Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அரச அரண்மனைகளில்... நூற்றுக்கணக்கான, குற்றங்கள் பதிவு! கடந்த மூன்று ஆண்டுகளில் அரச அரண்மனைகளில், ஆயுதங்கள், போதைப்பொருள், வன்முறை மற்றும் கொள்ளை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2019ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பக்கிங்ஹாம் அரண்மனை, கென்சிங்டன் அரண்மனை, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸ் ஆகிய இடங்களில் மொத்தம் 470 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. தீ வைப்பு மற்றும் குற்றச் சேதம், கொள்ளை, ஆயுதங்களை வைத்திருந்தல் மற்றும் குற்றங்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றின் அறிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான திருட்டுகளும் அவற்றில் அடங்கும். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிடப…

  2. அரச வைத்தியசாலையிலுள்ள அறிவித்தல் பலகையில் தவறான தமிழ் சொற்பிரயோகம்: அசௌகரியத்திற்குள்ளாகும் நோயாளர்கள்..! பதுளை பிரதான அரசினர் மருத்துவமனையில் நோயாளர்கள் கவனத்திற் கெடுத்துக்கொள்ளப்படும் வகையிலான பல்வேறு அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவ்வறிவுறுத்தல்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் குறிப்பதினால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர். இவ்விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தின் பிரதிகள், ஊவாமாகாண ஆளுனர் ஏ.கே.எம். முசாம்மில்,? ஊவா மாகாண சுகாதாரப் பணிப்பாளர…

  3. பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், அரசாங்க ரகசியங்கள் அடங்கிய ரெட் பொக்ஸ் எனப்படும், சிகப்பு பெட்டியை, ரயிலில் தவறவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். உலகின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், கடந்த ஆண்டு, தன் எட்டு வயது மகளுடன், பப்புக்கு சென்றார். அங்கு நடந்த, விருந்துக்குப் பின், தன் மகளை, அங்கேயே விட்டு விட்டு வீடு திரும்பினார். இவரின் மறதியால், பப்பில் தவித்த மகளை, கேமரூனின் மனைவி, சமந்தா, அங்கு சென்று, வீட்டிற்கு அழைத்து வந்தார். சொந்த மகளை மறந்து விட்டு சென்ற, கேமரூன் அந்நாட்டு பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றார். இந்நிலையில், பிரிட்டனின் அரசாங்க ரகசியங்கள் அடங்கிய, ரெட் பொக்சை ரயிலில் விட்டுச் சென்று மீண்டும் சர்ச்சையில் ச…

  4. அரசியலுக்கு வருகிறாரா கோத்தா? நான் அரசியலுக்கு வந்தால், இரண்டாவதாக (பிரதமர்) என்ன, முதலாவதாயே (ஜனாதிபதி) வர முடியும் என்றார் கோத்தா. சுதந்திர கட்சியின், கருணா அம்மான் வகித்த, உபதலைவர் பதவிக்கு, நாட்டைக் காத்த, கோத்தா ஏன் வரக் கூடாது என சில சு.க காரர்கள், தேரை இழுத்து தெருவில விட்டதோட வெடி கொளுத்திப் போட்டுள்ளனர். அக மகிழ்ந்து போன கோத்தா, தேசப்பற்று வசனங்களுடன் மேலே சொன்னதையும் உதிர்த்தார். அதே வேளை, இவர் எல்லாம், சு.கட்சிக்குள் வந்தால், தாம் வெளியேறுவேன் என்று சொன்னார் சந்திரிக்கா. தம்பியின் பதவி ஆசை பற்றி, அண்ணர் மகிந்த இன்னும் ஒண்டும் சொல்லேல்லை. முலம்: டெயிலி மிரர் (மோபைலில, லிங் பிடிச்சப் போடேலாம இருக்குது, கண்டியளோ)

  5. அரசியலை விட்டு ஓடிப் போக மாட்டேன்! அரசியலை மாற்றும் மந்திரம் என்னிடம் இருக்கிறது!- கருணா [ புதன்கிழமை, 22 யூலை 2015, 12:00.04 AM GMT ] சுசில் பிரேமஜயந்தவும், அனுர பிரியதர்ஷன யாப்பாவும் தேசியப் பட்டியலில் இடம் தருவதாக கூறி இறுதியில் என் காலை வாரினாலும் நான் அரசியலை விட்டு ஓடிப்போகப் போவதில்லை. இலங்கை அரசியலை மாற்றும் மந்திரம் என்னிடம் மட்டும்தான் இருக்கிறது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) நேற்று தெரிவித்தார். பிரபாகரன் உயிரோடு இருக்கும் போதே அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தை திறந்தேன். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கவச வாகன பாதுகாப்பில் அழைத்துச் சென்று கட்சி அலுவலகத்தை திறந்த…

