தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
இன்று எம்மிடையே வழக்கில் உள்ள தாய் மொழியாம் தமிழ் மொழியின் எழுத்து உருவங்களில் மாற்றங்கள் அத்தியாவசியமானவையா ?? இல்லையா ?? என்பது ஓர் விவாதத்துக்குரிய பொருளாகின்றது . பிராமி எழுத்துக்களில் தொடங்கிய தமிழின் வரிவடிவம் , வட்டெழுத்தில் ஊடறுத்து பாய்ந்து இன்று யூனிகோட்டில் வரை பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளபொழுதும் , வரிவடிவங்களில் தமிழ் தனது தனித் தன்மையை இழந்திருக்கவில்லை . அனால் வரிவடிவத்தில் மாற்றங்கள் வந்தாலே தமிழ் மொழி மேலும் வளர்ச்சி அடையும் என்ற கருத்துக்களும் இப்பொழுது எழ ஆரம்பித்திருக்கின்றன . அண்மையில் வெளிவந்த ஓர் ஆய்வுக்கட்டுரை இந்த விடையத்தைத் தொட்டுச் செல்கின்றது . அதை உங்களுடன் பகிருகின்றேன் கள உறவுகளாகிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் . நேசமுடன் கோ…
-
- 15 replies
- 9.6k views
-
-
இது ஒரு பழைய பாடல் தான்.. பல முறை கேட்டு கடந்து சென்று இருக்கிறேன். ஆனால் சில நாட்களாக அப்படி இல்லை. புத்தனுக்கு ஞானம் வந்ததுபோல், ஓர் மாலையில் காதில் விழுந்த இந்த வரிகளும் எண்ணுறக்கம் திண்கிறது. பாடல் வரிகளை கேட்பதனால் இன்பமா இல்லை அது மீட்டுத்தரும் நினைவுகள் இன்பமா தெரியவில்லை. பாடலில் ஒளிந்திருக்கும் மறைபொருள் இதுவோ!? அதுவோ ?!! என்று என் கற்பனைகளையும் அதனுடன் பொருத்திப் பார்க்கும்போது உடலெங்கும் இன்பம் தோய்கிறது. உங்கள் கற்பனைகளே.. உங்கள் உயிர்ப்பினை உறுதி செய்யும்..! கீழ் உள்ள வரிகள் உங்களுக்காக. சுட்டிக்காட்டிய வரிகளுக்கு பொருள் அறிந்தாலும் / புரிந்தாலும் பதிவிடுங்கள். அறிய ஆவல் !! மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே மரகத மணியே என் மயில் இள மய…
-
- 5 replies
- 1.7k views
-
-
சொல்லில் இருக்கிறது சூழ்ச்சுமம் - தமிழ்த் துளி
-
- 1 reply
- 928 views
-
-
குறள் எண்: 891 குறள் எண்: 236 குறள் எண்: 1271 மேலும் பார்க்க: https://www.youtube.com/@LydianNadhaswaramOfficial/videos
-
-
- 1 reply
- 423 views
-
-
பரம்பரை நம் அழகான தமிழில் பரம்பரை என்ற சொல் எப்படி வந்தது? தமிழைப் போல அர்த்தம் நிறைந்த உறவு முறை எங்கும் காணவில்லை. நாம் (முதலாவது தலைமுறை ) எமது பெற்றார் 2 வது தலைமுறை ) அப்பா அம்மா அவரது பெற்றார் ..3 ம் தலைமுறை (நமக்கு) பாடடன் பாட்டி அவர்களது பெற்றார் 4 ஆம் தலைமுறை ..பூட்டன் பூட்டி அவர்களதுபெற்றார் 5ஆம் தலைமுறை ஒட்டன் ஒட்டி அவர்களதுபெற்றார் 6ஆம் தலைமுறை சேயோன் சேயோள் அவர்களது பெற்றோர் 7 ஆம் தலைமுறை பரன் பரை இந்த ஏழு தலைமுறைகளும் பரன் பரை என அழைக்க படும் .அவை மருவி பரம்பரை என்றானது.
