All Activity
- Past hour
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
யாரும் புலம்பெயர் தமிழர் ஏதாவது ஒரு பதவியில் அமர்ந்து விட்டால் உடனே தமிழ் தேசிய எதிர்பாளர்களின் கீறல் விழுந்த கருத்துக்களின் அணிவகுப்பு தொடங்கி விடும் .
-
வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
புலம்பெயர் ஈழ தமிழர்களை அநுரகுமார திசாநாயக்க பாசத்துடன் அரவணைத்து செல்ல முயற்சிக்கின்றார் என்பதையே இது காட்டுகின்றது.
-
வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
சுத்து மாத்து சுமத்திரணை விட இவரை நம்புவர்கள் அதிகம்.அடுத்த முறையும் வென்று அநியாயம் பண்ண போகுது .
-
தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
நாலுவலிக்குன்னது இலட்சதீவு நான்கு துடுப்பு கொண்டது.
-
🛑 இலங்கைத் தமிழரசுக்கட்சியில் அதிரடி: சிறீதரனை பதவியிலிருந்து நீக்கத் தீர்மானம்! ⚖️
சிறியருக்கு தமிழரசுக்கட்சியின் தலைமைப் பொறுப்பை பெறுவதற்கு ஆதரவு தருவதாக ஆசை காட்டினார்.தமிழரசுக்கட்சியின் தலைமையை ஏற்கத்தயார் என்று சிறியர் அறிக்கையும் விட்டார். அந்தத்தேர்தலில் சுமத்தரனோடு சேர்ந்து கட்சித்தலைவர் மாவைக்கு எதிராக வேலை செய்து மாவை தோற்கடிக்கப்பட்டார்.. தேர்தலில் வென்றதும் கட்சித்தலைவர் மாவைக்குத் தெரியாமல் சிறிதரனும் சுமத்திரனும் கலையரசனை தேசிய பட்டியல் எம்பியாகத் தெரிவு செய்தனர். கட்சித் தலைமைக்குத் தெரியாமல் அறிவிக்காமல் செயற்பட்ட சுமத்தரன் இன்று கட்சி யாப்பு பற்றியும் ஒழுங்கு நடவடிக்கை பற்றியும் பெரிதாக அலட்டுகிறார். உண்மையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்நபர் சுமத்தனும் சம்பந்தருமே. கட்சியில் அவர்களின் அதிகாரத்துக்குப் பயந்து எல்லோரும் வாயை கூடிக்கொண்டு இருந்ததன் விளைவு இன்று சிறியருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. வேடிக்கை என்ன வென்றால் கலையரசனும் சிறயருக்கு எதிராக திரம்பியிரக்கிறார். சிறியரின் நழுவல்தனமான மதில்மேல் பூனை போன்ற அரசியளுக்கு இந்த நிலமை தேவை. வினை விதைத்தவர் வினை அறுக்கிறார்.
-
- Today
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இணையவன் கூறுவதும் ஏற்கத்தக்கதே உதவி செய்யும் நோக்குடன் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளினால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வரக்கூடாது .அது எங்கள் நோக்கமும் அல்ல . ஏராளன்.... நாங்கள் இந்த முன்னோடி என்ற அமைப்பை எங்கள் முயற்சி முடிவடையும் வரை பதியப்படாத ஒரு அமைப்பாக வே இயக்கப்போகின்றோம் . இல்லையா . ஆகவே இப்போதைக்கு இந்த பேனர் செய்யும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைப்போம் . எங்கள் இலக்கு எட்டப்பட்ட பின்னர் தொடர்ந்தும் ஆர்வம் உள்ளவர்கள் ஆதரவு தருபவர்கள் என எல்லோரும் இணைந்து இந்த முன்னோடியை இலங்கையிலோ அல்லது இன்னுமொரு புலம்பெயர்ந்த நாட்டிலோ பதிவு செய்வதைப்பற்றி ஆராய்வோம். எல்லோரும் ஆதரவு தரும் சமயத்தில் ஒரு முடிவெடுத்து பதிவு செய்வோம் . அதன் பின்னர் யாருக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் ஒரு இலச்சினையை தேர்ந்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்வோம் இப்போதைய அதி முக்கியமான இலக்காக 10 இடங்களில் அடிப்படை வசதியற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான சுகாதார வசதிகளை புதிய கழிவறைகள் அமைப்பதன் மூலம் தீர்த்து வைப்போம் . அதற்கான நிதியை நாங்களே சொந்தமாகவோ அல்லது எங்களது முயற்சியினால் மற்றவர்களூடாகவோ சேர்த்துக் கொள்ளலாம் மற்றவர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறினால் நல்லது. மக்களுக்கான சேவையில் ஈடுபடுகின்றோம் என்பதை விட மக்களுக்கு இத்தனை உதவிகளை நடைமுறையில் செய்து காட்டியுள்ளோம் என்று கூறும் போதே எங்களுக்கான ஆதரவும் எங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து கோஷான் உங்கள் தேடலுக்கும் முயற்சிக்கும் நன்றிகள்🙏 இப்படியே படிப்படியாக முன்னேறலாம் இந்த வருடத்திற்குள் எங்கள் இலக்கை அடைந்து விடலாம் 👍
-
வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
அர்ச்சுனா போல் ஒருவர் பாராளுமன்றத்திற்கு தேவை என ஒரு அரசியல்வாதி குறிப்பிட்டதாக அறிந்தேன், உண்மை தெரியவில்லை. கூத்துக்கு ஒரு கோமாளி பாத்திரம் வைப்பது உண்டு. அவ்வாறு இப்போது எல்லா இடங்களையும் கோமாளிகள் நிரப்புகிறார்கள். ஆனால் இவர் பொது வெளியில் பேசும் பேச்சுக்கள் முகம் சுழிக்க வைக்கின்றன.
