மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. இப்பதிவை எழுதுவதற்கு நட்சத்திரக் கிழமையில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. சில சங்கடங்களைத் தாண்டி எழுதப்பட்டே ஆகவேண்டிய பதிவிது.பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர். புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைக…
-
- 2 replies
- 854 views
-
-
உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன் உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன் தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம். ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க…
-
- 1 reply
- 850 views
-
-
18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட || ஓயாத அலைகள் – 1 || படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் – 1 என்ற பெயர் சூட்டப்பட்டு தொடங்கப்பட்ட இந்த படை நடவடிக்கையில் முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டது. இதன்போது ஆயிரத்திற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். ஆட்டிலறிப் பீரங்கள் இரண்டு உட்பட பலகோடி ரூபா பெறுமதியான போர் கருவிகள் மீட்கப்பட்டன. இந்த நகர்வை முறியடிக்கும் நோக்கில் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினரின் நகர்வும் முறியடிக்கப்பட்டு சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட…
-
- 7 replies
- 846 views
-
-
லெப். கேணல் அருணா துயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக் கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன். வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள மா, பலா, பனை, தென்னை போன்ற பயன்தரு மரங்களையும் தன் அணிகலனாக அணிந்திருந்தாள் துன்னாலை அன்னை. அருணா துள்ளி விளையாடிய பெருமைக்கும், கறுப்பு மலர் கரும்புலிகள் வரிசையில் தன் பெயரை முதலாவதாகப் பதித்த கப்டன் மில்லரை வளர்த்தெடுத்த பெருமைக்கும் உரியவள் இவளே. இராசேந்திரம் பூமணி தம்பதிகளின் அருந்தவப் புதல்வனாக சசிகரன், கண்ணன் என்னும் செல்லப் பெயருடன் 16.12.1973ல் அவதரித்தான். அன்னை அரவணைப்பிலும் தந்தையின் வழிகாட…
-
- 1 reply
- 844 views
-
-
கடற்கரும்புலி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்புலி மேஜர் அந்தமான் வீரவணக்க நாள் இன்றாகும். 16.08.1999 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகு மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்புலி மேஜர் அந்தமான் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். || விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள். தாய்மண்ணின் விடிவிற்காக 16.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மதன், லெப்டினன்ட் யாழ்வேங்கை, லெப்டினன்ட் சங்கமன், லெப்டினன்ட் பொற்தேவன், லெ…
-
- 1 reply
- 843 views
-
-
|| முல்லைக் கடற்பரப்பில் காவியமான 4 கடற்கரும்புலிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். பாவடியால் பாட்டெழுதி… முல்லைக் கடற்பரப்பில் 12.08.1999 அன்று விநியோக நடவடிக்கை ஒன்றின் போது கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் சிவரூபன், மேஜர் இசைக்கோன், மேஜர் யாழ்வேந்தன், கப்டன் கானவன் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னை மடிதன்னில் தாய்மண்ணின் நினைவுடன் கலந்த உயிராயுதங்களுக்கு எம் வீரவணக்கம். || உயிராயுதம் பாகம் : 08ல் இவ் உயிராயுதங்களின் உயிரோட்டம் 0.39:45 – 0.49:40 வரை நீள்கிறது…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மா…
