தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
கணிதத்தின் மகுடம் கணக்கதிகாரம்.. முன்னுரை கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மையான இடம் உண்டு. பண்டைய தமிழ் இலக்கியங்கள் அக்காலப் புலவர்களின் கணித அறிவினைப் பறைசாற்றுகின்றன. கணிதம் ஒரு கலை என்பதினை ‘கணக்கதிகாரம்’ என்ற நூலால் அறியலாம். கொறுக்கையூர் காரி நாயனார் என்ற புலவரால் கணக்கதிகாரம் என்னும் கணித நூல் 15-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இவர் காவிரி பாயும் சோழ நாட்டு மன்னர் வழி வந்தவர் என்றும், இவரின் தந்தை பெயர் புத்தன் என்றும் நூலின் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. இந்நூலில் காணப்படும் வியப்பான கணித முறைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கணக்கதிகாரம் இந்நூல் காரிநாயனாரின் கற்பனைத் திறனையும், கவிதை நயத்தையும், கணிதத்தில் இவர் பெற…
-
- 2 replies
- 3.7k views
-
-
எங்கே 86,257 ஓலைகள்.? திருட்டு - ஒன்லைன் விற்பனை சர்ச்சை.! தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் என்ன தொடர்பு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் இந்த அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு? "19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் அதிகாரத்துக்குக் கீழ் இருந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் ஹாரிங்டன். இவரிடம் சமையல் வேலை பார்த்துவந்தவர் கந்தப்பன். அந்தக் காலகட்டத்தில், தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பழங்கால ஓலைச்சுவடிகள் இருப்பது வழக்கம். வருடத்துக்கு ஒரு முறை கரையான் அரித்த, பழுந்தடைந்த சுவடிகளை எரிப்பதும் வழக்கம். அப்படித் தன்னிடம் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் சில எந்தப் பழுதும் இல்லாமல் நன்றாக இருப்பதைக் கண்ட கந்தப்பர், அதை …
-
- 0 replies
- 3.2k views
- 1 follower
-
-
முல்லை நில மக்களின் தொழில்கள்.. முன்னுரை சங்க இலக்கியம் என்பது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் உள்ளடக்கியது. இதில் அகம், புறம், அகம்புறம் என பகுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு அடிப்படையாக அமைவது தொழிலாகும். மக்கள் தாங்கள் வாழும் நிலத்தின் அடிப்படையில் தொழில் காணலாம். மலையும் மலை சார்ந்த நிலத்தைக் குறிஞ்சி என்பர். காடும் காடு சார்ந்த நிலத்தை முல்லை என்பர். வயலும் வயல் சார்ந்த நிலத்தை மருதம் என்பர். கடலும் கடல் சார்ந்த நிலத்தை நெய்தல் என்பர். சங்க இலக்கியத்தில் முல்லை நிலத்தொழில்கள் பற்றிய கருத்துக்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தொல்காப்பியத்தில் தொழில் “ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே” (த…
-
- 0 replies
- 13.4k views
-
-
ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள்.. தமிழரின் மரபையும் தொன்மையையும் அறிவதற்கான வரலாற்றுச் சான்றாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் ஆற்றுப்படை இலக்கியங்கள், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற பரந்துபட்ட மனத்துடன் வாழ்ந்த பழந்தமிழனை அடையாளம் காட்டுவதாய் உள்ளன. அறிவியல் வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மேற்கத்தியத் தாக்கம் போன்றவற்றால் தமிழரின் தனித்துவமான அடையாளங்களை இழந்தும், மறந்தும், தவிர்த்தும் வரும் நிலையில் சங்க இலக்கியங்களில் தமிழர் பழக்க வழக்கங்கள் அன்றும் இன்றும் என்ற பொருண்மையிலான சிந்தனை ‘காலத்தின் கட்டாயம்’ என்றே கூறலாம். ஆற்றுப்படை இலக்கியம் பத்துப்பாட்டில் பெரும்பான்மை பெற்றதாக ‘ஆற்றுப்படை’ இலக்கியங்கள் உள்ளன. ‘பகிர…
-
- 0 replies
- 3.5k views
-
-
கொன்றை வேந்தன் பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கல் உள்ளன கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. நூல் உயிர் வருக்கம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு ககர …
-
- 0 replies
- 2.5k views
-
-
தொல் தமிழர் கொடையும் மடமும்.. செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும். கொடை விளக்கம் கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், பு…
-
- 0 replies
- 3.1k views
-
-
நற்றிணை காட்டும் நற்பண்புகள்.! காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வாழ்ந்தவர்கள் சங்ககால மாந்தர்கள். அத்துடன் கூர்த்தமதி உடையவர்கள் என்பதை அவர்தம் பாடல்கள் தெளிவாய் எடுத்துரைக்கும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை காதல், அன்பு, இல்வாழ்க்கை முதலிய அக வாழ்வு முறைகளை எடுத்தியம்புகிறது. நற்றிணை கூறும் நற்பண்புகள் சிலவற்றைக் காண்போம். அன்பு: தலைமக்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள அன்பின் வலிமையைப் பறைசாற்றிச் செல்கிறது இப்பாடல். தலைவன் தலைவியைக் காணக் காலம் தாழ்த்துதலைத் தோழி சுட்டிக்காட்டும் வேளையில், தோழிக்குத் தலைவி "என் தலைவன் எப்படிப்பட்டவன் தெரியுமா?' என்று கூறுவதுபோல் அமைந்துள்ளது " நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்' (பா.1) என்கிற பா…
-
- 0 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
MultiTier cropping reference in சீவக சிந்தாமணி தற்போதைய விவசாய தொழில் நுட்பத்தில் பயிர்களின் திண்மத்தை (Crop Intensity) அதிகரிக்க Multi-Tier Cropping என்னும் தொழிற்நுட்பத்தை கடைபிடிக்க பரிந்துரைக்கிறார்கள். Multi-Tier Cropping என்பது வெவ்வேறு உயரமுடைய மற்றும் மாறுபடும் தன்மை வாய்ந்த பயிர்களை அடுக்காக வளர்ப்பது ஆகும் முக்கியமாக மலை பகுதிகளில் அரிதாக கிடைக்கும் சூரிய ஒளியை முறையாக அறுவடை செய்து குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்க உதவும். சூரிய ஒளி மட்டுமில்லாமல், மண் வளம் காக்கவும், களை கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது. நவீன அறிவியலில் வேரில் வளரும் மைக்கோரைசா பூஞ்சானம் போன்றவை மாறுபட்ட பயிர்களிடையே உணவுப்பொருள் பரிமாற்றத்திற்கும் உதவுவதாக நிருபிக்க பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
