தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், வேதியல் என்பன போன்று மலையும் மலை சார்ந்தவற்றையும் குறிஞ்சியியல் (credit: திருவள்ளுவன் இலக்குவனார் ) என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலையியல் தொடர்பான கலைச் சொற்கள் : அடிவாரம், தாள், வெற்பு - மலையின் அடிப்பகுதி (spur / Foot of a hill/mountain) அடுக்கம் - பன்மலை வரிசை (a complex mountain range.) அறைவாய், கணவாய், கண்டி - (mountain pass) ஆரிப்படுகர் - (very difficult mountain path with ascents and descents) அரிதின் முயன்று ஏறியும் இறங்கியும் செல்லும் கடிய மலை வழி கது, கிழிப்பு, பிளப்பு, விடர், விடரளை, விடம்பு,…
-
- 1 reply
- 2.8k views
- 1 follower
-
-
'மல்’ என்றால் வலிமை எனப்பொருள். வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி மலை எனப்பட்டது. மலையையும் மலை சார்ந்த இடத்தையும் குறிக்குங் திணை-குறிஞ்சித் திணை மிக உயர்ந்த மலை - மிசை/ விண்டு - very high mountain விண்டு - விண்ணளாவிய மலை நாட்டின் குறுக்காக உள்ள மலை - விலங்கல் - blocking mountain ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காகப் பாறைகள் அமைந்திருக்கும் மலை - அடுக்கல்- mountain as stratified. மூங்கிற்காடுகள் உள்ள மலை -வரை மிக நீண்ட மலைத்தொடர் - நெடுவரை (இங்கு வரை என்றால் பொதுமலை) காடுகள் அடர்ந்த மலை - இறும்பு - foothill மரங்கள் அற்ற, ஓரளவு சிறிய புதர்களைக் கொண்ட மலை - பிறங்கல் பனியால்(dew) மூடப்பட்டிருக்கும் மல…
-
- 8 replies
- 9.9k views
- 2 followers
-
-
விண்வெளியில் உள்ள ஒரு நிலவினையோ அ ஒரு கோளினையோ சுற்றி தகவல் சேகரிப்பதற்காக மனிதனால் ஏவப்பட்ட இயந்திரமே இந்த செய்மதி அ செயற்கைக்கோள் ஆகும். ஆனால் இதைக் குறிப்பதற்கான சொல்லாக நமது தமிழ் மொழியில் நில அடிப்படியிலான இரு பெரும் எழுத்து வழக்குகளில் இரு வேறு சொற்கள் கையாளப்படுகின்றன. அவற்றுள் எது பொருள் அடிப்படியில் சரியானது என தற்போது பார்ப்போம். (எனக்குப் பட்டதை நான் எழுதிவைக்கிறேன்.) செய்மதி = செயற்கை நிலவு → ஈழம் செயற்கைக்கோள் = செயற்கை கோள்மீன் → இந்தியா ————————————————— முதலில் ஈழத் தமிழின் செய்மதி விளக்கத்தினை பார்ப்போம். விண்ணில் உள்ள செயற்கைக்கோளானது மனிதர்களால் செய்து அனுப்பப்பட்ட ஒரு செயற்கையான புவியை மையமாகக் கொண்டு சுழலும…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
மக்களே.... எழுத்துலகில் விண்வெளி தொடர்பான கட்டுரைகளில் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொல் அறியாமல் பல பேரும் பலவிதமான சொற்களை கையாண்டு வருகின்றனர் என்பது வருத்தமளிக்கும் விதயமாக உள்ளது. இது செந்தரப்படுத்தாமையால வந்த விளைவு. இது தொடர்ந்தால் மொழிச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது; இதனால் பொருள் பிரளும். ஆகவே அதைப் போக்கும் விதமாக இதை எழுதுகிறேன். Rocket(Space) - ஏவூர்தி Rocket(Weapon)- உந்துகணை/ தெறிப்பு தெறிப்பு - பழைய ஈழப் புத்தகம் ஒன்றில் இச்சொல் இப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. Missile - ஏவுகணை Satellite - செய்மதி(ஈழ.வழ.), செயற்கைக்கோள் (தமி.வழ) இதில் நான் செய்மதி என்பதையே என்னுடைய விடைகளில் கையாள்கிறேன். என்னைப் பொறு…
