Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் மூலம் இயற்கை வளத்தை பாதுகாத்து, உணவு உற்பத்தியைப் பெருக்க விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் என உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமானது மண்ணில் இருக்கும் இயற்கை ஊட்டங்களை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது. பயிரின் ஊட்டச்சத்து தேவையையும், இயற்கை மற்றும் ரசாயன ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்துக்களையும் ஒருங்கிணைத்து பயிர்களுக்கு சமச்சீர் ஊட்டத்தை அளிக்கிறது. இயற்கையோடு ஒன்றிய, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய உன்னத உர உபயோக வழிமுறை தான் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமாகும். மண் வளத்தைப் பே…

    • 0 replies
    • 690 views
  2. சும்மா ஒரு தகவலுக்காகத்தான்……….! நவீன சந்தையில் ஒரு பொருள் விற்பனைக்கு வரும் போது, அந்தப் பொருளை நாம் வாங்குவதற்காக, நம்மையறியாமலே நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கூட்டுக் கடைகளுள்ள ஒரு பெரும் சந்தைக்கு (Shopping Mall), நீங்கள் குடும்பத்துடன் போகும் போது, அங்கு எதை வாங்குவது, எதை வாங்கக் கூடாது என்பதை நீங்கள்தான் முடிவு செய்வீர்கள். அநேகமாக நம் முடிவின்படிதான் அந்தப் பொருளை நாம் வாங்குகிறோம் என்றுதான் நினைத்துக் கொண்டுமிருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் அந்த விற்பனை நிறுவணத்தின் கண்ணுக்குத் தெரியாத மறைமுக நிர்ப்பந்தத்தின் மூலம், அவர்கள் தெர்வு செய்யும் வகையிலேயே பொருட்களை வாங்குகிறோம். "இது என்ன பேத்தல்! எனக்குப் பிடித்தால் நான் வாங்குகிறேன், பிட…

  3. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மூலிகைப் பயிர்களில் செங்காந்தள் மலர் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் விதைகளும், கிழங்கும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரசு மலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த மூலிகைப் பயிர் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கரூர், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும் இந்த செங்காந்தள் சாகுபடி பரவலாகி வருகிறது. செங்காந்தள் சாகுபடி குறித்து திருப்பூர் மாவட்டம், மூலனூர் வட்டார வேளாண் பொறியாளர் தி. யுவராஜ் கூறியதாவது: கண்வலிக் கிழங்கு என்றும், கலப்பைக் கிழங்கு என்றும் அழைக்கப்படும் செங்காந்தள், பொதுவாக…

  4. காந்திகிராமம்:பார்த்தீனிய செடிகளை அழிக்கும் 'மெக்சிக்கன்' வண்டுகள், காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.இந்தியாவில் பார்த்தீனிய செடிகள் 100 லட்சம் எக்டேரில் பரவியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், ரோடு, தண்டவாள ஓரங்கள், குடியிருப்புகளில் இந்த செடிகள் காணப்படுகின்றன. தோல் ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல் போன்றவற்றை இவை ஏற்படுத்துகின்றன. பார்த்தீனிய செடிகளை அழிப்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஒரு செடி 25 ஆயிரம் விதைகளை உற்பத்தி செய்யும் என்பதால் எளிதாக எல்லா இடங்களில் வியாபித்துள்ளது. இவற்றை முழுமையாக அழிக்க 'மெக்சிக்கன்' வண்டுகள் பயன்படுமென மத்திய பிரதேசம் ஜபல்பூர் வேளாண் களைக்கொல்லி ஆராய்ச்சி நிலையத்தினர் கண்டுபிடித்து…

