செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7155 topics in this forum
-
பாலங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா தீவுகள் விற்பனை, நகரங்கள் மற்றும் கிராமங்கள் விற்பனை செய்வதைக் கூட அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரு நாட்டின் பாலங்கள் விற்பனை செய்யப்படுவதை அறிவீர்களா? அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள 11 பாலங்கள் விற்பனை செய்ய அம்மாநிலத்தின் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது. பென்சில்வேனியாவில் வரலாற்று முக்கியத்துவமிக்க பழைமையான பாலங்களே விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. தற்போதுள்ள நவீன போக்குவரத்துக்கு இப்பாலங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளதே இதற்கு காரணம். 100 வருடங்களுக்கு முற்பட்ட 252 அடி நீளமும் 16 அடி அகலமான பாலம் உள்ளிட்ட ஏனைய பழைமையான பாலங்களும் இவற்றில் அடங்குகின்றன. இதனால் இப்பாலங்களை அழிக்காமல் பாதுகாப்பதற்கு விரும்ப…
-
- 0 replies
- 470 views
-
-
சவூதி அரேபியாவில் 12 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) அளவுக்கு பணம் வைத்திருந்த பிச்சைக்காரரை போலீஸார் கைது செய்தனர். சவூதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக சவூதியில் தங்கியுள்ளனர். அந்த பிச்சைக்காரரின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்து 12 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) ரொக்கத்தைக் கைப்பற்றினர். அந்தப் பிச்சைக்காரரின் குடும்பம் சவூதியில் அடுக்குமாடிக் குடியிருப்ப…
-
- 0 replies
- 414 views
-
-
வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் புதிய வகையான மீன் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22) அகப்பட்டுள்ளது. வாழைச்சேனையைச் சேர்ந்த முஹைதீன் பாவா நிஸார் என்பவரது படகில் சென்ற மீனவர்களின் வலையிலேயே இந்த மீன் அகப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் சாம்பல் நிறமும் கொண்ட இந்த மீன் 07.5 கிலோகிராம் எடையும் 04 அடி நீளமும் உடையதாகக் காணப்படுகின்றதென படகு உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார். இப்புதிய வகை மீன் தொடர்பில் பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார். (எம்.எம்.அனாம்) http://tamil.dailymirror.lk/--main/119082-2014-07-22-08-45-00.html
-
- 2 replies
- 660 views
-
-
எருமை மாட்டையும், விடாத காமுகன்..... ஆந்திராவில் ஒரு அக்கிரமம்! அடிலாபாத்: ஆந்திராவின் பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான நபர் எருமை மாட்டுடன் உறவு கொண்டு கைதாகியுள்ளார். அந்த "மனிதனின்" பெயர் நீலம் லச்சையா. இவர் கரீம் நகர் மாவட்ட், திம்மப்பூர் தாலுகாவுக்குட்பட்ட பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்தவர். சனிக்கிழமை இவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். எருமை மாட்டுடன் இவர், உடல் ரீதியான உறவு கொண்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர் பொஜ்ஜ பாலையா என்பவர் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தனது மாட்டிடம், லச்சையா தவறான உறவு வைத்துக் கொண்டதாக கூறியிருந்தார். இதையடுத்து லச்சையாவைப் போலீஸார் கைது செய்தனர். "சம்பவத்தை" நேரில் …
-
- 5 replies
- 3k views
-
-
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என 2 மாநிலமாக பிரிக்கப்பட்டது. தலைநகர் ஐதராபாத் தெலுங்கானாவுடன் சேர்க்கப்பட்டதால் ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. புதிய தலைநகரை மத்திய அரசு குழு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் புதிய தலைநகர் சிங்கப்பூர் போன்று அமைக்கப்படும் என்று முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார். இதற்காக 2 அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் விரைவில் சிங்கப்பூர் செல்ல உள்ளனர். புதிய தலைநகர் அமைக்க பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் தாராளமாக நிதி வழங்கும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக தனியாக வங்கி கணக்கு ஒன்றும் தொடங்கி உள்ளார். இதுத…
