Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருள்கள்! Published By: Vishnu 22 Mar, 2026 | 07:02 PM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருள்கள் ஞாயிற்றுக்கிழமை (22) மீட்கப்பட்டன. ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 4700 லீட்டர் டீசல், 800 லீட்டர் பெற்றோல் மற்றும் 400 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன யாழ். மாவட்ட குற்றதடுப்புபிரிவால் கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/241677
  3. இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு! நாட்டின் ஆங்கில ஊடகச் சேவை ஒன்று வெளியிட்ட தகவலின்படி, இலங்கையின் கடலோர பகுதிகளில் சுமார் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சலிய விக்ரமசூரியவை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட இந்த தகவலின்படி, நாட்டின் எல்லைக் கடல் பகுதி மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டல கடலடியில் “பல பில்லியன் பீப்பாய்கள்” மசகு எண்ணெய் இருப்பதற்கான சாத்தியக்கூறும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் இலங்கையின் கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இது இலங்கையின் கடல்சார் வளங்களின் சாத்தியங்களைப் பற்றிய புரிதலை மேலும் மேம்படுத்தியுள்ளது. எனினும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் மற்றும் ஆய்வு உரிமங்களை வழங்கும் செயல்முறை ஆரம்ப கட்டத்தில் இன்னும் இருப்பதால் வணிக ரீதியான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இன்போதைக்கு சாத்தியில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. இலங்கை கடல்சார் ஆய்வில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் முதலீட்டாளர் நம்பிக்கையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு, 2021 ஆம் ஆண்டின் பெற்றோலிய வளங்கள் சட்டம் உள்ளிட்ட ஒரு புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. “இலங்கையை ஆராயுங்கள்” திட்டத்தின் கீழ், சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் பரந்த பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், அதிகாரிகள் பாரம்பரிய ஏலச் சுற்றுகளிலிருந்து திறந்த உரிம முறைக்கு மாறி, கடலோரப் பகுதிகளைச் சிறிய தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பல உலகளாவிய நிறுவனங்கள் இலங்கையின் கடலோர வளங்களை ஆராய்வதில் ஏற்கனவே ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1469607
  4. தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து! மோசமான வானிலை காரணமாக, திங்களன்று (23) அதிகாலை லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் ஒன்று தரையில் இருந்த வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நியூயோர்க்கின் விமானப் பயண கண்காணிப்புத் தரவுகள் மற்றும் உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் CRJ-900 விமானம், ஓடுபாதையில் இருந்த ஒரு தீயணைப்பு வாகனம் மீது மோதியதாக நியூயார்க் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ளது. இந்த விபத்தில் நான்கு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவசரகால மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், பயணிகள் விமானத்தின் மூக்குப் பகுதியிலும் முன்பகுதியிலும் ஏற்பட்ட சேதம் காணப்பட்டது. விபத்தின் போது, விமானத்தில் சுமார் 100 பயணிகள் இருந்ததாகவும், அவர்களின் உடல்நிலை மதிப்பிடப்பட்டு வருவதாகவும் நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2026/1469633
