செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7097 topics in this forum
-
குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுவீடன் மன்னர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்து சுவீடன் மன்னரான கார்ல் 16 ஆம் கஸ்டப் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பில் சுவீடன் பத்திரிகையான சவென்ஸ்கா டக்பிளேடட் செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் 69 வயதான மன்னர் கஸ்டப், குளியலின் போது பெருமளவு நீரும் சக்தியும் விரயமாவது தனக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அனைத்த…
-
- 2 replies
- 425 views
-
-
குளியலறையினுள் அமானுஷ்யம்..? பாராளுமன்ற உறுப்பினருக்கு நிகழ்ந்த திகில் சம்பவம்..! ஐக்கிய தேசியக் கட்சி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற நலீன் பண்டார விடுதி அறை குளியலறையினுள் விபத்துக்குள்ளாகி மர்மமான முறையில் காயமடைந்துள்ளார். நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், அன்று விடுதி குளியலறைக்கு சென்றபோது தன்னை யாரோ தள்ளிவிட்டதாகவும் இதனால் தான் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அந்த சம்பவ நேரத்தில் அறை பூட்டியிருந்ததாகவும் தான் மாத்திரமே குறித்த அறையில் இரு…
-
- 9 replies
- 525 views
-
-
கனடா- குளிர்காலத்தின் ஆழ்ந்த உறைபனி நயாகரா நீர்வீழ்ச்சியை கண்கவர் பனி கற்பாறைகளாக மாற்றியுள்ளதோடு சுற்றுபுறங்களில் உள்ள மரங்களை சுற்றி படிககற்கள் தொங்குவது போன்று காட்சியளிக்கின்றன. இக்காட்சிகள் உல்லாச பயணிகளை கவர்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா ஆறு உறைபனியினால் மூடப்பட்டுள்ளபோதும் வீழ்ச்சி முற்றாக உறைந்து விடவில்லை. ஆனால் வீழ்ச்சியின் விளிம்பு அருகில் உள்ள பிரமாண்டமான பனி கட்டமைப்பு சுற்றுலா பயணிகளை காந்தமாக ஈர்க்கின்றதென கூறப்பட்டுள்ளது. இந்த உறைபனி நிலைமை விரைவில கரைந்து விடும் என எதிர்பார்க்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா பகுதி வெப்பநிலை தான இதற்கு காரணம். - See more at: http://www.canadamirror.com/canada/38266.html#sthash.Ov1hJx…
-
- 0 replies
- 342 views
-
-
புனே: புனே நகரிலுல்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரண்டிற்கு குளிர்பானம் வாங்க வந்த ஏழை சிறுவனை ஊழியர் வெளியே இழுத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. புனே ஜேஎம் ரோடு பகுதியிலுள்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரண்ட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு தோழிகளுடன் சாப்பிட சென்றுள்ளார் இளம் பெண் ஒருவர். அப்போது ரெஸ்டாரண்ட் வெளியே நின்றிருந்த நடைபாதை குடியிருப்பில் வசிக்கும் ஏழை சிறுவன், எனக்கும் ஏதாவது குளிர்பானம் வாங்கித்தாருங்கள் என்று கேட்டுள்ளான். எனவே சிறுவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற அந்த பெண், ஆர்டர் செய்வதற்காக கியூ வரிசையில் சிறுவனோடு காத்திருந்தார். இதைப் பார்த்த மெக் டொனால்டு ஊழியர் ஒருவர் ஓடிவந்து, அந்த சிறுவனை பிடித்து வெளியே இழுத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்ததும் …
-
- 2 replies
- 568 views
-
-
Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 05:26 PM சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் குளோனிங் முறையில் ஆரோக்கியமான முதலாவது ரீசஸ் குரங்கை உருவாக்கியுள்ளனர். குறித்த ரீசஸ் குரங்கிற்கு வயது இரண்டு எனவும் பெயர் “ரெட்ரோ” எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ரீசஸ் குரங்கு உயிருடன் பிறக்கவில்லை அல்லது பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டது. ரீசஸ் குரங்கு மூலம் மருந்துவ பரிசோதனை விரைவுபடுத்த முடியும் என்றும், மரபணுவில் மனிதர்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டு இருப்பதால் பரிசோதனைகளில் மிகச் சிறந்த உறுதி தன்மை கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரீசஸ் குர…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
