செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு கனேடிய பிரதமரின் நிர்வாண புகைப்படங்கள் ! சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முயற்சியுடன் செயல்பட்டு வரும் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாண புகைப்படங்கள் தர ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடற் பிரச்சினைகள் மற்றும் விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிர்வாண புகைப்படத்திற்கு அவர் போஸ் தரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே இந்த நிர்வாண புகைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் அவரின் நிர்வாண புகைப்படங்கள் அ…
-
- 4 replies
- 416 views
-
-
குழந்தையின் தலையில் தாக்கிய நபரை பொலிஸார் தேடுகின்றனர் அழுத குழந்தையின் தலையில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் லூற்றனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 மாதக் குழந்தையொன்று தள்ளுவண்டியில் தனது தாயுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது அந்தக் குழந்தை அழுதுள்ளது. இந்நிலையில் அந்த பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் குழந்தையின் தலையில் தாக்கியுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபரின் சி.சி.ரி.வி படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:50 அளவில் லூற்றனின் 29வது இலக்க பஸ்சில் நடந்துள்ளது. பொலிஸ் கொன்ஸ்ரபிள் கரோலின் ஹோர் கூறுகையில்; எங்களது மாவட்டத்தில் இந்த வகையான நடத்தையை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பகல் நேரத்தில் ப…
-
- 0 replies
- 232 views
-
-
பீபீசீ சிங்களசேவையின் பொலன்நருவ நிருபர் தக்ஸிலா தில்ருக்ஸி என்பவருக்கு இன்று விநாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா அளித்த பேட்டியின் விபரம். கருனா: விடுதலைபுலிகள் வசம் இப்போது இரசாயன ஆயுதங்கள் நிறைய உள்ளன. இப்போது அவர்களுக்கு உள்ளது இரண்டுவழி தான் ஒண்று ரானுவத்தின்மீது இரசாயன ஆயுதங்களை பாவிப்பது அல்லது பொதுமக்களை கேடயமாகபாவித்து தப்பிசெல்வது. கேள்வி: பிரபாகரனைப்பற்றி உங்களபிப்பிராயம் என்ன? கருனா: ம்ம்ம்ம்ம்ம்ம் இது ஒரு நல்ல கேள்வி; பிரபாகரனை பற்றி கேட்கிறீர்கள், அவர் தன்னை ஒரு அரசனாக நினைத்துகொண்டு இருக்கிரார்.முன்னைய அரசர்களை போல் ஒரு தனி இராஜாங்கம் அமைக்க முயற்சிக்கிறார். தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் எவரையும் கொல்ல தயங்கமாட்டார்.அவர் ஒரு போதும் பொதுமக்கள் …
-
- 7 replies
- 5.2k views
-
-
4 புலிகள்- 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று! நியூயோர்க்கில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நியூயோர்க் விலங்கு சரணாலயம் ஒன்றில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் மற்றும் புலிகள் இயல்பாக இருப்பதாகவும், உணவு நன்றாக உண்பதாகவும் பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் மூலம் விலங்குகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com…
-
- 0 replies
- 256 views
-
-
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்று கல்லூரி மாணவி ஆர்த்தி நாக்கை அறுத்து காளிக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ரீவாவில் உள்ள காளி கோவிலில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. நாக்கை அறுத்துக் கொண்ட டி.ஆர்.எஸ். கல்லூரி மாணவி ஆர்த்தி, சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் கனவில் வேண்டியது அனைத்தும் கிடைக்க கடவுள் நாக்கை கேட்டதாக கூறிஉள்ளார். மாணவின் சகோதரர் சச்சின் பேசுகையில், ”கனவு குறித்து ஆர்த்தி என்னிடம் பேசினாள், கோவிலுக்கு சென்று நாக்கை காணிக்கை செலுத்த உள்ளதாகவும் கூறினார். இது எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் அவள் அதனை மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொண்டு…
-
- 7 replies
- 681 views
-
-
-
- 4 replies
- 580 views
-
-
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பதுண்டா ? நீதிபதிகள் முதல் போட்டியாளர்கள் வரை அனைவரும் கேரள மாநிலத்தை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அத்திபூத்தாற் போல் ஒரு சில தமிழர்களைத் தவிர.. ஒரு நாள் நிகழ்ச்சியில் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் நீதிபதியாக வந்திருந்தார். அப்போதுதான் அவருடைய தமிழின உணர்வு எனக்கு தெரிந்த்து. தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்காத பாடகர்களை தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று திருத்தியது மட்டுமில்லாமல் ”நீ தமிழச்சியா ? ஒரு தமிழச்சி தமிழை இப்படி உச்சரிக்கலாமா ?” ”தமிழச்சினா தமிழச்சிதான்” என்று பூரிப்பு அடைந்தது வரை நிகழச்சி முழுக்க தமிழ், தமிழச்சி என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். இது தாங்காத ஒரு கேரள மாநில போட்டியாளர் பெய…
