செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7107 topics in this forum
-
70 வயதான வயோதிப நபரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து அந்த நபரிடமிருந்து பத்து இலட்ச ரூபாவை மோசடி செய்ததாக கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பெண்ணொருவரை தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கும் படி நீதிவான் ரங்கஜீவ விமலசேன உத்தரவிட்டார்.தாரகர் சில்வா என்ற 22 வயதான சந்தேக நபரை இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவராவார். கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபரின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கூறியதாவது முறைப்பாட்டாளர் விடுமுறையில் இக் நாட்டுக்கு விஜயம் செய்த போது ஹோட்டலொன்றில் நடைபெற்ற விருந்தொன்றின் போது சந்தேக நபரான யுவதி அறிமுகம…
-
- 5 replies
- 588 views
-
-
டுபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான பேர்ஜ் கலிஃபா கட்டடத்திலிருந்து குதித்து இரு 'ஸ்கைடைவ்வர்கள்' (ஆகாயத்தில் கரணமடிப்பவர்கள்) துணிகர கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெட் பியூஜென் மற்றும் வின்ஸ் ரெப்பெட் ஆகிய இருவரே இந்த மெய்சிலிர்க்க வைக்கும் சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். கட்டடங்களிலிருந்து குதிக்கும் பிரிவிலே கடந்த திங்கள் கிழமை காலையில் இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த தகவல்கள் மற்றும் வீடியோ நேற்றைய தினமே வெளியிடப்பட்டிருந்தது. இச்சாதனைக்கான பயிற்சிகளை குறித்த இருவரும் ஸ்விட்சர்லாந்தில் பேர்ஜ் கலிஃபா கட்டடத்தின் உயரமுடைய மலைப்பகுதியில் ஒரு வாரம் மேற்கொண்டுள்ளனர். 828 மீற்றர் உயரமான பேர்ஜ் கலிஃபா கட்டடத்தின் உச்சிய…
-
- 1 reply
- 490 views
-
-
ஓடும் விமானத்தில் 'பேக்' சீட் வழியாக கை விட்டு பெண்ணிடம் சில்மிஷம்.. இந்தியர் கைது லண்டன்: லண்டனிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு சக ஆண் பயணி, அந்தப் பெண்ணின் மார்புகளை ஐந்து நிமிடத்திற்கும் மேலாக பிடித்து சில்மிஷம் செய்து சிக்கினார். அந்த ஆண் ஒரு இந்தியர் ஆவார். அவரது பெயர் வினய் போச்சம்பள்ளி. ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் அந்தப் பெண்ணின் பின் சீட்டில் அமர்ந்து பயணித்துள்ளார். பின்னால் இருந்து எக்கி அந்தப் பெண்ணின் மார்புகளைப் பிடித்து அநாகரீகமாக நடந்துள்ளார். இவரது இந்த செயல் ஐந்து நிமிடத்திற்கும் மேலாக நீடித்துள்ளது. இதைப் பார்த்த சக பயணிகள் சத்தம் போடாமல் கண்டுகொள்ளாமல் இருந்துள…
-
- 5 replies
- 705 views
-
-
இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பைப் பயன்படுத்தி யுவதி ஒருவர் 25 பவுண் தங்க நகைகளை அபகரித்துள்ளார். இச்சம்பவம் தாவடி பத்திரகாளி கோவிலடியிலுள்ள வீடொன்றில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. யாழ்.ஆசாட் வீதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐந்து நாட்கள் தாவடியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்துள்ளார். இவர் இளைஞன் ஒருவரை தொலைபேசி மற்றும் இணையம் மூலமாகக் காதலித்துள்ளார். இத்தொடர்பைப் பயன்படுத்தி தாவடியில் வீடொன்றில் தங்கியிருந்த குறித்த பெண் கடந்த 15ஆம் திகதி மாலை மயக்க மருந்தைத் தெளித்து வீட்டிலுள்ளவர்களை தூக்கத்தில் ஆழ்த்திய பின்னர் அலுமாரியிலிருந்த தாலிக்கொடி, நெக்லஸ், சிமிக்கி தோடு, பதக்கச் சங்கிலி ஆகிய தங்க நகைகளை அ…
-
- 1 reply
- 291 views
-
-
அண்மையில் சிறீலங்கா செல்ல ஒருவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் அவர் சிறீலங்காவுக்குள் நுளைவதற்கான காரணத்தை அலுவலகம் கேட்டபோது சுற்றுலா - உறவுகள் நண்பர்களை சந்திக்க என எழுதிக்கொடுத்தார் அவருக்கான விசா அனுமதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதற்கான காரணமும் எழுதப்பட்டு Purpose of Travel: Tourist - Visiting friends and relatives (You are NOT permitted to use this ETA for any other purpose) இவ்வாறு ஒரு வரியும் சேர்க்கப்பட்டுள்ளது அதாவது போற வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு பொத்திக்கொண்டு வரணும் என்று அர்த்தம்.......
