Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. லண்டன் சிறையில் படுக்கை வசதி இல்லையாம் - குண்டு வாலிபர் விடுதலையானாா்! [saturday, 2014-03-29 14:54:37] இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜுட் மெட்கால்ப் (23). இவர் ‘கிளின்பெல்டார்’ என்ற உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார். இந்த நிலையில் இவர் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்றார். அப்போது பிடிபட்ட இவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், 12 மாதம் சமூக சேவையும் செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர் லண்டனில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டார். மிக குண்டு மனிதரான அவர் 7 அடி 2 இஞ்ச் உயரம் இருக்கிறார். இதனால் அவருக்கு சிறையில் போதிய வசதி செய்த…

  2. [saturday, 2014-03-29 14:42:34] சீனாவின் ஆங்குய் மாகாணத்தை சேர்ந்தவர் வாங்யங். இவர் இண்டர்நெட் மூலம் 12 முதல் 16 வயது சிறுமிகளுடன் தொடர்பு வைத்து நண்பரானார். பின்னர், அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி ஓட்டலுக்கு அழைத்து சென்று வல்லுறவு செய்தார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது வுகு நகர மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இவரது இந்த பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு 16 வயது சிறுமி உடந்தையாக இருந்தாள். அவருக்கு ஏற்கனவே 3 ஆண்டுகள் கடுங்காவல் இவரக்கு ஜெயில் விதிக்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=106703&category=WorldNews&language=tamil

  3. உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா! உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே.டேஸ்ட்ஆப் இந்தியா என்ற பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த 25 இசை நிபுணர்களின் பட்டியல் இது. 25. ஆலன் சில்வெஸ்ட்ரி: ஃபாரஸ்ட் கம்ப் (Forest Gump), பேக் டு த ஃப்யூச்சர் (Back to the Future), தி அவெஞ்சர்ஸ் (The Avengers) படங்களின் இசையமைப்பாளர். 24. வாஞ்சலிஸ் : ப்ளேட் ரன்னர் (Blade Runner), சேரியட்ஸ் ஆப் பையர் (Chariots Of Fire) போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர். 23. ஜேம்ஸ் நியூட்டன் - ஹோவர்ட் எட்டு முறை ஆஸ்கருக்கு…

  4. காலி பிரதேசத்தில் மட்டும் 3,029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 1,709 பேர் 50 வயதை தாண்டிய பெண்கள். 18 - 50 வயதுக்குட்பட்ட 1,328 பெண்கள் நாங்கள் வாழ்நாளிலேயே திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்வதையே விரும்புகின்றார்கள் என காலி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் எக்கமுத்துவ பியச என்ற அமைப்பு திருமணமாகத பெண்கள் என்ற தகவல் ஆராய்ச்சி சேகரிப்பு அறிக்கையை காலி பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. இத்தகவல் ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்துள்ள மேற்படி அமைப்பு, 'நாங்கள் ஒரு பிரதேசத்தில் மாத்திரமே தகவல்களை கேகரித்தோம். இலங்கையில் உள்ள ஏனைய பிரதேசங்களை எல்லாம் தகவல் சேகரிக்கும்போது இத்தொகை இலட்சத்தை தாண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. …

  5. ஜப்பானில் இரவு 9 மணிக்கு மேல் குழந்தைகள் செல்போனில் பேச தடை! [Friday, 2014-03-28 14:09:53] குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், ஜப்பானிய நகரமான கரியாவில் இரவு 9 மணிக்கு மேல் அவர்கள் செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் முதல், பள்ளியில் பயிலும் சுமார் 13,000 மாணவர்கள், இரவு 9 மணிக்கு மேல் தங்களது செல்போன்களை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படாது என்றாலும், குழந்தைகளின் செல்போன் பழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தங்களுக்கு உதவியாக இருக்கும் என பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?news…

  6. தான் கர்ப்பிணியென்றும் 5 குழந்தைகளை கருவில் சுமப்பதாகவும் பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் உறவினர்களை ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த பெண்ணொருவரே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் உண்மையில் கர்ப்பிணி என்றும் 5 குழந்தைகளை கருவில் சுமக்கிறார் என்பதையும் அப்பெண்ணின் நண்பி நம்பியுள்ளார். அதனால் குறித்த பெண்ணின் தோழி அப்பெண்ணுக்காக முகநூலொன்றை உருவாக்கி அதில் பெண்ணின் கர்ப்பம் குறித்து தெரிவித்துள்ளார். இதனை பார்த்த பலர் மேற்படி தம்பதியினருக்கு பரிசு மழை பொழிந்துள்ளனர். குறித்த பெண் 34 கிழமைகளின் பின்னர் தனது கணவனிடம் 5 கட்டில் வாங்கித்தருமாறும் கோரியுள்ளார். ஒருநாள் தம்பதியினர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதன்போது கிடைக…

