செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7107 topics in this forum
-
கடவுள் பற்றியும், பேய் போன்ற அமானுஷ்ய சக்திகள் பற்றியும் என் அபிப்பிராயங்களும், அவற்றையொட்டிய என் கருத்துகளும் மாறுபட்டவை. நவீன இயற்பியலையும், குவாண்டம் இயற்பியலையும் முழுமையாக ஏற்றுக் கொண்டவன் நான். அதனால் கடவுள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய என் கருத்துகளுக்கு அறிவியல் சார்ந்த ஒரு விளக்கத்தை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவன். இன்று எனக்குக் கிடைக்கும் ஒரு விளக்கம், நாளை வேறு ஒன்றாகத் தன்னைப் புதுப்பித்துத் திருத்திக் கொள்ளலாம். அறிவியலுக்கும், மத நம்பிக்கைகளுக்குமிடையில் நூலிழை வித்தியாசம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எத்தனை ஆயிரம் வருடங்களானாலும், தன்னைப் புதிப்பித்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகள் மாறாமல் இருக்க, அறிவியல் தன்னை அந்தந்தக் கணத்திலேயே புதுப்பித்துக் கொள்…
-
- 0 replies
- 705 views
-
-
தனது தந்தையின் பண அட்டையை திருடி 15 ஆயிரம் ரூபாவுக்கு தனது காதலிக்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்துள்ளான் 14 வயது யாழ்ப்பாணச் சிறுவன். யாழ் இணுவில் பகுதியைச் சோ்ந்த ஆசிரியா் ஒருவரின் மகனே இவ்வாறு காதலுக்காக அப்பாவின் காசைக் கொடுத்தவராவார். கடந்த வெள்ளிக்கிழமை குறித்த ஆசிரியா் தனியார் வகுப்பு ஒன்றில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த போது தனது கைத்தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்தபோது அதைப் பார்த்த ஆசிரியா் அதிர்ச்சியுற்றுள்ளார். அவா் கணக்கு வைத்திருந்த வங்கியில் இருந்து 15 ஆயிரம் ரூபா பெறப்பட்டுள்ளது என தகவல் வந்திருந்தது. உடனடியாக தனது போ்ஸ்சைப் பார்த்த போது அதற்குள் இருந்த பண அட்டை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார். தனது மனைவியைத் தொடா்பு கொண்டு கேட்ட…
-
- 6 replies
- 744 views
-
-
அமெரிக்காவில் உள்ள க்ரீன் பேங்க் கிராமத்தில் செல்போனின் சத்தத்தைவிட மாட்டின் சத்தம் தான் அதிகமாக கேட்கும். ஏனெனில் இங்குதான் உலகின் மிகவும் உணர்திறன் கொண்ட ரேடியோ தொலைநோக்கி உள்ளது. இந்த தொலைநோக்கி நட்சத்திரங்களின் பிறப்பு இறப்பையும், விண்வெளியில் இருக்கும் மெல்லிய ஒலியுடைய சிக்னல்களையும் படம்பிடிக்கும். இதனால் இங்கு எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் மற்றும் வைஃபை தடை செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாத இந்த க்ரீன் பேங்க் கிராமத்தில் வயதான நோயாளிகள் வந்து தஞ்சம் அடைகின்றனர், அதனால் இந்த இடம் மெக்காவை(mecca) போல திகழ்கிறது. க்ரீன் பேங்க் கிராமத்தில் உள்ள மக்கள் தொகை 143 ஆகும், இங்கு செல்போன் போன்றவவை தடை செய்யப்பட்டுள்ளதால் நிம்மதியாக இருக…
-
- 1 reply
- 541 views
-
-
'என்னை உணவாக்க முடியாது' 14 சிங்கம் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிர்பிழைத்த யானை குட்டி தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் உள்ள தென் லுவாங்கா தேசிய பூங்காவில் 14 சிங்கம் இணைந்து நடத்திய தாக்குதலில் சிறிய யானைக் குட்டி உயிர்பிழைத்தது தொடர்பான வீடியோ சுற்றுலா சென்றவர்களால் எடுக்கப்பட்டுள்ளது. சஃபாரி சென்றவர்கள் எடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. லுவாங்கா ஆற்றின் படுகையில், சிங்கங்களின் தாக்குதலில் இருந்து உயிர்பிழைக்க யானை குட்டி நடத்திய போராட்டம் அதில் பதிவாகியுள்ளது. சிறிய யானை குட்டியின் செயல்பாடும் முயற்சி செய்தால் எதனையும் செய்ய முடியும் என்று உணர்த்தும் அளவுக்கு இருந்தது. பசியோடு இருக்கும் சிங்கங்கள் யானை குட்டியின் மீது பாய்கிறது. யானை குட்ட…
-
- 12 replies
- 987 views
-
-
சில நிமிடங்களுக்கு முன் எனது கடைககு நேர் எதிரேயுள்ள பாண்கடைக்குள் ஒரு யீப் ஒன்று புகுந்துவிட்டது... ஓட்டிவந்தவர் வயசானவர் என்ன நடந்தது என தெரியவில்லை என்கிறார்.. இன்ற திங்கட்கிழமை அந்தப்பாண்கடை பூட்டு என்பதாலும் வீதியைத்தாண்டி நடைபாதையைக்கடந்து வீதியோரத்தில் சில மீற்றர்களை கடந்து சென்ற போதும் எவருக்கும் உயிராபத்து நேராதது அதிசயம் தான்...