-
- 16 replies
- 1.5k views
-
-
நால்வரை வைத்திசாலைக்கு அனுப்பிய குடை குடையொன்று மோதியதால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரி கொண்டுச் சென்ற குடை, தனது உடலின் மோதியதாக கோபமடைந்த அம்பியுலன்ஸ் சாரதி திட்டியதால், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மற்றும் அம்பியுலன்ஸ் சாரதி ஆகியோர் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/நால்வரை-வைத்திசாலைக்கு-அனுப்பிய-குடை/175-280605
-
- 2 replies
- 325 views
-
-
மின்னல் தாக்கிய நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு - (காணொளி இணைப்பு) இந்தோனேஷியா ஜகார்த்தாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வரும் 35 வயதான நபர் ஒருவர், மழை பெய்து கொண்டிருந்த போது கையில் குடையுடன் பயணித்த வேளை அவரை மின்னல் தாக்கியது. மழை பெய்து கொண்டிருந்த போது வெட்டவெளியான இடத்தில் கையில் குடையுடன் அவர் சென்றுள்ளார். இதன்போது, திடீரென அவரை மின்னல் தாக்கியதில் தீப்பொறிகள் வெளிவந்தன. இருப்பினும் அவர் அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை அவருடன் பணி புரிபவர்கள் விரைந்து சென்று முதலுதவி அளித்…
-
- 0 replies
- 242 views
-
-
2014 புது வருட பட்டாசு வான வேடிக்கை: துபை உலக சாதனை? இந்த புது வருடத்தை உற்சாகமாக வரவேற்று கொண்டாடுவதில், துபை கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது. துபை, பாம்(Palm Islands) தீவுகளின் மீதும், உலகத்(World Islands) தீவுகளின் மீதும் தொடர்ந்து கொளுத்தப்படபோகும் மிகப் பிரமாண்டமான பட்டாசு வான வேடிக்கைகள், சென்ற வருடம் குவைத் தனது ஐம்பதாவது வருடத்தை கொண்டாடிய வான வேடிக்கை திருவிழாவை விட அதிக நேரத்திற்கு அதாவது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக வானில் வெடிக்கப் போகிறது. குவைத் தனது வான வேடிக்கையில், 77,282 பட்டாசு வகைகளை ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மணி நான்கு நிமிடம் வரை தொடர்ச்சியாக வெடித்து ரசிகர்களை மகிழ்வித்து கின்னஸ் சாதனை நிகழ்த்திக் காட்டியது.…
-
- 3 replies
- 675 views
-
-
தெருவில் பெண் சிறுநீர் கழித்த பிரச்சனை, உரிமைப் போராட்டமாக வெடித்த சுவாரஸ்யம்! பகிர்க ஆம்ஸ்டர்டாம் நகரின் மையத்திலுள்ள ஒரு பாதையில் சிறுநீர் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதற்கு நெதர்லாந்து பெண்ணொருவருக்கு 90 யூரோ அபராதம் விதித்த வழக்கு பெண்களுக்கு போதிய கழிப்பிடம் இல்லாதது பற்றிய அனல் பறக்கும் விவாதத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நெதர்லாந்தின் தலைநகரில் 35 பொது கழிப்பிடங்கள் ஆண்களுக்கு உள்ளபோது, பெண்களுக்கு வெறும் மூன்றுதான் கட்டப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் மிகவும் ஆள்நடமாட்டமுள்ள லெய்டுசிபிளேனில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வெளிவந்திருந்த …
-
- 1 reply
- 2.1k views
-
-
விண்ணில் பரவிய இறுதி ஆசை! மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த விண்வெளி ஆய்வுத் துறை மாணவரின் சாம்பலை, அவரது தந்தை விண்ணில் பரவ விட்ட சம்பவம் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது. இங்கிலாந்தின் வில்ட்ஷயரைச் சேர்ந்தவர் ஜேமி ஒட்டாவே (22). விண்வெளி ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அது தொடர்பான நான்கு வருட கால தொழில்நுட்பப் பாடத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தார். எனினும், கல்லூரியின் கடைசி நாளன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி ஜேமி உயிரிழந்தார். விண்வெளிக்குப் போகவேண்டும் எனப் பெரிதும் விரும்பிய ஜேமியின் விருப்பத்தை எவ்வாறேனும் நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி, அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ என்ற…
-
- 0 replies
