சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
118 பக்கங்கள் அடங்கிய குடும்ப வன்முறைகள் பற்றிய அறிக்கை இன்று யேர்மனில் வெளியாகி இருக்கிறது. கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு குடும்ப வன்முறைகள் அதிகரித்திருப்பதை யேர்மனியின் 16 மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தெரிகிறது. யேர்மனி முழுவதிலும் மொத்தமாக 179179 குடும்ப வன்முறைகள் பொலீஸாரினால் பதியப் பட்டிருக்கின்றன. 2021ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் இருந்த காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு குடும்ப வன்முறை 9.3 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. Nordrhein-Westfalen மாநிலத்தில் 37141 வன்முறைகளும், Baden-Württemberg மாநிலத்தில் 14969 வன்முறைகளும் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் வன்முறைகள் குறைந்த மாநிலமாக Bremen(2615) மாநிலம் காணப்படுகிறது. …
-
- 3 replies
- 960 views
-
-
அவளுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிய நாளாக இருந்திருக்க வேண்டியநாள். ஆனால் மாறாக அந்தநாள் அவள் வாழ்வில் ஒரு பயங்கரமான நாளாகிப் போனது. திருமணம் நடந்து ஒரு மணித்தியாலத்தில் இதயத்தில் இரத்தம் உறைந்து போனதால் அவளது கணவன் மரணித்துப் போனான். அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. Johnnie Mae Davis, Toraze († 48) இருவரும் அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்கள் முகங்களில் புன்னகைகள் பூத்திருந்தன. இருவரதும் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவிப்பதற்காக தேவாலயத்தில் கூடி இருந்தார்கள். அருட்தந்தையிடம் திருமணத்துக்கு “சரி” என்று இருவரும் ஒப்புக் கொடுத்ததன் பின்னர் ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
பழைய திரைப்படங்கள் அதுவும் குறிப்பாக எம்ஜிஆரின் திரைப்படங்களைப் பார்த்தால், நாயகன் 100 வீதம் நல்லவனாக இருப்பான். வில்லன் செய்த சதியால் வீண்பழி சுமந்து அவன் சிறைக்குப் போவான். படத்தில், “ஓடி வந்து மீட்பதற்கு உண்மைக்கோ கால்கள் இல்லை ஓய்ந்திருந்து கேட்பதற்கு நீதிக்கோ நேரம் இல்லை பார்த்த நிலை சொல்வதற்கு பரமனுக்கோ உருவம் இல்லை பழி சுமந்து செல்வதன்றி இவனுக்கோ பாதை இல்லை..” போன்ற சீர்காழியார் பாடும் ‘கணீர்’ பாடல்களும் இருக்கும். பின்னர் நாயகன் சுற்றவாளி என நிரூபணமாகி, விடுதலையாகி, “தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்” என்று கதை முடியும். யேர்மனியில், கடந்த வெள்ளிக்கிழமை(07.07.2023) ஒரு வழக்கில் கிடைத்த தீர்ப்பு எனக்கு இப்படியான பழைய திரைப்படங்களை நினைவ…
-
- 3 replies
- 575 views
-
-