-
- 13 replies
- 2.7k views
- 1 follower
-
-
DanDora - Hi5News # # வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்தியாவின் இதிகாசங்களான “ராமாயணம்”, “மகாபாரதம்” போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள். இதை தங்கள் “வரலாறு” என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு. விஜயன் இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் – இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது. விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:- “வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லால…
-
- 1 reply
- 2.2k views
-
-
குறளோடு கவிபாடு - "குறள்: 413" & "குறள்: 628" "குறள்: 413" "அறிவு பரந்து கிடக்கும் உலகில் அயராது அதைத் தேடி சுவைக்க அக்கம் பக்கம் யார் நின்றாலும் அச்சம் துறந்து கேள்வி கேட்டு அமுது ஞானத்தை செவி உண்ணட்டும்!" "குறைந்த உணவை நிறைவாக அருந்தி குற்றமில்லா உயர்ந்த அறிவு கொண்ட குறைகள் அற்ற ஆன்றோர் போல் குமிழி வாழ்வில் நிறைவு அடைய குன்றாய் நிலைக்க கேட்டு அறிவாய்!!" "குறள்: 628" "இன்பம் கண்டும் துள்ளிக் குதிக்காதவன் துன்பம் வருகினும் துவண்டு விடான்! வண்ணவண்ணக் கனவில் மகிழ்ந்து உறங்குபவன் சின்னசின்ன தோல்வியிலும் தன்னை இழப்பானே கூனிக்குறுகி மூலையில் ஒதுங்கி விடுவானே!" "எண்ணம் நல்லதாய் வாழ்வை நோக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சங்க காலத்திற்குப் பின் தோன்றிய நூல்களில் மிகவும் சுவையான காவியம் சிலப்பதிகாரம். படிக்கப் படிக்கத் தெவிட்டாத நூல். இதனால் தான் 'சொற்றேரின் சாரதி'யாம் 'பாரதி' தன் கவிதையில் "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" என்று புகழ்கிறார். இந்தச் சிலப்பதிகாரத்தில் ஏராளமான அரிய செய்திகள் உள்ளன. இதனைத் தமிழ் இலக்கியத்தின் 'என்சைக்ளோபீடியா' (கலைக் களஞ்சியம்) என்றால் மிகையல்ல. இதனை எழுதிய இளங்கோவடிகள் நமக்குப் பொற்கைப் பாண்டியனின் கதையை வழங்குகிறார். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அறுவைச் சிகிச்சை நடந்து, செயற்கைக் கை பொருத்தப்பட்ட செய்தியை இதிலிருந்து ஊகிக்கலாம். அக்காலத் தமிழகத்தில் மருத்துவ விஞ்ஞானம் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. பொற்கைப் பாண்டியனின் (PANDYA…
-
- 0 replies
- 486 views
-
-
"பா' என்பது தமிழ்ச்சொல். தொல்காப்பியர், செய்யுளியலில், "பா' என்றே குறிப்பிடுவார். "கவி' என்ற சொல்லை எங்கும் எடுத்தாளவில்லை. தமிழில் செய்யுளின் வேறு பெயர்களாக யாப்பு, தூக்கு, தொடர்பு, பனுவல் போன்ற தமிழ்ச் சொற்களையே தனித்தமிழ்ப் புலவர்கள் கையாள்வர். நால்வகைப் பாக்களும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, என்றே வழங்கப்படும். இவற்றுடன் "கவி' என்ற சொல்லை இணைப்பதே இல்லை. தொல்காப்பியர் பாவின் வகைகளைக் கூறுமிடத்து, ""ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே!'' (தொல்.செய்யு-101) என்றே குறிப்பிட்டுள்ளார். நம் செந்தமிழ் மொழியுடன் வந்து கலந்து, பெருவாழ்வு பெற்றுவிட்ட வட சொற்களில் ஒன்றுதான் கவிதை என்ற சொல். தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாக நல்லந்துவனார் எ…
-
- 0 replies
- 569 views
-
-
இன்று சரஸ்வதி பூசை நிறைவு நாள். கல்வி / ஞானம் / அறிவு இவற்றிற்கு அதிபதியாகவும், கலைத்தெய்வமாகவும் போற்றப்படும் கலைமகளை நன்றியுடன் போற்றும் தினமாகும். இப்படியான ஒரு தினத்திலே ஒவ்வொரு நவராத்திரி காலத்திலும் என்னை ஆக்கிரமித்த, சரஸ்வதியின் புகழ் பாடும் ஒரு பாடல் பற்றிய எனது எண்ணங்களை பகிர வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு. 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாரதி பாடல் என்னைப் பொறுத்தவரை ஒரு நவராத்திரி கால தீம் பாடல் (Theme song) ஆகிவிட்டது என்பது விந்தையல்ல! பாரதியாரின் கவிதைகள் பாமரரும் புரிந்து கொள்ளும் எளிமையான ஆனாலும் அர்த்தம் பொதிந்த வரிகளுக்காகப் புகழ் பெற்றவை. அந்த வகையில் ஏறத்தாழ 90 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்தப்பாடல்…
