செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
கோப்பாயில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞனை அயலவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமி ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வேளை , இளைஞர் ஒருவரை தன்னை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். அதனை அவதானித்த சிறுமி கூக்குரல் இடவே அயலவர்கள் ஒன்று கூடி வீடியோ எடுத்த இளைஞனை மடக்கி பிடித்து நயப்புடைத்து கோப்பாய் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். https://athavannews.com/2022/1309618
-
- 4 replies
- 969 views
-
-
இதுபோன்று துணிந்து எப்படியெல்லாம் செய்திகளை உலவவிடுகிறார்கள் என்பதற்காக இணைத்துள்ளேன். எச்சரிக்கையோடு பார்க்கவும். நன்றி - யூரூப்
-
- 0 replies
- 284 views
-
-
விழுங்கப்பட்ட பற்றரி வெடித்ததால் 2 வயது சிறுவன் உயிருக்குப் போராட்டம் By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 12:13 PM மெக்ஸிகோவைச் சேர்ந்த 2 வயதான சிறுவனொருவன் விழுங்கிய பற்றரி, வயிற்றுக்குள் வெடித்ததால் அச்சிறுவன் உயிருக்குப் போராடி வருகிறான். அச்சிறுவன் சுவாசிப்பதற்கு சிரமப்படுவதாகக் கூறி, இச்சிறுவனை அவனின் தாயார் கெனானியா நகரிலுள்ள வைத்தியசாலைக்கு ஒக்டோபர் 23 ஆம் திகதி அழைத்துச் சென்றார். அச்சிறுவன் பற்றரியை விழுங்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன்பின், ஹேர்மோசிலோ நகரிலுள்ள வைத்தியசாலைக்கு அச்சிறுவன் அனுப்பப்பட்டான். அச்சிறுவனை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு முன்னர், அந்த பற்றரி வெடித்த…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
விபத்தில் உயிரிழந்த யாசகரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும் 5 வங்கி புத்தகங்களும் மீட்பு By T. SARANYA 08 NOV, 2022 | 11:58 AM புத்தளம் - சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த யாசகர் ஒருவர் 135,000 ரூபா பணத்தை வைத்திருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் - சிலாபம் வீதியில் ஆணைவிழுந்தான் பகுதியில் சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கதிரேசன் பாலமுருகன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். ஆணைவிழுந்தான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனி…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
காவல்துறை அதிகாரியின் வங்கி கணக்கில் விழுந்த 10 கோடி..! ஒரு நிமிட கோடீஸ்வரர் பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி ஆமீர் கோபங் வங்கி கணக்கில் சம்பளத்துடன் அடையாளம் தெரியாத வழியில் இருந்து ரூ.10 கோடி விழுந்துள்ளது. ஆனால், இதனை பற்றி அவர் அறியவில்லை. திடீரென வங்கியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியவரிடம், உங்களது வங்கி கணக்கில் ரூ.10 கோடி விழுந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மகிழ்ச்சியில் அந்த அதிகாரி திக்கு முக்காடி போனார். அதிரடியாக வங்கி கணக்கு முடக்கம் இதுபற்றி கோபங் கூறுகையில், இவ்வளவு பணம் எனக்கு கிடைத்து இருக்கிறது என பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில், எனது கணக்கில…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
இந்தியாவில் எட்டு வயது சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு உயிரிழந்துள்ளது. சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பந்த்ராபத் கிராமத்தில் எட்டு வயது சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு ஒன்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜஷ்பூர் மாவட்டத்தில் தீபக் என கூறப்படும் 8 வயது சிறுவன் அவரது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீபக்கை கடித்த நாகப்பாம்பு, அவரது கையைச் சுற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. சிறுவன் தனது கையை உதறிப்பார்த்தார், ஆனால் பாம்பு அவனது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாத நிலையி…
