அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
பூமியில் எங்கே விழுமெனத் தெரியாமலிருந்து ஐரோப்பாவுக்குச் சொந்தமான விண்வெளியின் பெராரி என அழைக்கப்படும் செய்மதி நேற்று அந்திலாந்திக் சமுத்திரதில் வீழ்ந்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. இச்செய்மதியானது புவியீர்ப்பு தொடர்பாக ஆராய்வதற்காக உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு 2010ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்தப்பட்டது. அதன் எரிபொருள் முடிவடைந்ததுடன் ஐரோப்பிய விண்வெளி முகவரகத்துடனான தொடர்பையும் இழந்திருந்தது. இதனையடுத்து எங்கு? எப்போது? விழுமென விஞ்ஞானிகளால் ஊகிக்கமுடியாதிருந்த நிலையிலேயே நேற்று ஜி.ஓ.சி.ஈ எனப்படும் விண்வெளியின் பெராரி பூமியில் வீழ்ந்துள்ளது. 1,100 கிலோ கிராம் நிறையுடைய இந்த செய்மதியின் சுமார் 275 கிலோ கிராம் நிறைய…
-
- 0 replies
- 412 views
-
-
அப்பிள், கூகுள், அமேசன் போன்ற நிறுவனங்கள் டெப்லட் கணனிகளை முடியுமான வரை சிறிய உருவில் , மெல்லியதாக தயாரிக்க முயற்சி செய்து வருகின்றன. ஆனால் பெனசொனிக் நிறுவனமோ 20 அங்குல திரையைக் கொண்ட டெப்லெட் கணனியொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. 'டப் பேட்' என அழைக்கப்படும் இது கூகுளின் நெக்ஸஸ் 7 டெப்லட்டை விட 3 மடங்கு பெரியதாகும். விண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் மேற்படி டெப்லட்டின் நிறை 2.26 கிலோகிராம்களாகும். இந்நிறையானது அப்பிளின் புதிய ஐபேட் எயாரை விட 5 மடங்கு அதிகமானதாகும். இது தவிர 8ஜிபி ரெம், 256 ஜி.பி. நினைவகம் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளதுடன் Intel i5 1.9GHz புரசசர் மூலம் இது இயங்குகின்றது. பெரிய திரையைக் கொண்டிருப்பதனால் 2 மணித்திய…
-
- 0 replies
- 695 views
-
-
25 வருடங்களாக ராஜநாகத்தை’ (King Cobra) ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டவர் ஒருவர், இந்தியாவின் மேற்குப்பகுதியில், கர்நாடக காடுகளில் தன் ஆராய்ச்சியை தொடர வருகிறார். இந்திய மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் உடன் பணி செய்கிறார்கள். இந்த ஆராய்ச்சியின் முதற்கட்ட வேலையாக, ஆண், பெண் என இரண்டு ராஜ நாகங்களை, காடுகளில் மிகுந்த சிரமங்கங்களுக்கிடையில் தேடி பிடிக்கின்றனர். பிடிக்கப்பட்ட நாகங்கள் இரண்டிற்கும் மயக்கம் செலுத்தப்பட்டு, அவற்றின் உடலில் பாம்புகள் இருக்குமிடத்தை காட்டக்கூடிய இண்டிக்கேட்டர் பொறுத்தப்படுகிறது. மயக்கம் தெளிந்து, உடல்நிலை சீரான இரண்டு ராஜநாகங்களும், பிடிக்கப்பட்ட இடத்தை விடுத்து, வெகுதூரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, காட்டில் வெவ்வேறு இடங்களில் விடப்படுகின்றன. இரண்ட…
-
- 6 replies
- 4.9k views
-
-
'விண்வெளியின் பெராரி' என அழைக்கப்படும் ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தின் செய்மதியொன்று அடுத்த சில நாட்டிகளில் பூமியில் விழும். ஆனால் எங்கு விழும் என யாருக்கும் தெரியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இச்செய்மதியானது புவியீர்ப்பு தொடர்பாக ஆராய்வதற்காக உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு 2010ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்தப்பட்டது. அதன் எரிபொருள் முடிவடைந்த நிலையிலேயே தற்போது பூமியில் விழவுள்ளது. இது பூமியின் எப்பாகத்திலேனும் விழலாம் ஆனால் அது எங்கு விழும் என விஞ்ஞானிகளால் கணிக்க முடியவில்லை. சுமார் ஒரு தொன் (சுமார் 908 கி.கி) நிறையுடைய இந்த விண்கலம் பூமியின் எல்லைக்குள் வரும் போது எரிந்து அண்ணளவாக 91…
