செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7107 topics in this forum
-
சீனாவின் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனமொன்று தம்மிடம் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு வித்தியாசமான போனஸை வழங்க முன்வந்துள்ளது. இந்நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. கடின உழைப்பை வழங்கும் தமது ஊழியர்களுக்கு பொதுவாக பண வெகுமதிகளையே அந்நிறுவனம் வழங்கும். ஆனால், இம் முறை சீனப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, வருடத்தின் மிகச் சிறந்த ஊழியராக தெரிவுசெய்யப்படும் ஒருவருக்கு ஒரு வித்தியாசமான முறையில் ஆபாச நடிகையொருவருடன் மாலைப்பொழுதை கழிக்கும் வாய்ப்பை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஊழியர் மாலைப் பொழுதை கழிப்பதற்காக சீனாவில் பிரபலமான …
-
- 2 replies
- 461 views
-
-
கம்போடியாவில் உள்ள இந்து கோவிலில் அமெரிக்காவை சேர்ந்த சகோதரிகள் நிர்வாண புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். கம்போடியா நாட்டில், உலக பிரசித்தி பெற்ற அங்கோர்வாட் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகளான லின்ட்சே ஆடம்ஸ் (22), லெஸ்லீ (20) ஆகிய இருவரும் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது இரு சகோதரிகளும் கோவில் வளாகத்தில் ஒருவரை ஒருவர் உடலில் எந்தவொரு உடையும் இன்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால், இந்த சகோதரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் சாவ் சன் கெர்யா, “இந்தக் கோவில் வளாகம் எந்தளவு புனிதமானது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்களது இந்த தரக்குற…
-
- 10 replies
- 2.5k views
-
-
விழுப்புரம் மாவட்டத்தில் மகளை சேர்த்து வைக்க மருமகன் வீட்டு முன்பு மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் கேசவராம் (28). மென்பொருள் பொறியாளரான இவருக்கும், சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த அமுதராணி மகள் சிவரஞ்சனி (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மனைவியை விழுப்புரத்தில் தனது வீட்டில் தங்கவைத்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது தாய் வீ…
-
- 0 replies
- 411 views
-
-
நன்னிங், பிப்.10- சீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்தில் பன்றிப் பண்ணை வைத்திருப்பவர் டாலு (வயது 40). அவரது பண்ணையில் வளர்ந்து வரும் இனக்கலப்பு செய்யப்பட்ட ஒரு பன்றி சில தினங்களுக்கு முன் ஒரே ஈற்றில் 19 குட்டிகளைப் போட்டது. அவற்றைப் பார்வையிட்ட டாலு, கடைசியாகப் பிறந்த குட்டி இதர குட்டிகளைவிட பெரிய அளவில் இருந்ததால் ஆச்சர்யத்தில் மூழ்கினார். அதை கையில் எடுத்துப் பார்த்தபோது அந்தக் குட்டிக்கு மனிதனின் முகமும், நெற்றிப்பகுதியில் ஆண்குறியும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த விஷயத்தை அவர் தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் உடனடியாக பண்ணைக்கு வந்து அந்த அதிசய பன்றிக்குட்டியைப் பார்வையிட்டு ஆச்சர்யமடைந்தனர். சில தினங்களுக்குள் இது தொடர்பான செய…
-
- 3 replies
- 1k views
-
-