நத்தம்: திண்டுக்கல்லில் குழந்தையின் பாலினத்தை முன்னரே ஸ்கேன் மூலம் தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே நத்தம் அவுட்டரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகளை கண்டறியும் ஸ்கேன் பிரிவு செயல்பட்டு வந்தது. இதில் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பதை பார்த்து கர்ப்பிணி பெண்களுக்கு பாலினம் குறித்து தகவல் தெரிவிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட சட்ட அமலாக்க பிரிவு இணை இயக்குநர் ரவிகலா மேற்பார்வையில் அந்த மருத்துவமனையை சோதனையிடப்பட்டது. அப்போது அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பார்க்கும் தனி அறை இருப்பது கண்டறியப்பட்டு அந்த அறைக்கு தாசில்தார் கேசவன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உ…
-
- 0 replies
- 518 views
-
-
தங்க நகை, ரொக்கப் பணம், கலை நிகழ்ச்சிக்கான நுளைவுச்சீட்டு, சுற்றுலாவுக்கான பயண ரிக்கெற் என்று பலவிதமான பரிசுப் பொருட்களை முன் வைத்து வானொலிகள் நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. ஆனால் இங்கே வித்தியாசமாக அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் “குழந்தை ஒன்றை வெல்லுங்கள்” என்று நிகழ்ச்சி ஒன்றை ஒரு வானொலி நடத்தியிருக்கிறது. இளம் அமெரிக்கத் தம்பதிகளான (Anthony) அந்தோணிக்கும் (Krista) கிறிஸ்டாவுக்கும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் தீராத ஆசை. ஆனால் அவர்களது அந்த விருப்பத்தை ஒரு செய்தி வந்து தகர்த்து விட்டது. 2017 ஆம் ஆண்டில் ஒரு மருத்துவச் சோதனையில் அந்தோணியின் விதையில் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். இதனால் இயற்கையான முறையில் அவர்களால் குழந்தைகளைப் பெற ம…
-
- 1 reply
- 430 views
-
-
எனக்கு குழந்தை தந்தால் சுகத்துடன் பணமும் தர தயார் என இளம் பெண்ணொருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமையானது பேஸ்புக் வலைத்தளத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவைச் சேர்ந்த 25 வயதுயை அடினா அல்பு என்ற இளம் பெண்ணே இவ்வாறு பரபரப்பான பதிவேற்றத்தை பதிவு செய்துள்ளார். தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ள அடினா, ஆண்கள் அனைவரும் மனதளவில் முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஆண்களை எப்போதும் சந்திப்பது ஒரு பெரிய விடயம் இல்லை. ஆனால் தமக்கு ஒரு குழுந்தை தேவைப்படும் போது ஆண் ஒருவரை சந்திப்பதான பெரிய பிரச்சினையாகும். குழந்தைக்காக எவ்வித பயனும் இல்லாத உறவில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே எனக்கு குழந்தை த…
-
- 23 replies
- 1.4k views
-
-
குழந்தை பிறந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு இறந்த விவகாரம்: தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு அபராதம்! ஒரு குழந்தை பிறந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு இறந்ததற்கு வழிவகுத்த தவறுகளுக்காக தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு 800,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிங்ஹாமில் உள்ள குயின்ஸ் மெடிக்கல் சென்டரில் (க்யூஎம்சி) அவசரகால சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 15 செப்டம்பர் 2019ஆம் ஆண்டு பெற்றோர்களான சாரா மற்றும் கேரி ஆண்ட்ரூஸிற்கு பிறந்த குழந்தை இறந்தது. 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூத்த மருத்துவச்சி டோனா ஒகென்டன் தலைமையில் மகப்பேறு பராமரிப்ப…
-
- 0 replies
- 259 views
-
-
பீஜிங்: ஒரு வயதுடைய காங் மெங்ரூ என்ற பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள அபூர்வம் சீனாவில் நடந்துள்ளது. அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது.
