைப் பாதுகாக்கவும் , எண்ணெய் ஜெர்மன் கைகளில் விழுவதைத் தடுக்கவும் நாட்டில் ஒரு இருப்பை நிறுவியிருந்தது . போருக்குப் பிறகு, ஆங்கிலோ-ஈரானிய எண்ணெய் நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் ஐக்கிய இராச்சியம் ஈரானின் எண்ணெய் மீது திறம்பட கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது . 1951 ஆம் ஆண்டு மொசாடெக்கின் தேசியவாத மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமையிலான ஈரானிய பாராளுமன்றம் நாட்டின் எண்ணெய் தொழிலை தேசியமயமாக்க வாக்களித்தபோது இந்த ஏற்பாடு திடீரென மாறியது . அதன் நலன்கள் இவ்வாறு அச்சுறுத்தப்படுவதைக் கண்ட இங்கிலாந்து, மொசாடெக்கை பலவீனப்படுத்தவும், ஸ்திரமின்மைக்கு ஆளாக்கவும் ஒரு ரகசிய பிரச்சாரத்தை மேற்கொண்டது. முதலில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு பாராளுமன்ற ஆணையை உருவாக்குவதன் மூலம் மொசாடெக்கை பதவியில் இருந்து நீக்க ஷாவை சமாதானப்படுத்த முயன்றது, இந்த சூழ்ச்சி தோல்வியடைந்தது மற்றும் மொசாடெக்கின் நற்பெயரை அதிகரித்தது , அதே நேரத்தில் ஷாவின் நற்பெயரைக் குறைத்தது. மொசாடெக்கை அகற்றுவதற்கான அழுத்தம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஒரு சதித்திட்டத்தின் யோசனையாக உருவானபோது, பொறுப்பை மட்டும் ஏற்கத் தயங்கிய பிரிட்டன், மொசாடெக், ஒரு வெளிப்படையான கம்யூனிச எதிர்ப்பாளர், ஈரானிய கம்யூனிஸ்ட் கட்சியான துதேவுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார் என்ற பனிப்போர் அச்சங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவை படைகளில் சேர வற்புறுத்தியது . அமெரிக்கா ஆபரேஷன் அஜாக்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு ரகசிய நடவடிக்கையில் முன்னணிப் பங்கை வகித்தது, இதன் மூலம்மத மற்றும் அரசியல் தலைவர்களைத் துன்புறுத்துவதன் மூலமும், ஊடகத் தவறான தகவல் பிரச்சாரத்தின் மூலமும் ஈரானுக்குள் அமைதியின்மையைத் தூண்டுவதற்கு CIA நிதியுதவி பெற்ற முகவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இந்த முயற்சிகள், ஜனாதிபதியால் முறையாக அங்கீகரிக்கப்பட்டன.ஆகஸ்ட் 1953 இல் மொசாடெக் மற்றும் அவரது அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு, மேற்கத்திய சார்பு மன்னரான முகமது ரெசா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது டுவைட் டி. ஐசனோவர் ஒரு உச்சத்தை எட்டினார். இருப்பினும், ஆட்சிக் கவிழ்ப்பு கிட்டத்தட்ட தோல்வியடைந்தது, ஏனெனில் ஷா தனது அரியணைக்கு பயந்து, அரசாங்க மாற்றத்தை அனுமதிக்க சிஐஏ தயாரித்த அரச ஆணைகளில் கையெழுத்திடுவதில் தயங்கினார். இரு தரப்பினரின் ஆதரவாளர்களுக்கும் இடையிலான சண்டை நூற்றுக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்தது. சுருக்கமான உண்மைகள் தேதி: ஆகஸ்ட் 1953 இடம்: ஈரான் முக்கிய நபர்கள்: முகமது மொசாடெக் மொசாடெக் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார், பின்னர் தனது வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவலில் வாழ்ந்தார். 1953 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு விதைகளை விதைத்தது என்றும் , அதில் ஷா தூக்கியெறியப்பட்டு நாடுகடத்தப்பட்டார் என்றும் இன்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் சிஐஏ ஆட்சிக் கவிழ்ப்பில் தனது பங்கை முறையாக வெளிப்படுத்தியது. Encyclopedia Britannica1953 coup in Iran | Coup D’etat, Description & Facts | Br...The coup that occurred in Iran in August 1953, which resulted in the deaths of some 300 people during fighting in Tehran, removed Mohammad Mosaddegh and restored Mohammad Reza Shah Pahlavi as Iran’s lமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரானிய அரசினை வழங்கல்களை தேசிய மயமாக்கியமைக்காக அமெரீக்க பிரித்தானிய கூட்டணியினால் தூக்கியெறியப்பட்டு, பின்னர் அந்த சா மன்னராட்சியினை இஸ்லாமிய புரட்சியின் மூலம் தூக்கியெறியப்பட்ட இஸ்லாமிய ஆட்சியினை, அமெரிக்கா தூக்கியெறியுமா? மன்னரின் மகன் மீண்டும் மன்னராட்சியினை ஈரானில் மலரவைப்பதற்கு அமெரிக்க இஸ்ரேலிய கூட்டினால் முடியுமா???
  24. நான் திராவிடியா என்ற சொல்லைத்தான் பாவித்தேன் மட்டுறுத்தினர்களால் அந்தப்பதிவை சரிபார்க்க முடிந்தால் பார்க்கவும்.
  25. சமூகநீதி பேசும் திமுக இன்னமும் திருமாவளவனுக்கு பிளாஸ்ரிக் கதிரை கொடுக்கும் நிலைமையில்தான் இருக்கிறது.தண்ணித் தொட்டியில் மலம்கலந்தவர்களை இன்னும் கணடு பிடிக்காமல் இருப்பதும் 6 சீட்டு திருமா அதைக்கண்டும்காணாமல் இருப்பதுவும்தான் நடக்கிறது. பாலத்துக்கு நாயுடு பேரைச் சேர்த்த பஞ்சாயத்து நாலைந்து மாசத்து முன்னாலதான்நடந்தது. ஆது சரி இப்ப யாரு சாதி பார்க்குறா என்ற கதைதான்.
  26. பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ நாவலில் மிகவும் விரிவாக இதைப்பற்றி எழுதி உள்ளார். அவர் இப்பொழுது இங்கிலாந்தில் வசிக்கிறார். 1970களில் இவர் கிழக்கு இலங்கை சம்மாந்துறையில் 4 ஆம் - 5ஆம் வகுப்புகளில் கல்விகற்கும் காலத்தில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக "தூய இஸ்லாமிய" (அரேபிய) நடைமுறைகள் பள்ளிக்கூடங்களில், வீடுகளில் புகுத்தப்பட்டது, அதை ஊரில் யார் முன்னின்று செய்தார்கள், அவர்களுக்கான நிதி முதலில் ஈரானில் இருந்து தொடங்கி பின்னைய காலங்களில் சவுதியின் பங்கு எப்படி இருந்தது என்று விரிவாக எழுதியுள்ளார். அருமையான புத்தகம், கிடைத்தால் எடுத்து வாசியுங்கள். கிழக்கு இலங்கை முஸ்லீம் மக்களின் வட்டார மொழியோடு வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கும். Ethir Veliyeeduபர்தாAuthor: மாஜிதா Genre: நாவல் Language: தமிழ் Type: Paperback பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது.உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாம

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.