Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தெரு நாய்க்கு பணி அடையாள அட்டையுடன் கார் விற்பனையாளர் பணி பிரேஸிலில் எஸ்பிரிட்டோ சேண்டா மாநிலத்தில் உள்ள சொர்ரா எனும் பகுதியில் ‘ஹையுண்டாய் கார் காட்சியறை’ ஒன்று அமைந்துள்ளது. அந்த காட்சியறைக்கு அருகில் சுற்றித் திரிந்த தெருநாயோடு காட்சியறை ஊழியர்களுக்கு நெருங்கிய அன்பு உருவாகியுள்ளது. அவர்களின் செல்லப்பிராணியாக அவர்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் அந்த நாயை தங்கள் குடும்பத்தில் ஒன்றாக நினைத்து, அதை சேர்த்துக் கொண்டு கௌரவ ஊழியர் பணியையும் வழங்கியுள்ளனர். அது மட்டுமன்றி ‘டக்சன் பிரைம்’ எனப் பெயருள்ள அந்த நாய்க்கு பணி அடையாள அட்டையும் வழஙகியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  2. ஜெர்மனியில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்ற.. பஸ் ரயில்வே கேட்டை கடக்கும் பொழுது எதிர்பாரவிதமாக ரயில் வரும் பாதையிலையே நின்றது. ரயில் வருவதற்கு 1 நிமிடம் முன் அந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த பேருந்தில் பயணம் செய்த 60 குழந்தைகளையும் இறக்கிவிட்டு அவரும் உயுருடன் தப்பினார்

  3. மனைவி மற்றும் அவரது கைக்குழந்தையை கொன்று புதைப்பதற்காக வீட்டுக்குள் புதைக்குழியை வெட்டிய மில்லனிய பெல்லன்குடாவைச்சேர்ந்த பீ.ஜி ரவிந்திர பெரேரா(42) என்பவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரகம சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஜகத் கஹதகம உத்தரவிட்டுள்ளார். வேலையற்றிருக்கும் சந்தேகநபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட மனநலவைத்திய அதிகாரியான நீல் பெர்னண்டோவிடம் முன்னிலைப்படுத்தி வைத்திய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/108578-2014-04-29-07-07-53.html

  4. குழந்தையின் தலையுடன் வீதியில் வலம் வந்த பெண்ணால் பரபரப்பு மொஸ்கோவில் குழந்தையின் தலையுடன் வீதியில் சுற்றித்திரிந்த பெண்ணினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் உடம்பை மறைத்து நீளமான கறுப்பு நிற ஆடையுடன் மொஸ்கோவில் ஒரு வீதியில் நடந்து சென்றுள்ளார். குறித்த பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த மொஸ்கோ பொலிசார் அந்த பெண்ணை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், குறித்த பெண், திடீரென தனது பையில் கை விட்டு ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்காட்டி, ‘உடனே என்னை விட்டுவிட்டு ஓடுங்கள். நான் ஒரு தீவிரவாதி. என் உடலில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன்’ என மிரட்டியதால் பொலிஸார் பயந்து அவ்விடத்தை விட்டு விலகியு…

  5. 'நன்றி மாத்திரம் போதாது' ஜப்பான் நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஜப்பான் நாட்டு பெண்ணொருவரின் மார்பகங்களை தடவிய ஹொட்டல் பணியாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 26 வயதுடைய குறித்த பெண்ணால், காலி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, ஹொட்டல் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காலியிலுள்ள உல்லாச விடுதியொன்றின் குளியளறை வெளிப்புறத்தில் இருப்பதனால், அங்கு தங்கியிருந்த ஜப்பான் பெண், குளியளறைக்குச் சென்றுள்ளார். எனினும், தனது அறைக் கதவின் சாவியை, கதவின் உள்புறத்திலேயே வைத்துவிட்டு கதவை மூடியுள்ளார். குளித்து விட்டு வந்து பார்த்த போது, தனது கதவு மூடியிருப்பதைக் கண்டுள்ளார். கதவின் சா…

