Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கன்னத்தில் அறைந்து எழுப்பும் அலாரம் கடிகாரம் காலையில் உறக்கத்திலிருந்து விழித்தெழுவதற்கு சோம்பல்படுபவர்களை கன்னத்தில் அறைந்து எழுப்புவதற்காக அலாரம் கடிகாரமொன்றை சுவீடன் யுவதியொருவர் வடிவமைத்துள்ளார். இந்த அலாரம் கடிகாரத் தொகுதியில் கைபோன்ற பொருளொன்று பொருத்தப்பட்டுள்ளது. அதை தலைக்கு அருகில் வைத்துக்கொண்டு உறங்கினால், உரிய நேரத்தில் அலாரம் அடிப்பதுடன், கை உருவமானது பாவனையாளரின் கன்னத்தில் அறைந்துகொண்டிருக்கும். இதனால், காதை மூடிக்கொண்டு உறங்க முற்படுபவர்கள் எழுந்தேயாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். 25 வயதான சிமோன் ஜியெ…

  2. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளதக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் தொடர்பாக 2014 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்டியலை ஐ.நா. வெளியிட்டது. ஜப்பானின் டோக்கியோ நகரம் முதலிடத்தில் உள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை அடிப்படையில் 23 மில்லியன் மக்கள் தொகையுடன் ஷாங்காய் 3 ஆவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி 4 ஆவது இடத்திலும், மும்பை 5 ஆவது இடத்திலும் உள்ளது. 1990 ஆம் ஆண்டில் இருந்து டெல்லியின் மக்கள் தொகை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. டோக்கியோவில் மக்கள் தொகை 38 மில்லியனாக இருக்கும் என்றும், இந்த மக்கள் தொகை குறைய வாய்…

  3. அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயதான சிறுவனொருவன் மருத்துவமனையொன்றில் ஒரு மாதகாலம் மருத்துவரைப் போன்று நடித்துத் திரிந்துள்ளான். இச்சிறுவன் மருத்துவரைப் போன்று ஆடையணிந்துகொண்டு ஸ்டெதஸ்கோப் உடன் புளோரிடா மாநிலத்திலுள்ள இந்த மருத்துவமனையில் நடமாடித் திரிந்துள்ளான். டாக்டர் ராபின்சன் என தன்னை அவன் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தான். இவன் நோயாளிகள் எவரையும் பரிசோதிக்காத போதிலும் மருத்துவமனையில் டாக்டர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் இடங்களுக்கும் சென்று வந்தமை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஒரு மாதகாலத்தின் பின்னரே அச்சிறுவனின் நடிப்பு அம்பலமாகியது. http://seithy.com/breifNews.php?newsID=125882&category=Puthinam&language=tamil

  4. ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு நகரில் பியர் மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தின் தட்டி தானாகத் திறந்து கொண்டதால் அவ்வாகனத்திலிருந்த பெருமளவிலான பியர் போத்தல்கள் தெருவில் விழுந்து உடைந்து நொருங்கி பியர் வெள்ளமாகப் பரவியது. இச்சம்பவம் வியாழக்கிழமை 05.03.2020 பகல் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் பெருந் தொகையான பியர் போத்தல்கள் உடைந்து தெருவில் பியர் ஓடியது. அப்பகுதியில் தொடர்ச்சியாக பியர் வாசம் வீசத் தொடங்கியதால் பியர் பிரியர்கள் ஸ்தலத்திற்கு ஓடி வந்து பியர் வெள்ளம் வீதியில் ஓடுவதை கவலையோடு அவதானித்துக் கொண்டு நின்றனர் http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_360.html

    • 0 replies
    • 458 views
  5. மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய்: இங்கிலாந்தில் சம்பவம் வீரகேசரி இணையம் 12/20/2010 2:06:47 PM தாய் ஒருவர் மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜெரோம் நெக்னே. அவரது மனைவி ஷாய்னா பரூச்சி (35) சோமாலியாவை சேர்ந்த இவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் 4 வயது மகளை திடீரென காணவில்லை. இதற்கிடையே அவரது வீட்டு சமையலறையில் இருந்து ரத்தத் தோய்ந்த மிக நீள மான கத்தியை அவரது ஏனைய குழந்தைகள் கண்டெடுத்தனர். இது குறித்து தாயார் பரூச்சியிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது 4 வயது மகளை கொலை செய்தது தெரியவந்தது. மே…