  7. "குடும்ப அல்லது ஜாதி கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக என்ற காரணம் காட்டி செய்யப்படும் கொலை சம்பவம்" என்று காவல் துறையினரால் கூறப்படும் சம்பவம் ஒன்றில், இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் 26 வயது பெண் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர் ஒருவர் தனது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளார். தங்களின் விருப்பதிற்கு மாறாக திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் அவர்களின் பெண்ணை அவர்களே கொலை செய்ததாக தற்போது பொலிஸ் காவலில் இருக்கும் அந்த பெண்ணின் பெற்றோர் ஒப்புகொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பெண்ணின் கணவர் ஒரு பொருத்தமற்ற சமூகத்தை சேர்ந்தவர் என்று அந்த பெண்ணின் பெற்றோர்கள் கருதியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பெப்ரவரி 21ஆம் தேதி அன்று சக தகவல் தொழில்ந…

  8. மும்பை: கணவருக்கு தெரியாமல், மனைவி தன் சொந்த வீட்டில் பணம் திருடினாலோ அல்லது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாலோ விவகாரத்து வழங்க முடியும் என ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை குடும்பநல கோர்ட்டில் ஒருவர் தனது மனைவிக்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தன் மனைவி தனக்கு தெரியாமல் தன் சொந்த வீட்டில் பணம் திருடுகிறார் என்றும், மேலும் தன்னுடைய நண்பரின் டெபிட் கார்டு மூலம் ரூ.37 ஆயிரத்து 500 மோசடியில் ஈடுபட்டார் என்றும், அதனால் போலீசில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், மனைவியின் இத்தகைய விரும்பத்தகாத நடவடிக்கையால் தனக்கு சமூகத்தில் அவபெயர் ஏற்பட்டுள்ளதாவும் தனது விவாகரத்துக்கான …

    • 1 reply
    • 581 views
  9. https://www.youtube.com/watch?v=jArJsC2l7d8#t=75 பிளாஸ்டிக் பைகளில் குழந்தைகள்! ஆற்றை கடந்து செல்லும் அவலம் வியட்நாமில் பள்ளி செல்லும் குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வெள்ளத்தில் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு வியட்நாமின் டியன்பியன் மாகாணத்தில் உள்ள சாம்லாங் கிராமம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இங்குள்ள ஆற்றை கடந்து சென்றால் தான் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியும். ஆற்றில் கட்டப்பட்டிருந்த தொங்குபாலம் ஒன்று வெள்ளத்தால் சிதைந்து போனதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நபர் ஒருவர், குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, ஆற்று வெள்ளத்தில் நீந்தி சென்று அக்கரையில் விடுகின்றனர். இதேபோல…

  10. பரேலி:பாம்பு கடித்து இறந்து போனதாக கருதப்பட்ட வாலிபர், 11 ஆண்டுக்கு பின் உயிருடன் திரும்பி வந்தார். இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் பரேலி தேவர்னியா பகுதியில் உள்ளது பத்வா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சத்ராபால் (25) என்ற வாலிபரை பாம்பு கடித்து விட்டது. அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் கருதினர். அவர்களுடைய வழக்கப்படி சத்ராபாலின் சடலத்தை ஆற்றில் வீசி இறுதி சடங்கு செய்து விட்டனர். சத்ராபாலின் மனைவி ஊர்மிளா, அப்போது கர்ப்பமாக இருந்தார். கணவன் இறந்த 2 மாதங்களுக்கு பிறகு ஊர்மிளாவுக்கு அபார்ஷன் ஆகிவிட்டது.இளம் வயதில் கணவனை இழந்ததால், அவருக்கு சத்ராபாலின் தம்பியை திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், …

  11. சவூதி அரேபியாவில் ராமர் உள்பட 50 பெயர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய பெற்றோர் தடை செய்யப்பட்ட 50 பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டக் கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி லிண்டா, அலைஸ், எலைன், பெஞ்சமின், ராமா, மாயா உள்ளிட்ட 50 பெயர்கள் தடை செய்யப்பட்ட பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் பெஞ்சமின் என்பது இஸ்லாமிய பெயராக இருந்தாலும் தற்போதைய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் அதே பெயர் இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரேபிய மொழி அல்லாத சொற்கள், இஸ்லாமுக்கு எதிரான சொற்கள், சவூதி கலாச்சாரத்துக்கு எதிரான சொற்கள் என்ற அடிப்படையில் குறிப் பிட்ட பெயர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. http://www.seithy.…

