Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. காலநிலை மாற்றம்: அரசாங்கத்தின் நடவடிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் வெளிநடப்பு காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக ஜேர்மனில் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்த மாணவர்கள் துறைமுக நகரான ஹம்பேர்க்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ‘காலநிலைக்காக பாடசாலை புறக்கணிப்பு’ அல்லது ‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ என்ற தொனிப்பொருளில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் ஒரு அங்கமாகவே நேற்றைய பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்…

  2. காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலை Photo: ஐசாக் நிக்கோ | இலங்கையின் வட மாகாணத்திலும், போரினால் ஏற்பட்ட பேரழிவுகள், கட்டமைக்கப்பட்ட இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் மிகையளவில் பரம்பியுள்ள ஏனைய பிரதேசங்களிலும் சாதகமற்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலை தமிழ்த் தேசியத்துக்கு பல புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. “இந்த மண்ணில்தான் உங்களது இனத்தின் அடையாளம் ஆழ வேரூன்றியிருக்கிறது” என 1998ஆம் ஆண்டு, புலம்பெயர் தமிழ் மக்களிடையே உரையாற்றும்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார். இலங்கையின் வட கீழ் நிலப்பரப்பான தீவின் மேற்குக் கரையோரத்தி…

      • Like
    • 3 replies
    • 1.3k views
  3. காலநிலை மாற்றம்: மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறையில் மீன்களின் ஓசை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TIM LAMONT படக்குறிப்பு, ஆராய்ச்சியாளர்கள் ஒலிப்பதிவு கருவியை பவளப்பாறைகளில் பொருத்தி வைத்தார்கள் இந்தோனீசியாவில் மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஒட்டுக்கேட்டனர். அந்த ஒலிப்பதிவுகளில், "கூக்குரல், கரகரப்பொலி, உறுமல்" போன்ற ஓசைகளைக் கேட்டதாகவும் பவளப்பாறைகள் மீண்டு வருவதன் அடையாளமாக இது இருப்பதாகவும் கூறுகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில், அங்கு புதிய பவளப்பாறைகள் மீண்டும் விதைக்கப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் தரைத்தளத்தில் பதிவு செய்யக்கூடிய ஒ…

  4. காலநிலைக் குற்றவாளிகள்: யாரை நோக்கி பாயும் தோட்டா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 06:00Comments - 0 குற்றம் புரிபவர்கள் மீது எப்போதும் குற்றஞ் சாட்டப்படுவதில்லை. குற்றஞ் சாட்டப்படும் எல்லோரும் குற்றம் புரிந்தவர்களுமல்லர். ஆனால், உலகம் என்றுமே நியாயத்தின் படி நடந்ததில்லை. நீதியும் அப்படியே. இன்று உலகம் எதிர்நோக்கும் காலநிலை மாற்றங்களுக்கான பழியும் யார் மீதோ சுமத்தப்படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் செய்கிற காரியங்களுக்கான பழி வளர்ந்துவரும் நாடுகளின் மீது விழுகிறது. குற்றவாளிகளே குற்றவாளிகளைக் குற்றஞ்சாட்டிவிட்டு தமது கைகளைக் கழுவி புனிதர்களாகிறார்கள். காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை முன்னெப்போதையும் விட இப்போது நாம் நன…

  5. கால்நடைப் பண்ணைகள் தோல்வியடையும் வழிகள் கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியா…

    • 0 replies
    • 353 views
  6. கிரீன்லாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 586 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டி உருகியுள்ளது! உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்தாண்டில் மட்டும், 586 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டி உருகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்கைகோள் உதவியுடன் கிரீன்லாந்தில் மேற்கொண்ட ஆய்வில், பனிக்கட்டிகள் உருகியதன் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும், உலக அளவில் 1.5 மில்லி மீட்டர் அளவிற்கு கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு கோடைக்காலத்தில் பனி உருகும் அளவு குறைவாக இருந்த காலத்தையும் தாண்டி, தற்போது 2019ஆம் ஆண்டில் மட்டும் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் விதமாக 586 பில்லியன் டன்கள், அதாவது 140 ட்ரில்லியன் கேலன்கள் (5…