  6. பிரித்தானியாவில் விசா இல்லாதவர்களுக்கு வந்தது பொலிசாரின் கடும் சட்டம் பிரித்தானியாவில் உள்ள பேர்மிங்ஹாம் நகரில், யாராவது விசா இல்லாத நபர்களுக்கு வீடு கொடுத்தால் வீட்டின் உரிமையாளருக்கு 3,000 பவுன்சுகள் தண்டம் விதிக்கப்படும் என பொலிசார் அதிரடியாக கூறியுள்ளார்கள். லண்டனில் விசா இல்லாத பலர் புறநகர்ப் பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்று களவாக வேலைசெய்வது வழக்கம். லண்டன் நகரில் தான் பொலிசாரின் கெடுபிடிகள் அதிமாக உள்ளது. பிற இடங்களில் பொலிசாரின் கெடுபிடிகள் அதிகம் இல்லை. இதனால் தான் விசா காலாவதியானவர்கள். மற்றும் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் இவ்வாறு வேறு இடங்களில் சென்று களவாக வேலைசெய்து அங்கே தங்கி வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த பொலிசார் பெரும்…

  7. விசேட படப்பிடிப்பு நிகழ்வுடன் விவாகரத்தை கொண்டாடிய யுவதி 2016-06-16 12:21:58 திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தங்களின் போது மணமக்கள் விதவிதமாக படம் பிடித்துக் கொள்வது ஆச்சரியமல்ல. ஆனால், அவுஸ்திரே லியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது விவா கரத்தை யொட்டி விசேடமான படப்பிடிப்பு நிகழ்வொன்றை (போட்டோ ஷொட்) நடத்தியுள்ளார். 24 வயதான கெத்தரின் மேய்சன்பர்க் எனும் யுவதியே இந்த விநோத நிகழ்வை நடத்தியுள்ளார். தனது பதின்மர் பருவத்திலிருந்தே இவர் தனது காதலனுடன் இணைந்திருந்தார். சில வருடங்களுக்கு முன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அண்மையில் இவர்கள் விவாகரத்து செய்தனர். இதனை…

  8. 11 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதக்கப்பட்ட இரு நபர்கள் 30 வருடங்களின்பின் நிராபராதிகளாக காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்றுவிட்ட சகோதர்களான லியோன் பிரவுண் மறறும் ஹெனட்ரி மெக்கலம் எனும் இவ்விருவரும் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கி மிக நீண்டகாலமாக சிறையில் இருந்தவர்கள் ஆவர். 1983 ஆம் ஆண்டு இவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது லியோன் பிரவுண் 15 வயதானவராகவும மெக்கலம் 19 வயதானவராகவும் இருந்தனர். தற்போது இவ்விருவருக்கும் முறையே 46 மற்றும் 50 வயதாகிறது. தம்மீதான குற்றச்சாட்டை தொடர்ந்தும் இவர்கள் நிராகரித்து வந்தனர். இந்நிலையில் …

  9. மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவர் அடங்கலாக கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், 20 வயது இளம் பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாருக்கு உத்தரவிட்டார். முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டனர். 45 வயதுடைய சுதுமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த…

  10. இலங்கை அரசு தயாரித்து வெளியிட்ட நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை தமிழ் -சிங்கள நல்லுறவுக்கு முதலிடம் அளிக்கிறது. எனினும் இதற்கு முரணான நிகழ்ச்சி நிரலை அரசு தீவிரமாக நடைமுறைப் படுத்துகிறது. ஈழத் தமிழர்களுடைய தாய் மண் தொடர்ச்சியாக அபகரிக்கப் படுகிறது. தமிழர் மண்ணில் சிங்களக் குடியேற்றம் இராணுவ ஆதரவோடு நடத்தப்படுகிறது. இந்து மதக் கோவில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. சிங்களவர் ஒருவர் கூட வாழாத இடத்திலும் புத்த விகாரைகள் கட்டியெழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு வல்வெட்டித்துறைச் சந்தி விகாரை வடக்கு – கிழக்கை இராணுவ ஆட்சி மூலம் அடிமைப் படுத்தும் அரசின் அடிப்படை நோக்கம் பளிச்சென்று தெரிகிறது. இன விகிதாசரத்தை மாற்றி அமைக்கும் ஆயுதமாகச் சிங்களக் குடி…

  11. சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சைக்கு பலனின்று இறந்தவுடன் அந்த சிறுவனுக்கு அந்த மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் அனைவரும் சிறுவனது இறந்த உடலுக்கு முன் நின்று தலை வணங்கினர். குறித்த சிறுவன் இறப்பதற்கு முன் தனது உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தானமாக கொடுத்து அதன்மூலம் பல உயிர்கள் வாழ்வதற்கு காரணமாக இருந்தமையினாலேயே டாக்டர்கள் தலைவணங்கி மரியாதை செய்துள்ளனர். சீனாவில் உள்ள சென்லேன் என்ற பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் லியாங் யாவோயி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கடந்த ஜூன மாதம் 6ஆம் திகதி அனுமதிக்கப்பட்டான். அவனுடைய உடல் நிலையை ஆய்வு செய்த டாக்டர்கள், நோய் மிகவும் முற்றிவிட்டதாகவும்,…