-
- 17 replies
- 933 views
-
-
நாய்வாலாட்டுவது அதன் உணர்வுகளை காட்டும் செயல் நாய் வாலை ஆட்டுவது ஏன்? மனிதரைப் பார்த்து நாய் வாலை ஆட்டினால், அது நம்மை நட்புடன் எதிர்கொள்கிறது என்று அர்த்தம். ஆனால், நாய் வாலை ஆட்டுவது வெறுமனே நட்பைத் தெரிவிப்பதற்காக மாத்திரம் அல்லவாம். அது வாலை எப்படி ஆட்டுகிறது என்பதைப் பொறுத்தும் அதன் உணர்வுகள் வேறுபடுகின்றனவாம். குறிப்பாக இன்னுமொரு நாயைப் பார்த்து, ஒரு நாய் வாலை ஆட்டுவதன் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துமாம், அதாவது, வாலை வலது புறமாக ஆட்டினால், அது நட்பு என்றும் இன்னுமொரு நாயைப் பார்த்து அது இடது புறமாக ஆட்டினால், அது வெறுப்புடன் அதனை பார்க்கிறது என்றும் அர்த்தமாம். மனிதனின் மூளையை எடுத்துக்கொண்டால், அதன் வலது மற்றும் இடது பகுதிகள் வெவ்வேறான உணர்வுகளுக்கு ப…
-
- 0 replies
- 576 views
-
-
ராண்டி டபிள்யு. ஷெக்மேன் தாமஸ் சி. சுதோப் ஜேம்ஸ் இ. ராத்மேன் உடலில் உள்ள செல்கள் எப்படி மூலக்கூறுகளை உரிய இடங்களுக்கு, உரிய நேரத்துக்கு அனுப்பிவைக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக மூன்று அமெரிக்கர்களுக்கு உடல்இயக்கவியல் மருத்துவத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் இ. ராத்மேன் (62), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராண்டி டபிள்யு. ஷெக்மேன் (64), ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் சி. சுதோப் (57) ஆகியோர் விருது பெறுகின்றனர். ஒரு செல்லில் அதன் மூலக்கூறு கள் சிறு பொதிகளாகச் சுற்றிக்கொண்டே யிருக்கின்றன. அதை வெசிகிள்கள் என்று அழைப்பர். உரிய நேரத்தில், உரிய இடங்களுக்கு இந்த மூலக்கூறுகளை எது,…
-
- 2 replies
- 1k views
-
-
நம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களைச் செய்யும் போது பிறரின் பாராட்டுக்களை ஏற்றுக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியுடன் நூற்றுக்கு நூறு விதம் உடன் படுவோம். ஆனால் நம்மில் வெகு சிலரே சில வேளைகளில் நாம் செய்யும் காரியங்களில் தவறு நிகழ்ந்து விட்டால் பிறரின் வசை மொழிகள ஏற்றுக் கொள்வது வழக்கம். இந்த வேறுபாடு ஏன்? இதற்கான காரணத்தை லண்டனைச் சேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் சிலர் சமீபத்தில் விளக்கியுள்ளனர். அதாவது நாம் செய்யும் செயல்கள் எதிர்மறையான முடிவைத் தரும் போது நாம் அது குறித்து மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துவதாக கண்டறியப் பட்டுள்ளது. விரிவாக சொன்னால் மோசமான விளைவை ஏற்படுத்திய செயல்கள் குறித்த முடிவுகளை எடுப்பதில் சாதாரண செயல்களை விட நமது மூளை மிக அத…
-
- 1 reply
- 831 views
-
-
அமேசன்: அமேசான் காடுகளில் பூனை முகம் கொண்ட, மகிழ்ச்சியில் பூனை போல் ஒலி எழுப்பும் குரங்கு வகை ஒன்று கண்டறியப் பட்டுள்ளாதாம். இந்த வகைக் குரங்குகள் பூனையை போன்ற வித்தியாசமான சத்தம் எழுப்புவதால் இது குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். கடந்த நான்காண்டுகளில் மட்டும் அமேசான் காடுகளில் இதுவரை அறியப் படாத 441 புதிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சியினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பூனை போல் முகம் கொண்ட குரங்கு வகையும் ஒன்றாகும். இதுகுறித்து விலங்கின ஆராய்ச்சியாளர் தாமஸ் டெப்லர் கூறுகையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குரங்கினம் மிகவும் அபூர்வமானதாகும். குட்டி குரங்குகள் கிட்டத்தட்ட பூனை போலவ…