-
- 23 replies
- 2.2k views
-
-
அமெரிக்க ராணுவ வீரரின் ஆவி சிறுவன் உடலில்! அதிசய தகவல் Ca.Thamil Cathamil November 14, 2014 Canada அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர் லூயிஸ். இவர் 1983–ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் இறந்து போனார். அவருடன் 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள். இப்போது அவருடைய ஆவி விர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவன் உடலில் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண்ட்ரு ராணுவ வீரர் லூயிசின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக கூறுகிறான். லூயிசுடன் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் படத்தை அவனிடம் காட்டினால் சரியாக அவர்களின் பெயர்களையும் கூறுகிறான். இவனை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். - See more at: http://www.canadamirror.com/canada/34010.html#sth…
-
- 0 replies
- 598 views
-
-
உலகின் உயர்ந்த மனிதரும், குட்டை மனிதரும் லண்டனில் சந்தித்துக் கொண்டனர் உலகின் மிக உயர்ந்த மனிதரும், மிகக் குட்டையான மனிதரும் முதற்தடவையாக சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு லண்டனில் இடம்பெற்றுள்ளது. உலக கின்னஸ் சாதனை தினத்தை முன்னிட்டு லண்டனில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக உலகின் மிக உயர்ந்த மனிதரும், மிகக் குட்டையான மனிதரும் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளனர். இதற்கிடையிலேயே இருவரும் சந்தித்துள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய சந்திரா பஹாடுர் டாங்கி (Chandra Bahadur Dangi) உலகிலேயே மிகவும் குட்டையான நபராக கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளார். இவரது உயரம் 54.6 சென்றி மீற்றராகும். இவரது எடை 15 கிலோ கிரா…
-
- 4 replies
- 777 views
-
-
குழந்தை இறக்கும் தருவாயில் அதற்கு தாலாட்டு பாடிய தந்தையின் காட்சிகளடங்கிய வீடியோவொன்று இணையத்தளங்களில் வெளியாகி பலரை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ் பிக்கோ. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி ஆஷ்லிக்கு கடந்த 8ஆம் திகதி குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின்போது ஆஷ்லி மரணம் அடைந்தார். தாயின் வயிற்றில் 24 வாரங்களே இருந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தது. ஆனால் குழந்தை கடந்த 11ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடியபோது கிறிஸ் அதன் அருகில்…
-
- 2 replies
- 5.1k views
-
-
லண்டன்: டிவி ரியாலிட்டி நடிகையான ஏமி சைல்ட்ஸ் எபோலா என்பது உயிர்கொல்லி வைரஸ் என்பது தெரியாமல் அது இசைக்குழு என்று நினைத்து பேசியது பலரையும் வியக்க வைத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டிவி ரியாலிட்டி நடிகை ஏமி சைல்ட்ஸ்(24). அவர் லண்டனில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் ஏமியிடம் மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் பலியாக காரணமான எபோலா உயிர்கொல்லி வைரஸ் பரவுவதை தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோமா என்று கேட்டார். ஏமிக்கு எபோலா என்றால் என்னவென்று தெரியாமல் விழித்தார். பின்னர் என்ன என்று கேட்டார். அதற்கு கேள்வி கேட்டவரோ எபோலா பெரிய விஷயமாகப் போகிறது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஏமியிட…
-
- 5 replies
- 827 views
-
-
99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இருதய வடிவான அலங்கார தோற்றத்தை உருவாக்கி அதன் நடுவில் நின்றவாறு தனது காதலியிடம் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்ஸொயு மாகாணத்தை சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத கணினி பொறியியலாளரான காதலர் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட தீர்மானித்தார். இதன் பிரகாரம் அவர் 53000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தைச் செலவிட்டு 99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்து தனது திருமண விருப்பத்தை காதலியிடம் வெளியிட்டார். இன்ப அதிர்ச்சிக்குள்ளான காதலி அவரது விருப்பத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். http://www.virakesari.lk/articles/2014/…
