அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
தத்துவமேதை காரல் மார்க்ஸ் ஒரு வழக்குரைஞரின் குடும்பத்தில், 1818 மே 5-ல் பிரஷ்யவின் ரைன் மாநிலத்தில், திரிர் என்ற நகரத்தில் ஹைன்ரிக் மார்க்ஸ் - ஹென்ரிட்டே தம்பதிக்கு மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார். இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் காரல் மார்க்ஸூக்கு அப்போது இருந்தனர். திரிர் உயர்நிலைப்பள்ளியில் 1830 முல் 1835 வரை மார்க்ஸ் பயின்றார். பள்ளி இறுதி வகுப்பில் நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில், ‘என்ன வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள்’ என்று தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது அவருக்கு வயது பதினேழு. தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும், குறிக்கோளும் என்ன? என்பதை மார்க்ஸ் அந்தக் கட்டுரையில் க…
-
- 9 replies
- 7.6k views
-
-
மாயத்தோற்ற ஊக்கிகள் டி.கே. அகிலன் ஒரு குறிப்பிட்ட மனநிலையில், புலன்களின் தூண்டுதல் இல்லாமல் மனம் உருவெளிக் காட்சிகளை தோற்றுவிப்பதை மாயத்தோற்றம் எனலாம். மரணத்தின் அருகாமையில் சென்று மீண்டு வந்தவர்கள், தாம் மரணத்தை எதிர்கொண்ட அனுபவங்களைக் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த அனுபவங்கள் ஒருவகையில் மாயத்தோற்றங்களே. தியானப் பயிற்சிகளை கற்பவர்கள், அவர்கள் முதல் தியான அனுபவத்தைக் கூறுவதையும் நாம் கேள்விப்பட்டிருக்கக் கூடும். இந்த தியான அனுபவங்கள் பெரும்பாலும், அவர்கள் புருவமத்தியில் ஒரு ஒளி தோன்றி அவர்கள் தியானத்தை வழிநடத்தியது. அல்லது அவர்கள் மூலாதாரச் சக்கரத்தில் அசைவை உணர்ந்தது, அல்லது இவற்றைப்போன்ற சில அனுபவங்களாக இருக்கும். இப்படி அனுபவங்களாகக் கூறப்படுபவ…
-
- 0 replies
- 687 views
-
-
மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகியனவாகும். கி.மு 11,000 – மாயன் பகுதிகளில் மக்கள் முதன் முதலாக குடியேறத் துவங்கினர். இவர்கள் அக்கம்பக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதபடுகிறது. இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டு வாழ்ந்தார்கள். கி.மு. 2600 - மாயன் நாகரிக தொடக்கம். மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபட துவங்கினர். கி.மு. 700 - மாயங்களின் எழுத்துக்கள் தொடங்கின. இவை சி…
-
- 0 replies
- 10.3k views
-
-
நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இந்த தேடலில் நீங்களும் பங்கேற்கலாம் என்பது தான். ரேடாரின் கண்களில் இருந்து விலகிச்சென்ற மலேசிய விமானம் எங்கு போனது , எந்த திசையில் போனது என்று தெரியவில்லை. சீனாவை நோக்கி சென்ற விமானத்தை இப்போது அந்தமான் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடற்படையினரோ , விமானப்படையினரோ இந்த தேடலில் உதவலாம். தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருக்கின்றன. ஆனால் , இணையவாசிகள் இந்த தேடலில் பங்கேற்பது எப்படி ? செயற்கைகோள் இருக்க கவலையேன் என்பது தான் இந்த கேள்விக்கு பதில். ஆம், செயற்கைகோள் படங்களின் மூலம் காணாமல் போன் விமானம் அல்லது விமானத்தின் மிச்சம் கடல் பகுதியில் கண்…
-
- 1 reply
- 792 views
-
-
ஆரம்பத்திலேயே சொல்லிடுறேன். இந்தக் கட்டுரையை டெலி ஷாப்பிங் டப்பிங் குரல்ல படிச்சிப் பார்த்து பலன் அடைஞ்சுக்குங்க மக்களே. பொதுவா ஷாப்பிங் போற பெண்கள் டிரெஸ் எடுக்கப் போனோமா வந்தோமானு இருந்திருக்காங்களா? அவங்களைச் சொல்லி குத்தமில்லை மக்கா. பார்க்கிற எல்லா டிரெஸ்ஸையும் டிரையல் பண்ணிப் பார்க்க முடியலையேனு ஏக்கம் அவங்களோட மரபணுக்கள்ல புதைஞ்சு கிடக்கு. 'இந்த டிஸைன் பார்டருக்குப் பதில் அந்த டிஸைன் பார்டர் இருந்தா எம்புட்டு அழகா இருக்கும்?', 'இந்த மயில் கழுத்துக்குப் பதில், அந்தக் குயில் கழுத்து இருந்திருந்தா அம்சமா இருந்திருக்கும்ல?', 'இந்த மாங்கா ஜரிகைக்குப் பதில் அந்த தேங்கா ஜரிகை இருந்திருந்தா...?' இப்படி டஜன் கணக்கான குழப்பக் கேள்விகளோடுதான் பெண்கள் டிரெஸ் செலெக்ட் பண…