தோனிக்கு நல்ல செய்தி ஜனவரி 31, 2015. புதுடில்லி: இந்திய கேப்டன் தோனி விரைவில் அப்பாவாக போகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி, டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் உலக கோப்பை தொடர் தோனிக்கு, மறக்க முடியாததாக அமையவுள்ளது. அதாவது, தொடர் நடக்கும் போது (பிப்., மாதம்), அப்பா ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான், வழக்கமாக தோனி எங்கு சென்றாலும் நிழலாக செல்லும் அவரது மனைவி சாக் ஷி, கடந்த 7 முதல் 8 மாதங்களாக வீட்டிலேயே உள்ளார். ஆஸ்திரேலியாவில் இடைவிடாது போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து தனது சாக் ஷியின் நலம் விசாரித்துக் கொண்டு தான் உள்ளார் தோனி. இவரது குழந்தை, உலக கோ…
-
- 5 replies
- 703 views
-
-
சுவிட்ஸர்லாந்தில் உள்ள உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சி (HSBC) வங்கி அதனது வாடிக்கையாளர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சியில் வேலைபார்த்த கணினி நிபுணர் ஒருவர் 2007-ல் கசியவிட்ட தரவுகளின் மூலம் இந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த வங்கியில் 2006-2007 காலகட்டத்தில், கணக்கு வைத்திருந்த மொத்தம் 203 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆறாயிரம் பேரின் கணக்கு விவரங்களை பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இந்த புலனாய்வு மூலம், தனிநபர் ரகசியக் கணக்குகளை வைத்துக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, அரசாங்க வரித்துறைக்கு தெரியாமல் பணத்தை கொண்டு வந்து சேர்க்கும் வழிகள் பற்றி அந்த வங்…
-
- 1 reply
- 334 views
-
-
வேலன்டைன்ஸ் டே’ தினத்தில் காதலர்களை கண்டால் கல்யாணம் செய்து வைப்போம் லக்னோ : ‘காதலர் தினத்தன்று பொது இடங்களில் காதலர்களை கண்டால், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம். மறுத்தால் பெற்றோருக்கு தெரியப்படுத்துவோம்‘ என இந்து அமைப்பு நூதன எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதியை ‘வேலன்டைன்ஸ் டே‘ ஆக உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த தினத்தில், காதலை சொல்வது, காதலிக்கு ரோஜா, பரிசுகளை கொடுத்து அசத்துவது போன்றவற்றில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். இது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்து மகாசபா அமைப்பின் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக், காதலர் தினம் கொண்டாடுவதை கண்டித்து காதலர்களுக்கு நூதன எச்சரிக்கை விடுத்துள்ளார்…
-
- 2 replies
- 367 views
-
-
சண்டிகர் வியாபாரி தாராளம்:மனைவிக்கு காதல் தின பரிசு; காரின் விலை 1. 5 கோடி நம்பரின் விலை 9 லட்சம்
-
- 0 replies
- 242 views
-
-
அமெரிக்காவின் பிரபல மாடலும், டீவி நடிகையுமான ஜென்னி மெக்கார்த்தி சமீபத்தில் நியூயார்க் சிட்டியில் உள்ள ஒரு ஸ்டுடியோவிற்கு தனது புதிய ஷோவை விளம்பரப்படுத்துவதற்காக வந்திருந்தார். அப்போது தனது 12 வயது மகன் ஈவன் பற்றிய சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார். ‘ஒருமுறை நான் அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கும் போது, கார் ஓட்டிக் கொண்டே போனில் மெசேஜ் செய்து கொண்டிருந்தேன். அதைப் பார்த்த எனது மகன், அவனது போனில் இருந்து போலீஸுக்கு ஃபோன் செய்து, ‘என் அம்மா கார் ஓட்டிக் கொண்டே ஃபோன் யூஸ் பண்றாங்க’ என்று கூறிவிட்டான். நான் உடனே அவன் ஃபோனை காரின் ஜன்னல் வழி வெளியே தூக்கி எறிந்து விட்டேன்.’ என்று கூறினார். இது போல் ஏற்கனவே, ஒரு முறை செய்துள்ளான் அவன் என்று கூறினார். மே…
-
- 5 replies
- 1.9k views