-
ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு
புரட்டுவதத்திற்கு ஒன்றும் இதில் இல்லை, எல்லாமே வெளிப்படையாக நடந்தது. எங்கே சொன்னேன் இலட்ச கணக்கில் பயிற்சி அளித்து மேற்கு, us, இஸ்ரேலிய உளவு முகவர்கள் அனுப்பப்பட்டதாக? (ஊடுருவியது 1000 கணக்கில் இருக்கும் என்பது எனது ஊகம். ஏனெனில் இரானின் நிலப்பரப்பு, பிடிக்கப்பட்ட தொகையயையும் கொண்டு). இதை முதலில் அறிவித்தது, இரானின் தாராள / மென் போக்கான அதிபர். ஏன் வெளியில் இருந்து முன்னாள் cia தலைவர் (போம்பேயோ) ஈரானில் களத்தில் இருக்கும் us, இஸ்ரயேலியா உளவு முகவர்கள் என்று கிரிஷ்துமஸ் , புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். (டிரம்ப் இன் எச்சரிக்கை, மிரட்டல்கள் இதன் பின்பே ஆரம்பித்தது.) அனல். நன்றாக ஒவ்வொரு நாளும் பார்த்து இருந்தீர்கல் என்றால், இது தன்னிச்சையான ஆர்ப்பாட்டம் அல்ல, ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் என்பது வெறும் கண்களுகே தெரிந்து இருக்கும் அனால் மேற்கு செய்திகள் ஒருபக்கம், அவசர்களின் இலக்கான ஆட்சி மாற்றத்துக்கு வசதியான செய்திகள். அத்துடன் எல்லை பகுதிகளிலேயே தலைநகரை விட தீவிரமாக இருந்தது. ஏனெனில் அதன் அயல் பகுதிகளில் உள்ள நாடுகளில் cia, mossaad நிலைகள் இருக்கிறது (இது தெரிந்த விடயம்) (இப்பொது இருக்கும் கைதுகள் இயற்கை, எந்த அரசாங்கம் என்றாலும் ஆழம் காணாமல் விடாது. ) அரசாங்கம் மீது வெறுப்பு உள்ளோர் இருந்தனர். அவர்களுக்கு உந்துதல் கொடுத்தது சரி. அனால் அரச வசதிகளை , கட்டிடங்களை ஒழுங்குபடுத்தப்பட பாணியில் எரிப்பதை, இரான் அரசாங்கம் பார்த்து கொண்டு இருக்க வேணும் என்பதே மேற்கின், us, இஸ்ரேல் இன் எதிர்பார்ப்பு. ஏனெனில், அவர்களின் ஆட்சி மாற்றத்துக்கு தேவையானது. குறிப்பாக எதை புரட்டி இருக்கிறேன் என்பதை சொல்லவும். (தயவு செய்து இரானை பற்றி அறியவும். மேற்கின் (பூச்சாண்டி) செய்திகளை மட்டும் பார்த்தல் இரான் பேயாக தான் தெரியும்) .