யேர்மனியில் சில காலமாக வெளிநாட்டவர்களது செயல்கள் முகம் சுழிக்க வைக்கின்றன . அதிலும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர்களது நடவடிக்கை அதிகமாக இருக்கிறது. யேர்மனி சாக்சென் மாநிலத்தின் லவுற்றர் பேர்ன்ஸ்பாக் என்ற நகரின் ரெயில் நிலையத்தில் 15 வயதான ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞனால் ரெயில் சாரதி(50) ஒருவர் புதன் கிழமை 07.07.2023 அன்று தாக்கப் பட்டிருக்கிறார். ரெயில் சாரதி தாக்கப்படுவதை, Freie Sachsen என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் பொழுது யேர்மனியில் இப்படியும் நடக்கிறதா என ஆச்சரியப் படவைக்கிறது. புகையிரத நிலைய மேடையில், ஒரு யேர்மனியருடன் ஆப்கானிஸ்தான் இளைஞன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபடுவதை அவதானித்த சாரதி அவர்களைச் சமாதானப் …
-
- 1 reply
- 439 views
-
-
· ஜெயகாந்த் போரியல் • #கரும்புலிகளின் செயற்பாட்டை எவ்வாறு போரியல்ரீதியில் புரிந்துகொள்வது? …
-
- 0 replies
- 444 views
-
-
அது நடந்தது அமெரிக்காவில் புளோரிடாவில் ஒரு நீதிமன்றத்தின் மையத்தில். அதுவும் வழக்கு நடந்து கொண்டிருந்த போது. Joseph Zieler குனிந்து தனது சட்டத்தரணியின் காதில் ஏதோ சொல்வதற்கு எத்தனித்தார். யாருமே எதிர்பார்க்கவில்லை அதுவும் நீதிமன்றில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று. கைகளில் விலங்கிடப்பட்டிருந்த நிலையிலும் Joseph Zieler தனது முழங்கையினால் சட்டத்தரணி Kevin Shirleyஇன் முகத்தின் நடுவில் தாக்கினார். சுற்றி நின்ற பாதுகாவலர்கள் Joseph Zielerஐ உடனடியாக மடக்கிப் பிடித்துக் கொண்டார்கள். சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பின்னர் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கொடூரமான குற்றம் பரிந்தார் என 61 வயதான Joseph Zielerக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 199…
-
- 0 replies
- 864 views
-
-
Portuguese Kaffringha Dance with Baila Music - போர்த்துகீசியர்கள் இலங்கையை விட்டுச்சென்று 365 ஆண்டுகளாகிவிட்ட போதிலும், இங்கு வசித்து வரும் அவர்களின் சந்ததியினர், தங்களின் பாரம்பரிய கஃப்றிஞ்ஞா நடனத்தை இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். இந்த சமூகத்தின் சிறுவர்கள் கூட கஃப்றிஞ்ஞா நடனத்தை தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான இசைக்கலைஞர்கள் வெகு சிலரே இருக்கின்றனர்.
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
“ பாலுமகேந்திரா “ View finder ( வியூ ஃபைண்டர்) க்கால பாத்துக்கொண்டு சரியான அளவுக்கு ஃபிரேமை fix பண்ணீட்டு , கமராவின்டை முன்பக்கம் இருக்கிற பெரிய வட்டத்தை adjust பண்ணி புள்ளிகள் ஒண்டாகி முகம் கூர்மையாகி வந்திச்சுது. முன்னால இருக்கிற fine focus ஐ உருட்டி சப்பை மூக்கின்டை நுனி தெளிவாத் தெரிஞ்சுது. Konica film roll ISO 200 load பண்ணின Yashica கமராவின்டை அப்ஃபேச்சரை குறைச்சு focal depth ஐ மாத்த பின்னால மரம் மறைஞ்சு முகம் மட்டும் தெரிய எடுத்த portrait ஐ பிரேம் போட்டுக் கொண்டந்து முன் கண்ணாடியைத் துறந்து மாட்டி வைச்சான் தானும் ஒரு பாலுமகேந்திரா எண்ட நினைப்பில, இதைப்பாத்திட்டு படம் எடுக்க ஆக்கள் கூட வருவினம் எண்டு நம்பிக்கையில். எண்பதுகளில போட்டோக்கடைக்கு போட்டி இல்லா…
-
- 1 reply
- 775 views
-
-
