Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியமும் இசையும்

இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை

பதிவாளர் கவனத்திற்கு!

இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிறுகதை ஒரு சமையல்குறிப்பு [அவ்வப்போது ஏதாவது எழுத முயல்பவர்களுக்காகவும் இளம் எழுத்தாளர்களுக்காகவும் இக்குறிப்புகள் அளிக்கபப்டுகின்றன. சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஆகஸ்ட் 2006 -ல் நிகழ்ந்த சிறுகதைப் பயிற்சிப் பட்டறையில் நடத்திய பாடத்தின் வரிவடிவம் இது.] 1. சிறுகதை என்றால் என்ன? ====================== ‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே. அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கிய வடிவம். அதற்கு தனியான வடிவச்சி…

    • 0 replies
    • 28.8k views
  2. சிறுகதையின் தோற்றம் 2.1 சிறுகதையின் தோற்றம் காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும்எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும்வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம்தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கிவந்த போது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்புகொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக்கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர்.கதை கூறுபவர் தன்னுடைய கற்பனை வளத்தாலும்,அனுபவத்தின் பயனாலும், தான் கண்டதையும் கேட்டதையும்விரித்துச் சொல்லி, கேட்போரின் பொழுது போக்கிற்குத்துணை நின்றனர். ‘ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜாவாம்’என்று சுவாரஸ்ய உணர்வோடு கதை தொடங்கும் மரபும்நம்மிடையே இருந்துள்ளது…

    • 0 replies
    • 13.1k views
  3. ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஜெகதீஷ் குமார் அக்டோபர் 10, 2024 No Comments தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024- ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் எழுத்தாளர் இவர். ஹான் காங் தன் நாட்டினரால் ஆற்றல் வாய்ந்த தொலை நோக்குப் பார்வையாளர் என்று கொண்டாடப்படுபவர். வரலாற்றுத் துயரை துணிவுடன் எதிர்கொள்ளும், மனித வாழ்வின் பலவீனங்களை வெளிப்படுத்தும், அவரது கவித்துவமிக்கதும் தீவிரமானதுமான உரைநடைக்காக ஹான் காங்குக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. நோபல் கமிட்டியின் தலைவரான ஆண்டர்ஸ் ஓல்சன், தன் அறிக்கையில், “…

    • 0 replies
    • 10.7k views
  4. குக்கூ குக்கூ தாத்தா தாத்தா கல வெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன்கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளைக்கி குக்கூ குக்கூ கம்பளிப்பூச்சி தங்கச்சி அல்லி மலர் கொடி அங்கதமே ஒட்டார ஒட்டார சந்தனமே முல்லை மலர் கொடி முத்தாரமே எங்கு ஊரு எங்கு ஊரு குத்தாலமே சுருக்கு பை யம்மா வெத்தல மட்டை அம்மா சொமந்த கை அம்மா மத்தளம் கொட்டு யம்மா தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா வள்ளியம்மா பேராண்டி சங்கதியை குறேன்டி கண்ணாடியை காணம்டி இந்தாரா பேராண்டி அன்னக்கிளி அன்னக்கிளி அடி ஆல மரக்கிளை வண்ண கிளி நல்லபடி வாழச் சொல்லி இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி கம்மாங்கர கா…

  5. அண்மையில் சிட்னியிலிருந்து தாயகம் சென்று கர்நாடக இசை நிகழ்ச்சி(பாட்டுக்கு ஒரு புலவன்) ஒன்றை துர்க்கா மணிம்ண்டபத்தில் எமது குழந்தைகள் நடத்தினார்கள்.இதில் பங்கு பற்றிய அனைவரும் அவுஸ்ரெலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்க விடயமாகும் ...யாழ்நகரில் சிவபூமி முதியோர் இல்லம்,நாவற்குழி திருவாகச அரண்மனை,துர்க்கா மணிமண்டபம் ஆகிய் இடங்க‌ளிலும்,கொழும்பில் சைவ மங்கையர்கழகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. எனது புதல்விகள் இருவர் இதில் பங்கு பற்றினார்கள் ..... பாடல்களுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கும் இருவரும் எனது மகள்மார்..... நன்றி சிவன் தொலைகாட்சி நிறுவனத்தினருக்கு

