Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. தொழிற்சங்க மிரட்டல்களுக்கு அடிபணிந்து தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு 28 Jan, 2026 | 03:10 PM (செ.சுபதர்ஷனி) எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரைய யாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், சுகாதார சேவையில் நிலவும் மனிதவள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதே எமது இலக்காகும். வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைப்பதாகக் கூறிக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேறப்போவதாக மிரட்டி சம்பள உயர்வுகளைக் கோரும் எந்தவொரு தரப்பினரின் கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் பணியப்போவதில்லை. இவ்வாறானவர்களுக்கு எதனை வழங்கினாலும் அவர்கள் நாட்டை விட்டுச் செல்வது உறுதி. ஆனால், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டுக்காகத் தங்கி நின்று சேவையாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். கடந்த ஓராண்டு காலத்தில் சுகாதார அமைச்சுக்கு 10 ஆயிரம் ஊழியர்களை இணைத்துக்கொள்ள அனுமதி பெறப்பட்டு, அதில் 8 ஆயிரம் பேர் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக 4,141 தாதியர்கள் ஒரே கட்டமாக இணைக்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த பரீட்சைகள் தாமதமாகி, தற்போது 2025 இல் நடத்தப்பட்டு இந்த 213 உதவியாளர்களும் இன்று நியமனம் பெற்றுள்ளனர். அரசியல் அதிகாரங்களும் அமைச்சர்களும் மாறலாம், ஆனால் அரச சேவை நிலையானதாக இருக்க வேண்டும். பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் வைத்தியர்கள் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் முறையான பொறிமுறை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும். புதிய நியமனம் பெற்றவர்கள் இடமாற்றங்கள் குறித்துச் சிந்திக்காது, மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முன்வர வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237243
  3. கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு வாயில்கள் உத்தியோகபூர்வமாக திறப்பு Published By: Vishnu 29 Jan, 2026 | 04:24 AM கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாயில்கள் புதன்கிழமை (28) முதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. முதற்கட்டமாக நான்கு மின்னணு வாயில்கள் இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மின்னணு வாயில்கள் (e-Gate) திட்டமானது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் விமான நிலையத்தின் குடிவரவு நடைமுறைகளை விரைவாகவும், அதிக வினைத்திறனுடனும் முன்னெடுக்க முடியும் என முதன்மை குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த நவீன வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் குறைந்து, விமான நிலையச் சேவைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237279
  4. கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆரம்பகட்ட பணிகள்; இலங்கை கடற்படை உத்தியோகபூர்வ விஜயம் Published By: Vishnu 28 Jan, 2026 | 11:07 PM கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ விஜயமானது புதன்கிழமை (28) இடம்பெற்றது. குறித்த விஜயத்தில் நெடுந்தீவில் பிரதேசசெயலர் என். பிரபாகரன், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி P.பத்திநாதன் அடிகளார், பிரதேசசபை தவிசாளர் ச.சத்தியவரதன் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள் இணைந்துகொண்டனர். பக்தர்களின் உயரிய நலன்கருதி இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை பார்வையிட்டார். https://www.virakesari.lk/article/237276
  5. Today
  6. 15 நிமிடம் இசையை கேட்கவந்த செனட்ரர் 2 1/2 மணிநேரமாக மெய்மறந்து ரசித்து பாலமுருகனை வாழ்த்தி கெளரவப்படுத்தியுள்ளார்.
  7. Sildenafil பாவித்தால் 4-6 மணித்தியாலத்திற்கு உறுப்பினர்கள் எழுச்சியோடு இருக்கலாம் Tadalafil பாவித்தால் ஒன்றரை நாளுக்கு எழுச்சியோடு இருக்கலாம். துப்பாக்கியை கொடுத்து போதை இறங்கியதை விட இவற்றை இறக்கியிருந்தால் எழுச்சியோடு இருந்திருக்கலாம்
  8. ஆட்களை பொறுக்கியா இல்லையா என்பதை கண்டு பிடிக்கும் உங்கள் அளவீடு பிரமிக்க வைக்கின்றது.