-
- 1 reply
- 1.1k views
-
-
நெதர்லாந்தின் டெல்ப்ட் பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர் அலெக் மோமண்ட் மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை உதவி அளிக்கும் டிரோன் என அழைக்கப்படும் ஆளில்லா விமானத்தை கண்டுப்பிடித்துள்ளார். மாரடைப்பு நோயாளிகளின் அவசர டெலிபோன் கால் கிடைத்ததும் டிரோனில் உள்ள அதிர்வு கருவி செயல்படதொடங்கும். அதன் மூலம் ஆளில்லா விமானம் நோயாளி இருக்கும் இடத்துக்கு சென்று சில வினாடிகளில் தேவையான மருத்துவ உதவியை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 கிலோ எடையுள்ள இந்த விமானம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேத்தில் பறக்கும் என பல்கலைக்கழக குறிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=119787&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 489 views
-
-
நாம் எந்த தொழில் ஆரம்பித்தாலும் அந்த தொழிலுக்கு, மார்க்கெட்டிங் என்பது மிகவும் அவசியமாகிறது. மார்க்கெட்டிங் என்றவுடன் நீங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தையும் பத்திரிக்கை விளம்பரத்தையும் மட்டுமே நினைத்து விடாதீர்கள். அதை தவிர பல மார்க்கெட்டிங் வித்தைகள் இருக்கிறது. அதை உங்கள் தொழிலுக்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொள்ளுங்கள். தமிழர்களில் பெரும்பாலானோர்கள் மார்க்கெட்டிங் செய்வதை அல்லது விற்பனை செய்வதை விரும்புவதில்லை. இதற்கு காரணம் அவர்களிடமுள்ள கூச்ச சுபாவம் ஆகும். பள்ளி பருவங்களில் நமது குழந்தைகள், பொருளாதாரத்தில் வளர்ந்தநாட்டு குழந்தைகளைப் போல, வெளியில் சென்று பகுதி நேரம் வேலை பார்ப்பதில்லை; அல்லது விற்பனை செய்வதில்லை. இதுவே அவர்களுக்கு பிற்காலத்தில் கூச்ச சுபாவமாக மாறிவிடுகிறத…
-
- 0 replies
- 818 views
-
-
மார்ச் 19 – பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு! பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, வரும் 19ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது. அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. …
-
- 22 replies
- 3.6k views
-
-
நியூட்டனை இயற்பியலின் பிதாமகர்களில் ஒருவர் என்று தான் இவரை சொல்ல வேண்டிருக்கிறது . பள்ளிக்காலத்தில் மக்குப்பையனாக அம்மாவின் அன்புக்கு ஏங்கிக்கொண்டு இருந்த இவர் இவ்வளவு பெரிய மேதையாக உருவெடுப்பார் என்றால் அப்பொழுது யாரும் நம்பி இருக்க மாட்டார்கள் தான் . மண்டையின் மீது ஆப்பிள் விழுந்தது ;புவி ஈர்ப்பு விசை கண்டுபிடிப்பு நிகழ்ந்தது .அது பூமி சூரியனை சூற்றி வருகிறது என்பதை சந்தேகமின்றி நிரூபித்தது .இவர் எழுதிய Philosophiæ Naturalis Principia Mathematica நூல் தான் மெக்கானிக்ஸ் துறையின் வேதமானது . சூரிய ஒளியில் எழு வண்ணங்கள் உள்ளன என நிரூபிக்கவும் செய்தார் .பயன்படுத்த தகுந்த தொலைநோக்கியையும் நியூட்டன் வடிவமைத்தார் . ஹாலி தன்னுடைய வானியல் சார்ந்த குழப்பங்களுக்கான வ…
-
- 0 replies
- 567 views
-
-
எபோலாவை எதிர்கொள்ளவே இந்தியா தயாராகாத சூழலில் மார்பெர்க் தாக்கினால் சமாளிக்க முடியுமா? டெல்லி விமானநிலையத்தில், 18 நவம்பர் 2014 அன்று லைபீரியாவிலிருந்து வந்த ஒருவர் எபோலா தாக்கம் கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்புச் சூழலில் வைக்கப்பட்டிருக்கிறார். விநோதம் என்ன வென்றால், அந்தப் பயணி லைபீரியாவிலேயே எபோலா காய்ச்சல் கண்டவர் என அறியப்பட்டு, சிகிக்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்ததாகச் சான்றிதழும் பெற்றிருக்கிறார். அவரது ரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் எபோலா வைரஸ் இல்லை என்று சான்றளிக்கப்பட்டிருக்கிறது. குணமடையும்போது எபோலா வைரஸ், உடல் திரவங்களின் வழியே வெளியேறும். அது ரத்த மாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இதனை அறிந்திருந்த இந்திய அதிகாரிகள், அவரது …
