செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
பாஷையூரைச் சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான சுறா மீன் ஒன்று யாழ்.குடாக்கடலில் அகப்பட்டுள்ளது. பாலசிங்கம் சதீஸ் என்பவரது வலையிலேயே இச் சுறா மீன் அகப்பட்டது. இவர்தலைமுனை கெந்தை கடற்பகுதியில் சிறகுவலை தொழில் செய்து வருபவர். நேற்றைய தினம் இவர் தனது தொழிலிடத்திற்குச் சென்று பார்த்த போது, இவரது வலையில் மிகப்பெரிய சுறாமீன் அகப்பட்டிருப்பதைக் கண்டு அதனைக் கரைக்கு கொண்டு வந்துள்ளார். இந்த சுறா மீன் சுமார் பத்து அடி நீளமுடையதென்றும் அது, ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த சுறாவின் வயிற்றினுள்ளிருந்து 4 குட்டிகளும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கரைக்கு…
-
- 0 replies
- 401 views
-
-
உ.பி. மாநிலத்தில் மாம்பழத்திற்குப் பெயர் போன மளிஹாபாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கலிமுல்லா கான். இவர் உருவாக்கியுள்ள புதிய வகை கொய்யாப் பழம், ஆப்பிளைப் போல இருக்கிறது பார்ப்பதற்கு. ஆனால் ஒரு சாதாரண கொய்யாப் பழத்தில் இருக்கும் சுவையை விட அதில் அதிக சுவை உள்ளது. படு தித்திப்பாக இருக்கிறதாம். இந்த கொய்யாப் பழத்திற்கு ஐஸ்வர்யாவின் பெயரைச் சூட்டியுள்ளார் கான். இதுகுறித்து அவர் கூறுகையில், மற்ற கொய்யாப் பழங்களை விட இது வித்தியாசமானது. பார்ப்பதற்கு சிறிதாக இருக்கும். வழக்கமான கொய்யாப் பழங்களை விட அதிக சுவையானது. இதன் விதைகள் மிகவும் மென்மையானவை. இந்த வித்தியாசமான கொய்யாப் பழத்தை உருவாக்க எனக்கு 8 ஆண்டுகள் பிடித்தது. இதை எந்தவகையான உரமோ அல்லது பூச்சிக் கொல்லியோ பயன…
-
- 17 replies
- 1.4k views
-
-
-
பெண்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் - புதிய ஆய்வு முடிவுகள் வெள்ளி, 31 டிசம்பர் 2010 16:26 காதலில் அதிகம் ஏமாற்றுவது பெண்களே என புதிய ஆய்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஐந்தில் ஒரு பெண்ணுக்கு தங்கள் துணையைத் தவிர வேறு ஆண்களிடம் ஈர்ப்பும் , காதலும் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக ஆராய்ச்சிக்காக காதல் வயப்பட்ட பெண்கள் 3000 பேரை சோதித்ததில் அவர்களின் பெரும்பான்மையானோர் ஏமாற்றுவதில் கில்லாடிகள் என்பது தெரிய வந்துள்ளது. 35 முதல் 40 வயது வரை உள்ள பெண்களே அதிகம் ஏமாற்றுபவர்களாக உள்ளனர் என்பதும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. இந்த வயதுள்ள பெண்களிலும் குழந்தை இல்லாத பெண்களே அதிகமாக ஏமாற்றுபவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆண்…
-
- 10 replies
- 1.6k views
-
-
94 வயதில் தகப்பனாகி உலக சாதனை படைத்த இந்தியர்! (காணொளி மற்றும் புதிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) உலகில் மிக கூடிய வயதில் தகப்பனாகி இருக்கும் சாதனையை 94 வயது உடைய இந்திய தொழிலாளி ஒருவர் நிலைநாட்டி உள்ளார். இவரின் பெயர் ராமஜித் ராகவ். வட இந்தியாவில் உள்ள ஹர்யானா மாநிலத்தில் வசிக்கின்றார். அங்கு விவசாயப் பண்ணை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கின்றார். இவரது மனைவி சகுந்தலா. இவருக்கு வயது 53 வரை இருக்கும். கடந்த மாதம் அரச வைத்தியசாலையில் சகுந்தலா ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்து உள்ளார். சாதாரண சுகப் பிரசவம்தான். குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. இக்குழந்தை கடவுளின் அருட்கொடை என்று பெற்றோர் கூறுகின்றனர். குழந்தைக்கு கரம்ஜித் என்று பெயர் சூட்டப்பட்டு …
-
- 0 replies
- 516 views
-
-
