Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் Dec 17, 2020 அன்றும் இன்றும் என்றும் இசையை தனது வாழ்க்கையாக்கியவர். என்றும் நான் என் இசைப் பயணத்தை நிறுத்தவில்லை நிறுத்தப் போவதுமில்லை என்று இன்றும் உற்சாகத்துடன் தினமும் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடி வருகிறார் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ். தனது காதலிக்கு எழுதிய ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’ என்ற கவிதையை, இசையமைத்து, காதலிக்காக பாடி, அதை இலங்கையின் முதலாவது தமிழிசைத் தட்டில் பதிவு செய்து வெளியிட்டவர் இவர். அவரின் காதலி “சங்கீத பூஷனம்“ சிவமாலினிதான் இவர் சாதனை புரிய காரணமானவர் என்றே சொல்லலாம். இருவருக்கும் திருமணம் ஆனதும் மாலினி அவர் கணவருடன் சகல மேடைகளிலும் பாடி வந்தார். அவர் ஒரு ‘சங்கீத பூஷணம்’ என்பதால் சினிமா பாட்டுகள் பாடும் பொழுது மிகவும் எதிர்ப்புகளை சந்தித்தார். ஒரு ‘சங்கீத பூஷணம்’ கர்னாடக சங்கீத கச்சேரிகளில் மட்டும்தான் பாட வேண்டும். சினிமா பாடல்கள் பாடி சங்கீதத்தை அவமதிக்கக் கூடாது என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ‘சினிமா பாடலும் இசைதான்’ என்று பதில் சொல்லிவிட்டு தன் கணவருடன் தொடர்ந்து பாடினார் மாலினி. மாலினி மீது வைத்த காதல்தான் ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’ பாடல் உருவாகி இலங்கையின் இசை வரலாற்றில் அழிக்க முடியாத சாதனை படைக்க காரணமான பாடலாகும். அதைத் தொடர்ந்து M.P.பரமேஷ் நீயின்றி நிலவு போகாதே தூர போகாதே நீ வாழுமிடமெங்கே மனமாளிகை ரோஜா எழுதுகிறேன் பாட்டு அழைக்குமோசை கேக்கலையா பாடலெனக்கிது முதல் தரம் தான் என்ற பாடல்களையும் எழுதி, இசையமைத்து பாடினார். இந்த 8 பாடல்களையயும் 3 இசைத் தட்டுகளில் வெளியிட்டார். இவைகளில் முதலாவதாக வெளியிடப்பட்ட இசைத் தட்டில் இருந்த ‘உனக்கு தெரியுமா’ பாடல் சாதனை படைத்தது. அது மட்டுமல்லாது 4-வது இசைத் தட்டில் சிங்கள பாடல்களையும் வெளியிட்டார். இந்த சிங்கள பாடல்கள் ஏற்கனவே மற்ற 3 தமிழிசை தட்டுகளிலும் M.P.பரமேஷ் அவர்களின் வரிகளிலும், இசையமைப்பிலும் வெளிவந்த பாடல்கள்தான். பின் வரும் இந்த 4 பாடல்களும் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாடல்களாகும். உனக்கு தெரியுமா / Thigu neela asthekai பாடலெனக்கிது முதல் தரம் தான் / Agasagevan அழைக்குமோசை கேக்கலையா / sulanga selavanai மனமாளிகை ரோஜா / Thura arte athithe ஒரு இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என்பதையும் தாண்டி அந்த காலத்தில் வெளியிடப்பட்ட இசைத் தட்டுகள், இன்டர்நெட் மற்றும் எந்த டெக்னாலஜி இல்லாத காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்தார். இவரது புகழ் இந்தியாவரை ஒலித்தது. இந்த இசைத் தட்டுகளை வெளியிட வேண்டிய சிந்தனை எப்படி வந்தது என்று கேட்டோம். “இசைத் தட்டுகளை வெளியிட வேண்டிய காரணம் எனது இசைக் குழு தொடர்ந்து இயங்காமல் போனதுதான். எனது பாடசாலை தோழர்களையும், மற்றும் சில இசைக் கலைஞர்களையும் இணைத்துதான் முதலில் எனது இசைக் குழுவை ஆரம்பித்தேன். அதில் பெரிய வருமானம் வரவில்லை. எனக்கும் அது குறிக்கோளாக இல்லை. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வில் வயதுக்கேற்ற மாற்றம் வரும். எனது இசைக்குழு நண்பர்கள் அவரவர் வாழ்க்கையை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கவும், சிலருக்கு வெளிநாடு செல்லவும், கப்பலுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்புகள் கிட்டியது. அவர்கள் என் இசைக் குழுவை விட்டு சென்றதும் புதிய தரமான கலைஞர்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் அவர்கள் நிலையாக எம்முடன் இருக்க முடியவில்லை. இலங்கையில் இசைக் கலைஞர்கள் பெரியளவில் கிடைப்பது கஷ்டம். அதனால் எனது இசைக் குழு தொடர்ந்து இயங்க முடியவில்லை. இந்த இசை நிகழ்ச்சிகளில் நாம் பெருமளவில் சினிமா பாடல்களை பாடினாலும் நான் எனது சொந்த பாடல்களையும் இயற்றி இசையமைத்து பாடினேன். அந்த பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அதில் சில ‘உனக்கு தெரியுமா’, ‘மீனிசை பாடிவரும்’, ‘யாழ் பாடி யாழ்பணம்’, ‘திருகோணமலை எங்கள் நாடு’ என்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை. “இந்த பிரபலமான பாடல்களை இசைத் தட்டுகளில் பதிவு செய்து விடு” என்று எனக்கு மூத்த கலைஞர்களின் அறிவுரை கிடைக்க அதை பின்பற்றினேன். இசைத் தட்டுகள் வெளியிடும் முன் “இசைத் தென்றல்” என்ற பெயரில் மேடை நிகழ்ச்சிகளை செய்து மிகவும் புகழ் பெற்றோம். அப்போது எனது அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்கி என் தம்பியை எம்முடன் இணைத்துக் கொண்டேன். தம்பி மேடை நிகழ்ச்சிகளில் வாத்தியக் கருவி(keyboard) வாசிப்பவராக இருந்தார். அத்துடன் வாத்தியக் கருவி ஒருங்கமைப்பாளராக(orchestrator)வும் இருந்தார். அவரை மூத்த கலைஞர்கள் வழி நடத்தினார்கள். மூத்த கலைஞர்களிடம் எனக்கு என்ன தேவை என்று சொல்லி விடுவேன், அவர்கள் தமது வேலைகளை திறம்பட செய்வார்கள். நான் பாடல் வரிகள் எழுதுவது, இசையமைப்பு, பாடுவது, விளம்பர வேலைகள் பொருளாதார சிரமங்களை சமாளிப்பது என்று பொறுப்புக்களை கவனித்ததால் எனது படிப்பை நிறுத்தி விட்டு கொழும்பு சென்று தங்கி இசைத் தட்டு வெளியிடும் முன்னேற்றப்பாடுகளில் தீவிரமாக இருந்தேன். என் நண்பனும், எனது இசைக் குழுவில் முக்கிய நபராக இருந்த மகேஷ் எனக்கு பொருளாதார ரீதியில் மிகவும் உதவி செய்தார். என் தம்பியின் படிப்பு கெட்டுவிட கூடாதென்பததிற்காக நான் அவரை தொந்தரவு செய்யவில்லை. நான் இசையமைத்த பாடல்களை பதிவு செய்யும்பொழுது, இலங்கை வானொலியில் வேலை செய்த அத்தனை இசைக் கலைஞர்களையம் நாடினேன். அவர்கள் மிகவும் திறமையான வாத்திய இசைக் கலைஞர்கள். அந்தக் காலத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடு இருந்தது, அதாவது, அவர்கள் இலங்கை வானொலிக்கு மட்டுமே பணி புரிய வேண்டும் என்பது தான். நான் தேவையான நபர்களை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று அத்தனை வாத்திய கலைஞர்களையும் எனது பாடல்களை பதிவு செய்யும்பொழுது அவர்களை பயன்படுத்தி ஒழுங்கு செய்தேன். அந்த கலைஞர்கள் ஆங்கில notation வாசிக்கும் வழக்கமற்றவர்கள். ஹிந்துஸ்தானிய notationதான் எனது பாடல்கள் பதிவு செய்யும் பொழுது பாவிக்கப்பட்டன. ஹிந்துஸ்தானிய ஸ்வாரத் தட்டுகளை எனக்கோ என் தம்பிக்கோ எழுத தெரியாது. நான் அத்தனை கலைஞர்களுடனும் இருந்து எனக்கு தேவையானவற்றை கேட்டும், சொல்லியும், பாடியும் பெற்றுக் கொண்டேன். அந்த நேரத்தில் சகல விதத்திலும் எனக்கு உதவி செய்தவர் ஒரு பெரும் திறம் கலைஞர் Pappa Myskin அவர்கள். மூத்த கலைஞர்களாகிய இலங்கை வானொலி