  5. 1940 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் தீர்மானமான கட்டம்.பிரான்ஸ் நாஜிகளிடம் வீழ்ந்துவிட்டது,ஜேர்மனிய லுட்வாவ் படைகள் பிரித்தானிய நகரங்கள் மேல் அகோரமான விமானத் தாக்குதலை நிகழ்த்திக்கொண்டிருந்த நேரம்.பிரித்தானியா அய்ரோப்பாவில் இருந்து தனிமைப் படுத்தப்படுகிறது.அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட நிலையில் ,சுய பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டம். 29 ஆம் திகதி,காலை, அன்றைய பிரித்தானியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வியலாளர்களும் அடங்கிய ஒரு சிறு குழுவினர் ,சேர் கென்றி டிஸார்ட் தலமையில் ஒரு இரகசிய பயணத்தை அமெரிக்கா நோக்கி, ஒரு உருமறைப்புச் செய்யப்பட்ட கப்பலில் ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தமது பயணத்தின் போது உலகத்தின் தலை விதியையே மாற்றப் போகின…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES 27 ஜூன் 2023 புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு மரபுசார் ஆற்றல் மூலங்களையே பெரியளவு சார்ந்துள்ளது. பெட்ரோல், நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்துவதால் கார்பன் வாயு அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த கார்பன் வாயு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அதே நேரத்தில் நாம் ஹைட்ரஜனை எரிக்கும்போது அது தண்ணீராக மாறிவிடுகிறது. கார்பன் வெளியேற்றத்துக்கு இங்கு இடமில்லை. எனவே, பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு சிறந்த மாற்றாக ஹைட்ரஜன் இருக்கும் என்று கருதப்படுகிறது. நாம் பள்ளிகளில் படித்த காலத்தில், உலோகக் கீற்றுகளை பேட்டரியுடன் இணைத்த பின்னர் தண்ணீரில் மூழ்கடிக்க…

  7. அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுருவல்: சீனா மறுப்பு அமெரிக்க பெண்டகன் பாதுகாப்புத்துறைத் தலைமையகம் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில், உள்ள கணினி வலையமைப்புகளில் சீன இராணுவம் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளதாக வெளிவந்த ஊடகத் தகவல்களை சீனா மறுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வாஷிங்டன் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில் உள்ள கணினி வலைப் பின்னல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எங்கிருந்து வந்தது என்பதை தாம் துல்லியமாகச் சுட்டிக் காட்டிவிட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று எனவும் இது பனிப் போர் நடைபெற்ற காலத்தில் நிலவிய …

    • 0 replies
    • 1.5k views
  8. ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45: உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை Published : 02 Apr 2019 05:53 IST Updated : 02 Apr 2019 05:53 IST சி.பிரதாப் ஸ்ரீ ஹரிகோட்டா இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. உல கில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. நம்நாட்டுக்கு முக்கிய தேவை யான தொலைத்தொடர்பு…

  9. கற்காலத்தில் வாழ்ந்த மக் களைப் பற்றிக் குறிப்பிடும்போது, குகை மனிதர்கள் என்று கூறுவது சரியான முறையல்ல. ரோமானி யர்களுக்கு முன்பு இருந்த எதைப் பற்றியும் எங்களுக்குச் சற்றும் கவலையில்லை என்ற முறையில் பள்ளியில் வரலாறு 19ஆம் நூற்றாண்டில் கற்பிக்கப்பட்டதன் ஒரு பகுதியாகும் குகைமனிதர் என்று குறிப்பிடுவது. அச்சொற்றொடர் தற்போது நவீன வரலாற்றாசிரியர்களாலும், தொல்பொருள் ஆய்வாளர்களாலும்பயன்படுத்தப்படுவதில்லை. கற்கால மனிதர்கள் வேட்டையாடி உயிர் வாழும் நாடோடிக் கூட்டத்தினர்; அவர்கள் எப்போதாவது குகைகளைப் பயன்படுத்தினர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் என்று 277 இடங்கள் அய்ரோப்பாவில் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவைகளில் சில: ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்டாமிரா, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள லாஸ்காக்ஸ…

  10. 4500 ஆண்டு பழமையான "நடுகற்களை" கண்டுபிடித்திருப்பதாக பிரிட்டன் தொல்லியலாளர்கள் அறிவிப்பு நியோலிதிக் காலத்தைச் சேர்ந்த கல் தூண்களால் ஆன மிகப்பெரிய "ஈமச்சடங்கிடம்" ஒன்றை பிரிட்டனின் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் உலகப் புகழ்பெற்ற ஸ்டோன்ஹெஞ்ச் என்று அழைக்கப்படும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்று இருக்கிறது. வட்டவடிவில் கல்தூண்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலையில் நிலத்துக்குள் மூன்றடி ஆழத்தில் புதையுண்டு இருந்த இந்த "ஈமச்சடங்கிடத்தை" தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் இருக்கும் தூண்கள் 15 அடி…