-
- 1 reply
- 418 views
-
-
வெளிநாட்டிலுள்ள தனது மனைவிக்கு அனுப்பவென முருங்கக்காய் பறிக்கச் சென்ற கணவரொருவர் முருங்கை மரக்கிளையுடன் அருகிலுள்ள கிணறொன்றில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இப்பாகடுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பாகடுவ இப்பயவ பிரதேசத்தைச் சேர்ந்த சரத்காமிணி ராஜபக்ஷ என்ற 57 வயதான மூன்று பி்ள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். மரண விசாரணையில் சாட்சியமளித்த காலஞ்சென்றவரின் மைத்துனர் கூறியதாவது, 'காலஞ்சென்றவரின் மனைவி எனது சகோதரியாவார். நாங்கள் இருவரும் குவைத் நாட்டில் பணி புரிகின்றோம். நான் விடுமுறைக்கு இலங்கை வந்தேன். எனது சகோதரி இலங்கை காய்கரி சாப்பிட விரும்புகிறார் என கூறியபோது எனது மைத்துனர் பலா ஈரப்பலா போன்றவற்றை சேகரித்ததுடன் பின் வீட்டில் முருங்கைக்காய் …
-
- 7 replies
- 928 views
-
-
6 யுவதிகளுடன் இணைந்து தனக்கு துரோகமிழைத்தார் என்கிறார் முன்னாள் காதலிபிரித்தானிய நடிகர் டேவிட் மெக்கின்டொஷ் ஆபாசப்பட நடிகையொருவருடன் முறையற்ற தொடர்புகொண்டு தனது காதலிக்கு துரோகம் இழைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 27 வயதான டேவிட் மெகின்டொஷ், பிரிட்டனின் பிரபல மொடலிங் கலைஞரும் நடிகருமாவார். கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் தனது உடலை கட்டழகாக வைத்திருப்பவர் இவர். பிரித்தானிய ஸ்கை தொலைக்காட்சியில் கிளேடியேட்டர் தொடரில் நடித்து இவர் பெரும் புகழ் பெற்றவர். ஆனால், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்பவர் இவர். தற்போது நடிகை கெல்லி புரூக்கை அவர் காதலித்து வருகிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தமும் அண்மையில் நபெற்றது.இந்நிலையில் ஆபாசப் பட நடிகையொருவருடன் டேவிட் மெக்…
-
- 1 reply
- 676 views
-
-
நியூசிலாந்தில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வர ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்டன் பல்கலைக்கழகத்தின் சைன்ஸ் சொசைட்டி துறை, எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அதன்படி, செத்த எலிகளை கொண்டுவரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பப்பில் இலவசமாக பீர் அளிக்கப்படும். பல்கலைக்கழக மாணவர்கள் எலிகளை பிடிப்பதற்காக மாணவர்கள் அனைவருக்கும் எலிப்பொறி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவித்த பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர், நியூசிலாந்தில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அவை மரங்களில் ஏறி பறவைகளின் முட்டைகளை உடைத்து அபூர்வமான பறவைகளின் இனப்பெருக்கத்தை பா…
-
- 5 replies
- 598 views
-
-
பெண்கள் 30, ஆண்கள் 40 வயதுக்கு பிறகுதானாம் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர்! [Tuesday, 2014-04-22 07:54:12] பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மனிதர்கள் எந்த வயதில் அழகாக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மிக அழகாக தெரிகின்றனர் என்பது தெரியவந்தது. ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில் தான் அழகாக இருக்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை க…
-
- 8 replies
- 977 views
-
-
c13ca14cbeb89ceefb29da50261955ae
-
- 5 replies
- 615 views
-
-
12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: இங்கிலாந்தில் 14 வயது சிறுவன் கைது [Wednesday, 2014-04-23 12:09:49] இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவனை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில், "கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12 பெண்களிடம் இவன் தவறாக நடக்க முயற்சித்துள்ளான். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 48 வயது பெண்மணி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சித்த போது மாட்டிக்கொண்டான். இவனைக் குறித்து புகாரை வெளிப்படையாக அறிவித்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குற்றவாளி சிறுவன் 16 வயதுக்குட்பட்டிருப்பதால் சிறப்பு நீதிமன்றம் அவனுக்கு 12 மாதம் சிறா…
