மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
03.07.2000ம் அன்று தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் மீதான தாக்குதல் முயற்சி ஒன்றில் வீரச்சவைத் தழுவிய கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலியின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாய் மண்ணின் விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
[size=4]ஓயாத அலைகள் - 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] [size=5]http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]
-
- 6 replies
- 943 views
-
-
1988ம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சியை கைப்பற்றியதும், அவருக்கு பக்கத்துணையாக இருந்த இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுருந்த லெப். ஜெனரல். ரஞ்சன் விஜையரட்னாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார். அதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் கொழும்பில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு JVP என்னும் கெரிலா அமைப்பு, சிங்கள இளைஞர்களைத் திரட்டி ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தது. வடக்கில் தமிழர்களாலும், கிழக்கில் சிங்கள இளைஞர்களாலும், சிங்கள அரசு நெருக்கடியைச் சந்தித்திருந்தது. அந்த நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தமையால், புலிகளின் கவனம் அதிலேயே இருந்தது. அதனால் பிரேமதாசவின் கவனம் JVP இன் பக்கம் திரும்பியது. ஆட்சி அமைத்ததும் ரஞ்சன…
-
- 0 replies
- 1.6k views
-
-
எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….! 22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான். இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்திருக்கின்றார்கள். இ…
-
- 6 replies
- 988 views
-
-
எத்தடை வரினும் எம்படை நகரும் கப்டன் அன்பரசி படையணி எத்தடை வரினும் எம்படை நகரும் அன்பரசி படையணியின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். 29.07.1995ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் 4 ஆம் முச்சந்தி சிறிலங்கா படை முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளது ஞாபகமாகவே மட்டு – அம்பாறை மகளிர் படையணிக்கு அன்பரசி படையணி என்று பெயர் சூட்டப்பட்டது. லெப். கேணல் மதனாவினது சுறுசுறுப்பையும், துணிவையும், புத்துணர்வையும், களங்களில் படைநடத்தும் திறமையையும் கண்ணுற்ற மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி அவர்கள் படையணியின் முதல் சிறப்புத் தளபதியாக லெப். கேணல் மதனாவை அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தார்.…
-
- 0 replies
- 1k views
-
-
மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களை நான் போற்றுகின்றேன். உங்கள் குழந்தைகள் தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தவர்கள். இந்த உன்னதமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்காக உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமைகொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகள் சாகவில்லை சரித்திரமாகிவிட்டார்கள். என்ற தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனைக்கு அமைவாக மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வின் நீட்சியாக யாழ்கள உறவுகளும் மாவீரர்களைப் பெற்றெடுத்த அந்தப் பெற்றவர்களை அறிந்து தெரிந்திருந்தால், அவர்கள் இருக்கும் போதே போற்றி மதிப்பளிப்பது போற்றுதற்குரியது. மொறிசம்மா என்று செல்லமாக அழைக்கப்படும் தியாகராசா…
-
- 0 replies
- 435 views
-
-