    • 5 replies
    • 276 views
  6. பொருளாதார வெற்றிகள் மட்டும் ஒரு நாட்டின் முழுமையான அபிவிருத்திக்கு போதுமானதல்ல என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல் 66,000க்கும் மேற்பட்டோர் இதுவரையில் தங்களது தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் தமிழ் அரசுக் கட்சி ஆகியவை, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை கோரியதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு அரியாலை - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் தொடர்ந்த அகழ்வுப் பணியில் மேலும் 6 எலும்புக்கூடு எச்சங்கள் அடையாளம்

  7. அரசியல்வாதி வந்த உடன் அரசு அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும் என்று சட்டமேதும் உள்ளதா?

    • 0 replies
    • 269 views
  8. அரசியல்வாதிகளை பிரமிக்க வைத்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ! கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தனது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய விதம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அமைச்சரின் மகள் மற்றும் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நேற்று இடம்பெற்றது. சமகால அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பொறுப்பினை வகிக்கும் அகில விராஜ் காரியவசம், ஆடம்பரமின்றி மிகவும் எளிமையான முறையில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். தனது மகன் மற்றும் மகளின் பிறந்த நாளுக்காக வித்தியாசமான முறை ஒன்றினை அமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார். இலங்கையிலுள்ள சிறுவர் காப்பகங்கள் சிலவற்றிற்கு சென்று சிறுவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங…

  9. சிறிலங்கா அரசு கூறும் புலிகளின் உயிரிழப்புத் தொகை குடாநாட்டு மக்கள் தொகையின் 2 மடங்கு: "சண்டே ரைம்ஸ்" கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கங்களினால் கூறப்பட்டு வரும் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மொத்த மக்களும் இரு தடவைகளுக்கு மேல் உயிரிழந்திருக்க வேண்டும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: போரில் "உண்மை தான்" முதலில் மரணத்தை தழுவுவது உண்டு. கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்ப…

  10. ரிதிகம பிரதேச செயலகப் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட அரிசியை பனகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துச் சென்று கோழிகளுக்கு உணவளித்துள்ளார். மேற்படி அரிசியை சாப்பிட்ட 7 கோழிகள் உயிரிழந்ததாக உரிமையாளர் சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கோழிகளின் இறப்பு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இறப்புக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை, எனவே உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், பரிசோதனை அறிக்கையை பெறவும் உத்தரவு பெறப்பட்டதாக பொது சுகாதார மருத்துவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/301509

  11. மகிந்த பிரதர்ஸ் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில்... செய்த வேலை, கையிருப்பில் இருந்த தங்கத்தின் 90% த்தை மிகக்குறைந்த விலைக்கு விற்றுத்தள்ளியதுதான். இருப்பில் இருந்த, 19 ஆயிரம் கிலோ தங்கத்தில்... 18 ஆயிரம் கிலோவினை... அவுன்ஸ்க்கு, 1600 அமெரிக்க டொலர் என்ற மிகக்குறைந்த விலையில் விற்றுத் தள்ளியிருக்கிறது. அரசாங்கத்தால்... விற்கப்பட்ட அதே தங்கம் இன்று செட்டியார் தெருவில்... இரு மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. செட்டியார் தெருவில் இருக்கும், பிரதான மொத்த வியாபார கடைகள் யாருடையது என விசாரித்தால் இன்னும் ஆச்சர்யம் காத்திருக்கும்... இந்த அரசாங்கம் எல்லாப் பக்கத்திலும் குழிதோண்டி வைத்துவிட்டது இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. …

  12. இப்பொழுதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இராணுவத்துடன் ஒட்டுக்குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கும் புளொட் இயக்கத்தை நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்து கொள்ள மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுகிறார், தமது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து விட்டதாக கூறிவருகிறார். ஆனால் மட்டக்களப்பில் புளொட் இயக்கத்தினர் அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுவாக இயங்கி வருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக கொண்டுவரப்ப…

    • 0 replies
    • 556 views
  13. வெளிநாடுகளுக்கு மருத்துவத் தொழில்களாக அனுப்புவதற்கும் தேவையான மருத்துவர்களை உருவாக்க அரசாங்கம் திட்டம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவது தொடர்பில், அனுர அரசும் முந்தைய அரசுகளையும் போலவே பின்வாங்கி வருகின்றது என்று குற்றச்சாட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்ட சமீபத்திய பதிவு தொடர்பாக பரவலான விவாதம் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் நிலை உருவானால், மீட்டெடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்த்தன கருத்து