  6. வாழிடத்தை மறந்துவிடும்: குரங்குகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்ப வனத்துறை செய்த 'புதிய முயற்சி' Published : 25 Mar 2019 12:05 IST Updated : 25 Mar 2019 12:05 IST சத்யாசுந்தர் பாரிக் பவானிபாட்னா லாஞ்சிகார்க், பவானிபாட்னா நெடுஞ்சாலையில் அலையும் குரங்குகள் கூட்டம் காடுகளில் இருந்து குரங்குகள் இரைதேடி நகர்பகுதிக்குள் வருவதை தடுக்கும் வகையில், ஒடிசா வனத்துறையினர் புதிய முயுற்சிகளை எடுத்துள்ளனர்.இந்த முயற்சிகளால் குரங்குகள் நகர்பகுதிக்குள் வருவது படிப்படியாக குறையும் என்று வனத்துறையினர் நம்புகின்றனர். ஒடிசாவின் காலஹந்தி மாவட்டத்தில் பிஸ்வந்த்பூர், காலடிஹாட் மலைப்பகுதி உள்ளது. இங்குள்ள பவாந்திபாட்னா, லாஞ்சிகார்க…

  7. தெஹ்ரான் ஈரானின் வடக்கு மாகாணமான கிலனில் உள்ள தலேஷ் நகரில் தூங்கி கொண்டிருந்த அஷ்ரஃபி என்ற 13 வயது சிறுமியை தந்தை அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தார். மகளை கொலை செய்த பின்னர், தந்தை கையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்று தான் செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட 13 வயதான ரொமினா அஷ்ரஃபி காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொள்வதற்கு தனது தந்தையின் எதிர்ப்பைத் தொடர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அஷ்ரஃபி விரும்பியவர் 35 வயதுடையவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அஷ்ரஃபியை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர். வீட்டில் தனக்…

  8. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரேநேரத்தில் திருமணம் செய்துள்ளனர். வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், “இஸ்லாம் மதத்தில் திருமண வாழ்வு அடக்கத்தையும் எளிமையையும் எடுத்துரைக்கிறது. அதன்படி, நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமைய…

  9. itorial / 2025 மார்ச் 09 , பி.ப. 07:39 - 0 - 19 ஆபாசப் பட நடிகையின் ஆப்கானிஸ்தான் பயணம் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் தலிபான்கள் ஆளும் நாட்டில் ஆபாசப் பட நடிகை எடுத்துக் கொண்ட சில போட்டோக்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆபாசப் பட நடிகை விட்னி ரைட் இவர், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நடிகை ஆவார், தொடர்ச்சியாகச் சர்ச்சைகளை இவர், கிளப்பி வருகிறார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் எப்போதும் ஆகாது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. அப்படியிருக்கும் போது ஈரானுக்காகப் பேசி வருபவர் தான் இந்த விட்னி ரைட். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நட்டியை ஆவார். இதற்காக ஏ…

  10. அரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபன் தீபக் ஜங்ரா. மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் கையில் இருந்த ஸ்குருடிரைவர் தெரியாமல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரின் மீது பட்டது. இதனால், அவனுக்கு ஷாக் அடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அந்த கிராமத்திற்கே மின்சாரம் தடைபட்டு இருளானது. இந்த சம்பவத்தால் ஆச்சர்யமடைந்த ஜங்ரா இரண்டு வாரங்கள் கழித்து டிவிடி பிளேயரில் சிக்கிக்கொண்ட திரைப்பட சிடியை எடுப்பதற்காக திறந்த போது வெறும் கையால் அதன் ஒயர்களை தொட்டுள்ளான். ஏதும் ஆகாததால் திரும்பத்திரும்ப தொட்டுப்பார்த்த அவன் மின்…

  11. சர்வதேச விமான நிலையத்தில் நிர்வாணக் கோலத்தில் நடமாடிய நபர் கைது அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக பிரவேசித்து பயணச் சீட்டைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர். நஷ்வில்லே சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பயணச்சீட்டு பெறுவதற்காக காத்திருந்தவர்கள் வரிசையில் நிர்வாணக் கோலத்தில் காத்திருந்த அந்நபரைக் கண்ட ஏனைய பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பொது இடத்தில் ஒழுங்கீனமான நடந்து கொண்ட குற்றச்சாட்டில் அந்நபர் கைதுசெய்யப…