-
- 0 replies
- 460 views
-
-
மார்ஷ்மெல்லோவைவிட சுவையாக இருக்குமா நௌகட்?#AndroidNougat பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் பயன்படுத்தும் மென்பொருள் ஆண்ட்ராய்டுதான். கூகுள் நிறுவனத்தினர், தங்களது ஆண்ட்ராய்டு மென்பொருளுக்கான ஒவ்வொரு அப்டேட்டிற்கும் , புதுப்பெயரை யோசிப்பார்கள். அவை எப்போதும் தின்பண்டங்களாகத்தான் இருக்கும் . அதன்படி புதிய வெர்ஷனான ஆண்ட்ராய்டு N-ற்கு என்ன பெயர் வைக்கலாம் என சமூக வலைதளங்களில் போட்டியெல்லாம் நடத்தினார்கள். தற்போது அதற்கு நௌக்கட் என பெயர் வைத்து இருக்கிறார்கள். மார்ஷ்மெல்லோவை விட நௌக்கட்டில் என்னெவெல்லாம் ஸ்பெஷலாக இருக்கும் என்பதை பார்ப்போம்... * மல்ட்டிடாஸ்கிங் முந்தைய அப்டேட்களிலும் மல்ட்டிடாஸ்கிங் என்பது இருந்தது. நீங்கள் ஃபேஸ்புக…
-
- 0 replies
- 518 views
-
-
மாற்று திறனாளிகளுக்காக சூாிய சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்த 13 வயதான கிளிநொச்சி மாணவன்..! கிளிநொச்சி- ஆனந்தபுரம் கிராமத்தை சோ்ந்த 13 வயதான பாடசாலை மாணவன் மாற்றுத் திறனாளிக ளின் பயன்பாட்டுக்காக சோலாா் சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்து சாதித்துள்ளான். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் 8ம் வகுப்பில் கல்வி கற்கும் சுந்தரலிங்கம் பிரணவன் என்ற மாணவனே மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த துவிச்சக்கர வண்டியை உருவாக்கியுள்ளான். தனது தாத்தாவின் உதவியுடன் கழிவு பொருட்களை கொண்டு இந்த துவிச்சக்கர வண்டியை உருவாக்கியிருக்கின்றான். இதனை பலரும் பாராட்டியிருக்கின்றனா். கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்ப வளா்ச்சி இன்று பல்வேறு நிலைகளை அடைந்து கொண்ட…
-
- 2 replies
- 457 views
-
-
மணல் இன்று தங்கத்தைப் போல விலை மதிப்புள்ள பொருளாக மாறிவிட்டது. அதனால் நகைக்கொள்ளை போல மணற்கொள்ளையும் நடக்கிறது. ஆனால் இயற்கை நமக்குக் கொடுத்த கொடைதான் மணல். ஆற்றில் கிடக்கும் மணல்தானே என அள்ளிக்கொண்டே இருந்தால், அதுவும் ஒரு நாள் தீர்ந்துபோகும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மணல் அள்ளினால் சரி. ஆனால் அதிகார, பண பலம் கொணடவர்களின் கனரக இயந்திரங்கள் கணக்குவழக்கில்லாமல் அள்ளிக்கொண்டே இருந்தால்..? கட்டிடப் பணிகளுக்காக ஆற்று மணல் அவசியம். அதற்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும். அதற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மாற்று மணல். இதுவும் இயற்கை வழங்கிய கொடைதான். கல் உடைக்கும் குவாரிகளில் கிடைக்கும் மணல் துகள்களைக் கொண்டு இந்தச் செயற்கை மணலைத் தயாரிக்கிறார்கள். மேலும் தமிழகம் முழுவ…
-
- 1 reply
- 623 views
-
-
பிரிட்டனை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஜான் மெக்ஃபால். விபத்து ஒன்றில் வலது காலை இழந்த அவர், மனம் தளராமல் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பரில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாராலிம்பிக் குழுவின் உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். 2007ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற விசா பாராலிம்பிக் உலகக் கோப்பை போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தில், அவர் தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் பந்தயத்தில் அவர் 26.84 நொடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார். கடந்த 2022-ம் ஆண்டு உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராக ஜான் மெக்ஃபாலை ஐரோப்பிய விண்வெளி …
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