  7. கிரீன்லாந்தில் பாரிய பனி உருகுவது 400 மில்லியன் மக்களை வெள்ளத்திற்கு ஆளாக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை கிரீன்லாந்து அதன் தற்போதைய விகிதத்தில் தொடர்ந்து பனியை இழந்தால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் கடலோர வெள்ளத்திற்கு ஆளாக நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கிரீன்லாந்து பனிக்கட்டி கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததை விட ஏழு மடங்கு வேகமாக உருகி வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பனி இழப்பின் காரணமாக 1992 முதல் உலக கடல் மட்டங்கள் சுமார் 10.6mm உயர்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்தில் இருந்து மட்டும் இந்த நூற்றாண்டின் இறுதியில் கூடுதலாக 7cm கடல் உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விகிதத்த…

  8. கிரீன்லாந்தின் பனிப்பகுதி (கிரீன்லாந்து தீவு, கிரீன்லாண்டிக்: செர்மெர்ஸ்யூக்) என்பது 1,710,000 சதுர கிலோமீட்டர் (660,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது, இது கிரீன்லாந்து நிலப்பரப்பில் சுமார் 80% ஆகும்.இது, அண்டார்க்டிக்கின் பனிப்பகுதிக்குப் அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய பனி அமைப்பு ஆகும். கிரீன்லாந்தின் பனிப்பகுதி வடக்கு-தெற்கு திசையில் சுமார் 2,400 கிலோமீட்டர் நீளமுடையதாக உள்ளது, அதன் மிகப்பெரிய அகலம் 1,100 கிலோமீட்டர் (680 மைல்) ஆகும்.இப்பகுதி 77 ° N என்ற அளவில் அதன் வடக்கு எல்லைக்கு அருகே .உள்ளது. இதன் பனி உயரம் 2,135 மீட்டர் (7,005 அடி) இதன் தடிமன் பொதுவாக 2 கிமீ (1.2 மைல்) க்கும் மேற்பட்டது மற்றும் அதன் மிக அடர்த்தியான பகுதியில் 3 கிமீ…

    • 0 replies
    • 684 views
  9. வடக்கு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கனடாவின் வட மேற்குத் தீவுக் கூட்டங்களுக்கு அருகாக இருக்கும் விசாலமான தீவு கிறீன்லாந்து. ஏறத்தாழ ஐம்பதாயிரம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கிறீன்லாந்து உலகின் மிகப் பெரிய தீவாகும். சுயாட்சி அடிப்படையில் டென்மார்க்கினால் நிர்வகிக்கப் படும் கிறீன்லாந்து, பெரும்பாலும் பனியால் மூடப் பட்டிருக்கும் ஒரு நிலப் பரப்பு. வடக்கே இருக்கும் ஆர்க்ரிக் எனப்படும் பூமியின் வட துருவத்தோடு உறைந்த பனிப்பாறைகளால் இணைக்கப் பட்டிருப்பதால், வட துருவத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முனையும், ஆனால் வட துருவத்தின் எல்லையில் அமைந்திருக்காத நாடுகளுக்கு, எப்போதும் கிறீன்லாந்து மீது ஒரு கடைக் கண் பார்வை உண்டு. வட துருவ ஆராய்ச்சி என்ற போர்வையிலும், பனிப்போர் காலத்தில்…

  10. கிளிநொச்சியின் கழிவகற்றல் பொறிமுறையில் தோல்வி – மு.தமிழ்ச்செல்வன் November 25, 2018 1 Min Read கழிவுகளை கொண்டு வந்து திறந்தவெளியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அதனை நாய்களும் காகங்களும் கொண்டு வந்து காணிக்குள்ளும், கிணற்றுக்குள்ளும் போடுகின்றன. இதனால் நாங்கள் நிறைய கஸ்ரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம், நாங்களும் பல தடவைகள் பிரதேச சபையினரிடம் சொல்லியும் அவர்கள் கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை என்றார் பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். ஆனையிறவு உப்பளத்தைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தர் சொன்னார் ஆனையிறவு பரந்தன் பிரதேசங்கள் ஒரு கைத்தொழில் வலயமாக உருவாக்கப்படவுள்ளது ஆனால் உமையாள்புரத்தில் கரைச்சி பிரதேச சபையினரால் கழிவு…

