சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1019 topics in this forum
-
"எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது" என்ற தலைப்பில் 27.9.2018 Yஅலெ (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vலடிமிர் Pஒழ்னெர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை. பொஸ்னர் பிரான்சில் பிறந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். பின் சோவியத் யூனியனுக்கு குடிபெயர்ந்தவர். ரசியா இன்றைய இந்த நிலையை எப்படி வந்தடைய நேரிட்டது என்பது குறித்த ஒரு சித்திரத்தை அவரது உரை தருவதால் அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன். * 1991 இல் சோவியத் யூனியன் தகர்ந்ததா தகர்க்கப்பட்டதா என்ற அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன. கோர்பச்சேவ் (1985௧991) அதை சாதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே ரசியா, உக்ரைன், பெலாரஸ் மூன்று குடியரசுத் தலைவர்களும் Bஎலவெழ என்ற இடத்தில் ஒன்றுகூடி ச…
-
- 1 reply
- 916 views
-
-
CMR இல் இருந்து விடைபெற்றேன் சொந்தங்களே... CMR வானொலி கருக்கொண்ட நாள் முதல், என் இதயத்தில் உறைந்துபோன பெயர். கடந்த சுமார் 18 ஆண்டுகளாக, CMR உம் நானும் சேர்ந்தே வளர்ந்தோம். அது தவழ்ந்தபோது நானும் தவழ்ந்தேன், அது நடந்தபோது நானும் நடந்தேன், அது ஓடியபோது நானும் ஓடினேன். ஆனால், தனிப்பட்ட காரணங்களால், என்னோடு வளர்ந்த பிள்ளை, CMR ஐ விட்டு கனத்த மனதுடன் ஓடிவந்துவிட்டேன். இம்முடிவு, என் சாவுக்குச் சமானமானது என்ற போதிலும், காலம் அவ்வாறான ஒரு முடிவுக்கு என்னை இட்டுச்சென்றுள்ளது. இதற்காக, என்னை நேசித்த அத்தனை உள்ளங்களிடமும், என்னை வளர்த்த CMR நிர்வாகத்திடமும் மன்னிப்புக்கோருகிறேன். எனினும், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை முடிந்தவரை, பயன்ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். நேரம் 9.45 மணி, ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு இன்னும் 15 நிமிடங்கள். பேருந்துகள் கிடைக்குமா என்பது பெரிய கவலையாகி விட்டது. எனக்கு 20 அடி தொலைவில் ஒரு மனிதன் ஆட்டோக்களை நிறுத்த முயன்று கொண்டே இருந்தான். நின்ற ஆட்டோக்களும் அவனை ஏற்றிக் கொள்ளாமல் நகர்ந்தன, பேருந்து வருவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை, சரி, ஆட்டோவில் போகலாம் என்று முடிவு செய்து ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். "கோயம்பேடு போக வேண்டும்", ஆட்டோக்காரர் ஒரு கணம் யோசித்து விட்டு "200 ரூபாய் குடுங்க சார்" என்றார். சாதாரண நாட்களிலேயே 300 ரூபாய் கேட்பார்கள், இந்த ஊரடங்கு இரவில் அவர் கேட்டது நிய…
-
- 0 replies
- 548 views
-
-
#யாழ்ப்பாண பேச்சு வழக்கு யாழ்ப்பாண பேச்சு வழக்கு என்பது இங்குள்ள மக்களால் அன்றாடம் பாவிக்கப்படும் சொற்பிரயோகங்களே. மெய்யே! இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பாண பேச்சு வழக்கு விஷேஷம். கணவன்மாரை மனைவிமார் பெயர் சொல்லி அழைக்காத பண்பாடு நிலவிய (2 சந்ததிக் காலத்துக்கு முன்னர் என்று சொல்லலாமோ?) காலத்தில் கணவர்மாரை அழைப்பதற்கும் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் மெய்யே? / கேட்டீரே? என்ற இவ் விழிப்புச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தன. இன்றும் கூட கிராமங்களில் இது பாவனையில் உள்ளது. …
-
- 1 reply
- 930 views
-
-
பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் நோக்கி நகர்வு!! வெளியேறும் மக்களால் 🔴உக்ரைன் தலைநகரில் பெரும் வாகன நெரிசல்! அதிபர் மக்ரோன் இன்று நாட்டுக்கு விசேட உரை! 🔴உலக பங்குச் சந்தைகள் சரிவு எண்ணெய், எரிவாயு விலைகள் என்றுமில்லாதவாறு எகிறின!!! நேட்டோவின் பதில் நடவடிக்கை நாளைய கூட்டத்துக்குப் பின்பே! உக்ரைனின் முக்கிய இராணுவ இலக்கு களை மட்டும் நவீன ஏவுகணைகளால் தாக்கி அழித்தபடி ரஷ்யப் படைகள் மிக வேகமாக நாட்டின் தலைநகரம் அமைந் துள்ள வடக்குப் பகுதி நோக்கி முன்னேறி வருகின்றன. தாக்குதல் ஆரம்பித்து 24 மணிநேரத்துக் குள் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலை நகர் கீவ் அமைந்துள்ள பிராந்தியத்தின் எல்லைப்பகுதியை அண்மித்துவிட்டன என்ற…
-
- 4 replies
- 678 views
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=4787670431319151&id=100002287252856
-
- 1 reply
- 1.2k views
-
-
எனது கரையிலிருந்து 500மீற்றர் அருகேயுள்ள கரையில் எனது சிறு தோணியை கரை நிறுத்த முடியாது. கரையோரப் பாதுகாப்புச் சட்டமாம். தென் இலங்கை ராட்சதப் படகுகள் எனக்குப் பக்கத்திலுள்ள காரைநகர் துறையில் தரித்து பெரும் தொழில்களைச் செய்வார்களாம். இதென்ன கண்டறியாத கரையோரப் பாதுகாப்புச் சட்டம்? இதைக் கேட்பார் கிடையாது. அவனவன் கொடுக்கை வரிந்துகட்டி "மீனவர் உரிமை" என பலவர்ண தோள்த்துண்டுகளைக் கட்டிக்கொண்டு சந்னதம் ஆடுகிறார்கள். யாரடா நீங்கெல்லாம்...?? https://www.facebook.com/thamayanthi.thamayanthi https://www.facebook.com/thamayanthi.thamayanthi
-
- 0 replies
- 453 views
-
-
உக்ரைனின் கிழக்கே டொன்பாஸில் தனி நாடுகளுக்கு புடின் அங்கீகாரம்!! பாதுகாக்க ரஷ்யப் படைகள் செல்லும்? பூகோள அரசியல் போட்டியால் பூமிப் பந்தில் புதிய தேசங்கள்.. உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில்- டொன்பாஸ் பிராந்தியத்தில்-கிளர்ச்சியா ளர்களது கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு நிலப்பிரதேசங்களைத் தனி நாடுகளாக அங்கீகரித்திருக்கிறது ரஷ்யா. அதிபர் விளாடிமிர் புடின் நாட்டுக்கு ஆற்றிய தொ லைக்காட்சி உரையில் தனிநாட்டு அங்கீ காரணத்துக்கான பிரகடனத்தில் ஒப்பமிட வுள்ளார் என்பதை அறிவித்திருக்கிறார். ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படைகளால் தன்னிச்சையாகவே குடியரசுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த டொனெட் ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகிய இரண்ட…
-
- 0 replies
- 267 views
-
-
தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களின், கனடாவிற்கான பெயர் பட்டியலின் # 24. இந்த புகைப்படத்தில் இருக்கும் நபரின் பெயர் செந்தில்குமரன்(மின்னல்), இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் கடல் தொழில் செய்யும் ஒருவர், தான் களைப்பாறுவதற்காக தமிழ் நாட்டில் வைத்திருந்த, அந்தப்புர தேவதையின் மூத்த கணவனின் புத்திரன். காகம் கறுப்பென்றால், கறுப்பெல்லாம் காகமாக முடியுமா. தான் ஈழத்தில் பிறந்தவரென்று சொல்லி, எம்மவர்களிற்கு பெரிய நாமம் போட்டுக் கொண்டிருக்கின்றார். அவரின் நாமத்தில் மயங்கிய எம்மவர்களில் சிலர், தங்களோடு சேர்த்து இவரையும் பண சேகரிப்பில் பயன்படுத்தினார்கள். இலங்கையில் டிசம்பர் 26, 2004 சுனாமி வந்த போது, கனடியத் தமிழர்களிடமிருந்து வசூலிக்…
-
- 4 replies
- 586 views
-
-