  12. ஸ்வீடனில் உள்ள ஒரு ரயில் நிலைய நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் இளம்பெண்ணின் தலைமுடி ரயிலின் வேகத்திற்கேற்ப பறந்தது அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. FILE ஸ்டோக்ஹோல்மில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் விளம்பர பலகையில் உள்ள இளம்பெண்ணின் தலைமுடி அங்கு வரும் ரயிலின் வேகம் மற்றும் திசைக்கு ஏற்ப பறக்கிறது. பின்னர், ரயில் சென்றதும் அப்பெண் தலை தலைமுடியை சிரித்துக்கொண்டே சரி செய்துக்கொள்கிறார். இது ஒரு தலைமுடி எண்ணெய்க்கான விளம்பரம். முதல் முதலாக இந்த விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்ந்தனர். இந்த விளம்பரத்தை மக்களின் மனதில் பதியவைக்க, ரயில் வரும் ஓசை கேட்டால் இய…

  13. மாயமான விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடியது மலேசிய அரசு! [Thursday, 2014-03-13 18:08:54] மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வான பகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது. மாயமான விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு தன்னிச்சையாக தகவல்களை அனுப்பும் விமானத்தின் கருவியின் தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விமானம் கடத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் விமானத்தை தேடும் பணியில் பல நாடுகளும…

  14. கனேடிய மொன்றியல் நகரைச் சேர்ந்த உள் ஆடைகளை தயாரித்து சந்தைப்படுத்தும் கம்பனியொன்று தனது ஆண் வாடிக்கையாளர்களுக்கு 65 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா (50 ஆயிரம் டொலர்) பெறுமதியான பிறப்புறுப்பு காப்புறுதியை வழங்குவதாக விநோத அறிவிப்பு செய்துள்ளது. நாளை மறுதினம் 15ஆம் திகதி முதல் மேற்படி யு.என்.டி. இஸட் கம்பனியின் இணையத்தளத்தினூடாக அந்த கம்பனியால் உற்பத்தி செய்யப்படும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளாடைகளை கொள்வனவு செய்யும் ஆண்களுக்கு லலொய்ட்ஸ் ஒப் லண்டன் காப்புறுதி நிறுவனத்தின் காப்புறுதியை வழங்கப்படும் என மேற்படி கம்பனி தெரிவிக்கின்றது. ஆணொருவர் தனது பிறப்புறுப்பை இழக்க நேரிடும் போது அவருக்கு காப்புறுதி பணம் வழங்கப்படும் என அந்தக் கம்பனி குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மேற்ப…

  15. சாஸ்திரம் பார்ப்பதற்காகச் சென்ற யுவதியொருவரை நிர்வாணப்படுத்தி அந்த யுவதியின் உடலில் நோய் தேடிய சாமியார் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஆணமடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சாமியாரிடமிருந்து தப்பி ஓடிய மேற்படி யுவதி, பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த சாமியாரிடம் சாஸ்திரம் பார்ப்பதற்காக 27 வயது யுவதியொருவர் சென்றுள்ளார். அந்த யுவதி ஏதோவொரு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ள சாமியார், அந்த நோய் யாதென கண்டுபிடிப்பதாகக் கூறி யுவதியை நிர்வாணப்படுத்தியுள்ளார். சாமியாரின் இந்த நடவடிக்கையிலிருந்து தப்பிக்கொண்ட யுவதி, அவ்விடத்திலிருந்து ஓடிச்சென்று பொலிஸில் முறைப்பாடு செய்த…

    • 1 reply
    • 487 views
  16. பெங்களூருவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மட்டன் பிரியாணி தான் வேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் அடம்பிடித்ததால் அந்த திருமணமே நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. FILE பெங்களூருவில் உள்ள தன்னேரி பகுதியை சேர்ந்தவர்களான யாஸ்மின் தாஜ் மற்றும் சைபுல்லா ஆகியோருக்கு பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 11 ஆம் தேதி ப்ரசெர் டவுனின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்காக பெண் வீட்டார் 30 கிலோ சிக்கன் பிரியாணி வாங்கியிருந்தனர். ஆனால், தங்களுக்கு கண்டிப்பாக மட்டன் பிரியாணிதான் வேண்டுமென்று கேட்ட மாப்பிள்ளை வீட்டார் புதிதாக மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து அனைவருக்கும் பரிமாறும்படி பெண் …