  11. 2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய Asteroid பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று Scientists ஆரம்பத்தில் கவலைப்பட்டனர். பின்னர் அவ்வாறு நடக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாக அறிவித்தனர். இந்த Asteroid பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் உள்ளது என ஆரம்பத்தில் மதிப்பிட்ட விஞ்ஞானிகள், பின்னர் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே உள்ளது என்று கூறினர். ஆனால் இது Moon-ஐ தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக NASA மதிப்பிட்டுள்ளது. #NASA #Earth #Space இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  12. ‘இசிஎம்ஓ’ கருவியைக் கொண்டு மார்ஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் உடல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. அதனால் அவரது இதய இயக்கத்தை மீண்டும் தூண்டவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். படம்: VALL D'HEBRON/TWITTER 6 Dec 2019 21:12 மிகக் கடுங்குளிரில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் பெண்ணின் இதயத் துடிப்பு நின்று ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அவரது இதயத்தை ஸ்பெயின் மருத்துவர்கள் மீண்டும் இயங்க வைத்துள்ளனர். நேற்று (டிசம்பர் 5) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பிழைத்தது அதிசயம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆட்ரே மார்ஷ் எனும் அந்தப் பெண் கடந்த மாதம் மூன்றாம் தேதி சுமார் 1 மணியளவில் அவரது கணவருடன் பைரெனீஸ் …

  13. விஞ்ஞானிகள் முதன் முறையாக கனிமப்பொருள் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை விஞ்ஞானிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். இக்கனிமப்பொருளை இயற்கையில் இதற்கு முன்னர் கண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பின்தங்கிய கிராமத்திலுள்ள வீதியோரத்திலிருந்து இக்கனிமப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இப்பொருளானது இதுவரை காலமும் விக்டோரியாவிலுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே தற்போது இதுவரை கண்டறியப்படாத புதிய வகை கனிமத்தினை அப்பொருள் கொண்டிருக்கின்றமை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது விண்ணில் இருந்து வீழ்ந்த விண்கல்லாக இருக்கலாம் …

    • 0 replies
    • 366 views
  14. லண்டன்: புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதைப் போல எதிர்வரும் 40 ஆண்டுகளில் வேற்றுகிரகவாசிகளும் கண்டுபிடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் மூத்த விண்வெளி விஞ்ஞானி லார்ட் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. பூமியை போன்று அங்கும் உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து விடுவோம். அதைத் தொடர்ந்து அந்த கிரகங்களில் தங்கியிருக்கும் வேற்று கிரகவாசிகள் அடுத்த 40 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர் http://tamil.one…

  15. செக்ஸ் இல்லாமல் ஒரு வாழ்க்கையா ! நீங்களே சொல்லுங்கள். எழுதியது இக்பால் செல்வன் பாலுறவை துறந்து உங்களால் வாழச் சொன்னால் முடியுமா. பலரால் முடியவே முடியாது அல்லவா. பாலுறவு இல்லாமல் உங்கள் இனத்தை தழைக்கச் சொன்னால் தழைத்திடுமா. என்ன உளறுகின்றேன் எனப் பார்க்கின்றீர்கள். ஆதியில் கடவுள் ஆண், பெண் என உயிரினங்களைத் தோற்றுவித்தார். பின்னர் அவற்றை பல்கி பெருகவிட்டார் என தான் நம் குடும்பங்களில் கதை கதையாக விட்டு இருப்பார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா உலகில் எண்ணற்ற உயிரினங்கள் பாலுறவு கொள்வதே இல்லை. இருந்த போதும் அவை பல்கி பெருகியே வருகின்றன. அப்படி பட்ட உயிரினங்களில் மிக முக்கியமான ஒன்று பிடெல்லாய்ட்கள் (Bdelloids) எனப்படும் கண்களுக்கு புலப்படாத ஒரு உயிரினம் இந்த …

