மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
மாவீரர் நினைவுகள் - உதிரம் கொடுத்து உயிர்காத்தவன் - மித்யா கானவி கப்டன் மணிமாறன்(சிலம்பரசன்) பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி நெடுஞ்சாலையை கைப்பற்றி வன்னியின் பூகோள ஒருமைப்பாட்டை சிதைத்து போராட்டத்தை கூறுபோடுவதற்காக தொடங்கப்பட்ட இராணுவ …
-
- 0 replies
- 630 views
-
-
யாழ். வலிகாமத்தில் 30.10.1995 அன்று சூரியக்கதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் அகிலா - லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாளும், 30.10.2006 அன்று மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி சாவடைந்த லெப்.கேணல் வரதா(ஆதி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தம்மை அர்ப்பணித்து வழிமூடிய இந்த வீரவேங்கைளிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 15 replies
- 2.7k views
-
-
போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா - கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 24ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் என எண்ணியிருந்த போதும் குறுக்கிட்ட வீரமரணம் அது நிறைவேறத் தடையாகிவிட்டது. காலம் குறுகி…
-
- 10 replies
- 3.1k views
-
-
தாயக விடுதலைக்காக 1987ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் வீரச்சாவடைந்த 1185 மாவீரர்களில் ஒரு குறிப்பிட்டளவானோரின் ஒளிப்படங்களே இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய மாவீரர்களின் ஒளிப்படங்கள் படிப்படியாக இணைக்கப்படும். இணைக்கப்பட்டுள்ள விபரங்களில் தவறுகள் எதுமிருந்தால் தயவு செய்து எமக்கு அறியத் தரவும். மாவீரர்களின் விபரங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்.
-
- 8 replies
- 1.7k views
-
-
[size=2] [size=3]ஈழப் போராட்டத்தில் பாடல்களின் பங்கு அளப்பரியது. வெற்றிகளின் பின்னால் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாடல்கள், வீழ்ந்த வீரர்களின் நினைவுப்பாடல்கள், மக்களின் துன்பதுயரங்களை வெளிப்படுத்தும் பாடல்கள், தலைவரைப் பற்றிய பாடல்கள் என பலவிதங்களில் அமைந்த பாடல்கள் போராட்டத்தில் மிகப்பெரும் உந்துசக்தியாக அமைந்தன. ஈழப்போராட்டத்தின் இசையுலகில் தனக்கென்றொரு முத்திரை பதித்துச் சென்ற பாடகன் ஒருவனின் பதினைந்தாம் ஆண்டு நினைவுநாள் ஆவணிமாதம் முதலாம் நாளாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு. போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், எந்தவிதமான படைக்கலங்களெனினும் அவற்றின் இயங்குநிலைகள் தடைப்பட்டுப் போகும் வேளைகளில் அவற்றை மறுசீரமைத்து, பூச்சியவழுத் திருத்தம் செய்து, நேர்த்தியான சுடுநிலைக்குக் கொண்டுவரும் சிறந்த போரியல் ஆசானாகவும் எமது விடுதலை இயக்கத்தின் மிகச்சிறந்த முதல்தரக் குறிச் சூட்டாளராகவும் பெருந் தளபதிகளில் ஒருவராகவும் விளங்கியவர் பிரிகேடியர் கடாபி அவர்கள். (மேலதிக குறிப்புகளுக்கு இந்த இணைப்புக்குச் செல்லவும்) அதேபோல், எமது விடுதலை இயக்கத்தின் கடற்புலிகள் அணியில் எந்தவொரு வெளியிணைப்பு இயந்திரமும் இயங்குநிலைத்தடை ஏற்படும்போது, அதனைத் திருத்தம் செய்து, மறுபடியும் இயங்குநிலைக்குக் கொண்டுவரும் வகையில் மிகத் திறமையான வெளியிணைப்பு இயந்திரப் பொறியியலாளனாகச் செயற்ப…
-
- 0 replies
- 71 views
-
-
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 11 replies
- 2k views
-
-
பிரிகேடியர் சொர்ணம் - உதிக்கும் திசையில் உதித்த ஆதவன் இரத்தினம் கவிமகன் தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மணலாறு காட்டிடை மேவிய தளபதி பிரிகேடியர் சொர்ணம் தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள் சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்…
-
- 0 replies
- 910 views
-
-
31.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் நிசாரின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/31 தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எனது வீரவணக்கங்கள்.