கலைஞர்கள் தான் எனது பாடல்களுக்கு சினிமா பாடல்களின் பின்னணி இசைத் தரம் இணைத்தவர்கள். ஆனால், இந்த நேரத்தில்.. இப்போதைய காலக்கட்டத்தில் எனது தம்பி “அனைத்துப் பாடல்களையும் நான்தான் இசையமைத்தேன்…” என்று சொல்வது பச்சைப் பொய். அத்துடன் “நான்தான் சகல ஸ்வாரத் தட்டுகளை notation எழுதினேன்” என்று சொல்வது அந்த ஹிந்துஸ்தானிய notation-களை எழுதிய சகல கலைஞர்களையும் அவமானப்படுத்தும் பொய்யாகும். இதை, நான் இங்கே தெளிவாக பதிவு செய்கிறேன். இசைத் தட்டுகளில், இசையமைப்பில் ஏன் அவர் பெயர் இருக்கின்றது என்று சிலர் கேட்டனர். தனது பெயரை போடாமல்விட்டால் பிரிந்துவிடுவேன் என்று சொல்வார். அதனால்தான் போட வேண்டியதாகிவிட்டது. எனக்குத் தெரியாமல் record-ல் பெயர்களை மாற்றினார். records print ஆகி வரும்பொழுதுதான் நானே அதைப் பார்த்தேன். அப்போதே எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும், எதையும் மாற்ற முடியவில்லை… அதற்கான பணம் அப்போது என்னிடம் இல்லை. இசையமைப்பில் வேண்டுமென்றே என் அனுமதியின்றி அவர் பெயரையும் போட்டுக் கொண்டார். என் பெயரை அதிலிருந்து அவர் அழிக்காமல்விட்டது எனது அதிஷ்டம்தான். எல்லாவற்றையும் தம்பிதானே என்று விட்டு விட்டேன். தனது பெயரை உரிமை இல்லாமல் போட்ட பின்னரும் என்னை விட்டு பிரிந்து போய் சொந்தமாக இசைக் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் காலத்தில் அவர் வேண்டுமென்றே செய்த தவறை இன்றும் கடைபிடிக்கிறார். இத்தனை காலமும் நான் இதைப் பற்றி பொருள்படுத்தாமல் இருந்தேன். குடும்ப விடயம் என்று கருதி வெளியில் பேசுவதில்லை. இப்பொழுது நான் பேசியாக வேண்டும். நான் இசையமைத்த சகல பாடல்களுக்கும் எனது மகள் பிரபாலினிதான் வாரிசு. வேறு யாரும் இதை உரிமை கொண்டாட என் அனுமதி இல்லை. இசையமைப்புக்கும், வாத்தியக் கருவி ஒருங்கமைப்புக்கும் வித்தியாசம் தெரியாத என் தம்பி இன்றும் குழப்பத்தில் “எனது பாடல்களுக்கெல்லாம் நான்தான் இசையமைப்பாளர்” என்று சொல்லிக் கொள்வது தவறு மற்றும் பொய். என் மனைவிக்கு என் காதலை தெரிவிக்க நான் எழுதி இசையமைத்து பாடிய “உனக்கு தெரியுமா” பாடலுக்கும் இதுதான் நிலைமை…” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். கவிஞர், பாடகர், இசையமைப்பாளர் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. பரமேஷ் அண்ணா அவர்கள். இதுவரையிலும் 2000 பாடல்களுக்கு மேலே இசையமைத்து தயாராக வைத்திருக்கிறார், ஆனாலும், பொருளாதார ரீதியில் எல்லாவற்றையும் தரமான முறையில் பதிவு செய்து வெளியிட முடியாததால் சில நூறு பாடல்களை மட்டுமே பதிவு செய்தும், மீள் பதிவு செய்தும் வருடா வருடம் வெளியிடுகிறார். இலங்கையை பொறுத்தவரை சினிமா இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறது, அங்கே அந்த காலத்தில் சினிமாவில் இசையமைத்து பெயரும் புகழும் சம்பாதிக்க முடியாது என்பதை விட வாய்ப்புகள் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஆனால் M.P.பரமேஷ் அவர்கள் இந்திய நடிகர்கள் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார். 30 வருட போரில் மக்கள் உயிர்களை, உடமைகளை மட்டும் இழக்கவில்லை. அவர்கள் கலையை, கலைஞர்களின் படைப்புகளை, உணர்வுகளை இழந்துவிட்டார். M.P.பரமேஷ் அவர்களை போன்ற அற்புதமான மூத்த கலைஞர்களை ஈழத்து மக்கள்கூட மறந்துவிட்டார்கள் என்பது கவலைக்குரிய விடயம்தான். 