செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7075 topics in this forum
-
10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை. அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயநினைவு இல்லாமல் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விபத்தொன்றில் சிக்கினார். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்றார். எனவே, அவர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக …
-
- 3 replies
- 1.2k views
-
-
[size=4]தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் வயிற்றிலிருந்து 9 அங்குல நீளமான முள்ளுக் கரண்டியொன்றை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. லீ கார்ட்னர் (40 வயது) ௭ன்ற நபர், 10 வருடங்களுக்கு முன் உணவு உண்ணும்போது முள்ளுக்கரண்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். அதை விழுங்கியதால் ௭துவித பாதிப்பும் உடனடியாக ஏற்படாத நிலையில் அவர் அது தொடர்பில் மறந்து விட்டிருந்தார். ஆனால், காலம் செல்லச்செல்ல லீ கார்ட்னர் பல்வேறு வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரத்த வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பிரித்தானியாவிலுள்ள பார்ன்ஸ்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்…
-
- 3 replies
- 662 views
-
-
10 வருடங்களில் 9 குழந்தைகள்... திருமண வாழ்வில் 87 மாதங்கள் கர்ப்பிணியாக வாழ்ந்த ‘சூப்பர் மம்மி’! லண்டன்: இங்கிலாந்து பெண்ணொருவர் பத்தாண்டுகளில் 9 குழந்தைகளைப் பெற்று சூப்பர் மம்மியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்தின் கெனட்டை சேர்ந்த ஜேசன் (41) என்பவரது மனைவி தோனியா (40). பிறந்தநாள் விழாவொன்றில் தோனியாவைப் பார்த்து காதல் வயப்பட்ட ஜேசன், கடந்த 2000ம் ஆண்டு ஜூன் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இல்லறவாழ்க்கையை தொடங்கிய அத்தம்பதிக்கு தற்போது 9 குழந்தைகள் உள்ளனர். இந்த பத்தாண்டு காலத்தில் சுமார் 87 மாதங்கள் அதாவது 7 ஆண்டுகள் கர்ப்பிணியாகவே இருந்துள்ளார் தோனியா. தற்போது தோனியாவின் முதல் குழந்தைக்கு 12 வயதும், அவருடைய கடைசி குழந்தைக்கு 2 வயதும்…
-
- 0 replies
- 742 views
-
-
வாடகை தாயாக செயல் பட்டு 10-வது முறையாக குழந்தை பெறப்போகிறார் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிங்டன் நகரை சேர்ந்த ஒரு பெண். அவரது பெயர் ஜில் ஹாக்கின்ஸ்(48) இவர் இதுவரை 8 முறை வாடகை தாயாக செயல்பட்டு 8 குழந்தைகளை பெற்றெடுத்து அதற்கு உரியவர்களிடம் பெற்று கொடுத்து இருக்கிறார். இப்போது அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த முறை அவர் ஹோம் கவுண்டிஸ் நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்காக செயற்கை தாய் ஆகி இருக்கிறார். இந்த முறை அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் உருவாகி வளர்ந்து வருகின்றன. இந்த குழந்தைகளின் உண்மையான தாயார் 40 வயதான ஆசிரியை. அவரது கணவருக்கு 42 வயதாகிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் இருக்கி…
-
- 4 replies
- 875 views
-
-
யு.எஸ்- மெக்சிக்கோவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10வருடங்களிற்கும் மேலாக வைத்திருந்த ஒரு பாவித்த வானின் கதவிற்குள் இருந்து கிட்டத்தட்ட 13-இறாத்தல்கள் எடையுள்ள கஞ்சாவை கண்டு பிடித்துள்ளார். வாகன சொந்தக்காரரின் குடும்பம் 1990-மாடல் செவ்ரலொட் வானின் பின் பக்க கதவின் பூட்டில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய முயன்ற போது இது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்த கஞ்சாவை தூக்கி எறியாது வாகனத்தின் சொந்த காரரான மெலொடி பெயில் சரியான செயலாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார். வாகனத்தின் கதவு பனலை திருத்த எடுத்த போது குடும்ப நண்பர் ஒருவர் இதனை கண்டுள்ளார். பெரிய குவியல் கஞ்சா பயணிகள் கதவிற்குள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. மெலொடி பெயில் வாகனத்தை 10-வருடங்களிற்கு முதல் 3,500 டொலர்களிற்கு…