-
- 1 reply
- 546 views
-
-
டெல்லி: மாதவிடாய் சுழற்சி நின்று போன வயது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தாலும், அது பலாத்காரமாக கருதப்படமாட்டாது என்று டெல்லி ஹைகோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்துறை வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மஞ்னுகா-திலா என்ற பகுதியில் வசித்த 65 வயது பெண்மணி அந்த வீட்டில் வேலை பார்த்த, அச்சேலால் என்ற நபரால் 2010ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையின்போது பெண் பிறப்புறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. எனவே கொலை மற்றும் பலாத்காரம் ஆகிய இரு பிரிவுகளிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சேலாலை கைது செய்தனர். இந்த வழக்கில் அச்சேலாலுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு விசாரணை நடந்…
-
- 21 replies
- 2k views
-
-
பொலிவூட் நட்சத்திரங்களின் கிரிக்கெட் போட்டி பொலிவூட் கலைஞர்கள் பங்குபற்றும் பொக்ஸ் கிரிக்கெட் லீக் (பி.சி.எல்) சுற்றுப்போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. மும்பை வோரியர்ஸ், ரௌடி பெங்களூர், புனே அன்மோல், அஹமதாபாத் எக்ஸ்பிரஸ், கொல்கட்டா பாபு, ஜெய்பூர் ராஜ், சண்டிகார் கிளப்ஸ், டெல்ஹி ட்ரகன்ஸ் ஆகிய 8 அணிகள் இப்போட்டிகளில் மோதவுள்ளன. சுமார் 150 கலைஞர்கள் இவ்வணிகளில் இடம்பெறுகின்றனர். ஒவ்வொரு அணியிலும் ஆண்களும் பெண்களும் இடம்பெறுகின்றனர். ரௌடி பெங்களூர் அணியைச் சேர்ந்த நடிகைகள் சாரா கான், ராக்கி சாவந்த், நடிகர் அஜாஸ் கான் அணி உரிமையாளர் மயான்க் சிங் ஆகியோர் கடந்த திங்கன்று மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். - See more at: http://www.metronews.l…
-
- 0 replies
- 625 views
-
-
ஆங்கிலம் பேசவில்லை என்பதற்காக ஆசிரியரொருவர் மாணவனொருவனை அடித்துகொன்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின், தெலுங்கனா மாநிலம் திருமலைகரி கிராமத்தில் வசித்து வந்த, இராமவத் சந்து என்று கிராமவாசிகளால் அறியப்பட்ட 6 வயது சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சிறுவன், தனியார் பாடசாலையில் கல்விகற்று வந்துள்ளான். இந்நிலையில் ஒருநாள் பாடசாலைக்கு நேரம் கடந்து சென்றுள்ளான். இதனால் கோபமடைந்த ஆசிரியை, கைகளால் மாணவனை தாறுமாறாக அறைந்துள்ளார். இது தவிர மாணவனது தாய் மொழியான தெலுங்கு மொழியை பாடசாலையில் பேசியதற்காக, ஆங்கிலம் பேசத்தெரியாதா என்று கேட்டு சிறுவனது தலையை சுவரிலும் முட்டியுள்ளார். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அத…
-
- 3 replies
- 595 views
-
-
சீன அதிபர் ஒபாமாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்... சீன அதிபரின் மனைவிக்கு சால்வை அணிவித்த புடின்! பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஆசியா பசிபிக் கூட்டம் ஒன்றின்போது, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன், சீன அதிபர் ஸீ ஜின்பிங் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ஸீயின் மனைவி பெங் லியூயானுக்கு, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் சால்வை அணிவித்தது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. ஏன் ஸீ மனைவிக்கு புடின் சால்வை அணிவித்தார் என்று கிசுகிசுக்களும் கிளம்பி விட்டன. புடினுக்கு ரஷ்யாவில் பெண்களிடையே மவுசு அதிகம். அதேபோல சீன இளம் பெண்கள் மத்தியிலும் கூட அவர் ஹீரோவாக திகழ்கிறார். சமீபத்தில்தான் தனது மனைவியை விவாகரத்து செய்தார் புடின். இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவருடன் அவருக்…
-
- 1 reply
- 767 views
-
-
