தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
தமிழர் சமுதாயம் பல கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்ட சமுதாயமாகும். நம் முன்னோர்கள் பல நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை நாம் பின்பற்றும் காரணத்தால் தலைமுறைகள் பலவற்றைக் கடந்தாலும் எமது சமுதாயம் உயிர்ப்புடன் வாழ்கிறது என்றால் அது மிகை இல்லை. விரல்களில் மோதிரங்களை அணிவதால் மருத்துவப்பயன்பாடு கிடைப்பதாக பலர் கருதுகிறார்கள். பலருக்கு தங்கள் கை விரல்களை மடக்குவதற்கு அல்லது நீட்டுவதற்கு இலகுவாக இருப்பதில்லை. அதிலும் பெண்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கு அதிகளவான இரத்த இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் எலும்புகள் விரைவில் பலவீனமடைவதே இதற்கு காரணம் என தற்கால வைத்தியர்கள் விதந்துரைக்கிறார்கள். எது எப்படி என…
-
- 2 replies
- 3.2k views
-
-
வணக்கம், எனக்கு ஓர் சிறுமி தனக்கு கீழ்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உடனடியாக தெரியவேணுமாம் ஏதோ பள்ளிக்கூட projectஐ செய்து முடிக்கவாம் என்று சொல்லி ஓர் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறா. எனக்கு கொஞ்ச சொற்கள் தெரியும். எல்லாம் தெரியாது. யாராவது தெரிஞ்ச ஆட்கள் உதவி செய்தால் புண்ணியமாய் போகும். 1.polygon 2.edge 3.tetrahedron 4.rectangular prism 5.vertex 6.hexagonal prism 7.pyramid 8.triangular pyramid 9.triangular prism 10.face 11.trapezoid 12.octagonal prism 13.polyhedron 14.symmetry 15.pentagonal prism 16.prism 17Cylinder 18.cube 19. hexahedron உங்கள் உதவிக்கு …
-
- 16 replies
- 6.3k views
-
-
இலக்கங்கள் ஆச்சரியம் உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ள ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் எண்களும் அளவுகளும் குறிப்பிட்ட அளவுகளுக்கு மேல் பெயரில்லாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் அதிக அளவாக எண்களும் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏறு முக இலக்கங்கள் ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred... மேலும் பார்க்க 1000 = ஆயிரம் -thousand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம்…
-
- 5 replies
- 1.3k views
-
-
தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல் பாடல்: ‘மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. - தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5 ‘மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.’ தவறுகள்: இப்பாடலின் முதல் வரியில் ‘காடுறை’ என்ற சொல்லில் ‘டு’ …
-
- 1 reply
- 11.5k views
-
-
தமிழ் மொழி ஒர் அறிவியல் ஆய்வும் .. எதிர்கால தேவையும் சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றியும் கண்டனர். அதோடல்லாமல், தமிழின் உண்மையான மேன்மையை உணர்ந…
-
- 3 replies
- 3.9k views
-
-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். மலர்மிசை ஏகினாள் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார். கொல்லாள் புலாலை மறுத்தாளை கைகூப்பி எல்லா உயிரும் தொழும். +++ நீங்களும் மிச்சம் சொல்லுங்கோ.
-
- 11 replies
- 1.4k views
-
-