திருகோணமலை துறைமுகக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் ஓசையினியவன் மற்றும் கப்டன் பொறையரசு ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 15.09.2001 அன்று திருகோணமலை துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலின்போது கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன் இரத்தினம் ராஜ்குமார் அரியாலை, யாழ்ப்பாணம் கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் (பொறையரசு) செல்வரத்தினம் யோகேஸ்வரன் நெளுக்குளம், வவுனியா தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
-
- 10 replies
- 837 views
-
-
14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிய நான்கு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு இன்றாகும் . வாகரை - வாழைச்சேனை சாலையில் கிருமிச்சை சந்தியில் அமைந்திருந்த படைமுகாம் மீதான தாக்குதலின்போது லெப்.கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) மேஜர் சோழவளவன் - சோழன் (சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை - மண்டூர், மட்டக்களப்பு) மேஜர் நிர்மல் (முருகேஸ் ராதா - வைக்கலை, மட்டக்களப்பு) மேஜர் தர்மினி (சுந்தரலிங்கம் ராஜினி - தும்பங்கேணி, மட்டக்களப்பு) …
-
- 14 replies
- 6.4k views
-
-
லெப்டினன்ட் செல்லக்கிளி வேர் விட்ட விடுதலையின் உயிர் மூச்சு செல்லக்கிளி, அம்மான், சந்திரன்…. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த வாகனத்தையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி, ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும் பழுத…
-
- 7 replies
- 2.1k views
-
-
லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள் இம்ரான்-பாண்டியன் யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்) கொக்குவில் – யாழ் 23.03.1960 – 09.01.1988 (விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.) இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழ…
-
- 12 replies
- 1.6k views
-
-
தமிழீழம் - இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே அல்லாமல், இருவேறு துண்டுகளின் கூட்டல்ல.வல்லிபுரக்கோயில் மணற்காட்டில் – அலைகளாய் விழுந்து உவகையோடு எழுகின்ற இந்துமா ஆழி, ‘எங்கள் கடல்!’ என்றால் ‘குமணக்’ கரையின் மணலில் உருண்டு, கண்களை எரித்துச் சுகம் விசாரிப்பதும் ‘எங்களோடது!’ தான்; ‘கருவேலன் காட்டு’ ஓரத்தில் மோதி பாரையோடு சுறாவும் திருக்கையும் தருவதும் ‘நம்மடது’ தான் – தமிழீழம் ஒன்று தான்! வாளேந்திய சிங்கம்’ தானேந்திடும் வாளால் துண்டாக்கிப்போட்ட பின்பு, கூட்டாகிச் ‘சங்கம்’ அமைக்க – இது சோவியத் சாம்ராஜ்ஜியமும் அல்ல; துகள்க்ளாக்கிப் பிளவுபடுத்தி சீரழித்துச் சிதைத்துவி…
-
- 13 replies
- 2.9k views
-
-
வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் 26-09-2001 தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது. ஈழ விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் ப…
-
-
- 17 replies
- 1.6k views
-
-
தமிழீழ படைத்துறைச் செயலர் கேணல் தமிழேந்தி கேணல் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . உண்மையில் கேணல் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்( கார்த்திகைப்பூ) செடிகளும் , கொடிகளால் ஆன குடில்களும் ,வாழை, அன்னாசி,மரவள்ளி,தென்னை என பல வகை மரங்களாலும் சூழ்ந்த அழகிய இடமாகவே காணப்படும். அவரது படுக்கை அறையிலே ஒரு வேப்பமரப்பலகையின…
-
-
- 8 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட யாழ்.தேவி படைநடவடிக்கையில் கிளாலி நோக்கிய முன்நகர்விற்கு எதிரான முறியடிப்புச் சமரில் 29.09.1993 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நரேஸ்(நாயகம்) உட்பட்ட மாவீரர்களினது 17ம் ஆண்டு நினைவு நாளும் 29.09.2006 அன்று யாழ். தீவகக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ரதன்(பொன்முடி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 10 replies
- 2.3k views
-