சி.எஸ்.கே ரசிகர்களே... சீக்கிரம் நீங்கள் சித்தப்பா ஆகப்போறீங்க...! ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி விரைவில் தந்தையாக போகிறாராம். இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான கேப்டனாக தொடர்பவர் எம்.எஸ்.டோணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இவரே கேப்டன். சென்னை அணியின் தொடர்ச்சியான வெற்றிகளால் புழகாங்கிதம் அடைந்துள்ள, தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இவரை 'எங்க தல' என்று செல்லமாக அழைக்கிறார்கள். சி.எஸ்.கே ரசிகர்களே... சீக்கிரம் நீங்கள் சித்தப்பா ஆகப்போறீங்க...! 'சென்னை சூப்பர் கிங்சுக்கு பெரிய விசில் அடிங்க...', 'எங்க தல டோணிக்கு பெரிய விசில் அடிங்க..' போன்ற சிஎஸ்கேவின் உற்சாக பாடல்கள் வெகு பிரபலம். டோணிக்கும் சாக்ஷிக்கும் நடுவே 20…
-
- 0 replies
- 2.4k views
-
-
நபர் ஒருவர் ஐபோன் ஒன்றை வாங்கி விட்டு கதறி அழுத சம்பவம் ஒன்று சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வியட்நாம் நாட்டை சேர்ந்த பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6 ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் காட்சிறைக்கு சென்றுள்ளார். அங்கு ஐபோன் 6 ஒன்றி விலை 950 டொலர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து ஐபோன்6 ஒன்றினை வாங்கினார். ஆனால் அவருடைய ஐபோனுக்கு மேலதிக உத்தரவாக கட்டணத்தை சேர்த்து 1500 டொலர்கள் என அவருக்கு பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கவனிக்காமல் தன்னுடைய டெபிட் கார்டை கொடுத்து பணத்தை கட்டிவிட்டார். பின்னர் தொகையை பார்…
-
- 2 replies
- 1.4k views
-
-
மயிர் கூச்செறியும் நிகழ்வு
-
- 0 replies
- 623 views
-
-
‘பிக் ஆப்பிள்’ என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அந்த நகரில் வசிக்கும் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் ஆளுக்கொரு கதையைக் கூறுவார்கள். இதில் கூடுதலாக ஒரு தகவல். மிகச்சுத்தமான நகரம் என்று கருதப்படும் அமெரிக்க நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் எலிகள் உலாவுகின்றன. அதாவது, 8 பேருக்கு தலா 2 என்ற கணக்கில் எலிகள் இருப்பதாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஜோனாதன் அயூர்பாக் என்ற ஆராய்ச்சி மாணவர் பருவ இதழ் ஒன்றில் எழுதியுள்ள புள்ளி விவர கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120335&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 433 views
-
-
மனைவிகளை மாற்றி உல்லாசம் : கடைசியில் முதலுக்கே மோசம்! மனைவிகளை மாற்றி உறவு (wife-swapping) வைத்துக் கொண்டதால் இரு குடும்பங்களின் வாழ்க்கை எப்படி சிக்கலில் சின்னாபின்னமானது என்பதற்கு பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் நல்ல உதாரணம். பெங்களூரின் வசதியான ஒரு பகுதியை சேரந்தவர் அபிஷேக், இவரது மனைவி மானஷி. அபிஷேக் கான்ட்ராக்டராகவும், மானஷி ஆசிரியையாகவும் வேலை பார்த்தனர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள போன இவர்களுக்கு பழக்கமானவர்கள் கணேஷ் அவரது மனைவி கவிதா. கணேஷ் தொழிலதிபராகும். கவிதா வீட்டில் இருந்தார். இரு தம்பதிகளுக்கிடையேயான பழக்கம் நாளடைவில் மிக நெருங்கிய பழக்கமாக மாறியது. கணேஷ் அடிக்கடி தொழில்நிமித்தமாக வெளியூர் செல்வார் என்பதால், அந்த நேரத்தில், ஷாப்பிங் செ…
-
- 3 replies
- 13.8k views
-
-
எகிப்தில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க பேரூந்து சாரதிகளிற்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எகிப்தில் அரசாங்க வைத்தியசாலைகளில் பரிசோதனைக்காக பேருந்து சாரதிகளை தமது சிறுநீரினை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பேரூந்து சாரதிகள் அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு வழங்கினர். ஆனால் ஒருவர் மட்டும் தான் போதை பழக்கத்தை மறைக்க தனது மனைவியின் சிறுநீரை மாற்றி கொடுத்து விட்டார். இவரது கெட்ட நேரமோ அல்லது துரதிர்ஷ்டமோ தெரியவில்லை. அந்த பேருந்து சாரதியின் மனைவி 2 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். எனவே, அந்த சிறுநீர் பரிசோதனையில் பேரூந்து சாரதி கர்ப்பம் என தெரிய வந்தது. அதன்படி, பேரூந்து சாரதி கர்ப்பமாக இருப்பதாக அறிக்கையிலும் குறிப்பிடப்பட்…