1986-ல் ஜெர்மனி சென்ற M.P.பரமேஷ் அவர்கள் தொடர்ந்தும் இசையுடன் வாழ்ந்து வருகிறார். அவர் மனைவி மாலினி 2000-ம் ஆண்டு இறையடி அடைந்துவிட்டார். பரமேஷ் மாலினி தம்பதியினருக்கு 6 குழந்தைகள், அனைவரும் இசையில் ஆர்வமுள்ளவர்கள். பரமேஷ் மாலினியின் மூத்த மகளான, ஈழத்து மெல்லிசை குயில் “பிரபாலினி பிரபாகரன்” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர். பிரபாலினி இந்தியாவில் 2016 முதல் ஈழத் தமிழ் மகளாக எடிசன் விருது பெற்ற பெருமைக்குரியவர். இசையில் அமைதியாக பல தரப்பினருடன் இணைந்து பணி புரிந்து வருகிறார். ரசிகர்களால் Queen Cobra என்று அழைக்கப்படுபவர் இந்த ஈழத் தமிழ் மகள். கடந்த ஆண்டு M.P.பரமேஷ் அவர்கள் தனது இசை வாழ்வின் GOLDEN JUBILEE விழாவைக் கொண்டாடினார். உலகெங்கும் வாழும் பல கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பல விருதுகளை பெற்ற பரமேஷ் அவர்களுக்கு 2019ல் ஜெர்மனியில் வெற்றி மணி பத்திரிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மற்றும் tamil mirror canadaவின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைக்கப் பெற்றார். இன்றும் தனது மனைவிக்காக பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்டு வரும் அன்பு காதலன்! காதல் உள்ளவரை உங்கள் இசை என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்! பரமேஷ் அவர்களின் பாடல்களை itunes, sportify மற்றும் சகல digital platformகளிலுல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். https://tamilcinetalk.com/tamil-eelam-singer-music-director-m-p-paramesh-story/?fbclid=IwY2xjawQHO3BleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEe2q5jz2lmVoJjwhQzLpT-_KzevRtxbdRhbeZO_gmz0eVEv49ugEjaVTP1z4Y_aem_F1pbhkZepXLubhEFf3n9wg
  3. Yesterday
  4. நீங்கள் கூறுவது சரியாக இருக்கும் எனவே கருதுகிறேன், பல பிரிவுகள் ஈராக் போல ஒரு நிலை வரலாம் என கருதுகிறேன் (அவ்வாறு நடக்கும் என நினைக்கவில்லை). அமெரிக்கா ஒரு நீண்ட ஒரு மரபு வழி போர் ஒன்றினை செய்யும் நிலையில் உறுதியாக இல்லை (மேலே இணைக்கப்பட்ட கட்டுரையிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது), ஆனால் நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்யும் என எதிர்பார்க்கிறேன், எனோ தெரியவில்லை; இந்த அமெரிக்க ஈரான் விவகாரத்தில் எதுவுமே நடக்காது என்பது போல ஒரு உணர்வுள்ளது ஆனால் இவ்வாறான செலவு மிக்க நகர்வினை ஒரு அச்சுறுத்தலுக்கு செய்யாது என நம்புகிறேன். உள்நாட்டு கட்டுப்பாடற்ற நிலையில் உதவி செய்ய எந்த தரப்பும் சிந்திக்கின்ற நிலையே காணப்படும், உதவிகளின் பலனை அவை இல்லாமல் செய்துவிடும் என கருதுகிறேன், சில நாள்களில் தெரிந்துவிடும் (10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, முனர் காலக்கெடு முடிவதற்குள் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டமையால்). கடந்தகால தரவுகளினடிப்படையில் ஒரு மாதிரியினை (Simulation) அமெரிக்கா செய்திருக்கும், அவ்வாறான தகவல்கள் வெளிவராத நிலையில் பழைய மாதிரிகளே ( மில்லனியம் சாலன்ச் 2002) அமெரிக்க தரப்பு எதிர்கொள்ளும் சிக்கல்கள் கடினமாக இருக்கின்றது. இந்தநிலையில் ஒரு முழு அளவிலான போர் எந்தளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை.