    • 21 replies
    • 3.1k views
  6. நாம் எதனால் வாசிப்பதில்லை? written by செல்வேந்திரன்June 24, 2021 வாசிப்பதன் பயன்களைப் பற்றி பள்ளியிலும் கல்லூரியிலும் தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கப்பட்டாலும் நம்மால் ஏன் வாசிக்க முடியவில்லை? விரிவான ஆய்வுகள் வாசிப்பைத் தடை செய்யும் சில காரணிகளைப் பட்டியலிடுகின்றன. குடும்பச் சூழல் – உண்மையில் பல குடும்பங்களில் வாசிப்பதற்கான சூழலே இருப்பதில்லை. வறுமை அல்லது எந்நேரமும் பூசலிடுவது அல்லது குடும்பத் தொழில் காரணமாக வாசிப்பதற்கான உளநிலைகள் அமையாமல் இருப்பது. தமிழகத்தில் இருபது சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வருவதே கடுமையான வறுமைக்கு மத்தியில்தான். சில மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்த்தால்தான் கல்வியைத் தொடர முடியும் நிலையில் உள்ளார்கள். அவர்களால், உள்ளபடியே வாசிக்க இயல…

    • 28 replies
    • 2.8k views
  7. கவரிமான் என்பது மான் இனம் அல்ல, அதன் உண்மையான பெயர் கவரிமா . அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் மாடு வகையை சார்ந்தது, அதுவும் *எருமை மாடு* வகையைச் சார்ந்ததாகும். இதையே நமது மக்கள் #கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள். #கவரிமான் எங்கு வசிக்கிறது..? முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..? எப்படித் தற்கொலை செய்து கொள்ளும்? *"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்* *உயிர்நீப்பர் மானம் வரின்.”* என்கிறார் திருவள்ளுவர் ( 969ஆம் குறளில் ) கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும்.... அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப…

  8. பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி பிரிட்டனில் தமிழர் வாழ்க்கை என்னவாக இருக்கிறது? பலருடன் உரையாடினேன் என்றாலும், ஒரு பேட்டி விசேஷமாக எனக்குத் தோன்றியது. கவிஞர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமையான இளைய அப்துல்லாஹ்வுடனான உரையாடல்தான் அது. முல்லைத்தீவில் பிறந்த ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்ற அவருடைய இளமைக் கால இலங்கைக் கதையே ஒரு நாவலுக்கான களம். அவர் ஐரோப்பா வந்து சேர்ந்தது, பிரிட்டனைத் தன்னுடைய நாடாக்கிக்கொண்டது, இங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்றளவும் அவர் பட்டுக்கொண்டிருக்கும் பாடுகள் யாவையும் அவர் வாய்வழி கேட்கும்போது சுவாரஸ்யமாக்கிவிடுவது அவருடைய கதையாட…

  9. பிரமிள்: தனியொருவன் – பாலா கருப்பசாமி 1939ல் இலங்கை, திரிகோணமலையில் பிறந்த பிரமிளின் தமிழ் இலக்கியப் பிரவேசம் 1959ல் தொடங்கியது. ஏழு ஆண்டுகள் சி.சு. செல்லப்பா நடத்தி வந்த எழுத்து சிற்றிதழில் தொடர்ந்து எழுதி வந்தவர் பிரமிள். புதுக்கவிதையைத் தொடங்கி வைத்த பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., புதுமைப்பித்தன் போன்றோர் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி வந்ததில் பங்கு வகித்தனர். இந்தக் காலகட்டத்தில் எழுத்து சிற்றிதழ் வழியாக பிரமிளின் பிரவேசம் நிகழ்கிறது. தனது 20 ஆவது வயதில் அவர் கவிதை குறித்து எழுதிய செறிவான கட்டுரைகள் தன்னிகரற்றவை. தமிழ்க் கவிதைக்கு அவரளித்த கொடையாக அவை விளங்குகின்றன. பிரமிள் குறித்து விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக இருந்து வந்தது…

