துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
போரால் பாதிக்கப்பட்டு, பெற்றோர்களை இழந்த வறுமையுடைய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கனடா மொன்றியலில் வசிக்கும் புலம்பெயர் தாயக உறவுகளான ஜெயம் மற்றும் ஜெனா ஆகியோர் துவிச்சக்கர வண்டிகளையும் நிதியுதவிகளையும் வழங்கியுள்ளனர். இந்த உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக கடந்த 13ம் நாள் வழங்கி வைத்துள்ளனர். கிளிநொச்சி அறிவகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பளையை சேர்ந்த மாணவர்களான சா.கௌசிகா, ச.மயூரி ச.நிலாவிழி, கு.கஸ்தூரி ஆகியோருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஏற்கனவே ஜெயம் மற்றும் ஜெனா ஆகியோரின் நிதியுதவியில் பளையை சேர்ந்த க.நிசாந்தன் என்ற மாணவனுக்கு துவிச்சக்கர வண்டியும் மற்றும் நிதியுதவியும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பா.உ…
-
- 0 replies
- 414 views
-
-
கனடா வாழ வைப்போம் அமைப்பூடாக பா.உறுப்பினர் சி.சிறீதரனின்வேண்டுகோளுக்கிணங்க “வைத்திலிங்கம் அறக்கட்டளை” அமரர் வைத்திலிங்கம் அவர்களின் ஓராண்டு நினைவாக, அவரது குடும்பத்தாரால் இன்று கிளிநொச்சியில் வைத்து போரால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு அர்ப்பணிப்புக்களின் அடையாளமாக இருப்பவர்களில் 20 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன இந்த நிகழ்வு கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டக்கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ப.குமாரசிங்கம், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்…
-
- 1 reply
- 600 views
-
-
இலங்கைத்தீவிலே குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களிலே பல நெடுங் காலமாக தமிழர்கள் மீது நன்கு திட்டமிட்டு அரச படைகளாளும், ஏனைய சமூகத்தினராலும் நாங்கள் அடக்கப்பட்டு எமது சகோதரர்களையும், சகோதரிகளையும் இழந்தவர்களாக இந்த நாட்டிலே வாழமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பு வாழ்வாதார உதவித்திட்டங்களை எமது பகுதிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார். நேற்று நாவிதன்வெளி பிரதேசத்தில் நடைபெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்விலும், மாணவர்களுக்கான கொப்பிகள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார். கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பானது வாழ்வாதார உதவிகளுக்க…
-
- 0 replies
- 700 views
-
-
எமது வேண்டுகோளுக்கு அமைய கனடா வாழவைப்போம் அமைப்பு புலம்பெயர் உறவுகளை இணைத்து வாழ்வாதரார உதவிகளை வழங்கிவருகின்றது.மாற்று வலுவுள்ளோர் மற்றும் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களை மையமாகக்கொண்டு வழங்கப்படும் வாழ்வாதார உதவிகள் கடந்த நான்காம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலியிலும் வழங்கப்பட்டுள்ளன. வாழவைப்போம் அமைப்பின் செயற்பாட்டாளர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் எம்முடன் வன்னிமாவட்ட பா.உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் கைவேலி கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர். கனடா வாழவைப்போம் அமைப்பின் இயக்குநர் மாற்றுத்திறனாளியாக இருந்த நிலையிலும் தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வின் முன…
-
- 0 replies