-
- 3 replies
- 362 views
-
-
பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். அவர் போர்த்துக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தேன் என அவரது தாயார் டோலோரஸ் அவிரோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ‘துணிச்சலான தாயார்’ என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ‘ரொனால்டோவை கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்தேன். கருவை கலைப்பதற்கு மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் முடியாது என்று மறுத்த…
-
- 0 replies
- 501 views
-
-
ஜேர்மனியில் சைக்கிள்கள் அதிகளவில் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் ஜேர்மனியில் சுமார் 3,00,000க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வியாபாரம் போல் மிகுதியாக நடைபெறும் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கணிசமானவர்களை மட்டுமே பொலிசார் பிடித்துள்ளனர். மேலும் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நாள் ஒன்றிற்கு மட்டும் 7 மிதிவண்டிகள் திருடப்படுவதாகவும் ஆனால் பலர் புகார் கொடுக்க முன் வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் 52 சதவீத மக்கள் சைக்கிள்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=623513239119466080
-
- 3 replies
- 626 views
-
-
சீனாவின் அதிகாரி ஒருவர் தனது வீட்டின் முன்னால் உள்ள புத்தர் சிலையில் ஆபாச திரைப்பட சீடிக்களையும், பணத்தையும் பதுக்கிவைத்துள்ளார். சீனாவின் பிரதமர் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மீது கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் சீனாவின் மங்கோலியா உள் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி வு ஷிஷோங் (63)என்ற கம்யூனிஸ்டு தலைவருக்கு 34 சொசுகு பங்காளாக்கள் இருப்பதும், அதில் ஒன்று கனடாவில் வாங்கபட்டு உள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், இவர் தினமும் வீட்டின் முன் பிரார்த்தனை செய்யும் புத்தர் சிலையின் அடியில் ரகசிய அறை ஒன்று அமைத்துள்ளார் என்றும் அதில் தான் ஊழல் செய்து சேர்த்த 2,000 பணக்கட்டுகள், தங்க கட்டிகள்,…
-
- 2 replies
- 1.3k views
-
-
பசுபிக் சமுத்திரத்தில் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலுள்ள தஹிட்டி தீவுகளிலுள்ள மக்களின் பாரம்பரிய விளையாட்டு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. தஹிட்டியின் தலைநகர் பப்பீட்டேயில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில், தென்னை மரம் ஏறுதல், தேங்காய் உரித்தல், பழங்கள் மற்றும் மரக்கறிகளை சுமந்து ஓடுதல், ஈட்டி எறிதல், 100 கிலோ எடையுள்ள பாரகல்லைத் தூக்குதல் உட்பட பல்வேறு வகை விளையாட்டுப் போட்டிகள் இவ்விழாவில் இடம்பெற்றன. தஹிட்டியின் 5 தீவுகளைச் சேர்ந்த 400 இற்கும் அதிகமான போட்டியாளர்கள் இவ்விளையாட்டு விழாவில் பங்குபற்றினர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=6198#sthash.KAgdZp50.dpuf
-
- 0 replies
- 454 views
-
-
2013-14 நிதி ஆண்டில், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைகளில் ரூ.10 ஆயிரத்து 791 கோடியே 63 லட்சம் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் நடத்திய ஆய்வுகளில் கணக்கில் காட்டப்படாத சட்ட விரோதப்பணம் ரூ.90 ஆயிரத்து 390 கோடியே 71 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக ஒரே நிதி ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் ரூ.1 லட்சத்து ஓராயிரத்து 182 கோடி ஆகும். இதே நிதி ஆண்டில், நகைகள், நிலைத்த வைப்புகள், ரொக்கம் ரூ.807 கோடி அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=113264&category=IndianNews&language=tamil