  14. அரண்மனை வடிவில் விமானம்… சவுதி அரேபியா இளவரசர் விலைக்கு வாங்கினார். ரியாத்: சவுதி அரேபியா இளவரசர் அதிநவீன ஏ380 சூப்பர் ஜம்போ விமானத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த விமானம் அரண்மனை போன்று சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சவுதி அரேபியா நாட்டின் கோடிஸ்வரரும் இளவரசருமான அல்வாலீத் பின் தலால் கடந்த 2009-ம் ஆண்டு புதிய விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை 2770 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரண்மனை வடிவில் மாற்றியமைத்து வருகின்றனர். பறக்கும் அரண்மனை வடிவிலான இந்த விமானத்தில் 4 படுக்கைகள், மிகப் பெரிய அளவிலான படுக்கைகள் கொண்ட 5 அதி நவீன அறைகள், பிரார்த்தனை அறை, கம்ப்யூட்டர் வசதிகளுடன் கூடிய மீட்டிங் ஹால், ரோல்ஸ் ராய்ல் கார் நிறுத்தும் சொகுசு அறை உள்ளிட்டவை உள்…

  15. அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் மயிரிழையில் உயிர் தப்பிய ஷாருக்கான்: வீடியோ இணைப்பு அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் ஷாருக்கான மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஷாருக்கான் தனது தோழி மற்றும் பாதுகாவல்கள் இருவருடன் அரபு நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட போது, ஷாருக்கானின் கார் அங்கிருந்த புதைக்குழி ஒன்றில் சிக்குகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாருக்கான் மற்றும் அந்த காரில் இருந்த அனைவரும் உடனடியாக காரின் மேற்புறமாக வெளியேறி தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறாக முயற்சி செய்யும் பாதுகாவலர்கள் இருவர…

  16. உலகமொழிகளில், தமிழ் இலக்கிய படைப்புகளை கொண்டு வரும் வகையில், தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக, சீன, அரேபிய மொழிகளில் திருக்குறள், மொழி பெயர்க்கப்பட்டு, வெளியிடும் வகையில் தயார் நிலையில் உள்ளது. தமிழ் மொழி, தமிழ் இலக்கிய சிறப்பை, உலக நாடுகளுக்கு உணர்த்த, தமிழின் மிகச்சிறந்த நூல்களை, பல்வேறு மொழிகளில், மொழிபெயர்க்கும் பணிகளில், தமிழ் வளர்ச்சித்துறை ஈடுபட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகள், மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. திருக்குறளின் ஒட்டுமொத்த குறள்களும், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் தேர்ந்தெடுத்தப் படைப்புகளும், மொழிபெயர்க்கப்படுகின்றன. பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் …

  17. Started by ampanai,

    முதன் முதலாக கிழக்கு ஆசியப் பகுதிகளில்தான் காகங்கள் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. அங்கிருந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு காகங்கள் குடியேறின. சுமார் 40 வகையான காகங்கள் இருக்கின்றன. பொதுவாக அவை மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 17 நாட்களில் குஞ்சு பொரிக்கும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 20 வருடங்கள். அமெரிக்கக் காடுகளில் வாழும் ஒரு சில இனங்கள் 30 வருடங்கள் வரை வாழ்கின்றன. அத்துடன் அவை 50 சென்டி மீட்டர் வரை வளர்கின்றன. அவற்றில் சிறியது, ‘ஃபிஷ் க்ரோ’ என்ற இனம். அண்டங்காக்கையைப் போல முழுக் கறுப்பாக இருக்கும். தண்ணீரில் உள்ள முட்டைகள், சிறிய பூச்சிகள், புழுக்கள்தான் அதற்குப் பிடித்த உணவு. பொதுவாக காகம் என்றாலே கறுப்பாகத்தான்…

  18. அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் ஒருவர் கைது SayanolipavanFebruary 13, 2022 புத்தளம் பாலாவி 2ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கெபெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அரிய வகை வெள்ளை நிற கழுகு (WHITE BELLIED SEA EAGLE ) HALIEETUS LEUCOGWTER இனத்தைச் சார்ந்தது என பொலிஸார் தெரிவித்தனர் குறித்த அரிய வகைக் வெள்ளை நிற கழுகு விற்பனை செய்வதற்காக வளர்க்கப்பட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கழுகும் புத்தளம் …