-
- 1 reply
- 268 views
- 2 followers
-
-
உலக அழகி போட்டியில் மோசடி ; பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றது குறித்து குற்றச்சாட்டு By T. SARANYA 04 NOV, 2022 | 03:58 PM நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியில், உலக அழகியாக தேர்வாகி பட்டம் சூடினார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. உலக அழகி போட்டியில் மோசடி நடந்ததாக 'மிஸ் பார்படாஸ்' அழகி போட்டியில் பட்டம் வென்ற லீலானி மெக்கோனி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். உலக அழகி போட்டியில் 'தில்லுமுல்லு' நடைபெற்றதால்…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
அமெரிக்க பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு 160 கோடி டொலர்களாக அதிகரிப்பு By DIGITAL DESK 3 05 NOV, 2022 | 07:52 PM அமெரிக்காவின் பவர்போல் லொத்தர்சீட்டிழுப்பின் ஜக்பொட் பரிசுதொகை 160 கோடி டொலர்களாக (சுமார் 57,231 கோடி இலங்கை ரூபா, சுமார் 13,117 கோடி இந்திய ரூபா) அதிகரித்துள்ளது. உலகில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றுக்கான மிகப்பெரிய ஜக்பொட் பரிசுத் தொகை இதுவாகும். புளோரிடா மாநிலத்தில் இன்று சனிக்கிழமை இரவு 10.59 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி ஞாயிறு காலை 8.29 மணிக்கு) இச்சீட்டிழுப்பு நடைபெறும். கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதியின் பின் பவர்போல் (Power…
-
- 3 replies
- 300 views
- 1 follower
-
-
இப்படி ஒரு திருவிழா தெரியுமா? மாட்டு சாணத்தை அடித்துக் கொள்ளும் விழா | Cowdung Festival 2022
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
அச்சுவேலியில் கத்தி முனையில் வழிப்பறி! பெண்ணொருவரின் தோடு கழராத போது... காதில் இருந்து பிடுங்கி எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அச்சுவேலி வைத்திய சாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது போன்று பாசாங்கு செய்து , திடீரென கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அதன் போது பெண்ணொருவரின் தோட்டினை கழட்டும் போது , அது கழராத போது, பெண்ணின் காதில் இருந்து தோடு பிடுங்கி எடுத்துள்ளனர். அதனால் அப்பெண்ணின் காதில் காயம் ஏற்பட்ட நிலையில் அச்சுவேலி வைத்திய சாலையில் சிகிச்…
-
- 6 replies
- 513 views
-
-
மிருகக் காட்சிசாலையிலிருந்து 5 சிங்கங்கள் தப்பியோட்டம்: அவுஸ்திரேலியாவில் சம்பவம் By DIGITAL DESK 3 02 NOV, 2022 | 04:00 PM அவுஸ்திரேலியாவிலுள்ள மிருகக் காட்சிசாலை ஒன்றிலிருந்து 5 சிங்கங்கள் தப்பியோடிய சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. சிட்னியிலுள்ள தரோங்கா மிருகக் காட்சிசாலையிலிருந்து வளர்ந்த ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த வளர்ந்த சிங்கமொன்றும் 4 குட்டிகளும் இன்று காலை தப்பிச் சென்றன. இதையடுத்து மிருகக் காட்சிசாலை உடனடியாக முடக்கப்பட்டது. பொலிஸாரும், மிருகங்களைக் கையாளும் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். எனினும் பின்னர் மேற்படி சிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் கூண்டுக்கு கொண்டுவரப்பட்டன. சி…
-
- 4 replies
- 691 views
- 1 follower
-
-