-
- 0 replies
- 732 views
-
-
கோவை: குழந்தை பிறக்க வேண்டி சாமியார்களிடம் சென்றால் அவர்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டி அதிர்ச்சியளிக்கிறார் கோவை அருகே உள்ள சாமியார். திருமணமான தம்பதியர்களுக்கு ஒரு வருடத்திற்கு குழந்தை பிறந்து விட்டால்தான் போச்சு. இல்லை என்றார் உறவினர்கள், நண்பர்களின் ஏச்சு, பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக பலவித சிகிச்சைகளை மேற்கொள்பவர்கள் இருக்கின்றனர். ஒரு சிலர் கோவில் குளம் என்று சுற்றுவார்கள். இன்னும் சிலர் சாமியாரை நாடிச் செல்வார்கள். முதல் இரண்டு ரகத்தினரையாவது ஒரு வழியில் சேர்க்கலாம். ஆனால் பிள்ளை வரத்திற்காக சாமியாரிடம் செல்பவர்களை என்னவென்று சொல்வது.. லிப் டூ லிப் டிரான்ஸ்பர் கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள ஒரு சாமியாரோ பிள்ளை வரம் தரும் சாமியாராக இரு…
-
- 30 replies
- 5.3k views
-
-
குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு. சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. மருத்துவ பரிசோதனை செய்தபோதும், குழந்தைப்பேறு இல்லை என தெரிவித்துள்ளனர். மந்திர, தந்திரங்களில் ஆனந்த் யாதவ்க்கு அதிக நம்பிக்கை உண்டு. தந்தையாக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரிகாரங்கள் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்தநிலையில் உள்ளூர் ஜோதிடர் ஒருவரை அணுகியபோது, ‘குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். எப்படியாவது தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆவலில் இருந்த ஆனந்த் யாதவ், சம்பவத்தன்…
-
-
- 7 replies
- 574 views
- 1 follower
-
-
சிம்பாப்வே நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் மார்டின் கும்புரா (57). இவருக்கு 11 மனைவிகளும், 30 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனக்கு 100 குழந்தைகள் வேண்டும் என விரும்பி இவர் சர்ஜ்சுடன் இணைந்த ஒரு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் 4 மீது 10 ஆண்டுகளுக்கு முன் 4 பெண்களை கற்பழித்ததாக வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கில் நீதிபதி ஹோசக் முஜாயா குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் கும்புராவுக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=102918&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 583 views
-
-
குழந்தைக்கு நிகரான எடையில் பிரமாண்ட ‘கோலியாத் தவளை’ – காப்பாற்ற போராடும் தன்னார்வலர் கட்டுரை தகவல் எழுதியவர்,ஹெலன் ப்ரிக்ஸ் பதவி,சுற்றுச்சூழல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JEANNE D'ARC PETNGA செட்ரிக் ஃபோக்வான் கோலியாத் தவளையை முதன்முதலில் பார்த்தபோது அதன் அளவைக் கண்டு ஆச்சர்யப்பட்டார், ஈர்க்கப்பட்டார். ஒரு பூனையின் அளவுக்குப் பெரிதாக வளர்ந்திருந்த அதுதான் உலகின் மிகப்பெரிய தவளை. ஏறக்குறைய ஒரு குழந்தையை வைத்திருப்பதைப் போல, ஒரு மீட்புப் பணியில் தவளை ஒன்றைத் தான் கையாண்டதாக அவர் கூறுகிறார். கேமரூனிய காட்டுயிர் பா…
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
இங்கிலாந்து நாட்டின் வணிக வளாகத்தில், தனது குழந்தைக்கு பால் கொடுக்க முயன்ற பெண்ணை அந்நிறுவன அதிகாரிகள் தடுத்து வெளியில் அனுப்பியதற்கு, எதிராக குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இங்கிலாந்து நாட்டின், நாட்டிங்காம் பகுதியில், 25 வயதான வோய்லோட்டோ கெமோர் என்ற இளம்பெண்னின் தந்தை, துணி எடுப்பதற்காக வணிக வளாகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது மழை பெய்ததால் கெமோரும் அங்கு சென்றுள்ளார். அப்போது பிறந்து மூன்றே மாதங்களான அவரது குழந்தை பசியால் அழத்தொடங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் குழந்தையின் பசியை போக்க பால் கொடுத்தபோது, அங்கு வந்த நிறுவன ஊழியர், வெளியே செல்லுமாறும், இங்கு குழந்தைகளுக்கு பால் கொடுக்கக்கூடாது என்றும், இது நிறுவன விதிமுறைகளுக்கு எதிரானது என…