-
- 1 reply
- 624 views
-
-
மும்பையை சேர்ந்த காதல் ஜோடி, இன்று( 12.12.12) திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்கள் தங்கள் காதல் திருமணத்தை, 10.10.10ல் நிச்சயம் செய்துள்ளனர்; அதை, 11.11.11ல் பதிவு செய்துள்ளனர்.பாந்த்ரா பகுதியை சேர்ந்தவர், பிராண்டன் பெரெரா, 33. வளைகுடா நாடு ஒன்றில், கப்பல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர், எமிலியா டி சில்வா, 28, என்ற பெண்ணை, 12 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதல் கதை, பள்ளிப் பருவத்திலிருந்தே துவங்கியது. இருவரும், ஒருவரை ஒருவர் மனதார விரும்பினர். காதல் பறவைகளாக வலம் வந்த இந்த ஜோடி, 2009ல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. 12 ஆண்டு காதல் திருமணத்தை, எந்த காலத்திலும் மறக்க முடியாத அளவிற்கு, பதிவு செய்ய, முடிவு செய்தது. இருவ…
-
- 2 replies
- 564 views
-
-
சூரிய ஒளியே படாமல் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நோர்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவியைக் கொண்டு சூரிய வெளிச்சத்தைப் பெறவுள்ளது. நோர்வேயில் டெலிமார்க் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டை நகரமான ருஜூகான், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எனவே, இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, சூரிய ஒளியை விரும்பும் மக்கள், ரோப்காரில் குறிப்பிட்ட மலைச் சிகரங்களுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1907ஆம் ஆண்டு, நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் இந்த ருஜூகான் தொழில்நகரம் உருவானது. குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள…
-
- 0 replies
- 411 views
-
-
கடந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்ஸ் வானாவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.இந்த வைரம் 1,111 காரட் தரம் கொண்டது. 100 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்ட மிகப்பெரிய வைரமாக இது கருதப்படுகிறது. கடந்த 1905-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்க வைர சுரங்கத்தில் ‘குல்லினான்’ என்ற வைரம் வெட்டியெடுக்கப்பட்டது.3,106 காரட் தரம் கொண்ட அந்த வைரம், பல துண்டுகளாக பட்டை தீட்டப்பட்டு இங்கிலாந்து மன்னர்களின் கிரீடங்களை அலங்கரித்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள இந்த வைரம் ‘குல்லினான்’ வைரத்துக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் உள்ளது.இந்த தகவலை Lucara Diamond Corporation என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரத்தின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. ஆனால் இதன் மத…
-
- 6 replies
- 761 views
-
-
100 டொலர் நாணயத்தாள்களை சாரதிகளுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சியளித்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை நிறுத்தினால் பொதுவாக சாரதிகளுக்கு கலக்கம் ஏற்படும். அப்பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டுப் பத்திரம் எதையும் வழங்குவதற்கு பதிலாக சாரதிகளுக்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கினால் எப்படியிருக்கும்? இவ்வாறானதொரு இன்ப அதிர்ச்சி, அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத் திலுள்ள வீதியொன்றில் அண்மையில் பயணம் செய்த சாரதிகளுக்கு கிடைத்தது. அதுவும் 100 அமெரிக்க டொலர்கள் (சுமார் 14,000 ரூபா) பெறுமதியான நாணயத்தாளை சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸார் வழங்கினர். …
-
- 0 replies
- 297 views
-
-