  16. img: en.wikimedia.org 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 16ம் நாள் Saturn V உந்துவாகனம் மூலம் அப்பலோ 11 விண்கலம் மிசன் கொமாண்டர் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Alden Armstrong) தலைமையில், கொமாண்ட் மொடியுள் பைலட் மைக்கல் கொலின்ஸ் (Michael Collins) மற்றும் நிலவுக்கான மொடியுள் பைலட் எட்வின் அல்ரின் (Edwin Eugene 'Buzz' Aldrin) ஆகியோரைக் காவிக் கொண்டு நிலவை நோக்கிப் புறப்பட்டது. கிட்டத்தட்ட 4 நாட்கள் பயணத்தின் பின் 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 20ம் நாள் .. இன்றிலிருந்து சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னால்.. அப்பலோ 11 நிலாவில் தரையிறங்கி நீல் ஆம்ஸ்ரோங் மற்றும் அல்ரின் ஆகியோர் நிலாவில் காலடி எடுத்து வைக்க வழி செய்தது. இதற்கான ஆதார காணொளியை (Video) நாசா அதே தினத்தில் உலகுக்கு வெளியிட்டது.…

  17. தூக்கம் வருவதற்கு எது முக்கிய காரணம்? 06/09/2013 by KALAKUMARAN in அறிவியல், மனிதன் with 0 COMMENTS தூக்கம் பற்றிய ஆராய்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் இதற்கென்றே ஒரு துறை நிண்ட்ஸ் (NINDS – National Institure of Neurological Disorders and Stroke) செயல்படுகிறது. முக்கியமாக வயசுக்கு வரும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அந்த வயதுகளில் நிம்மதியான தூக்கம் அவசியம் என்கிறார் பெண் டாக்டர் சிரேலி. img98371 ஒரு விசயம், விலங்குகள் தூங்கும் நிலையிலேயே எப்படி உசார் நிலையில் இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கிறது. மூளை நுண் நரம்பு செயல்பாடு ஒழுங்காக நடக்க தூக்கம் மனிதனுக்கு மிக முக்கியமானது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கும் ஆழ்ந்த தூக்கத்தி…

  18. வணக்கம், கீழுள்ள காணொளி எங்கட வீடுகளில இருக்கிற வெப்பநிலையை கட்டுப்படுத்துகிற நிலைநிறுத்தி மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட இதர கருவிகளின் எதிர்காலம் பற்றி சொல்லுது. எதிர்காலத்தில வீட்டில இருக்கிற Heaterஇனை, மற்றும் இதர சாதனங்களை நாங்கள் எங்கட கணணி மூலமே இருந்த இடத்தில இருந்து கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

  19. ‘என் கம்பெனியில் மொத்தம் பதினாறு மார்க்கெட்டிங் எக்ஸ்ஸிக்யூடிவ்ஸ் இருக்காங்க’ என்றார் மாட்டுத் தீவனம் விற்கும் ஒரு தொழிலதிபர். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. தீவனம் விற்க பதினாறு மார்க்கெட்டிங் ஆட்களா? மாடுகளை விட ஆட்கள் அதிகம் எதற்கு என்று அவரிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவர் மார்க்கெட்டிங் என்று குறிப்பிட்ட நபர்கள் செய்வது சேல்ஸ் வேலையை. அதை அவரிடம் கூறியபோது அவர் `மார்க்கெட்டிங், சேல்ஸ் எல்லா கழுதையும் ஒண்ணுதானே’ என்றார். நான் மார்க்கெட்டிங் கன்சல்டண்ட் என்பதால் என்னைக் குத்திக் காட்டுகிறாரோ என்று சந்தேகம் வந்தது. அதை அவரிடம் கேட்டு அவர் கன்ஃபர்ம் பண்ணித் தொலைத்தால் அசிங்கமாகப் போய்விடுமே என்று விட்டுவிட்டேன். ஆனால் அவர் பதிலில் இருந்த அறியாமையை நான் பல தொழிலதிபர்…