-
-
உ.பி. மாநிலத்தில், பக்கத்து வீட்டு வாலிபருடன் பழகிய தங்கையை கவுரவ கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்.பிரகாஷ் கூறியதாவது - கன்கர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 11ம் வகுப்பு மாணவியான தனது தங்கை பாரதியை கழுத்தறுத்து கொன்றதாக அமீத் என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். தனது தங்கை பக்கத்து வீட்டு வாலிபருடன் பழகியது பிடிக்காமல் இந்த கொலையை செய்துள்ளார். இதுதொடர்பாக, அவரது தந்தை புகார் கொடுத்ததைத் தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் குற்றவாளி கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை நள்ளிரவில் தனது குடும்பத்தினர் தூக்கத்தில் இருந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டு வாலிபர் ராகுலுடன், பாரதி வீட…
-
- 0 replies
- 444 views
-
-
வேலூர்: கஞ்சா போதையில், 'மட்டையானவர்' இறந்ததாக நினைத்து, அவரது உடலை, தகன மேடையில் வைத்து, மகன் கொள்ளி வைத்தார்; நெருப்பு சுட்டதும், போதை ஆசாமி, எழுந்து ஓட்டம் பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சுவாரஸ்ய தகவல்: வயிற்றுவலி: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறையைச் சேர்ந்தவர் விவசாயி செண்பகராயன், 50. இவர், வயிற்றுவலிக்காக, அதே பகுதியை சேர்ந்த நாட்டு வைத்தியர் மனோகரன், 55, என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம், இரவு 10:00 மணிக்கு, செண்பகராயனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக, மனோகரனிடம் லேகியம் வாங்கி சாப்பிட்ட பின், வீடு சென்று தூங்கினார். நேற்று காலை 7:00 மணிக்கு, செண்பகராயனை, மனைவி அஞ்சையம்மாள் எழுப்பினார். அவர் எழுந்த…
-
- 3 replies
- 583 views
-
-
உலக மக்களிடையே இயேசு கிறிஸ்துவின் கருத்துகளை போதனை செய்வது மட்டுமே எனக்கு தெரியும். இன்றுவரை கம்ப்யூட்டரில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று தெரியாது என்று வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் கூறினார். கலை, விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான ஊனமுற்ற குழந்தைகள் நேற்று வாடிகன் நகரில் 78 வயதான போப் பிரான்சிஸை சந்தித்து உரையாடினார்கள். அப்போது ஸ்பெயினை சேர்ந்த அலிசியா என்ற 16 வயது சிறுமி, கூகுள் இணையதளத்தில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா என்று போப் பிரான்சிஸிடம் கேள்வி கேட்டாள். நான் ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லட்டுமா? உலக மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பிரசாரம் செய்ய மட்டுமே தெரிய…
-
- 0 replies
- 469 views
-
-
யுஎஸ்.- பிறரெல்பொறொ, வேமொன்ட். சில நேரங்களில் தனது கோர்ட்டின் இரு பக்கங்களையும் ஊசி ஒன்றினால் சேர்த்து குத்திக்கொண்டும் நீண்ட காலமாக விறகிற்கு அலைந்து திரிபவராகவும் காணப்பட்ட ஒரு மனிதன் பங்குகள் சேமிப்பவராகவும் இருந்துள்ளார். இவரது இந்த செயல் திறன் தனது ஊரின் வாசிகசாலை மற்றும் வைத்தியசாலைக்கு 6-மில்லியன் டொலர்கள் நன்கொடையை உயிலில் எழுதி வைத்திருந்தது இவரது மரணத்திற்கு பின்னர் பகிரங்கமானது. ஒரு முன்னாள் எரிபொருள் நிலைய ஊழியரும் வாயிற்காவலருமான றோனால்ட் றீட் என்பவரால் இந்த முதலீடு செய்யப்பட்டிருந்தது. தனது 92-வயதில் இவர் மரணமடைந்த போது தெரியவந்துள்ளது. 4.8-மில்லியன் டொலர்கள் பிறரெல்பொறொ ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும், 1.2-மில்லியன் டொலர்கள் நகரின் வாசிகசாலைக்கும் என உயில்…