-
- 5 replies
- 840 views
-
-
-
- 0 replies
- 839 views
-
-
கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் அவர்கள் பற்றி நினைவில் நிலைத்தவை... பலதடவை படகு கட்டுமானத்தில் கரும்புலிப்படகு ( இடியன் ) வடிவமைக்கும் போது அதில் இயந்திரம் இருப்பு இணைக்கும் வேளையில் பல சில தாக்குதல் வழிமுறைகள் அனுபவங்கள் பற்றி பொறுப்பாளர் மற்றும் அந்த தாக்குதலில் பங்கு பற்றிய சக போராளி ( அக்காமார்கள் , அண்ணாமார்கள் ) கூறுகையில் பல கடல் கருவேங்கை காவியம் மனதில் பதிந்து நிற்கின்றன... இம்மாவீரன் அதிக பேச்சாற்றல் , தோழர்கள் இழப்பை தாங்கத ஓர் நட்பின் இமையம் , தாய்மண்ணின் மடியில் சிங்களத்தில் இனவழிப்பின் அரங்கேற்றமும் , இயற்கை அனர்த்தமும் சேர்ந்து வதைத்த போது நாளும் வனத்தில் தனிமையில் இவனின் மனம் உருகி விழிநீர் கசிந்ததை அந்த மரத்தடி வேர்களும் , துயிலும் நீளும் இரவுகளும் …
-
- 2 replies
- 837 views
-
-
சோதனைக்குள்ளேயே சாதனை படைத்த கரும்புலி மேஜர் தனுசன்...! சோதனைக்குள்ளேயே சாதனை படைத்தவன். வேதனை தந்தவர் வீட்டினுள் ஆட்லறிகள் உடைத்தவன். திருகோணமலையில் நாளும் துயரச் செய்தியோடு விடியும் கிராமங்களில் ஒன்றில்தான் தனுசன் பிறந்தான். நாளுக்கு நாள் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், சித்திரவதைகள் என்று அந்த ஊரிற்கே பழகிப்போன அவலங்கள் அது. நித்தம் ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். சின்ன வயதில் காயங்கள் மேல் காயங்களாக அவனில் பதிந்த காட்சிகள் ஒவ்வொன்றும் மாறாத தளும்பாக என்றும் அவனின் நினைவில் இருந்தன. அந்த நினைவுகளிலிருந்து அவன் தன்னை மீட்டுக்கொள்ள முடியாதவனாய் அலைந்தான். அவன் சிந்திக்கத் தொடங்கியபோது அந்த நாட்கள் மிகக் …
-
- 0 replies
- 836 views
-
-
திருகோணமலை துறைமுகக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் ஓசையினியவன் மற்றும் கப்டன் பொறையரசு ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 15.09.2001 அன்று திருகோணமலை துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலின்போது கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன் இரத்தினம் ராஜ்குமார் அரியாலை, யாழ்ப்பாணம் கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் (பொறையரசு) செல்வரத்தினம் யோகேஸ்வரன் நெளுக்குளம், வவுனியா தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
-
- 10 replies
- 836 views
-
-
(மூன்று நாட்கள் தொடர்ந்த பெரும் சமரில் விடுதலைப்புலிகளின் முதன்மை தளபதிகள், கட்டளைதளபதிகள், தாக்குதல் தளபதிகள், மகளிர் படையணி தளபதிகள் என 700 இற்கும் மேற்பட்ட போராளிகளின் இரத்தத்தில் தமிழர் தேசம் சிவந்த நாட்கள் அவை.. ) வரலாற்று நாயகர்களில் வரலாறுகள் என்றும் எங்களுடன்! புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அக்கினி சமரில் வீரவரலாறான எங்கள்அங்கினி குஞ்சுகளை நச்சுக்குண்டுகள் கொண்டு இனஅழிப்பினை அழித்த சிங்கள இனவெறியாளர்களின் இனக்கொடூரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அக்கினிகுஞ்சுகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம...