-
- 3 replies
- 2.4k views
- 1 follower
-
-
'படிமப்புரவு: அமசொன் | தமிழில்: நன்னிச் சோழன் | பரிமானம்- 1238 x 1604' Geological words in tamil இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அமசொனில் இந்த நோக்கத்திற்காகவே இப்படம் வெளியிடப்பட்டிருந்தது (புவியியல் சொற்கள் விளக்கப்படமாக (geological words chart)) மேலே உள்ளவற்றில் நான் புதிதாக உருவாக்கிய சொற்கள்: அயம் - அருவி கொட்டும் இடத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் நீர். நெடும்பொறை/ தனியோங்கல் - butte - நெடுத்த பொறை(hillock, hummock, knoll) - இவற்றின் உயரமானது அகலத்தை விடவும் கூடுதலாக இருக்கும். மேலும் பொறை என்றாலே எமக்குள் ஓர் பாறை என்னும் உள்ளுணர்வு தோன்றி விடும். ஆதலால் அதனோடு …
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
*தேன்* கொண்டு வந்தவரைப் பார்த்து, நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...* ஐயா நீங்கள் கூறியதை நினைத் *தேன்* ! கொல்லிமலைக்கு நடந் *தேன்*! பல இடங்களில் அலைந் *தேன்*! ஓரிடத்தில் பார்த் *தேன்*! உயரத்தில் பாறைத் *தேன்*! எப்படி எடுப்பதென்று மலைத் *தேன்*! கொம் பொன்று ஒடித் *தேன்*! ஒரு கொடியைப் பிடித் *தேன்* ! ஏறிச்சென்று கலைத் *தேன்*! பாத்திரத்தில் பிழிந் *தேன்*! வீட்டுக்கு வந் *தேன்*! கொண்டு வந்ததை வடித் *தேன்*! கண்டு நான் மகிழ்ந் *தேன்*! ஆசையால் சிறிது குடித் *தேன்* ! மீண்டும் சுவைத் *தேன்* ! உள்ளம் களித் *தேன்*! உடல் களைத் *தேன்* ! உடனே படுத் *தே…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாம் சிறுவயதில் திருக்குறள் படிக்கும் போது அதில் ஓரிடத்தில் பொருட்பால் பற்றி படித்திருப்போம். அந்த பொருட்பாலில் உள்ள படைமாட்சி அதிகாரத்தில் உள்ள 767 ஆவது குறள் இவ்வாறாக வரும். "தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து." இதற்கு பரிமேலழகர் இவ்வாறாக ஓர் உரை எழுதியிருக்கின்றார்:- தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன் மேற்செல்வதே படையாவது. (படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் …
-
- 2 replies
- 1.1k views
- 2 followers
-
-
கிறிஸ்தவம் வளர்க்க வந்து தமிழ் வளர்த்து தந்த ஐரோப்பியர்கள். திருக்குறளை ஆங்கிலத்தில், மொழி பெயர்த்து தந்த ஐரிஸ் காரரான ஜார்ஜ் பாப், வீரமாமுனிவர் என்ற ஜோசெப் பெஸ்கி என்ற இத்தாலியரும் நாம் மறக்க முடியாது. வீரமாமுனிவரின், பரமார்த்த குருவும் சீடர்களும் தமிழில் வந்த முதல் நகைச்சுவை படைப்பு. கோடுகளுக்கு பதிலாக குத்து இடும் தமிழ் எழுத்து சீர்த்திருத்தம் போன்ற பல விடயங்களை செய்தவர் வீரமாமுனிவர். அவனை, அவளை என்று இருந்ததை, அவன், அவள் என்று சீர்திருத்தி தந்தார். குறில், நெடில் என பகுத்து தந்தார். வெறும் 9 ஆண்டுகளில் தமிழ் கற்று அறிந்து அவர் நமக்கு, நமது தாய்தமிழுக்கு செய்தது பெரும் சேவை. இன்னுமொரு ஐரிஷ்காரர் ராபர்ட் கிளாட்வெல்: தமிழில் இருந்தே, மலையாளம், தெலுங…