O/L பரீட்சை முடிவின் பின்... 👆 வடக்கு கிழக்கு மாணவர்கள்... கதிரை. மேசைகளை உடைத்து பாடசாலைக்கு சேதம் விளைவிப்பது ஏன்? 👆O/L பரீட்சை முடிவின் பின் பாடசாலைக்கு நன்றி தெரிவித்து வணங்கியும், பரீட்சை நிலையத்தை மலசல கூடத்தை சுத்தம் செய்தும் விடைபெற்றுச் செல்லும் மலையக பாடசாலைகளின் மாணவர்கள்... ஆடைகளுக்கு மை அடித்து, கதிரை மேசைகளை அடித்துடைத்து, காதலன் காதலி பெயரை ஆடையில் எழுதி, அநாகரீகமாக வெளியேறிச் செல்லும் வடக்கு கிழக்கு மாணவர்கள்... முறையான கல்வியும் ஒழுக்கசார் விழுமியங்களும் எங்கு பின்பற்றப்படுகிறதோ அங்குதான் அடுத்த கட்ட வளர்சியும் இடம்பெறும்... பெறுபேறுகளில் வடக்கு கிழக்கு ஏன் தொடர்ந்தும் பின்னோக்கி செல்கிறது என்பதற்கு இதுவும்…
-
- 10 replies
- 679 views
- 1 follower
-
-
அன்பால் வீழ்ந்த, விலங்கினம்... நாய்! ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது..? இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும். ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள... புற்கள், இலை, தளைகளை வழங்கி விடுகிறது. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.? உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது?? வீட்டிற்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..? சா…
-
- 2 replies
- 948 views
-
-
52 வருடங்களுக்கு முன்னர், 1971ம் ஆண்டில் பேரு நாட்டு அடர்ந்த காட்டின் மத்தியில் நடந்த விமான விபத்தில் 17 வயதாக இருந்த ஜூலியானே டில்லர் (Juliane Diller) என்பவர் உயிர் தப்பினார். ஜூலியானே அப்பொழுது லீமாவில் தனது பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளது தந்தை அங்குள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தனது கல்லூரிப் படிப்பை டிசம்பர் 23இல் முடித்த ஜூலியானே அந்த வருடத்து கிறிஸ்மஸ் தினத்தையும் பிறக்கும் புத்தாண்டையும் தந்தையுடன் கொண்டாடுவது என்று தீர்மானித்துக் கொண்டாள். அவளது தந்தை இருந்த இடம் புகால்பா நகரத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில் இருந்தது. பாடசாலை முடிந்த அடுத்த நாளே புகால்பா நகரத்தை நோக்கிப் …
-
- 1 reply
- 374 views
- 1 follower
-
-
இலக்கை நோக்கி பெலரூஸ் December 2022 மைக்கின்டை சுருட்டை பாதி வாங்கிப் பத்தின அன்ரனோவ் கண்ணை telescope இல இருந்து எடுக்காம சுத்திப் பாத்துக்கொண்டிருந்தான். அதை வாயில் வைக்க முதல் காட்டுப்பக்கம் வந்த சலசலப்பு என்ன எண்டு பாக்க பெரிய focus light ஐத் திருப்ப , “உது கரடி தான்” எண்டு மைக் சொல்ல , “இல்லை இந்த நேரம் கரடி திரியாது , அதோட இது மரத்தின்டையோ , கிளையின்டயோ சலசலப்பு இல்லை நிலத்தோட வாறது” எண்டு சொல்லித் திருப்பியிம் பாத்திட்டு ஒண்டையும் காணேல்லை எண்டு போட்டு கடைசியா ரெண்டு தரம் நல்லா உள்ள இழுத்து நெஞ்சு முட்ட நிறைச்சு வைச்சு மூச்சைக் கொஞ்சம் கொஞ்சமா வெளீல மூக்கால விட்டிட்டு, கடைசிக் காத்தோட காறி எச்சிலைத் துப்பீட்டு ஒரு chewing gum ஐ வாயில போட்டான். Al ja…
-
- 2 replies
- 713 views
- 1 follower
-
-
வன்னியில் வெளிச்சத்திற்கு வராத மிகப்பிரமாண்டமான சுற்றுலாத்தலம் - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நி…
-
- 5 replies
- 603 views
-
-