-
- 4 replies
- 3.3k views
-
-
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். இறைவனை மட்டுமே வணங்குதலும், மனிதர்களை வாழ்த்துதலுமே தமிழர் மரபு. சேர மன்னன் குடும்பத்துடன் கானகம் சென்ற போது 'வாழ்க எம்கோ' என மக்கள் வாழ்த்தினர். அவ்வாறே 'வாழ்க நீ எம்மான்' என அரசர்களைப் புலவர்கள் வாழ்த்துதலே தமிழர் பண்பாடாக இருந்து வந்துள்ளது. சம்ஸ்கிருத மொழிக்கலப்பால் பிற்காலத்தில் வணக்கம் மனிதர்களுக்கும் வழங்கப்பட ஆரம்பித்தது. சம்ஸ்கிருதத்தில் அவர்கள் `நமஸ்காரம்' என்று கூறியதை நாம் வணக்கம் எனத் தவறாக மொழிமாற்றம் செய்து, மனிதர்களையும் வணங்க ஆரம்பித்தோம். மனித வணக்கம் என்பது தமிழர் பண்பாட…
-
- 1 reply
- 3.4k views
-
-
நாலடியார் காலத்தில்… 1.பாதிரிப்பூ ‘கல்லாரே ஆயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகில்/ நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின் /ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு/ தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு’. (139) நறுமணப் பூவின் தொடர்பால் பானை நறுமணம் பெற்றதுபோல் கல்வியில் சிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் கல்லாதவர்க்கு அறிவு கிடைக்கும் என்பது இப்பாடல் நுவலும் பொருள். இதில் புதுமையான செய்தி ஒன்று காணப்படுகிறது புதுப் பானைகளில் பாதிரிப் பூவை நிரப்பி வைத்து விடுவார்களாம். அது மலர்ந்ததும், பூக்களை அப்புறப்படுத்தி விட்டாலும் அந்தப் பானையில் அதன் நறுமணம் ஏறியிருக்குமாம். அதில் ஊற்றி வைக்கிற நீரும் நல்ல மணமாக இருக்குமாம். பெரும்பாலான உரையாசிரியர்கள் புத…
-
- 0 replies
- 1.1k views
-
-
1982 ம் ஆண்டு நோபல் பரிசி பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர். காப்ரியல் கார்ஃபியா மார்க்குவஸ் தனது கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிடுகிறார். " எனது படைப்பூக்க ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகளே" *** இலக்கிய வகைமைகளில் மிகமுக்கியமானதும், கவனத்துடன் எழுதப்படவேண்டியதும் குழந்தைகள் இலக்கியம். தமிழில் குழந்தைகள் இலக்கியத்திற்கென எழுதிய எழுத்தாளர்களின் பட்டியல் சுருக்கமானது என்றாலும் கூட அவர்களின் பங்களிப்பு அளவில் முக்கியமானது. 1901இல் கவிமணி தேசிகவிநாயகம் எழுதிய குழந்தைகள் பாடல்கள் துவங்கி அவரைத் தொடர்ந்து பாரதி,நமச்சிவாயமுதலியார், மணி திருநாவுக்கரசு, அழ.வள்ளியப்பா, தூரன், மயிலை சிவமுத்து,தம்பி சீனிவாசன், …
-
- 0 replies
- 3.2k views
-
-
கம்பராமாயணம்: இலக்கிய வழக்கும் உலக வழக்கும் பெருமாள் முருகன் தமிழ்க் காப்பிய இலக்கியத் தொடக்கம் சிலப்பதிகாரம். தொடர்ந்தவை மணிமேகலை, பெருங்கதை. மூன்றும் ஆசிரியப்பாவால் ஆனவை. ஆசிரியப்பா உரைநடைத் தன்மை கொண்டது. உணர்ச்சி விவரணைகளுக்கு இடமில்லாமல் கதையைச் சொல்வதற்கு ஆசிரியப்பா ஏற்றது. அதன் போதாமையை உணர்ந்த இடங்களில் விருத்தப்பாக்களை இளங்கோவடிகள் கையாண்டிருக்கிறார். விருத்தப்பாவை முழுமையாகக் கையாண்டது சீவக சிந்தாமணி. பின் தோன்றிய காப்பியங்கள் அனைத்தும் விருத்தப்பா முதலிய பாவினங்களிலேயே இயன்றன. கலிவிருத்தம், கலித்துறை, அறுசீர் ஆசிரிய விருத்தம் ஆகிய பாவினங்களே காப்பியங்களில் அதிகம் பயின்றவை. கரைக்குள் அடங்கியிருந்த ஆற்றுநீர் வெள்ளப் பெருக்கில் கரையுடைத்து எல்லையற்றுப் பரவ…