-
- 1 reply
- 1.9k views
-
-
சமர்க்களங்களில் பயன்படுத்தப்படும் ஊர்திகளுக்கான தமிழ்ச்சொற்கள் : ஏவுகணை காவி - missile carriers உந்துகணை காவி - rocket carriers (weapon) உந்துகணை சேணேவி- rocket artillery சேணேவி - Artillery | ஆக்கியோன்: திரு. திருத்தம் பொன் சரவணன் உந்துருளி - motorbike கவசச் சண்டை ஊர்தி - Armoured fighting vehicle சண்டை - இருவர்/இரண்டு செய்யும் போர்.. குதிரையிழு சுடுகலன் - Tachanka போரூர்தி- war wagon காப்பூர்தி - protected vehicle இள பேரரையர் சரா ஆனையிறவில் செலுத்திய ஊர்தி இவ்வகையே. பொநோவகம் - jeep பொது நோக்க வகம் என்பதன் சுருக்கம் தண்டவாளச் சுடுகலன் - railway…
-
- 0 replies
- 719 views
- 1 follower
-
-
புதுமைக்கால ஆய்தங்கள் தொடர்பான கலைச்சொற்கள்: முக்கிய விடையம்: துப்பாக்கி, பீரங்கி, தோட்டா ஆகிய மூன்றும் சொற்களும் பிறமொழிகளில் இருந்து தமிழிற்கு வந்து சேர்ந்த சொற்கள்... இவற்றினை தொலைவிற்கு வீசிவிட்டு புத்தம் புதிய தமிழ்ச் சொற்களை கையாள்வோமாக! துப்பாக்கி/ துவக்கு → இச் சொல்லானது "துபக்(tüfek)" என்னும் துருக்கிய மொழிச் சொல்லிலிருந்து தமிழுக்கு வந்தேறிய சொல்லாகும்... -நிகரான தமிழ்ச் சொற்கள் = சுடுகலன்(gun ), துமுக்கி (rifle), தெறாடி (musket), பீரங்கி → இச் சொல்லானது ஒரு போர்த்துக்கேய மொழிச்சொல். அப்படியே கடன் வாங்கி தமிழில் வழங்குகிறோம்.. -நிகரான தமிழ்ச் சொற்கள் = கணையெக்கி (Mortar), தகரி/தகரூர்தி (Tank), தெறோச்சி…
-
- 1 reply
- 2.9k views
- 1 follower
-
-
தமிழில் பிறரை எவ்வாறு sir/ madam ஆகிய சொற்களை விட்டொழித்து விளிப்பது? பிறர் ஒருவரை அழைக்க தமிழில் பல சொற்கள் உள்ளன. ஆனால் தற்சமயம் 'ஐயா' என்னும் சொல்லினைத்தவிர ஏனைய அனைது சொற்களும் வழக்கிழந்து போய்விட்டன... அதற்குப் பதிலாத இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களான ஆணைக் குறிக்கப் பயன்படும் சேர் / சார் ( sir ) மற்றும் பெண்ணைக் குறிக்கப்பயன்படும் மேடம் / மாடம் ( madam ) ஆகிய சொற்கள் புழக்கத்திற்கு வந்து எம்மொழிச் சொற்களின் வழக்கழித்து விட்டன. இதனால் எம்மொழிச் சொற்கள் மெல்ல மெல்லப் புழக்கத்தில் இருந்து அருகிவருகின்றன. இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களை பயன்படுத்தும் அனைவரும் அது ஏதோ இனிமையாகவும் பார்பதற்கு புதுமையாகவும் இருப்பதாக எண்ணிக்கொண்டே பயன்படுத்துகின்றனர்... எழுதும் பொழு…
-
- 0 replies
- 873 views
- 1 follower
-
-