-
- 7 replies
- 664 views
-
-
இரும்புத்திரை வீழ்ச்சிகண்டு கால் நூற்றாண்டு ஆகிவிட்ட பின்னரும் கூட, ஜேர்மனிக்கும், செக் குடியரசுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் வாழும் மான்கள், இன்னமும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடப்பதில்லை என்று இரு நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மின்வேலி அகற்றப்பட்டும் எல்லை கடவா மான்கள் ஒரு காலத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போதும் கூட அந்த இரு நாடுகளின் எல்லையில் வாழும் செம்மான்கள் அந்த எல்லைப் பகுதியைக் கடப்பதில்லை என்று, அவற்றில் சுமார் 300 மான்களை பிந்தொடர்ந்து பார்த்த போது தெரியவந்திருக்கிறது. அவற்றை கண்காணிக்கும் சில கருவிகள் மூலம் அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது. இப்போது மி…
-
- 8 replies
- 784 views
-
-
திருமண ஒப்பந்தத்தின்படி சீதனம் வழங்காததால் அதைக் கேட்டு மாமனாருடன் ஏற்பட்ட சச்சரவில் மருமகன் மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவமொன்று பதுரலிய கட்புகெதர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 25 வயதான மருமகனைக் கைது செய்ய புளத் சிங்கள பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புளத்சிங்கள தியகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் ரணவக என்ற 49 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலையுண்டவராவார். காலஞ்சென்றவரின் மூத்த புதல்வியை திருமணம் செய்த சந்தேக நபர் ஒப்பந்தப்படி சீதனத்தைக் கேட்டு சச்சரவு செய்ததாகவும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலில் மாமனாரை கத்தியால் குத்தியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச் சந்தர்ப்பத்தில் சந்தேக நபரது இரு மைத்துனன்மாரும் காயமுற்றதாக…
-
- 0 replies
- 504 views
-
-
எரிச்சலூட்டும் வகையில் பாடல்களை பாடி கடத்தல் காரர்களிடமிருந்து சிறுவன் ஒருவன் தப்பிய சம்பவமொன்று ஜோர்ஜியாவில் இடம்பெற்றுள்ளது. ஜோர்ஜியாவின் அட்லாண்டா பிரதேசத்தில் வசித்து வரும் வில்லி மிரிக் என்ற 10 வயது சிறுவனே இவ்வாறு கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொள்ளைக்காரர் கும்பலொன்று மேற்படி சிறுவனை கடத்தி 3 மணித்தியாலங்கள் காரொன்றினுள் அடைத்து வைத்துள்ளனர். இதேவேளை, குறித்த சிறுவனின் குடும்பத்தாரிடம் தொடர்புகொண்டு சிறுவனை கடத்தி விட்டதாகவும் ஒருதொகை பணத்தை கொடுத்தால் மட்டுமே சிறுவனை உயிருடன் விடுவிக்க முடியுமென்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் தான் கடத்தப்பட்டதை பொருட்படுத்தாத அச்சிறுவன் எரிச்சலூட்டும் வகையில் தொடர்ந்து 3 மணித்தியா…
-
- 0 replies
- 342 views
-
-
பிரான்ஸின் பாரிஸ் நகரில் பண்டைய தேவாலயமொன்றுக்கு அருகிலுள்ள தன்னியக்க இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற சுற்றுலா பயணியொருவரை சுற்றி வளைத்த திருடர்கள் குழுவொன்று அவரிடமிருந்து பணத்தை திருடிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிரிவி கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது. பாரிஸ் நகரில் ரோபோ இனத்துவ குழுவை சேர்ந்த திருடர்கள் கொள்ளை மற்றும் வழிப்பறிகளில் ஈடுபடுவது வழமையாகவுள்ளது. நொட்ரே டேம் தேவாலயத்துக்கும் லாவ்றி அருங்காட்சியகத்துக்கும் இடையிலுள்ள தன்னியக்க பண இயந்திரத்தில் பணம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சுற்றுலா பயணியிடமிருந்தே திருடர்கள் பணத்தை களவாடிச் சென்றுள்ளனர். மேற்படி திருடர்களில் இள வயதினரும் பெண்களும் உள்ளடங்குகின்றனர். பாரிஸ் நகரின் மத்தியிலிர…