- 512 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா வாழவைப்போம் அமைப்பு கனடாவில் வாழும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் கருணை உள்ளங்களுடன் இணைத்து மாற்றுவலுவுள்ள போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி வருகின்றது. கனடாவாழவைப்போம் அமைப்பின் உதவியின் மூலம் ஏராளமான உறவுகள் வாழ்வின் ஆதாரத்தை பெற்றுக் கொண்டுள்ளன. இந்த உதவிகளின் தொடர்ச்சியாக 2015ம் ஆண்டின் கிளிநொச்சியில் முதல் உதவி வழங்கலாக கனடாவாழ் புலம் பெயர் உறவுகளான பாகிதா சங்கரலிங்கம் பொ.குணதாசன் பயஸ் மரியதாஸன்(ம.ஜெபக்சன் ம.றொசான்) ஆகிய கருணையுள்ளங்களின் மூலம் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்று குடும்பமாக இருப்பவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி கருதி கற்றல் உபகரணங்…
-
- 0 replies
- 439 views
-
-
கனடாவிலிருந்து யாழில் தொழிற்சாலை அமைத்த ஒருவர்
-
- 12 replies
- 1.5k views
-
-
கனடாவில் உள்ள வாழவைப்போம் அமைப்பினரால் புதுக்குடியிருப்பு கைவேலிப் பிரதேசத்தைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கைவேலி கணேச வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீ.கனகசுந்தரம் கலந்துகொண்டு இந்த கொடுப்பனவை வழங்கிவைத்தார். இதில் குறித்த பிரதேசசத்தைச் சேர்ந்த 12 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=101447&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 638 views
-
-
கனடாவில் வசிக்கும் உறவின் உதவியால் அனலைதீவு பிராந்திய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு…. POSTED IN NEWS அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில முதல் முதலாக அமைக்கப்பட்ட வெளிநோயாளர்கள் பிரிவிற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது. அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா மற்றும் அனலைதீவு பிரந்திய வைத்தியசாலை புனரமைப்பு உபகுழு இவ்விரண்டு அபிவிருத்திக்குழுவினால் இரண்டு கோடி ரூபாய் செலவில் இந்த வைத்தியசாலை இரண்டு வருடங்கள் வேலைத்திட்டத்தில் நிர்மானிக்கப்பட்டு இன்று மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு சுகாதார திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும்போது இந்த நாட்டில் மாற…
-
- 5 replies
- 1k views
-
-
எதிர்வரும் நாட்களை தென் தமிழீழத்தில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துயர் துடைக்கும் நாட்களாக மாற்றுவோம். தென் தமிழீழத்தில் பல பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான எம் உறவுகள் எவ்வித உதவிகளும் இன்றி தவிக்கின்றார்கள். குடியிருப்புக்களை விட்டுப் பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளார்கள். சுமார் ஏழு இலட்சம் மக்கள் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு மருந்து சுகாதாரப் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கான அவசர மனிதாபிமான நிவாரண உதவியினை உடனடிய…
-
- 0 replies
- 398 views
-
-
கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி ! ராஜகிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த ஒரு குடும்பம் கருணாகரன் குடும்பம் . இக்குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த பொது பட்டகாலில் படும் என்பது போல் கருணாகரனை கைது செய்து புனர் வாழ்வு முகாமில் வைத்துள்ளனர் .மூன்று பிள்ளைகளுடன் அன்றாடம் உணவுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருந்த பொது தலை மகனாக இருந்த பதினாறு வயது மகன் லீம்சன் ஏழ்மை நிலை காரணமாக சுருக்கிட்டு தற்கொலை செய்து மேலும் மோச நிலையை ஏற்ப்படுத்தி விட்டது மிகப் பரிதாபத்துக்குரியது .இன் நிலையில் இக் குடும்பத்துக்கு நோர்வேயில் உள்ள நல்ல மனம் உள்ள ஏழு குடும்பங்கள் இணைந்து ரூபா எண்பதினாயிரம் உதவியுள்ளது .ஆலை…
-
- 4 replies
- 802 views
-
-