தாயில்லாமல் நானில்லை 1969இல் வெளிவந்த திரைப்படம் அடிமைப்பெண். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் “தாயில்லாமல் நானில்லை தானா எவரும் பிறந்ததில்லை”. சமீபத்தில் நான் வாசித்த யேர்மனியச் செய்தி ஒன்று இந்தப் பாடலை எனக்கு நினைவூட்டியது. “..மேக வீதியில் நடப்பாள் உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள் மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள் மங்கள வாழ்வுக்குத் துணையிருப்பாள் தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை எனக்கொருதாய் இருக்கின்றாள் என்றும் என்னைக் காக்கின்றாள்..” இத்தாலியில் வெரோனா நாட்டில் இறந்து போன தனது தாயின் உடலோடு ஆறு வருடங்களுக்கு மேலாக ஒரே வீட்டில் அவரது மகன் வசித்து வந்திருக்கிறார். அதுவும் தனது தாயின் உடல் இருந்த கட…
-
- 1 reply
- 505 views
-
-
Babugi Muthulingam யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய கடைசி சிங்களவர் சிறிமான்ன. யாழ் நூலக எரிப்பின் ஒரு சாட்சியமாக விளங்குகிறார். இதுவரை வெளியாகாத சில தகவல்களையும் அவர் நமக்கு ஒப்புவிக்கிறார். 1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் ஒரு அரச ஊழியராக இருந்த டீ.டபிள்யு சிறிமான்ன தேர்தல் நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர் சிறிமான்ன. “1981 ஆம் ஆண்டு ஜூன்.நான்காம் திகதி நடந்த அந்த தேர்தலில் பணியாற்ற வேண்டியிருந்தது. குருநாகல் மாவட்ட ஆணையாளரின் பரிந்துரையின்படி தேர்தல் பணிகளில் நான் ஈடுபடுத்துவதற்க…
-
- 2 replies
- 771 views
-
-
1969இல் துலாபாரம் என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது. யாருமே துணையில்லாமல் தனித்து நின்று போராடும் ஒரு பெண்ணின் கதை. ஒன்றுமே இனிச் செய்ய முடியாது என்ற நிலை வந்த போது உணவில் விசம் கலந்து தானும் உண்டு பிள்ளைகளுக்கும் அவள் கொடுப்பாள். பிள்ளைகள் இறந்து போக அவள் மட்டும் பிழைத்துக் கொள்வாள். அவள் மேல் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றில் விசாரணை நடக்கும். இதுவே அந்தப் படத்தின் கதை. சமீபத்தில் யேர்மனியில் நடந்த வழக்கு ஒன்று என்னை 1969க்கு திரும்பி அழைத்துப் போனது. துலாபாரம் படத்தில் இடம் பெற்ற “காற்றினிலே பெருங் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் ஒளி இருக்கும்…” என்ற ஜேசுதாசின் பாடல் இப்பொழுது எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உணவில் மரணம் விளைவிக்கும் வில்லைகள…
-
- 1 reply
- 453 views
- 1 follower
-
-
அலாரம். “ டாண் “ எண்டு நல்லூரில அடிச்ச மணி நாலு கிலோ மீற்றருக்கு இங்கால படுத்திருந்த சாந்தக்காவை ஏழுப்பிச்சுது . “டேய் சின்னவா எழும்பு நாளைக்கு சோதினை எண்டு சொன்னியெல்லோ , கொண்ணன் பிந்தித்தான் படுத்தவன் நீ எழும்பு” எண்டு திருப்பித் திருப்பி சொல்லவும் அந்தச் சண்டையில பெரியவன் எழும்பினான். அரைநித்திரையில கட்டில்ல இருந்து எழும்பின சின்னவன் பெட்சீட்டால போத்த படி வந்து மேசையில திருப்பியும் படுத்தான் . பத்து நிமிசத்துக்கு ஒருக்கா “சின்னவா பெரியவா” எண்டு மாறி மாறிக் கூப்பிட்டு கடைசீல என்ன சத்தமில்லை எண்டு வந்து பாத்திட்டு “பார் ஐஞ்சு மணி பெருமாள் கோயில் மணி கேக்குது” எண்டு மனிசி நித்திரை கொண்டவனுக்கு மேல செம்பில இருந்து தண்ணியைத் தெளிச்சு எழுப்பி படிக்க விட்டுது. வீட்…
