Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. 12.09.1999 அன்று யாழ். நல்லூர் பகுதியில் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டலெப்டினன்ட் கேணல் செந்தமிழ் (செந்தமிழ்ச்செல்வன்) அவர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளும், மட்டக்களப்பு அரணகல்வில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். http://www.tamilthai.com/?p=26532

  2. லெப்டினன்ட் சங்கர் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து ஒரு வேங்கையின் மரணம்: முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ். சங்கர், சுரேஸ், ஆயுதப்படைகள் வலைவிரித்துத் தேடும் செ.சத்தியநாதன். இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கொரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன். கண் திறக்காத பூனைக்குட்டியாக நெஞ்சில் கனலும் புரட்சிகர உணர்வோடு சின்ன வயதிலேயே இயக்கத்திற்குத் தன்னைத் தானே அர்பணிக்கக் காத்திருந்த வீரமறவன். அரசபடையின் திடீர் முற்றுகையிலிருந்து தப்பிச் செல்லுகையில் சுற்றி நின்று கமாண்டோக்கள் சரமாரியாக வெடிகளைத் தீர்த்த போது காயமுற்று, எங்கள் இயக்கத்தின் முதலாவது களப்பலியாகு…

  3. லெப்டினன்ட் செல்லக்கிளி வேர் விட்ட விடுதலையின் உயிர் மூச்சு செல்லக்கிளி, அம்மான், சந்திரன்…. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த வாகனத்தையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி, ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும் பழுத…

  4. லெப்டினன்ட் ஜோன்சன் நவம்பர் 30, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து தமிழீழ விடுதலைப் போரில் கள பலியான இஸ்லாமியத் தமிழ் வீர மறவன் லெப்டினன்ட் ஜோன்சன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள்” (நாகபடை) சிலகாலம் பரபரப்பை உருவாக்கியது இதற்கு தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியை சேர்ந்த ஜுனைதீன். அரசுக்குத் துணைபோன பிரமுகர்கள் மீது மேற்கொண்ட சகல தாக்குதல் நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியவர் இவர் இக்குழுவுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து இயங்க முடியாமல் போன நிலையில் தனது எதிர்கால பங்களிப்பைத் தமிழீழ விடுதலைப் புலிக…

  5. லெப்டினன்ட் ராஜா தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்டினன்ட் ராஜா (பரமதேவா) மட்டு நகர் மண்ணின் முதல் மாவீரன்! 1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார். 1983 ம் ஆண்டு யூலை இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளையோர்களின் எழுச்சி, புரட்சிவாத உணர்வாக மாறியதன் விளைவில் பரமதேவா என்ற விடுதலை வீரனின் பயணம் ஒரு தளபதியாக, சிங்களப் படைகளை எதிர்த்துத்தாக்கும் களவீரனாக எம்மைக் காண வைத்தது. சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்க…

  6. புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் “லொட லொட” என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு “தெண்டித் தெண்டி”சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள். எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்….பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அவள் சராசரி உயரத்தை விட சற்…

  7. லெப்ரினன்ட் புகழினி புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் "லொட லொட" என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு "தெண்டித் தெண்டி"சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள்.எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்....பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அ…

  8. எமது தேசத்துக்கான விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாம் எத்தனையோ ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கள்,தியாகங்கள்,உயிர்க்கொடைகள் போன்றவற்றைக் கண்டு வந்திருக்கின்றோம்.அந்த வகையில் தமிழீழத் தாயின் வீரப் புதல்வியாகவும் எம் ஒப்பற்ற பெருந் தலைவனின் வீரத் தங்கையாகவும் வாழ்ந்திருந்தாள் லெப்ரினன்ட் மிருணா/முல்லையரசி அக்கா. ஈழத் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் செங்கோலோச்சிய அடங்காப்பற்று என்று அழைக்கப்படும் வன்னிப் பெரு நிலப்பரப்பிலே இயற்கை எழில் கொஞ்சும் வட்டக்கச்சி எனும் ஊரிலே திரு.திருமதி சேதுபதி மண இணையருக்கு ஆசைப் புதல்வியாக மதிவதனி 1974.03.09 இல் பிறந்தாள்.வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக வாழ்ந்த பண்டார வன்னிய மன்னன் ஆண்ட வன்னி வள நாட்டில் பிறந்ததால் மதிவதனிக்கும் வீரம் எனும் சொல்லானத…