  10. கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை சுயாந்தன் June 10, 2018 தமிழில் நவீன கவிதையின் தற்கால முகத்தை எழுத்து என்ற சிற்றிதழ் மூலம் அழுத்தமாக உருவாக்கியவர்கள் கா.நா.சு மற்றும் சி.சு.செல்லப்பா ஆகிய இருவரும்தான். பிரமிள், நகுலன், பசுவையா (சுரா), கா.நா.சு முதலியவர்கள் எழுதிய கவிதைகளே இன்றைய நவீன கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் முன்னோடியாகவும் இருந்துள்ளது. இருந்து வருகிறது. 'புத்தியால் எழுதப்படுபவைதான் புதுக்கவிதை' என்று ஜெயகாந்தனும் 'புத்தியாலும் எழுதப்படுபவையே புதுக்கவிதை' என ஜெயமோகனும் ஒரு இடத்தில் கூறியிருந்தனர். ஜெயகாந்தன் அறிவார்ந்த தன்மையே நவீன கவிதைக்குப் போதும் என முன்வைக்க ஜெயமோகன் அதுவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கவிதை பற்றிய ஜெயமோகனின் இந்தக் கருத்த…

  11. ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 Posted : வெள்ளிக்கிழமை, ஜுன் 05 , 2020 06:29:10 IST கொரோனா விளைவாக நிலவும் பொது முடக்க காலத்தில் மனம் எதிலும் நிலைகொள்ளாமல் தவித்தது.எதிலும் கவனம் குவியாமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. ஊரடங்கு காலத்தை விடுமுறையாக மாற்றிக்கொள்ளும் மனமும் இல்லை. தொலைக்காட்சி ,சினிமா என்று கேளிக்கையில் மூழ்கும் உற்சாக மனநிலையும் இல்லை. தொலைக்காட்சி செய்திகள், விவாதங்கள் என்று வேடிக்கை பார்த்து பற்றிக்கொள்ளும் பரபரப்புகளில் கவனம் செல்லவும் ஆர்வமில்லை. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கைகளைப் பார்த்துவிட்டு நேற்று எத்தனை? இன்று எத்தனை என்று ஒப்பிட்டுப் பார்க்கும் பொறுமையு…

  12. சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது அரசியல் கோட்பாடு அல்ல, அது Fantasy: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் – அகழ் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இங்கிலாந்துக்குப் புலம்பெயர முன்னரே இலங்கையில் எழுத்தாளராக நன்கு அறியப்பட்டவர். முற்போக்கு பாணியில் பல கதைகளை எழுதியிருக்கிறார். பெண்களின் மீதான் ஒடுக்குமுறைகள் உட்பட பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதியவர். உளவியல் நுட்பத்துடன் பல சிறந்த கதைகளையும் எழுதியிருக்கிறார். புலம்பெயர் இலக்கியத்தை, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டு பேச இயலாது. அவர் நம் முன்னோடிகளில் ஒருவர். எழுத்து தவிர்ந்தும், அவரது மனித உரிமை செயற்பாடுகள் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு பாரிய உதவிகளைச் செய்திருக்கிறது…

    • 23 replies
    • 2.5k views
  13. நான் ஒரு இலக்கியவாதியே இல்லை-நேர்காணல்-சாத்திரி கோமகன் : அதென்ன சாத்திரி ………. ? சாத்திரி : அது என்னுடைய நண்பன் ஒருவனின் புனை பெயர்தான். திருகோணமலை குச்சவெளி கரையோர கிராமத்தை சேர்ந்தவன். சிறந்த மாலுமி. சிறந்த போராளி நிச்சயம் ஒரு சிறந்த சமையல்காரனாக இருப்பான் என்று சொல்வார்கள், அதே போல அவனும் சிறந்த சமையல்காரன். ஒரு கடல் விபத்தில் இறந்து போய் விட்டான். அந்த சம்பவமோ அவன் பெயர் விபரமோ வெளியே தெரிய வந்திருக்கவில்லை. அப்படிப் பலர் இருக்கிறார்கள். பின்னர் நான் எழுத தொடங்கியபோது அவனின் புனை பெயரை எனதாக்கிக் கொண்டேன். ஓவியம் : எஸ். நளீம் இன்னுமொரு காரணமும் உண்டு: பொதுவாக எமது மக்கள் ஒரு செயலை அல்லது நிகழ்வை செய்ய முன்னர் ஊரிலுள்ள சாத்திரியார் ஒருவரிடம் ப…