இன்று ஏதோ தேடும்போது இதை வாசிக்கக் கிடைத்தது உங்களுடனும் பகிர்கிறேன். நன்றி மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள்.. நான் வலைப்பதிவுக்கு வந்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்ட மலையக நாட்டுப்புற பாட்டு... எனும் மீண்டும் இடுகையிடுகிறேன். நான் வலைப்பதிவுக்கு பிரவேசித்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்டதனால் இந்த மலையக நாட்டுப்புறப் பாடல்கள் பலரைச் சென்றடைந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதனாலே மீண்டும் பதிவிடுகிறேன். தமிழருக்கென்று ஒரு தனித்துவமான கலை,கலாசார, பாராம்பரியங்கள் இருக்கின்றது.அவற்றில் குறிப்பாக தமிழர்களது கலைகள் தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைநத ஒன்றாக காணப்படுகின்றது. தமிழருக்கே தனித்துவமான பல கலைகள் இருக்கின்றன. அதிலும் கிராமங்கள்…
-
- 3 replies
- 9.4k views
-
-
காமமா? இன்பமா? -------------------------- சிவஸ்ரீ வித்தியாசங்கரசிவம் ஸ்ரீ வேம்பத்தூர் மடம். திருநெல்வேலி தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்பன வடசொல். அவற்றின் தமிழ் முறையே அறம் பொருள் இன்பம் வீடு ஆகும். திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என மூன்று பால்களையுடையது. அறத்துப்பால் பொருட்பால் என்ற தலைப்புக்கள் தமிழ். காமத்துப்பாலில் காமம் வடசொல். திருக்குறள் முந்திய பதிப்புக்களில் எல்லாம் காமத்துப்பால் என்ற தலைப்பே இருக்கிறது. முதலிரண்டுபாலுக்கும் தமிழ்ப்பெயர்கொடுத்தவள்ளுவர் இந்தப் பாலுக்கு மாத்திரம் வடசொற் பெயர் கொடுத்தார்; அது பொருத்தமா என்பது ஆராய்ச்சி. மற்றப் பாலின் பெயரை நோக்கும்போது மூன்றாவது பாலுக்கு இன்பத்துப்பால் என அவர் பெயர் கொடுத்திருப்ப…
-
- 6 replies
- 3.6k views
-
-
பிழை இருந்தால் திருத்துங்கள்!! மிதி வண்டிக்கான பாகங்கள் seat, saddle = குந்துகை, இருக்கை handle bar = கைப்பிடிப் பாளை (தென்னம் பாளை என்பதில் வரும் பாளை என்பது bar என்பதையே குறிக்கிறது.) wheel = வளவி (கையில் போடுவதும் வளவி தான்.) mud guard = மட் காப்பு (மண்+காப்பு) stand = தண்டை (தண்டு கொள்ளுதல் என்பது இருத்தலும் நிலைத்தலும் ஆகும்.) carrier = தூக்கி pedal = மிதி spoke = போழ்க்கு (போழுதல் என்பது கூர்மையாகக் குத்துதல். போழுக்குகள் இங்கே சக்கர விளிம்பில் இருந்து நடுவத்தை நோக்கிப் போவது போழ்க்குவதாய் இருக்கிறது.) wheel rod = வளவி உரல் (எல்லாவற்றிற்கும் தண்டையே சொல்லிக் கொண்டிராமல் உரல் என்ற சொல் இங்கே பயனாகிறது. கம்பு, தண்டு, தடி, உரல் எனப்பலவற்ற…
-
- 19 replies
- 1.7k views
-
-
தமிழில் சிலேடைகள் கம்பருக்கும் ஒட்டக் கூத்தருக்கும் நிரந்தரமாகப் புலமைக் காய்ச்சல் உண்டு என்று கர்ண பரம்பரைக் கதைகள் சொல்கின்றன. இருவருமே இராமாயணம் எழுதினார்கள் என்றும் கம்பர் காவியத்திற்கு இணையாக தனது காவியம் இல்லை என்பதால் ஒட்டக் கூத்தர் தாம் எழுதிய காவியத்தை எரித்து விட்டார் என்றும் சொல்வதுண்டு. கம்பராமாயணத்தை ஒவ்வொரு பாடலாக வாசித்து அரங்கேற்றிக் கொண்டிருந்தாராம் கம்பர். ஒட்டக்கூத்தர் உள்பட ஏராளமான புலவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பாடலில் அருமையான கற்பனை ஒன்றை, கம்பர் உவமையாக வைத்திருந்தார்.மலர்ந்து கொண்டிருக்கும் மல்லிகை மொட்டுக்கள் வடிவத்திலும் நிறத்திலும் சங்கு போன்றவை என்றும் அந்த மொக்குகளின் மேல் வண்…
-
- 0 replies
- 943 views
-
-
-
ஒருவர் வந்து என்னிடம் இக் கேள்வியைக் கேட்டு விடை கூறச்சொன்னார். எனக்கு விடை தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் தந்துதவவும். தட்டானிற்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார். (சில வேளையில் கேள்வியில் பிழையிருக்கலாம்) வடிவேலின் 23ம் புலிகேசியில் வருகின்ற கேள்வி இது.