-
- 1 reply
- 11.1k views
-
-
மஞ்சை வசந்தன் Manjai Vasanthan Market என்பது தூய தமிழ்ச்சொல்.......... உலகிலுள்ள பலமொழிகளும் தமிழிலிருந்து வந்தவை என்ற உண்மையை உறுதிசெய்ய Market என்ற சொல் சரியான ஆதாரம். இதை கேட்கும்போது உங்களுக்கு நம்பமுடியாது. வியப்பு ஏற்படும். என்றாலும் அதுதான் உண்மை. “மாறுகடை” என்ற தூயதமிழ்ச் சொல்லே Market என்ற ஆங்கிலத்தில் ஆனது. மாறுதல் என்றால் விற்றல் வாங்குதல் என்று பொருள். ”கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு “மாறு” கொள்ளுவோம்” என்ற பாரதி பாடலில் மாறு என்ற சொல் விற்றல் வாங்கலைக் குறிக்கும். மாறுதல் (விற்றல் வாங்கல்) செய்யும் கடை என்பதால் “மாறுகடை” எனப்பட்டது. பேட்டை என்பது pet என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும். அதே போல் கடை என்பது Ket என்றாகி மாறுகடை என்பது…
-
- 1 reply
- 1.5k views
-
-
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்... பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா? பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில், எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீன கவிதை பிறந்தது. . தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில்,தளங்களில் பயணித்தது. இவர்களை தமிழ் உலகம் பாரதி பரம்பரையினர் என்று பெருமை படுத்துகிறது. இந்தப் பரம்பரையில் வந்த பாரதிதாசனனும், , பட்டுகோட்டை கல்யாணசுந்தரமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். துரோணரை நேரில் கண்டு பயிற்சி பெறாமலே அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து ,தலை சிறந்தவனாய் விளங்கிய ஏகலைவன் போல,பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானச…
-
- 1 reply
- 14.7k views
-
-
தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள் – மு. பாலமுருகன் இலக்கியம் காலத்திற்கு ஏற்பத் தன் பாடுபொருளையும், பரிணாமத்தையும் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. நாம் வாழும் உலகம் அறிவியல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இலக்கியமும் அறிவியலைப் படைப்பிலக்கியத்தில் பயன்படுத்தி வருகிறது. நம் முன்னோர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தே அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மழையின் வருகையைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும், விலங்கினங்களின் தன்மைகள் பற்றியும், அணுக்கள் பற்றியும் தம்முடைய படைப்புகளில் பழந்தமிழர் வெளியிட்டுள்ளனர். கடல் நீரானது ஆவியாகி மேலெழுந்து பின் குளிர்ந்த காற்றால் மீண்டும் மழையாக வருகின்றது. இதனைக் கதைவடிவில் முல்லைப் பாட்டில் சொல்லியுள்ளனர்.…
-
- 0 replies
- 1.5k views
-
-
வடமொழியால் விளக்க முடியாததை வள்ளுவன் விளக்கினான்.எப்படி தெரியுமா? நீதியரசர் ராமசுப்ரமணியன்
-
- 0 replies
- 1.6k views
-
-
'படிமப்புரவு: சொந்தமாக உருவாக்கியது' படை - தற்காலத்தில், ஒருநாட்டின் ஆணையமுள்ள படைக்கலம் ஏந்திய வீரர்கள் கூட்டத்தையும்(Military) அவற்றினுட்படும், மூவேறு பூதங்களிற்கான படைகளையும்[தரைப்படை(நிலம்), கடற்படை(நீர்), வான்படை(காற்று)], விதவிதமான போர்ச் செயல்கள் செய்யும் வீரர்களை அவர்தம் செயல்களிற்கு ஏற்ப தனித்தனிப் படையாக(force) பிரித்து (அதிரடிப்படை, தற்கொடைப்படை, துணைப்படை, எல்லைப்படை போன்றவை) அவற்றையும் படை என்னும் சொல்லால் குறிப்பதுவே படை என்னும் சொல்லின் பொருளாகும். பகுதி - படையில் உள்ள ஒரு சிறிதளவு(section) பக்கம் - படையின் ஒரு பக்கம்(side) கை - Flank (பண்டைய காலம் & தற்காலம்) இறகு - தற்காலத்தில் Wing-இற்கு நிகர…
-
- 0 replies
- 2.7k views
- 1 follower