-
- 2 replies
- 766 views
- 1 follower
-
-
கிளிநொச்சி நீச்சல் தடாகத்தினுள் இரு இளம் ஜோடிகள் களியாட்டம் கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கம் இதனை அனுமதிக்கின்றதா? கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கத்தின் நீச்சல் தடாகத்தில் என்ன நடக்கின்றது? கடந்த காலங்களில் பெரும் தொகையான மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியை வழங்கிய கிளிநொச்சி நீச்சல் தடாகம் தற்போது காம களியாட்டங்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளது கிளிநொச்சி மாவட்டத்திற்கான இந்த நீச்சல் தடாகம் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்த முடியாமல் இரும்புத்திரை கொண்டு பூட்டப்பட்டுள்ளது. சிறார்களுக்கான நீச்சல் பயிற்சிகள் யாவும் நிறுத்தப்பட்டு திறமையுடன் செயல்பட்ட பயிற்றுனர் துரத்தப்பட்டுள்ளார். தற்போது பயிற்றுநர்கள் எவரும் இ…
-
- 5 replies
- 712 views
-
-
கண்டம் விட்டு கண்டம் பாஞ்சு O /L எண்ட கண்டம் முடிஞ்சிது எண்ட முதல் அடுத்த கண்டம் தொடங்கீட்டுது. என்ன படிக்கிறதெண்டு தெரியாம A/L க்குப் போய் , ஆர் நல்ல மாஸ்ரர் எண்டு தெரியாம எல்லா கொட்டிலுக்கும் போய் , கடைசீல பிரண்டுக்காக , பாக்கிற சரக்குக்காக எண்டு ரியூசன் மாறி மாறிப் போய் ஒருமாதிரி இந்தக் கண்டத்தையும் முடிச்சிட்டு இருக்க தன்மானம் இருக்கிறவன் தரணி காக்கப் போக அம்மாக்குப் பயந்த நான் இனி என்ன செய்யிறது எண்ட கேள்வி திருப்பியும் வந்திச்சுது. A/L எடுத்தாப் பிறகு வெளிநாட்டுக்கு இல்லாட்டி கொழும்புக்கு ஏதாவது course படிக்கப் பாஸ் எடுத்தோ எடுக்காமலோ தப்பிப் போக வசதி இல்லாத ஆக்களுக்கு கம்பஸ் போறது தான் ஒரே வழி, இல்லாட்டி கடன் வாங்கி கடலால எண்டாலும் கனடா போகோணும். பத்தாம் வகுப…
-
- 2 replies
- 807 views
- 1 follower
-
-
புலமும் தாயகமும்………… போர் நடந்த காலங்களில் புலம் பெயர் தேசங்களில் வாழும் எம்மவர் தாயகத்திற்குச் செய்த பொருளாதார உதவிகள் எம்மைப் பட்டினிச் சாவிலிருந்து தடுத்தது. போர் முடிந்த பின்பு எமது தாயக மண்ணின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் புலம்பெயர் தேசங்களில் வாழும் உறவுகளின் பங்களிப்பு போற்றுதற்குரியது. அரசாங்கத்தை மட்டும் நம்பி இருந்தால் இவ்வளவு வேகமாக எம்மால் மீண்டெழுந்து இருக்க முடியாது. அந்த வகையில் அவர்களின் உதவிகள் நன்றிக்குரியது. வணக்கத்துக்கும் உரியது. தாயக மண்ணுக்கான உங்களது சேவைகள் செம்மையுறக் கவனிக்க வேண்டியவை எனச் சிலவற்றை முன் வைக்கிறேன். 01. நீங்கள் தாயகம் வரும் போது பொது நிகழ்வு ஒன்றில் உதவித் திட்டமொன்றை அறிவிக்கிறீர்கள். தொடங்குகிறீர்கள். ஆனா…
-
- 8 replies
- 1k views
- 1 follower
-
-