-
வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
அர்சுனா லூசு போல் வெளிநாட்டு சிங்களவர்களுக்கும் மகிந்த குடும்பம் தான் பெரிது இங்கு வாழும் அவர்களால் புலம்பெயர் தமிழர்களின் முன்னேற்றம் ஜீரனிக்க முடியாத சுமை . வெளியில் சிரித்து கதைத்தாலும் உள்ளுக்குள் இனவெறி விஷம் கொழுந்து விட்டு எரிவதை தடுக்க முடியாமல் அசடு வழிவார்கள் பாருங்கள் . எல்லாம் அவர்களுக்கு சிறு வயது முதல் போதிக்க பட்ட இனவெறி விஷம் இலகுவில் போகாது அது போனால்த்தான் இலங்கைக்கு சுபீட்சம் என்பது அவர்களுக்கு தெரியாது .
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
அது சரி இவர் சுவிசில் மாநில முதல்வர் ஆகும் தகுதி உண்டா? பல தலைமுறையாக தமிழ்நாட்டில் வாழ்ந்து அம்மண்ணின் மைந்தர்களாக தமிழை தவிர வேறு மொழி தெரியாதவர்களையே வந்தேறி, வாழலாம், ஆளக்கூடாது, என்று அடுத்த நாட்டின் அரசியலுக்குள் புகுந்து அதுவே சரி என நாட்டாண்மை காட்டும் கும்பல்கள் எல்லாம் இந்த முதலாம் தலைமுறை வந்தேறித் தமிழர் மாநில முதல்வர் ஆகியதைப் பாராட்டுகிறார்களே! அந்த கொள்கையை தள்ளி வைத்து விட்டார்களா? இந்த அநியாயத்தை கேட்க சுவிசில் ஒரு செபஸ்டியான் இல்லையா? 😂
-
வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
அவர் வந்ததால் நிம்மதி பெருமூச்சு விடுவது சுத்துமாத்து சுமத்திரன் தான். தன்னை வெண்ட சுத்து மாத்து கிறுக்கன் வந்திருக்கார் என்று .
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
- IMG_9454.jpeg
- வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
சுத்துமாத்து சுமந்திரனுக்கு 99 வீதமான எதிர்ப்பு வாக்குகள்… வெளி நாட்டில்தான் உள்ளது. 🤣 சென்ற நாடுகள் எல்லாம், "செருப்படி" வாங்கிய செம்மல் அவர் அதேநேரம் அர்ச்சுனாவின் வாக்குகள் வெளிநாட்டில்த் தான்.- வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
நான் நினைக்கவில்லை அனுரா அரசே இந்த திட்டத்தை குப்பையில் வீசி விடும் .- 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
பிச்சை எடுத்து பழகியவன்... ஒரு நாளும் சமைத்து சாப்பிட மாட்டான். 😂- வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
சுத்துமாத்து சுமந்திரனுக்கு 99 வீதமான எதிர்ப்பு வாக்குகள்… வெளி நாட்டில்தான் உள்ளது. 🤣 சென்ற நாடுகள் எல்லாம், "செருப்படி" வாங்கிய செம்மல் அவர்.- வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
எல்லாமே ..சுத்துமாத்துத்தான்....நாம வாயைப்பிளந்துகொண்டு இருக்க வேண்டியதுதான் ...இந்த விபரத்தை கேட்டவுடனேயே...தமிழரசுக்கட்சி வழக்குப்போட்டு ..தடையுத்தரவு வாங்கிவிடும்..- 🚀 அதிசயம் ஆனால் உண்மை – விண்வெளியில் ஒரு வரலாற்று சாதனை: பூமியிலிருந்து ‘ஒரு ஒளி நாள்’ தொலைவில் வொயேஜர் 1!