தங்கள் உறவுகளையும் உடைமைளையும் இழந்து போய் இனிவரும் காலங்களில் தங்கள் கல்வியை மட்டுமே நம்பி அதனைக்கொண்டு தாங்கள் புதியதொரு வாழ்வினை கட்டியமைக்க முடியுமென்கிற இறுதி நம்பிக்கையுடன் மனக்காயங்கள் உடற்காயங்கள் என்று அத்தனையும் தாங்கியபடி பல்கலைக்கழகம் சென்று கொண்டிருக்கும் பல மாணவர்களில் அவசர உதவி கோருவோர் 11 பெயரின் விபரங்கள் நேசக்கரம் ஊடக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு இணைக்கிறோம்.. ஒரு பல்கலைக்கழக மாணவனிற்கான மாதாந்த உதவிக்தொகையாக நேசக்கரம் இலங்கை ரூபாய் 5ஆயிரம் நிர்ணயித்துள்ளது.(36 யுரோக்கள்) உதவ விரும்பும் உள்ளங்கள் நேசக்கரத்துடன் தொடர்பு கொண்டால் உங்கள் உதவிகள் நேரடியாகவே மாணவர்களை சென்றடைவதற்கான அவர்களது வங்கிஇலக்கம் விலாசம் போன்றவற்றை தந்துதவி வழிவகைகளை ஏற்படுத்திதரலாம். …
-
- 5 replies
- 1k views
-
-
எமது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர் தர 92ம்ஆண்டுபுலம்பெயர் பழைய மாணவர்களின் கலந்துரையாடல்களின் பிரகாரம், எமது தாயக தமிழ் சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக: இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி வீதத்தினை உயர்த்தும் நோக்கத்தில் கணிதபாடக் கையேடுகளைசுமார் 10000 கணிதபாடச் சித்தியில் இடர்ப்படும் மாணவர்களுக்காக அச்சிட்டு வழங்கும் கைங்கரியத்தில் ‘கல்விக்கான வீதியோட்டம்’ (5km marathon) ஒன்றைநடாத்த உத்தேசித்துள்ளோம். இந்ததமிழ் மாணவர்களின் கற்றலுக்குக் கைகொடுக்கும் பணியில் புலம் பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெற்றுத் தருவதற்கு எம்முடன் கைகோர்த்து இணையத் தளம் மூலமான ஊடக ஆதரவைவழங்கி உதவுமாறு மிக அன்பாய் வேண்டுகின்றோம். மேலும் …
-
- 1 reply
- 1.7k views
-
-
காடுமண்டிய ஓர் பின்தங்கிய கிராமத்தில்தான் அந்தக் காப்பகம்! உலகத் தமிழர்களின் கவனத்திற்கு!! ஐ.பி.சி தமிழ் மாதாந்தம் முன்னெடுக்கும் ’உயிர்ச் சுவடு’ எனும் அறப்பணிச் செயற்திட்டத்தின் மூன்றாம் பாகம் இன்றைய நாள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் காப்பகத்தில் இடம்பெற்றது. இதன்படி ஐ.பி.சி தமிழின் தாயகக் கலையக பணியாளர்கள் குறித்த முதியோர் காப்பகம் சென்று அங்குள்ள முதியோருடன் மகிழ்ச்சிகரமான ஒரு ஊடாட்டத்தினை மேற்கொண்டனர். குறித்த காப்பகத்தில் சமையல் செய்து முதியவர்களுடன் பரிமாறி பல்வேறுபட்ட ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து பராமரிக்கப்பட்டுவரும் க…
-
- 0 replies
- 865 views
-
-
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
-
- 0 replies
- 936 views
-
-
அன்பான France வாழ் புங்குடுதீவு மக்களே வணக்கம் அண்மையில் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் காலத்தின் தேவை கருதி ஒரு அவசர வேண்டுகோளை France வாழ் புங்குடுதீவு மக்களை நோக்கி விடுத்திருந்தது. அவ்வேண்டுகோள் France வாழ் புங்குடுதீவு மக்களை சென்றடைய அவர்கள் சார்ந்த விழாக்கள் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரப்படுத்துதல் ஊடாக முயற்ச்சித்தது. அதனைத்தொடர்ந்து எம்மிடம் பதிவிலுள்ள 300 க்கு மேற்பட்ட அங்கத்தவர்களின் விலாசங்கள் மீண்டும் தொலைபேசி அழைப்பினுடாக சரி பார்க்கப்பட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 27-01-2019 இல் ஒரு விசேச கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு அதன் நிகழ்சி நிரலும் இதனுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் France வாழ் புங்குடுத…
-
- 6 replies
- 1.7k views
-
-