  12. 20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES போதை மாத்திரைகளை விழுங்கியதாக இங்கிலாந்தின் எசெக்ஸ் நகர போலீசாரால் சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் ஒருவர் இருபது நாட்களாகியும் மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார். மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து இவர் தொடங்கிய போராட்…

  13. 2 மாதம் லீவில் செல்லும் ஃபேஸ்புக் அதிபர்! பொதுவாக அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தையை பராமரிப்பதற்காக சிறிது காலம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான பணியாளர்கள், "எங்களுக்கு கடமையே கண்" என சொல்லிட்டு, பணி உயர்விற்காக விடுப்பு எடுக்காமல் அலுவலகத்திலயே தீயா வேலை செய்வார்கள். இதே போன்ற நடைமுறை ஃபேஸ்புக் நிறுவனத்திலும் உண்டு. ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு குழந்தை பிறக்கும் போது அவர்கள் நான்கு மாதம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். பெரும்பாலும் இந்தச் சலுகையை யாரும் பயன்படுத்தாத நிலையில், முதல்முறையாக அந்தச் சலுகையை பயன்படுத்தி விடுப்பில் செல்ல…

  14. அமெரிக்காவின் நியூ யார்க்கை சேர்ந்த பெண் லியானா கிறிஸ்டியானா பேரியன்டாஸ். இவர் ஒரு திருமண பிரியர். அவர் கண்ணில்பட்டு மனதுக்கு பிடித்த ஆண்களை அதிரடி யாக திருமணம் செய்தார். அது போன்று 10 ஆண்களை ஊரறிய திருமணம் செய்து இருக்கிறார். அதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ஒருவரை கூட அவர் விவாகரத்து செய்ய வில்லை. இவர் தனது முதல் திருமணத்தை கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் அவருக்கு 2002-ம் ஆண்டு பிசியான ஆண்டாக அமைந்தது. காதலர் தினத்தன்று லாஸ்ஐலேண்டு பகுதியை சேர்ந்த நபரை முதலாவதாக திருமணம் செய்தார். அதன் பின்னர் 15 நாட்களுக்கு பிறகு ராக் ஐலேண்டு பகுதியை சேர்ந்த வரையும், அதையடுத்து 13 நாட்களுக்கு பின் 2 பேரையும் திருமணம் செய்தார். தொடர்ந்து இது போன்று 10 திருமணங்கள் செய்தார். அந்…

  15. மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் ஹெரோயினுடன் சிக்கிய பூனை கொழும்பு- மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் அட்டைகளை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பூனையின் ஊடாக ஹெரோயின் கடத்தல் இடம்பெறுவதாக சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (Memory card) ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிக்கும் பொருட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…

  16. ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதை ஜப்பானில், ரயில்களில் ஆமைகள் மோதப்படுவதை தடுப்பதற்காக ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெஸ்ட் ஜப்பான் ரயில்வே கம்பனி எனும் நிறுவனம், கோபே நகரிலுள்ள சுமா நீரியல் பூங்காவுடன் இணைந்த இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ரயில் பாதைகளை கடந்து செல்ல முற்படும் ஆமைகள் ரயில்களால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளன. அதையடுத்து ஆமைகளை பாதுகாப்பதற்காக அவற்றுக்கென தனியான சுரங்கப்பாதை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமா நீரியல் பூங்காவை பார்வையிடுவதற்கு வருடாந்தம் பல்லாயிர…

  17. பொண்ணு பொறந்தாச்சு! மைலா லாவ்ரி நான்கு மாதங்களே ஆன இந்தப் பெண் குழந்தைக்காக 206 ஆண்டுகள் இங்கிலாந்தில் ஒரு குடும்பம் காத்திருந்தது. ஐந்து தலைமுறைகளாகப் பெண் குழந்தையே பிறக்காத குடும்பம் அது! மார்க் லாவ்ரி, மைலாவின் தந்தை. ஹன்னா இவரின் இரண்டாவது மனைவி. முதல் மனைவியின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதலில் மார்க்கைத் திருமணம் செய்யும்போது இவருடைய குடும்ப வரலாறைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அடுத்தடுத்து ஆண் பிள்ளைகள் பிறக்கவும் அந்தப் பெண் அதை காரணமாகக் காட்டி விவாகரத்து வாங்கிச் சென்றுவிட்டாராம். மார்க் மனம் நொந்திருந்த நேரத்தில் அறிமுகமான ஹன்னாவிடம் தன் கவலைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். 'இருவரும் சேர்ந்து வாழ்வது என முடிவு செய்தபோதே என் குடும்பப் பின…