  11. கிளிநொச்சியில் வேலியே பயிரை மேய்வது போன்று அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள் – மு தமிழ்ச்செல்வன் September 30, 2018 1 Min Read உலகில் மனிதனே அதிகளவு சுயநலம் கொண்ட சமூக பிராணியாக காணப்படுகின்றான். எப்பொழுதும் சூழலை தனக்கு ஏற்றால் போல் மாற்றி அதிலிருந்து எவ்வளவு நன்மைகளை பெறமுடியுமோ பெற்றுவிட்டு அப்படியே கைவிட்டுவிடுகின்ற பழக்கம் மனித இனத்திற்கே அதிகமுண்டு. உலகில் மனித நடவடிக்கைகளால் இயற்கை சூழல் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. மனித நடவடிக்கையின் காரணத்தினால் பல உயிரிணங்கள் அழிவடைந்து செல்கின்ற அதே வேளை பல ஆயிரக்கணக்கான தாவரங்களும் அழிவடைந்து செல்கின்றன. இதில் சில வகையான தாவரங்கள் இன்னும் சில ஆண்டுகளில் முற்றாக அழிந்துவிடும் நிலையில் க…

  12. குஜராத் கடற்கரையில் தஞ்சம் புகுந்த சிங்கங்கள் - கிர் காட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன? ராக்ஸி கக்டேகர் சாரா பிபிசி குஜராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருகாலத்தில் குஜராத் முழுவதும் சிங்கங்கள் பரவியிருந்தன. மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தின் கடலோரப்பகுதிகள், தற்போது 100க்கும் மேற்பட்ட சிங்கங்களின் வாழ்விடமாக திகழ்கிறது. சிங்கங்களின் இயற்கை வாழ்விடம் சுருங்கிவருவதையே இது உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆசிய சிங்கங்களின் ஒரே இயற்கை வாழ்விடமான குஜராத்தின் கிர் வனப்பகுதியில், 2020ஆம் ஆண்டில் சுமார் 4…

  13. குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்? Getty Images சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் சுமார் நான்கு நாட்கள் பயணத்திற்குப் பிறகு, ஒரு குட்டையை நெருங்கியிருந்தோம். அதற்கு முந்தைய நாள்தான், பேறுகாலத்தில் இருந்த யானையை நடுவில் விட்டு, முன்னும் பின்னுமாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற யானை மந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தினம், மதிய வெயில் சுளீரெனச் சுட்ட வேளையில் நிழலுக்காக அருகிலிருந்த ஒரு குட்டையை நெருங்கினோம். ஆனால், ஓசையின்றிப் பொறுமையாக வருமாறு உடனிருந்த வனக்காவலர் சைகை காட்டினார். அங்குள்ளது யார் என்பது எனக்கு முன்பாக அவருக்குப் புரிந்துவிட்டது. …

    • 1 reply
    • 345 views
  14. கும்கி' திரைப்படம் வந்தபோது எழுதிய கட்டுரை இது. உண்மையில் ஒரு கும்கி யானையை எப்படி பயிற்று விக்கிறார்கள் என்பதன் தேடல். அப்போது கும்கி யானைகளைப் பற்றி புகைப்பட ஆவணம் மேற்கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவரை சந்தித்தேன். அவரிடமிருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அதை வைத்து ஒரு கட்டுரை எழுதினேன். இனி அந்தக் கட்டுரை... * * * * * அவருக்கு போட்டோ எடுக்க யாரும் கற்றுத் தரவில்லை. கல்லூரி ஓவியப்போட்டியில் முதல் பரிசாகக் கிடைத்த ரூ.1,500-ல் தான் முதன் முதலாக ஒரு ஸ்டில் கேமராவை விலைக்கு வாங்கினார். ஐந்து வருடங்கள் முடிவதற்குள் கைதேர்ந்த புரொஃபஷனல் போட்டோகிராபராக மாறினார். ஆர். செந்தில்குமரன் இது நடந்தது 2003-ல். அதற்குப் பின் 10 …

  15. கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது! தேவிபாரதி புவி வெப்பமயமாதல் சார்ந்த ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை மனித குலத்திற்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கை போல் தெரிகிறது. மறைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் பூமி சீக்கிரத்திலேயே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் எனக் கணித்ததை இப்போது ஐநாவின் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்னும் பன்னிரெண்டே ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 1,5 டிகிரி செல்சியல் அளவுக்கு உயரும். இதன் விளைவுகள் மோசமானவை. வறட்சியாலும் வெள்ளப் பெருக்காலும் பல கோடி மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகும், அதன் விளைவாகக் கடல் மட்டம் உயரும். கடல…