ஆசியா புக் ஒப் ரெக்கொர்ட்ஸில் நித்யானந்தாவின் 8 சாதனைகள் இடம்- கைலாசா தகவல் கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியா புக் ஒப் ரெக்கொர்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச பிரமோற்சவங்கள், அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது உள்ளிட்ட 8 சாதனைகளை நித்யானந்தா படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சாமியார் நித்யானந்தா சமூகவலைதளங்களில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியா புக் ஒப் ரெக்கொர்ட்ஸ் மூலம் ஏற்க…
-
- 0 replies
- 218 views
-
-
யாழில் ஏற்பட்ட கடும் சூறாவளி – எவருக்கும் பாதிப்பு இல்லை யாழ்ப்பாணம் பொய்ன்ட் பெட்ரோ கடல் எல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் சூறாவளி வீசியதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பொய்ன்ட் பெட்ரோ கடற்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் சுழல் காற்று காரணமாக பாரிய நீர்மட்டம் வான்வெளியில் வீசியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணக் கடல் எல்லையில் பல தடவைகள் இவ்வாறான சுழற்காற்றுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் எல்லையில் சூறாவளி ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொய்ன்ட் பெட்ரோ மீனவர்கள் மேலும் தெரிவித்தனர். …
-
- 4 replies
- 406 views
- 1 follower
-
-
லொட்டரில் 1100 கோடி பரிசு..! 40 சீட்டுகளை வாங்கிய நபருக்கு தேடிவந்த அதிர்ஸ்டம் நாற்பது லொட்டரி சீட்டுகளை வாங்கிய சீன நபர் ஒருவருக்கு பரிசுத்தொகையாக 220 மில்லியன் யுவான் (இலங்கை ரூ. 1120 கோடி) கிடைத்துள்ளது. லி என்ற புனைப்பெயரால் அடையாளம் காணப்பட்ட அந்த அதிர்ஷ்டசாலி நபர், குவாங்சி ஜுவாங் மாகாணத்தில் 11 டொலருக்கு 40 லொட்டரி சீட்டுகளை வாங்கினார். அனைத்தையும் ஒரே 7 எண்களில் வாங்கிய நிலையில், அந்த ஏழு எண்கள் வெற்றி பெற்றது. இதனால், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 5.48 மில்லியன் யுவான் என்ற கணக்கில், மொத்தம் 220 மில்லியன் யுவான் பரிசுத்தொகையை அவர் வென்றார். தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை பணத்தை வென்றதில் மகிழ்ச்சியடைந்தாலும், அந்த நபர் தனது உற்சாகத்த…
-
- 1 reply
- 204 views
- 1 follower
-
-
குவைத்தில் நிர்கதியாக விடப்பட்ட நாயை பல லட்சம் ரூபாய் செலவிட்டு அழைத்து வந்த இலங்கையர்கள் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VISHKA SURIYABANDARA இலங்கை இளம் பெண் ஒருவரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த ஒரு நாய், கேட்பாரற்று தெருவில் விடப்பட இருந்த நிலையில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து அந்த நாய் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார்கள். குவைத் நாட்டில் தெருவோரம் வாழ்ந்து வந்த நாய்க் குட்டி ஒன்றை, அங்கு பணிபுரியும் இலங்கை யுவதியொருவர் எடுத்து சென்று, தமது தொடர்மாடி குடியிருப்பில் வளர்த்து வந்துள்ளார். ''ரொஸ்கோ" என பெய…
-
- 4 replies
- 259 views
- 1 follower
-
-
பிலிப்பைன்ஸ் மாணவர்கள் விநோத முறையில் பரீட்சை பிலிப்பைன்ஸ் நாட்டில் பரீட்சையின்போது மோசடி இடம்பெறாத வண்ணம் மாணவர்கள் வித்தியாசமான முறைகளில் தொப்பிகள் அணிந்து பரீட்சை எழுதியுள்ளனர். பரீட்சை எழுதும் போது சக மாணவர்கள் பார்த்து எழுதுவதை பார்க்க முடியாத வகையில் பிலிப்பைன்ஸிலுள்ள லேகாஸ்பி நகரிலுள்ள பைகோல் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியால் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய மாணவர்கள் சாதாரணமான தொப்பி அணியாது விதவிதமான வித்தியாசமான தொப்பிகளை தயாரித்து பரீட்சை நிலையத்துக்கு வந்து பரீட்சை எழுதியுள்ளனர். சாதாரண வடிவமைப்பு முறையில் தயாரிக்குமாறு ஆலோசனை வழ…
-
- 0 replies
- 371 views
-
-
இங்கிலாந்து ஆரம்பம் முதல் எடுத்து சொல்கிறார்.இவர் சொல்வதைப் பார்த்தா உண்மையாகவே இருக்குமோ என்று எண்ணம் வருகிறது.இருந்தாலும் இதைப்பற்றி புள்ளி விபரமாக சொல்லத் தெரியவில்லை.
