Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர். இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளதுடன், 22 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடல் ஆமைக்கறியில் விஷம் உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, பொலிஸார் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். பெம்பா தீவு பகுதியில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் உள்ளன. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது. 38 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் வீடு திரும்பியுள்ளனர்…

  2. விரைவில் வருகிறது கஞ்சா பீட்சா..எந்த நாட்டில் தெரியுமா? தாய்லாந்து நாட்டில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தாய்லாந்து நாட்டில் உள்ள 'கிரேசி ஹாப்பி பீட்சா' இந்த தகவலினை வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் நிறுவனத்தின் மேலாளர் பானுசக் குன்சாட்பூன் கூறியதாவது, கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும். பாலாடைக்கட்டியுடன் கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது. ஒரு பீட்சாவின் விலை ரூ1123 . இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு கூடுதலாக ரூ. 225 வசூலிக்கபடும். அண்டை நாடான கம்போடியாவின் தலைநகரான புனோ…

  3. துப்பாக்கிச்சூட்டில்... நிழல் உலக தாதா உயிரிழப்பு – இரு பொலிஸாருக்கு காயம்! பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். களுத்துறை − தியகம பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கைத்துப்பாக்கியை காண்பிக்க அழைத்து சென்ற வேளையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியினால் பொலிஸார் மீது, அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதையடுத்து, பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதிலேயே, சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்ப…

  4. RAW- IB உளவு பிரிவுகள் எப்படி செயல்படுகிறது தெரியுமா?-விளக்கும் சவுக்கு சங்கர் | கொடி பறக்குது சில இடங்கள் அவதானத்திற்குரியவை. நாம் உளவுஅமைப்புகள் தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டியவை என்று நினைக்கின்றேன். அதனால் இணைத்துள்ளேன். இடம்பொருந்தாவிடின் நிர்வாகத்தினர் உரிய பகுதிக்கு நகர்த்தி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி நன்றி - யூரூப் இணையம்

    • 2 replies
    • 459 views
  5. யாழில் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட இளம் பெண்ணும் அவருடைய தாயாரும் கைது! யாழ்ப்பாணம்- மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண், தன்னுடைய பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு அவருடைய தாயாருடன் முனைந்ததாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் இருவரும் செயற்படும்போது, குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்ட…

  6. நான்கு காதுகளுடன், பிறந்துள்ள பூனைக் குட்டி! துருக்கியில் 4 காதுகளுடன் பிறந்த பூனைக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக் குட்டி, மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும் குறைபாடுள்ள தாடையுடன் பிறந்துள்ளது. 6 குட்டிகளில் ஒன்றாக பிறந்த இந்த பூனைக் குட்டியை ஒரு தம்பதி எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த மரபணு குறைபாடு காரணமாக பூனைக் குட்டிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை எனவும் சாதாரண பூனைகளைப் போலவே நன்றாக காது கேட்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், மிடாஸ் பூனைக்குட்டி இணையத்தில் பிரபலமடைந்து வருகின்றது. https://athavannews.com/2021/1251329

  7. கனகராசா சரவணன் மட்டக்களப்பில் விபச்சாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தா, 50 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (17) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்னாள் அமைந்திருந்து முன்னாள் மாநகரசபை மேயரான சிவகீர்த்தாவின் வீட்டுடன் நடாத்திவந்த தங்குவிடுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியை, கடந்த 2016ஆம் ஆண்டு பொலிசார் முற்றுகையிட்டிருந்தனர். இதன்போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், விடுதியை நடாத்திவந்த முன்னாள் மேயர் ஆ…

  8. Published by Gayathri on 2021-11-17 12:41:49 புத்தளம், கற்பிட்டியில் டொல்பின் வசந்த காலம் ஆரம்பமாகியுள்ளது. கற்பிட்டியில் டொல்பின் வசந்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக டொல்பின் மீன்களை பார்க்கும் பருவம் ஒரு மாதம் தாமதமாக தொடங்கியுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். எனினும், டொல்பின்களைப் பார்க்கும் பருவம் இம்மாதம் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய இயந்திர படகில் மாலுமி மற்றும் உதவியாளர் உட்பட ஆறு பேர் மட்டுமே டொல்பின்களை பார்வையிட பயணிக்க முடியும். இதேவேளை, டொல்பின்களை பார்வையிடுவதற்காக பயணிப்போர் அதன் இயற்கையான…