வருஷம் 40: வொயேஜரின் முடிவற்ற பயணங்கள் 1977 ஆம் ஆண்டில் கோடை காலப்பகுதியில் சில மாத இடைவெளியில் வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இவற்றின் முக்கிய செயற்திட்டம் வியாழன், சனி மற்றும் சனியின் வளையங்களை மிக அருகில் சென்று ஆய்வு செய்வது. மேலும் இந்த இரண்டு கோள்களின் பெரிய துணைக்கோள்களையும் ஆய்வுசெய்வதும் ஆகும். இந்த இரண்டு கோள்களையும் ஆய்வு செய்யப் போதுமானதாக குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது தொழிற்படக்கூடியவாறு வொயேஜர் விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டன. வியாழன், சனி ஆகிய கோள்களை ஆய்வு செய்யவென புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு அதற்கும் அப்பால் இருக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களையும் அருகே சென்று நோட்டம் விட்டு பூமியில் இருக்கும் மூளைகளுக்கு பல புதிய விருந்துகளை அனுப்பிவைத்தன. வொயேஜர் விண்கலம் பூமியில் இருந்து புறப்படும் போது அவற்றின் நோக்கம் ஐந்து வருடங்களில் வியாழன், சனி ஆகிய கோள்களையும் அவறின் துணைக் கோள்களையும் ஆய்வு செய்வதே, ஆனால் பூமியில் இருந்து அவற்றை வெற்றிகரமான ப்ரோக்ராம் செய்து ஐந்து வருட திட்டத்தை 12 வருட திட்டமாக மாற்றி மாற்றிய இரண்டு கோள்களையும் ஆய்வு செய்து இன்று நாற்பது வருடங்களாக வெற்றிகரமாக விண்வெளியில் சூரியத் தொகுதியைவிட்டு விண்மீனிடைவெளி நோக்கி இந்த இரண்டு வொயேஜர் விண்கலங்களும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. பல விஞ்ஞான புத்தகங்களை மாற்றி எழுதும் அளவிற்கு நான்கு கோள்களைப் பற்றியும், அவற்றின் 48 துணைக்கோள்களைப் பற்றியும், கோள்களின் காந்தப்புலம் பற்றியும் எண்ணிலடங்கா தகவல்களை வொயேஜர் விண்கலங்கள் திரட்டித் தந்துள்ளன. விண்ணியலிலும், கோள் விஞ்ஞானத்திலும் பல புதிய பாதைகளை வொயேஜர் விண்கலங்களின் தரவுகள் திறந்துவைத்தது எனலாம். 1970 களின் கடைசியில் அமைந்த அபூர்வமான கோள்களின் சுற்றுப்பாதை அமைப்பினால் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை குறைந்தளவு எரிபொருள் கொண்டு, குறைந்த காலப்பகுதியில் சென்றடையக்கூடிய சாத்தியக்கூறு உருவானது. இப்படியான சுற்றுப்பாதை அமைப்பு ஒவ்வொரு 175 வருடங்களுக்கு ஒருமுறை வரும். இந்த அமைப்பினால் ஒரு கோளைச்சுற்றிவிட்டு அடுத்த கோள் என கோள்களின் ஈர்புவிசையை கவன்போல பாவித்து குறைந்த எரிபொருளில் பயணித்துவிட முடியும். இப்படியாக ஈர்புவிசையை பாவித்து வேகத்தை அதிகரித்து பயணிப்பது “ஈர்ப்பு உதவி” என அழைக்கப்படுகிறது. 1973-1974 காலப்பகுதியில் நாசா வெள்ளி, மற்றும் புதனை ஆய்வு செய்ய அனுப்பிய மேரினர் 10 விண்கலம் ஈர்ப்பு உதவியைப் பயன்படுத்தி பயணம் செய்ததால் நாசாவிற்கு ஏற்கனவே இந்த முறையை எப்படி வெற்றிகரமாக பயன்படுத்துவது என்று தெரிந்திருந்தது. இந்த ஈர்ப்பு உதவி முறையை பயன்படுத்தினால் இறுதியாக இருக்கும் நெப்டியூனை சென்றடைய 30 வருடங்களுக்கு பதிலாக வெறும் 12 வருடங்களே போதும். நான்கு கோள்களையும் ஆய்வு செய்வது முடியுமான காரியம் என்று தெரிந்தாலும், நான்கு கோள்களையும் ஆய்வு செய்யக்கூடியவாறு விண்கலத்தை உருவாக்குவது மிகவும் செலவு மிக்கதாக அமையும் என்று நாசா கருதியது. அவ்வளவு தொலைவு பயணிப்பதற்கும், நீண்ட காலத்திற்கு ஆய்வுக் கருவிகளை செயலிழக்காமல் பாதுகாப்பதும் மிகவும் கடினமான காரியமாகும். இதனால் வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை மட்டுமே வொயேஜர் விண்கலங்கள் ஆய்வு செய்யுமாறு திட்டம் வடிவமைக்கப்பட்டது. 