  12. வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு ரோபோ இருந்தால், பெண்களுக்கு அதைவிட சுதந்திரம் வேறு எதுவும் இல்லை. அப்படி ஒரு ரோபோவை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். துணிகளைக் கையால் அடித்துத் துவைத்து, காய வைத்து மடித்து வந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது, துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு எடுத்து உலர்த்துவது மட்டுமே வேலை. அதையும் செய்வதற்குப் போதிய நேரமின்றி இருக்கிறோம். இந்நிலையில், தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 'வில்லோ கேரேஜ் பி.ஆர்.2' என்ற ரோபோ, வீட்டில் உள்ள அழுக்குத் துணிகளை, தானே தேடிக் கண்டுபிடித்துத் துவைப்பதோடு மட்டுமின்றி, அதை உலர வைத்து இஸ்திரி போட்டு மடித்து நமக்குத் தேவையான இடத்தில் வைத்து விடுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு, முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட…

  13. பில் கேட்ஸ் செய்தது சரியா? தவறா? பில்கேட்ஸ் என்ற பெயரை தெரியாதவர் உலகில் மிகக்குறைவு எனலாம். தொழிநுட்ப உலகில் என்றுமே இவர் ஒரு ஜாம்பவான். இதுமட்டுமன்றி உலகப் பணக்காரர் வரிசையில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்தவர் கேட்ஸ். தொழிநுட்ப உலகை ஆளும் மைக்ரோசொப்டின் ஸ்தாபகரும், முன்னாள் நிறைவேற்று அதிகாரியான பில் கேட்ஸ் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார். தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன் -ஹேய்யை அண்மையில் சந்தித்த பில் கேட்ஸ் அவருடன் கை குலுக்கிய விதமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கியுனுடன் கைகுலுக்கும் போது பில் கேட்ஸ் தனது மற்றுமொரு கையை தனது காற்சட்டையின் பொக்கெற்றுக்குள் வைத்திருந்துள்ளார். இது தென்கொரிய ஜனாதிபதியை அவமதிப்பது போல் உள்…

    • 1 reply
    • 354 views
  14. உலக சாதனை படைத்த மாலைதீவு ஜனாதிபதி! மாலைதீவுகளின் ஜனாதிபதி முகமது முயிஸு( Mohamed Muizzu) 15 மணிநேரம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். இதனை அவரது அவரின் அலுவலகம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்சியாக 14 மணிநேரம் 54 நிமிடங்கள் இடம்பெற்றதாகவும், நடுநடுவே தொழுகைக்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவமானது ஓர் ஜனாதிபதி நிகழ்த்திய உலகச் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, 14 மணிநேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க…

  15. கொஞ்ச நேரம் நம் கனடிய பாராளுமன்றில் அப்படி என்ன தான் நடக்கிறது எனப் பார்த்தால் மெய் சிலிர்த்து விடுவீர்கள். அவ்வளவு நகைச்சுவையான விவாதங்கள் அவ்வப்போது நடைபெறும், சமீப காலமாகவே அமெரிக்காவின் தொலைக்காட்சி நிலையமொன்றில் ஆத்மா இல்லாமல் உலவும் உடல்கள் மனிதர்களைத் தாக்குவது போலவும் , இதனால் அமெரிக்க செய்தி ஒலிபரப்புத் துறையே சேதமடைந்தது போன்ற யூகங்களையும் வெளியிட்டது அமெரிக்க ஊடகங்கள் சில. இதனை மையமாக வைத்து அமெரிக்காவிலிருந்து ஆவிகள் கனடா வராமல் தடுக்க எல்லைப் பாதுகாப்பில் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பெயர்டிடம் என்.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் பட் மார்ட்டின் கேட்க அவை முழுவதும் சிரிப்பொலி தான். அதற்கு ஜான் பெயர்ட் என்ன பதில்…

  16. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள முன் எச்சரிக்கை வழிமுறைகள் போதுமானவை அல்ல என்று அமெரிக்க மருத்துவக் குழு இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மா.ச.சு.செட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தை சேர்ந்த இணை பேராசிரியர் லிடியா புரூய்பா இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் இருமல், தும்மல் தொடர்பாக பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறார். அந்த ஆய்வறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பழமையான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றன. அவை கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்காது. அந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தும்மும…

  17. கனடாவில் குழந்தை ஒன்று தனது தாயுடன் பிறந்த இரட்டையரை பார்த்து ஆச்சர்யமடையும் வீடியோ ஒன்றை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.லிதுவேனியாவில் பிறந்த பெலிக்ஸ் என்ற 10 மாத குழந்தையை, கனடாவில் உள்ள உறவினர்களை பார்க்க பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். மொன்றியலில் தனது தாயுடன் பிறந்த இரட்டையரை பெலிக்ஸ் கண்ட காட்சி அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தனது தாயை போன்ற மற்றொரு உருவத்தை கண்டு அவன் பிரம்மிக்கும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 39 லட்சம் பேர் பார்த்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/44081.html#sthash.HpO0r0SY.dpuf