-
- 1 reply
- 517 views
-
-
ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கலக்கியுள்ளார். ஆணைப் பெண் கல்யாணம் செய்வது, பெண்ணை ஆண் கல்யாணம் செய்வது, பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் கல்யாணம் செய்வது எல்லாம் பழைய பேஷன். அதை முறியடித்து தன்னைத் தானே திருமணம் செய்து அசத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். தான் 40 வயதைத் தொடுவதற்குள் தனக்கேற்ற ஜோடியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனால், தன்னைத் தானே மணந்து கொள்வதாக இவர் ஏற்கனவே சவால் விட்டிருந்தார். அதன்படி இவரது 40வது பிறந்த நாள் வந்தபோது தன்னைத் தானே மணந்து கொண்டுள்ளார். Read more at: http://tamil.oneindia.com/news/international/houston-woman-marries-herself-elaborate-ceremony-220363.html
-
- 8 replies
- 866 views
-
-
நடையாக நடக்க வேண்டியிருக்கிறது என எப்போதாவது நொந்துகொள்ள நேர்ந்தால் அமெரிக்க தொழிலாளி ஜேம்ஸ் ராபர்ட்சனை நினைத்துக்கொள்ளுங்கள். தினமும் நடையாக நடக்க வேண்டும் என்றாலும் அவரை நினைத்துக்கொள்ளுங்கள், தானாக ஊக்கம் பிறக்கும். ஏனெனில் அவர் தினமும் 33 கிமீ நடந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக, தனது பணியிடத்திற்கு இப்படி 33 கி.மீ தொலைவு நடந்து வந்து கொண்டிருக்கும் இந்த கடமை வீரரின் மன உறுதியையும், ஈடுபாட்டையும் பார்த்து நெகிழ்ந்து போனவர்கள், இணையம் மூலம் கைகொடுத்து அவருக்கு கார் வாங்கி கொடுக்க நிதியை அள்ளிக்கொடுத்துள்ளனர். அவருக்கு கார் வாங்குவதற்காக 25,000 நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்தற்கு மாறாக ஒரே நாளில் ஒரு லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக அள்ளிக்கொடுத்த…
-
- 2 replies
- 619 views
-
-
தாய்வானில் செக்ஸ் தீம் பூங்கா ஒன்று விரைவில் திறக்கப்படவுள்ளது. பாரிய ஆணுறுப்பு தோற்றத்திலான சிற்பம் அங்கு நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திறந்த வெளி பூங்காவில் மனிதர்கள், விலங்குகளின் பாலியல் செயற்பாடுகளை சித்தரிக்கும் சிற்பங்களும் நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையான சுற்றுலா பயணிகளை இந்த பூங்கா ஈர்க்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர். தென் கொரியாவிலுள்ள இத்தகைய செக்ஸ் பூங்காவொன்றை அடிப்படையாகக் கொண்டு இப்பூங்கா நிர்மாணிக்கப்படுகிறது. புதிதாக திருமணமான ஜோடிகள் தமது திருமண புகைப்படங்களை பிடித்துக்கொள்வதற்காக அழகிய காட்சிகள் கொண்ட பகுதியொன்றும் இப்பூங்காவில் அமைக்கப்படவுள்ளது. உள்ளூர் சுற்றுலாத…
-
- 11 replies
- 1.6k views
-
-
சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏன் ? - ஒரு சவுக்குகடி ரிப்போர்ட் ! சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏன் ஏற்பட்டது என்பது பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது. சாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும், மதம் சார்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலும், இருவரும் ஒத்திசைந்த கருத்துடையவர்கள்..... பிறகு ஏன் மோதல் ? இதற்கு ஒரு சுவையான பின்னணி இருக்கிறது. 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு 195 சீட்டுகளை வெல்கிறது. ஆனால், வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள் கூட்டடணி, வெறும் 140 சீட்டுகள் மட்டுமே பெற்றது. ஆனால், ராஜீவ் ஏனோ, ஆட்சியில் அமருவதை தவிர்த்து எதிர்க்கட்சியாக அமர்ந்தார். இடது சாரிகள் மற்றும் பிஜேபியின் 52 எம்.பிக்களின் ஆதரவோடு, வ…