  9. 1976 இல் இருந்து 83 வரை பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் ஒன்றாக படித்தோம். 83 a/l இக்கு பின்பு சில காலங்கள் இருவரும் சந்திக்கவில்லை, பின்பு கூடிய சீக்கிரம் சந்திப்போம் என்று நினைக்கவில்லை. 1986 என்று நினைகின்றேன், ஒரு நாள் எங்கள் கிராமத்து தெருவில், சில பெடியல் நடந்து வந்தார்கள். அதில் மெல்லிய உயரமான உருவமும் சாரம் அணிந்த , உடம்பிக்கு பெரிய சேட்டும், சுருள் முடியுடன் ஒருவர் எனது பெயரை சொல்லி கூப்பிட்டார். அது வசந்தன்தான். அதன் பின்பு எங்கள் ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வந்து போவார். சில மாதங்களில் வடமராச்சி லிபேரசன் ஆபரேஷன் தொடங்கி, எங்கள் குடும்பம் தென்மராட்சி இக்கு இடம் பெயர்ந்தது. அதன் பின்பு வசந்தனை சந்திக்கவில்லை. அவரின் நெல்லியடி தாக்குதல் பெரிய செய்தியாகி, அவ…

  10. வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கிய லெப்.கேணல் ரவி குமாரவேல் ரவீந்திரகுமார் விசுவமடு – முல்லைத்தீவு வன்னிமண்ணில் திரு.திருமதி குமாரவேல் இணையருக்கு அன்பு மகனாய்ப் பிறந்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட தொடக்க காலங்களில் லெப்.கேணல் ரவி அவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிறிலங்கா படைகளிற்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார். அமைதி காக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த இந்தியப் படைகளுக்கு எதிராக உறுதியான எத…

  11. வரலாறு அவனை என்றுமே நினைவுபடுத்தும்(லெப்.கேணல்.விக்டரின் நினைவாக..) - ச.ச.முத்து யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர். அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை. யாழ். மண்ணில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித…

  12. வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம் http://www.eelamview.com/2011/12/12/anton-balasinga/

    • 0 replies
    • 830 views
  13. விடுதலைக்கான தேடலாகவே மானிடவரலாறு நகர்ந்து கொண்டிருக்கிறது. நின்றும், நகர்ந்தும், அதிவேகமான பாய்ச்சலுடனும், தேங்கியும், பின்னகர்ந்தும் இந்த விடுதலைக்கான வரலாற்றுதேடல் இன்னும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்து விடுகின்றன. அத்தனை அர்ப்பணமும், ஈகமும், தியாகமும் அவர்களின் வரலாறுமுழுதும் நிறைந்தே கிடக்கும். அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவனாகவே கப்டன் பண்டிதர் நிற்கிறான். தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி - ஆயுதங்களுக்கு பொறுப்பாளன், முதலாவது யாழ்மாவட்ட பொறுப்பாளன், மத்தியகுழு உறுப்பினன் என்று விடுதலைக்கான பல பாரிய பொறுப்புகளை தனது முதுகில் சுமந்திருந்த இந்த மாவீரன் தமிழீழமண்ணில் ஆகுதியாகி இருபத்திஏழு வருடங்க…

  14. 90இற்கு முன்னர் நடுவண் கிழக்கு நாடான குவைத்தில் வசித்து வந்த இவர், 1990 இல் ஈராக் குவைத்தை வல்வளைப்பு செய்தபோது அங்கிருந்து வெளியேறி தமிழீழம் வந்தார். பின்னர் 1995இல் வருவாய்த்துறையில் சேர்ந்து பணியாளராக சம்பளத்திற்கு வேலை செய்த இவர், 1999இல் தமிழீழ வருவாய்த்துறைப் பொறுப்பாளரால் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினராக்கப்பட்டார். பின்னர் இவரது திறமையைக் கணித்த பொறுப்பாளர் 2000 இல் வருவாய்த்துறையின் புலனாய்வுப்பிரிவின் பொறுப்பாளராக பணியமர்த்தினார். புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக பணியேற்ற பின் பெயர் குறிப்பிடவியலா வகுப்பிக்கப்பட்ட பல செயல்களில் ஈடுபட்டார். இட்ட பணியை நேர்மையுடனும் கண்ணியத்துடனும் தாய்நாட்டிற்கான சேவையென கருதி செய்த இவருக்கு 2008 இறுதியில் சோதனைக் காலம் ஒன்று வ…

  15. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். வள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார். இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