யுத்தத்தின் விளைவுகளால் தனது கால் ஒன்றினை இழந்து மற்றைய காலும் செயலிழந்து போகும் நிலையில் வாழ்வாதாரத்திற்காக துடிக்கும் முன்னால் பெண் போராளி. தந்தை நோய்வாய்பட்ட நிலையில் தாயும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டு உள்ளதால் தனது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி அலைந்தும் கால்கள் இல்லை என்ற காரணத்தினால் வேலை ஏதும் கிடைக்காத நிலையில் போராடும் இளம் பெண். உதவும் நல் உள்ளம் கொண்டோரே உதவிக்கரங்கள் கொடுத்திடுங்கள். தொலைபேசி இலக்கம்; 0773256776 வங்கி கணக்கு இலக்கம் கிஸ்ணபிள்ளை துரைசிங்கம் 70580467 இலங்கை வங்கி கிளிநொச்சி இலங்கை - See more at: http://www.canadamirror.com/canada/30236.html#sthash.X2GQDnnv.dpuf
-
- 0 replies
- 675 views
-
-
-
- 13 replies
- 3.1k views
-
-
கல்வி என்ற இலக்கினூடாக உலகத்தில் நமதினத்தை பெருமைப்படுத்தவேண்டும்…. கிளிநொச்சி பாரதிபுரம் ஒக்ஸ்போட் தனியார் கல்வி நிறுவனத்தின் பருத்திவிழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்று பாரதிபுரம் வித்தியாலய மண்டபத்தில் கல்வி நிலையத்தின் இயக்குனர்; கே.எம்.கேதீஸ் தலைமையில் நடைபெற்றது. நாமம் இதில் கலந்துகொண்ட வேளை எமது பதிவுகளாக….. பாரதிபுரத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடசாலையில் புறச்செயற்பாடாக மாணவர்கள் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் தங்கள் பொழுதை சிறந்த முறையில் ஆக்குவதற்காக இத்தகைய கல்வி நிலையங்களின் பங்கு அளப்பரியது. ஒக்ஸ்போட் கல்வி நிலையத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சில தரப்புக்களால் பல்வேறுமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இந்தப்பிரதேச மக்கள் இந்த கல்வி நிலையம் மாணவர்…
-
- 0 replies
- 553 views
-
-
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல். போரால் பாதிக்கப்பட்டு மீள எழுந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள், போர் விதவைகளை உள்வாங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் எமது அமைப்பானது செயற்படத் தொடங்கியுள்ளது. மிளகாய்த்தூள், மாவகைகள், கோப்பித்தூள் உள்ளிட்ட அன்றாட பயன் பொருட்களை அரைத்துப் பொதி செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பை எங்களது உற்பத்திக் குழுவினர் ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர். முதலாவதாக புதுக்குடியிருப்பு பகுதியை அண்டிய இடத்தில் முதலாவது அரைக்கும் ஆலையை நிறுவவுள்ளோம். இத்திட்டத்திற்கு 4லட்சரூபாய்கள் தேவைப்படுகிறது. (அண்ணளவாக 2300€) புடிப்படியாக இம்முயற்சியின் வெற்றி வேலைவாய்ப்பை…
-
- 3 replies
- 760 views
-
-
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு புலம் பெயர் உறவுகளால் இதய நோய் சிகிச்சை கருவிகள் அன்பளிப்பு(படங்கள்) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 8.6 மில்லியன் ரூபா பெறுமதியான இதயநோய் சிகிச்சை கருவிகள் புலம் பெயர் உறவுகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதி நவீன எக்கோ இயந்திரம், இதய நோய் சிகிசை இயந்திரங்கள் என்பன அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினரும், புலம்பெயர் உறவான வரதராஜன் என்பவரும் லண்டன் யுளளளைவ சுசு அமைப்பும் இணைந்து 8 மில்லியன் பெறுமதியான இவ் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர். இதில் வரதராஜன் என்பவரின் நிதி உதவியில் அதி நவீன எக்கோ இயந்திரத்தினை ஆறு மில்லியன் ரூபாவுக்கு வழங்கி…
-
- 3 replies
- 859 views
-
-