-
- 3 replies
- 415 views
- 1 follower
-
-
தாய் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்துகொண்ட மகன்! தாய் இறந்த சோகத்தில் மகன் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது – 32) என்பவரே உயிர் மாய்த்துள்ளார். இவர் மன்னார் மாவட்ட அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகர் ஆவார். இவரது தாயார் உயிரிழந்த நிலையில், தாயின் இழப்பினை தாங்க முடியாது விரக்தியுடன் காணப்பட்டவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டு உயிர் மாய்த்துள்ளார். https://athavannews.com/2022/1307494
-
- 0 replies
- 263 views
-
-
மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் விளக்கமறியலில்! தனது மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனமை தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இந்த நிலையில் குறித்த மாணவியை தேடி வ…
-
- 0 replies
- 219 views
-
-
மலைப்பாம்பின் உடலுக்குள் பெண்ணின் சடலம் By NANTHINI 26 OCT, 2022 | 05:08 PM இந்தோனேஷியாவில் பெண்ணொருவரை மலைப்பாம்பொன்று கொன்று விழுங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அந்த பாம்புக்குள் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, இறப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ஜஹ்ரா என்கிற பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக் 23) இறப்பர் தோட்டத்தில் வேலைக்காக சென்றுகொண்டிருந்தபோதே இவ்வாறு பாம்பு விழுங்கி உயிரிழந்துள்ளார். இப்பெண் அன்றைய தினம் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அவ…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
குளிக்காமல் 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்த இரான் தாத்தா அமோ ஹாஜி 94 வயதில் மரணம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP ''உலகிலேயே அழுக்கான மனிதர்'' என்று ஊடகங்களால் கூறப்பட்ட ஓர் இரானிய தாத்தா தமது 94 வயதில் மரணமடைந்துள்ளார். பல்லாண்டுகளாக குளிக்காமல் இருந்த இவர் குளித்த சில மாதங்களிலேயே இறந்துள்ளார். மனிதர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாமல் தனியாக வசித்து வந்த அமோ ஹாஜி எனும் இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்தார். குளிப்பது தமது உடல்நலத்தை பாதிக்கும் என்று அமோ ஹாஜி கருதியதால், அதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார். இரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த அமோ …
-
- 2 replies
- 261 views
- 1 follower
-
-
இணுவிலில் சிறுவன் மீது வாள் வெட்டு! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் (வயது 17) எனும் சிறுவனே படுகாயமடைந்துள்ளான். குறித்த சிறுவன் பாடசாலை கல்வியை இடை நிறுத்தி , இணுவில் பகுதியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறான். அந்நிலையில் சிறுவன் விற்பனை அகத்தில் இருந்து நேற்றைய தினம் (திங்கட்கிழமை) தனது துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி செல்லும் போது, தெல்லிப்பளை பகுதியில் இருந்து மூன்று மோட்டா…
-
- 0 replies
- 352 views
-
-
மாணவர்களை தேர்வில் மோசடி செய்யாமல் இருக்க உதவும் தொப்பிகள் – ஃபிலிப்பைன்ஸில் வைரல் காணொளி ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MARY JOY MANDANE-ORTIZ பிலிப்பைன்ஸில் கல்லூரி தேர்வுகளின்போது "ஏமாற்றுவதைத் தடுக்கும் தொப்பிகள்" என்றழைக்கப்படும் மாணவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேடிக்கையாக வைரலாகி வருகின்றன. லெகாஸ்பி நகரிலுள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றவர்களுடைய விடைத்தாளைப் பார்த்து எழுதுவதைத் தடுக்க தலைக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அட்டை, முட்டை பெட்டிகள் மற்றும் பிற மறுசுழற்சி செய்யப…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
அச்சுவேலியில் தொடரும் 10´வது வழிப்பறி : நேற்றும் முதியவரிடம் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை !! யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால், வாள் மற்றும் கத்தி முனையில் முதியவரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் முதியவர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லை வெளி பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு வார கால பகுதிக்குள் 10…
-
- 0 replies
- 178 views
-
-
யாழ். – வவுனியா பேருந்தில் பயணித்த யுவதியை பிளேட்டினால் வெட்டிய இளைஞன் பேருந்தில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை சக பயணிகள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் சன நெரிசலில் இளைஞன் தனக்கு முன்னால் நின்ற யுவதியை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். காயத்திற்கு உள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்து பிளேட்டினால் வெட்டிய இளைஞனை பேருந்தினுள் மடக்கி பிடித்தனர். இளைஞனை மடக்கி பிடித்த சக பயணிகள், யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவலரணில் ஒப்படைத்தனர். https://athavannews.com/2022/1306451
-
- 6 replies
- 380 views
- 1 follower
-