செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
கார் வாங்க 6 லட்ச ரூபாயை சில்லறைகளாக கொடுத்து அதிர்ச்சியளித்த நபர் [ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 08:59.08 மு.ப GMT ] சீனாவில் நபர் ஒருவர் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்குவதற்காக, மொத்த பணத்தையும் முழுவதும் சில்லறைகளாக கொடுத்து வாங்கியுள்ளார். சீனாவில் ஹீபே பிராந்தியத்தில் உள்ள ஷீஜியாஜுவாங் பகுதியை சேர்ந்த வாங் ஜுபே (48) என்ற விவசாயி புது கார் வாங்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருக்கும் கார் ஷோரூமுக்கு சென்ற அவர், ரூ.6 லட்சம் மதிப்புள்ள புதிய மொடல் கார் ஒன்றை தெரிவு செய்துள்ளார். பின்னர் 4 மூட்டைகளில் எடுத்து வந்த காருக்கான பணத்தை அவர் கார் நிறுவன ஊழியர்களிடம் கொடுத்துள்ளார். மூட்டையை திறந்துபார்த்த அவர்கள் முழுவதும் சீனா…
-
- 2 replies
- 571 views
-
-
ஜனவரி 26 ஜனவரி 26 ஆம் திகதி ஆண்டின் 26 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாள்கள் உள்ளன. இன்றைய நாளில் இலங்கை மற்றும் உலக நாடுகளில் இடம்பெற்ற முக்கிய சில நிகழ்வுகள். 1340 - இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான். 1500 - விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர். 1531 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1565 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுத…
-
- 0 replies
- 614 views
-
-
அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் 29 வயதான கேத்தி பீட்ஸ். இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா பெண்களையும் போலவே தனக்கு பிறக்கப் போகும் குழந்தை எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மிதந்து வந்தார். ஆனால், பிரசவ தேதி நெருங்கும் போது பெரும் துயரம் அவரை ஆட்கொண்டது. காரணம் மற்ற பெண்களால், பிரசவம் முடிந்து தன் குழந்தையை பார்க்க முடியும், பார்வையற்ற தன்னால் தன் குழந்தையை எப்படிப் பார்க்க முடியும் என்று கேத்தி ஏங்கினார். இப்படி ஏங்கிய கேத்திக்கு சிறப்புக் கண்ணாடி மூலம் தன் குழந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக குழந்தையைப் …
-
- 0 replies
- 335 views
-
-
மோடி - ஒபாமா சந்திப்புக்கு "லைக்" போட்ட மார்க் டெல்லி: பேஸ்புக்கில் லைக் போடுவது என்பது நமக்கெல்லாம் அல்வா சாப்பிடுவது போல. ஆனால் அந்த பேஸ்புக்கை நிறுவிய மார்க் ஸுகர்பர்க் ஒரு புகைப்படத்துக்கு லைக் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி கட்டிப் பிடித்து வரவேற்கும் புகைப்படத்துக்குத்தான் லைக் கொடுத்துள்ளார் மார்க். மோடி - ஒபாமா சந்திப்புக்கு டெல்லி வந்த ஒபாமாவை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே சென்று கட்டிப் பிடித்து வரவேற்றார். இந்தப் புகைப்படம் உலக அளவில் தற்போது பிரபலமாகி விட்டது. கிட்டத்தட்ட வைரல் போல மாறியுள்ளது. உச்சமாக, பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் இந்தப் புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளார். மார்க்கே லைக் …
-
- 0 replies
- 292 views
-
-