"படம் பார் பாடம் படி" கரவெட்டியில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு! - தங்களுக்குள் மல்லுக் கட்டி வீணாய் போகும், தமிழ்த் தேசியம் பேசுபவர்களுக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இந்தப் படங்கள் பல நூறு செய்திகளை சொல்கின்றன. புரிந்துகொள்வார்களா? இந்த மாநாட்டில் அமைச்சர் தயாசிறி பாடிய "தமிழா தமிழா நாளை நம் நாளே" பாடல் Nadarajah Kuruparan
-
- 0 replies
- 820 views
-
-
டொன்பாஸ் மக்களை ரஷ்யாவுக்குள் 🔴இடம்பெயருமாறு கட்டாய உத்தரவு! உக்ரைனுக்குள்ளே தனி நாடுகளை அங்கீகரிக்கத் தயாராகிறது ரஷ்யா! ஆக்கிரமிப்பை வேறுவழிகளில் ஆரம்பிக்க புடின் புதிய வியூகம் கிழக்கு ஐரோப்பியப் போர் நெருக்கடி இப்போதைக்கு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்ட காலம் இழுபடக் கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளைத் திருப்பி அழைப்பதாக ரஷ்யா அறிவித்த பின்னர், உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர் களது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தன்னா ட்சிப் பிராந்தியங்களில் ஷெல் தாக்குதல் கள் தொடங்கியிருக்கின்றன. உக்ரைன் படைகளே தாக்குதலைத் தொட க்கியிருப்பதாகக் கிளர்ச்சியாளர்களும் கிளர்ச்சிப் படைகளே ரஷ்யாவ…
-
- 0 replies
- 465 views
-
-
-
-
- 0 replies
- 891 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. குறித்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது இன்று காலை 11 மணி முதல் பிற்பல் 1 மணி வரையில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி அமைப்பின் ஊடான அதன் இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்தநிலையில் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹக்கீம், மனோ கணேசன் பங்கேற்றிருந்தனர். அத்துடன், மதத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர…
-
- 1 reply
- 532 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர்... இந்திரா பிரியதர்சினி, இந்திரா காந்தியானது எப்படி?? மறைந்த இந்திய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகள் 'இந்திரா பிரியதர்சினி நேரு' என்றில்லாமல் "இந்திரா காந்தி" ஆனதை படியுங்கள். நேருவின் குடும்பத்தில் "காந்தி" என்ற பெயர் எப்படி எப்போது எவ்விதமாக ஒட்டிக்கொண்டது? பாமரர்கள் பலரும் மகாத்மா காந்தியின் குடும்பத்தினர்தான் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சஞ்சய்காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி என்று நினைக்கின்றனர் இது முற்றிலும் தவறு. காரணம்... 1. மகாத்மா காந்திக்கும் இவர்களுக்கும் எந்த விதமான ரத்தசம்மந்த உறவும் இல்லை. காரணம்... 2. இந்திரா பிரியதர்சினி நேரு என்ற பெயர் …
-
- 0 replies
- 487 views
-
-
இலங்கை கடல் தொழில் அமைச்சரும்; புலம்பெயர் கட்சிச் செயல் வீரர்களின் 'CLUB HOUE'ம்? 'கனேடிய வசந்தம்' என்ற 'CLUB HOUSE' அறையில், 'மீனவர்கள் பிரச்சினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுகிறார்' தலைப்பில் சனத்திரள் கூட்டப்பட்டிருந்தது. நாங்களும் அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். பிந்திய சமூகமளிப்பாக அமைத்திருந்தது. அப்பொழுது இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசிக் கொண்டிருந்தார். பொதுவாக, புதிதாக எதையும் சொல்லிவிட்டதாக நினைக்கத் தோன்றவில்லை. அது பல கேள்விகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்கிற விம்பம் மீது கேள்வியை எழுப்பியது. அந்த அறையில் காற்றாட உட்கார்ந்திருந்தவர்கள், டக்கிஸ்ட்டுகள் என்பதோடு அமைச்சரைத் தெரிந்தவர்கள், அவரை ஓர் மாற்றீட்டு அரசியல்த் தல…