  16. வவுணதீவில் வரலாறு எழுதியவள்-சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா. மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும், சோதனையும் நிறைந்த காலமாகவே இருந்தது. மட்டுநகர் காடுகளை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றுமுழுதாக ஆக்கிரமித்திருந்த காலமது. அடிப்படை வசதிகள் கூட இன்றிய நிலையில், நம்பிக்கையும் மனவுறுதியும் மட்டும் பலமாகக் கொண்ட தருணங்களில் மதனா ஒருபோதும் சோர்வடைந்ததில்லை. தனது தோழிகளுக்குத் தெம்பூட்டி உற்சாகப்படுத்துவாள். இதன் பின்னர் படையணியைத் திரட்டி, அப்படையணிகள் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான தாக்குதலிகளில் பங்குபற்ற வகைசெய்தாள். …

  17. வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள் வீரச்சாவடைந்த மாவீரர்கள் பெயர்கள் 1. லெப்.கேணல் மதியழகி 2. லெப்.கேணல் வினோதன் 3. மேஜர் ஆனந்தி 4. மேஜர் நிலாகரன் 5. கப்டன் கனிமதி 6. கப்டன் முத்துநகை 7. கப்டன் அறிவுத்தமிழ் 8. கப்டன் எழிலழகன் 9. கப்டன் அகிலன் 10. கப்டன் விமல் வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்பு…

    • 11 replies
    • 1.4k views
  18. பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தாயகத்திற்கான பயணத்தினை நிறைவு செய்து தமிழகம் திரும்பும்வேளை அவரை மன்னார் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டு தளம் திரும்பும்வேளை வவுனியாவில் இடம்பெற்ற மோதலில் காவியமான நான்கு மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். [size=2][size=4]தாயகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. நெடுமாறன் ஐயா அவர்கள் தனது பயணத்தினை நிறைவு செய்து வன்னித் தளத்திலிருந்து தமிழகம் திரும்பியவேளை அவரை பாதுகாப்பாக மன்னாருக்கு அழைத்துச் சென்று தளபதி விக்ரர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தளம் திரும்பி வரும் வழியில் வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவ…

  19. வவுனியாவில், ‘தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 நினைவேந்தல்! அகரன்November 24, 2018 in: நிகழ்வுகள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான ‘நினைவேந்தல் வாரத்தை’ இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை ‘நினைவு கூருதலுக்கான பொதுநாளாக’ தேர்ந்தெடுக்கும் விசமத்தனமான பிரசாரத்தில் கயமைக்கூட்டம் ஒன்று ஈடுபட்டிருக்கும் சூழலில், ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி, கர்வத்தோடும் – பெருமையோடும் அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துமாறு தமிழீழ மக்களிடம் வலியுறுத்தி கூறியுள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, 2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முற…

  20. வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் – (சிறிலங்கா இராணுவத்தின் வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான கரும்புலிகள் தாக்குதல்) வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர். வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. …

  21. வாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரெட்ணாதரன். கரும்புலி மேஜர் ரெட்ணாதரன் குமாரசாமி ஆனந்தன் வீரப்பிறப்பு – 04.05.1975 வீரச்சாவு - 09.08.1999 கோடைமேடு எருவில் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு. அழகின் இரகசியங்களையெல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கிழக்கின் கிராமங்களில் களவாஞ்சிக்குடி கோடைமேடு கிராமத்தின் அழகையும் வளத்தையும் வற்றா ஊற்றாய் வடித்தால் அது பொய்யாகாது. நீரை நிறைத்த அழகான குளமும் அதன் மீது தன் இதழ்களால் வர்ணங்களை அப்பிடி வைத்திருக்கும் பூக்களும் , பறவைகளும் , மீன்களும் பசுமையின் ரம்மியத்தில் கரைந்து போய்விடும் மனசு. இத்தனை ரம்மியங்கள் நிறைந்த கோடைமேடு கிராமத்தில் குமாரசாமி , பூரணிப்பிள்ளை இணையருக்கு ஆனந்தன் என்ற குழந்தை வந்துதித்தான். ஆ…

    • 12 replies
    • 1.8k views
  22. வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் வான்கரும்புலி மறவர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்…

  23. வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் வான்கரும்புலி மறவர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள…

  24. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி 27ஆண்டுகள் கடந்து போய்விட்டன. விக்டர், இவன் அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் ,பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் களங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி…. 1981ன் இறுதிப் பகுதியில் விக்டரின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்டரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.