  5. ஈரான் பலமாகவுள்ளது. ட்ரம்ப் கனவு காண்கிறார்!!! --- --- அமெரிக்க ஈகோ படி இறங்காது என்கிறார் ஈரானிய ஆய்வாளர் --- --- ட்ரம்ப் நினைப்பது போன்று, 48 மணிநேர காலக்கெடு அர்த்தமற்றது என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளரும் பத்திரிகையாளருமான (Center for Middle East Strategic Studies and a journalist) அபாஸ் அஸ்லானி (Abas Aslani) கூறியுள்ளார். ஈரான் படைகளிடம் எந்த ஒரு பலவீனத்தையும் காண முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் தன் அடையாள உணர்வு (Consciousness of one's identity) மேலோங்கி நிற்பதால், தற்போதைக்கு போர் நிறுத்தத்தை எதிர்பார்க்க இயலாது, என்ற தொனி இவருடைய ஆய்வின் உள்ளடக்கத்தில் தெரிகிறது. ஹார்முஸ் நீரிணை பகுதியை முழுமையாக மீண்டும் திறக்க வேண்டும் என ட்ரம்ப், வழங்கிய 48 மணி நேர கால அவகாசம், தொடர்பாக ஈரான் பெரிதாக அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை எனவும் அபாஸ் அஸ்லானி விபரித்துள்ளார். நீண்டகாலப் பாதுகாப்பு நோக்கில், ஒரு மூலோபாயச் சமன்பாட்டை நிறுவக்கூடிய தருணம் வரை போராட்டத்தைத் தொடர, அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால் அது சாத்தியமில்லை. ஏனெனில், தற்போதைய போர்ச் சூழலில் இருந்து ஈரான் பின்வாங்குவதற்கான அறிகுறிகள் இல்லை என்கிறார். இருந்தாலும், அமெரிக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஈரான் அதிகளவு விலைகொடுக்க நேரிடும் எனவும் அபாஸ் அஸ்லானி எச்சரிக்கிறார். அபாஸ் அஸ்லானி ஒரு ஈரானிய பத்திரிகையாளர், ஈரான் வெளியுறவுக் கொள்கை பற்றி எழுதுகிறார். தற்போது தஸ்னிம் நியூஸ் ஏஜென்சியின் (Tasnim News Agency) உலக மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றுகிறார். முன்பு ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சியில் (Fars News Agency) இதே பதவியை வகித்தவர். ஈரான் அணுசக்தி விவகாரங்கள்பற்றிய விமர்சன கட்டுரைகளை எழுதிவரும் இவர், அமெரிக்கவும் ஈரானும் தற்போதைக்கு ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து சமதான முயற்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை என வாதிடுகிறார். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0QuivbZr5voxqbCQC4RBGnEw5kj9XBondxjwo8JE5Nb3EDVL2oLF78g11hrS8BSVhl&id=1457391262&mibextid=wwXIfr
  6. Today
  7. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  8. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க 10 வருட பணமுறி 13 மற்றும் 11 புள்ளிகளால் அதிகரித்துள்ளது என கூறுகிறார்கள், மூடி அறிக்கையில் அமெரிக்காவில் 2026 இல் ரிசெசன் வருவதற்கு 49% வாய்ப்புக்கள் உள்ளதாக கூறுகிறார்கள், மேலதிக கடனிற்குள் மாட்டுப்படுவது இந்த நேரத்தில் சரியாக இருக்காது என்பதாலும் (முக்கிய காரணம்) மின்சார கார் கடனுக்குள் நுழையவில்லை.
  9. உக்கிரேன் போர் மேற்கின் புரொக்ஸி போர், ஈரானில் சீனா, இரஸ்சியா வெறும் உதவிகளே செய்கிறார்கள், ரஸ்சியாவுடனான போரிலும் மேற்கு தோற்கும், ஈரானுடனான போரில் அமெரிக்க இஸ்ரேல் கூட்டணி தோற்கும், இரண்டும் அடிப்படையில் சமச்சிரற்ற தேய்மான போராக இருந்தாலும் இரஸ்சிய போர் தாக்குதல் போர், ஈரானிய போர் தற்காப்பு போர்.
  10. நியுசவுத் வேல் மானிலத்திலேயே உள்ளேன். போர் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே என்னுடன் வேலை செய்யும் ஒருவர் சிட்னிக்கு வெளியே பெரும் தொலைவிலிருந்து வருபவர் ( வேலை நாள்களில் சிட்னியில் சகோதரி வீட்டில் தங்கியிருப்பவர்) 79 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை, டீசல் முற்றாக இல்லை என கூறினார் அப்போது பெற்றோல் விலை 2.19 இல் இருந்தது. அவர் கூறிய இடம் அவருக்கு தொலைவில் இருப்பதாக கூறினார். மின்சார கார் வாங்குவதற்கான முன் பதிவினையும் இரத்து செய்து எனது வைப்புபணத்தினையும் மீழ கோரியுள்ளேன். வீட்டில் செய்தி பார்ப்பார்கள், நான் பார்ப்பதில்லை (அதனால் தெரியாமல் இருந்திருக்கலாம்), ஆனால் நகர்புறங்களில்தட்டுப்பாடு இருக்காது என்றே கருதுகிறேன். வீட்டில் கூறினார்கள் பெரிய கொள்கலனில் மக்கள் பெற்றோல் வாங்குகிறார்களென, கோவிட் காலத்தில் டொய்லட் பேப்பரினை பெரியளவில் வாங்கி குவித்து ஒரு செயற்கையான தட்டுப்பாடினை உருவாக்கினார்கள்.