  9. இராவணனிடம் விமானம் இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்ததாகவும் ராமாயணத்தில் உள்ள குறிப்புகள் குறித்து இலங்கை அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதில், இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கையின் அரசனான இராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், இராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. இராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், இராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, இராவணன் ஆட்சியின் போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்…

    • 0 replies
    • 327 views
  10. எகிப்தில் படையெடுக்கும் தேள்கள் ! - 3 பேர் பலி, 500 க்கும் மேற்பட்டோர் காயம் ! எகிப்தில் தேள்fள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எகிப்து நாட்டில் அஸ்வான் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருகின்றதால் அங்கு வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய பண்ணைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், கடும் மழையையடுத்து தேள்கள், அவற்றின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளிலும் மக்களின் வீடுகளுக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், குறித்த தேள்கள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும…

  11. வட மேற்கு இங்கிலாந்தில் பயங்கரவாத குண்டுவெடிப்பு. லிவர்பூல் வைத்தியசாலைக்கு முன்னால், நேற்று, நடந்த இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிர் இழக்க, மூவர் கைதாகி உள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இந்த கைதை நடத்தியிருப்பதால், இது இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பானது என தெரிகிறது. குண்டு வெடிப்பிலும் பார்க்க, அதனால், விரைவாக பரவிய, தீயினால் தான் உயிரிழப்பும், சேதமும் உண்டாகி உள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில் வரும். https://www.google.co.uk/amp/s/www.bbc.co.uk/news/uk-59285235.amp

  12. மேற்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞர் ஒருவர் உயிரிழப்பு- பெண்னொருவர் ஆபத்தான நிலையில் அனுமதி! மேற்கு லண்டனில் உள்ள ப்ரென்ட்ஃபோர்டில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வயோதிபப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவத்திற்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுதொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. சுமார் 20 வயதுடைய நபர், இரவு 8 மணியளவில் அல்பானி பரேடில் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து யார்ட் அதிகாரிகள், அவரது அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும், அவரது குடும்பத்திற்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார். சடலம் பிரே…

  13. பிரிட்டன் வனமகன்: செல்போன் இல்லை, ஃபேஸ்புக் இல்லை - 40 ஆண்டு காட்டு வாழ்கை அனுபவங்கள் ஸ்டீவன் ப்ரோக்கிள்ஹர்ஸ்ட் பிபிசி ஸ்காட்லாந்து நியூஸ் 14 நவம்பர் 2021, 02:07 GMT பட மூலாதாரம்,URUNA PRODUCTIONS படக்குறிப்பு, கென் ஸ்மித் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக கென் ஸ்மித் பிறரைப் போல இயல்பான வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு, ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள ஒரு தொலைதூர லோச்சின் கரையில் கையால் செய்யப்பட்ட மரத்தடி அறையில் மின்சாரம் அல்லது குழாய் நீர் வசதியின்றி வாழ்கிறார். "இது ஒரு நல்ல வாழ்க்கை," என்று கூறும் கென், "எல்லோரும் இப்படி செய்ய விரும்புகிறார்கள், ஆனால் யா…

  14. யாழ்ப்பாணத்தின், எம்.ஜி.ஆர் காலமானார்! யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (வயது 79) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர ரசிகனாவார். அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும் ஆவார். தமிழகம் சென்று எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தும் உள்ளார். எம்.ஜி.ஆர் போன்று கண்ணாடி அணிந்து தோளில் சால்வையுடன் சைக்கிளில் வலம் வரும் இவரை பலரும் யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் என அழைத்தனர். அதனால் அவரின் இயற்பெயர் பலருக்கு தெரியாது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக …

  15. சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் பருத்தித்துறையில் இருவர் கைது! 15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றுமுன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ…

  16. சரளமாக ஆங்கிலம் பேசும் பிச்சை எடுக்கும் சிறுமி: வியந்த அனுபம் கெர் மின்னம்பலம்2021-11-09 பாலிவுட் நடிகர் அனுபம் கெர் பல ஆண்டுகளாக திரையுலகில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பவர். அவருடைய நடிப்புக்கு மக்கள் மத்தியில் பலத்த ரசிகர்கள் உள்ளனர். இவர் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார். தற்போது அனுபம் கெர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். படப்பிடிப்புக்காக இந்தி நடிகர் அனுபம் கெர் அண்டை நாடான நேபாளத்தில் உள்ளார். இந்த நிலையில் நடிகர் அனுபம் கெர், நேபாளம் காத்மாண்டில் பிச்சை எடுக்கும் சிறுமி ஒருவர் பேசும்…