  9. விசேடமான விடயம் எது என நினைவில் இல்லை. சாரை சாரையாக போராளிகள் அங்கும் இங்குமாக நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்கள். உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு எனும் பாடல் ஒலித்தது இப்போதும் காதுகளில் கேட்கின்றது. அன்றைய பொழுதுகளில் சைக்கிள் திருட்டு அதிகம். நிகழ்ச்சிக்கு வந்த பலரின் சைக்கிள்கள் களவாடப்பட்டது. பெல் மூடிகளும் திருடப்பட்டன. பெல் மூடிகளை மாலையாக அணிவித்து பிடிபட்ட ஓரிருவரை இயக்கம் மணிக்கூட்டு கோபுர சந்தியில் காண்பித்தது நினைவில் உள்ளது. இராணுவம் நிகழ்ச்சிகளை அப்போது குழப்பவில்லை. அது மண்டைதீவில் நிலைகொண்டு காணப்பட்டது. உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு பாடலை தேடல் செய்து பார்த்தேன். கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. https://tamileelamsongs.com/parani-paaduvom/
  10. Yesterday
  11. The Siege of Jaffna Fort by the LTTE in 1990 | Thuppahi's Blog அந்த நேரம் பலாலியில் நின்ற ஒரு சத்திர சிகிச்சை நிபுணரின் வாக்குமூலம். கொடுத்த விலை அதிகம் ஆனால் அரசு தாக்கு பிடிக்க முடியாமல்தான் பின்வாங்கியது. இது புலிகளின் வெற்றியே. ஒரு சியாமாசெட்டியும் பண்ணைக்குள் வீழ்த்தப்பட்டது.
  12. இது ஒரு வெறும் உளவியல் யுத்தமாகவே கருதுகிறேன் நடைமுறையில் இதன் பயன்பாடு அதன் பெறுபேறும் மிக மிக மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். இந்த காணொளியில் கூறப்படுவது போல மிகைப்படுத்தப்பட்ட விளைவுகளை எந்த ஒரு ஆயுதத்தினாலும் தேர்ந்தெடுத்த இலக்குகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்படுத்த முடியாது. வெனிசுலா அதிபர் இதனால் பாதிக்கப்படவில்லை எனவே மிக குறுகிய அளவான தனித்தனியான இலக்குககள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் அவ்வாறிருக்கையில் ஒட்டுமொத்த தற்காப்பு பொறிமுறைக்கெதிராக பரந்தளவிலான வகையில் இது பாவிக்கப்பட்டது போல கருத்துருவாக்கத்தினை இக்காணொளி ஏற்படுத்துகிறது அது தவறாக இருக்க வாய்ப்பு அதிகம். இந்த ஆயுதம் பரவலாக பாவிக்கப்பட்டதற்கான பாதிப்புக்களை மக்கள் உணர்ந்த மாதிரி எந்த செய்திகளும் வரவில்லை. விமான எதிர்ப்பு பாவிக்கப்படாமல் இருக்கப்படுவதற்காக அமெரிக்க தரப்பு கூறிய விடயம் இலத்திரனியல் போரியல் நடவடிக்கையினை மேற்கொண்டதாக ஆரம்பத்திலேயே கூறியிருந்தது, அதுதவிரவும் வேறு வதந்திகளும் அது தொடர்பில் உள்ளது.
  13. எனக்கு இப்படியான பொறுக்கி நண்பர்கள் இல்லை என்பதால் வீடியோ ஒன்றும் வரவில்லை! மேலும் பிரித்தானியா age verification ஐ கட்டாயம் என ஆக்கியுள்ளதால் சில பிரபலமான/பிரபலமற்ற பலான தளங்கள் எல்லாம் பார்க்கமுடியாது!🙁 👆🏿
  14. இவர் தான் தூய தமிழன் யார் யார் மற்றவர்கள் வெறுக்கபட வேண்டியவர்கள் என்று தமிழர்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டு திரிகின்றார்.
  15. கிருபன் பொய்ச் செய்திகளை இணைக்காதீர்கள். அப்படி இணைப்பதானால் காணொளிகளுடன் இணையுங்கள்.
  16. ஏன், விபுலானந்தன் போல ஒரு மாணவன் இறந்து கிடப்பதாகவும் சீன் காட்டலாம். ஆனால், உல்லாசப் பயணிகளாக வருவோர் உங்களை விட வரலாற்றுக்கு மரியாதை கொடுப்போராக இருப்பர் என நினைக்கிறேன்😎. அதனால் தகவல் பலகைகளே போதும் அவர்களுக்கு!