  11. சும்மா இருந்த நாட்டை சீண்டி, அவர்கள் கையில் அதிகாரம் கொடுத்துள்ளார்கள். பத்து ஆண்டுகளுக்கு தமக்கு இரானால் அச்சுறுத்தல் இல்லை என்றார் நெத்தன்யாகு, இரான் அமெரிக்காவோடு ஒத்து உறவாட வேண்டும் என்றார் ட்ரம்ப், இப்போ அமெரிக்கா இஸ்ரேலோடு தொடர்புள்ளவர்களுக்கே பாதுகாப்பே இல்லை என்கிறது இரான், அரபு நாடுகள் அமெரிக்காவோடு சேர்ந்து இயங்குவது பற்றி ஆலோசிக்கின்றன. இரண்டு முட்டாள்கள் சேர்ந்து சாதித்தது இவைதான். அதிக தலைக்கனம் இப்படித்தான் தலைகுனிவை ஏற்படுத்தும். தலை தப்பியது தம்பிரான் புண்ணியமென நினைத்து ஒதுங்க வேண்டும் இவர்கள்.
  12. எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து செய்பவர்கள் பெற்றோர். பிள்ளைகளோ; பெற்றோரை யோசியாமல், தங்கள் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்காமல், முடிவுகளை எடுத்து கடைசியில் அந்த முடிவால் பெற்றவர்களையே கொலைசெய்யுமளவுக்கு துணிகின்றனர், பின்னர் மீளாத துயரம், பழி, வாழ்க்கையில் இவர்களுக்கு கைகொடுக்க யார் வருவார்? தாய் வேண்டாமென ஓடிப்போன மகளை மீண்டும் கைகொடுத்து ஏற்றதே இந்த தாய் செய்த தவறு.
  13. 60, 65 தாண்டினாலே பிரச்சனை தான் போலும்.வீட்டுக்கார அண்ண உண்மையாக பாவம் தான்.🤭
  14. இந்த போரில் ஈரான் வென்றால் … அது வென்றதன் பின்பு…. சீனாவுக்கும், ரஸ்யாவுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் …. ஈரான் பற்றியும், ஷாஹி புக்காரி, ஷாகி முஸ்லிம் ஆகிய ஹதீசுகளிலும் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை காலம் உணர்த்தும். ஆனால் அப்படித்தான் நடக்கும் என்றால், அவர்கள் நம்புவது போல் அதுதான் உண்மையான மார்க்கம் என்றால், நாமும் அந்த சன்மார்கத்கை தழுவி… லாஹி லாஹி இல்லல்லாஹ் முகமது ரசூலல்லா என கலிமா சொல்லி, நிரந்தர சுவனத்தை ஏக வேண்டியதுதான்.