  5. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
  6. நீங்கள் எதை கூறினாலும் ஈரானின் பின் பலத்தில் சீனா நிற்கின்றது. இங்கே அமெரிக்கா தோற்றால் ஒட்டுமொத்த மேற்குலகிற்கும் பெரிய பின்னடைவு வரலாம். முல்லாக்கள் அகற்றப்பட வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அதற்காக மன்னர் ஷாவின் குடும்பம் மீண்டும் ஈரானை மன்னர் ஆட்சி செய்ய வரவேண்டும் என்பது என் கருத்து அல்ல. ஆனால் முல்லாக்கள் அகற்றப்பட்டால் ஈரான் பல பிரிவுகளாக பிரிக்கப்படலாம். அதற்குள் பல தனி நாடுகள் உருவாகலாம்.
  7. சிறந்த இளம் மருத்துவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். எத்தனை கனவு, சேவைமனப்பான்மையோடு இருந்திருப்பார். ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் உறவுகளுக்கு.
  8. சரத் பொன்சேகா கூறியது இருக்கட்டும், அவர் மாற்றி மாற்றி பேசுவதாக கூறுகிறார் நாமல், அதை நாமும் அறிவோம், நாளைக்கு வேறொன்று கூறுவார். ஏனெனில் களத்தில் போரை வழி நடத்தியவர் தானே என்று கூறுகிறார், மற்றவர்கள் கோட், சூட்டோடு குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து போர் செய்தவர்கள் என்று கூறுகிறார். அவரும் போரோடும் அது சார்ந்த குற்றங்களோடும் தொடர்பு பட்டவர். தன்னை பாதுகாக்க வேறொருவரை குற்றம் சாட்டுவது, கொலை செய்வது, கைது செய்வது, சிறையில் அடைப்பது குற்றவாளிகளின் வழமை, அது இருக்கட்டும். இராணுவத்தினருக்காக நான் தூக்குக்கயிறை முத்தமிடுவேன் என்று வீரவசனம் பேசிய மஹிந்தவே, தான் தேர்தலில் தோல்வியுற்றால் என்னை மின்சாரக்கதிரையில் ஏற்றி விடுவார்கள் என பதறியது ஏன்? குற்றம் இழைக்காதவராக இருந்திருந்தால் அப்படிப்பட்ட பயம் எப்படி அவருக்கு வந்தது? போரின் நாயகன் நான் என விழா கொண்டாடியவர், இராணுவத்தினரை எப்படி குற்றம் சாட்ட முடியும்? இவர்களே இராணுவத்தினரை காட்டிக்கொடுத்துக்கொண்டு, போர்க்குற்ற விசாரணை என்றவுடன் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கின்றனர் என பதறித்துடிப்பது ஏன் என இவர் விளக்குவாரா நாமலும் சரத் பொன்சேகாவும்? அரகலயா போராட்டத்தில் இராணுவத்தினர் ராஜபக்ஸ குடும்பத்தினரை கைவிட்டதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம். சுதந்திர தினத்தில் இராணுவத்தினரை மரியாதை செய்யவில்லை, என்று குற்றம் சாட்டுபவர்கள் வெள்ளிக்கொடியுடன் வந்தவர்களை இராணுவமே சுட்டது என்றும், இராணுவத்திடம் சரணடைந்திருந்திருந்தால் இப்போதும் உயிருடன் இருந்திருப்பார்கள், சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஒருபோதும் அனுமதியோம் என்றும் தாம் சொல்வது