-
- 1 reply
- 757 views
-
-
உலகின் மிகப்பெரிய டேட்டா செண்டர்களை தனக்கென உருவாக்கி வைத்துள்ளது கூகுள் நிறுவனம். இதுவரை நிலப்பரப்பின் மீதே அவை இரகசிய இடங்களில் நிறுவப்பட்டு சைபர் சட்டங்களில் குறைந்தளவு கெடுபிடிகளை கொண்ட நாடுகளில் உருவாக்கி வந்தது கூகிள். ஆனால் தற்போது உலகின் எந்தவொரு அரசினாலும் இலகுவில் நெருங்கமுடியாதபடி கடலில் மிதற்கும் டேட்டா செண்டர்களை உருவாக்கி வருவதாக தொழில்நுட்ப உலகமே பரபரக்கின்றது. உலகின் மிகப்பெரியளவில் பாவனையளர்களது விபரங்களை கூகிள் நிறுவனமே டேட்டா செண்டர்களில் சேமித்து வைத்துள்ளது. தற்போது கடலில் நிறுவிவரும் டேட்டா சென்டர்கள் தொடர்பில் பிரபல தொழில்நுட்ப தளமான சிநெட் ஆய்வு செய்து படங்கள் வீடியோவுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது. தரையில் நிறுவுவதை விட்டு ஏன் கடலிற…
-
- 0 replies
- 614 views
-
-
(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது) அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள். எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது. விபத்துகள்:- முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்ப…
-
- 9 replies
- 1.8k views
-
-
சூரியனில் ஒரு தலை கீழ் மாற்றம் பூமியின் உச்சிப் பகுதியை வட துருவம் என்று கூறுகிறோம். அடிப்பகுதியை தென் துருவம் என்கிறோம். இந்த இரண்டையும் பூகோள துருவங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படிச் சொல்லக் காரணம் உண்டு. ஏனெனில் பூமிக்கு வேறு இரு துருவங்களும் உள்ளன. அவை காந்த துருவங்களாகும். காந்த ஊசியைத் தொங்கவிட்டால் அதன் ஒரு முனை வட திசையைக் காட்டும். அது காட்டுவது வட காந்த துருவத்தையாகும். பூகோள வட துருவத்தை அல்ல. படத்தில் Ng என்று குறிப்பிடப்பட்டுள்ளது பூமியின் பூகோள வட துருவம்.Nm என்றுசிவப்பு எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது வ்ட காந்த துருவமாகும். பூமி உருண்டையைச் சுற்றி உள்ள வளைவான கோடுகள் பூமியின் காந்தப் புலமாகும். பூகோள வட துருவம் இடம் மாறுவதில்லை. …
-
- 1 reply
- 1k views
-
-
எங்களது திட்ட குழுவுக்காக(Project Team) திறன்பேசிகளில் உள்ள உணர்வீகளை வைத்து எதாவது மென்பொருள் செய்ய முடியுமா என்று ஒரு ஆய்வு செய்தோம். அதில் என்னென உணர்வீகள் திறன்பேசிகளில் உள்ளன? அதன் செயல்பாடுகள் என்ன? இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக அலசினோம். அதைப் பற்றி ஒரு சின்னப் பதிவு. யாருக்கேனும் உதவக் கூடும். தமிழாக்கத்தில் எனக்கு தெரிந்த வார்த்தைகளை எடுத்தாண்டுள்ளேன். தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும். திறன்பேசிகளின் உதவியால் இன்று இணையம் உங்களது சட்டைப்பையில் வந்துவிட்டது.ஆடம்பரத் தேவையாயிருந்த தொலைபேசிகள் இன்று அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. நீங்கள் தொலைபேசியில் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் பல உணர்வீகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுவாக தொலைபேசிய…
-
- 7 replies
