Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. போலியோ நோயில்லாத நாடாக இந்தியா சாதனை [Tuesday, 2014-02-11 04:42:30] தொடர்ந்து மூன்றாவது வருடமாக போலியோ நோயற்ற நாடு என இந்தியா சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக சுகாதார மையம் "போலியோ நோயற்ற நாடு" என்ற சான்றிதழை இந்தியாவுக்கு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சரகத்தை சேர்ந்த 40000 குழுக்கள், முடக்குவாதம் குறித்த 60000 நோயாளிகளின் மாதிரிகளை போலியோ சோதனைக்கு உட்படுத்தியது. உலக சுகாதார மையத்தை சேர்ந்த 8 ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்யப்பட்ட நோயாளிகளின் 120000 மாதிரிகளில் போலியோ தாக்கியதற்கான எந்த முகாந்திரமும் காணப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆய்வில் வெற்றி கண்டுள்ள இந்தியா போலியோ அற்ற நாடு என்று பெயர் பெற்ற…

  2. யாழ்ப்பாணத்தில் இருந்து... 610 கிலோ மீற்றர் தொலைவில், 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆந்திராவில் காக்கிநாடாவின் தென்கிழக்கில் 296 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை தமிழக…

  3. 'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!' என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஆயுதம் ஏந்தி, தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலி அல்ல. எழுத்துக்களால் ஏவுகணைகளை வடிக்கும் ஒரு பேனாப் போராளி. அதுவும், அறுபதுகளையும் தாண்டிய ஒரு பெண் படைப்பாளி. தமிழ்க் கவி என்ற பெயருடன் தமிழர்களுக்கெல்லாம் அறிமுகமான அவர் ஒன்றும் சிங்கள அடக்குமுறைக்கும், ஆயுதங்களுக்கும் பயந்து, அகதியாகத் தமிழகம் நோக்கிக் கடல் கடந்தவரல்ல. தமிழீழ விடுதலைப்…

  4. 99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி! கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் 99 வயது பாட்டி ஒருவர். அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் இசேபியா லியோனார் கார்டல் (99). படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்ட இவர், சிறுவயதில் குடும்பச் சூழல் காரணமாக பாதியிலேயே பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டார். தாயின் இறப்பு, திருமணம் என தொடர்ந்து ஏற்பட்ட தடைகளால் இசேபியாவின் பாடசாலைக் கனவு நிறைவேறாமல் போனது. ஆனாலும் தனது படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் தனது 98வது வயதில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இசேபியாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர், அடல்ட்ஸ் ஆப் லப்ரிடா பாடசாலை…

    • 1 reply
    • 463 views
  5. வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக திருமணம் கருதப்படுகின்றது. சிலர் தங்களது திருமண வைபவத்தை விசித்திரமான முறையில் நடத்துகின்றனர். அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஓர் ஜோடி தமது திருமண வைபவத்தை மயானமொன்றில் நடாத்தியுள்ளது. Diane Waller, Randy Kjarland ஆகியோரே இவ்வாறு கல்லறையில் தமது திருமண வைபவத்தை நடத்தியுள்ளனர். உயிரிழந்த தமது பெற்றோர் உறவினரை திருமண வைபவத்தில் கலந்து கொள்ளச் செய்யும் நோக்கில் இவ்வாறு மயானத்தில் திருமணத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த திருமண வைபவத்தில் உயிருடன் இருக்கும் 60 உறவின நண்பர்களும் கலந்து கொண்டனர். குறித்த இருவரும் 35 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் சந்தித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தாய், தந்தை, உறவினர்…

  6. சேடம் இழுத்த அமெரிக்கத் தீர்மானம்… தீர்மானத்திற்கு ஆதரவிற்கும் எதிர்ப்பிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒன்றுதான் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் புலம்புவதிலும் அர்த்தமில்லாமல் இல்லை. உலகவல்லரசான அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் எப்படியும் வெற்றி பெறும் என்ற நிலையிலும் அபரிமிதமான வெற்றிக்காக அமெரிக்கா பெரும் பிரயத்தனம் செய்து தோற்றுப் போயுள்ளது என்பதுதான் உண்மைநிலையாகும். ஏற்கனவே 22நாடுகள் ஆதரவாக ஒப்பமிட்டுக் கொடுத்த நிலையில் நூறிற்கு மேற்பட்ட அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிங்டனையும் முன்னால் அதிபர் ஒருவரையும் களத்தில் இறக்கி தனது வல்லமையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிலைநாட்டுவதற்கு எடுத்த முயற்சிக்கு பெரும் பயன் விளையவில்…