-
- 0 replies
- 252 views
-
-
இந்தியா - அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது. நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும் உடனே விளையாட ஆரம்பித்து விட்டனர். குரங்கை பார்த்து குழந்தை ஒரு போதும் பயப்படவில்லை. அன்று முதல் இன்று வரை கடந்த ஆறு மாதங்களாக சுல்தான் சிங் வீட்டிலேயே அக்குரங்கு வசித்து வருகிறது. சுல்தான் சிங்கும், அவரது மனைவியும், குரங்கிற்கு 'நானி' என்று பெயர் வைத்து அதை தங்கள் குழந்தை போல் பாவித்து வருகின்றனர். அதே போல் குரங்கும் சுல்தான் சிங்கின் குழந்தையை பெற்ற தாயை போல் கவனித்து வருகிறது. குழந்தையை கொஞ்சி விளையாடுவதிலும், அதற்கு சோறூட்டுவதிலும், முத்தமிடுவதிலும், அவளை பராம…
-
- 0 replies
- 908 views
-
-
குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் தாய், விரும்பினால் தனது பாலில் இருந்து நகை தயாரிக்க முடியுமாம். இப்படி ஒரு நகை தயாரிப்பை பிரெஞ்சு நிறுவனம் டியூன்டே கண்டுபிடித்துள்ளது. தாய்ப்பாலுடன் வினிகரைச் சேர்த்து கொதிக்க வைத்தால், பாலில் உள்ள அதிக புரோட்டின் காரணமாக அந்தக் கலவை இறுகி பிளாஸ்டிக் வடிவைப் பெறுகிறதாம். பிறகு, அந்த கலவை ஆறுவதற்கு முன் எந்த வடிவில் வேண்டுமானாலும் உருவாக்கலாமாம். இப்படி தாய்ப்பாலில் இருந்து நகை ரகங்களைச் செய்து அசத்தியுள்ளது டியூன்டே நிறுவனம். தனது தயாரிப்புகளை அது செப்டம்பரில் நடைபெற உள்ள நகைக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளது. முதல் கட்டமாக குழந்தை முகம் வடிவில் டாலர், நெக்லஸ், பிரேஸ்லெட் ஆகிய நகைகளை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கம், வெள்ளி உட்பட இத…
-
- 18 replies
- 3.4k views
-
-
(வத்துகாமம் நிருபர்) குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் இருவருக்கு தோசம் கழிக்கும் தோரனையில் பாலியல் வல்லுறபுரிந்த பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிங்கிரிய ஹதபான்கொடை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணம் முடித்த இரு பெண்களுக்கு நீண்டகாலமாக குழந்தைப் பேறு இல்லாதிருந்துள்ளது. இதனையடுத்து பூசாரியின் உதவியை நாடடி உள்ளனர். அவர் இவர்களுக்கு தோசம் ஒன்று பிடித்திருப்பதாகவும் அதனை தீர்த்துவைத்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கு மென்றும் கூறியுள்ளார். ஆதற்கான தோசம் கழிக்கும் எற்பாடுகள் செய்யப்பட்ட போது பூசகரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பூசகர் மாத்தறை பிரதேசத்தைச்…
-
- 0 replies
- 460 views
-
-
குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது. ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள். தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர். குழந்தையின் தாயும் – தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின்…
-
- 4 replies
- 413 views
-
-
3மாத பாலகனான மகனின் அழுகையை நிறுத்த அவனுக்கு புட்டிப்பாலில் மதுபானத்தை கலந்து அருந்தக் கொடுத்து அவனைக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொலிவியாவில் இடம்பெற்றுள்ளது. லாபாஸ் நகரில் எல் அல்டோ பிரதேசத்தைச் சேர்ந்த அக்சியோ எஸ்ரேடா, (37வயது) என்ற தந்தையே தனது 3 மாத மகனான கார்லோவுக்கு பாலுடன் மதுபானத்தை கலந்து வழங்கி அவனது மரணத்துக்கு காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சம்பவ தினம் அகாசியோ மதுபானம் அருந்திக் கொண்டிருந்தவேளை குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் அவர் கடும் மன அழுத்தத்துக்குள்ளானார். இந்நிலையில் குழந்தையின் அழுகையை நிறுத்தும் முகமாக அவர் குழந்தையின் பால்புட்டியில் மதுபானத்தை கலந்து வழங்கியுள்ளார். சம்பவம் இடம்பெற்றபோது குழந்…