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் முதலாம் நாள்…! AdminSeptember 15, 2021 செப்.15 – 1987 🔴தியாக பயணத்தின் முதலாவது நாள்! காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடை பெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வாக்கி டோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார். அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக…
-
- 1 reply
- 1.1k views
-
-
சம்பூர் என்கிற விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊரில் நான் நிற்கின்றேன். எனக்கு முன் ஒரு கப்பல் சிவப்பு மஞ்சல் நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அருகில் சென்று பார்க்கலாம் என சென்றேன். என்னையறியாமல் ஒரு கரும்புலியின் படத்திற்கு முன்னால் நின்றுகொண்டேன். கரும்புலி திருமாறன் என எழுதப்பட்டிருந்தது. எந்த ஊர், விபரங்கள் என எதையுமே வாசிக்காமல் அடுத்த படத்தின் பக்கம் பார்வையை திருப்பினேன். பத்தொடு பதினென்றாக அதையும் பார்த்துவிட்டு சென்றாலும் திருமாறன் என்ற அந்த பெயர் மனதில் பதிந்துவிட்டது. ஏதாவது குறும்புகள் செய்துவிட்டு கோபக்கார தந்தையிடம் மாட்டிக்கொள்ளாமல் எதிர் வீட்டு வேலிகளை பிய்த்துகொண்டு ஓடி , அந்த வீட்டின் முன் நின்று, துரத்திய தந்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .! வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .! உளவுத்தலமைக்கு கடைசிவரை மதி உரை (உறுதி) கொடுத்து உயர்ந்தவனே உயிர்போகும் இறுதிவரையும் உயர் இரகசியங்களை தன்னகத்தே காத்தவனே.! வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் இவனே.! தேடித் தேடித் தான் படித்து தேர்ந்தெடுத்து பலரை வளர்த்து விட்ட வித்தகனே.! எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கணித்து மதிப்பீடுகளை மனம் கோணாது முன்வைத்த விவேகனே.! ஈழப்போரின் கடசிக்களம்வரையும் ஈகம் ஒன்றை தவிர வேறொன்றையும் தேர்ந்தெடுக்காத புனிதனே விழுப்புண் ஏற்றபோதும்.! விசாரணையில் சூட்சுமம் அவிழ்த்து விசமிகள் வேரறுத்த வீரனிவன் கற்றுக் கற்பித்து கணித்தவற்றை.! இவன் கிளைகளாய் இருந்து அ…
-
- 1 reply
- 955 views
-
-
ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் சிவமோகன் உட்பட்ட 14 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 13.12.1999 அன்று ஓயாத அலைகள் 3 தொடர் நடவடிக்கையின் போது யாழ். குடா மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது 14 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். யாழ். மாவட்டம் கட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற சமரில் லெப்.கேணல் சிவமோகன் (சதாசிவம் கிருபாகரன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) கப்டன் ஈழத்தரசன் (முருகையா கேதீஸ்வரன் - பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி) லெப்டினன்ட் கவிகரன் (குணேஸ் ரவீந்திரன் - பெரியபோரதீவு, மட்டக்களப்பு) லெபடினன்ட் மலைமகன்/மலைமாறன் (அழகிப்போடி ஜெயா - நாவற்காடு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அகிலநாதன் (வேல்முருகு சுபாநாயகன் - அம்ப…
-
- 9 replies
- 983 views
- 1 follower
-
-
இம்ரான் பாண்டியன் படையணியின் ஒரு பிரிவினைச் சேர்ந்த போராளி & மாவீரர் மதுரன் அவர்கள்
-
- 0 replies
- 271 views
-
-
மாவீரர் நினைவுகள் - சந்தோசம் மாஸ்டர் | லெப் கேணல் ராதா | எழுதியவர்: ஜூட் பிரகாஷ் பரி யோவான் கல்லூரியின் பழைய மாணவன், அபாரமான தமிழ் மொழி ஆற்றல் படைத்தவர். அரியாலையில் இருந்து வந்து, பரி யோவானில் படித்து, உயர்தரத்தில் சித்தியெய்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பெளதீக விஞ்ஞானப் பிரிவில் (Physical Science), பட்டம் பெற்று, திருகோணமலையில் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது, இயக்கத்திற்குப் போனவர். எண்பதுகளில் புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் தனித்துவமாக மிளிர்ந்த குணங்குறிகளிற்கு இவரும் ஒரு அடையாளம். திருகோணமலை மாவட்டத் தளபதியாக இருந்தவர். இந்திய இராணுவத்துடன் சண்டை தொடங்கிய போது, 21 ஒக்டோபர் 1987 அன்று, கோண்டாவிலில் இடம்பெற்ற ஒரு தீரமிகு சண்டைய…