  15. சும்மா பகிடி விடாதையுங்கோ.... அவையல் புரட்சி படையினர்..40 வருசமா ஒற்றை தலைவன் என்றால் சும்மாவே .... அமேரிக்காவுக்கு எதிராக எவன் துவக்கை நீட்டுறானோ அவன் இடதுசாரி.... அமெரிக்கா தம்பதிகளை கடத்தினாலும் புரட்சிவாதி தான் ... அமெரிக்காவுக்கு பின் கதவால் ஆமா சொல்லி கதவி திறந்து விட்டு முன் கதை மூடி தாழ்பால் போட்டால் அவனும் புரட்சி திலகம் இடதுசாரி அம்மான்
  16. ஈரான் மறுத்தது உண்மை. அதே போல் நேட்டோவும் எங்கே இருந்து ஏவப்பட்டது என சொல்ல கடினம் என்பது போல் சொல்லி உள்ளது. நல்ல காலம் ஸ்டாமர் இருப்பதால் நாம் தப்பித்தோம். இப்ப பொரிஸ் பிரதமர் எண்டா எங்களையும் இழுத்து விட்டிருப்பார். இண்டைக்கு தம்பர் ஸ்டாமர் பற்றி மிக மோசமான ஒரு நகைசுவையை பகிர்ந்துள்ளார். ஸ்டாமர் மீது தம்பருக்கு செம்ம கடுப்பு. எப்படியாவது யூகேயை உள்ளே இழுக்க முயற்சிக்கிறன அமேரிக்கா, இஸ்ரேல். மேற்கை தம்பர் துண்டாடி விட்டார் என்பது உண்மையே. தம்பரின் 2ம் வெற்றிக்கு சிலமாதம் முன்பே தம்பர் வெல்வது உறுதி என தெரிந்ததும் இதை யாழில் பலர் எதிர்வுகூறி இருந்தனர். இன்றைய மேற்கு ஜேர்மன் தேர்தல் முடிவுகள் ஜேர்மானிய இனத்தவர் அல்லாதோர் மூட்டை கட்ட வேண்டிய காலம் நெருங்கி வருவதை உணர்துவதாக நான் நினைக்கிறேன். யூகேயில் கூட மே மாதம் எலக்சனில் போக்கு என்ன எண்டு தெரிய வரும். இலங்கை இரெட்டை குடியுரிமையின் பெறுமதி இனிமேல் பலருக்கு விளங்க ஆரம்பிக்கும்.
  17. வடகொரியாவை மறந்திட்டியல்,இவர்கள் தான் 1971 ஆம் ஆண்டு சிறிலங்கா தீவாரின்ட புரட்சிக்கு ஆயுதம் வழங்கியவர்கள் ..இவையளின்ட ஆயுத கப்பலை இந்திய காந்திய படைகள் கைப்பற்றினவையள் அத்துடன் சிலரை கைது செய்தவைள். அன்று இந்த தீவாரின்ட புரட்சி வெற்றியடைந்திருந்தால் ரோகண வீஜயவீரவின் மகன் இன்று ஜனாதிபதியாக இருந்திருப்பார்...நம்மட தமிழ் புரட்சிவாதிகளுக்கு அனுரா அம்மான் கிடைத்திருக்க மாட்டார்... ஈரான் இன்று இவ்வளவு கஸ்டப்பட வேண்டி வந்திருக்காது...சிறிலங்காவிலிருந்து ஈரானின் புரட்சி பயங்கரவாத படைகள் அமெரிக்காவை அதிரடி தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும். வடகொரியா,சீனா,ஈரான் போன்ற நாடுகளுடன் கூட்டு சேர்ந்து சிறிலங்கா தீவாரின் புரட்சி படை துவசம் பண்ணியிருக்கும்...ட்ரம்ப் வெனிசுலவை கைப்பற்றுவதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.. அனுரா அம்மான் இப்பவே அமெரிக்காவுக்கு தளம் தரமாட்டேன் என சொல்லுகிறார் என்றால் பாருங்க்கவன்
  18. Yesterday
  19. ரஸ்யா: ஒரு நம்பகமான கூட்டாளி இல்லை என்பதே வரலாறு சொல்லும் பாடம். இத்தனை வருடமாக நம்பி இருந்த ஆர்மேனியா ரஸ்யாவை நம்பி பலன் இல்லை என ஜென்ம வைரியான அசர்பைஜானிடம் கிட்ட தட்ட சரண் அடையும் ஒரு ஒப்பந்ததை போட தயாராகிறது. இந்த சண்டை காட்டிய மிக முக்கிய விடயம் 2. அமெரிக்கா எதிர்பாத்த்தை விட ஈரான் பலமாக உள்ளது தனது முழுப்பலத்தையும் போட்டு உக்ரேனில் ரஸ்யா காட்ட முடியாத பராக்கிரமத்தை, இந்த போரில் காட்டி, மரபுசாரா சமச்சீர் அற்ற போரில் தான் ரஸ்யாவை விட பலமானது என ஈரான் நிறுவியுள்ளது. என்னை பொறுத்தவரை அணு குண்டை தவிர்த்து பார்த்தால், ராஸ்யாவை விட ஈரான் பலமான இராணுவம் போலவே படுகிறது. ஒன்றில் ஈரானின் பின்னால் (உக்ரேனுக்கு பின் மேற்கு நிண்டது போல்) சீனா உள்ளது. அல்லது ஈரான் தனித்து இப்படி போராடுகிறது. ரஸ்யா மட்டும் அல்ல அமெரிக்காவின் அத்தனை எதிரிகளுக் 2016 இலும், 2024லிலும் தம்பர் வர வேண்டும் என்றே விரும்பி இருப்பார்கள். தம்பர் 2005 இலங்கை ஜனாதிபதியாகி இருந்தால் புலிகள் 2009 க்குள் தனிநாடு கண்டிருப்பார்கள். தம்பர் எதிரிகளுக்கு ஒரு அட்சய பாத்திரம்😂.