-
- 0 replies
- 835 views
-
-
மாவீரன் அன்புவின் 36வது வீரவணக்க நாள் இன்றாகும்! AdminApril 16, 2021 நண்பர்களுடன் உணவருந்தும்போது, எதிர்பாராது கைக்குண்டு கழன்றுவிட, அந்நண்பர்களைக் காப்பாற்றுவதற்காக குண்டை தனது வயிறோடு அணைத்து வீரகாவியமான மாவீரன் அன்புவின் 36வது வீரவணக்க நாள் இன்றாகும். ஓ எம் தோழா உன் அன்பான நடத்தையால் உனக்கு அன்பாக நாமிட்ட பெயர் அன்பு. உன்னை இழந்தோம். எம் அன்பை இழந்தோம். அன்பு என்ற பெயரைக் கேட்டு சிலர் உன்னை சிறுவன் என்றோ மிருதுவான தோற்றமுடையவன் என்றோ நினைக்கலாம். 6 அடிக்கும் கூடிய உனது உயர்ந்த தோற்றத்தையும், தினவெடுத்த திரண்ட தோள்களையும் எம்மால் என்றும் மறக்கமுடியாது. உன்னால் பயிற்றப்பட்ட எம் இளைஞர்கள் நீ இறந்த செய்தி கேட்டு உன்மீது கொண்ட அன்பால் அவர்கள் அடைந்த துயர…
-
- 0 replies
- 834 views
-
-
வேகுந்தீ ஊடேயும் ஆகு(ம்)தி யானீரே வேங்கைம கர்க்கென்றும் வீழ்விலை யே! சாகுந்தீ ஆனாலும் போகும்பு லிக்கென்றும் சாவில்லை யாமிது சத்திய மே! தாகம்தீன் தெரியாது தூரம்தான் சலியாது போகும்தி சைகாணும் சூரியர் ரே! மோகம்பெண் நாடாது வேள்விக்குக் கோடாது வேருக்குள் நீராகும் மாவீர ரே! வீட்டினுள் பெண்களாய் வீழ்ந்துகி டக்காமல் நாட்டுக்காய் உதிர்ந்த நாரிய ரே! காட்டிக்கொ டுப்பாரும் கண்டதி சைக்குள்ளும் கால்கள்ப தித்தவெம் காரிகை யே! அண்ணன்தி சையோடும் ஆகிப்ப றந்தேகும் வண்ணக்கி ளியான மாதுக ளே! மண்ணின்ம டிக்குள்ளே மானப்போர் செய்திட்ட வஞ்சிக்கு என்றென்றும் சாவிலை யே! செங்களத் தின்னுயிர் சேரம ரித்திட்ட எங்களின் பிள்ளைக ளானவ ரே! இங்குபு லத்தெங்கும் ஈகச்…
-
- 2 replies
- 832 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். வள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார். இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 832 views
-
-
மட்டக்களப்பு அம்பிலாந்துறை சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படை முகாம் மீதான தாக்குதலின்போது காவியமான 27 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டம் அம்பிலாந்துறைப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படைமுகாம் மீது 24.08.1995 அன்று விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டு படைத் தரப்பிற்கு பலத்த அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தாக்குதலின்போது 27 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: மேஜர் கதிரேசன் (ஜோன்சன்) (காசிபதி கமலநாதன் - சல்லிதீவு, அம்பாறை) லெப்டினன்ட் சுரேந்தர் (செல்வராசா சங்கர் - கரடியனாறு, மட்டக்களப்பு) லெப்டினன்ட் முகுந்தராஜ் (கருவல்தம்பி காங்கேயன் - செங்கலடி, மட்டக்களப்பு) ல…
-
- 13 replies
- 831 views
- 1 follower
-
-
வவுனியா மாவட்டத்தில் ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் பாவரசன் உட்பட்ட 26 மாவீரர்களினதும், கிளாலிக் கடலில் காவியமான கப்டன் தீசன் என்ற மாவீரரினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 01.09.1997 அன்று வவுனியா புதூர் பகுதியை வல்வளைக்கும் நோக்குடன் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான முறியடிப்புச் சமரில் கப்டன் தேவகலா (ஆறுமுகம் பவானி - ஜெயந்திநகர், கிளிநொச்சி) கப்டன் ஆந்திரா (இராமன் பரமேஸ்வரி - கட்டுடை, யாழ்ப்பாணம்) கப்டன் பிரதீபா (ஆறுமுகம உமாவதி - முள்ளியவளை, முல்லைத்தீவு) கப்டன் கானகப்பிரியா (நடராசா சசிகலா - ஒலுமடு, முல்லைத்தீவு) லெப்டினன்ட் கோகுலராஜன் (கோபுராஜ்) (கோபாலப்பிள்ளை பாஸ்கரன் - குருமன்வெளி,…
-
- 8 replies
- 831 views
-
-
வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம் http://www.eelamview.com/2011/12/12/anton-balasinga/
-
- 0 replies
- 830 views
-
-
தமிழீழ தாயக விடுதலைப் போரில் 1996ம் ஆண்டு வீரச்சாவை அணைத்துக் கொண்ட மாவீரர்களில் 1300ற்கும் மேற்பட்ட மாவீரர்களின் ஒளிப்படங்கள் வீரவேங்கைகள் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. கீழுள்ள இணைப்பில் சென்று படங்களைப் பார்க்கலாம். http://veeravengaikal.com/index.php/heroes-details/maaveerarlist?start=7783
-
- 0 replies