  7. ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு - குடல் வெடித்து உயிரிழந்த ஊழியர் Vhg மார்ச் 30, 2024 தென்னிலங்கை தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விளையாட்டு வினையானது கடந்த திங்கட்கிழமை (25-03-2024) பிற்பகல், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உயிரிழந்…

  8. யாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது! யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த “வெட்டுகுமார்” என்பவரை கைது செய்த பொலிஸார் தலைமறைவாகியுள்ள ஏனையோரை தேடி வருகின்றனர். கடந்த 2ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் நுழைந்த வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால், 6 குடும்பங்கள் வீடுகளில்…

  9. 56 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த இறந்த குழந்தை! 56 ஆண்டுகளாக வயது முதிர்ந்த பெண்ணொருவரின் உடலில் குழந்தையொன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 81 வயதான டேனிலா என்ற மூதாட்டியின் வயிற்றில் இருந்தே இவ்வாறு குழந்தையொன்றின் எலும்புக்கூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். குறித்த மூதாட்டிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளதாகவும், எனினும் அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மைக்காலமாக அவர் தீவிர வயிற்று வலியில் துடித்து வந்துள்ளார் எனவும், இதனையடுத்து அவர் வைத்தியர்களை நாடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வயிற்றை ஸ…

  10. Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 11:04 AM கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் ராகம பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன. குறித்த ஆறு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா உறுதிப்படுத்தியுள்ளளார். இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். வைத்தியசாலை மற்றும் பெற்றோருக்கு முக்கிய தருணமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி முதன்முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள் பிறந்தன. அதில் மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தமை குறிப்பிடத்தக்கது. …

  11. நிலாவில் காய்கறித் தோட்டம் அமைக்க சீனா திட்டம் Posted by: Mayura Akilan Published: Thursday, December 13, 2012, 11:33 [iST] விண்வெளியில் காய்கறித் தோட்டம் அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ளும் வீரர்கள் இனி உணவுக்காக திண்டாட தேவையிருக்காது என்று வெற்றிகரமான ஆய்வுக்கூட சோதனைக்கு பின்னர், ஒரு சீன உயர் அதிகாரி கூறியுள்ளார். சீனா விஞ்ஞானிகள் வருங்காலத்தில், நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்தில்லோ காய்கறித்தோட்டம் அமைக்க உள்ளனர். இதற்காக ஒரு மூடிய அமைப்பில் மக்கள் மற்றும் தாவரங்களுக்கு இடையேயான ஒரு டைனமிக் சமச்சீர் ஆக்சிஜன் நுட்பம், கார்பன் டை ஆக்சைடு, நீர் மீது கவனம் செலுத்தி நடந்து வருவதாக டெங் யிபிங் என்ற சீன விண்வெளி வீரர் ஆராய்ச்சி …

  12. தன் கணவர் ஷினோ மேத்யூ, மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவில் உள்ளதாகவும், கணவர் தன்னைப் பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் நெருக்கமாக இருக்க வலியுறுத்துவதாகவும் புகாரில் கூறியிருந்தார். கேரள மாநிலத்தில் மனைவியரை உறவுக்காக மாற்றிக்கொள்ளும் கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் செயல்பட்டுவருவதாக கடந்த ஓராண்டுக்கு முன் புகார் எழுந்தது. சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் `கப்பிள் மீட் ஆஃப் கேரளா’ என்ற வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் குழுக்களையும் காண்டுபிடித்தனர். அந்தக் குழுவில் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடையாத தம்பதியினர் முதல் திருமணம் ஆகி 20 ஆ…