விண்வெளியிலிருந்து திடீரென வந்த ரேடியோ சிக்னலால் மர்மம் நீடிக்கிறது, வேற்றுகிரகவாசிகள் அனுப்பியதா என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். விண்வெளியிலிருந்து பூமிக்கு அடிக்கடி ரேடியா சிக்னல்கள் வருவதுண்டு. ஆனால் சமீபத்தில் பெறப்பட்ட சிக்னல், முந்தைய ஒலி அலைகளை விட மில்லி நொடிக்கும் குறைவான நேரத்தில் பதிவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த கணநேரத்தில் வெளியான வெளிச்சமானது சூரியனின் மேல் பரப்பில் ஒருநாள் முழுவதும் வெளியாகும் வெளிச்சத்திற்கு சமமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஒலி அலை பூமிக்கு வரும்போது ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதாகவும், கடந்த 2007ஆம் ஆண்டு கிடைத்த ஒலி அலைகள் அதற்கு முந்திய வருடங்களில் கிடைத்த ஒலிகளை வ…
-
- 0 replies
- 2k views
-
-
அரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபன் தீபக் ஜங்ரா. மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் கையில் இருந்த ஸ்குருடிரைவர் தெரியாமல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரின் மீது பட்டது. இதனால், அவனுக்கு ஷாக் அடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அந்த கிராமத்திற்கே மின்சாரம் தடைபட்டு இருளானது. இந்த சம்பவத்தால் ஆச்சர்யமடைந்த ஜங்ரா இரண்டு வாரங்கள் கழித்து டிவிடி பிளேயரில் சிக்கிக்கொண்ட திரைப்பட சிடியை எடுப்பதற்காக திறந்த போது வெறும் கையால் அதன் ஒயர்களை தொட்டுள்ளான். ஏதும் ஆகாததால் திரும்பத்திரும்ப தொட்டுப்பார்த்த அவன் மின்…
-
- 0 replies
- 354 views
-
-
ஈராக்கில் கனேடியப் படையினரின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருப்பதாக கனேடியப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் Tom Lawson கூறினார். ஈராக்கில் உள்ள கனேடிய சிறப்புப் படையினர் குர்திஸ், மற்றும் ஈராக்கிய படைகளுடன் போர்க்களங்களுக்குச் செல்ல மாட்டார்களெனவும், வான் தாக்குதல்களுக்கு வழிகாட்டும் பணியைச் செய்ய மாட்டார்களெனவும் ஒக்ரோபர் மாதம் அவர் கூறினார். ஆனால், நொவம்பர் மாதத்தின் பின்னர் கனேடிய சிறப்புப் படையினர் 13 வான் தாக்குதல்களுக்கு வழிகாட்டும் பணியைப் புரிந்தார்களென கனேடிய சிறப்புப் படைகளின் தளபதி திங்கட்கிழமை கூறினார். அத்துடன், கனேடிய சிறப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய IS தீவிரவாதிகள் மீது அவர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்களெனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அறிக்க…
-
- 0 replies
- 224 views
-
-
கனடா- மகனை இழந்த துக்கத்தில் இருந்த தாயாருக்கு மீண்டும் ஒரு முறை இதயத்தை நொருக்கும் சம்பவம் வன்கூவர் விமான நிலையத்தில் ஏற்பட்டது. தனது மகனின் சாம்பலை ஒரு பட்டு கேரியருக்குள் வைத்திருந்ததை வெளியே எடுக்குமாறு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தமையே காரணமாகும். மார்நி முட்ச் என்ற இவர் தனது மகன் றெஹெட்டின் அஸ்தியை ஒரு பெரிய அடைத்த கருப்புள்ளி வண்டிற்குள் வைத்திருந்ததுள்ளார். தனக்கு ஆறுதல் தேவைப்படும் போது அணைத்துக்கொள்ள அவ்வாறு வைத்திருக்கின்றார். கடந்த நவம்பர் மாதம் இவரது 20-வயது மகன் றெஹெட் வன்கூவர் பொலிசாரால் சுடப்பட்டு இறந்துள்ளார். இவரது மரணவிசாரனை நடந்து வருகின்றது. முட்ச் வன்கூவர் விமான நிலைய பாதுகாப்பு பகுதிக்கூடாக அந்த கருப்புள்ளி வண்டை கொண்டு வ…
-
- 0 replies
- 270 views
-
-