- 1.5k views
-
-
செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பவுள்ள மங்கள்யான் என்ற விண்கலன் நவம்பர் 5-ம் நாள் விண்ணில் ஏவப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. நவம்பர் 5ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்திய நேரப்படி மாலை 3.28க்கு விண்ணில் மங்கள்யான் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தான் இந்தியாவின் முதல் வேற்றுக்கிரக ஆராய்ச்சி முயற்சி. இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன், என்ற இந்த மங்கள்யான் கலன் விண்ணில் ஏவப்படவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=95526&category=IndianNews&language=tamil
-
- 1 reply
- 557 views
-
-
ஐ பி எம் கணினி நிறுவனம் மனித மூளையைப் போல, மின்னணு இரத்தத்தால் சக்திபெற்று இயக்கும் கணினி மாதிரி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது. இயற்கையில் மனித மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதில் இருந்து ஆராய்ந்து, இதனை தாம் தயாரித்து வருவதாகக் கூறும் அந்த நிறுவனம், இந்தக் கணினியும் மனித மூளையைப் போல இரத்தம் போன்ற ஒருவகை திரவத்தால், சக்தியைபெறுவதுடன், அதே திரவத்தால், தன்னை வெப்பம் நீக்கி குளுமைப்படுத்தியும் கொள்ளும் என்று கூறுகிறது. மிகப்பெரிய கணினிச் சக்தியை, மனித மூளை, மிகவும் குறுகிய இடத்துக்குள் தேக்கி வைத்துக்கொள்வதுடன், அதற்காக வெறுமனே 20 வாட்டுக்கள் சக்தியை மாத்திரமே பயன்படுத்தவும் செய்கிறது. இந்த அளவுக்கு செயற்திறன் மிக்க ஒரு கணினியை உருவாக்குவதுதான் தமது திட்டம் என்று ஐ பி …
-
- 1 reply
- 560 views
-
-
சூரியக் குடும்பத்தில் உள்ள எம் பூமியில் நீர் மழை... நீர் பனி.. பொழிவது போல.. அதே குடும்பத்தில் பூமிக்கு அப்பால் உள்ள.. வியாழன் மற்றும் சனிக் கிரகங்களில் வைர மழை பொழிய அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அவற்றின் வளிமண்டலங்களை ஆராய்ந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில்.. கருத்துத் தெரிவித்துள்ளனர். மேற்படி இரண்டு கோள்களின் வளிமண்டலத்திலும் மிதேன் என்ற காபன் சார்ந்த இரசாயன வாயு அதிகம் உள்ளதால் அதில் இருந்து கிரபைட் மற்றும் வைரம் போன்ற காபன் சார்ந்த கூறுகள் உருவாகச் சந்தர்ப்பம் உள்ளதாகவும் குறிப்பாக.. கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது ஆபரணங்களில் அணியக் கூடிய அளவுடைய வைரம் மழையாகப் பொழிய வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரம் பின்னர் அக்கிரங்…
-
- 4 replies
- 1.3k views
-
-
மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர்... ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் 'ஆஸ்கர்'. அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின…
-
- 17 replies
- 1.6k views
-
-
மாசூப்பியல்.. என்ற பாகுபாட்டில் அடங்கும் கங்காரு வகை விலங்குகளின் ஆண் விலங்குகள் 14 மணி நேரங்கள் தொடர்ந்து.. இயன்ற அளவு பெண்களோடு உடலுறவு கொண்டே இறுதியில் செத்து விடுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நடத்தைக்கு பெண் பல ஆணுடன் உறவு கொள்ளத் தொடர்ந்து தயாராக இருப்பதும்.. உடலுறவின் பின் மனிதர்களில் உள்ளது போன்ற பின்னூட்டல் பொறிமுறை மூலம் உடலுறவுக்கான ஆசை அடங்குவது இந்த விலங்குகளில் இல்லை என்பதால்.. ஆண் ஓமோனின் செக்ஸ் தூண்டலின்.. தொடர் செயற்பாட்டால்.. தொடர்ந்து செக்ஸ் வைச்சே இறுதியில் செத்துப் போகின்றனவாம்... இந்த வகை விலங்குகள். பெண் பல ஆண்களோடு ஒரே இனப்பெருக்கக் காலத்தில் உறவு வைத்துக் கொள்வதன் மூலம்.. பலவீனமான ஆணின் விந்து தனது முட்டையோடு கருக்கட்டுவதை தடு…