-
- 3 replies
- 331 views
-
-
ஜேஜியாங்: சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்போ என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயதான "ஷி". இவர் கடந்த 13 ஆம் தேதி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஒரே கல்லில் ரெண்டு: இருவரும் தன்னை காதலிப்பதால் இருவரில் ஒருவரை தான் ஏமாற்ற விரும்பவில்லை என்றும், எனவே இருவரின் சம்மதத்தோடு இருவரையும் திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். ஒன்னாத்தான் வாழ்வோம்: இருபெண்களும் திருமண தினத்தன்று மகிழ்ச்சியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததாகவும், தாங்கள் இருவரும் ஒற்றுமையாக கடைசிவரை ஷியுடன் வாழ்வோம் என்றும் கூறினர். "நல்ல" பெற்றோர்: ஷியின் பெற்றோர் இந்த திருமணம் குறித்து கூறியபோது, தங்கள் மகனின் முடிவு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர். மச்சம்டா உனக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொண்டு 5 மணி நேரம் வித்தவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன் குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான். அமெரிக்காவில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வருகிறது. உறையும் குளிருக்கு நடுவில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாய் நகரம் வரையில் விமானத்தின் சக்கரம் உள்ள பெட்டியில் அமர்ந்து 16 வயது சிறுவன் பயணித்துள்ளான். குளிர், அதிகப்படியான காற்றழுத்தம் போன்றவற்றால் சுவாசிக்க ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காமல் அச்சிறுவன் மயக்கமடைந்துள்ளான். ஆனால் விமானம் தரையிறங்கியபோது அதிருஷ்டவசமாக சிறுவனுக்கு நினைவு திரும்பியது. ஹவாய் விமான நிலையத்தில் அச்சிறுவனை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், மத்திய புலனாய்வு துறையான எப்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் அறுந்த காதை ஒட்டவைப்பதற்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அட்டைபூச்சிகளும் பங்கேற்றன. அமெரிக்காவில் ரோத்தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் காது நாய்கடித்ததால் முற்றிலும் அறுந்தது. எனவே, அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்டிக்சர்ஜரி முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவைசிகிச்சை செய்தபின்னர், தையல் போட்ட பகுதிக்கு ரத்தஓட்டம் செல்லவில்லை. எனவே, அங்கு மெல்லிய ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது. எனினும் ரத்தஓட்டத்தை சீர்செய்ய முடியவில்லை. அதை சீரமைக்க ஆலோசித்த மருத்துவர்கள் ரத்தம் உறிஞ்சும் அட்டைபூச்சிகளை கொண்டுவந்து அப்பகுதியில் உலவவிட்டனர். அவை ரத்தத்தை உறிஞ்சியபோது, தையல் போட…
-
- 0 replies
- 523 views
-
-
ஆல்கஹால் பவுடர்: இனி குடிக்க வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம் Suresh திங்கள், 21 ஏப்ரல் 2014 (17:18 IST) Share on facebookShare on twitter More Sharing Services திரவமாக மட்டுமன்றி, உணவிலும் கலந்து சாப்பிடக்கூடிய ஆல்கஹால் பவுடர் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட உள்ளது. மதுபானங்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இதுவரை அவை திரவ நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இனி அது பவுடர் ஆகவும் கிடைக்கவுள்ளது. ‘பால்கஹால்‘ என்று பெயரிப்பட்டுள்ள இந்த ஆல்கஹாலை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டுமுதல் விற்பனையைத் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆல்கஹால் பவுடர் ரூ.600, ரூ.900, ரூ.1500 என்ற விலைகளில் விற்பனை …
-
- 2 replies
- 640 views
-
-
http://life.dailymirror.lk/article/8134/festival
-
- 8 replies
- 1k views
-
-