-
- 0 replies
- 469 views
-
-
It is NOT impossible.. an anti-hero becomes an anti-villain… ஒரு கொலைக் குற்றவாளி நீதிமன்றத்திற்கு வரும் போது, மக்கள் அவன் மீது பூக்களைத் தூவுகிறார்கள், வழக்கு செலவுக்காக ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள். அவனைத் திருமணம் செய்து கொள்ளத் தயார் என பல இளம் பெண்கள் பேட்டியளிக்கிறார்கள். சினிமா காட்சி போல் இருந்தாலும் இது நிஜத்தில் நடந்தவை. 1959 ல் நடந்த சம்பவம். ''கவாஸ்கர் மானேக்ஷா நானாவதி'' இந்திய கடற்படையில் கமாண்டர் வேலை பார்த்தவன். கம்பீரமான அழகான தோற்றம். அவன் இங்கிலாந்தில் இருந்த போது சில்வியா என்கிற ஆங்கிலப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். பிறகு பம்பா…
-
- 0 replies
- 485 views
-
-
அந்தர்ஜனம் / சாதனம். கேரளாவில் அந்தர்ஜனம் என்னும் பெயரில் நடந்த பெண்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகள் நடந்த கொடுமை சுமார்த்த விசாரம் என்பது கேரளத்தில் நம்பூதிரிகளின் சமூகத்தில் வழக்கிலிருந்த ஒரு குற்ற விசாரணை முறை. நம்பூதிரிப் பெண்களின் நடத்தையில் சந்தேகம் உண்டானால் அவர்களை விசாரணைக்குட்படுத்தி தண்டனை வழங்கும் ஒருதலைப்பட்ச விசாரணை முறை இது. நம்பூதிரிகள் சிறுபான்மையினர். அவர்களுக்கு நேரடியாக ஆயுதபலம் சாத்தியமில்லை. ஆகவே கேரளத்தில் மட்டும் ஒரு தனி வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். நம்பூதிரி ஆண்கள் மன்னர்குடும்பங்களிலும், நாயர்சாதியின் பெருநிலப்பிரபுக்களின் குடும்பங்களிலும் பெண்களை மணம்புரிந்துகொண்டார்கள். அதன்மூலம் அக்குடும்பங்…
-
- 3 replies
- 1k views
-
-
https://www.facebook.com/100004156729307/posts/2086587891489748/ தலைப்பு என்ன வைப்பது என்று தெரியவில்லை ...வாசிக்கவே ஆச்சரியமாய் உள்ளது கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாற்றில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் முஸ்லிம்கள் ************************************ இந்த ஆலயத்தின் முக்கிய வரலாறு போர்த்துக்கீசர் ஆக்கிரமிப்பில் தொடங்குகிறது.வெள்ளை இராணுவ அதிகாரி விட்ட சவாலை வெற்றி கொள்ள, இங்குள்ள நந்தி வாய் திறந்து புல் உண்டு வாலைக் கிளப்பி சாணமும் போட்ட எல்லோருக்கும் தெரிந்த அதிசயக் கதையில் பிரபல்யமடைந்தது. எனது உம்மாவின் உம்மா தாயும்மாவின் தந்தையின்…
-
- 3 replies
- 594 views
-
-
பரி யோவான் பொழுதுகள்: பண்டிதர் Cup - Prelude அந்தக் காலத்தில் பந்தடியில் மட்டுமல்ல படிப்பிலும் கலக்கிய பரி யோவான் கல்லூரி என்றால் எல்லோருக்கும் கிரிக்கெட் தான் உடனடியாக நினைவில் வரும், ஆனால் பரி யோவானில் காலத்திற்கு காலம் உருவான பலமான உதைபந்தாட்ட அணிகளின் வரலாறும் சாதனைகளும் கிரிக்கெட் அணிகளிற்கு இணையானவை, எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல. பரி யோவானின் மிடுக்கான சிவப்பு கறுப்பு வர்ணங்களிலான வரிவரி football jerseyயையும் முழங்கால் வரையும் நீளும் அதே நிறத்திலான socksஐயும் அணிந்து கொண்டு, பரி யோவானின் உதைபந்தாட்ட அணி ரொபேர்ட் வில்லியம்ஸ் மண்டபத்தின் பின்பகுதியில் இருந்த games room அடியில் அணி சேரும். அப்படியே ரொபேர்ட் வில்லியம்ஸ் மண்டத்தின் கரையால் கம்பீரம…
-
- 0 replies
- 405 views
-
-