-
- 18 replies
- 8k views
-
-
"கடவுளின் துகளை" கண்டறிந்த Prof Peter Higgs இடம் ஒரு மொபைல் போன் கூட இல்லை..! "கடவுளின் துகளை" (ஹிக்ஸ் போசான் -The Higgs Boson ) கண்டறிந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 84 வயதுடைய.. Prof Peter Higgs ஒரு கையடக்கத் தொலைபேசி கூட வைத்திருப்பதில்லையாம். இவர் எடிபரோ பல்கலைக்கழப் பேராசிரியரும் கூட. இருந்தும் தான் நோபல் பரிசை வென்றதை கூட இவர் அறிந்திருக்கவில்லை. இவரின் முன்னாள் அயலவரான ஒரு பெண்மணி இவரை பரிசுபெற்றதற்காக வாழ்த்தப் போகத்தான் இவருக்கு சங்கதியே தெரிய வந்துள்ளது. 2013 ம் ஆண்டுக்கான பெளதீகவியல் அல்லது இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ள பேராசிரியர் ஹிக்ஸ், கடவுளின் துகள் என்ற இந்த பிரபஞ்சத்தில் உள்ள திணிவுக் கூறுகளை ஆக்கியுள்ள மிக அடிப்படைத் துணிக்கை பற்…
-
- 0 replies
- 864 views
-
-
அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் (1977 இல்) விண்ணுக்கு அனுப்பிய Voyager விண்கலம் நீண்ட பயணத்தின் பின்னர் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி எமது பால்வீதி அகிலத்தின் இன்னொரு பகுதியில் பயணித்துக் கொண்டிருப்பதாக நாசா அறியத்தந்துள்ளது. மனிதன் உருவாக்கிய ஒரு பொருள் விண்வெளியில் இத்தனை தூரம் பயணித்தமை இதுவே முதற்தடவையும் ஆகும். Voyager இப்பொழுது பூமியில் இருந்து சுமார் 19 பில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளதாகவும் அதில் இருந்து சமிக்ஞைகளைப் பெற 17 மணி நேரங்கள் ஆவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு சில சந்தர்ப்பங்களில் Voyager இல் உள்ள உணரிகள் அதன் உள்ளக சூழ்நிலை மாற்றமடைவதை இனங்காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 14 replies
- 1.2k views
-
-
மிதக்கும் அணு மின்சார நிலையம் ஓரிடத்தில் புதிதாக் அணு மின்சார நிலையம் அமைக்க வேண்டுமா?அதில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உண்டு. தேவையான நிலத்தை கையகப்படுத்தியாக வேண்டும். அதற்கு மானில அரசின் தயவு தேவை. சுற்றுச்சூழல் வாரியங்களின் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். அந்த வட்டார மக்களிடையே விளக்கக் கூட்டங்களை நடத்த வேண்டும். இதற்குள்ளாக அணுமின் நிலையம் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து பல இயக்கங்கள் முளைக்கும். விலாசம் தெரியாத க்ட்சிகள் அறிக்கைகளை வெளியிடும். அணுமின்சார நிலையத்தில் இடம் பெறும் அணு உலைக்கும் அணுகுண்டுக்கும் வித்தியாசம் தெரியாத கத்துக்குட்டிகள் அணுமின் நிலையத்தை “என்றாவது வெடிக்கப் போகும் அணுகுண்டு” என்று வருணித்து பீதி கிளப்புவார்கள். மகாராஷ்டிர மான…
-
- 0 replies
- 581 views
-
-