“நீ இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகப் போகிறாய் இவான்ஸ்” என்று மருத்துவர் சொன்ன போது இவான்சும் அவரது கணவர் மைக் ஹவுல்ஸ்டனும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர். ஆனால், கரு வளரத் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு அதே மருத்துவரிடமிருந்து இதயத்தை பிளக்கும் செய்தி ஒன்று வந்தது. இறுகிய முகத்துடன், ”’அனன்சிபலி’ எனப்படும் மூளையின் முக்கிய பகுதிகளை அழிக்கும் அரிய நோயால் உன் வயிற்றில் வளரும் சிசு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் கண்ட சிசு வயிற்றிலேயே இறந்து விடும். ஒரு வேளை அது உயிர் பிழைத்தாலும், பிறந்த சில நிமிடங்கள் மட்டும் தன் உயிர் வாழும்” என்றார். ‘தங்கள் வீரமான மகன் நிச்சயம் இந்த உலகிற்கு வருவான், கருப்பையிலேயே இறந்து விட மாட்டான்’ என்று உறுதியாக நம்பிய இவான்ஸ் தம்பதியினர் பிறக்கவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
100 பேரை கொன்று குவித்த ரவுடி சுட்டுக்கொலை உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடந்த மோதலில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான். கூலிப்படையாக செயல்பட்டு சுமார் 100 பேரை கொன்ற ஜோகிந்தர் என்ற ஜக்கு பகல்வன், இன்று காலை ஒருகாரில் சென்றான். டிலா மோர் என்ற இடத்தில் சென்றபோது மற்றொரு காரில் வந்த 3 பேர் வழிமறித்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஜோகிந்தரும் திருப்பி சுட்டார். பின்னர் தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த ஜோகிந்தர் மற்றும் டிரைவர் சந்தீப் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜோகிந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெ…
-
- 0 replies
- 473 views
-
-
100 வயதிலும் யோகா செய்து வரும் நானம்மாள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்தவர். தனது சிறுவயதிலிருந்து யோகா செய்து வரும் இவருக்கு 50 விதமான ஆசனங்கள் தெரியும். கடந்த 2018ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. யோகா குறித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பல இடங்களுக்கு பயணிக்கும் இவரை, கோவை நகர மக்கள் 'யோகா பாட்டி' என்று அழைக்கின்றனர். https://www.bbc.com/tamil/arts-and-culture-48716596 கோயம்புத்தூரின் கணபதி பகுதியில் வசிக்கும் நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டில் வேளாண்மைக் குடியில் பிறந்தவர். தனது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசனப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நானம்மாள், அந்தப் பயிற்சியை 90 ஆண்டுகளுக்கு…
-
- 4 replies
- 1.3k views
-
-
. http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/signatures/page/9 இதனை உடனடியாக தோழர்களுக்கு பகிர்ந்திடுங்கள்.
-
- 23 replies
- 892 views
- 1 follower
-
-
பிரான்ஸ் நாட்டில் இரட்டை சகோதரிகள் 2 பேர் தங்களது நூறாவது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள ஃபே - டி- ப்ரெடக்னே நகரில் கடந்த 1919ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இருவரும் பிறந்தனர். அவர்களின் பெயர், மேரி லீமேரி, ஜெனிவிவிபோலிகான்ட் ஆகும். அவர்களின் நூறாவது பிறந்த தினம் உறவினர்கள், நண்பர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு, சகோதரிகள் 2 பேரும் கேக்குகளை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். மதுபழக்கம் இல்லாதது, குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது ஆகியவையே தங்களது நீண்ட நாள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணமென்று சகோதரிகள் 2 பேரும் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 321 views
-
-
100க்கும் அதிகமான யானைக் கூட்டம் – வனவிலங்கு அதிகாரிகள் விரட்ட நடவடிக்கை February 25, 2022 அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை(24) மாலை திடீரென சம்மாந்துறை ஊடாக மஜீட் புரம் பகுதிகளை ஊடறுத்து ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாலை முதல் இரவு வரை குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை மற்றும் கலவரப்பட்டமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் போது குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற…