- 287 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம காலமானார் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த பிரபல புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம அவரது 80 ஆவது வயதில் காலமானார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் துப்பாக்கியால் தாக்குவதை சேன விதானகம படம்பிடித்திருந்தமை உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது சேன விதானகம டெய்லி நியூஸ் பத்திரிகையில் புகைப்பட ஊடகவியலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 352 views
-
-
செல்போன்கள் மக்களின் அன்றாடதேவையில் அத்தியாவசிய மாகிவிட்டது. அவற்றை தேவையில்லாமல் பலர் எப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றை தொடர்ந்து 4 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தினால் காதில் ஒருவித ரீங்காரஒலி மற்றும் இரைச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக செல்போனில் நாள் ஒன்றுக்கு 10 நிமிட நேரம் பேசலாம். அதை விடுத்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் “விர்” சென்ற சத்தத்துடன் கூடிய ஒலி ஏற்படும் அபாயமும் உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. http://www.maalaimalar.com/2010/07/21124734/cell-speech.html
-
- 0 replies
- 916 views
-
-
நடத்தையில் சந்தேகம்.. தூக்க மாத்திரை கொடுத்து மனைவிக்கு மொட்டையடித்த கொடூர கணவன். உத்தரப்பிரதேசத்தில் கணவனும் அவரது தம்பியும் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சித்ரவதைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த வன்கொடுமைகளும் சித்ரவதைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் டெல்லியில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார். அதேபோல் ராணுவ மேஜரின் மனைவி மற்றொரு ராணுவ அதிகாரியால் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கட்டிய மனைவிக்கு தூக்குமாத்திரை கொட…
-
- 0 replies
- 600 views
-
-
ஆண்மையை அதிகரிக்க பாம்பு வைன் குடிக்கும் வடகொரிய ஜனாதிபதி ஆண்மையை அதிகரிக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், பாம்பு வைன் குடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் (31 வயது) உடல் பருமனாக இருப்பதால் தனது மனைவியை திருப்திப் படுத்த முடியவில்லை என்றும் அவரால் தந்தையாக முடியவில்லை எனவும் அந்நாட்டு மக்கள் கிண்டலடித்து வருகின்றனர். எனவே அவர் தனது ஆண்மையையும், ஆயுளையும் அதிகரிக்க நாகபாம்பில் இருந்து தயாரிக்கப்படும் வைனை தினமும் அளவுக்கு அதிகமாக அருந்தி வருகிறார். இதற்காக அவருடைய மாளிகைக்கு பிரத்தியேக பாம்பு வைன் தயாரித்து வழங்கப்படுகின்றது. இவரது உடல் பருமானால் அவருடைய மனைவி ரிஜோல்சு தாய்மை அடைவதில் பிரச்சினை உள்ளதால், கிம் ஜாங் உன், நாகபாம்பு …
-
- 0 replies
- 608 views
-
-
குருநாகல் தோரையாய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இன்று பேராதனை போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளை (மூன்று ஆண் மற்றும் ஒரு பெண்) பெற்றெடுத்துள்ளார். பிறக்கும் போது 1.3 கிலோ மற்றும் 1.1 கிலோ எடையுடன் இருந்த குழந்தைகள், விசேட சிசு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் இந்த குழந்தைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், மிகவும் அர்ப்பணிப்புடனும் அன்புடனும் அவர்களைப் பார்த்துக்கொள்வதாகவும் இந்த குழந்தைகளின் தந்தை புத்திக ஹேரத் தெரிவித்துள்ளார். https://thina…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
7 வருடங்களாக, 14,000 பேரின் வீட்டில் வளர்ந்த நாயொன்றின் கதை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. டார்லிங்டன் என்பது இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரில் தெரு நாய்களை வளர்ப்பதற்கான அறக்கட்டளையொன்று காணப்படுகின்றது. இந்த அறக்கட்டளையில், ஜெட்ஸ் என்று அழைக்கப்படும் நாயொன்றும் வளர்க்கப்பட்டது. இவ்வறக்கட்டளையானது நாய்களை விற்பனை செய்தும் வந்தது. இந்நிலையில் ஒருநாள் ஜெட்ஸூம்; விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜெட்ஸை வாங்கிய நபர், ஒரு சிலநாட்களில் அதனை மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிட்டார். இவ்வாறு ஜெட்ஸை வாங்கிச் செல்பவர்கள், அவர்களது சூழ்நிலை மாற்றத்துக்கேற்ப, ஜெட்ஸை வளர்க்க முடியாது மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிடுகின்றனர். இந்நிலை…
-
- 0 replies
- 379 views
-
-
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவர…
-
- 3 replies
- 338 views
- 1 follower
-
-