-
- 1 reply
- 455 views
-
-
செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் கன்னியம்மன் நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் மறு சுழற்சி தொழிற்சாலைகள் உள்ளன.அதில் ஒரு தொழிற்சாலையில் 2 நாய்கள் தலா 5 குட்டி என பத்து குட்டிகள் போட்டன. கடந்த ஜூலை13ந்தேதி ஞாயிற்று கிழமை என்பதால் தொழிற்சாலை விடுமுறை. இதை அடுத்த அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநிலமான பீகாரை சேர்ந்த இளைஞர்கள் மது போதையில் இருந்தனர். அதில் ஒருவர் குட்டி நாய்களை தொட முயன்றபோது, அருகில் இருந்த குட்டிகளின் தாய் இளைஞரை கடித்தது. இந்த சம்பவத்தால் பயந்து போன நாய்கடி வாங்கிய சஞ்சய்(25) மற்றும் அவனது நண்பன் சைலேந்தர்(30) ஆகிய இருவரும் நாய்களை செங்கல்களால் அடிக்க முயன்றனர். ஆனாலும் அந்த நாய்கள் தப்பி ஓடின. இருப்பினும் போதையில் இருந்த ஆ…
-
- 0 replies
- 479 views
-
-
ஓடும் பஸ்சில் பாட்டு பாடி தொல்லை கொடுக்கும் நபர்களை கட்டுப்படுத்த கனடாவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு பஸ்சில் பயணம் செய்பவர்கள் பாட்டு பாடினால் 5 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று கனடாவில் உள்ள வின்னிபெக் நகர நிர்வாகம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கனடா நகரங்களில் சிறிய இசைக்குழுவினர் அடிக்கடி பொது இடங்களில் பாடியபடி பயணம் செய்வது வழக்கம். தற்போது இந்த உத்தரவின் மூலம் அதற்கு முட்டு கட்டை விழுந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நகர வாசி ஒருவர் கூறுகையில்: நான் தினமும் வேலைக்கு பஸ்சில்தான் பயணம் செய்வேன். அப்போது டிரைவர் விசிலடித்தபடியோ, பாட்டு பாடியபடியோ உற்சாகமாக பேருந்தை ஓட்டி செல்வார். இதனை ப…
-
- 7 replies
- 517 views
-
-
மெக்சிகோவை சேர்ந்தவர் கிம்பரலி கோர்டான் இவரது மனைவி கெண்ட்ரா வில்லியனுவா, இவர்கள் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் 4 ந்தேதி திடீர் என பெய்த புயல் மழை காரணமாக ஒரு மரத்திற்கு கீழ் ஒதுங்கினர். வில்லியனுவா அப்போது கர்ப்பமாக இருந்தார்.அப்போது மின்னல் வில்லியனுவாவை மின்னல் தாக்கியது. அவரது உடல் புகுந்த மின்சாரம் அவரது பெருவிரல் வழையாக வெளியேறி உள்லது அவரது பெருவிரலில் ரத்தகாயம் உள்ளது. உடனடியாக வில்லியனுவா மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு சிகிஅச்சை அளிக்கபட்டது அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பாதுகாப்பாக பிறந்தது. அது பெண்குழந்தை அதற்கு கிம்பர்லி கோர்டன் என பெயர் சூட்டி உள்ளனர். மின்னல் தாக்கியதால் வில்லியனுவா வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற…
-
- 1 reply
- 314 views
-
-
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரான்ஸில் உள்ள பாலம் ஒன்றை திருமணம் செய்து கொண்டு முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோஸ் என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக பாலத்தில் இருந்து வரும் அதிர்வுகளை வைத்து இசை உருவாக்கம் செய்யும் முயற்சியில் உலகெங்கும் ஆய்வுகள் நடத்திவருகிறார். இவர் பிரான்ஸ் சென்றபோது, அங்கு உள்ள லீ பாண்ட் டு டியாமல் பாலத்தின் மீது மிகுந்த காதல் கொண்டு கடந்த ஆண்டு அந்த பாலத்தை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர் தற்போது, கணவனான பாலத்துடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து ரோஸ் கூறுகையில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரிந்து வாழ முடியவில்லை. இதன…
-
- 8 replies
- 957 views
-
-