-
- 0 replies
- 177 views
-
-
100க்கும் மேற்பட்ட பிணங்களைத் திருடி நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்ட பாகிஸ்தான் நபர். லாகூர்: இதுவரை நூறுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் சாப்பிட்டதாக பாகிஸ்தான் மனிதர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஆரிப் அலி (வயது 35). இவர் ஏற்கவவே நரமாமிசம் சாப்பிட்டதாக சகோதரருடன் கைது செய்யப்பட்டவர். அப்போது சுமார் 100க்கும் அதிகமான சடலங்களை சமைத்துச் சாப்பிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர்கள் கடந்தாண்டு தான் விடுதலை செய்யப் பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரிப் அலி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச…
-
- 0 replies
- 778 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிறுவனத்தின் முன்பதிவு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 101 வயது மூதாட்டி ஒருவரை குழந்தை என்று தவறாக பதிவு செய்து பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 101 வயது மூதாட்டியான பாட்ரிசியா (தன் குடும்பப் பெயரை பகிர விரும்பாதவர்) விமானத்தில் பயணிக்க பயணச்சீட்டு பதிவு செய்த போது தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு விநியோக தளத்தால் பாட்ரிசியா 1922 இல் பிறந்தவர் என்பதை கணக்கிட முடியவில்லை, எனவே 2022 இல் பிறந்ததாக தளத்தில் பதிவாகிவிட்டது. சமீபத்தில் நிகழ்ந்த இந்த நகைச்சுவை…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
101 வயது விளையாட்டு வீரர் கண்ணன் மாற்றம் செய்த நாள் 10 ஜன 2017 08:09 பதிவு செய்த நாள் ஜன 09,2017 17:53 அந்த விளையாட்டு வீரர் தனது வெற்றிக்கோட்டை தொட்ட போது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது,அதில் பாத…
-
- 0 replies
- 276 views
-
-
படத்தின் காப்புரிமை AFP கடற்கரை மணலுக்குள் புதைந்து கிடந்த முதல் உலகப்போரில் பயன்படுத்தபட்ட நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றின் சிதிலமடைந்த எச்சம் மீண்டும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இக்கப்பல் ஜெர்மனிக்கு சொந்தமானது. பிரான்சில் உள்ள வீசா கடற்கரை பகுதி அருகே UC-61 என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக்கப்பல், 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம், தரை தட்டியதால் ஈர மணலில் சிக்கிக்கொண்டது. அதை நகர்த்த முடியாமல் போனதால், அந்தக் கப்பலின் குழுவினர் அதை அங்கேயே விட்டுச்சென்றனர். …
-
- 0 replies
- 727 views
-
-
102 வயதில் முனைவர் பட்டம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க ஜெர்மனிய குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் தனது 102ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இன்கேபோர்க் சிலம் ரோபோபார்ட்இன்கேபோர்க் சிலம் ரோபோபார்ட் என்ற அந்த பெண்மணி 77 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் அப்போது அதிகமிருந்த தொண்டையடைப்பான் நோய் குறித்து தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்திருந்தார். ஆயினும் நாஜிக்களால் தனது இறுதித் தேர்வில் பங்கேற்பதிலிருந்து அவர் தடுக்கப்பட்டார். இவரது தாய் யூதர் என்பதால் அப்போதிருந்த சட்டங்களின்படி இவருக்கு வாய்வாழித் தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தத் தவறை சரி செய்ய தற்போது ஹாம்பர்க் பல்கலைக்கழகம் முனைந்துள்ளது. கடந்த வாரம் இந்தப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையைச் …
-
- 0 replies
- 450 views
-
-