இங்கிலாந்தில் ஒரு பெண் வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டியின் காது மடலில் இயேசுவின் உருவம் தெரிகிறது. இந்த நாயை தான் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் என்று அந்த பெண் உறுதியாக நம்புகிறார்.இங்கிலாந்து நாட்டில் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஸ்வான்சீ பகுதியை சேர்ந்தவர் ராச்செல் ஈவான்ஸ் (25). இவரது கணவர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் (28). ராச்செல் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்வான்சீ பகுதியில் மற்றொரு வீட்டுக்கு 24 வயதான தனது சகோதரி லேவிஸ் இவானுடன் குடியேறினார்.அப்போது தான் ஆசையாக வளர்த்து வரும் டெர்ரியர் ரக டேவ் என்ற செல்ல நாய் உட்பட 5 நாய்களையும் அழைத்து சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை டேவ் உட்பட 5 நாய்களையும் ராச்செல் குளிப்பாட்டி விதவிதமாக படமெடுத்தார். அப்போ…
-
- 4 replies
- 601 views
-
-
வளர்ந்து வரும் இணையதள தொழில் நுட்பம் ஆக்கம் மற்றும் அழிவு என்று இரண்டு திசைகளிலும் ஒரே வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. முன்பு ஹேக்கர்கள் எனும் ´இணையத்திருடர்கள்´ தீவிரவாதிகளை போல் கருதப்பட்ட காலம் போய், தற்போது ஹேக் செய்வது எப்படி? என்று யூ-டியூபில் தேடினால் நம்மை ஹேக்கராக மாற்ற 14,000 பயிற்சி வீடியோக்கள் தயாராக உள்ளன. வை-பை நெட்வொர்க்குகள் எவ்வளவு எளிதில் ஹேக் செய்யக்கூடியதாக இருக்கிறது என்பதை உணர்த்த சுயாதீன இணைய பாதுகாப்பு நிபுணர் மார்கஸ் டெம்ப்சியின் மேற்பார்வையில் லண்டனில் ஹேக்கிங் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பங்கேற்ற 7 வயது சிறுமி 10 நிமிடம் 54 நொடியில் ஒரு பொது வை-பை நெட்வொர்க்கையே ஹேக் செய்து காட்டினாள். சிறுமிக்கு பதிலாக இதையே ஒரு திரு…
-
- 3 replies
- 860 views
- 1 follower
-
-
கனடா- இந்த வார முற்பகுதியில் உலகில் மிக செலவை தாங்கிக்கொள்ள முடியாத நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டது வன்கூவர் நகரம். இந்நிலையில் அதிகமான மக்கள் தாங்கத்தகு விலைகளில் வீட்டு வசதிகளை நாடுவது ஆச்சரியப்பட வேண்டிய விடயமில்லை. சிலர் புறநகர்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயர வேறு சிலர் அறைகளை பகிர்ந்து கொள்பவர்களை தேடிச் செல்கின்றனர். வாடகை அதிகரிப்பால் சோர்வுற்ற 50-வயது பெண் இசபெல்லா மோரி என்பவர் பொறுப்புக்களை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். சிறிய வீடுகள் கட்டுவதில் நிபுணத்துவம் வாய்ந்த கட்டுநர் ஒருவரை கண்டுபிடித்தார். அவரின் உதவியுடன் 39,000-டொலர்களை செலவு செய்து 9-மாதங்களில் ஒரு 186 சதுர அடிகள் கொண்ட வீட்டின் பெருமைக்குரிய சொந்தக்காரரானார். பல செயல்பாட்டு இடைவெள…
-
- 0 replies
- 399 views
-
-
இணையத்தில் ஆபாச வீடியோக்களை தேடும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக இணைய ஜாம்பவான் கூகுல் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆபாச தேடல்களில் பட்டியலில் முதல் 10 நாடுகளுள் முஸ்லிம் நாடுகள் முதலிடங்களில் உள்ளதாகவும் கூகுல் குறிப்பிட்டுள்ளது. பன்றி, கழுதை, நாய், பூனை, மற்றும் பாம்பு போன்ற விலங்கினங்களின் ஆபாச வீடியோக்கள் அதிகமாக தேடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முஸ்லீம் நாடுகள் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இரண்;டாவது இடத்தில் எகிப்து உள்ளதுடன் ஈரான், மொரோகோ, சவூதி அரேபியா, துருக்கி என்பன முறையே நான்கு, ஐந்து, ஏழு மற்றும் 8ஆம் இடங்களில் உள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/138264#sthash.pyXS94W5.dpuf
-
- 9 replies
- 1.3k views
-
-