  19. அரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு! அமெரிக்காவின் கென்டக்கியில் அரியவகை இரட்டைத்தலைப் பாம்பு மக்களின் பார்வைக்கு வைக்கப்படுள்ளது. இந்த அரியவகை பாம்பு வீட்டு தோட்டப் பகுதியில இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பாம்பு வித்தியாசமாக இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் இந்த பாம்பு இனம் அரிய வகையைச் சேர்ந்த இரட்டைத் தலைப் பாம்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் இரு தலைகளும் தனித் தனியாக அசையக் கூடியதாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஒற்றை உடல் இரட்டைத் தலைகளுடன் பிறக்கும் பாம்புகள் நீண்ட நாள் வாழ்வது கடினம. இந்த நிலையில் கென்டக்கி வன உயிர் காப்பகத்தில் இந்த அரியவகை பாம்பு இனம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கென்டக்கியில் வாழும் விஷத்தன்ம…

  20. அரியவகை மான் கண்டுபிடிப்பு! புத்தளம் – நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். குறித்த அரியவகை சந்தனம் நிறம் கொண்ட குறித்த சருகுமானை பிடித்த பிரதேசவாசிகள் அது தொடர்பில் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சருகுமானை மீட்டு வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட குறித்த சருகுமானை நிகவெரட்டிய மிருக வைத்தியசாலை…

  21. அரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபன் தீபக் ஜங்ரா. மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் கையில் இருந்த ஸ்குருடிரைவர் தெரியாமல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரின் மீது பட்டது. இதனால், அவனுக்கு ஷாக் அடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அந்த கிராமத்திற்கே மின்சாரம் தடைபட்டு இருளானது. இந்த சம்பவத்தால் ஆச்சர்யமடைந்த ஜங்ரா இரண்டு வாரங்கள் கழித்து டிவிடி பிளேயரில் சிக்கிக்கொண்ட திரைப்பட சிடியை எடுப்பதற்காக திறந்த போது வெறும் கையால் அதன் ஒயர்களை தொட்டுள்ளான். ஏதும் ஆகாததால் திரும்பத்திரும்ப தொட்டுப்பார்த்த அவன் மின்…

  22. புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,962 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 234-பேருக்கு கொரொனா தொற்று உள்ளது. கணிசமான நபர்கள் குணமடைந்தும் வருகிறார்கள்.இந்நிலையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ளும் வசதிகளை மத்திய அரசு, மக்களுக்கு வழங்கி வருகிறது. முன்னதாக எனது அரசு (MyGov) என்ற ஆப் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை வழங்கி வந்தது. தற்போது கொரோனா வைரஸை டிராக் செய்யும் வகையிலான பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது. ஆரோக்கிய சேது என்ற அந்த செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மொபைலில் உள்ள இருப்பிடம் காட்டும் வசதி மற்றும் ப்ளூடூத்தை இயக்கிவிட்டு, இச்செயலிய…

  23. அருகிவரும் உயிரினங்களை... பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – பிரதமர் மஹிந்த சட்டவிரோதமான முறையில் மிருகங்கள் வேட்டையாடப்படுவது தொடர்பாக உடனடியாக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பது அரசாங்கதின் பொறுப்பு என்றும் ஆகவே அதற்கான நடவடிக்கைகளையும் செயற்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். நல்லத்தண்ணி பிரதேசத்தில் நேற்று முன்தினம் அரிய வகையிலான 7 வயது நிரம்பத்தக்க புலி மிருக பொறிக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளது. இவ்விடம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுத்தை, புலி கொல்லப்படும் சம்பவம் தொடர்ச்சியாக இடம்ப…

  24. அருவியில் குளிக்கச் சென்ற தொழில் அதிபர்களின் நகைகளை குரங்கு ஒன்று, காவிரி ஆற்றில் வீசி போக்கு காடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் நடராஜன் (80), அவரது நண்பர் ஆனந்தன் (44). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காரில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். காரை பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தி விட்டு, அருவில் குளிப்பதற்காக இருவரும் சென்றனர். பிரதான அருவி பகுதிக்கு சென்ற அவர்கள், தாங்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த வைர மற்றும் தங்க நகைகளை கழற்றி ஒரு பையில் போட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நகைப்பையையும் அருகில் ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு இருவரும் அருவியில் உற்சாகமாக குளித்து உள்ளன…

    • 1 reply
    • 392 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.