  17. 6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை - ஏன் நடந்தது இந்த சம்பவம்? 8 நவம்பர் 2021 படக்குறிப்பு, கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன் ஹரிஹர தீபன் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறு வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் ஏன் நடந்தது? திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோட்டையூர்-சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள், ஹரிஹர தீபன் (6) என்ற மகன் உள்ளனர். கடந்த ஞாயிற்றுகிழமை ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனை…

  18. கிளிநொச்சி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு கிளிநொச்சி ஏ - 9 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். பரந்தன் பகுதியில் உள்ள கட்டட உற்பத்தி நிலையத்திற்கு சீமெந்து இறக்கிய பின்னர் பாரவூர்தி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவேளை, அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பாரவூர்தியின் பின் பக்கத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ம. யூட்பவிஷன் வயது 29 குமரபுரம் பரந்தன் என்ற இளைஞனும் ச.காந்தீபன் வயது 34 இல 61 கண்டி வீதி பரந்தனை சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்க…

  19. பயணிகள் தப்பியோடியமையால் ஸ்பானிஷ் விமான நிலையம் மூடல் புலம்பெயர் பயணிகள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சம்பவத்தை அடுத்து ஸ்பெயினின் விமான நிலையம் ஒன்று வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மூடப்பட்டது. மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றுகொண்டிருந்த கொண்டிருந்த விமானம், மருத்துவ அவசரநிலை காரணமாக பால்மா டி மல்லோர்காவிற்கு திருப்பி விடப்பட்டது. குறித்த விமானம் தரையிறங்கியதும், 21 பயணிகள் ஓடுபாதையின் குறுக்கே ஓடி, சுற்றுச்சுவர் வேலிக்கு மேல் பாய்ந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் பொலிஸார் அவர்களை கைது செய்த நிலையில் அவர்கள் மீண்டும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வ…

  20. செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ரயிலில் மோதி பலி! வவுனியா – கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதவாச்சி – மன்னார் வீதியில் கல்லாற்று பாலத்தில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மன்னார் – முருங்கன் பகுதியில் இருந்து செட்டிக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள், செட்டிக்குளம் கல்லாற்று பாலத்தில் ஏறி தங்களது கையடக்கத் தொலைபேசியில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர். இதன்போது, மன்னார் பியர் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகினர். விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய ஒருவர் பால…

  21. ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் நிர்வாணப் படங்களை நூதனமாகப் பெற்று பின்னர், அவற்றினை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த இருவர் இலங்கை அக்கரைப்பற்று பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் என்றும், மற்றையவர் திருமணமான ஆண் எனவும் காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை பொலிஸாரால் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது, இருவருரையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கள் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்ட ஆண் ஒருவரிடம் ஐந்து லட்சம் இலங்கை ரூபாய் பணத்தை மிரட்டிக் …

    • 14 replies
    • 766 views
  22. பாதிரியாரின் அதிர்ச்சி...... மோசடிகள் பலவிதம். இங்கிலாந்து, பெட்போட்சயர், லூட்டன் பகுதியில் சொந்த வீட்டில், வேலை இல்லாமல் இருந்த பாதிரியார் மைக் கோல், (Mike Hall) வடக்கு வேல்ஸ் பகுதியில், தங்குமிடத்துடன், வேலை கிடைத்து, வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பி விட்டார். வந்து போக குடும்பம் இல்லாததால், மாதக்கணக்காக வரவில்லை. ஒருநாள், பக்கத்து வீட்டுக்காரர் போனைப் போட்டு..... என்ன..நல்ல துட்டு கிடைக்கிற வேலை போல இருக்குது.... வீட்டில பில்டிங் வேலைகள் செய்கிறீர்கள் போல என்று விசாரித்து இருக்கிறார். இல்லையே..... நான்..... யாரையும் வேலை செய்யச் சொல்லவில்லையே... என்ற ..... அப்படி என்றால்.... வீட்டு வேலை செய்வது யார் என்று கேட்டிருக்கிறார், அயலவர். குழப்பத்துடன், அ…

    • 171 replies
    • 9.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.