அம்மா..அம்மா... என அழுத இரு குழந்தைகள் அடித்துக் கொலை; குடிகார தந்தை கைது தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகிலுள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது-28). லாரி ஓட்டுநராக இருக்கும் இவர் மனைவி பெயர் கோகிலா (வயது-25). இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (வயது-4), மோகனப் பிரியா (வயது-2), தெய்வானை (வயது-1) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். வழக்கமாக மது அருந்தும் பழக்கமுடைய சதீஷ்குமார் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், கனவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த கோகிலா, தனது குழந்தைகளுடன் காவாக்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்ட…
-
- 1 reply
- 642 views
-
-
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளதக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் தொடர்பாக 2014 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்டியலை ஐ.நா. வெளியிட்டது. ஜப்பானின் டோக்கியோ நகரம் முதலிடத்தில் உள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை அடிப்படையில் 23 மில்லியன் மக்கள் தொகையுடன் ஷாங்காய் 3 ஆவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி 4 ஆவது இடத்திலும், மும்பை 5 ஆவது இடத்திலும் உள்ளது. 1990 ஆம் ஆண்டில் இருந்து டெல்லியின் மக்கள் தொகை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. டோக்கியோவில் மக்கள் தொகை 38 மில்லியனாக இருக்கும் என்றும், இந்த மக்கள் தொகை குறைய வாய்…
-
- 3 replies
- 458 views
-
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி. குறித்த ஆசிரியர் க.பொ.த சாதாரண தரத்தின் கீழ் உள்ள மாணவர் களுக்கு கல்வி கற்பித்து வருவதாகவும் வன்னிப் பகுதியில் இருந்து அண்மையில் இடமாற்றம் பெற்று அப் பாடசாலையில் கல்வி கற்பித்து வந்ததாகவும் தெரியவரு கின்றது. மாணவ தலைவர்களில் ஒருவராக உள்ள குறித்த மாணவி இவ் ஆசிரியரிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டுள்ளார். எதற்காக எனக் கேட்ட போது ஆசிரியர் ஒருவரைப் பற்றி சொல்வதற்கு எனக் கேட்டு வாங்கி தனது இலக்கத்தையும் கொடுத்ததாகத் தெரியவருகின்றது. அதன் பின்னர் ஆசிரியருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தனது காதலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவ் ஆ…
-
- 17 replies
- 1k views
-
-
-
- 4 replies
- 841 views
-
-
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மாடசாமி கோவிலில் உள்ள சூலமொன்றில் பெண் உருவ முகம் தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை மாலை கோவிலில் உள்ள சூலத்தை சிலர் அவதானித்த போது சூலத்தின் நடுப்பகுதியில் உள்ள அகலமான இடத்தில் கண், மூக்கு, வாய் உள்ளடங்கிய பெண் உருவ முகம் உள்ளதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து மக்கள் இதனை அதிசயத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் தகவல் ஏனைய கிராமங்களுக்கும் பரவியுள்ளதால் பொது மக்கள் மாடசாமி ஆலயம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இவ் உருவம் அம்மனின் முகம் எனவும் மாடசாமியின் உருவம் எனவும் அப்பகுதியில் சூழ்ந்திருந்தவர்கள் பேசிக் கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=870543213210429…
-
- 8 replies
- 763 views
-
-
ஜூலை 9, 1816- அர்ஜெண்டினா விடுதலையை அறிவித்த நாள் அர்ஜெண்டினா நாடு தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட நாள் இன்று. தென்னமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியில் அர்ஜெண்டினா உள்ளது. அர்ஜெண்டினா என்றால் லத்தீன் மொழியில் வெள்ளி என அர்த்தம். 16-ம் நூற்றாண்டில் இங்கு வெள்ளியிலான மலை இருப்பதாக நம்பி ஸ்பானியர்கள் அர்ஜெண்டினாவை ஆக்கிரமித்தனர். ஆனால், இங்கே வெள்ளி கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அந்த அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் அர்ஜெண்டினா எனும் பெயரே நிலைத்துவிட்டது. ஸ்பானியர்களின் ஆட்சியும் 19-ம் நூற்றாண்டு வரை நிலைத்தது. ஸ்பெயின் நாட்டில் 1810-ல் நடந்த ஒரு புரட்சியில் அந்நாட்டின் அரசர் அரசராக ஏழாம் பெர்டினாண்டின் பதவி பறிபோனது. அவருக்கு அடுத்து முதலாம் நெப்ப…