என்னவென்று தெரியாமல் புலம்புகிறார்கள். சரி, போரில் காயம் படும் பொதுமக்களுக்கு உதவ மக்களோடு இருந்த பொது அமைப்புகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது ஏன்? யார் குற்றம் செய்தார்கள் என்பதற்கு அவர்கள் சாட்சியாகவும் இருந்திருப்பார்கள். அங்கு தங்கியிருந்த மக்களின் தொகையை திட்டமிட்டு குறைத்துக்கூறியது ஏன்? சிறுவர் தங்கியிருந்த விடுதி செஞ்சோலையில் குண்டுகளை கொட்டியது யார், ஏன் செய்தார்கள்? மருத்துவம், உணவு, போக்குவரத்தை தடுத்தது ஏன்? காப்பாற்றப்படும் மக்களுக்கு தங்குமிட, உணவு, சுகாதார வசதி செய்து கொடுக்காது ஆடுமாடுகளைப்போல் அடைத்தது ஏன்? யாரும் மிஞ்சக்கூடாது என்று திட்டமிட்டு பொய்யுரைத்து சாதாரண மக்களை கொன்றது ராஜபக்ச குடும்பத்தினரும் பௌத்த இனவாதிகளுமே. அப்படிப்பட்ட ஒருவரை ஏன் அரசியலிலிருந்து மக்கள் அடித்து விரட்டினர்? அப்படியல்ல, அந்தப்பிக்குகள் தங்களை தாங்களே அப்படிச்சொல்லிக்கொள்கிறார்கள் மட்டுமன்றி நீங்கள் விட்டுச் சென்ற இரத்தவெறியை தொடர்கிறார்கள். மதத்தலைவர்களை கொலை செய்த இவர்களின் கலாச்சாரம் பற்றி இவர் பேசுவதில்லை. தவறு, அதனாற்தான் நாட்டில் இத்தனை அழிவு, உங்களுக்கு பௌத்த மத போதனை தெரியாது. பௌத்தன்என்று சொல்லிக்கொண்டு அதை வைத்து வயிறு வளர்க்கிறீர்கள். நீங்கள் சுத்த பௌத்தனல்ல, அரசியலுக்காக பௌத்தத்தை பாவிக்கிறீர்கள்.பௌத்த மதத்தை காப்பாற்றுவதற்காக மற்றைய மதங்களை பலாத்தகாரமாக அழிக்கிறீர்கள், எல்லா மதங்களையும் சமமாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தவறாகவே கற்று, விளங்கி, வழிநடத்தப்பட்டு நாட்டை குட்டிச்சுவராக்குகிறீர்கள். இப்படிப்பட்ட மனம், செயற்பாடு கொண்ட மத தலைவர்கள், அரசியல் வாதிகள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் செய்த தவறுகள் பகிரங்கப்படுத்தப்பட்டு இவர்களால் மதம் களங்கப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். நாட்டில் சாந்தி, சமாதானம், சமத்துவம் கருணையை போதிக்க வேண்டியவர்கள், வன்முறையை தூண்டுவதும் நிஞாயப்படுத்துவதும் பயங்கரவாத சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனையளிக்கப்படவேண்டும். அப்போதான் நாடு முன்னேற்றமடைய முடியும், அவரவர் மதத்தை அச்சுறுத்தல் இல்லாமல் சுதந்திரமாக கைக்கொள்ள முடியும். நம்பிற்றோம்! ஜானாதிபது கனவு எப்படி பேசுது? இதுக்குமேலும் மக்கள் இவர்களை ஆதரித்தால்; நாடு நிரந்தர இருண்ட யுகத்திற்குள் போகும், புத்தனாலும் நாட்டை காப்பாற்ற முடியாது.