பழந்தமிழரிடையே இருந்த பல்வேறு விதமான உறவுகளுக்கான இலக்கியப் பெயர்கள் : காண்க - தாய் & தந்தை:- அம்மா, அப்பாவை குறிக்கும் வேறு சொற்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் கணவன் :- கணவன் என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு பெயர்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் மனைவி :- மனைவி என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு பெயர்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் தம்பதி- மணவினையர், சோடி, இரட்டை. கணவன் மனைவியினை அழைக்கும் விதம் - பெண்டில் , என்னவள் , இஞ்சாருமப்பா, பெயர்கூறி அழைத்தல் (தமிழ்நாட்டு வழக்கு) மனைவி கணவனை அழைக்கும் விதம் - என்…
-
- 1 reply
- 23.1k views
- 1 follower
-
-
இயல் வழி நாடகம் - சுப. சோமசுந்தரம் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என அடுக்கி முறையே செப்பலோசை, அகவலோசை, தூங்கலோசை, துள்ளலோசை என்று ஓசைநயம் பகரும் முறையே சொல்கிறது இயல் வழி இசையுண்டு என்று. காணாததற்கு மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை எனப் பண்வகைகள் வேறு. குறிப்பாக மரபுப் பாடலெதுவும் இசையின்றி இயங்குவதில்லை. இக்கட்டுரை இங்கே பேச வந்தது இயல் வழி நாடகம் பற்றி. மேலும் இங்கு நாம் இயல் எனக் குறித்தது மரபுப் பாடலேயாம். உள்ளார்ந்த நாடகம் (Implicit Drama) அனைத்து மரபுப் பாடலிலும் அமையலாம். உள்ளார்ந்த நாடகமாக ஒரே பாடல் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு காட்சி…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
உலகில் உள்ள வாகனங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்: பல்லக்கு- பல்லக்கு என்றால் என்ன? அதன் வேறு தமிழ்ப் பெயர்களைத் தர முடியுமா? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் VEHICLE- வாகனம்/ vehicle என்னும் சொல்லைக் குறித்த வேறு தமிழ்ப் பெயர்களைத் தர முடியுமா? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் CHARIOT- பண்டைய தமிழகத்தில் இருந்த 'தேர்' என்னும் வாகனத்திற்கான வேறு தமிழ்ப் பெயர்கள் என்னென்ன? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் யானைவண்டி- யானையை செலுத்துபவரையும் அதற்குப் பயன்பட்ட கோலையும் குறித்த தமிழ் சொற்கள் யாவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் ● Driver- சாரோட்டி, ஓட்டுநர், பாகன், சூதன் ,…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
★Vehicles Used to travel in air - ஊராநற்றேர், வான்கலன், மானம் ★Pilot - வலவன், வானோடி, உகைத்தநர் Parachute-பரக்குடை Air ship-zeppelin- வான் கப்பல் Air superiority fighter- வானாதிக்க சண்டைதாரி Airborne early warning & control system aircraft- வான்வழி எழுதருகை & கட்டுப்பாடு முறைமை வானூர்தி Aircraft - வானூர்தி attack helicopter- தாக்கு உலங்குவானூர்தி Biplane- ஈரிறக்கைப் பறனை Cargo plane- சரக்குப் பறனை Chase aircraft - துரத்து வானூர்தி Combat training aircraft- அடிபாட்டுப் பயிற்சி வானூர்தி Copter-உலங்குவானூர்தி(சுருக்கி உலங்கூர்தி என்றும் அழைக்கலாம்) Drone- வண்டு Escort aircraft - சேம …
-
- 0 replies
- 916 views
- 1 follower
-
-