-
- 0 replies
- 362 views
-
-
யேர்மன் நாட்டு காவல்த் துறை https://www.facebook.com/photo.php?v=701361343232627
-
- 31 replies
- 1.9k views
-
-
யாழ்., சுன்னாகம், பருத்திக்கலட்டிப் பகுதியில் மனைவியுடன் சண்டைபிடித்துக் கொண்டு வீட்டை எரித்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் மதுபோதையில் தனது மனைவியுடன் சண்டை பிடித்துக்கொண்டு மனைவியின் ஆடைகளை தீயிட்டுக் கொழுத்தியுள்ளார். இந்தத் தீ வீட்டின் கூரைச் சிலாகைகளில் பற்றிக்கொண்டதினால் வீடும் தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து, அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இந்நிலையில், தனது கணவன் வீட்டினை எரித்துள்ளார் என மனைவி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்த முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/20…
-
- 0 replies
- 390 views
-
-
வைத்தியசாலைக்கு வரும் பெண்களை நிர்வாணப்படம் பிடித்த பெண் கைது வைத்தியசாலைக்கு வரும் பெண்களை நிர்வாணப் புகைப்படமெடுத்த நீர்கொழும்பு, தலாதூவ, கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் மூன்றாம் இலக்க விடுதியில் ஈ.சி.ஜி. பரிசோதனைக்கு செல்வதற்காக தயாராகும் பெண்கள் தமது ஆடைகளை களையும் போது, சந்தேகநபரான குறித்த பெண் தனது கையடக்க தொலைபேசியால் படம்பிடித்துள்ளார். இதனை கண்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வைத்தியசாலை பொலிஸார் குறித்த பெண்ணை பரிசோதித்த போது அவரின் செல்லிடத் தொலைபேசியில் சில பெண்கள் மேலாடையின்றி இருக்கும் படங்கள் இருந்துள்ளன. இதனை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப…
-
- 0 replies
- 991 views
-
-
திருடிய செல்போனைத் தொலைத்தவரிடமே விற்க முயன்று மாட்டிக்கொண்ட மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை அன்று பாட்டியாலா பகுதியில் வசித்துவரும் குஷால் பன்சால் என்ற பொறியாளர் டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றிற்கு சென்றிருந்தார். பணம் எடுத்துவிட்டுத் திரும்பும்போது தனது செல்போனை பன்சால் மறந்து வைத்துவிட்டு பாலிகா பஜாருக்கு சென்றுவிட்டார். அதன்பின்னரே செல்போனைத் தவறவிட்டது நினைவுக்குவர திரும்பிவந்தபோது அவரது போன் காணவில்லை. எனவே அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அவர் அளித்திருந்தார். குஷால் வைத்துவிட்டு சென்ற போனை அதன்பின்னர் அங்கு வந்த ரஜத் காந்த் சிங், மகேஷ் குமார் என்ற இரண்டு பி.டெக் மாணவர்கள் எடுத்துள்ளனர். இதனை விற்று பணம் ஆக்க விரும்பிய அந்த இளைஞர்கள் இணையதள…
-
- 0 replies
- 631 views
-
-
ஆணமடுவை, குருபொக்குனுகம பிரதேசத்தில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உடபடுத்திய குற்றச்சாட்டில் நேற்று முன்தினத் மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. ஆணமடுவை கொன்வல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான மந்திரவாதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு இவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் தேவாலையம் ஒன்றை நடாத்திவந்துள்ளார் குறித்த தேவாலையத்துக்கு வருபவர்களின் வீட்டுக்கு சென்று பூஜைகளையும் செய்துவந்துள்ளார். குறித்த பூஜையின் போது அவரிடம் பூஜைக்காக வருபவர்களின் உடலில் எண்ணெய் தடவி அவர்களுக்கு பூஜை செய்து வந்துள்ளார். குறித்த யு…
-
- 1 reply
- 513 views
-