  17. சவுதி அரேபியாவில் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக 60 வயது முதியவரை இளம்பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த பணக்காரர் ஒருவரிடமிருந்து, நபர் ஒருவர் குடும்ப செலவுகளுக்காக கடன் வாங்கியுள்ளார், சிறுக சிறுக வாங்கிய தொகை 3 லட்சம் திர்ஹம்களை கடந்துள்ளது. நீண்டநாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி தராததால், குறித்த பணக்காரர் பொலிசிடம் புகார் அளித்துள்ளார். அந்நாட்டின் சட்டப்படி இதுதொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கடனை அடைக்கும் வரை பிரதிவாதியை சிறையில் அடைக்க நேரிடும். எனவே தனது தந்தை சிறையில் பொழுதை கழிப்பதை விரும்பாத மகள் பணக்காரருக்கு போன்று செய்து, என் தந்தை மீதான கடனை தள்ளுபடி செய்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன். …

    • 1 reply
    • 1.4k views
  18. உல்லாசம் அனுபவிப்பதற்கு கடற்கரையை நோக்கி வருபவர்களுக்காக அமைத்துகொடுக்கப்பட்ட மலசலக்கூடத்தை நபரொருவர் விலைக்கு வாங்கி அதனை அழகிய வீடாக மாற்றி தனது மனைவிக்கு திருமண நாள் பரிசாக வழங்கியுள்ளார். பிரிட்டனைச்சேர்ந்த நிக் வில்லான் என்ற நபரே இத்தகைய பிரமாண்டமானத்தை தனது மனைவிக்கு பரிசாக்கியுள்ளார். பிரிட்டனின் சிரெங்கம் பகுதியிலுள்ள கடற்கரையில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை அமைப்பதற்காக அவர் 85,000 ஸ்ரேலிங் பவுன்களை செலவிட்டுள்ளார். இதனை வடிவமைப்பதற்காக அவர் 3 வருடங்களை செலவிட்டுள்ளதுடன் அவ்வீட்டுக்கு 'த வீ ரீடிரிட்' என பெயரிட்டுள்ளார். இவ்வீட்டினுள் இரண்டு படுக்கையறைகள், ஒரு சமயலறை, தனி குளியலறை, கடற்கரை காட்சிகள் தெரியக்ககூடிய வகையிலான ஜன்னல்கள் என்பன…

  19. லண்டன் : லண்டனை சேர்ந்த, பெண், தான் வளர்த்த நாயை திருமணம் செய்து கொண்டுள்ளார்.லண்டனை சேர்ந்தவர், அமண்டா ரோட்ஜர்ஸ், 47. இவர், 20 ஆண்டுகளுக்கு முன், ஒருவரை திருமணம் செய்தார். ஆனால், சில மாதங்களிலேயே, பல பிரச்னைகளால், இருவரும், பிரிந்தனர். அன்று முதல் தனிமையில் வாழ்ந்து வந்த அமண்டா, 'ஷீபா' என்ற, செல்ல நாயை வளர்த்து வருகிறார். குரோஷியா நாட்டின், ஸ்ப்லிட் நகரத்தில், 200 பேரின் முன்னிலையில், அமண்டாவுக்கும், மணப்பெண் உடையில் வந்த, ஷீபாவுக்கும் திருமணம் நடந்தது. இதுகுறித்து, அமண்டா கூறியதாவது:ஷீபாவிடம், நான் முட்டிப்போட்டு, காதலை தெரிவித்தேன்; வாலாட்டி, என் காதலை, அது ஏற்றுக் கொண்டது. நான் கவலையாக இருக்கும் போதெல்லாம், ஷீபா, என்னை சிரிக்க வைத்து, எனக்கு ஆறுதல் கூறும்; ஒர…

  20. இது ஒரு கசப்பான உண்மை.. பள்ளி இறுதித் தேர்வில் முதன்மையாக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுபவர்கள் பொறியாளர்களாகவோ,மருத்துவர்களாகவோ ஆகிறார்கள். இரண்டாம் நிலையில் மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்ச்சி அடைந்து ,M.B.A. படித்து மேலாளர்கள் பதவி பெற்று முதல் தரத்தில் தேறியவர்களுக்கு மேல் அதிகாரிகளாக வருகிறார்கள். மூன்றாம் நிலையில் தேர்ச்சி அடைபவர்கள் அரசியலில் நுழைந்து அமைச்சர்களாக ஆகி முதல் இரண்டு நிலைகளில் தேறியவர்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்கிறார்கள். படிப்பே ஏறாமல் தேர்வில் தோல்வி அடையும் சிலர் ரவுடிகள்,,தாதாக்கள் ஆகி மேலே உள்ள மூன்று தரப்பினரையும் நடுநடுங்க வைக்கின்றனர். பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதவர்கள் பெரிய சுவாமிகளாகவும்,குருக்களாக…