-
- 0 replies
- 611 views
-
-
கனடாவைச் சேர்ந்த யோயல் இபார்கன் என்பவர் ஏழு செக்கன்கள் தாமதமான காரணத்தில் 27 மில்லியன் கனேடிய டாலர்களை இழந்துள்ளார். கடந்த தை 23ம் திகதி இரவு கியூபெக்கில் உள்ள கடையொன்றில் 20.59 நிமிடத்திற்கு இரண்டு லாட்டரி சீட்டுக்களை வாங்கியுள்ளார். இவர் வாங்கிய சீட்டுக்களில் ஒன்று பரிசு பெறவில்லை இன்னொரு சீட்டுக்கு 27 மில்லியன் டாலர்கள் பரிசு விழுந்தது. ஆனால் இவருடைய விதி நேரத்துடன் விளையாடியது, காரணம் லாட்டரி விற்பனை முடிய வேண்டிய நேரம் இரவு 21.00 மணி இவருடைய பரிசு விழுந்த லொத்தரின் விற்பனை சேரம் 21.07 என்று பதிவாகியுள்ளது. லொத்தர் விற்பனை கணினி வழியாக தரவேற்றம் செய்யப்பட ஏற்பட்ட ஏழு செக்கன்கள் தாமதம் இந்த இழப்பிற்குக் காரணமாகிவிட்டது. கனடாவின் கியூபெக் மாநில நீதிமன்று பரிசுத் தொ…
-
- 7 replies
- 982 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயதான சிறுவனொருவன் மருத்துவமனையொன்றில் ஒரு மாதகாலம் மருத்துவரைப் போன்று நடித்துத் திரிந்துள்ளான். இச்சிறுவன் மருத்துவரைப் போன்று ஆடையணிந்துகொண்டு ஸ்டெதஸ்கோப் உடன் புளோரிடா மாநிலத்திலுள்ள இந்த மருத்துவமனையில் நடமாடித் திரிந்துள்ளான். டாக்டர் ராபின்சன் என தன்னை அவன் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தான். இவன் நோயாளிகள் எவரையும் பரிசோதிக்காத போதிலும் மருத்துவமனையில் டாக்டர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் இடங்களுக்கும் சென்று வந்தமை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஒரு மாதகாலத்தின் பின்னரே அச்சிறுவனின் நடிப்பு அம்பலமாகியது. http://seithy.com/breifNews.php?newsID=125882&category=Puthinam&language=tamil
-
- 2 replies
- 451 views
-
-
மதுரையில் நடிகை குஷ்பூவை பாரத மாதா தோற்றத்தில் சித்தரித்து பேனர் வைக்கப்பட்டதற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது குஷ்பூவுக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர் சும்மா இருந்தாலும், அவர் சேருகின்ற கட்சியினர் சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக உச்சத்துக்கு சென்ற நடிகையான குஷ்பூ, பிரபலமாக இருந்த அந்த காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னி என்பதை கடந்து, கடவுள் நிலைக்கு ரசிகர்கள் அவரை உயர்த்தி வைத்தனர். திருச்சியில் கோயில் கட்டி வழிபாடு நடத்தினார்கள். ஹோட்டல்களில் குஷ்பூ இட்லி விற்கப்பட்டது. அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. அதற்குப்பின் தங்கர்பச்சன் நடிகைகளை இழிவாக பேசிவிட்டார் என்று சொல்லி…
-
- 0 replies
- 716 views
-
-
முன்னைநாள் உலகவங்கியின் தலைவர் DSK (Dominique Strauss-Kahn) வினால் கொடுக்கப்பட்ட பணத்தில் அவரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட Nafissatou Diallo, ஒரு உணவக உரிமையாளராகியுள்ளார்?? DSK : Nafissatou Diallo ouvre son restaurant Alors que s’ouvre aujourd’hui le procès du Carlton, RTL nous donne des nouvelles de Nafissatou Diallo, celle qui avait amorcé la chute politique de DSK avec l’affaire du Sofitel. Selon la radio, elle va bien, et a même bien utilisé l’argent donné par l’ancien patron du FMI pour clore l’affaire. Par M6 Info | M6info – lun. 2 févr. 2015 Partager226 M6info/Getty - DSK : Nafissatou Diallo ouvre son restaurant …