-
-
நேற்றுப் பூத்த பூஞ்சோலை பூக்கள் பட்டுச் சேலை கட்டி காதல் வாசம் பரப்பினால் மயங்காத வண்டுகளும் உண்டோ !! மொட்டுக்கள் வாசம் பரப்புவதில்லை... மலர்கள் மட்டுமே மனம் பரப்புகின்றன. வாசம் வண்டுகளுக்கு வைக்கப்படும் ஓர் அழைப்பு!! தன்னுள் உள்ள மகரந்தம் பருகப்படும் என்று தெரிந்தே வட்டமிடும் வண்டுகளுக்கு அழைப்பு விடுக்கும் மலர்களைப் போல் இங்கே இவளும் காதலனை போற்றி துதிக்கிறாள். காதலன் மேல் கொண்ட அன்பினால் இவளுக்கு காதலனின் குதிரைக் குளம்படிகள் கூட சந்தனம் போல் தெரிகிறது... அந்த முத்தொள்ளாயிரப் பாடல் இதுதான் ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடுகோ டாக எழுதுகோ-நீடு புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி கனவட்டங் கால்குடைந்த நீறு ஆடி மகிழ்வேன் !! சூடிக் களிப்பேன் !! நீண்ட க…
-
- 5 replies
- 1.1k views
-
-
எப்போது வேப்பங்காய் இனிக்கும்? "இவளோடு படும் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது. “ஏதோ ஒன்று, `பின்னே போனால் உதைக்கிறது; முன்னே போனால் கடிக்கிறது' என்பார்கள். "இவளுக்கும் அதற்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் போயிற்று. "என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் தவறு கண்டுபிடிக்கிறாள்; குற்றம் சொல்கிறாள்; முரண்டு பிடிக்கிறாள்; பிணங்கிக்கொள்கிறாள். “ஏதும் சொல்லாவிட்டாலும் ஏதும் செய்யாவிட்டாலும் வம்பாகிப் போகிறது. “இவளைத் திருமணம் செய்துகொண்டேனே, என்னை எதனால் அடித்துக்கொள்வது?” என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை; எப்படி அவளைச் சரிசெய்வது, எப்படி அமைதிப்படுத்துவது என்று நெடுநேரம் சிந்தித்தான்; ஒரு வழி புலப்பட்டது. மனைவியின் தோழியைத் …
-
- 2 replies
- 2.5k views
-
-
ஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச் சாற்றினன்.. சிலம்பு - வரந்தரு காதை 32, 33. இந்தச் சிக்கலுக்கு இன்னது தீர்வு என்று எடுத்துக் கூறப்படும் செய்திக்குச் செம்மொழி என்று பெயர். நிறைமொழி, மறைமொழி, நன்மொழி என்ற வரிசையில் செம்மொழி என்பது தமிழின் ஒரு தனிப்பண்பு என்று தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் “செவ்வை நன்மொழி” என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது. மறுக்கவில்லை. அவ்வை அம்மையாவது போல, கொவ்வை கொம்மையாவது போல செவ்வை நன்மொழி என்பது செம்மொழி ஆகிறது எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன என்று கொள்ளலாம். அகநானூற்றுப் புலவர் மாமூலனார் குறிப்பிடும் செம்மொழியும், சிலம்பு குறிப்பிடும் செம்மொழி மாதவச்…
-
- 0 replies
- 23.1k views
-
-
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆங்கில அகராதி மற்றும் மரியம் வெப்ஸ்டர் போன்ற ஆங்கில மொழி அகராதிகளில் கீழ்க்கண்ட சொற்களின் மூலம் தமிழ் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள் •Anicut அனைக்கட்டு •Appam - ஆப்பம் / அப்பம் •Cash - காசு •Catamaran கட்டுமரம் •Cheroot சுருட்டு •Corundum 'ruby', குருந்தம் kuruntam or குருவிந்தம் kuruvintam (Source: OED) •Coir கயிறு •Curry கறி •Godown கிடங்கு •Idli இட்லி idli (Source: OED) •Illupi இலுப்பை •Kabadi/kabaddi கபடி கபடி •Maldivian மலை தீவு - மாலத்தீவு •Moringa முருங்கை •Mulligatawny மிளகுத்தண்ணீர் •Nadaswaram/nagaswaram நாகஸ்வரம் / நாதஸ்வரம் •Pariah பறையர் •Pandal பந்தல் •Pongal பொங்கல் •Poonga oil புங்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
Puradsifm பழந்தமிழரின் அளவை முறைகள்...! முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு பதக்கு = ஒரு தூணி. மூன்ற…
-
- 0 replies
- 2.6k views
-
-