புத்தாண்டின் பிறப்பு! தமிழ்ப் புத்தாண்டு போலவே ஆங்கிலப் புத்தாண்டுக்கும் ஆரம்பத்தில் குழப்பம் இருந்தது. சித்திரை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்த தமிழர்களுக்கு, தை 1ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுவதில் உள்ள குழப்பமான மனநிலை அன்றைய மேற்கத்தைய மக்களுக்கும் இருந்தது. முட்டாள்கள் தினம் என்று நாம் ஏகபோகமாகக் கொண்டாடிவரும் ஏப்ரல் 1ஆம் தேதிதான் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் துவக்கம். 16ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை கொண்டாட்டமாக இருக்கும். இதில் எட்டாம் நாளான ஏப்ரல் 1ஆம் தேதி வருடப் பிறப்பாகக் கருதப்பட்டு, புத்தாண்டுக் கொண்டாடப்பட்டது. அதுவரை உலகின் நடைமுறையில் இ…
-
- 0 replies
- 529 views
-
-
பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes India) இந்தியா இதழின் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற பத்திரிகை ஃபோர்ப்ஸ். வர்த்தக உலகின் பைபிள் என்று புகழப்படுவது. இந்த பத்திரிகையின் இந்தியப் பதிப்பின் 2010 -ம் ஆண்டு சிறப்பிதழில் இந்தியாவின் சிறந்த மனிதர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, பீகாரின் சாதனை முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 3 இடியட்ஸ் தந்த ராஜ்குமார் ஹிராணி என 2010-ம் ஆண்டில் பல துறைகளில் சாதனைப் படைத்தவர்களின் பெயர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில், எந்திரன் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த சூப்பர் ஸ்டா…
-
- 0 replies
- 684 views
-
-
-
சென்னைக் கொடுங்கையூரைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் இரவு நேரங்களில் கொள்ளைத் தொழில் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பாண்டியன், ரமேஷ், பாலாஜி ஆகிய 3 பேரும் நண்பர்கள். மூவரும் மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தனர். இவர்கள் பகலில் கல்லூரிப் படிப்பில் ஈடுபட்டாலும் இரவானால் தங்கள் ஆடம்பரச் செலவுகளைச் சந்திக்க திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. கொடுங்கையூர், சேலையூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளை நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இப்பகுதிகளில் அடிக்கடி கொள்ளை பற்றிய புகார்கள் அதிகரித்து வந்ததால் கா…
-
- 1 reply
- 564 views
-
-
கால்நடை அபிவிருத்தி அமைச்சு மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தூதரங்கள் மூலம், ஒட்டகங்களின் விலைகளை விசாரித்து வருவதாக பிரதியமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்துள்ளார். ஒட்டகப்பாலையும் தீக்கோழி முட்டையையும் பெறுவதற்காக இங்கு ஒட்டகம் மற்றும் தீக்கோழிப் பண்ணைகளை அமைக்கப்போவதாக கால்நடைகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் எச்.ஆர். மித்ரபால கடந்த வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் ஒட்டகங்களின் விலைகளை விசாரித்து வருவதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் நானே தொடர்புகொண்டேன். ஒட்டங்களின் விலைகள் மிக அதிகம். எனினும் விபரமான அறிக்கையை விரைவில் நாம் பெறுவோம் என அவர் தெரிவித்…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவில் ஏ.டி.எம். மூலம் தங்க கட்டிகள் விற்பனை துவங்கியுள்ளது. தற்போது ஏ.டி.எம். மூலம் ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு வருகிறது. அதே முறையில் தங்க கட்டிகளும் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அபுதாபியில் உள்ள எமிரேட் ஓட்டலில் தங்கம் விற்பனை செய்யும் ஏ.எடி.எம். மிசினை நிறுவியது. கடந்த மே மாதம் நிறுவப்பட்ட இந்த மிசின் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலியிலும் இது தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள போகா ராடன் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஏ.டி.எம். இயந்…