  20. நீங்கள் அவுசில் NSW வில் இல்லை போல் உள்ளது? அங்கே தட்டுப்பாடு ஓரளவு வர தொடங்கி விட்டது போல் தெரிகிறது. இதில் உள்ள வீடியோ நம்பகமானது என நினைக்கிறேன்.
  21. இல்லை ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவுக்கு ஒரு அரணாக தமிழரும், அவர்தம் நிர்வாக அலகும் இருக்கும். தலிபான்களோடு உறவு ஏன் இந்தியாவுக்கு? அவர்கள் இந்தியாவுக்காக சீனாவோடு போரிடுவர் என்றா? இல்லைத்தானே?
  22. ரஷ்யாவும் சீனாவும் நட்பு நாடுகள். ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு நட்பு நாடுகள். இந்த நட்பு நாடுகளுக்கு பல அதிக மூன்றாம் உலக நாடுகள் நட்பு நாடுகள். மேற்குலகில்.....ஐயோ பாவங்கள்.🤣 ஐரோப்பிய ஒன்றியம் எனும் பெயருக்குள் உள்ள நாடுகளுக்குள் ஒற்றுமை இல்லை.பெரிய பிரித்தானியாவுக்கும் ஒன்றியத்தில் ஈடுபாடில்லாமல் பிரிந்து போய் விட்டது. அந்த பிரித்தானியாவும் இப்போது பெற்றெடுத்து வளர்த்த அமெரிக்காவுடன் நல்ல மாதிரி இல்லை. கனடா நடுத்தெருவில்....அவுஸ்ரேலியா முழி பிதுங்கிய நிலை. அமெரிக்க அண்ணன் வாக்கு வேத வாக்கு என வாழ்நாள் முழுக்க நம்பியவர்களுக்கு டொனால்ட் ரம்ப் வைச்சு செய்கிறார். உலக அரசியல்/ பொருளாதார அரங்கில் இன்னொரு அணி உருவாக காரணமாக இருந்த அமெரிக்காவிற்கும் அண்ணன் மாண்புமிகு பெரு மதிப்பிற்குரிய டொனால்ட் ரம்ப் அவர்களுக்கும் கோடி நன்றிகள்.
  23. இந்த போரால் பல மக்கள் தேவையில்லாமல் இப்ப அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது,☹️ ரம்பின் அடுத்த இலக்கு வடகொரியா☠️
  24. இந்தியா ஈழதமிழரை அரவணைத்து செயற்பட்டு வடகிழக்கு முதலமைச்சராக அர்ச்சுனாவோ அல்லது கஜேந்திரகுமாரோ ஆட்சி செய்து கொண்டிருந்தால் அந்த நேரத்தில் சீனா இந்தியாவை தாக்கினால் இவர்களுக்கு பொலிஸ் அதிகாரம் இருந்தால் தங்களது பொலிசை அனுப்புவார்களா இந்திய உதவிக்கு
  25. உடையார்! எந்த நாட்டு மக்களும் போர் அழிவுகளை இழப்புகளை விரும்புவதில்லை. எல்லாம் அரசியல்வாதிகளின் சுய நலன்களுக்காகவே போர் முன்னெடுக்கப்படுகின்றது. ஈரான் போருக்கு பின்னர் அரேபிய நாடுகளுக்கு மேற்குலகின் மீது சினமும் வெறுப்பும் வரக்கூடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.