-
- 10 replies
- 1.4k views
-
-
புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில் துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன். தனது கண்முன்னால் தனக்கும் தனது சமூகத்திற்கும் நிகழ்ந்த அவலங்களின் சாட்சியாக, இந்த இழிநிலை வாழ்க்கை எமக்கு வேண்டாம், எமது சந்ததிக்கும் வேண்டாம் என்ற தெளிவில் பரிணமித்தவன். அந்த அவலங்களின் எதிர்வினையாக, விடுதலை ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்துப் பயணித்த போராளி, அதற்காக தன்னை உரமாக்கிய அவனது இருபதாவது நினைவுநாள் இன்று. சுதந்திரப் போராட்டத்தின் பங்கெடுப்பு என்பது ஈர்ப்பு, கவர்ச்சியின் சமன்பாடல்ல. அது சமூகம் மீதான அக்கறையின் வெளிப்பாடாக, இனத்தின் மீதான அடக்குமுறைச் சம்பவங்களின் தொடர்வினையாக, பாதிப்பின் வெளிப்பாடாக உருவாகின்றது. அது வாழ்வி…
-
- 0 replies
- 841 views
-
-
24.06.1997 அன்று பெரியமடுப் பகுதியில் ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 9 மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலம் முன்னேறி பெரியமடுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரால் அமைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி - மோட்டார் ஏவுதளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் படையணிகளால் 24.06.1997 அன்று ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் பல நூற்றுக் கணக்கான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன்…
-
-
- 15 replies
- 1.7k views
- 1 follower
-
-
விழியில் சொரியும் அருவிகள் எம்மை விட்டு பிரிந்தன குருவிகள் பகைவன் கப்பலை முடித்தனர் திருமலையில் வெடியாய வெடித்தனர் தம்பி கதிரவன் எங்கே ?…. தணிகைமாறனும் எங்கே ?… மதுசாவும் எங்கே ?… தங்கை சாந்தா நீ எங்கே ?… தாயின் மடியினில் அங்கே கடற்தாயின் மடியினில் … விழியில் சொரியும் அருவிகள் … ” உயிரிராயுதம் தன் உடன் பிறப்புக்கு வரைந்திட்ட ஓவியம் “ ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 04 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! வ…
-
- 4 replies
- 917 views
-
-
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட 7 போராளிகளின்…. அக்டோபர் 9, 2013 | வீரவணக்க நாள். || முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட 7 போராளிகளின் வீரவணக்க நாள். தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஏழு போராளிகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடியலுக்காக தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள். || முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப் மாலதியின் நினைவில் நீளும் நினைவுகள்… 2ஆம் லெப். மாலதி 26 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த …
-
- 5 replies
- 4.9k views
-
-
11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்
-
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதியருக்கு 19.08.1960இல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு அவதரித்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு ஆக்கிரமிப்பு படை களுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது. லெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். கள முனைகளில் தொடர்ச்சியாக ஓய்வுளச்சல் இன்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர…
-
- 2 replies
- 671 views
-
-
குமாரபுர தமிழினப்படுகொலை நினைவு நாள் (11.02.1996 – 11.02.2017) தமிழீழம் குமாரபுரம் திருகோணமலையின் கிழக்கே, மூதூர் கிளிவெட்டியின் அண்மைய தமிழ்க் கிராம்ம். மகாவலி கங்கையின் கரங்களால் நிதமும் குளிரூட்டப்படும் வரத்தைப்பெற்ற அழகிய பசுமை பூசிய கிராம்ம். எங்கும் அடர்ந்து செழித்த வேளாண் வயல்வெளிகள், பசுக்களும் ஏறுகளும் துள்ளி விளையாட எருமைகள் சகதி குளிர்க்க உழவன் உழவில் தலைநிமிர்ந்து தமிழன் வாழ்ந்த வளமிகு ஊராகும். செழிப்பான இக்கிராமம் கொடுமையான இனவழிப்பை எதிர்கொள்ள என்ன காரணங்கள் என பார்ப்போமானால் 1. இக்கிராமம் ஒரு திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றமாக உருவாக இருப்பதை அறிந்த அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்கள் இரவோடிரவாக தமிழ் மக்களை …
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழீழ தேசத்தையும், தேசியத்தலைவரையும் நேசித்த "நம்பர் வண்" கரும்புலி லெப். கேணல் பூட்டோ.! இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பள்ளிக்குச் செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் நாற்காலி அமர்…
-
- 0 replies
- 526 views
-
-
தமிழீழ தாயக விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய முதல் பெண் மாவீரர் லெப்.மாலதியின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 26 replies