தத்துவமும் , தமிழரும் நான் யார்? உலகம் தோன்றியது எப்படி போன்ற கேள்விகள் நாகரீகமடைந்த மனிதனின் சிந்தனையில் தோன்றி போது, அவனுடைய பகுத்தறிவால் சிந்தித்த போது உருவானது தான் தத்துவம். அந்த தத்துவத்தை வணிக நோக்கிலும், அதிகார நோக்கிலும் உபயோகபடுத்த, அதன் மூலத்தை மறைத்து , தத்துவத்தின் சாராம்சத்தை அழித்து , அதனை சுற்றி மக்களிடம் வணிகப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு தான் மதங்கள். எனவேதான் உண்மையான ஆன்மீகவாதிகளான சித்தர்கள் மதங்களை எதிர்த்தனர். "மெய்பொருள் காண்பது அறிவு" என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்ட தமிழர்கள் பழங்காலத்தில் பல்வேறு தத்துவங்களை திறந்த மனதோடு ஆராய்ந்து, வாதிட்டு வந்ததை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் காண்கிறோம். ஒரு உதாரணம் மணிமேகலையில் வரும் …
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னனின் வரலாறு . பத்துப்பாட்டு நூலுள் நிறைவாக வைத்து எண்ணப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும். இதனை இயற்றியவர் இரணிய முட்டத்துப் பெங்குன்றூர் பெருங்கொளசிகனார் ஆவார். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் எனும் அரசனாவான். இவன் கொண்கான நாட்டில் ஏழில் மலையையும், பாரம் என்ற நகரையும் ஆண்ட நன்னனின் மகன் என்பதை மலைபடுகடாம் நூலின்வழியும், நச்சர் உரை வழியும் பிற சங்கநூல் சான்றுகள் வழியும் உறுதிப்படுத்த முடிகிறது. கொண்கான நன்னன் பெண்கொலை புரிந்ததால் புலவர்கள் அவனையும் அவன் மரபினரையும் பாட விரும்பவில்லை என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகின்றது. அவ்வாறு எனில் நன்னன் வழியில் வந்த நன்னன் சேயைப் பெருங்கௌசிகனார…
-
- 0 replies
- 5.4k views
-
-
தமிழில் இத்தனை அடிகளா ?இதச் சொன்னா அடிக்க வருவீங்க
-
- 2 replies
- 1.2k views
-
-
(14-11-2012 அறிவன்கிழமை மாலை விழுபுரம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக விழாப் பாட்டரங்கில் கலந்து கொண்டு பாடியது) பெருஞ்சித்திரனார் பேசினால்…! அன்பார் பெரியீர்! அறிஞர்காள்! பாட்டரங்கில் பண்பார் பலபுலவர் பாடவந்த பாவலரே! இன்னன்புத் தாய்க்குலமே! எந்தமிழ நல்லிளைஞீர்! முன்வந்தே போட்டி முனைநிற்கும் மாணவர்காள்! வல்ல செயலாற்றும் வாசகர் வட்டத்தீர்! எல்லார்க்கும் என்றன் இனியவணக் கம்உரித்தே! இன்றைய நூலக இன்விழாப் பாட்டரங்கில் தன்னேரில் தூயதமிழ் வல்லரிமா வான பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால்... என்னும் அருந்தலைப் பொன்றை அளித்துப்பா டென்றனரே! யார்பெருஞ் சித்திரனார்? இங்கறியார்க் காகசில பேர்விளக்கும…
-
- 0 replies
- 1.1k views
-
-
பழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும் . பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாட்டில் மிக இன்றியமையாத இடம், கொற்றவை வழிபாட்டிற்கு உண்டு. பழந்தமிழர் வழிபட்ட பல்வேறு பெண்தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் சங்க அகப்புற இலக்கியங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அத்தகு குறிப்புகளைத் திரட்டி ஒருங்கு வைத்து ஆய்கையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பெண்தெய்வங்கள் கன்னித் தெய்வங்கள், தாய்த் தெய்வங்கள் என இருவேறு நிலைகளில் குறிப்பிடப்பட்டாலும் அவை தாய்த் தெய்வங்களே. பி.எல்.