  9. அவுஸ்ரேலியா ஓமான் போட்டி நடந்த அதெ ஆடுகளத்திலேயே இங்கிலாந்து இலங்கை போட்டி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இறுதியாக இரண்டு நாடுகளும் மோதிய ரி 20 போட்டித்தொடரில் 3 போட்டிகளும் இதே மைதானத்தில் நடைபெற்றது, இங்கிலாந்து 3:0 என போட்டித்தொடரினை வெள்ளை அடித்திருந்தது இலங்கைக்கு எதிராக, இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு இங்கிலாந்திற்கே அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து அணியில் ஓவர்ட்டனிற்கு பதிலாக லூக் விளையாடுகிறார், பிக்பாஸ் போட்டிகளில் ஓவர்டன் லூக்கினை விட சிறப்பாக செயற்பட்டதாக நினைவுள்ளது, ஓவர்டன் சரியான அளவு பந்துகளை 150 கி.மி வேகம் வரை வீசக்கூடிய நிலையில் இருந்தார், லூக்கின் பந்து ஸ்கிடியாக 140 கி.மி வfரை வீசக்கூடியவர், இடது கை வேகப்பந்து வீச்சாளர், இவர் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதுசங்க போல வலது கை துடுப்பாட்டக்காரர்களுக்கு பந்தினை உள்நோக்கி வருமாறு வீசக்கூடியவர் (Over the stump). இலங்கை அணி வளமை போல சமீர ஆரம்ப ஓவர்களை வீசுவதற்கு பதிலாக மதுசங்கவிற்கு ஆரம்ப ஓவரினை வழங்குவது சாதகமாக இருக்கும் என கருதுகிறேன், சிம்ப்பாவே போட்டியிலும் சிறப்பாக வீசியிருந்தார். இரண்டாவது போட்டி, அதிக ஓட்டங்களை வழங்கும் மோடி மைதானத்தில் தென்னாபிரிக்கா மற்றும் இந்தியாவிடையே நடைபெறவுள்ளது, இந்த போட்டியும் 200 ஓட்டங்களுக்கு அதிகமான ஓட்டங்களை கொண்ட போட்டியாகவிருக்கும், முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிவாய்ப்பு நிகழ்தகவு மிக அதிகமாக உள்ளதாக கூறுகிறார்கள் ஆனால் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு நிகழ்தகவு தென்னாபிரிக்காவின் வெற்றிவாய்ப்பு மிக நெருக்கமாக உள்ளதாக கூறுகிறார்கள். இலங்கை ஆடுகளத்தில் முதல் 6 ஓவர்களில் அதிக ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலை காணப்படுகிறது, இரண்டாவது போட்டியில், மோடி ஆடுகளம் முதல் 6 ஓவர்கள் பந்து அதிக சிரமம் கொடுக்கும், விக்கெட்டுக்களை தக்க வைக்கவேண்டிய தேவை அதிகம் உள்ள நிலையில்; அதிக பட்சம் 1 விக்கட் இழப்பிற்கு 40 - 45 ஓட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு போட்டிகளிலும் நாணய சுழற்சியில் இரண்டு அணிகளும் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுக்கலாம்.
  10. பரவாயில்லையே. எனக்கு ஒரு பாட்னர் இருக்கிறாரே.
  11. எதற்காக இப்படியான படுகொலைகள் புங்குடுதீவில்? எல்லா இடங்களிலும் நடைபெறுகின்றன ஆனால் புங்குடுதீவு அடிக்கடி பேசப்படுகின்றதே, ஏன் இந்தக்கொலைவெறி புங்குடுதீவில்?
  12. நான் பாக்கிஸ்தானை அதிக‌ம் ந‌ம்பி தான் போட்டி ப‌திவை ப‌திஞ்சேன் அவ‌ர்க‌ள் இனி வ‌ரும் விளையாட்டை எல்லாம் வெல்ல‌னும் இல்லையேன் நான் 100புள்ளிய‌ தான்ட‌ மாட்டேன்.................. பாக்கிஸ்தான் சிமி பின‌ல் வ‌ரை வ‌ந்தால் கூட‌ ம‌கிழ்ச்சி.....................