-
- 4 replies
- 624 views
-
-
இந்த வருடத்தின் 2010 "சொல்" - "Austerity" Word of the Year: 'austerity' அதிகளவு விளக்கம் தேடப்பட்ட சொல்லு என்ற ரீதியில் இந்த சொல்லு தெரிவாகியுள்ளது. பொருளாதாரம் சரிந்து வரும் பல நாடுகளில்,(குறிப்பாக கிராக்க தேசமும், அயர்லாந்தும்) அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது விதிக்கப்படும் கட்டளைகளில் ஒன்று அரச செலவீனத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது. இதன் அர்த்தம் கொண்டதே இந்த சொல். கடந்த வருட சொல்லாக இருந்தது " ட்வீடர்" - Tweeter மூலம் : http://www.timeslive.co.za/world/article823255.ece/Word-of-the-Year--austerity
-
- 1 reply
- 570 views
-
-
The tree holds a total of 181 diamonds, pearls, emeralds, sapphires and other precious stones. http://www.timeslive.co.za/world/article822308.ece/Hotel-decks-halls-with-boughs-of-jewels http://www.youtube.com/watch?v=wMGz629bcpU
-
- 2 replies
- 1.1k views
-
-
மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய்: இங்கிலாந்தில் சம்பவம் வீரகேசரி இணையம் 12/20/2010 2:06:47 PM தாய் ஒருவர் மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜெரோம் நெக்னே. அவரது மனைவி ஷாய்னா பரூச்சி (35) சோமாலியாவை சேர்ந்த இவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் 4 வயது மகளை திடீரென காணவில்லை. இதற்கிடையே அவரது வீட்டு சமையலறையில் இருந்து ரத்தத் தோய்ந்த மிக நீள மான கத்தியை அவரது ஏனைய குழந்தைகள் கண்டெடுத்தனர். இது குறித்து தாயார் பரூச்சியிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது 4 வயது மகளை கொலை செய்தது தெரியவந்தது. மே…
-
- 0 replies
- 451 views
-
-
ராசிபுரம் அருகே பேய் நடமாடுவதாக “திடீர்” பீதி செல்போனில் பேய் படம் தெரிவதால் பரபரப்பு Namakkal திங்கட்கிழமை, டிசம்பர் 20, 11:04 AM IST ராசிபுரத்தைச் சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் ஒருவர் ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் வேலை பார்த்து வருகிறார். ராசிபுரத்தில் வசித்து வந்த கொல்லிமலை தவராஜா யோகி பண்டிட் சோமானந்த மகிரிஷி கடந்த 10-12-2003ல் இறந்ததை அடுத்து அவரது உடல் கட்டனாச்சம்பட்டி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சோமானந்த மகிரிஷியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி கட்டப்பட்டுள்ளது. அந்த சமாதியின் அருகே இரட்டை மின்சார கம்பம் உள்ளது. இதற்கிடையில் சமாதியை சுற்றிலும் சிலர் சுத்தம் செய்துள்ளனர். கடந்த 3 நாளைக்கு முன்பு யாரோ அ…
-
- 1 reply
- 1.4k views
-
-
உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்டுள்ள பேஸ்புக் இணையதளத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 103 வயதான பெண்ஒருவர் இணைந்துள்ளார். லண்டனில் வசிக்கும் லில்லியன் லோவி என்ற பெண்மணி தன்னுடைய 7 பேரக்குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உதவியுடன் பேஸ்புக்கில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது இதனை பெரிதும் விரும்புகிறேன். மேலும் ஒவ்வொரு பாட்டி தாத்தாக்களும் இதனை பயன்படுத்துவதன் மூலம் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க முடியும் என்று கூறியதாக தி சன்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=148361