சாமி அவர்களின் கூற்று இக்கருத்துக்கு துணை நிற்பதாகும். “தாய்த் தெய்வத்தைத் தாயாகவும் கன்னியாகவும் உருவகப்படுத்திக் கூறுவது மிகப் பழங் காலத்திலிருந்தே மரபாக உள்ளது. அவளை எல்லோரையும் பெற்ற தாயாகக் கருதுவதும் அழி…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாலடியாரில் பனையும் கரும்பும்… ! 1. பனைமரம் 1.1.பனைமரத்தின் சிறப்பு ‘கடையாயர் நட்பிற் கமுகனையர் ஏனை இடையாயார் தெங்கின் அனையர்- தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன்(று) இட்டஞான்றிட்டதே தொன்மை யுடையார் தொடர்பு.’ (216) இதற்குரிய உரையில் கமுகு, தென்னை, பெண்ணை இவற்றைப் பற்றி பதுமனார் கூறுவதைக் காண்போம். கமுகுக்கு நாள்தோறும் இறைக்கவும் மேற்றலையில் குற்றமாய புழுக்கடியும் பார்த்துப் பேணினாற்போல் இவனுக்கு நாள் தோறும் செய்யும் ……..அருஷதஞ் செய்ய வேண்டும். அது ஒழிந்தால் கமுகு தலைகெட்டு விழுந்தாற்போல இவனும் விழுமளவும் தீனகு விசாரிப்பான் என்றவாறு. இடையாயார் தெங்கின் அனையர்- தெங்கிற்குத் தலையாலே தண்ணீர் சுமந்து அடியிலே வார்க்கப் பின் தலையாலே நீ…
-
- 1 reply
- 1.2k views
-
-
அகநானுற்றில் பதுக்கை.! தமிழர் பண்பாடும் வழிபாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அவ்வாறிருக்க பழந்தமிழரின் பதுக்கை எனப்படும் இறந்தவர்களின் புதையிடங்களும் அவற்றை வழிபடும் முறையையும் இக்கட்டுரை ஆராய உள்ளது. அதில்,அகநானூற்றில் குறிப்பிடப்படும் நடுகல் மரபும், பதுக்கை மரபும் விவாதப் பொருளாகின்றது பல்வேறு இலக்கியங்கள் நடுகற்கள், பதுக்கைகள் குறித்து பேசியிருப்பினும் அகநானூற்றில் அவை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இங்குக் காண்போம். நடுகற்கள் பதுக்கை அறிமுகம் நடுகற்கள் போரிலோ சண்டையிலோ மாண்ட ஒரு வீரனுக்காக வைக்கப்படுவதாகும். இதனால் இதனை வீரக் கற்கள் என்றும் அழைக்கும் வழக்கு உள்ளது. நடுகல் இறந்த மனிதனின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாலேயே நடப்படுகிறது. இறந்…
-
- 0 replies
- 2.5k views
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
நாலடியார் காலத்தில்… 1.பாதிரிப்பூ ‘கல்லாரே ஆயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகில்/ நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின் /ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு/ தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு’. (139) நறுமணப் பூவின் தொடர்பால் பானை நறுமணம் பெற்றதுபோல் கல்வியில் சிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் கல்லாதவர்க்கு அறிவு கிடைக்கும் என்பது இப்பாடல் நுவலும் பொருள். இதில் புதுமையான செய்தி ஒன்று காணப்படுகிறது புதுப் பானைகளில் பாதிரிப் பூவை நிரப்பி வைத்து விடுவார்களாம். அது மலர்ந்ததும், பூக்களை அப்புறப்படுத்தி விட்டாலும் அந்தப் பானையில் அதன் நறுமணம் ஏறியிருக்குமாம். அதில் ஊற்றி வைக்கிற நீரும் நல்ல மணமாக இருக்குமாம். பெரும்பாலான உரையாசிரியர்கள் புத…
-
- 0 replies
- 1.1k views
-
-
"உயர் வள்ளுவம்".பற்றிய இந்த தொடர் சொற்பொழிவு, நாம் கற்ற திருக்குறளை வேறு கோணத்தில் அணுகுவதை பார்த்து, நீங்களே.. ஆச்சரியப் படுவீர்கள்.