கனடா- முதலாவது திருமண அனுபவத்தின் பின்னர் இரண்டாவது தடவையாக தங்கள் சொந்த திருமணத்திற்கு 20-வருடங்களின் பின்னர் மணமேடைக்கு செல்கின்றனர் கனடிய சோடிகள். கடந்த வாரம் இதேபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் மினசோட்டா என்ற இடத்தில் நடந்ததது. சஸ்கற்சுவானை சேர்ந்த மிஸ்ரி மொனியோ மற்றும் ஸ்பென்சர் பெனிங்ரன் ஆகிய இருவரும் தங்கள் திருமணத்தை நிறைவேற்றும் திட்டத்தை மேற்கொள்கின்றனர். இருவரும் 5-ம் வகுப்பில் இருக்கும் போது ஆரம்பித்த தங்கள் காதல் சூட்சுமத்தை கூறுகின்றனர். நத்தார் தின கதவு அலங்கரிக்கும் போட்டியில் பங்கு பற்றிக் கொண்டிருக்கையில் ஸ்பென்சர் தன்னிடம் வந்து ‘நான் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க விரும்புகின்றேன். நான் உண்மையில் உன்னை விரும்புகின்றேன்.’ என மொனியோவிடம் கூறியுள்ளான…
-
- 3 replies
- 514 views
-
-
சாதனை களத்தில் அரங்கேறிய காதல் தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க போட்டியை பார்க்க தனது தோழியுடன் வந்த ரசிகர் திடீரென்று தனது தோழியை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டார். இந்த சம்பவத்தை ஓட்டங்கள் குறிக்கும் பலகையில் அப்படியே ஒளிபரப்பப்பட்ட அனைவரும் திகைத்து ஒருகணம் அதிசயித்து நிற்க அவரின் தோழி அந்த காதலை ஏற்றுக் கொண்டு அவரை கட்டிபிடித்துக் கொண்டார். தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க மறுபுறம் இந்த அழகான காதல் வ…
-
- 0 replies
- 477 views
-
-
புலிகளுக்கு 2005ல் நிதி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் யார்? - விசாரணைகள் ஆரம்பம் [ செவ்வாய்க்கிழமை, 20 சனவரி 2015, 08:00.28 AM GMT ] 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கி வடக்கு மாகாணத்தில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு வீதம் மிக குறைவாக காணப்பட்டது. அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு…
-
- 0 replies
- 317 views
-
-
லெபனான், இஸ்ரேலிய அழகுராணிகளிடையே செல்பீ புகைப்படத்தால் மோதல் 2015-01-20 11:48:05 பிரபஞ்ச அழகுராணி போட்டிகளில் பங்குபற்றும் லெபனான் மற்றும் இஸ்ரேலிய அழகு ராணிகளுக்கிடையில் புகைப்படமொன்று தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 63 ஆவது பிரபஞ்ச அழகு ராணி போட்டிகள் தற்போது அமெரிக்காவில் நடைபெறு கின்றன. 88 நாடுகளின் அழகுராணிகள் இப் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர். இவர்களில் லெபனான் சார்பாக பங்குபற்றும் சாலி கிறேய்க் மற்றும் இஸ்ரேல் சார்பாக பங்குபற்றும் டொரோன் மெட்டலோன் ஆகியோருக்கு இடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. செல்பீ புகைப்படமொன்றே இந்த மோதலுக்கு காரணம். லெபானான், இஸ்ரேல், ஜப்பான், ஸ்லோவேனியா நாடுகளின் …
-
- 6 replies
- 593 views
-
-
மைத்திரி அரசு பதவி ஏற்றதும்நாள் தோறும் புது புது சட்ட விடயங்களை அமுல் படுத்த பட்டு வருகிறது அதன் ஒரு அங்கமாக மகிந்த குடும்பம் மற்றும் பொன்சேகா உட்பட்ட பலருக்கு நெருக்கடியை தரும் வகையில் புதிய சட்டடத்தை கொண்டுவந்துள்ளது இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே அந்த சட்டமாகும் . இதன் பயனாக மகிந்த குடும்பத்தில் உள்ள அதிகமானவர்கள் அமெரிக்கா குடியுரிமை கொண்டவர்கள் .சரத் பொன்சேக அவ்விதம் இவ்விதம் பலர் உள்ளனர் அதனால் பிற நாட்டு குடியுரிமையை இரத்து செய்த பின்னரே அவர்கள் இலங்கையில் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது இதுவே பலருக்கு இப்போது நெஞ்சிடியாக மாறியுள்ளது . இரண்டு நாட்டு உளவுஅமைப்பு போடு கொடுத்த மகா திட்டமே இது என்பது தான்…
-