10,000 இற்கும் அதிகமான பயணப்பாதைகள் கருத்தில் எடுக்கப்பட்டு இறுதியாக இரண்டு பாதைகள் தெரிவு செய்யப்பட்டன. இந்தப் பாதைகள் வியாழன் மற்றும் அதன் துணைக்கோள் Io, சனி மற்றும் அதன் பெரிய துணைக்கோள் டைட்டன் ஆகியவற்றை அருகில் சென்று ஆய்வு செய்யவும், பின்னர் வொயேஜர் 2 முடியுமானால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை சென்றடையுமாறும் தெரிவுசெய்யப்பட்டன. நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து வொயேஜர் 2 ஆகஸ்ட் 20, 1977 இல் முதலில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வொயேஜர் 1, செப்டெம்பர் 5, 1977 இல் வேகமானதும் குறைந்த தூரம் கொண்ட பாதையில் செல்லுமாறு விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த இரண்டு வொயேஜர் விண்கலங்களும் Titan-Centaur ராக்கெட் மூலம் விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டது. வேகமாக பயணித்த வொயேஜர் 1, வியாழனை மார்ச் 5, 1979 இல் அடைந்தது. அதன் பின்னர் சனியை நவம்பர் 12, 1980 இல் அடைந்தது. வோயஜெர் 2 விண்கலம் வியாழனை ஜூலை 9, 1979 இலும், சனியை ஆகஸ்ட் 25, 1981 இலும் அடைந்தது. வோஜெயர் 1 இன் பயணப்பாதை விண்கலத்தை சனியின் துணைக்கோள் டைட்டன் இற்கு மிக அருகிலும், சனியின் வளையங்களுக்கு பின்னாலும் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. வோஜெயர் 2 இன் பயணப்பாதை சனிக்கு அருகில் சென்றால் அதன் ஈர்ப்புவிசையால் வொயேஜர் 2 யுரேனஸை நோக்கி பயனப்ப்படுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. சனிக்கு அருகில் வொயேஜர் 2 செல்லும் போது, அதனது ஆய்வுக்கருவிகள் எல்லாம் நல்ல நிலையில் இருந்ததால் யுரேனஸை நோக்கி முழு செயற்பாட்டுடன் பயணிக்கக்கூடியவாறு இருந்தது. பூமியில் நாசா வொயேஜர் 2 ஐ யுரேனசிற்கு செலுத்தும் திட்டத்தை தொடங்கியது. மேலும் அதனை நெப்டியுனுக்கு செல்லும் திட்டமாகவும் மாற்றியமைத்தது. வொயேஜர் மற்றும் பயனியர் விண்கலங்களின் பயணப்பாதைகள் வொயேஜர் 2 ஜனவரி 24, 1986 இல் யுரேனஸை சென்றடைந்தது. முதன்முதலாக பூமிக்கு யுரேனஸ், அதன் துணைக்கோள்கள், அதன் காந்தப்புலம் மற்றும் யுரேனஸை சுற்றிய கருப்பு வளையும் ஆகியவற்றின் படங்கள் மற்றும் தரவுகளை அனுப்பிவைத்தது. இதே காலப்பகுதியில் வொயேஜர் 1 சூரியத் தொகுதியை விட்டு வடக்கு நோக்கி வெளியே செல்லும் பாதையில் பயணத்தை தொடர்ந்தது. மனிதன் உருவாக்கிய கருவிகளில் இதனது கருவிகள் தான் முதன் முதலாக heliopause பிரதேசத்தை உணரும். Heliopause எனப்படுவது சூரியனது காந்தப்புலத்தின் எல்லை முடிவடைந்து விண்மீனிடைவெளி (interstellar space) தொடங்கும் பிரதேசமாகும். ஆகஸ்ட் 25, 1989 இல் நெப்டியுனை நெருங்கிய வொயேஜர் 2, அதன் பின்னர் தெற்கு நோக்கி விண்மீனிடைவெளி பிரதேசத்திற்கு பயணத்தை தொடங்கியது. இரண்டு வொயேஜர் விண்கலங்களும் விண்மீனிடைவெளியை நோக்கி பயணிப்பதால், இன்று வோஜெயர் திட்டம் – வோஜெயர் விண்மீனிடைவெளித் திட்டம் என அழைக்கப்படுகிறது. இன்று வொயேஜர் 1 பூமியில் இருந்து 20 பில்லியன் கிமீ தொலைவில் ஏற்கனவே விண்மீனிடைவெளியில் பயணித்துக்கொண்டிருகிறது. ஆகஸ்ட் 2012 இல் வொயேஜர் 1 விண்மீனிடைவெளியை அடைந்துவிட்டது. இதனது தற்போதைய வேகம் (சூரியனுக்கு சார்பாக) செக்கனுக்கு 16.9 கிமீ. வொயேஜர் 2 தற்போது Heliosheath எனப்படும் பிரதேசத்தில், பூமியில் இருந்து 17 பில்லியன் கிமீ தொலைவில் பயணிக்கிறது. Heliosheath எனப்படும் பிரதேசம் heliosphere பிரதேசத்தின் வெளி எல்லையாகும். இந்தப் பிரதேசத்தின் சூரியக்காற்றின் (solar wind) விண்மீனிடைவெளி வாயுக்களின் அழுத்தத்தால் குறைவடையும். இதன் தற்போதைய