•கடவுள் முருகனும் தமிழ் பக்தனும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் பக்தன்- முருகா! தமிழ் கடவுளே! ஈழத்தில் எம் இனம் அழிகிறது. நீ கண் திறந்து பார்க்கக்கூடாதா? முருகன்- பக்தா! நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? பக்தன்- எங்களை காப்பாத்து முருகா. எங்களை அழித்தவர்களை பழி வாங்கு முருகா. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் நல்ல செய்தி கூறு முருகா! முருகன்- என் கோயில் மீது விமானம் மூலம் குண்டு போட்டவர்கள். இப்போது ஹெலிகொப்டர் மூலம் பூ தூவுகிறார்கள். அவர்களையே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அப்புறம் உன்னை எப்படி காப்பாற்றுவேன் என நம்புகிறாய்? பக்தன்- என்ன முருகா இப்படி சொல்லுறாய்? உன்னைவிட்டால் எமக்கு வேறு ய…
-
- 1 reply
- 403 views
-
-
“குறைந்த விலை, பெரிய தேர்வு, 90 சதவீதம் வரை தள்ளுபடி” என அட்டகாசமாக யேர்மனிய சந்தைக்குள் தற்போது நுளைந்திருக்கும்சீன நாட்டு Temu என்னும் இணையத்தள வியாபாரம் பற்றி இப்போது பெரிதாகப் பேசப்படுகிது. நகைகள், தளபாடங்கள், சிறார்கள், பெண்கள், ஆண்கள் ஆடைகள், சமையலறை உபகரணங்கள், வீட்டுக்குத் தேவையானபொருட்கள் என குறைந்த விலையில் பல பொருட்கள் இந்த இணையத்தள விற்பனைப் பகுதியில் குவிந்திருக்கின்றன. உதாரணமாக180 யூரோ பெறுமதியான Adidas தயாரிப்புகளை ஒத்த காலணிகளை 12யூரோவுக்குக் குறைவாகவே Temu தளத்தில் பார்ககமுடிகிறது. Temu அன்றாடம் தேவைப்படும் பொருட்களின் ஒரு மலிவான ஒரு பெரிய சந்தையாக இப்பொழுது இருக்கிறது. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் இடைத்தரகர்கள…
-
- 6 replies
- 638 views
-
-
முட்டிக்கு கீழே இருகால்களை இழந்த முன்னாள் பிரிட்டிஸ் கூர்க்கா வீரரின் சாதனை முயற்சி பற்றி விபரிக்கிறது இக்காணொளி.
-
- 1 reply
- 657 views
- 1 follower
-
-
ரெக்கை கட்டிப் பறக்குதடீ …….. உலகப் பொருளாதாரம் கொரானாவின் உச்சத்தில இருக்கேக்க எல்லாரும் சைக்கிள் வாங்க நானும் ஒண்டை வாங்கினன். “ அப்பா என்னை சைக்கிளில வைச்சு ஒருக்காச் சுத்துவீங்களோ” எண்டு சின்னவள் கேக்க நானும் மூச்சு வாங்க ஒரு சுத்தி சுத்தீட்டு வந்திறங்க , மனிசி தன்னையும் எண்டு கேக்க சைக்கிள் என்னைப் பாத்து சிரிச்சுது. “ லவ் பண்ணிற காலத்தில ஏறும் ஏறும் எண்டு கேட்டிட்டு இப்ப மாத்திரம் என்ன “ எண்டு மனிசி முறைச்சுது. லவ் , ரொமான்சுக்கு நல்ல வாகனம் ஒண்டு குதிரை இல்லாட்டிச் சைக்கிள் தான். இதில வாற சுகம் காரிலயோ இல்லைத் தேரிலயோ கூட வராது. சைக்கிளில ஏத்திக்கொண்டு போகேக்க முட்டியும் முட்டாமலும் படிற முதுகு , சட்டையோட சேந்து தட்டுப்படிற இடது கால் , பின்னால வருட…
-
- 5 replies
- 814 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் அன்னா ஜார்விஸ் என்ற ஒரு ஆர்வலரின் முயற்சியால் அன்னையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு அன்னையர் தினம் மே 14ஆம் தேதி கொண்டாடப்படும். அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் தனித்தனி அன்னையர் தினத்தை கடைப்பிடிக்கின்றன. அந்த வகையில், உலகம் முழுவதும் அன்னையர் தின கொண்டாட்டங்கள் மற்றும் அவை எப்படி வந்தன என்பதை இங்கே பார்க்கலாம். அமெரிக்க அன்னையர் தினம் அமெரிக்காவில் அன்னா ஜார்விஸ் என்ற ஒரு ஆர்வலரின் முயற்சியால் அன்னையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்னா 1854 ஆம் ஆண…
-
- 0 replies
- 537 views
- 1 follower
-