- 0 replies
- 412 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரி மாணவி ஒருவர் 8வது மாடியில் இருந்த ஜன்னலை திறந்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண் மீது விழுந்து மரணம் அடைந்தார். நடைபாதையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் உள்ள Philadelphia பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி Rebecca Kim. இவர் தனது நண்பர்களுடன் Rittenhouse Square என்ற இடத்தில் 8வது மாடியில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று ஜன்னலை திறந்துவிட்டு தனது மொபைல்போன் மூலம் கீழே உள்ள காட்சிகளை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பா…
-
- 0 replies
- 425 views
-
-
ரஷ்யாவில் பெட்டி ஒன்றில் கவனிப்பாரின்றி குளிரில் நடுங்கியபடி கிடந்த குழந்தை ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது ஒரு பூனை. ரஷ்யாவின் ஓப்னின்ஸ்க் நகரில் மாஷா என்ற பெயர் கொண்ட அந்த பெண் பூனை உள்ளூர் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அது மிக அமைதியானது. நட்புடன் பழக கூடியது. அங்கு குடியிருந்து வரும் ஐரீனா லேவ்ரோவா என்ற பெண்மணி இது குறித்து கூறுகையில், மாஷா கத்தினால் அதில் ஏதாவது விசயம் இருக்கும். அன்று அது கத்தியபோது, அதற்கு காயம் ஏற்பட்டதாகவே கருதினேன். வழக்கமாக என்னை பார்த்து ஹலோ சொல்லும். ஆனால் அன்றைய தினம் அது குழந்தை ஒன்றின் அருகில் பெட்டியில் படுத்து கிடந்தது. அதனை பார்த்து எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை நீங்களே கற்பனை ச…
-
- 1 reply
- 389 views
-
-
) சாமான்யர்களுக்கு ஆதரவாக இணையம் எத்தனையோ முறை ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறது. ஆதரவு தெரிவித்திருக்கிறது. நிதி திரட்டி தந்திருக்கிறது. நியாயம் பெற்றுத்தந்திருக்கிறது. இப்போது அமெரிக்காவில் பிட்சா நிறுவன ஊழியர் ஒருவருக்காக இது எல்லாவற்றையும் செய்திருக்கிறது. பணியின் போது டிப் மறுக்கப்பட்டு அவமதிப்பிற்கும் இலக்கான பிட்சா நிறுவன ஊழியருக்காக தான் இப்படி அறிமுகம் இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து 20 ஆயிரம் டாலருக்கு மேல் அள்ளி கொடுத்திருக்கின்றனர். இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் இந்த கதையில் நடந்தது இது தான். ஜாரிட் டான்சே அமெரிக்காவின் மாசாசூட்ஸில் உள்ள வெஸ்ட்போர்டில் இருக்கும் பேலஸ் பிட்சாவில் பணியாற்றுபவர். சமீபத்…
-
- 0 replies
- 368 views
-
-
மஹிந்தவுக்கு எதிராக கூட்டுச்சதி – நாடுகடந்த தமிழீழ அரசுடன் அமெரிக்க அர சின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் January 17, 2015 இந்திய அரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஏன் விலகிக்கொண்டது என்று பார்க்கின்றபொழுது, பல தரப்புக்களாலும் இந்தியா தமக்கு துரோகம் இழைத்துவிட்டது, இந்தியாவை நம்புவது மண்குதிரையில் ஏறுவதற்கு சமன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவற்றுக்கான காரணம் என்ன? இந்தியா இலங்கையின் அண்மைய நாடு மட்டுமன்றி பண்டமாற்று வியாபார காலம் தொடக்கம் நல்லதொரு நிலைப்பாட்டினை கொண்டிருந்த நாடா கும். அமெரிக்க அரசின் திட்டத்தின் படியே இறுதிக்கட்டத்தில் இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் இலங்கைக்கெதிராக வாக்களித்ததன் பின் புலமும், ஆதரவு த…
-
- 4 replies
- 534 views
-
-