கிளிநொச்சி விஸ்வமடுவில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் லயன் மாவட்டம் 306-B1 இன் கொழும்பு மத்தி லயன்ஸ் கழகத்தினால் யுத்தத்தினால் அவையவங்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. பல நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் யுத்தத்தினால் அவையவங்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள், கோழிக்குஞ்சுகள், துவிச்சக்கர வண்டிகள், ஊன்றுகோல்கள், வங்கி சேமிப்புகணக்கு புத்தகங்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது தகவலுக்கு நன்றி Chelvadurai Shanmugabaskaran
-
- 0 replies
- 627 views
-
-
கிளிநொச்சி பாரதி புரத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த பிள்ளைகளின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.கே.அறிவுச்சோலை SKT உரிமையாளரால் இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பிற்காக இயங்கிய அறிவுச்சோலை இல்லம் யுத்தம் காரணமாக முழுமையாக அழிவடைந்தது. மேற்படி இல்லத்தை மீளவும் இயக்குவதற்கு நீண்ட காலமாக பலரும் முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் பயனாக இன்று முதல் மீண்டும் கிளிநொச்சியில் எஸ்.கே.அறிவுச்சோலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று ஒன்பது மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் பாராளுமன்ற உ…
-
- 3 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சி திருநகரில் உயிரிழந்த சிறுவன் நிதர்சனின் குடும்பத்திற்கு லண்டன் புலம்பெயர் அமைப்பினால் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. லண்டன் வாழ் தாயக தமிழர்களால் நடாத்தப்படும் ர்நளொழர ஐளளாiசெலர கராத்தே கல்லூரியின் பிரதான பயிற்சியாளர் றென்சி கந்தையா இரவீந்திரன் அவர்களால் வழங்கப்பட்ட உதவித் தொகையை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் குறித்த சிறுவனின் தாயிடம் நேரில் சென்று கையளித்துள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=466692573313820907
-
- 0 replies
- 625 views
-
-
குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமத்தில் 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். இங்கு கல்வி கற்கும் வயதில் 62பிள்ளைகள் உள்ளனர். இப்பகுதியில் இதுவரையில் மின்சார வசதியோ அல்லது சரியான கல்விக்கான வசதிகளோ இல்லை. விவசாயத்துக்கு ஏற்ற வளமும் வசதியும் உள்ள இந்தக் கிராமம் இதுவரையில் எந்த அரசியல் தலைவர்களாலும் கவனிக்கப்படாதிருக்கிறது. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கரடியன்குளம் குசேலன்மலை வாழ் மாணவர்களின் அடைவுமட்டம் குறைந்த நிலையில் இருக்கும் கல்விகற்கும் வயதில் உள்ள சிறுவர்களுக்கான முன்பள்ளிக் கற்பித்தலுக்கான வசதியும் மா…
-
- 1 reply
- 868 views
-
-
கைகளை இழந்துள்ளவர்களுக்கு ஸ்பிரிங் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆகிய இந்தக் கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. முழங்கைக்குக் கீழ் நீண்டுள்ள கைப்பகுதியில் பட்டிகளைக் கொண்டு பொருத்தப்படுகின்ற இந்தக் கைகள் ரோபோக்களின் கைகளைப் போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. முதற் தடவையாக வடமாகாணத்தைச் சேர்ந்த 150 பேர் இதன் மூலம் பயனடைந்துள்ளதாக இந்தத் திட்டத்திற்கான தலைவரும், ரோட்டரிக்கழக உறுப்பினருமான சிவமூர்த்தி கிஷோக்குமார் தெரிவித்தார். இவற்றின் உதவியுடன் கை இல்லாதவர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களை ஓட்டவும், வாளிகளில் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களைத் தூக்கிச் செல்லவும் வசதியாக இருப்பதாக இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் கூறுகின்றார்கள். இந்தக் கையினால் பேனாவைக் கொண்டு எழுதவும…
-
- 2 replies
- 521 views
-