    • 1 reply
    • 457 views
  18. 25 வருடங்கள் தனித்திருந்து அற்புத படைப்பை உருவக்கிய மனிதர் Ca.Thamil Cathamil December 16, 2015 ஒருவர் 25 தனது வாழ்க்கையில் வருடங்களாக ஒரு குகையில் தனித்து இருந்து உள்ளார்.ஆனால் அவர் குகையின் உள்ளே செய்த விஷயங்கள் நம்மை பிரமிக்கவைக்கின்றன. ரா பவுட்டி என அழைக்கப்படும் அவர் நியூ மெக்சிகோவின் வடக்கில் உள்ள பாலைவனத்தில் உள்ள ஒரு குகையில் அவர் தனது நாயை மட்டும் துணையாக கொண்டு இருந்து உள்ளார்.ஆனால் குகையின் உள்ளே உலகம் போற்றும் சில அற்புத கலை நுணுக்கங்களை படைத்து உள்ளார். பவுட்டி ஒரு நாள் பல மணி நேரங்கள் செலவழித்து இந்த் கலை படிப்புகளை செய்து உள்ளார். செதுக்குவது மற்றும் வடிவமைத்தல் மூலம் மணல் கல் வளைவு மாதிரி அமைப்பு கலையை உருவாக்கி உள்ளார். https://www.youtube.co…

  19. வீட்டின் கூரையில் ஏறிய கார் அமெ­ரிக்­கா­வி­லுள்ள ஒரு தம்­ப­தி­யினர் தமது வீட்டின் கூரையில் காரொன்று நிற்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் அண்மையில் இடம்­பெற்­றது. தான் தொலைக்­காட்சி பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது கூரையில் சத்­த­மொன்று கேட்­ட­தா­கவும் வெளியே சென்று பார்த்­த­போது வீட்டின் கூரையில் காரொன்று இருப்­பதைக் கண்டு தான் வியப்­புற்­ற­தா­கவும் 83 வய­தான பெண்ணொருவர் தெரி­வித்­துள்ளார். மேற்­படி காரின் சாரதி சுக­வீ­ன­முற்­றதால் கட்­டுப்­பாட்டை இழந்­த­போது அக்கார், வீட்டின் கூரை மீது ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=13020#sthash.PpAGt59Z.dpuf

    • 1 reply
    • 457 views
  20. கொழும்பு, தும்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலக வாசலில் இன்று (22) காலை பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=11894

    • 0 replies
    • 456 views
  21. அடப்பாவத்தே! இதையா சாப்பிடுறோம்?

  22. இலங்கையின் ' பிளக் டீ' நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவுவதாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் மருத்துவத்துறையினர் கூறுகின்றனர். இதன் காரணத்தினால் இலங்கையின் தேயிலை சர்வதேச சந்தையில் கேள்வியை எழுப்பியுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பத்திரன இதனை தெரித்தார். அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதான ஏற்றுமதியான தேயிலை, இறப்பர் என்பவற்றை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றது.</p> அதேபோல் தேசிய விவசாயத்தை பலப்படுத்த இப்போதே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். தொழ்ற்சாலைகளை மீண்டும் இயக்க…

    • 4 replies
    • 456 views
  23. 18 NOV, 2023 | 12:40 PM யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்துள்ளார். இதன் போது அந்தக் குடும்பஸ்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட வேளை வேப்ப மரக் கிளை முறிந்துள்ள நிலையில் தூக்கில் அகப்பட்டுள்ளார். இந்நிலையில், குடும்பஸ்தர் அந்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். …

  24. வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சேத் ஷோஸ்டாக் விஞ்ஞானி கூறும் போது இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் என கூறி …

  25. சிகிச்சைக்கு வந்த நோயாளி அச்சுறுத்தி தன்னுடன் உறவில் ஈடுபட்டதாக மருத்துவர் தீபா தன்னிலை விளக்கம்! சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் தன்னை அச்சுறுத்தி பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவின் ரொறொன்ரோ மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் தீபா சுந்தரலிங்கம் என்பவர் தெரிவித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஜனவரி மாதம் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. தற்போது தன்மீதான குற்றச்சாட்டை தீபா மறுத்துள்ளார். அத்துடன் தன்னிலை விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். “சிகிச்சைக்காக வந்த ஒருவர் என்னை மிரட்டினார், ஆபாச செல்பிக்களை அனுப்பச்சொன்னார், குறுஞ்செய்திகளை மருத்துவக்கவுன்சிலுக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.