-
- 0 replies
- 559 views
-
-
தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்ந்த மேஜர் டேவிட். ஒரு போராளியின் புனிதப்பயணம். தமிழர் வரலாற்றை நிலைநிறுத்தும் வரலாற்றுப்போரில், வரலாறாகிப்போன மேஜர் டேவிட், உண்மையில் ஓர் புரட்சி வீரன். தென்தமிழீழ எல்லையில், சிங்களத்தின் நிலப்பறிப்பில் 1963ம் ஆண்டு காலப்பகுதியில் உருவான அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்ற பழந்தமிழ் ஊரில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் என அடையாளப் படுத்தப்பட்ட இடத்தில் வாழ்ந்த தமிழ்க்குடும்பத்திலிருந்து எழுந்த விடுதலைப் போராளிபற்றிய நினைவுப்பதிவில் தொடக்கத்தின் முதல் அத்தியாயமாக நாம் கண்ட போராளிகளில் ஒருவராக டேவிட் அவர்களின் போராளி வாழ்க்கை அமைந்திருந்தது. அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாது எல்லைத் தமிழ் ஊர்களி…
-
- 0 replies
- 655 views
-
-
[size=4]“ஓயாத அலைகள் - 4” நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன், கப்டன் சரத்பாபு ஆகியோரினதும், மட்டக்களப்பில் காவியமான லெப். அருள்மதன் என்ற மாவீரரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 24.10.200 அன்று “ஓயாத அலைகள் - 4” நடவடிக்கைக்கு வலுச்சேர்ப்பதற்காக நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை ஒன்றின்போது கரும்புலி மேஜர் சோபிதன் (துரைச்சாமி ஜீவகணபதி - மூன்றுமுறிப்பு, வவுனியா) கரும்புலி மேஜர் வர்மன் (மேனவன்) (வடிவேல் தங்கத்துரை - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) கரும்புலி கப்டன் சந்திரபாபு (குமரப்போடி லிங்கராசா - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் மட்டக…
-
- 7 replies
- 733 views
-
-
லெப்.கேணல் ஜொனி இயற் பெயர் - விக்கினேஸ்வரன் விஐயகுமார் இயக்கப் பெயர் - ஜொனி தாய் மடியில் - 21.05.1962 தாயக மடியில் - 13.03.1988 தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்தார். 1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைக ளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் த…
-
- 0 replies
- 716 views
-
-
இதுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரரானவர்கள் பற்றி நிலவன் அவர்கள் தந்த விபரம். 1989ம் ஆண்டு நவம்பர் 27 முதல் ஆண்டுதோறும் மாவிரர் நாள் அனுட்டிக்கப்படு வருகிறது. 2008ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் மாவீரர் எழுச்சி நாள் தமிழீழத்தில் அனுட்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் எழுச்சி நாள்ஆகும். எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை -27. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை அந்த வருடத்தின் அக்டோபர் 31ம் திகதி வரை 22,114. மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்திருந்தது. இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர். கரும்புலிகள் 372 இவர்களில் தரைக் கரும்புலிகள் 113 மற்றும் கடற்கர…
-
- 0 replies
- 620 views
-
-
அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி. மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே உரித்தான வளர்ச்சி கண்டு நிற்பதைக் உலகம் புரிந்து கொண்டுள்ளது. அன்று எமது குரல்கள் அடங்க்கிக்கிடந்தன, எமக்கான குரல்களும் கேட்காது கிடந்தன, இன்று எட்டி நின்றவர்களும் எமக்காக குரல்கொடுகின்றனர். இது ஒரு கால மாற்றம் இந்த மாற்றத்தை எம் இனத்திற்கு பெற்றுத் தந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில் அத்திவார்கக் கற்களாகி நிற்கும் விக்டர் போன்ற வீரத்தலபதிகளை தமிழி…
-
- 1 reply
- 1.4k views
-