-
- 3 replies
- 3.2k views
-
-
கலாநிதி செல்லத்துரை சுதர்சன் http://www.arayampathy.lk/research/458-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
-
- 1 reply
- 2.1k views
-
-
மார்க்சீயமும் தமிழ் இலக்கியமும் : ஒரு வரலாற்றுக் கணக்கெடுப்பு - எம். ஏ. நுஃமான் - -------------------------------------------------------------------------------- மார்க்சியம் உலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தத்துவம் என்ற வகையிலும், உலகை மாற்றுவதற்கான ஒரு வழிமுறை என்ற வகையிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து உலகில் பெரும் செல்வாக்குச் செலுத்திவருகிறது. மானுட விழுமியங்களை நோக்கிய மனிதனின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சகல தளைகளையும் உடைத்து உண்மையான மனித விடுதலையைப் பெற்றுத்தரும் ஒரு தத்துவமாக அது கருதப்படுகிறது. பூரண விடுதலைக்குத் தடையாக இருக்கும் தனியுடைமை, வர்க்க முரண்பாடு, சுரண்டல் ஆகியவற்றைக் களைந்து பொதுவுடைமை, சமத்துவம், சமூ…
-
- 8 replies
- 5.6k views
-
-
இடக்கரடக்கல் என்பது பேச்சு வழக்கில் நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் ஒரு தகுதி வழக்கு. இடர்பாடாகத் தோன்றும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் குறிப்பிடும்போது அதற்குரிய இயல்பான சொற்களைக் கொண்டு நேரடியாகக் கூறாமல், நாகரிகம் கருதி மாற்றுச் சொல் கொண்டு குறிப்பிடுவது இடக்கரடக்கல் என்பதாகும். இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது. இடக்கர்+அடக்கல் => இடக்கர் என்பது “சொல்லத்தகாத”, இடக்கு அடக்கல் என்பது “அடக்கி” அவையில் அல்லது பிறருக்கு மத்தியில் சொல்லத்தகாத சொல்லைக் கூறாமல் அதை அடக்கி, அதற்குரிய மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துதல். அதாவது ‘நாசுக்காக’ …
-
- 11 replies
- 9k views
- 1 follower
-
-
Krishnan Nallaperumal 1 ஜனவரி அன்று புதுப்பிக்கப்பட்டது இக்கேள்விக்குத் தாமதமாகப் பதில் எழுதுவது வருத்தமாக இருந்தாலும், இன்றாவது எழுத வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்கிறேன்! இன்றுதான் இக்கேள்வியைக் கண்டேன்! இன்னும் சிறப்பாக, 'மற்ற இந்திய மொழிகளையெல்லாம் விட்டுவிட்டு, சீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்?' என்று கேட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்! …
-
- 2 replies
- 3.6k views
-
-
முத்தொள்ளாயிரத்தில் பேயும் பேய் மகளும்.! மனித உயிரியல் மற்றும் இயற்பியல் இயங்கு விதிகளுக்குக் கட்டுப்படாத சில அதீத நம்பிக்கைகளில் பேய், பிசாசுகள் குறித்த நம்பிக்கையும் ஒன்று. பேய், பிசாசுகள் குறித்த நம்பிக்கைகளுக்கும் மதங்களுக்கும் இடையறாத தொடர்பு உண்டு. ஆன்மா, பாவம், புண்ணியம், மறுபிறப்பு முதலான கருத்தாக்கங்களின் பின்னணியிலேயே பேய் நம்பிக்கை உயிர் வாழ்கிறது. இறந்தவர்களின் ஆன்மாவே ஆவி. அகால மரணத்தால் உடலைவிட்டு நீங்கிய உயிரே ஆவியாக உலவுகிறது. இத்தகு ஆவிகளே பேய்கள். இறந்தவர்கள் தமது வாழுங்காலத்தில் நிறைவேறாத ஆசைகள…
-
- 1 reply
- 2.3k views
-
-
சரி..நேரடியாக கேள்விக்கே வருகின்றேன். வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா? அண்மையில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கதைத்துக் கொண்டு இருக்கும் போது பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பித்தல் பற்றி எம் உரையாடல் திரும்பியது. அப்போது அங்கு இருந்த தமிழறிவுள்ள தாத்தா "தம்பி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா" எனக் கேட்டார். நான் இவர் ஏன் இப்படிக் கேட்கின்றார் என நினைத்து விட்டு, ஊரில் வீட்டு கிணற்றடியில் இருந்து பின் வளவில் உள்ள சிறு வீட்டுத் தோட்டத்துக்கு வெட்டப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடிய காட்சியை மனத்திரையில் கொண்டு வந்து பார்த்தேன். தண்ணீர் சலசலவென ஓடின மாதிரி நினைவு வர "ஓம் அப்படித்தானே ஓடும்" என கேள்விக் குறியுடன் அவரை பார்த்தேன். "இப்படித்தான் இங்கு…
-
- 31 replies
- 6.6k views
-