  21. 1. எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர். 2. இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம். 3. காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும். 4. குளிர் காலத்தில் குயில் கூவாது. 5. வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். 6. தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ. 7.லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர். அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 8. கரப்பான் பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில…

    • 0 replies
    • 1.8k views
  22. அனிமேஷன் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ 'அல்லா': தடை விதித்தது மலேசியா [saturday, 2014-03-08 10:41:18] ஜப்பானில் பிரபலமாக விளங்கும் அல்ட்ராமேன் என்ற அனிமேஷன் காமிக்ஸ் கதை 1960-களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மலேசியா உட்பட உலகளவில் பிரபலமான இந்த புத்தகத்தின் பல தொகுப்புகளும் மலேசிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும், புத்தகங்களாகவும் மக்களை அடைந்தன. இந்தப் பதிப்புகளில் ஒன்றான 'அல்ட்ராமேன், தி அல்ட்ரா பவர்' என்ற புத்தகத்தில் வரும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் பெயர் அல்லா என்று வருவதால் மலேசியாவில் அந்தப் பதிப்பைத் தடை செய்துள்ளதாக மலேசிய அரசு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். உள்நாட்டுத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகி…

  23. கென்யாவின் மாசை மாரா தேசியப் பூங்காவில் , ஒரு ஆற்றை, நீரில் அடித்துச் செல்லக்கூடிய அபாய நிலையிலும், வாயில் குட்டியைக் கவ்வியபடி கடக்கும் துணிச்சலான தாய்ச் சிங்கம் (புகைப்படமெடுத்தவர் கிரேக்க வனவிலங்குப் புகைப்பட நிபுணர் கைரியக்கோஸ் கஸிராஸ்) நதியின் அக்கரையில் இருக்கும் மற்ற சிங்கங்களுடன் சேர்ந்து கொள்ளும் ஆவலில், இந்த தாய்ச் சிங்கம், தனது குட்டியை வாயில் கவ்வியபடி, ஆற்றின் குறுக்கே நடக்கிறது. சிங்கங்கள்தான், பூனை விலங்கினத்தில், உண்மையில் கூடிவாழும் விலங்குகள். இந்த இனத்தில் பெண் சிங்கங்கள், உறவுகளுடன் சேர்ந்து ஆண் சிங்கங்களின் கண்காணிப்பில் வாழ்கின்றன. ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்களைக் கூட அடிக்கடி தங்களுக்குள் கடுமையான ,உயிராபத்தை விளைவிக்கும் மோதல்களில் ஈடுபடு…

  24. மரணித்த தனது மகனுக்கு தாய் ஒருவர் வீட்டில் வைத்து ஐந்து நாட்களாக உணவு ஊட்டிய மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நுகேகொட, கங்கொடவெல, பழைய கெஸ்பா வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. 60 வயதான தாயொருவர் தனது உயிரிழந்த 27 வயது மகனுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் உணவு ஊட்டியுள்ளார். இந்த தாயும் அவரது மகனும் குறித்த வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளனர். மகன் உயிரிழந்து கட்டிலின் மீது காணப்பட்ட நிலையில் நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை அறியாத மானநோயாளியான தாய் தொடர்ந்து ஐந்து நாட்கள் இவருக்கு உணவூட்டி இருக்கின்றார். அயலவர்கள் குறித்த வீட்டியிலிருந்து துர்வாடை வருவதை உணர்ந்து சென்று பார்த்த போதே அந்த நபர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. பிரதேசவாசிகள் அவ்வீட்டுக்க…

  25. கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியார் அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய கெயில் ட்ரெட்வெல் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார். FILE கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுவதை நான் நேரில் கண்டுள்ளேன். என்னை மடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார். அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர் வைத்துள்ளார். பின்னர் நான் மடத்தை விட்டு வெளியேறியபோது மடத்தின் நிர்வாகிகள் என்னை பின் தொடர்ந்தனர். ஆஸ்திரேலியாவில் எனக்கு சொந்தமாக 15 ஆயிரம் டாலர் செலவில் ஆசிரமம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.