-
- 1 reply
- 485 views
-
-
குழந்தையின் தலையில் தாக்கிய நபரை பொலிஸார் தேடுகின்றனர் அழுத குழந்தையின் தலையில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் லூற்றனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 மாதக் குழந்தையொன்று தள்ளுவண்டியில் தனது தாயுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது அந்தக் குழந்தை அழுதுள்ளது. இந்நிலையில் அந்த பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் குழந்தையின் தலையில் தாக்கியுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபரின் சி.சி.ரி.வி படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:50 அளவில் லூற்றனின் 29வது இலக்க பஸ்சில் நடந்துள்ளது. பொலிஸ் கொன்ஸ்ரபிள் கரோலின் ஹோர் கூறுகையில்; எங்களது மாவட்டத்தில் இந்த வகையான நடத்தையை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பகல் நேரத்தில் ப…
-
- 0 replies
- 226 views
-
-
குழந்தையின் தலையுடன் வீதியில் வலம் வந்த பெண்ணால் பரபரப்பு மொஸ்கோவில் குழந்தையின் தலையுடன் வீதியில் சுற்றித்திரிந்த பெண்ணினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் உடம்பை மறைத்து நீளமான கறுப்பு நிற ஆடையுடன் மொஸ்கோவில் ஒரு வீதியில் நடந்து சென்றுள்ளார். குறித்த பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த மொஸ்கோ பொலிசார் அந்த பெண்ணை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், குறித்த பெண், திடீரென தனது பையில் கை விட்டு ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்காட்டி, ‘உடனே என்னை விட்டுவிட்டு ஓடுங்கள். நான் ஒரு தீவிரவாதி. என் உடலில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன்’ என மிரட்டியதால் பொலிஸார் பயந்து அவ்விடத்தை விட்டு விலகியு…
-
- 0 replies
- 355 views
-
-
பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்தமைக்காக தாயொருவர் அவரது குழந்தையை 90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் வயது 8 மாதங்கள் எனவும் தெய்வாதீனமாக அக்குழந்தை உயிர்பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை, அதன் தாய் மற்றும் அவரது உறவுக்காரர்கள் இரண்டு பேர் என 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் முற்றத்தில் குழந்தை இரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட அதன் மாமா ஒருவர் அதனை வ…
-
- 7 replies
- 1.2k views
-
-
குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்று, ரத்தத்தை மண்சட்டியில் பிடித்து வறுத்தேன். அதை, ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தேன்,'' என மதுரை குழந்தையை "நரபலி' கொடுத்த கொடூரன், பகீர் வாக்குமூலம் அளித்தான். மதுரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்த செரின்பாத்திமாவின் ஆண் குழந்தை காதர்யூசப்பை (1) கடத்தி கொலை செய்து, நரபலி கொடுத்த கொடூரன் அப்துல்கபூர் (30) போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் மகதூம் தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மீராசாகிப். இவரது நான்காவது மகனான நான் (அப்துல்கபூர்), அங்குள்ள சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். தந்தை வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். படிப்பு வராததால் ஊர் சுற்றி வந்தேன். மது, கஞ்சா பழக்க…
-
- 2 replies
- 842 views
-
-
உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்மிக தலைவரும் சமண துறவியுமான ராஜேஷ் முனி மகராஜின் ஆலோசனையின் பேரில் ‘சந்தாரா’ வழக்கப்படி குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் குழந்தை கடந்த மார்ச் 21-ம் திகதி உயிரிழ…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-