எல்லா(hello), வணக்கம் மக்களே... இங்கு உலகின் அனைத்துக் கப்பல்களுக்குமான சொற்களை உருவாக்கி பட்டியலிட்டிருக்கிறேன். அதில் என்னால் இயன்றளவு பழந்தமிழ்ச் சொற்களையும் கையாண்டிருக்கிறேன். ஒருசில இடங்களில் என் தமிழறிவிற்கு உட்பட்ட அளவில் ஒரு ஏரண முறையைப் பயன்படுத்தியிருக்கிறேன். அதாவது தமிழில் 'கடற்கலன், நு, நௌ, யானம்(மருஉ-ஆனம்)' என்ற நான்கு சொற்கள் கடலில் செலவாகும் வண்டிகளுக்கு பொதுச் சொல்லாக உண்டு. இவற்றை சரியான முறையில் கையாளும் பொருட்டு ஒரு தோரணியைப் பயன்படுத்தியிருக்கிறேன். எப்படியெனில் பலுக்கல் மற்றும் ஆங்கில ஈற்று எழுத்துக்களின் அடிப்படையிலே!.. அதாவது, er என்று முடியும் இடங்களில் நு அ நௌ ஆகிய சொற்களையும் vessel, craft என்று முடியும் இடங்களில் கடற்கலன் என…
-
- 0 replies
- 882 views
- 1 follower
-
-
தமிழின் 247 எழுத்துக்களில் பயன் படாத எழுத்துக்கள் உள்ளனவா? எனக்கு தமிழ் மொழி குறித்து நீண்ட நாட்களாக இருந்து வரும் சில ஐயப்பாடுகளுக்கு விடைத் தேடும் வகையில் தமிழறிஞர் ஒருவரிடம் ஒரு வினாவினை தொடுத்தேன்.... அய்யா... தமிழில் *உயிர் எழுத்துகள் 12 *மெய் எழுத்துகள் 18 *உயிர்மெய் எழுத்துகள் 216 *ஆய்த எழுத்து 1 என மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. இந்த 247 எழுத்துகளில் பல எழுத்துகள் பயன்பாடற்ற எழுத்துகளாகவே உள்ளனவே ... குறிப்பாக *உயிர்மெய் எழுத்துகளில் உள்ள "ங"கர வரிசை எழுத்துகளில் ,"ங" என்ற எழுத்து மட்டுமே அதிக அளவில் பயன்படுகிறது! மற்றுமுள்ள 17 ஙகர வரிசை எழுத்துகள் பயனற்றே உள்ளன.! அதேபோன்று *ஞ கர வரிசை எழுத்துகளிலும் *ஞ -ஞா ஆகிய இரண்டு எழுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
இதுபற்றிய யாழ் தமிழ் உறவுகளின் கருத்துக்கள் என்ன என்பதுபற்றி அறிவதற்கு ஆவல்....🙏
-
- 0 replies
- 1.1k views
-
-
பண்டை தமிழ் இலக்கியங்கள் நமது பண்பாட்டையும் வாழ்வுமுறையையும் காட்டும் கண்ணாடி என்பர். ஒருசமூகத்தின் அறிவு செழுமைக்கு அது ஓர் உரைகல்...... குறிஞ்சிப்பாட்டு தமிழர் கண்ட பூக்கள் பட்டியலை தருகிறது. அது போல் தமிழ் இலக்கியங்களில் தெரித்து கிடக்கிற நம்மவர் கண்ட பறவைகளின் பட்டியலின் ஒரு சிறு தொகுப்பு. இதில் இன்று புழக்கத்தில் உள்ள பெயர்கள் வேறுபட்டிருக்கலாம். விடுபட்டிருக்கவும் கூடும். 1.அகத்தாரா, 2.அன்றில் 3.அன்னம் 4.ஆந்தை 5.ஆரா 6.ஆலா 7.ஆனைக்கால்உள்ளான் 8.…
-
- 0 replies
- 541 views
-
-
சங்க கால மன்னர்கள் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன். காடவர் குலத்தைச் சேர்ந்தவன். இவன் கிட்டத்தட்ட கிபி 1216 முதல் 1242 வரை அரசாண்டவன். ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை பற்றி விவரமாகத் தெரிவிக்கும் திருவேந்திபுரம் கல்வெட்டு இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று தெரிவிக்கிறது. (சமஸ்கிருதத்தில் இவன் பெயர் மஹராஸ சிம்ம எனப்படும்.) இந்த காலப்பகுதியின் வரலாற்றில் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிறைந்த இடம் உண்டு, தமிழ்நாட்டிலும் கன்னநாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன. இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) வி…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’என்று பெயர். அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயர் அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘ …
-
- 0 replies
- 1.2k views
-
-
மிக எளிது.. குறு விளக்கம்:- போர்(war) என்பது பல சமர்களின் தொகுப்பு ஆகும். இந்தப் போரானது பல மாதங்களுக்கோ அல்லது பல ஆண்டுகளிற்கோ நீடிக்கலாம். இந்த மாதங்கள் அல்லது ஆண்டுகளில் இரு தரப்பிற்கு இடையில் நடக்கும் மோதல்கள்(clash)(வாளாலோ, கத்தியாலோ, தருக்கத்தாலோ) சமர்(battle) எனப்படும். இந்த சமர்களில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் எதிராளிகளுடன் மோதுவதைக் குறிக்க சண்டை(fight) என்னுஞ் சொல் கையாளப்படுகிறது. நெடிய விளக்கம்:- போர்(war) - போர் என்பது சண்டைகளுக்கெல்லாம் அடிப்படையான ஒரு அரசியற் செயல்பாட்டு வடிவமாகும். ஒரு குறிப்பிட்ட அ வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் நடைபெறும் பல சமர்களின் தொகுப்பு. இதன் தாக்கம் பல ஆண்டுகளிற்கு இருக்கும். இந்தப் போரானது, குறிப்பிட்ட கா…
-
- 0 replies
- 801 views
- 1 follower
-
-
தமிழ்விடு தூது தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது. இந்த நூலில் தூது பெறுவோர் கடவுள். அதாவது சோமசுந்தரக் கடவுள். தூது விடுவோர் ஒரு பெண். தூது செல்லும் பொருள் தமிழ்மொழி. இந்த நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. 3.1.1 நூல் கூறும் பொருள்கள் தூது செல்லும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறுதல். பிற பொருட்களைத் தூதாக அனுப்பாமைக்குரிய காரணங்களைத் தலைவி தூதுப் பொருளிடம் கூறுதல். …
-
- 0 replies
- 2.8k views
-
-
ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும். ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும். இதை படித்தாலே இந்த பகுதியில் கேட்கப்படும் 3 கேள்விகளுக்கும் எளிதாக பதிலளித்துவிடலாம். ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் அ-சுட்டெழுத்து, எட்டு, சி…
-
- 2 replies
- 2.4k views
-
-
'படிமப்புரவு: பிரசன்ன வீரக்கொடி | பட விளக்கம்: தமிழரின் பண்டைய வீரர்களைக் குறிக்கும் படங்கள் ஏதும் கடந்த வருடங்களாக உருவாக்கப்படாதலால் சிங்களவரின் பண்டைய வீரர்களை சித்தரிக்கும் படங்களை பயன்படுத்தலானேன். ' வீரன் - ஆண்பால். வீரி / வீராங்கனை - பெண்பால் போராளி - ஒரு நாட்டில் ஓர் இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளை எதிர்த்து அந்தினத்தின் விடுதலைக்காக போராடும் வீரனையோ (அ) வீராங்கனையோ குறிக்கும் சொல். பெடியள் - ஈழத்தில் இவ்வாறு போராடியவர்களை இச்சொல் குறித்து நின்றது. படைவீரன்/ வீரன் = Soldier | மேலதிக விளக்கங்களிற்கு: போரியல். அன்றும் இன்றும் - வீரர்கள் வகை: 2.5 படைவெறியர் - இது ஈழத்தில் மட்டுமே …
-
- 0 replies
- 3.1k views
- 1 follower
-