- 4.6k views
-
-
1996 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து லெப். கேணல் பொன்னம்மான் 06ல் அடிப்படைப் பயிற்சியை முடித்து கடற் புலிகளிகள் அணியில் உள்வாங்கப்பட்ட விடுதலை அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டு கனரக ஆயுதப் பயிற்சியில் தனது திறமையான செயற்பாட்டால் பொறுப்பாளர்களின் பாராட்டைப்பெறுகிறான். இவரின் திறமையான செயற்பாடு காரணமாக இவர் அணிகள் பிரிக்கப்படும் போது கடற்புலிகளின் கடற்தாக்குதலணியான சாள்ஸ் படையணிக்குள் உள்வாங்கப்பட்டு அங்கே நடந்த பெரும்பாலான கடற்சமர்களில் அதாவது விநியோகப் பாதுகாப்புச் சமராகிலும் வலிந்த தாக்குதலாகிலும் சரி பங்குபற்றினார் விடுதலை. 1996ம் ஆண்டு தந்திரோபாயப் பின்வாங்கல் மூலம் வன்னிக்கு வந்து மரபுவழிச் சமருக்கான புதிது புதிதாக அணிகளை உருவாக்கினார் …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆனையிறவு படைத்தளம் மீதான “ஆகாய கடல் வெளி” நடவடிக்கையின்போது 14.07.1991 அன்று வெற்றிலைக் கேணியில் தரையிறங்கிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 15 மாவீரர்களின் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.07.1991 அன்று ஆனையிறவு படைத்தளம் மீதான “ஆகாய கடல் வெளி” நடவடிக்கை விடுதலைப் புலிகளால் தொடங்கப்பட்டது. இந் நடவடிக்கையை முறியடிப்பதற்காக 14.07.1991 அன்று ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரின் வெற்றிலைக்கேணிப் பகுதியில் தரையிறக்கப்பட்டு ஆனையிறவு நோக்கிய நகர்வு தொடங்கப்பட்டது. கடற்படைக் கலங்களிலிருந்தும் தரையிலிருந்தும் பலத்த எறிகணை சூட்டாதரவுடன் முன்னகர்ந்த படையினருக்கு எதிராக திரமுடன் களமாடி 15 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர…
-
- 10 replies
- 1.2k views
-
-
களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி On Apr 1, 2020 லெப்.கேணல் பரிபாலினி சந்திரசேகரன் சுரனுலதா நல்லூர், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:06.07.1973 வீரச்சாவு:01.04.2000 நிகழ்வு:கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி அன்றைய நாள், நாம் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறான களநிலைமை அது. எதிரி உசாரடைந்து, எமது நகர்வுகளையே அவதானித்துக்கொண்டிருக்க வேண்டும். நாலா புறமும் கவச வாகனங்களையும், கனரக ஆயுதங்களையும் நிலைப்படுத்திக் காத்துக் கிடந்தவரின் குகைக்குள் புகுந்த எமதணிகளை நோக்கி வாய் பிளந்தன இரும்புக் குழல்கள். எங்கும் நெருப்பு மழை, அந்த அக்கினிக் குழம்புகளுக்கு மத்…
-
- 2 replies
- 1.4k views
-
-
கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் Published By: Vishnu 17 Jan, 2026 | 04:29 AM கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் முத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (16) முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர்கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அக…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
தமிழர் நினைவேந்தல் அகவம்; சுவிசினால் 27.11.2012 காலை 9.00 மணியளவில் சுவிஸ் இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கலில் 2012 இன் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நினைவுக்கல்லிற்கான ஈகச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல் உறுதிப்பிரமாணம் எடுத்தலுடன் நிறைவுபெற்றது. தாயக விடுதலை வேள்வியிலே தம் இன்னுயிர்களை ஈகஞ்செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளை தமிழர் நினைவேந்தல் அகவமும்;, சைவத் தமிழ்ச் சங்கத்தினரும் இணைந்து மதிப்பளித்தனர். அந்நிகழ்விற்குரிய மகத்துவத்துடன் 27.11.2012 மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10.45 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இம்…
-
- 1 reply
- 1k views
-
-
கடற்சமரை வழிநடத்தும் கடற்புலித் துணைத்தளபதி லெப் கேணல் இரும்பொறை மாஸ்ரர் .... உம் வீரம் அலையெறி பகை வென்றிட எம்மண்ணில் பிறப்பாயா எம் கடற்சேனைத் துணைத்தளபதியே ...?
-
- 1 reply
- 696 views
-
-
பருத்தித்துறைக் கடலில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் - கப்டன் மணியரசன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 29.08.1993 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமாக சுப்பர் டோறா அதிவேபீரங்கிப் படகினை தகர்த்து மூழ்டித்து கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்) (சுப்பிரமணியம் நாதகீதன் - அரியாலை - யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் மணியரன் (வேதநாயம் ராஜரூபன் - குடத்தனை, மணற்காடு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
-
- 8 replies
- 1.1k views
-