உயர்திணை வியாழக்கிழமை காலமை வழமை போல முதல் நாள் அடிபட்டு, வெட்டுப்பட்டு , விழுந்து முறிஞ்ச எல்லாரையும் பாத்து முடிஞ்சு Ward ஆல வெளீல வரேக்க வாசலிலை ஒருத்தர் என்னை மறிச்சார். இவர் தான் ஏழாம் கட்டில் நோயாளியோட சொந்தக்காரர் எண்டு நேர்ஸ் சொல்ல நானும் என்ன எண்டு பாத்தன் , இல்லை “நல்லம்மா ஏழாம் கட்டில் ,அவவுக்கு என்ன மாதிரி ? , “ எண்டு கேட்டார். நான் நிலமையைச் சொன்னன். நீங்கள் யார் எண்டு என்டை கேள்விக்கு பதில் இல்லை, ஆனாலும் அவர் “பிள்ளைகள் வெளீல இருந்து கேக்கினம் என்ன மாதிரி “ எண்டு தொடர்ந்தார். ஒப்பிறேசன் செய்ய வேணும் , அவவுக்கு இதயம் பலவீனமா இருக்கு, ரத்தம் காணாது , ஒழுங்கா மருந்து எடுக்காததால சீனியும் கூடவா இருக்கு ஆழும் சரியான weak உடல் தகுதி முன்னேறினாப்பிறகு த…
-
- 0 replies
- 475 views
-
-
இது ஒரு ஆங்கில பதிவு. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் வசித்து விட்டு தன் தாய் நாட்டுக்கு நிரந்தரமாக திரும்பிய ஒரு சிங்கள இனத்தவரது அனுபவப் பதிவு இது. இலங்கையில் இருக்கும் அரசு, அது செயல்படும் தன்மை, விவாசாயத்தில் Sir ஒரே இரவில் கொண்டு வந்த மாற்றம், எங்கும் நிறைந்து இருக்கும் உளுத்துப் போன ஊழல் என்பனவற்றால் இலங்கையில் எல்லா முயற்சிகளும் வீணாக போகும் நிலை பற்றி குறிப்பிடுகின்றார். ஒரு சிங்களவருக்கே இப்படி என்றால் அங்கு நிரந்தரமாக போக நினைக்கும் தமிழர்களுக்கு...... -------------------------------- When the President exhorted expatriates in his Independence Day Speech to invest back in the land of their birth, I felt I must give my ex…
-
- 8 replies
- 1.1k views
-
-
இதில் போனால் சங்கடம் ( இ போ ச ) ஊரில எப்பவும் CTB க்கு ஒரு தனி இடம் இருக்கும். இலங்கை போக்குவரத்துச் சபை (CTB ) 1978இல வட பிராந்திய போக்குவரத்துச் சபையா மாறினாலும் நிலைச்சது என்னவோ CTB எண்ட பேர் தான். எழுபதுகளில அரசாங்க உத்தியோகக்காரர் மாதிரி CTB காரருக்கும் நல்ல demand இருந்தது . வாத்தியார் உத்தியோகத்திலும் பார்க்க CTB டிரைவர் வேலை சம்பளம் கூட எண்டு சிலர் அந்த வேலைக்கு போனது ,எண்டு கதை கூட இருந்தது . ஆனா இந்த பேருக்கு நாங்க படிற பாடு எங்களுக்குத்தான் தெரியும். இண்டைக்கு பலாலி -யாழ்ப்பாணம் 764 ,காலமை ஐஞ்சரை ஓட்டம் கிடைச்சிது. பஸ் வெளிக்கிடேக்க நாலு பேர் தான் அதுகளும் அநேமா ஆசுபத்திரிகாரருக்கு சாப்பாடு தேத்தண்ணி கொண்டு போறவை . ஈவினை தாண்டி வர பிறகும் புன்னாலைக…
-
- 11 replies
- 874 views
-
-
கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி வ…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
ஒரு 30 வயது ஆள் வெளிநாட்டில் இருக்கும் நண்பனுக்கு அழைப்பெடுத்து , சவூதி நாட்டுக்கு செல்ல முயற்சி செய்கிறேன் காசு தந்து உதவுங்கள் என்றிருக்கார். நண்பர், கொழும்பிலே ஒரு சர்வதேச உணவகத்தில் வேலை எடுத்துத் தாறன், கிழமைக்கு 80 மணிநேரம் வேலை செய்தால் 80 ஆயிரம் உழைக்கலாம் என்றிருக்கார். அங்கெல்லாம் வேலைக்கு போனால் நின்றுகொண்டு வேலை செய்யனும் கால் நோகும் என்று பதில் வந்திருக்கிறது. ஆள் படிச்சிருக்கிறது ஓஎல் வரைக்கும்தான். இப்போது என்ன வேலை செய்கிறார் என்றதுக்கு , வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றிருக்கார். முப்பது வயதுக்கு பிறகும் ஒரு வருமானம் இல்லாமல் இன்னொருத்தரிட்ட கை நீட்ட வெட்கமாயிருக்காதா? ஏதோ ஒரு வேலை செய்துகொண்டு , அதில் பிரச்சினை வந்து உதவி க…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-