-
- 2 replies
- 557 views
-
-
கிளாடியா ஒஹோவா பெலிக்ஸ் இந்த பெயரை கேட்டாலே சிலருக்கு நடுக்கமும் சிலருக்கு கிளுகிளுப்பும் ஏற்படும். போதை பொருள் கடத்தலில் புகழ் பெற்ற மெக்சிகோ நாட்டில் உள்ள போதை கும்பல்களில் ஒன்றின் தலைவி தான் பெலிக்ஸ். கவர்ச்சிகரமான தோற்றம், ஆடம்பர வாழ்க்கை ,எப்போதும் இயந்திர துப்பாக்கி பாதுகாப்புடன் வலம் வரும் அழகு பதுமை. உலகின் மிகவும் இரக்கமற்ற கும்பல்களில் ஒன்றின் தலைவியான இவர் சமூக இணையதளத்தில் உள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தனது 2 மகன்கள் மட்டும் மகள் படத்தையும் வெளியிட்டு உள்ளார். டுவிட்டர், பேஸ் புக், இண்ஸ்டாகிராம் உளபட அனைத்து சமூக வலைதளங்களிம் உள்ள இவருக்கு என ஒரு லடசத்துக்கும் மேற்பட்ட பாவர்கள் உள்ளனர். கவர்ச்சி இருந்தாலும் தேனீ போன்று கொட்டும் தன்மைய…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஸ்பெயின்: பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளம்பெண் மரணம் ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு மேம்பாலம் ஒன்றில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த சுற்றுலா பெண் பயணி கீழே தவறி விழிந்து மரணம் அடைந்தார். இன்றைக்கு செல்ஃபி மோகம் அதிகரித்து வருகிறது. டேக் செல்ஃபி புள்ள என்று விஜய் பாடுவது பிரபலமானது கூட அதனால்தான். செல்ஃபியினால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. ஸ்பெயினின் குடால்க்வீர் நதிக்கரைப் பகுதியில் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ட்ரியானா மேம்பாலம் அமைந்துள்ளது. ஸ்பெயின்: பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளம்பெண் மரணம் அங்கு திங்கள்கிழமை சுற்றுலாவுக்கு சென்ற மருத்துவ மாணவி சில்வியா ராச்சேல் (23) மேம்பாலத்திலிருந்து தொங்கியபடி தனது செல்ஃபோனில் செல்ஃப…
-
- 2 replies
- 683 views
-
-
மனிதனின் குடலுக்குள் உயிருடன் குடித்தனம் நடத்திய மீன். அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! பிரேசிலியா: பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். உயிரோடு வெளியேற்றப்பட்ட மீன். அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து ந…
-
- 0 replies
- 1.3k views
-
-
14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய நபரை அச்சிறுமியின் தந்தை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்த பின்னர் சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் இந்தியா, டில்லியில் இடம்பெற்றுள்ளது. 45 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வல்லுறவுக்குள்ளான சிறுமியின் தந்தை, தனது ஆத்திரத்தை மேற்படி நபரிடம் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவரை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுமியின் தந்தையின் வீட்டுக்கு விருந்துண்பதற்காக சென்றார். அவருக்கு சுவையான உணவும் பரிமாறப்பட்டது. அதன்பின் திடீரென அந்நபரை கதிரையோடு சேர்த்து கட்டிய சிறுமியின் தந்தை சித்திரவதை செய்து கொ…
-
- 13 replies
- 1.3k views
-
-
இங்கிலாந்தில் லண்டனை சேர்ந்த ஒரு வைத்திய நிறுவனம் சமீபத்தில் ஆபாச படங்கள் அதிகம் பார்க்கும் நூறு ஆண்களிடம் நடத்திய ஆய்வில் அதிகளவில் ஆபாச படங்கள் பார்க்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆபாச படங்கள் பார்க்கும்போ தெல்லாம் ஆண்களின் மூளையில் உள்ள நரம்புகள் மிகவும் பரபரப் பாவதாகவும், இது பாலுறவில் ஈடுபடுவதை விட அதிக உணர்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்துவதால் நாளடைவில் அவர்களுடைய ஆண்மைத்தன்மையே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித் துள்ளனர். எனவே ஒருவருக்கு பாலியல் உணர்வு ஏற்படும்போது அவர்கள் உடனடியாக ஒரு பெண் துணையை தேடி பாலியல் உறவு வைத்து உணர்வை தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவ…
-
- 14 replies
- 6.1k views
-