  17. திலீபன் நினைவு நாளில் தாக்குதல் நடத்தப்பட்டதாக நினைவுள்ளது, ஆனால் வெளியேறுவதற்கு வசதியாக வழியினை உருவாக்கியிருந்ததனால் சண்டை ஆரம்பித்தது அதனூடாக பின்வாங்கி சென்றிருந்தனர். முத்தமிழ் விழா புலிகளால் நடத்தப்பட்டது அதன் தொடர்ச்சியாக என்பதாகவே நினைவுள்ளது, அதில் ஒரு விசேடமான விடயம் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகிறது, நீங்கள் அதில் கலந்து கொண்டமையால் உங்களுக்கு அது நினைவுள்ளதா?
  18. நீங்கள் கூறுவது போல தமிழ்த்தேசியத்திற்கு ஒரு நீண்ட வரலாற்று ரீதியான வரலாறு உள்ளது, தற்போதய நிலையில் தமிழ் தேசியம் சாதகமற்ற நிலையில் உள்ளது ஆனால் அதன் மீழெழுச்சியினை தடுக்க முடியாது, ஏனெனில் அதன் வரலாறு அவ்வாறானது. ரே டாலியோவின் மாறும் உலக ஒழுங்கினை கையாழ்வது எவ்வாறு எனும் புத்தகத்தின் குறிப்புகளடங்கிய காணொளிகளை முன்னரும் யாழ்களத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் குறிப்பிட்ட சாம்ராஜ்ஜியங்களிற்குள்ள பொதுவான குணநலனை கொண்டதாக தமிழ்த்தேசியமும் உள்ளது, அதனால் தமிழ்த்தேசியம் மீழெழுச்சி பெறும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு ஆனால் நிகழ்கால சூழல் நிலை சாதகமற்றதாக உள்ளதாக கருதுகிறேன். இது அந்த புத்தகத்தின் சுருக்கிய வடிவம்.
  19. இராணுவம் வெளியேறியதும் சிறிது காலத்தில் கோட்டை உடைப்பு தொடங்கிவிட்டது. அப்போதைய காலத்தில் இயக்கத்தை விட்டு வெளியேற விரும்பியவர்களுக்கு கோட்டை இடிப்பு தண்டனையாக கொடுக்கப்பட்டது. பொதுவாக தண்டனைக்காலம் மூன்று மாதங்கள் கோட்டை இடிப்பு என கேள்விப்பட்டுள்ளேன். கோட்டையில் இடிக்கப்பட்ட கற்களை இயக்கம் பின்னர் பல்வேறு தேவைகளிற்கு பயன்படுத்தியதாக நினைவு. கோட்டைக்குள் எதிர்காலத்தில் மீண்டும் இராணுவம் வரக்கூடாது என்பது அடிப்படை காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. கோட்டை இராணுவ முகாமை தகர்ப்பதற்கு விடுதலை புலிகள் அமைப்பு கொடுத்த விலை, உயிர்த்தியாகங்கள் அதிகம். அனைத்து கோட்டை தாக்குதல்களும் தோல்வியிலேயே நிறைவடைந்தன. கோட்டை முற்றுகை இராணுவம் தாமாக வெளியேறியதுடன் நிறைவுக்கு வந்தது. 1995ம் ஆண்டு இறுதிகளில் இலங்கை படைகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்வரை கோட்டை இடிப்பு தொடர்ந்தது. இடிப்பு இதனால் முழுமை பெறவில்லை. கோட்டை இராணுவ வெளியேற்றத்தின் பின் முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றதும், அதைப்பார்க்க சென்று வந்ததும் நினைவில் உள்ளன. கோட்டையில் உயரமாக சென்றி பொயிண்ட் அமைத்து அதில் சினைப்பர்கள்/குறி பார்த்து சுடும் இராணுவத்தினர் துவக்கை யாழ் மத்திய கல்லூரி நோக்கி நீட்டுவதாக காண்பிக்கலாம். சுற்றுலா பயணிகளிக்கு வரலாறு தெரியவேண்டும் அல்லவா.
  20. அவர் பார்க்கப்போனது மாதா கோயிலை நீங்க வேற கனவில இருக்கீங்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.