  14. சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் ஓர் அரசியல் கைதி.! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.அரூரன் எனும் பொறியாளர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் . இவர் 2008 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார். பொறியியல் துறையில் சாதிக்க புறப்பட்டு தான் செய்த குற்றம் என்ன வென்று தெரியாது 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் எஸ்.அரூரன் போன்ற இளைஞர்களுக்கு நீதி செய்ய இந்த நாட்டின் சட்டங்களும் அரச நிருவாகமும் அனுமதி மறுக்கின்றன. இந்த நிலையில் சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் சிறந்த முன் மாதிரி பணியை செய்து வரும் ஆரூரனை விடுவிக்க வேண்டும் என்று கலை இலக்கிய ரசி…

    • 19 replies
    • 2.4k views
  15. ஈழத்துத்தமிழ்க் கவிதையும் , ஜெயமோகனின் கூற்றும்! இவ்வுரையினை முறையாக உள் வாங்கி , அதனை ஏற்கவில்லையென்றால் ஏன் ஏற்கவில்லையென்று தர்க்கரீதியாக எதிர்வினையாற்றுவதற்குப்பதில் '200ற்கும் அதிகமான சிறந்த கவிஞர்கள் இருப்பின் அதற்கான தேவை அங்கில்லை. அவர்களைப் பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும்' என்று கூறியதைத் தூக்கிப்பிடித்துத் துள்ளிக் குதிக்கின்றார்கள். உண்மையில் இக்கூற்றினை அப்படியே விளங்கிக்கொள்ளக் கூடாது. பொதுவாக நாம் பேச்சு வழக்கில் 'இதற்குப் பதில் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப்போகலாம்' என்போம். அதற்காக அதனை அப்படியே உண்மையில் நாக்கைப்பிடுங்கிக்கொண்டு செத்துப்போக வேண்டுமென்று கூறுவதாக நாம் அர்த்தப்படுத்தக் கூடாது. ஆனால் ஜெயமோகன் கூறியதைப்போல் 'பூச்சி மருந…

  16. யாழ் களத்தில் ஒருகாலத்தில் அதிகம் கருத்துக்கள் எழுதிய கருத்தாளர் இரா. சேகர் (யாழ் இணையம் தமிழ்ச்சூரியன்) ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் பற்றிய நிகழ்ச்சி. கேட்டு பாருங்கள்.

  17. Started by கிருபன்,

    தடம் இதழ் ஜெயமோகன் விகடன் தடம் இதழ் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச் சாய்வுகொண்டதுதான். தடமும் அச்சாய்வு கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் அறிவுலகில் உள்ள இடதுசாரி,தமிழ்த்தேசிய, திராவிட அரசியல் சாய்வு என அதை வகுத்திருந்தேன். ஆனால் தமிழிலக்கியத்தின் எல்லா குரல்களும் அதில் ஒலிக்க இடமளித்தது. தமிழில் இதுவரை வெளிவந்த இதழ்களிலேயே பார்வைக்கு அழகானது தடம்தான். பக்கவடிவமைப்பில் அது ஒர் உச்சம். நான் தொடர்ச்சியாக வாசித்த ஒரே இதழ். பெரும்பாலும் இதழ்களில் எழுதியுமிருக்கிறேன். நான் தடம் இதழில் எழுதிய கட்டுரைகள் முக்கி…

    • 5 replies
    • 2.2k views
  18. அறிவியல் புனைகதைகள் பற்றி: எழுத்தாளர் ஜெயமோகன் January 19, 2019சரவணன் பொதுவாக வாசிப்பு என்பது சிறு வயதில் புத்தகங்கள் அறிமுகமான காலங்களில் இருந்து தொடர்ந்து வந்துகொண்டிருந்தது எனினும், எழுத்தாளர் ஜெயமோகனைக்கண்டடைந்தபின்தான் உண்மையில் அவற்றின் வித்தியாசங்கள், வகைமைகள் புரிய ஆரம்பித்தது. ஆறாவது ஏழாவது படிக்கும்போது நூலகம் சென்று சிறுவர்களுக்கான உபதேச நீதிநெறிப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து பின் அப்படியே சுஜாதா, லெக்ஷ்மி, பாலகுமாரன், ஜெயகாந்தன், இந்துமதி, அசோகமித்திரன், அனுராதாரமணன், கி.ரா, சுபா, ராஜேஷ்குமார், சு.ரா …… ஆரம்பத்தில் இந்த வரிசை இப்படித்தான் இருந்தது. நூலகத்தில் கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் படிப்பது, ‘படிப்படியான’ என்றெல்லாம் இல்லை, எல்லாம…