1. Phone Information, Usage andBattery – *#*#4636#*#* 2. IMEI Number – *#06# 3. Enter Service Menu On NewerPhones – *#0*# 4. Detailed Camera Information –*#*#34971539#*#* 5. Backup All Media Files –*#*#273282*255*663282*#*#* 6. Wireless LAN Test –*#*#232339#*#* 7. Enable Test Mode for Service –*#*#197328640#*#* 8. Back-light Test – *#*#0842#*#* 9. Test the Touchscreen –*#*#2664#*#* 10. Vibration Test – *#*#0842#*#* 11. FTA Software Version –*#*#1111#*#* 12. Complete Software andHardware Info – *#12580*369# 13. Diagnostic Configuration –*#9090# 14. USB Logging Control –*#872564# 15. System Dump Mode – *#9900# 16. HSDPA/HSUPA Control Menu –*#301279…
-
- 0 replies
- 590 views
-
-
வாகன விபத்துக்களின்போது பாதசாரிகள் பாதிக்கப்படுவதை குறைக்கும் முகமாக ஹொண்டா நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பாதசாரிகள் தம்முடம் கொண்டு செல்லும் ஸ்மார்ட் போனின் மூலம் சிக்னலை பெற்று சுயமாகவே வாகனங்கள் தாமாகவே பிரேக் போட முடியும். 1000 மீற்றர் தூரத்திற்கு செயற்திறன் கொண்ட இந்த தொழில்நுட்பத்திற்கென வாகனங்களிலும் விசேட சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=94352&category=CommonNews&language=tamil
-
- 1 reply
- 493 views
-
-
கடலில் திடீரென முளைத்த தீவு அண்மையில் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக பலுச்சிஸ்தானின் கரை ஓரமாக ஒரு தீவு முளைத்தது. இது சிறிய தீவுதான். இத்தீவின் தோற்றம் குறித்து நிபுணர்கள் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கடலில் தீவு முளைப்ப்து அதிசயமல்ல. குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கடலிலிருந்து முளைத்தவையே. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் எரிமலைகள் உண்டு. அவை படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கடலுக்கு மேலே வந்து தீவுகளாகி விடும். கடலடி எரிமலைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தால் அவை எப்போது கடலுக்கு மேலே தலை காட்டும் என்பதை முன்கூட்டி அறிந்து கொண்டு விடலாம். கடலட…
-
- 0 replies
- 996 views
-
-
தொழில்நுட்பம்.. தொழில்நுட்பம்... எங்கும் எதிலும் தொழில்நுட்பம்.. இனி கடுகளவிற்கு சுருங்கிவிடும் போலிருக்கிறது தகவல்தொழில்நுட்பச் சாதனங்கள். கையளவு தொலைப்பேசி.... ஒரு ஸ்மார்ட் வாட்சாக மாறியுள்ளது.. சிறிய மூக்கு கண்ணாடி பட்டையளவே உள்ள கூகிள் கண்ணாடியில் அசத்தலான அனைத்து வசதிகளும் வந்துவிட்டது. இது வெறும் கண்ணாடி அல்ல.. ஒரு மினி ஸ்மார்ட்போன், ஒரு மினி கம்ப்யூட்டர்.. ஒரு மினி லேப்டாப்.. ஒரு மினி டேப்ளட்... இப்படி எதைச்சொன்னாலும் இதற்கு ஒப்பாகாது... ஏனென்றால் இவைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றுள்ளது கூகிள் கண்ணாடி (Google Glass). மொபைல் தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட பரிணாமம் என்று கூட இதைச் சொல்லலாம். அப்படி என்னதான் இந்த கூகிள் கண்ணாடியில் உள…
-
- 0 replies
- 1k views
-
-
ரோபோவும் மனிதனை போல தன்னிச்சையாக செயல்படக்கூடியவாறு மூளையை அமெரிக்க புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடித்துள்ளார். மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்ற ஜகன்னாதன், ரோபோக்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருவதுடன் இவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்து ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார். ரோபாட் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளதுடன் எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில் வைத்து …
-
- 7 replies
- 857 views
-