-
- 8 replies
- 7.8k views
-
-
வணக்கம், சூரியன், சந்திரன், உதயம் இதெல்லாம் தமிழ் சொல்லுகள் இல்லையாம்; வடமொழிச் சொல்லுகளாம். இப்பிடி வழமையில பயன்படுத்துகிற சொற்களில அரைவாசிக்கு மேல வடமொழிச் சொல்லுகளாம். ஓர் தமிழ் அறிஞருடன் கதைச்சபோது சொன்னார். அவருடன் தொடர்ந்து நான் தமிழில் (?) உரையாடிய போது இப்பிடிச் சொன்னார்: தமிழில இருக்கிற பலவித கிளைகளை பாவிச்சு தேவையான அளவுக்கு புதிய தமிழ்ச் சொல்லுகளை உருவாக்கலாமாம். உதாரணமாக, ஆங்கிலத்தில இருக்கிற குளோரபில் - Chlorophyll எனப்படுகிற சொல்லிண்ட அர்த்தத்தை புரிந்து அதற்கு நிகராக தமிழில பச்சையம் என்று ஓர் சொல் உருவாக்கப்பட்டதாம். காந்தம் எண்டுறது தமிழ்ச்சொல் இல்லையாம். நான் கேட்டன் அப்ப அதுக்கு என்ன தமிழ்சொல்லு எண்டு. அவரால் உடனடியாக பதில் சொல்ல முட…
-
- 6 replies
- 2.1k views
-
-
வாலியிடம் பேச்சிழந்த இராமன் கம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான். வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான். தம்பியர் அல்லது தமக்கு வேறு உயிர் இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன் எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை அம்பிடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான் …
-
- 0 replies
- 2.4k views
-
-
தொல்காப்பியம் கற்பிக்கும் ஆசிரியர் சொன்னார் தமிழ் மொழியில் இருந்து தான் ஏனைய மொழிகள் தோன்றின என்று... அதற்கு பல ஆதாரங்கள் உண்டு என்றும் சொன்னார். உங்கள் கருத்து?
-
- 4 replies
- 12.8k views
-
-
நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக அல்லது எந்த நம்பிகை உடையவராக இருந்தாலும் சற்று அதில் இருந்து விலகி ஒரு தமிழனாக இருந்து இக்கட்டுரையை வாசிக்க உங்களை அழைக்கிறேன். தமிழ்மொழியின் வரலாற்று வீழ்ச்சியும் அதன் சீரழிவுகளும் "ஒரு நதி அழிந்தால் ஒரு நாகரிகம் அழிகின்றது என்று பொருள். ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிகின்றது என்று பொருள். ஆம். சிந்து நதிகரையில் நாம் வளர்த்த நாகரிகம் இந்த உலகிற்க்கு இன்று வரை வியப்பாக இருக்கிறது . சிந்து நதிகரையில் ஒப்பற்ற நாகரிகத்துடன் வாழ்ந்த திராவிட இனம் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வருகையால் சிதறி ஒடி பாரத்தின் தென்பகுதிக்கும், காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்றது. சிறிது, சிறிதாக ஆரியர்கள் பாரத்தின் வடபகுதி எங்கும் வி…
-
- 0 replies
- 1.1k views
-
-
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method
-
- 0 replies
- 873 views
-
-
தமிழும் சமஸ்கிருதமும் *ஏன் இந்த திரி நீண்ட நாட்களாக, முதலில் விவாதமேடைகளிலும் அதை தொடர்ந்து பத்திரிக்கைகளிலும் பின்னர் தற்போது இணையங்களிலும், இரண்டு மொழிகளிலும் பூரண ஆழ்ந்த அறிவற்ற சில(பல) அறிவுக்கொழுந்துகளால் நடாத்தப்படும் இந்த (மொழி) யுத்தம், எமது இன்னுயிர்த்தமிழின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்குமோ என்ற பேரச்சமே இந்த திரியை தொடங்குவதற்கான பிரதான காரணம். *தகுதி சரி.இந்த மொழி யுத்தத்தின் இயல்புகளை, விளைவுகளை ஆழ்ந்து அலசுவதற்குரிய இருமொழி அறிவு எனக்கு இருக்கிறதா? இல்லை.எனினும் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு (இங்கே தமிழ்) பிறமொழிக்கலப்பு மிக மிக அவசியம் என்பதில் மிக உறுதியாக உள்ளவன். *மொழி என்றால் என்ன …
-
- 16 replies
- 5.5k views
-
-
முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள் எழுதிய இந்த மிளகின் சுயசரிதத்தை இணைப்பது "தமிழும் நயமும்' பகுதியலா அல்லது "நலம்பெற' என்னும் பகுதியிலா என்று ஒரு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் இதில தமிழின் சுவையும், உடல்நலன் பேண் குணமும் ஒருங்கே அமைந்திருக்கிறது. அத்தோடு எனக்குப் பிடித்த வலைப்பூ என்னும் இன்னுமொரு பகுதியிலும் இதனை இணைக்கலாம் இந்தத் திக்கு முக்காட்டத்தின் இறுதியில் தமிழும் நயமும் பகுதியில் இணைத்தலே சாலச்சிறந்தது என்று இங்கு இணைத்துள்ளேன் வாசிக்கிறதோடு மட்டும் நிற்காமல் உங்களுக்குத் தெரிந்த மிளகு பற்றிய விடயங்களையும் பதிவு செய்யுங்கள். நான் தாங்க மிளகு என்னைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லாம் என்று இருக்கிறேன்.நான் எவ்வளவு பழமையாவள் என்பது உங்களுக்க…