  19. ஒரு சின்ன கேள்வி.. நீங்கள் பொன்னியின் செல்வன் வாசித்துவிட்டீர்களா? இது பழுவேட்டரையர் எனும் பெயரில் உள்ள ஐடியினால் Twitter ல பல நாட்களிற்கு முன் கேட்கப்பட்ட கேள்வி கேள்வியை இப்பிடி கேட்கனும் "பொன்னியின் செல்வன் எத்தனை முறை வாசித்திருக்கிறீர்கள்"? என comment உடன் Re Tweet பண்ணி இருந்தேன் பிந்தைய நாட்களில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக்க இருப்பதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் பொன்னியின் செல்வன வெப்சீரிஸ் ஆக எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. பொன்னியின் செல்வன் எடுப்பதில் உள்ள சிக்கலே பொன்னியின் செல்வனின் வாசகர்களின் கற்பனையில் இருக்கும் கதாபாத்திரங்களிற்கு வடிவம் கொடுப்பதற்கான நடிகர்கள் எவரும் இங்கு இல்லை என்பதே.. ஆழ்வார்க்கடியான் பாத்திரத்த…

  20. வரலாற்றை மீட்டுருவாக்கும் நாவல்கள் 2019 - ந.முருகேசபாண்டியன் · கட்டுரை பூமியில் மனித இருப்பு, கடந்த காலம் என்ற நினைவுகளின் தொகுப்பாக விரிந்து தொடர்கிறது. தலைமுறைகள்தோறும் செவிவழிக் கதைகளாகச் சொல்லப்படுகிற சம்பவங்கள், கடந்த காலத்தைப் பதிவாக்கிட முயலுகின்றன. நினைவுகள் ஒருபோதும் அழியாதவை என்ற நம்பிக்கையுடன், மனிதர்கள், சமகாலம் குறித்த பேச்சுகளை உருவாக்குகின்றனர். மனிதனைச் சமூகத்துடன் இணைக்கிற கண்ணியான மொழி, நினைவுவெளியில் பேச்சுகளையும், நடந்து முடிந்த நிகழ்வுககளின் வழியாகக் காத்திரமான அரசியலையும் சமூகத் தொடர்ச்சியையும் கட்டமைக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித வாழ்க்கையின் வரையறையையும் சமகாலத்தின் போக்குகளையும் கண்டறிந்து ஆட்சி செய்த அதிகார வர்க்கத…

  21. நிகழாத விவாதமும், நிகழும் சர்ச்சையும் - ராஜன் குறை நவீனத்துவ இலக்கியவாதிகளும் திராவிட இயக்கமும் – ஒரு விவாதம் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் திராவிட இயக்கத் தலைவர் அண்ணா குறித்து தான் உட்பட பல எழுத்தாளர்கள் பேசாமல் போனது குறித்து சில கருத்துகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியதை ஒட்டி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. சிறுபத்திரிகை தளம் எனப்படும் நவீனத்துவ இலக்கிய தளத்தில் பிராமணீய சார்பு அல்லது அழுத்தம் இருந்தது அப்படி அண்ணாவைக் குறித்துப் பேசாமல் போனதற்கான ஒரு பின்புலமாக அவர் ஏற்றுக்கொள்வதே சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது. நான் அறிந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இப்படிப்பட்ட சர்ச்சைகள் அவ்வப்பொழுது பொதுவெளியில் எழுந்தா…

  22. நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி (நேர்காணல்) May 2, 2020 நேர் கண்டவர் : அகர முதல்வன் எழுத்தாளர் ஷோபாசக்தி – தமிழ் இலக்கியத்தோடு பரிட்சயமானவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். தன்னுடைய படைப்புக்களின் மூலம் ஈழத்தமிழ் வாழ்வியலை எழுதி வருபவர். தனக்கான கதை சொல்லும் முறை, பகிடி, அரசியல் சாடல்கள் என நிறைய அம்சங்களால் தனது படைப்புலகை உண்டு பண்ணியிருக்கிறவர். அவரின் படைப்புக்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களும் ஏராளம். அவருடைய மிகச் சமீபத்தில் வெளியான “இச்சா” நாவலை “கருப்பு பிரதிகள்“ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மாற்றுக் கருத்து உள்ளவர்களும் ஒரு மேசையில் அமர்ந்து ஒருவரையொருவர் வெறுக்காமலும் தமது கருத்துகளை விட்டுக் கொடுக்காமலும் …

    • 15 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.