வேகம் செக்கனுக்கு 15.3 கிமீ (சூரியனுக்கு சார்பாக). வோஜெயர் விண்கலங்கள் அதனது சக்தி முதலில் இருந்து சக்தி கிடைக்கும் வரை தொடர்ந்து எமக்கு அது சேகரிக்கும் தரவுகளை அனுப்பிக்கொண்டே இருக்கும். அணுச் சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உருவாகும் இந்த வோஜெயர் விண்கலங்களில் வொயேஜர் 1 இன் சக்திமுதல் 2025 வரை தொழிற்படும் எனவும் வோஜெயர் 2 இன் சக்திமுதல் 2020-2025 வரை தொழிற்படும் எனவும் கணக்கிட்டுள்ளனர். எனவே குறைந்தது அந்தக் காலம் வரை தொடர்ந்து எமக்கு தரவுகளை இந்த விண்கலங்கள் அனுப்பிக்கொண்டே இருக்கும். அதன் பின்னர் எமக்கு இவை தகவல்களை அனுப்பாவிட்டாலும் தொடர்ந்து அதனது வேகத்தில் பயணித்துக்கொண்டே இருக்கும். இன்னும் 300 வருடங்களில் வொயேஜர் 1 ஊர்ட்மேகம் எனப்படும் பிரதேசத்தை அடையும். ஊர்ட்மேகம் எனப்படும் பிரதேசம் சூரியனைச் சுற்றிக் காணப்படும் ட்ரில்லியன் கணக்கான சிறிய பனிப்பாறைகளால் ஆன பிரதேசமாகும். அண்ணளவாக 50,000 AU தொடக்கம் 200,000 AU (0.8 ஒளியாண்டுகள் தொடக்கம் 3.2 ஒளியாண்டுகள் வரை) வரை இந்தப் பிரதேசம் அகண்டு காணப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பிரதேசத்தைக் கடக்க வோஜெயர் 1 இற்கு அண்ணளவாக 30,000 வருடங்கள் எடுக்கும். வோஜெயர் 1 எந்தவொரு விண்மீனையும் நோக்கி பயணிக்கவில்லை, எனவே ஊர்ட்மேகப் பிரதேசத்தை கடந்தவுடன், ஏதாவது விண்பொருளுடனும் முட்டிமோதாவிட்டால் பால்வீதியில் தன்னந்தனியாக பயணித்துக்கொண்டே இருக்கும். வோஜெயர் 2 விண்கலம் 2016 இல் விண்மீனிடைவெளியை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது 2019 அல்லது 2020 இல் இது விண்மீனிடைவெளியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வொயேஜர் 2 விண்கலமும் எந்தவொரு விண்மீனையும் நோக்கி பயணிக்கவில்லை எனவே இதுவும் வொயேஜர் 1 ஐ போல பால்வீதியில் உலாவரும். வொயேஜர் விண்கலங்களைப் பற்றி மேலும் சுவாரஸ்யமான விடையம் ஒன்று உண்டு. இந்த இரண்டு விண்கலங்களும் தங்கத்தாலான தரவுத் தட்டுக்களை கொண்டு செல்கின்றன. வேறு ஏதாவது அறிவுள்ள ஏலியன்ஸ் உயிரினம் வொயேஜர் விண்கலங்களை கண்டறிந்தால், அவற்றில் உள்ள தரவுத் தகட்டில் இருந்து பூமியைப் பற்றியும் அதன் அமைவிடம் பற்றியும் அறிந்துகொள்ளமுடியும். வொயேஜர் விண்கலங்கள் கொண்டு செல்லும் தங்கத்தரவுத் தகடு. பூமியின் படங்களும், பூமியில் உள்ள உயிரினங்களின் படங்களும், உலகின் 55 மொழிகளில் வணக்கம் தெரிவித்து செய்திகளும், பூமியின் இயற்கை ஒலிகள், குழந்தை அழும் சப்தம், அலைகளின் சப்தம், மற்றும் மொஸார்ட் போன்ற மேதைகளின் இசையமைப்புகளும் என்று பல விடையங்களை இந்த தங்கத் தகடு கொண்டுள்ளது. மனித இனமே அழிந்தாலும் மனிதன் என்கிற அறிவுள்ள உயிரினம் வாழ்ந்ததற்கு சாட்சியாக வொயேஜர் விண்கலங்கள் பால்வீதியை சுற்றிவரலாம். தகவல்கள்: நாசா, விக்கிபீடியா, இணையம் மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam https://parimaanam.wordpress.com/2017/09/06/voyager-spacecrafts-40-years/- ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு
ஒரு செய்தியை இப்படியெல்லாம் புரட்டலாமா 🤣 6 ஆயிரம் பேர் உயிரிழந்தது தவிர கைது செய்யப்பட்ட பல்லாயிரம் மக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட ஒரு லட்சம் பேரை மேற்கு நாடுகள் பயிற்சியளித்து உள்ளே அனுப்பியிருக்குமா ? இந்த ஒரு லட்சம் பேர் நாட்டிற்குள் ஊடுருவியதைக் கூட ஈரானால் அறிய முடியவில்லை என்கிறீர்கள். 😎- மனித உரிமை ஆர்வலர் ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி!