  13. கோட்டயம் பிப்ரவரி 23,2013,01:12 IST தேங்காயை, குப்பையில் போட்டதற்காக, உருவான சண்டையில், மருமகளின் காதை கடித்துக் குதறினார் மாமியார். பதிலுக்கு மாமியாரின் கைகளை உடைத்ததோடு, உதட்டையும் கடித்து பழி தீர்த்தார் மருமகள். கேரளா, கோட்டயம், கொல்லாட்டை சேர்ந்தவர் லால்ஜி; இவரின் மனைவி ரஜினி. இவர்களுடன், லால்ஜியின் தாய், சாந்தம்மாவும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம், லால்ஜி வெளியே போயிருந்தபோது, முற்றத்தில் விழுந்த தேங்காயை எடுத்து பார்த்தார் ரஜினி. கெட்டுப் போன, தேங்காய் என்பதால், அதை குப்பையில் வீசினார்.இதை பார்த்து அங்கு வந்த மாமியார் சாந்தம்மா, "நல்ல தேங்காயை ஏன் குப்பையில் தூக்கி எறிந்தாய்' என, கேட்டு, மருமகளிடம் வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்…

  14. லைட் வால்பிரி மொழியை எப்படி பேசுவார்கள்? - ஆஸ்திரேலிய லஜாமனு என்ற நகரொன்றின் மொத்த சனத்தொகை 850 என்பதுடன் இதில் லைட் வால்பிரியைப் பேசுபவர்கள் அனைவரும் 35 வயதுக்குக் குறைந்த 350 மக்கள் பேர் என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா? இதைப்பற்றிய விரிவான செய்தி இங்கே அதற்கு முன்னர் இம்மொழியை எப்படி பேசுகின்றார்கள் என அறிவதற்கு http://www.4tamilmedia.com/lifestyle/listen-song/15693-listen-light-warlpiri

  15. சடலப் பரிசோதனைக்கு தாயின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் சுமந்து சென்ற மகன்!! ராஜஸ்தானில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை மகன் சடலப் பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் குன்வார் பாய். சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்த நிலையில் இருந்துள்ளார். இதை கண்ட அவருடைய மகன் அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்…

  16. நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனை, மரணம் கொடுக்கக்காத்திருக்கும் போதும் எங்கள் உணர்வுகளை சாகடித்துவிட்டு நடக்கமுடியாது. யாரெல்லாம் எமக்கு மரணம் கொடுத்தார்களோ அவர்களெல்லாம் புனிதர்களாகி வந்தார்கள், நாங்கள் சிந்திய இரத்தம் உறையும் முன்னர் தாய் மண்ணை முத்தமிடுவதாய் கூறிக்கொண்டு எங்கள் இரத்தத்தை சுவை பார்த்தவர்கள் மீட்பர்களாய் மாறி எம்மோடு நின்றபோதும் நிச்சயமாக எங்கள் உணர்வுகளை சாகடித்து விட்டு எம்மால் நடக்கமுடியாது. பூவோடு, காயும் துப்பாக்கிச் சன்னங்களால் கிழிக்கப்பட்டு வீசப்பட்டன, அந்தக் காமுகனின் தாய் வயதுப் பெண்ணும் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாளே. எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் இப்போதும் உயிரோடு இருக்கின்றது. நாம் பிரிந்து வாழ தமிழீழம் கேட்ட…

  17. கோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம்! – யாழில் சம்பவம் யாழில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான், வைரவர் போன்ற விக்கிரகங்களி…

  18. வெள்ளத்தில் இருந்து தன்னுயிர் காக்க சென்னை மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கோயில் பாம்பொன்று கோயிலின் வளாகத்தில் இருந்த பெருமாள் சாமி சிலையின் மேல் ஏறி தன்னுயிரை காத்துக்கொண்ட பட இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை, மகாபலிபுரம் பகுதியில் பெருமாள் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய பெருமாள் சாமி சிலையின் கழுத்தளவுக்கு நீர் நிறைந்துள்ளது. இதனால் அந்தக் கோயில் பாம்பு வெள்ளத்தில் இருந்து தன்னுயிரை காக்க சாமி சிலையின் தலைப்பகுதிக்கு ஏறி அமர்ந்திருப்பதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அப் பிரதேசத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரால் எடுக்க…