லூயிஸ் பொனிடோ 102 வயது பாட்டி அவரது 102 வயது பிறந்த நாள விழாவை குடும்பத்தினர் சிறப்பாக நடத்த விருமபினர். அதற்காக கேக் தயாரிக்கப்பட்டு கேக்கின் மீது 102 வயதை குறிக்கும் 102 வடிவில் மெழுகுவர்த்தி ஏற்றபட்டது. குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பாட்டிக்கு ஹேப்பி பெர்த் டே பாட்டு பாடினர். பின்னர் பாட்டியை கேக்கின் மேல் உள்ள மெழுகு வர்த்தியை ஊதி அனைக்குமாறு கூறினர் பாட்டியும் நல்ல மூச்சை உள்வாங்கி மெழுகுவர்த்தியை ஊதியது.ஆனால் காற்று வரவிலை அதற்கு பதில் பாட்டியின் பல் செட் வெளியே வந்து விழுந்தது. அதைபார்த்து குடும்பத்தினரும் பாட்டியும் விழுந்து விழுந்து சிரித்தனர். பின்னர் பாட்டி மீண்டும் பல்செட்டை மாட்டி கொண்டு பிறந்தநாள் கேக் மெழுகுவர்த்தியை ஊதி அனைத்தது. பாட்டியின் பல் ச…
-
- 0 replies
- 308 views
-
-
103 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து கனவை நனவாக்கிக் கொண்ட பாட்டி அமெரிக்காவில் ஒரு மூதாட்டி சிறுவயதில் பாதியிலேயே நின்று போன படிப்பை 103-வயதில் முடித்து பட்டம் வாங்கி மகிழ்ச்சி புன்னகை புரிகிறார். அமேரிக்காவின் வின்கான்சின் நகரின் அருகே உள்ள ஸ்பிரிங் க்ரீன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மேரி. தினமும் விஸ்கான்சினில் உள்ள பள்ளிக்குச் சென்று வர முடியாத காரணத்தால், எட்டாவது கிரேடுடன் மேரியின் படிப்பு தடைபட்டு போனது. ஆனாலும் அவரது 7 சகோதரி, மற்றும் சகோதரர்களைப் படிக்க வைத்து தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் மேரி. வயது ஆகிக் கொண்டே போனாலும், மேரியின் கல்வி மீதான ஆசை மட்டும் அவரிடமிருந்து அகலாமலேயே இருந்தது. அந்த வகையில் 103 வயதில் அந்த ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் ம…
-
- 0 replies
- 245 views
-
-
இந்த உலகத்தில் அழியாத செல்வம் ஒன்று உண்டென்றால் அது கல்வி செல்வமே. படிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை பலர் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில் கேரளாவை சேர்ந்த 105 வயதான மூதாட்டி ஒருவர் கல்வியில் செய்துள்ள சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறப்பு: கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பகீரதி அம்மா என்ற மூதாட்டி நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். முதியவர்கள் தேர்வுகள் எழுதுவது அவ்வப்போது நடக்கும் விஷயம் என்றாலும், 105 வயதான பகீரதி அம்மாவின் கல்வி பயிலும் முயற்சியே இதில் சிறப்பான விஷயம். தன் 105 வயதில் பகீரதி அம்மா, நான்காம் வகுப்புக்கு இணையான கல்வியறிவு தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார். …
-
- 3 replies
- 576 views
- 1 follower
-
-
அண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் 106 ஆண்டுக்கு முன்னர் பழமையான “பழ கேக்” ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான கட்டடத்தில் இருந்து இந்த கேக்கை ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கண்டெடுத்துள்ளது. இந்த பழமையான கேக், பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வுப் பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்த பழமையான கட்டடம் 1899ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1911 ஆம் ஆண்டு தனது டெர்ரா நோவா அய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த கட்டடத்தில் தங்கியுள்ளார். http://newuthayan.com/story/16/106-ஆண்டுகள்-பழமையான-கேக்-கண்டெடுப்பு-பழுதடையாமல்-இருக்கும்-அதிசயம்.html
-
- 0 replies
- 348 views
-
-
பெண்ணொருவர் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1970-களில் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து 8 குழந்தைகளை பெற்றார். 50 வயதை கடந்த பிறகும் குழந்தைகளை பெற்று வந்தார். அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே பிறந்தன. இதில் முதல் குழந்தையான ஸ்வெட்லானாவுக்கு 46 வயதாகி விட்டது. 9-வது குழந்தையான கதரினாவுக்கு 2 வயதாகிறது. இந்நிலையில், அலெக்சான்ட்ரா தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை கடந்த 19-ம் திகதி பெற்றெடுத்தார். ஆண் குழந்தையான அதற்கு பிலிப் என பெயரிட்டுள்ளார். இத்தனைக்கும் இயற்கைவழியில்தான் இவர் கருத்தரித…
-
-
- 11 replies
- 532 views
-