  16. பலூன், பாட்டில்மூடி.. கையளவு ஆமைக்குட்டியின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துண்டுகள்.. இப்படியே போனால்..! புளோரிடா: அமெரிக்காவில் இறந்து போன கடல் ஆமைக்குட்டியின் வயிற்றில் இருந்து நூறுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இயங்கி வருகிறது கம்போ லிம்போ இயற்கை மையம். இந்த மையம் அமைந்துள்ள இடத்தின் அருகே இருந்து உயிருக்கு போராடும் நிலையில் ஒரு கடல் ஆமை கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. உள்ளங்கை அளவே இருக்கும் அந்த ஆமையின் உயிரை காப்பாற்ற கம்போ லிம்போ இயற்கை மையத்தை சேர்ந்த மருத்துவர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் அந்த ஆமை இறந்துவிட்டது. இதையடுத்து, அந்த ஆமையின் வயிற்றை அறுத்து பா…

  17. கையுறை,ஊசி சிறிஞ்ச்,ரெஸ்ற்-கிட்..மலைபோலப் பிளாஸ்ரிக் கழிவுகள்! கொரோனா ஏற்படுத்தும் புதிய சவால் – எச்சரிக்கிறது WHO February 2, 2022 கொரோனா பெருந் தொற்று நோயின்விளைவாக உலகம் முழுவதும் சுகாதாரப்பாவனைப் பொருள்களின் கழிவுகள் மலைபோன்று (mountain of medical waste) பெருகி வருகின்றன.அதனால் உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும்தீங்கு உருவாகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. கையுறைகள், முகக்கவசங்கள் , தடுப்பூசி மருந்து ஏற்றும் சிறிஞ்சுகள், சுய வைரஸ் பரிசோதனைக் கருவிகள் (test kits) என்று கொரோனா வைரஸுடன் தொடர்புடைய பலமருத்துவக் கழிவுப் பொருள்கள் – அவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்ரிக்பொருள்கள் – மிகப் பெரும் தொன் கணக்…

  18. கொடைக்கானல் காடுகள் பசுமை பாலைவனமாகிறதா? இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கும் பல விஷயங்கள் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 30 ஜூலை 2022, 09:09 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அந்நிய ஆக்கிரமிப்பு மரங்கள், தற்போது 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். என்ன நடக்கிறது கொடைக்கானலில்? நதிகளின் தாய்மடி சோலைக் காடுகள் தான். அடர்ந்த நாட்டு மரங்களும் பரந்த புல்வெளிகளுமே சோலைக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பரந்த புல்வெளிகள் பொழியும் மழையை …

  19. கொரோனா முடக்கத்தால் உலகின் பாதியாகக் குறைந்துள்ள ஒலி அதிர்வு: தோமஸ் லெகோக் ! உலகில் பொதுவாக எழும் ஒலி அதிர்வின் அளவு 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொரோனாவால் மனிதர்களின் இயல்பான நடமாட்டம் மட்டுமின்றி சுற்றுலா, போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவை முற்றிலும் முடங்கியுள்ளதால் உலகில் ஒலி அதிர்வுகளின் அளவு குறைந்துள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வில் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர். உலகின் 300 வெவ்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை எட்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனா தொடங்கி இத்தாலி வரை உலகின் பல்வேறு நாடுகளில் அமுல்படுத்தப்பட்ட முடக்க ந…

  20. கொரோனாவால் வெளியான உண்மை.. சீனாவை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள் பெய்ஜிங்: இத்தனை காலமாக உலகிற்கு எவ்வளவு பெரிய தீங்கை சீனா இழைத்து வந்துள்ளது என்பதை செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் தற்போது, அம்பலமாக்கி உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அல்லாடிக் கொண்டிருக்கிறது. இது முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்துதான் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இதையடுத்து அந்த பிராந்தியம் முழுக்க சீல் வைக்கப்பட்டு உள்ளே, யாரும் அனுமதிக்கவில்லை. வெளியேயும் யாரையும் விடவில்லை.இந்த நிலையில்தான், தலைநகர் பீஜிங், தொழில்துறை நகரமான ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகக் கூடிய நச்சுப்புகை மிகமிகக்…