புனே: புனே நகரிலுல்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரண்டிற்கு குளிர்பானம் வாங்க வந்த ஏழை சிறுவனை ஊழியர் வெளியே இழுத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. புனே ஜேஎம் ரோடு பகுதியிலுள்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரண்ட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு தோழிகளுடன் சாப்பிட சென்றுள்ளார் இளம் பெண் ஒருவர். அப்போது ரெஸ்டாரண்ட் வெளியே நின்றிருந்த நடைபாதை குடியிருப்பில் வசிக்கும் ஏழை சிறுவன், எனக்கும் ஏதாவது குளிர்பானம் வாங்கித்தாருங்கள் என்று கேட்டுள்ளான். எனவே சிறுவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற அந்த பெண், ஆர்டர் செய்வதற்காக கியூ வரிசையில் சிறுவனோடு காத்திருந்தார். இதைப் பார்த்த மெக் டொனால்டு ஊழியர் ஒருவர் ஓடிவந்து, அந்த சிறுவனை பிடித்து வெளியே இழுத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்ததும் …
-
- 2 replies
- 568 views
-
-
உலகெங்கும் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து தமது வெளிநாட்டுச் செலவாணியை நான்கு ரில்லியன்களாக உயர்த்திய சீனா தனது தேவையைப் பூர்த்தி செய்ய முக்கியமான ஒன்றை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. சீனாவில் ஏற்பட்டுள்ள பெண்களுக்கான தட்டுபாட்டைப் போக்க சீன இளைஞர்கள் தமக்கான மணமகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றர். ஒரு சீன இளைஞன் உள் நாட்டில் ஒரு மணமகளைத் திருமணம் செய்ய அறுபத்து நான்காயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தைச் செலவிட வேண்டி இருக்கின்றது. இதே வேளை வியட்நாமில் இருந்து ஒரு மணமகளை இறக்குமதி செய்வதற்கு திருமணத் தரகருக்கு இருபதினாயிரம் அமெரிக்க டொலர்களிலும் குறைவான பணத்தைச் கொடுத்தால் போதும். அத்துடன் மணமகள் தனக்…
-
- 0 replies
- 455 views
-
-
தனது கணவருக்கு பிறிதொரு பெண்ணுடன் காதல் தொடர்பு இருப்பதை அறிந்து சினமடைந்த மனைவியொருவர், கணவரது பிறப்புறுப்பை இரு தடவைகள் வெட்டி துண்டித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஷங்கியு நகரைச் சேர்ந்த வென் பெங் லங் (30 வயது) என்ற பெண்ணே தனது கணவரான பான் லங்கின் (32 வயது) பிறப்புறுப்பை இரண்டாவது தடவையாக வெட்டி துண்டித்துள்ளார். பான் லங் தனது மனைவியின் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்தி தனது காதலியான ஸாங் ஹங்கிற்கு (21 வயது) காதல் ரசம் ததும்பும் இலத்திரனியல் அஞ்சல்களை அனுப்பிவைத்துள்ளார். அவர் கையடக்கத்தொலைபேசியில் தனது மின்னஞ்சல் தொடர்பை துண்டிக்க மறந்ததால் அந்த காதல் ரசம் ததும்பும் செய்தி…
-
- 17 replies
- 2k views
-
-
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு பெண்ணுக்கு 6 வருடமாக ஒரு வாலிபர் 750 செல்போன் நம்பர்களை மாற்றி மாற்றி தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த தொல்லை தாங்க முடியாமல இறுதியில் அந்த பெண் போலீஸ் உதவியை நாடி உள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி பிரேமிலா கூறியதாவது.. பெண்ணிடம் தொடர்ந்து 6 வருடங்களாக செல்போனில் பேசி தன்னை காதலிக்குமாறு கூறி உள்ளார். ஓவ்வொரு முறையும் அவரது நம்பரை பார்த்து அந்த பெண் மொபைல் போனை எடுக்காமல் இருக்கவும் அவர் தொடர்ந்து 750 நம்பர்களை மாற்றி உள்ளார். ஈற்தியில் அவரை கண்டு பிடித்து நாங்கள் கைது செய்து உள்ளோம். அவர் அந்த பெண்ணுடன் படைத்தவர்தான். அவரதற்போது அந்த பெண்ணை தொல்லை கொடுக்கமாட்டேன் என எழுதி கொடுத்து உள்ளார். http://seithy.com/breifN…
-
- 0 replies
- 440 views
-