    • 0 replies
    • 594 views
  20. Started by nunavilan,

    SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்) இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான். அந்த அதியசத்துக்கு…

  21. மரத்திலிருந்து உருவாகும் பேட்டரிகள் - மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,கிறிஸ் பரனியுக் பதவி,பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், விஞ்ஞானிகள் நிலையான பேட்டரிகளை தயாரிப்பதற்கான பொருட்களைத் தேடுகின்றனர். மரங்களில் காணப்படும் லிக்னின் என்ற பொருள், ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுத்து இருக்கிறது சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தின் ஒரு பெரிய காகித உற்பத்தியாளர் உலகம் மாறி வருவதை உணர்ந்தார். டிஜிட்டல் ஊடகங்களின் எழுச்சியால் அச்சுத்தொழில் …

  22. காடுகள் அழியக் காரணமாகும் பார்பிக்யூ உணவுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாம் உண்ணும் உணவிற்கும் நைஜீரியாவில் வெட்டப்படும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறது அறிவியல். அதற்கான எண்ணற்ற ஆதரங்களையும் அடுக்குகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பார்பிக்யூ உணவும், நைஜீரிய காடும் காடு…

  23. வீரகேசரி இணையம் 8/10/2011 6:10:10 PM உலகில் மலேரியா பரவுவதை தடுக்கும் முயற்சியாக விந்தணுக்களற்ற மலட்டு நுளம்புகளை பிரித்தானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நுளம்புகளின் பெருக்கத்தை தடுக்க மலட்டு ஆண் நுளம்புகளை பரப்புவது முக்கியமான முன்னடியெடுத்துவைப்பென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் மலேரியாவால் உலகமெங்கும் சுமார் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஆபிரிக்காவில் மட்டும் சிறுவர்கள் மரணங்களில் 20 சதவீதமான மரணங்களுக்கு மலேரியா நோய்த் தொற்றுக் காரணமாக அமைந்துள்ளது. இதற்கு முன் உருளைக்கிழங்குகளையும் கால்நடைகளையும் தாக்கும் பூச்சி புழுக்களை மலடாக்கும் செயற்கிரமம் ஜப்பானில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நில…

    • 1 reply
    • 1.1k views
  24. பெயர்ன் (ஸ்விட்சர்லாந்து ஸ்விட்சர்லாந்து தயாரித்த சூரிய சக்தியில் இயங்கும் விமானம் இரவு நேரத்திலும் பறந்து சாதனை படைத்துள்ளது. பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை அவ்வப்போது பறக்கவிட்டு சோதனை செய்து பார்த்து வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் சூரிய ஒளி சக்தியில் விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டு சோதனை புதன்கிழமை துவங்கப்பட்டது. கேப்டன் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் விமானத்தை இயக்கினார். சுமார் 26 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விமானம் சூரிய ஒளி சக்தியால் பறந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். இதுக…

  25. வெளிநாட்டு மாணவர்கள்.. விஞ்ஞான.. இளநிலை.. முதுநிலை பட்டங்கள்.. பட்டப்பின் படிப்பு டிப்புளோமாக்கள்.. கொண்டவர்கள்.. எந்த வழிமுறைகளைக் கையாண்டு.. விஞ்ஞான கலாநிதிக்கான ஆராய்ச்சிப் பட்டங்களைப் பெற விண்ணப்பிக்க முடியும்..??! விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் வழிமுறைகள்.. கால எல்லைகள்.. மற்றும் research proposal பற்றிய நடைமுறைகள்.. மேலும் நிதிச் சலுகைகள், ஆராய்ச்சிப் பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள் பற்றி விபரங்கள் அறியத் தந்தால் எம் தமிழ் சொந்தங்களுக்கு சில நல்ல அடிப்படைகளை வழங்கும். எனவே.. கனடாவில் படித்தவர்கள் மற்றும் அங்கு உள்ளவர்கள்.. இது குறித்த விபரங்களை அறிந்தவர்கள்... எம்மோடு பகிர்ந்து கொண்டால் அவை வரவேற்கப்படும். நன்றி.

    • 12 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.