    • 1 reply
    • 461 views
  19. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாட்டு பக்தர்கள் வழிபட வருகிறார்கள். இவர்கள் தங்கள் நாட்டு ரூபாய் மற்றும் நாணயங்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகிறார்கள். இதனை அந்த நாட்டில் மாற்ற தேவஸ்தானம் பல கட்டங்களில் முயற்சி செய்தது ஆனால் ரூபாய் மதிப்பை விட அதனை மாற்றுவதற்கான நடவடிக்கைக்குரிய செலவு அதிகமாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனால் வெளிநாட்டு நாணயங்கள் கோவிலில் தேக்கமடைய தொடங்கியது. தற்போது கோவிலில் 40 டன் வெளிநாட்டு நாணயம் தேக்கமடைந்து உள்ளது. இதன் மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது. இதில் மலேசியா நாட்டு நாணயம் மட்டும் 4.7 டன் உள்ளது. அமெரிக்க டாலர் 300 கிலோ உள்ளது. இதனை இந்திய கரன்சிக்கு மாற்றுவது குறித்து ரிசர…

  20. ஆணாக பிறந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்: மருத்துவ துறையில் அதிசயம் [ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 06:57.11 மு.ப GMT ] பிரித்தானியாவில் பிறப்பால் ஆணாக பிறந்த பெண் ஒருவர், அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது மருத்துவ துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பெட்ஃபோர்ட்( Bedford) நகரில் வசித்து வரும் ஹைலி ஹயனாஸ் (Hayley Haynes - 28) என்பவர் பிறப்பால் மரபணு ரீதியாக ஆண் ஆவார். இவர் பிறக்கும்போதே, பெண்களுக்குரிய கர்பப்பை, இனப்பெறுக்க உறுப்பு இல்லாமல், ஆண்களுக்கு இருக்க கூடிய XY குரோமோசோம்களுடன் பிறந்துள்ளார். இவரது, 19 வயதில் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், இவரால் கர்ப்பம் தரிக்க முடியாது என தெரிவித்ததால், …

  21. லண்டன்: குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்களுக்கு மட்டுமல்ல புதிதாக அப்பாவான ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கும் புதிய சட்டம் இங்கிலாந்தில் நடைமுறை படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பிறந்த குழந்தைகளை வளர்ப்பதில் அப்பாக்களும் ஜாலியாக இறங்கலாம். பிரசவ வேதனையில், அயற்சியில் இருக்கும் மனைவிக்கு அன்பாய் அனுசரனையாய் உதவி செய்யலாம் ஒரு பெண் தாயாவதில் இருந்து குழந்தை பெற்று அதை வளர்த்து ஆளாக்குவது வரைக்கும் தந்தையும் உதவி செய்யவேண்டும். அப்பொழுதுதான் பெண்களுக்கு குழந்தைகளை பராமறிப்பதில் எளிதாக இருக்கும். பிரசவ காலம் வந்தாலே பெண்கள் தாய்வீட்டிற்குப் போய் மூன்று மாதகாலம் இருந்து விட்டு வருவதும் குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக வளர்க்கவேண்டும் என்பதனால்தான். குழந்தைகளை கூட இருந்தே பார்த்த…

  22. 19 SEP, 2023 | 09:15 AM நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகர் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் 16 வயதுடைய மகளான மீரா சர்ச் பார்க் பாடசாலையில் 12 ஆம் வகுப்பு கல்விகற்று வந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். அவர், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தையின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை வீட்டின் பணியாளர் அவதானித்து தெரியப்பட…

  23. வேலை வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சிய பிச்சைக்காரர் பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ழேவவiபொயஅ நகரில் ஊசயபை யுவமiளெழn (36) என்ற வீடு இல்லாத நபர் அங்குள்ளவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆனால், இந்த பகுதியில் பிச்சை எடுப்பது பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளதால், நகர நிர்வாகம் பிச்சை எடுப்பவர்களை கைது செய்து வந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடம் பிச்சை எடுத்த கிரெய்க்கை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். இந்த …

  24. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும், மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது. கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் உண்டு. இதுதான் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.