ரஷிய ஆண்களுடன் உறவு கிடையாது: உக்ரைன் பெண்கள் அதிரடி போராட்டம் [Friday, 2014-04-18 20:26:38] உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதிலிருந்து, ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடுமையான பகை மூண்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டு பெண்களில் ஒரு பகுதியினர், தங்கள் தேசபக்தியை வேறுவகையில் காண்பித்துள்ளனர். அதாவது, தங்கள் பகுதியை ஆக்கிரமித்த ரஷியாவைச் சேர்ந்த ஆண்களுடன் ‘உறவு’ வைத்துக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளனர். இந்த உறவு மறுப்பு போராட்டத்தை அவர்கள் வெற்றிகரமாக தொடங்கி உள்ளனர். ‘ரஷியாவுக்கு கொடுக்காதே’ என்று எழுதப்பட்ட டி–சர்ட்டுகளை அணிந்து கொண்டு இந்த போராட்டத்தை நடத்தி வருகிற…
-
- 7 replies
- 810 views
-
-
-ரொமேஸ் மதுசங்க மனநிலை, வெப்பம், ஒளி, பாதுகாப்பு மற்றும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்ல விலங்கினமே பச்சோந்தியாகும். இது ஊர்வன வகையைச் சார்ந்ததாகும். பச்சோந்திகளுள் சில இனங்கள், தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தவை. இதற்கு காரணம் அவற்றின் தோலில் உள்ள நிற கலங்களுக்கும், மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருப்பதாகும். பச்சோந்திக்கு காகம், கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். இந்த பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்…
-
- 0 replies
- 538 views
-
-
தனது ஆசைக்கு இணங்க மறுத்த வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ரோமானிய அழகிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பாவின் ரோமானிய டுல்கியா நகரை சேர்ந்த பெண் லுமினியா பெரிஜோக்(வயது 31). ஒரு சாயலில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போலவே தோற்றமளிக்கும் இவர், தனது அழகால் ஆண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இவரது பார்வையில் டாக்சி டிரைவரான நிக்கோலே ஸ்டான் என்பவர் அகப்பட்டார். நிக்கோலேவுடன் உல்லாசம் அனுபவிக்க நினைத்த லுமினியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஏமாற்றம் அடைந்த லுமினியா, டாக்சி டிரைவரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். உடலின் 6 இடங்களில் கத்திக் குத்து காயங்களுடன் உயிர் பிழைத்த நிக்கோலே, இச்சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் …
-
- 9 replies
- 4.7k views
-
-
இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாய் 3 குட்டிகள் ஈன்றது. இதில் 2 குட்டிகள் பூனை போன்று இருந்தன. ஒரு குட்டி நாய் போன்று காணப்பட்டது. இவற்றில் 2 குட்டிகள் இறந்த விட்டன. பூனை போன்ற தோற்றத்தில் உள்ள ஆண் குட்டி மட்டுமே உயிருடன் இருந்தது. இதன் கால்கள் நாய் போலவும் உடம்பு மற்றும் வால் பகுதி பூனைக்குட்டி போன்றும் இருக்கிறது. இந்த பூனைக்குட்டி மியாவ், மியாவ் என்று கத்துகிறது. நாயும் குட்டியை கௌவிச் தூக்கி சென்று பால் கொடுக்கிறது. பொதுவாக நாய்கள் பூனையை பார்த்தால் துரத்தும் தன்மை கொண்டன. ஆனால் இந்த நாய், தான் ஈன்ற குட்டியானது பூனை போல் இருந்தாலும் பாசத்துடன் பால் கொடுக்கிறத…
-
- 10 replies
- 4.9k views
-
-
“எட்டே கால் இலட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாய் அது” - ஔவையார் – (எட்டு இலக்கத்தை ‘அ’ எனவும் கால் என்ற கணக்கை ‘வ’ என்றும் தமிழ் எழுத்துக்களில் குறிப்பிடப்படும். அதன் படி எட்டே கால் இலட்சணம் என்றால் எமனுடைய வாகனமான எருமைக்கடாவாகும். பெரியம்மை வாகனம் என்பது மிகவம் அவலட்சணமான யாழி வாகனமாகும். கூரையில்லா வீடு என்பது மூளையில்லாத மனிதனைக் குறிக்கிறது. குரலாமன் தூதுவன் என்றால் இராமாயணத்தில் இராம தூதனாக விளங்கிய அனுமான் என்ற குரங்கைச் சுட்டிக்காட்டுகிறது. இதைத் தமிழில் வசைக் கவி எனக் கூறுவர். இது காளமேகம் செய்தியின் அறிமுகம்) காளமேகம் செய்திகள்: தயாரித்து வழங்குபவர் ‘பொய்யா மொழி’ இனி தலைப்புச் செய்திகள்! …
-
- 0 replies
- 635 views
-