மனித உரிமை ஆர்வலர் ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி! 27 Jan, 2026 | 04:37 PM எங்களால் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்றவர் மனித உரிமை போராளி ரி.குமார் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆர்வலர் ரி.குமார் என்று அழைக்கப்படும் த.முத்துக்குமாரசாமி அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்…. 146,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், 30,000க்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் நீதி வேண்டி நாங்கள் இன்றும் அமெரிக்காவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த நீண்ட போராட்டப் பயணத்தில், ரி. குமார், என்றழைக்கப்படும் தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களை ஆழ்ந்த நன்றியுடனும், மரியாதையுடனும், துயரத்துடனும் நினைவுகூருகிறோம். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் அரசியல் முயற்சிகளின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில் அவர் தமிழ் அரசியல் தலைமைத்துவத்தின் இரண்டாம் தலைமுறையில் ஒரு முக்கிய ஆளுமையாக உருவெடுத்தார். முறிந்துபோன வாக்குறுதிகளுக்கும், பாராளுமன்ற அரசியலின் மாயைகளுக்கும் அப்பால், அவர் மனித உரிமைகள், சர்வதேச சட்டம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை தமிழ் மக்களின் போராட்டத்தின் மையத்தில் வைத்தார். அம்னெஸ்டி இன்டர்நேஷனலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கைதியாகவும், 'மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட கைதியாகவும்', குமார் துன்பத்தை ஒரு கோட்பாடாக அல்லாமல், ஒரு நேரடி யதார்த்தமாக அனுபவித்தார். அவரது கல்விஅறிவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதிக்காக முழுமையாக அர்ப்பணித்தார். வாஷிங்டன் டி.சி. மற்றும் ஜெனீவாவில், T. குமார் தமிழர்களுக்காகப் பேசிய மிகவும் செல்வாக்கு மிக்க மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவராக இருந்தார். அந்த வேதனையை அவர் அமெரிக்க காங்கிரஸ், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை மன்றங்கள் வரை எடுத்துச் சென்று, தமிழர்கள் அனுபவித்த துயரங்களை உலகிற்கு வெளிப்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரங்களின் போது, கொழும்பில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழர்களை, லங்கா ராணி என்ற பயணக் கப்பல் மூலம் தமிழ் தாயகமான வடகிழக்கிற்குச் செல்ல T. குமார் அவர்கள் முக்கியப் பங்காற்றினார். 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரங்களின் போது, அவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் இருந்தபோதும், அகதி முகாம்களில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு வழிகாட்டி, பல தமிழர்கள் பாதுகாப்பாகத் தங்கள் தாயகத்தை அடைய உதவினார். உள்நாட்டு விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது; ஒரு சர்வதேச விசாரணை அவசியம் என்றார்.இன்றைய வரலாறு அவரது எச்சரிக்கையை உண்மையென நிரூபித்துள்ளது. சர்வதேச மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் ஒரு சுயநிர்ணய வாக்கெடுப்பு மட்டுமே தமிழ் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான ஜனநாயக வழி என்று ஆழமாக நம்பினார், மேலும் அதற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடினார்.குரலற்ற மக்களுடன் அவர் உறுதியாக நின்றார்.நாங்கள் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்ற ஒரு மனிதர் என்றனர். https://www.virakesari.lk/article/237163- பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்றவர் கைது!
பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்றவர் கைது! Jan 27, 2026 - 08:59 PM வட்டுக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்தபோதே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச். புத்திக்க சிறிவர்தனவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சான்றுப் பொருட்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmkwr4rs704i7o29neuwegeco- 🚀 அதிசயம் ஆனால் உண்மை – விண்வெளியில் ஒரு வரலாற்று சாதனை: பூமியிலிருந்து ‘ஒரு ஒளி நாள்’ தொலைவில் வொயேஜர் 1!