    • 2 replies
    • 741 views
  21. சத்தமின்றி சுற்றுச்சூழலைப் பாழாக்கும் `Fast Fashion' ஆடைக் கலாசாரம்; ஆய்வுகள் கூறும் நிதர்சனம் என்ன? தனியொரு மனிதன் மூன்று ஆண்டுகளுக்குக் குடிக்கும் சராசரி தண்ணீர் அளவான 3,781 லிட்டர்கள் (வயலில் பருத்தி விளைச்சல் தொடங்கி, தொழிற்சாலையில் தயாராகி, சில்லறைக் கடைக்கு விற்பனைக்குச்செல்லும்வரை) ஒரேயொரு ஜோடி ஜீன்ஸ் மட்டுமே தயாரிக்கச் செலவாகும். புத்துணர்வு தோற்றத்தைத் தரும் என்னும் போலியான தேவையை உருவாக்கும் எண்ணமுடன் பரவுகிறது குறைந்த விலையில் வேகமாகத் தயாரிக்கப்படும் நவநாகரிக ஆடைக் கலாசாரம். இதன் காரணமாக அதிக அளவில் உற்பத்தியாகும் ஆடைகள் காலப்போக்கில் கழிவுகளாக மாறிச், சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன. ஒவ்வொரு புடவையும் சராசரி 6 - …

    • 0 replies
    • 346 views
  22. உலகிலேயே மிக விலை கூடிய தேவை மிக்க மரங்கள் தான் சந்தனம், தேக்கு போன்ற மரங்கள். சந்தன மர கடத்தல், ஆந்திராவில் சந்தன மரங்கள் வெட்டிய தமிழர்கள் கொலை என்பதால் இது ஏதோ வளர்க்க கூடாத மரங்கள் என்று தவறாக நினைக்கிறார்கள். விசயம் அதுவல்ல. அரசுக்கு சொந்தமான வனப்பகுதிகளில் களவாக வெட்டப்படும் மரங்களுக்கே இந்தக் கெடுபிடி. சிலைத் திருட்டு போல, சந்தன மர திருட்டும் சட்ட விரோதமானது. இந்த வகை மரங்கள் வளர்ப்பு, சந்தை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் இப்போது உண்டாகி, பலர் இந்த மரங்கள் வளர்ப்பு குறித்து அக்கறை செலுத்துகிறார்கள். 25 வருடங்கள் வளர்க்கப் படும் ஒரு பூரணமாக வளர்ந்த மரணத்துக்கான சந்தை மதிப்பு 2 கோடி (இலங்கைப் பணத்தில்) வரை கிடைப்பதால், இந்த மரத்தினை தமது ந…

  23. சனிக்கிழமை கரையைக் கடக்கிறது டென்னிஸ் புயல் சியாரா புயலின் தாக்கத்தில் இருந்து மக்கள் வழமைக்குத் திரும்புவதற்கு முன்னர் மற்றுமொரு புதிய புயல் கரையைக் கடக்கவுள்ளது. வானிலை அலுவலகத்தால் பெயரிடப்பட்டுள்ள டென்னிஸ் புயல், வார இறுதியில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பலத்த காற்றினையும் கடுமையான மழையையும் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது சியாராவைப் போல வலுவாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. டென்னிஸ் புயல் வார இறுதியில் கரையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இங்கிலாந்து வானிலை கடினமாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கரையைக் கடக்கும் புயல், சனிக்கிழமையன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 மைல் வேகத்தில் காற்றினையும் கடுமையான …

  24. சர்ச்சைக்குரிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பிய இலங்கை சர்ச்சைக்குரிய வெளிநாட்டுக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்திற்கே அனுப்பப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் கருத்து தெரிவித்த சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன, சட்ட மா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமையவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். 2017ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு ஒரு தொகை கொள்கலன்களில் கழிவுகள் கொண்டுவரப்பட்டிருந்தன. மொத்தம் 21 கொள்கலன்கள் சனிக்கிழமையன்று இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த ஜனவரி மாதம், சட்டவிரோதமா…

  25. சர்வதேச புவி தினம் இன்றாகும்! சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச புவி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக பூமி தினத்தின் தொனிப்பொருள் “பூவி மற்றும் பிளாஸ்டிக்” என்பதாகும். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஏப்ரல் 22, 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் புவி தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று, புவி தினத்தில் சுற்றுச்சூழலையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க 193 நாடுகளைச் சேர்ந்த சுமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.