-
- 4 replies
- 1.4k views
-
-
பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், இந்தியாவினுடைய அடுத்த பிரதமராக யார் வருவார் என்பதுதான். இந்த விஷயத்தில் பொதுவாக பேசக்கூடியது, சிதம்பரம்தான் அடுத்த பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். உள்ளபடியே அவருக்கு இதுபோன்ற வாய்ப்பு இருக்கிறதா? ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: சிதம்பரம் தனுசு ராசிக்காரர். தனுசுவிற்கு தற்போது எதுவும் சாதகமான சூழல் கிடையாது. ஆனால் 09.05.2011க்குப் பிறகு தனுசுவிற்கு சாதகமான காலகட்டம் தொடங்குகிறது. கிட்டத்தட்ட மார்ச் மாதம் முதற்கொண்டே இந்த சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். மே 9 குரு மாற்றம் தனுசு ராசிக்கு ஒரு பெரிய பலம். பெரிய பதவிகள், மிகப்பெரிய முன்னேற்றங்கள் போன்றவற்றை கொடுக்க…
-
- 0 replies
- 401 views
-
-
(உத்தரப்பிரதேசம்), டிச.15: வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளை இனியும் நம்பி மோசம் போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாவர் ஷா கிராம மக்கள். தங்களுக்குப் பணியாற்ற பிச்சைக்காரர் ஒருவரை கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்த்தியுள்ளனர். இந்த கிராமத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 70 வயது பிச்சைக்காரரும் ஒருவர். நாராயண் நாத் என்ற இவரையே கிராமத் தலைவராக அப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார் நாராயண் நாத். இவருக்கு நான்கு மகன்கள், 14 பேரக் குழந்…
-
- 15 replies
- 1.3k views
-
-
மூன்று தலை பாம்பொண்றை கூகிலுக்குள்ள கண்டேன் பிடிக்கிறதுக்குள்ள ஓடிப்போய்ட்டு யாராவது கண்டால் பிடிச்சிதாங்கப்பா.
-
- 14 replies
- 6.3k views
-
-
திருடனுக்கு வாழைப்பழ சிகிச்சை (திருவனந்தபுரம்) கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருச்சூருக்கு 2 நாளுக்கு முன் பஸ் ஒன்று சென்றது. தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் செயினை மர்ம ஆசாமி பறித்தான். மற்றொரு பயணி பார்த்து கூச்சலிட்டார். அப்போது, கையில் வைத்திருந்த செயினை ஆசாமி விழுங்கிவிட்டான். பொதுமக்கள் திருடனையும் அவனது கூட்டாளியையும் பிடித்து ஆலப்புழா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவனுக்கு மருத்துவமனையில் இனிமா கொடுத்தனர். பல மணி நேரம் காத்திருந்தும பலன் கிடைக்கவில்லை. மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து நிறைய வாழைப்பழங்களை சாப்பிட செய்தனர். அப்போதும் பலன் கிடைக்கவில்லை. http://www.dinakaran.com/indiadetail.aspx?id=23634&id1=1
-
- 7 replies
- 818 views
-
-
அமெரிக்காவில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அங்கு தனது ஆசிரமத்தை பெரிய அளவில் விஸ்தரிக்க திட்டமிட்டிருந்தார் நித்தியான்நதா என்ற தகவல் தெரிய வந்துள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்து சிக்கிய நித்தியானந்தா மீதான வழக்கு மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் செய்த லீலைகள் குறித்த தகவல்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அவர் மீது பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் பாலியல் வல்லுறவுப் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில் லாஸ் ஏஞ்சலெஸ் அருகே ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கி அங்கு பிரமாண்ட ஆசிரமம் அமைக்க நித்தியானந்தா முயற்சித்தது தெரிய வந்துள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் அமெரிக்காவில் 100 ஏக்கர்…