-
- 1 reply
- 569 views
-
-
இணைய ஏல நிறுவனமான ஈ-பே, புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள சாஸ் இணையவாசிகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம் அந்த சாஸின் விலை 18000 டாலர் (11,10,959 ரூபாய்). 500 மில்லி லிட்டர் அளவுள்ள இந்த சாஸ் பாட்டிலை உலகின் மிகப்பெரிய துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் தயாரித்துள்ளது. இதை வாங்கும் அரிய வாய்ப்பு (?) ஆஸ்திரேலியர்களுக்கு கிடைத்துள்ளது. மொத்தம் இது போன்ற 200 சாஸ் பாட்டில்களை மட்டுமே தயாரித்துள்ளதாகவும் இந்த சாஸ் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் கிடைக்காது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இணையத்திலும் இந்த மாதம் 9 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். கடுகு, காய்ச்சி வடிகட்டிய வினிகர், வெங்காயம், பூண்டு, உப்பு மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து இந்த சாஸ் …
-
- 0 replies
- 318 views
-
-
கொசோவோ நாட்டில் ஜேர்மனின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லரை போலவே நபர் ஒருவர் வசிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியில் தனது சர்வாதிகார ஆதிக்கத்தை நிலைநாட்டி, உலகையே ஸ்தம்பிக்க வைத்த ஒரு மாபெறும் கொடூர தலைவர் ஹிட்லர். இவரை போலவே கொசோவோ நாட்டில் மிட்ரோவிகா(Mitrovica) நகரில் இமின் ட்ஜினொவ்சி(Emin Djinovci Age-49)என்ற நபர் வசித்து வருகிறார். அந்நாட்டு மக்கள் எல்லோரும் இவரை ‘கொசோவோ ஹிட்லர்’(Kosovo Hitler)என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இவர் தலை முடி, மீசை, நடை, உடை, பாவனை எல்லாமே ஹிட்லரைப் போலவே செய்துகொண்டு வலம் வருகிறார். கடந்த 1998ம் ஆண்டு ஜேர்மனியிலிருந்து கோசோவோவுக்கு சென்ற இவர், செர்பியாவுடன் நடந்த யுத்தத்தில் பங்கேற்றார். அப்போது போரினால் ஏற்பட்ட பலத…
-
- 2 replies
- 519 views
-
-
விமானம் கண்டுபிடித்தது யார் ? 1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில.இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல. 1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கற…
-
- 2 replies
- 531 views
-
-
யுஎஸ்- ரெக்சசில் ஜோன் மில்க்கோவிஷ் என்பவர் 1968-ல் தனது தோட்டத்தை மீளமைப்பு செய்ய ஆரம்பித்த போது தனது வீட்டை 50,000 பியர் குவளைகளை கொண்டு அமைத்தார். 10-வருடங்களிற்கு முன்னர் ஒரு இலாப நோக்கற்ற உள் ஊர் அமைப்பொன்று இதனை புனரமைத்தது. இந்த வீடு தற்சமயம் பொதுமக்களிற்காக திறந்து வைக்கப்பட்டு ஹியுஸ்ரனின் மிகவும் வழக்கத்திற்கு மாறான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக வந்துள்ளது. ஹியுஸ்ரனில் ஒரு சாதாரண வீதியில் அமைந்துள்ள இந்த வீடு ஒரு அசாதாரண வீடாக எழுந்து நிற்கின்றது. வீட்டின் சுவர்களிற்கு 18-மாதங்களிற்கும் மேலாக பியர் குவளைகளை வெட்டியதாக திரு.மில்க்கோவிஷ் தெரிவித்தார். தான் தன் மனைவி மேரி மற்றும் அவர்களது நண்பர்கள் குடித்த பியர் கான்களையே பாவித்ததாகவும் கூறினார். …
-
- 1 reply
- 401 views
-