- 830 views
-
-
வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.” “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்” “தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதிரி, தனது நிலைகளை மேலும் பலப்படுத்திய போதும், நாம் எம் திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்தோமே தவிர கைவிட்டுவிடவில்லை. எல்லாக் கவசமும் அணிந்த “கோலியாத்” ஆக பூநகரி முகாம் போர்க்கோலம் பூண்டு நின்ற போதும், இறுமாந்திருந்த அரக்கனும் சிறுவனும் போலான போதும் எம்மைக் “குறிதவறாத தாவீதாய்” ஆக்கினர் எம் வேவு வீரர்கள். வேவு வீர…
-
- 1 reply
- 828 views
-
-
|||| முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட || ஓயாத அலைகள் – 01 || படை நடவடிக்கையில் 19.07.1996 அன்று இரண்டாம் நாள் சமரில் வீரகாவியமான ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்..|||| முல்லைத்தீவு படைத்தளம் மீது 18.07.1996 அன்று தொடங்கப்பட்ட || ஓயாத அலைகள் – 01 || நடவடிக்கையில் படைத்தளத்தின் பெரும்பகுதி முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் ‘ 19.07.1996 ‘ படைத்தளத்தின் எஞ்சிய பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முல்லைத்த…
-
- 4 replies
- 827 views
-
-
உங்களுக்கு எழுத்துருவிலான பதிவா அல்லது இவ்வகையான பதிவா இலகுவானது என மனம் திறந்து கூறுங்கள் என பணிவன்புடன் கேட்கின்றோம். நன்றி தேசக்காற்று நிர்வாகம்
-
- 9 replies
- 826 views
-
-
புல்மோட்டைக் கடலில் காவியமான ஆறு கடற்கரும்புலிகள் உட்பட்ட ஏழு மாவீரர்களினதும், அம்பகாமத்தில் காவியமான 64 மாவீரர்களினதும், ஏனைய பகுதிகளில் காவியமான 4 மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 14.10.1999 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் படகுகள் கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை கடற்படைப் படகுகளை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த கடற்கரும்புலிகளின் இரு படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்தபோது ஆறு கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். கடற்கரும்புலி லெப்.கேணல் அருந்தவம் (கிருஸ்ணபிள்ளை உதயகுமார் - மட்டக்களப்பு) கடற்கரும்புலி லெப்.கேணல் பழனியப்பன் (…
-
- 10 replies
- 825 views
- 1 follower
-
-
11.12.2001 அன்று திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது லெப்.கேணல் மனோஜ் (பாலசிங்கம் வந்தகுமார் - உவர்மலை. திருகோணமலை) மேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் - மாமாங்கம், மட்டக்களப்பு) லெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி - மூதூர், திருகோணமலை) 2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் - மூதூர், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநேரம் மட்டக்களப்பு வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் - மத்தியமுகாம், அம்பாறை) கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் - மல்வத்தை 2,…
-
- 8 replies
- 824 views
-
-
|| டோறா மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து 15.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். அலைகளும் நூரைகளும்…. திருமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு அணி மீது 15.08.1999 அன்று அதிகாலை கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. கடுமையான சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையின் டோறாப் படகு ஒன்றை மீது கடற்கரும்புலிகள்…
-
- 7 replies
- 824 views
-
-
[size=3] [size=4]11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் வேங்கை, லெப்.கேணல் திருவருள் உட்பட்ட கடற்புலிகள் மற்றும் லெப்.கேணல் தமிழ்மாறன்(கஜேந்திரன்) ஆகியோரினதும் நினைவு நாள் இன்றாகும்[/size] [size=4][/size][/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size] [size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size] [size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][size=4] [/size]
-
- 7 replies
- 823 views
-