-
- 2 replies
- 439 views
-
-
பிரிட்டன் இளைஞர்கள் பாதிப் பேருக்கு செக்ஸ் - பாலியல் வல்லுறவு இரண்டுக்குமான வேறுபாடு தெரியவில்லையாம் பெண் விரும்பாத போது உறவு வைத்துக் கொள்வதும் பாலியல் வல்லுறவு தான் என்பதை பிரிட்டன் இளைஞர்கள் 48 விழுக்காட்டினருக்கு தெரியவில்லை என அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பாலியல் வல்லுறவு குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இளைஞர்களிடம் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு குறித்த விழிப்புணர்வு தொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் யூடியூப் இணையத்தில் வெளியானது அதன் பின்னரே பிரிட்டன் முழுவதும் இது குறித்த விழிப்புணர்வு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 18 முதல் 25 வயது வரையுள்ள பல ஆண்களிடம் இது குறித்து க…
-
- 1 reply
- 920 views
-
-
பேரூந்துகளில் பயணம் செய்கின்றபோது உள்ளாடைகளை அணிந்து இராத ஆண் பயணிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நீதிமன்ற உத்தரவின் பேரில் 1500 ரூபாய் வரை தண்டம் செலுத்துகின்றனர். இந்நடைமுறை மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக மிகவும் தீவிரமாக உள்ளது. பாலியல் குற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றமைக்காக இவ்வதிரடி நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆயினும் கடல் தொழிலாளர்களை இந்நடைமுறை பெரிதும் பாதித்து உள்ளது. ஏனெனில் உள்ளாடைகளை அணிந்துகொண்டு கடல் தொழிலில் ஈடுபடுகின்றமை மிகவும் சிரமம் ஆனது ஆகும். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15056:2010-12-03-06-53-34&catid=54:2009-12-16-09-39-33…
-
- 18 replies
- 2.1k views
-
-
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பேராசிரியர் முரளிமோகன். இவரது மனைவி வசுமதி. முரளிமோகன் தற்போது எத்தியோப்பியாவில் உள்ள லிஜிம்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி பிறந்தநாளுக்கு சந்திரனில் உள்ள நிலத்தை வாங்கி பரிசாக தர முடிவு செய்தார். இதன்படி அவர் சந்திரனில் உள்ள நிலத்தை விற்க உரிமை பெற்றுள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லூனார் பப்ளிக் சொசைட்டிக்கு சென்றார். அங்குள்ள அதிகாரிகளிடம் 70 டாலர்கள் கொடுத்து தன் மனைவி வசுமதி பெயரில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினார். பின்னர் அந்த நில பத்திரத்தை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். இதுபற்றி அவர் கூறும்போது, என் மனைவிக்கு விலை மதிக்க முடியாத சொத்தை பரிசாக வழங்கி உள்ளேன். …
-
- 5 replies
- 571 views
-
-
. ஆணுறை அணியாத காரணத்தால்தான் விக்கிலீக்ஸ் அதிபர் பாலியல் வல்லுறவு வழக்கில் கைதாம்! லண்டன்: விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸ்ஸஞ்சே பாலியல் வல்லுறவு வழக்கில் கைதாகியுள்ளது குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இரு பெண்களுடன் மனமொத்த உறவில் ஈடுபட்டிருந்தபோதிலும், அவர் ஆணுறை அணியாமல் உறவு கொண்டதால்தான் பாலியல் வல்லுறவு வழக்கை சுமத்தி அவரை உள்ளே தள்ளியுள்ளனர். அஸ்ஸஞ்சே மீது ஸ்வீடன் நாட்டில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இரண்டு பாலியல் பலாத்காரம், ஒரு சட்டவிரோத உறவு, ஒரு பாலியல் வல்லுறவு வழக்கு அவை. இந்த வழக்குகளில் அஸ்ஸஞ்சேவுக்கு கைது வாரண்ட்டும் ஸ்வீடனில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் சென்ற அஸ்ஸஞ்சே போலீ…
-
- 7 replies
- 2.3k views
-