    • 0 replies
    • 353 views
  18. நான் நாசா விண்கலம் லேண்டிங் ஓடுபாதை அருகில் இந்த படத்தை பார்த்தேன் . டிசைன் ஒரு patern தெரிகிறது. எந்த ஒரு இந்த புகைப்படத்தை எந்த விளக்கமும் உள்ளதா? உங்களுக்கு Google Earth சென்று தட்டச்சு செய்தால் இது இந்த இடத்தில் நீங்கள் பார்க்க முடியும் ஒருங்கிணைக்க கூறுகள் உள்ளன 37 25 ' 19.1 "E 122 05 ' 06 " டபிள்யு

    • 0 replies
    • 353 views
  19. பிரபஞ்சத்தில் வேறு கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்பதை ஆராய ரூ. 640 கோடியில் புதிய திட்டம் ஒன்றை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்கு ரஷ்ய தொழில் அதிபர் யூரி மில்னர் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர்.பிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்…

    • 0 replies
    • 353 views
  20. இணுவிலில் சிறுவன் மீது வாள் வெட்டு! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் (வயது 17) எனும் சிறுவனே படுகாயமடைந்துள்ளான். குறித்த சிறுவன் பாடசாலை கல்வியை இடை நிறுத்தி , இணுவில் பகுதியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறான். அந்நிலையில் சிறுவன் விற்பனை அகத்தில் இருந்து நேற்றைய தினம் (திங்கட்கிழமை) தனது துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி செல்லும் போது, தெல்லிப்பளை பகுதியில் இருந்து மூன்று மோட்டா…

  21. கொரோனா அச்சுறுத்தலால் உத்தர பிரதேசத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலமாக திருமணம் நடந்தது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று (மார்ச் 25) முதல் அமலானது. இதனால் அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக உ.பி., மாநிலம் ஹார்டாய் பகுதியில் ஒரு ஜோடி வினோதமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் மெஹபீன் வீட்டிற்கும், மணமகன் ஹமீத் வீட்டிற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வ…

    • 0 replies
    • 353 views
  22. சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண் Vhg ஜூலை 27, 2024 திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். பணமில்லாத ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது. தினமும் அன்னதானம் வழங்கும் ஷீலாம்மா என்ற பெயரில் இந்த பதிவை சிங்கள இளைஞன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மனிதாபிமான செயல் “பதவியில் இருந்து திருகோணமலை செல்லும் போது இக்பால் நகர் என்ற இடத்திலேயே இந்த மனிதாபிமானமிக்க பெண்ணை சந்தித்தேன். வீதிக்கு அருகிலுள்ள சிறிய குடிசை ஒன்றில், மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுவையில் வழங்கப்பட்ட உணவ…

    • 1 reply
    • 353 views
  23. மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சிரிப்புக்கான புதிய சட்டம் ஒன்றை ஜப்பானிய மாகாணம் ஒன்று கொண்டுவந்துள்ளது. ஜப்பானின் யமகடா (Yamagata) மாகாணம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது. இதன்படி, மக்கள் தினசரி சிரிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது. யமகடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு எப்படி உதவும் என்பதைக் காட்டுகிறது. விமர்சனம் ஜப்பானின் இந்தச் சிரிப்புச் சட்டம் தனிமனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதயப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலரால் மருத்துவக் காரணங்களால் சிர…

  24. அமெரிக்காவில் பள்ளிச்சிறுவன் ஒருவன் தனது ஆசிரியருக்கு விடைத்தாளில் விடுத்த வினோத கோரிக்கை, இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கெண்டக்கி மாநில பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவனின் விடைத்தாளை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் 94 மதிப்பெண்கள் எடுத்திருந்த அந்த மாணவன், தனக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் ஐந்தினை, அது மிகவும் தேவைப்படும் வேறு மாணவனுக்கு வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தான். இதனை பார்த்து வியப்படைந்த ஆசிரியர் சிறுவனின் பெருந்தன்மையை எண்ணி அவனது விடைத்தாளை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட, அது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் சிறுவனை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். https://www.poli…

    • 0 replies
    • 353 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.