  13. மேற்குலகின் இசை அல்பங்கள் போல அல்லாமல்... தென்னிந்தியாவின் இசை அல்ப்பம் ---- தான் இசை அமைத்த பாட்டுக்கு கூலியை வாங்கி கொண்டுள்ளார், எனவே படத்தின் பாடல், இசை உரிமை தயாரிப்பாளரிடமும் அவரிடம் உரிமையை வாங்கிய நிறுவனமிடமுமே உள்ளது என்பதே வாதம். இதை இந்திய சட்டப்படி கோர்ட் அணுகும். ஒவ்வொரு படத்திலும் இவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் இருந்த ஒப்பந்த அடிப்படையில் சில உரிமை இவருக்கு வரலாம், வராமலும் போகலாம். இதெல்லாம் காப்புரிமை அடிப்படையில் கோர்ட் முடுவு செய்யும். இதில் காப்பரேட் கீப்ப்ரடேட் என புலம்புவது மாய்மாலம். காப்பரேட் லைக்காவையும், சோனியையும் தேவை என்டால் தலையில் வைத்து ஆடும் வியாபாரமே சினிமா. இவர்கள் என்ன தன்னார்வ தொண்டா செய்கினம் ? பிஜேபி கைக்கூலியான ராஜாவுக்காக டெல்லியில் அளுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
  14. இப்போ நியுசிலாந்தும் பாகிஸ்தானும் அரை இறுதி போறது கஷ்டம். மற்றைய இரண்டு போட்டிகளையும் வென்றாகனும். ஒன்றைத் தோத்தாலும் அரை இறுதி சந்தேகம்.
  15. முதலமைச்சர் @கந்தப்பு க்கும் சுமைதாங்கி @goshan_che க்கும் வாழ்த்துக்கள். தென்னாபிரிக்கா வென்றால் மிகமிக சந்தோசம்.
  16. மேற்குலகில் இசை அல்பங்களை உருவாக்கும் படைப்பாளிகள் சுயமாக தாமே இசை நிறுலனங்களாக, தமது அல்பமாக அதை உருவாக்குகின்றனர். அதன் காரணமாக அவர்களால் உருவாக்கப்படும் அல்பங்களின் உரிமை அவர்களிடமே இருக்கும். ஆனால், இந்தியாவில் படங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் படத்தில் இசையமைத்து அதற்கான கூலியை இசையமைப்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் போது போது அந்த இசை அல்பங்களின் றோயல்ரி தானாகவே பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றுவிடுவதே இதன் காரணம் என நினைக்கிறேன். எதிர்காலத்தில் இசைமைப்பாளர்கள் இசை தயாரிப்பு நிறுவனங்களைப் பதிவு செய்து அந்திறுவன உரிமையாக பாடல்களை உருவாக்கி, தாம் உருவாக்கும் பாடல்களை ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் பாவிக்கும் உரிமையை மட்டும் விற்பனை செய்தால் இவ்வாறான பிரச்சனைகள் எழாது என்பது எனது அபிப்பிராயம்.
  17. நேற்று நிலாம‌தி அக்காவாவ‌து உங்க‌ளுக்கு துணையா வ‌ந்தா😄 நீங்க‌ள் 22பேரும் என்னை த‌னிய‌ விட்டுவிட்டு ஓடிட்டிங்க‌ள் லொள்😄😛..........................
  18. உன் மொழிக்கருவுக்குள் இடம் தந்து, உயிர் தந்த தாயே... தமிழே... சிரம் தாழ்ந்து வணங்குகிறேன். 🙏
  19. 🤣................. மாதம் மும்மாரி மழை பொழிந்து உலகம் செழிக்குதே என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கின்றேன், பையன் சார்......................🤣. நேற்று நிலாமதி அக்காவும், நானும் நின்ற இடத்தில் இன்று பையன் சார் நிற்கின்றார்.............. சிட்டிவேஷன் சாங்: நேற்று வந்ததும் அதே மழை இன்று வருவதும் அதே மழை.................
  20. இதில் இருக்கும் நேர‌ம் த‌லைவ‌ரே................... முத‌லாவ‌து விளையாட்டு 10:30 இர‌ண்டாவ‌து விளையாட்டு 14:30................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.