-
- 5 replies
- 1.9k views
-
-
வட்டுக்கோட்டைக்கு வழி என்ன எண்டு கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு கருத்து வழியைக் காட்ட சொன்னா, துட்டு ( 1காசு ) இரண்டு பாக்கு வாங்கலாம் எண்டு சொல்லுங்கள் சில சனம் அப்பிடின்னா சாதாரணமா எங்கட ஆக்கள் சிலரின்ர குணம் ஒண்டு இருக்குது. ஒரு கேள்வியக்கேட்டா அதுக்கு நேரா விடை சொல்லத்தெரியாது. அங்க போய், இங்க வந்து சுத்தி வளைச்சுத்தான் பதில் சொல்லுவினம். இது போன்ற சில சொற்கள் ஈழத்தில நாங்க பயன்படுத்தினது. அதாவது ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ற மாதிரி கனக்க வார்த்தை பிரயோகங்கள் இருக்குது. இதை நான் ஏன் இங்க வந்து சொல்லிறன் எண்டு நினைக்கிறியளே அது ஒண்டும் பெரிசா இல்லைங்கோ. எதிர்கால சந்ததியினருக்கு இது போன்ற வார்த்தைப்பிரயோகங்கள் போய்்ச்சேருமோ எண்ட…
-
- 3 replies
- 1k views
-
-
வள்ளுவன்ர குரல் யான் என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் பொருள் உடலை “யான்” எனவும், பொருள்களை “எனது” எனவும் நினைக்கின்ற மயக்கத்தை போக்குகின்றவன் வானோர்க்கும் எட்டாத உயர்ந்த உலகம் சேர்வான் இப்பிடியெல்லாம் கனக்க சித்தர்மார் எவ்வளவு அழகாக சொல்லிப்போட்டு போட்டினம்.
-
- 1 reply
- 721 views
-
-
மடசாம்பிராணி சற்று புத்திக்குறைவாக நடந்து கொள்பவர்களை நாம் பலவாறாகத் திட்டுவது வழக்கம். முட்டாள், மூளை கெட்டவன், கூமுட்டை, அறிவிலி, வீணாப்போனவன் என்பன சில அடைமொழிகள். மடசாம்பிராணி என்பதும் அப்படிப்பட்ட வசவே. எனக்கு இந்த மடசாம்பிராணி எனும் வார்த்தை காதில் விழும் போதெல்லாம் (என்னை யாரும் இவ்வளவு உயர்வாக விளித்ததில்லை) இவ்வார்த்தை குறித்த சந்தேகம் எழும். மட+சாம்பிராணி = மடசாம்பிராணி. மட என்றால் மடத்தனம், சாம்பிராணி என்றால் அது தூபப்புகை போடும் சாம்பிராணியா அல்லது ஓணான் வகையைச் சேர்ந்த சாம்பிராணி எனும் ஊர்வன ஜந்துவா என ஐயம் எழும். என்ன யோசித்துப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எனக்குப் பழக்கமான அனைத்து அறிவு ஜீவிகளிடமும் கேட்டுப்பார்த்ததில் ஒருவழியாக ஒன்ற…
-
- 1 reply
- 4.2k views
-
-
வாழையிலை போலவந்த செல்லம்மா! தாழையாம் பூ முடிந்துத் தடம்பார்த்து நடைநடந்து வாழையிலை போலவந்த செல்லம்மா! என்வாசலுக்கு வாங்கிவந்தது என்னம்மா? கவியரசன் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் இவை. 'வாழையிலை போலவந்த செல்லம்மா!' என்ற வரிகளில் புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை ஏன் 'வாழையிலை' என்று வருணித்தான் கண்ணதாசன் என்ற விவாதம் எங்கள் நண்பர்களுக்குள் எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். நண்பர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவே இருந்தது. எங்களின் வாதத்தில் இடம்பெற்ற சில விளக்கங்களை இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன். "வாழைக் கன்றைப் பிடுங்கி அதன் தலையைச் சீவிவிட்டுக் கிழங்கோடு கூடிய தண்டுப் பாகத்தை மட்டுமே நடுவது வழக்க…
-
- 0 replies
- 841 views
-
-
-
- 1 reply
- 4.6k views
-
-
செம்மொழி உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர். மொழிகள் எண்ணிக்கை உலக அளவிலும் நம் நாட்டளவிலும் கூடுதலாக இருக்க ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கொண்டது இந்த உலகம் என்பதே. மேற்காணும் ஆராயிரத்து எழுநூற்று அறுபது மொழிகளுக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் உண்டு. அம்மூலமொழிக்கு அடிப்படையான பிறிதொரு மொழிக் குடும்பத்துடன் உறவும் உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்க…
-
- 0 replies
- 1.4k views
-