சூரியனில் நிகழும் தொடர்ச்சியான அணுக்கருத்தாக்க விளைவுகளின் போது நிகழக் கூடிய அசாதாரண நிகழ்வுகளால் கக்கப்படும் அதிசக்தி வாய்ந்த சக்தி அலைகளும் துணிக்கைகளும் மின்காந்தப் புயலாக மாறி விண்ணில் பரவி பூமி போன்ற கோள்களை நோக்கி வந்து தாக்குகின்றன. இதுவே சூரியப் புயல் எனப்படுகிறது. அந்த துணிக்கைகள் மணிக்கு 6,400,000 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பூமியை தாக்கும் போது பூமியின் காந்தப் புலம் அவற்றிற்கான தடுப்புச் சுவராக நின்று தாங்கிக் கொள்ளும். இருந்தாலும் அந்தத் துணிக்கைகள் கொண்டுள்ள ஏற்றம் காரணமாக அவை இந்த மோதலின் போது பிறப்பிக்கும் சக்தி அலைகள் மனிதனின் இலத்திரனியல் மற்றும் மின் காந்த அலையில் இயக்கப்படும் தொழில்நுட்பங்களை (தகவல்தொடர்பு, செய்மதித் தொலைகாட்சி சேவைகள் ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இது தான் மிகச்சிறியது எனத் தெரிவித்துள்ளனர். உருவில் பெரிய நட்சத்திரமானது தனது ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு விசையைக் கொண்ட கருந்துளையாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேவேளையில் வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரியனுடன் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். https://www.polimernews.com/dnews/87434/மிகச்சிறிய-அளவில்கருந்துளையைக்கண்…
-
- 0 replies
- 264 views
-
-
உண்மை இல்லை என்று சொல்லப்பட்ட விடயங்கள் இன்று முற்றிலும் உண்மை என்று நிரூபிக்கப் பட்டுள்ளன, அதே போன்று தான் உண்மை என்று நம்பப்பட்ட எவ்வளவோ விடயங்கள் இன்று உண்மை இல்லை என்று கூறப்பட்டு இருக்கின்றன. இந்த அறிவு டோஸில் கூட, நாம் பொதுவாக உண்மை என ஏற்றுக்கொண்ட விடயம் ஒன்று தவறு என்பதை அறியத் தருகின்றேன்! சரி, உங்களிடம் உலகில் மிகப் பெரிய மலை எது என்று கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்? உடனடியாக உங்கள் பதில் எவரெசுட்டு சிகரம் (Mount Everest) என்று தானே இருக்கும்? 8.848 மீட்டர் கொண்ட இந்த மலை உண்மை சொல்லப்போனால் உலகின் மிகப்பெரிய மலையே இல்லை! இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்: ஓர் மலையின் உயரத்தை எங்கிருந்து எங்கு வரை அளக்கப்படுகிறது என்பது தான். கடல் மட்டத்தில் இருந்து …
-
- 8 replies
- 4k views
-
-
விண்வெளி ஆய்வாளர்கள் மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். Sep 17, 2019 பிரபஞ்சத்தில் நியூட்ரான் நட்சத்திரங்கள் பொதுவாக சிறியவையாகும். அதன் பரப்பளவு சிகாகோ அல்லது அட்லாண்டா போன்ற சிறுநகரின் பரப்பேயாகும். விண்ணின் கழித்துவிடப்பட்ட பிறவிகள் அவை என்பது போல் தோன்றும். ஆனால் அவை அடர்த்தியானவை. சூரியனை சுருக்கி ஒரு பெருநகரமாக மாற்றியது போன்று அவை உள்ளன.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நியூட்ரான் நட்சத்திரம் பூமியை விடவும் 3 லட்சம் 33 ஆயிரம் மடங்கு நிறை உடையதாகும். இது சூரியனைவிட 2 புள்ளி 3 மடங்கு அதிகமாகும். இது பூமியை விட்டு 4 ஆயிரத்து 600 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.வெஸ்ட் வர்ஜினிவாவில் கிரீன் பேங்க் டெலஸ்கோப் மூலம் இந்த நட்சத்திரம் கண்டுபிட…
-
- 0 replies
- 555 views
-
-
மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை கடக்கவுள்ளதாக அறிவிப்பு! மிகப்பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் பில்லியன் கணக்கில் விண்கற்கள் உள்ளன. அவை புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு விழும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அளவில் சிறியதாக இருக்கும் பட்சத்தில் பிரச்சினையில்லை. எனினும், மிகப்பெரிய விண்கற்கள் பூமியை கடக்கும் பட்சத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும். அந்த வகையில், ஆயிரத்து 870 அடி விட்டத்தைக் கொண்ட 2006 கியூகியூ33 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் எதிர்வரும் 10ஆம் பூமியை மிகவும் அருகில் கடந்து செல்லவுள்ளது. தற்போது பூமியில் இருந்து சுமார் 7 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் குறித்த விண்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. அந்தவகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்ட் நிதித் துறையை இலகுபடுத்துவதில் அடுத்த புரட்சியொன்றை ஏற்படுத்தவுள்ளது என்றால் மிகையாகாது. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்டில் அப்படி என்னதான் விசேடம் என அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?இந்த புதிய வகை கிரடிட் கார்டில் ஒரு திரை உண்டு.அதில் எமது கணக்கு மிகுதியை காட்டும்.மிக மெல்லிய நுண்செயலியுடன் கூடிய இந்த கிரடிட் அட்டை மின்கலம் மூலம் இயங்குகிறது.இந்த மின்கலம் 3 வருடம் வரை நீடித்த பாவணை கொண்டதாம்.இந்த புதியவகை கிரடிட் கார்டை அதன் சொந்தக்காரருக்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.புதிய கிரடிட் கார்டின் வருகைக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
Augmented Reality இந்த தொழில் நுட்பத்தை தமிழில் மிகை யதார்த்தம் அல்லது இணைப்பு நிஜமாக்கம் என்று அழைக்கலாம். இதைப் பற்றி யாழில் ஒரு பதிவிட வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம், இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது .. நீங்கள் சென்னையில் அண்ணா சாலையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கிருந்து நீங்கள் புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திற்கு செல்லவேண்டும் வழிநெடுக விளம்பர பதாதைகள் இருந்தும் வழி தெரியவில்லை. இப்பொழுது "இணைப்பு நிஜமாக்கம்(Augmented Reality)" தொழிநுட்பம் மூலமாக விளம்பர பதாதைகளை(advertisement board) நமது திறன்பேசியில்(Smart phone) பதியப்பட்டுள்ள மென்பொருளை பயன்படுத்தி புகைப்படக்கருவி மூலம் தூழவுவதன்(scanning) வாயிலாக அந்த இடத்தைப் பற்றிய தகவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
மிக்-27 ஆனது தரைத்தாக்குதல் வானூர்தியாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் வானூர்தி கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது பகதூர் என்ற பெயருடன் சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் இந்துஸ்தான் விமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது மிக்-23 வானூர்தியின் அடிப்படையில் கட்டப்பட்டது ஆனாலும் வானிலிருந்து தரைக்கு தாக்குதல் நடத்துவது எத்தன சிறப்பம்சமாகும். இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் "Flogger-D/J" என்பதாகும். இதன் சிறப்பம்சங்கள்............... அனைத்து வகை காலநிலையின் போதும் தாக்குதல் நடத்தக்கூடிய தாக்குதல் வானூர்தி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு வகை இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வகை உபகரணங்கள் கொண்டு உற…
-
- 1 reply
- 772 views
-
-
மிதக்கும் அணு மின்சார நிலையம் ஓரிடத்தில் புதிதாக் அணு மின்சார நிலையம் அமைக்க வேண்டுமா?அதில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உண்டு. தேவையான நிலத்தை கையகப்படுத்தியாக வேண்டும். அதற்கு மானில அரசின் தயவு தேவை. சுற்றுச்சூழல் வாரியங்களின் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். அந்த வட்டார மக்களிடையே விளக்கக் கூட்டங்களை நடத்த வேண்டும். இதற்குள்ளாக அணுமின் நிலையம் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து பல இயக்கங்கள் முளைக்கும். விலாசம் தெரியாத க்ட்சிகள் அறிக்கைகளை வெளியிடும். அணுமின்சார நிலையத்தில் இடம் பெறும் அணு உலைக்கும் அணுகுண்டுக்கும் வித்தியாசம் தெரியாத கத்துக்குட்டிகள் அணுமின் நிலையத்தை “என்றாவது வெடிக்கப் போகும் அணுகுண்டு” என்று வருணித்து பீதி கிளப்புவார்கள். மகாராஷ்டிர மான…
-
- 0 replies
- 580 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-