பார்த்து பார்த்து வளர்த்த பெண் ஒருவனை காதலிக்கிறாள் என்றால் பெற்றோர்கள் சும்மா இருப்பார்களா பெண்ணை கவுரவ கொலை செய்து விடுகிறார்கள். இது நமது நாட்டில் பரவலாக நடக்கிறது. இதற்கு பிற நாடுகளும் விதி விலக்கல்ல குறிப்பாக சீனா. சீனாவின் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர் சாங் குய் என்ற கடந்த 2009 ஆம் ஆண்டு 24 வயது பெண் காதலித்து உள்ளார் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.ஒரு கட்டத்தில் மகள் தங்கள் சொல்லை கேட்காமல் எங்கும் ஓடி விடுவாளோ என் பயந்த பெற்றோர் சாங்கை விலங்குகளை அடைப்பது போல பாழடைந்த கட்டைடத்தின் கொட்டகை ஒன்றில் அடைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். ஏறத்தாழ 6 வருட காலமாக அப்பெண் வீட்டு சிறையில் இருந்து உள்ளார் இவ்விவகாரம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ள…
-
- 1 reply
- 401 views
-
-
தாயை பிரிந்த குட்டியானை தவிப்பு (படம்) ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டியானையை மூன்று முறை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டும் அந்த குட்டி மீண்டும் வெளியே வந்தது. தொடர்ந்து தாயிடம் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வரப்படுகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதி பர்கூர் வனத்தின் அருகே உள்ள ஜர்த்தல் என்ற கிராமத்தின் அருகே ஒரு குட்டி யானை நின்றுகொண்டிருந்தது. இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், ஈரோடு மாவட்ட வனஅதிகாரி ஜெகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். நின்று கொண்டிருந்த யானை குட்டிக்கு சுமார் ஆறு மாதங்கள் இருக்கும். அந்த குட்டி தாயைவிட்டு பி…
-
- 0 replies
- 801 views
-
-
அமெரிக்காவில் வசிக்கும் மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் ஒருவனின் பேஸ்புக் காதலில் சிக்கி யுவதியொருவர் சின்னாபின்னமாகியுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு லண்டனில் வசித்து வரும் யுவதியே வாலிபனால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த ஏமாற்றத்தால் யுவதி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். வாலிபனுடன் காதல் வசப்பட்டு, இணையத்தில் தனது உடலை காட்டியுள்ளார் யுவதி. இவற்றை வாலிபன் படம்பிடித்துள்ளான். பின்னர் வாலிபனை பற்றி அறிந்து கொண்ட யுவதி, அவனை விட்டு விலக முயன்றுள்ளார். எனினும், படங்களை வைத்து யுவதியை மிரட்டிய வாலிபன் அவரை தனது பிடியை விட்டு விலகவிடாமல் வைத்திருந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்த யுவதி தற்கொலை முயற்சி எடுத்துள்ளார் . இந்த வாலிபன் மட்டக்களப்பின் பிரபல அரசியல்வாதியும் , தொழில…
-
- 3 replies
- 553 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 11:13 AM யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
உலகின் சின்னஞ்சிறிய தேசிய இனங்கள்கூடத் தங்களது சுதந்திர நாளை, தேசிய நாளைக் கொண்டாடிவரும் இன்றைய நிலையில் 10 கோடி தமிழர்கள் நிலமற்றவர்களாக, உரிமையற்றவர்களாக ஏங்கித் தவிக்கின்றார்கள். வரலாறுகள் எங்களுக்கான ஆட்சி எல்லைகளையும், அதனை ஆட்சி செய்த மன்னர்களது பெருமைகளையும் பதிவு செய்துள்ளபோதும், தமிழர்களாகிய நாம் இன்னமும் அடிமை வாழ்வுக்குள் புதையுண்டு போய், வாழ்விழந்து கிடக்கின்றோம். புதிய வரலாறு எழுதப் புறப்பட்ட விடுதலைப் புலிகளது போர்க் களத்தைக் காப்பாற்றவும், ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பினை இன்றுவரை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவும் பிளவுண்டு போயுள்ளோம். எமக்கு நாமே பூட்டிக்கொண்ட அடிமை விலங்கை நாம் தகர்த்தெறிய முடியாதவர்களாகக் கட்டுண்டு போயுள்ளோம். முள்ளிவாய்க்காலின் பின…
-
- 3 replies
- 754 views
-
-
விமான நிலைய தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஒளிபரப்பு விமான நிலையமொன்றை சென்றடைந்த விமானப் பயணிகள் தமது பொதிகளைப் பெற்றுக்கொள்ள சென்றபோது, அங்குள்ள தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஒளிபரப்பாகியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போர்த்துகலில் இடம்பெற்றுள்ளது. போர்த்துகலின் தலைநகர் லிஸ்பனில் உள்ள விமான நிலையமொன்றில் கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. அதிகாலை 3.00 மணியளவில் பயணிகள் பொதிகளை எடுக்கச் சென்றபோது, ஆபாசப்படமொன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. சுமார் 7 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக லிஸ்பன் விமான நிலைய பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “அவ்வேளையில் மேற்படி தொலைக்காட்சி போர்த்துகல் அலைவரிசையொன்…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-