வொயேஜர்- 1, 1977 செப்டெம்பர் மாதம் செலுத்தினார்கள். வோயேஜர் 2 என்ற இன்னொரு கலத்தை '77 ஆகஸ்ட் மாதம் செலுத்தினார்கள். இரண்டுமே, பூமியில் இருந்தும், சூரியனில் இருந்தும் மிகத் தொலைவிற்குப் போய், யுரேனஸ், நெப்ரியூன் ஆகிய இரு கிரகங்களையும் கடந்து பறந்து படங்களைப் பூமிக்கு அனுப்பிய பின்னர், தற்போது அகிலப் பெருவெளியில் இன்னும் தகவல்களை அனுப்பியவாறு பறந்து கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே சாதனை தான். இரண்டு கலங்களினதும் செயல்பாடுகளை நாசா தளத்தில் பின் தொடர முடியும். NASA ScienceWhere Are Voyager 1 and 2 Now? - NASA ScienceBoth Voyager 1 and Voyager 2 have reached "interstellar space" and each continue their unique journey deeper into the cosmos.- வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
அமைச்சரவைத் தீர்மானம். வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்! --- --- --- *வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்கள் தெளிவில்லை... *ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா? *மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் மாத்திரமா? *முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பிய கடிதம்... -- -- --- வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, தேர்தல் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்வது தொடர்பாக. 23 /09 /2025 இல் இடம்பெற்ற அமைச்சவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. நடவடிக்கை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் -- 26/1 என்று மாத்திரம் குறிப்பிட்டு திகதியிடப்படாமல், ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதத்தை குறித்த குழு அனுப்பியுள்ளது. அதாவது -- தங்கள் பிரதேசங்களில் இருந்து, வெளிநாடுகளில் வாழ்வோர் பற்றிய விபரங்களை வழங்கமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. முடிவுத் திகதி ஜனவரி 31 ஆனால் -- இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை கூட்டம் முடிவடைந்து, இரண்டரை மாதங்களின் பின்னர் அதுவும், முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தான், கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் கடிதங்களை குறித்த குழு அனுப்பியிருக்கிறது. கோரப்பட்டுள்ள நான்கு அம்சங்களும் வருமாறு --- 1) வெளிநாடுகளில் இருக்கிற தேருநர்களை தேர்தல் இடாப்பில் பதிவு செய்தல். 2) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள். 3) வாக்களித்தல் 4) வாக்கெண்ணுதல். என்ற நான்கு அம்சங்கள் பற்றியும் கட்சிகளின் கருத்துகள் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளன. ஆனால், கடிதத்தில் கோராப்பட்டுள்ள முதலாவது அம்சம் தொடர்பாக கேள்விகள் எழுகின்றன. A) “வெளிநாடுகளில் வாழ்வோர்” என்றால், ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச் சீட்டுடன் வாழ்வோரும் உள்ளடக்கமா? B) அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பொறியியலாளர்கள், போன்ற உத்தியோகஸ்த்தர்களாக பணிபுரியும் இலங்கையர்கள் மாத்திரம் வெளிநாடுகளில் வாழ்வோர் என்று அர்த்தப்படுத்தப்படுகிறதா? ஆகவே -- இந்த விடயங்கள் செயலாளர்களுககு அனுப்பியுள்ள கடிதத்தில் விபரமாக இல்லை. அதாவது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க முடியும் என்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானம் விளக்கமாக கடிதத்தில் இல்லை. இவை பற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு சிங்களக் கட்சியும் இதுவரை விளக்கம் கோரவுமில்லை. குறிப்பாக -- வடக்கு கிழக்கு தமிழர்கள் அதுவும் யாழ்ப்பாண தமிழர்கள் பலர், ஐரோப்பிய, ஸ்கண்டிநேவிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச்சீட்டுடன் வாழ்கின்றனர். வேறு சிலருக்கு இரட்டைப் பிரஜாவுரிமையும் உண்டு... ஆகவே, வாக்களிக்கத் தகுதியான வெளிநாட்டவர்கள் யார் என்பது பற்றி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சு அல்லது வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தெளிவுபடுத்த வேண்டும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0sy9i7wSuEkL3QrrHoM3vE75bMhAMhLtm8YvAKXu4e8zTumtqAe3YfC3PQ33c9b2cl/?ஈழப்பிரியன் started following வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!- யாழில் இந்திய குடியரசு தினம்!
வரலாறு அப்படி சொல்லவில்லையே உங்களுக்கு தெரியாத ஒன்றல்ல .... .
Important Information
By using this site, you agree to our Terms of Use.