இலக்கியமும் இசையும்
இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை
இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
204 topics in this forum
-
கவிப்பேரரசு வைரமுத்துவுடன் ஒரு இலக்கிய சந்திப்பு
-
- 0 replies
- 388 views
-
-
ஈழத்து எழுத்துப்பரப்பில் புதியவர்களின் படைப்பு மொழி-க.சட்டநாதன் நல்ல எழுத்தை-படைப்பைப் படித்தவுடன் இது நல்லது என்பதைத் தேர்ந்த விமர்சகன் இனங்கண்டு கொள்கின்றான். நல்ல வாசகனுக்கும் இந்த நுண்ணிய உணர்திறன் உண்டு. இதனை நாலுபேர் தெரிய எடுத்துரைப்பதும் விமர்சிப்பதும் விமர்சகனது கடமையாகும். ஆனால் இங்கு நமது இலக்கியச்சுழலில் இத்தகைய போக்கு மிக அருந்தலாகவே நடைபெறுகின்றது. இது கண்டனத்துக்குரியதும் கவலைதருகின்ற விடயமுமானது. இங்கிருக்கும் ஒரு சில விமர்சகர்கள் சூழல் முழுவதையுமே குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்கள் போல -வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், மொத்த இலக்கியச்சூழலையும் தன்னுடைய கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்கான உணர்வுடன் -ஒருவகை மிதப்புடன் நடந்து கொள்கின்றனர். தன்னை எ…
-
- 0 replies
- 657 views
-
-
அறிவியல் புனைகதைகள் பற்றி: எழுத்தாளர் ஜெயமோகன் January 19, 2019சரவணன் பொதுவாக வாசிப்பு என்பது சிறு வயதில் புத்தகங்கள் அறிமுகமான காலங்களில் இருந்து தொடர்ந்து வந்துகொண்டிருந்தது எனினும், எழுத்தாளர் ஜெயமோகனைக்கண்டடைந்தபின்தான் உண்மையில் அவற்றின் வித்தியாசங்கள், வகைமைகள் புரிய ஆரம்பித்தது. ஆறாவது ஏழாவது படிக்கும்போது நூலகம் சென்று சிறுவர்களுக்கான உபதேச நீதிநெறிப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து பின் அப்படியே சுஜாதா, லெக்ஷ்மி, பாலகுமாரன், ஜெயகாந்தன், இந்துமதி, அசோகமித்திரன், அனுராதாரமணன், கி.ரா, சுபா, ராஜேஷ்குமார், சு.ரா …… ஆரம்பத்தில் இந்த வரிசை இப்படித்தான் இருந்தது. நூலகத்தில் கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் படிப்பது, ‘படிப்படியான’ என்றெல்லாம் இல்லை, எல்லாம…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஐசாக் அசிமோவின் புனைவுலகங்கள் January 2, 2020ராம்சந்தர் 10 நிமிட வாசிப்பு இன்று ஐசாக் அசிமோவின் நூறாவது பிறந்த நாள். என் மனதுக்கு நெருக்கமான அசிமோவ் சிறுகதைகளின் மூலம் அவர் எழுத்தில் வியக்கவைக்கும் சில தன்மைகளைப் பகிரும் முயற்சியே இக்கட்டுரை. அசிமோவின் கதைகளைப் படிக்கும்போது மனம் உயரப் பறந்து, பல திசைகளில் சிந்தித்தபடி எங்கெங்கோ உலாவிக்கொண்டிருக்கும். அந்த உயரமான இடத்திலிருந்து மனித இனத்தை, நாம் கடந்து வந்த பாதையை, வரலாற்றை, இன்னும் பல மில்லியன் ஆண்டுகளில் செல்லக்கூடிய திசைகளைப் பார்க்கத் தூண்டும். அதிகம் மண்டையைக் காய விடாமல் காகிதம் போல மெல்லியதான இந்த நிலைக்கு மனதைத் தூக்கிச்செல்வதே அறிவியல் புனைவின் நோக்கமோ எனத் தோன்றவைக்கும். இப்படியெல்லாம்…
-
- 0 replies
- 472 views
-
-
இசை ஞானி இளையராஜா இசைப் புயல் ஏ ஆ ர் ரகுமான் தேனிசை தென்றல் தேவா சிர்ப்பி ஸ் ஏ ராஜ்குமார் வித்தியா சாகர் வரத் வாஜ் யுவன் சங்கர் ராஜா ஹரிஷ் ஜெயராஜ் விஸ்வநாதன் தமன் அனிருத் சந்தோஷ் நாராயணன் ஜி.வி. பிரகாஷ் ------------------- நன்றி - வீர பையன்26 ரசோதரன் அண்ணா எப்போதும் தமிழன்
-
-
- 3 replies
- 1.2k views
-
-
எதிர்முகம் நேர்காணல் Posted on August 7, 2019 by ம. நவீன் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம், இணைய தொலைக்காட்சியான தமிழ் மலேசியா தொலைக்காட்சியில் ‘எதிர்முகம்’ எனும் அங்கத்திற்காக என்னை நேர்காணல் செய்தார்கள். சமூக வலைத்தளங்களிலும் இலக்கிய வட்டங்களிலும் வல்லினம் மற்றும் என்னைக்குறித்த சர்ச்சைகள் தொடர்பான கேள்விகளுடன் K.P ஜோன் இந்த நேர்காணலை சிறப்பாகவே முன்னெடுத்தார். அதன் எழுத்து வடிவம் இது. எடிட்டிங்கில் நீக்கப்பட்ட சில பகுதிகளையும் இணைத்துள்ளேன். சிலவற்றை நீக்கியும் உள்ளேன். சில பதில்களை எழுத்து வடிவத்திற்கு ஏற்ப விரிவாக்கியுள்ளேன். இது கடந்த ஆண்டு எடுக்கப்பட்டதால் அண்மையச் சூழல்கள் குறித்து பேசியிருக்க மாட்டேன். தமிழ் மலேசியா தொலைக்காட்சிக்கு நன்றி …
-
- 0 replies
- 625 views
-
-
பிரமிள்: தனியொருவன் – பாலா கருப்பசாமி 1939ல் இலங்கை, திரிகோணமலையில் பிறந்த பிரமிளின் தமிழ் இலக்கியப் பிரவேசம் 1959ல் தொடங்கியது. ஏழு ஆண்டுகள் சி.சு. செல்லப்பா நடத்தி வந்த எழுத்து சிற்றிதழில் தொடர்ந்து எழுதி வந்தவர் பிரமிள். புதுக்கவிதையைத் தொடங்கி வைத்த பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., புதுமைப்பித்தன் போன்றோர் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி வந்ததில் பங்கு வகித்தனர். இந்தக் காலகட்டத்தில் எழுத்து சிற்றிதழ் வழியாக பிரமிளின் பிரவேசம் நிகழ்கிறது. தனது 20 ஆவது வயதில் அவர் கவிதை குறித்து எழுதிய செறிவான கட்டுரைகள் தன்னிகரற்றவை. தமிழ்க் கவிதைக்கு அவரளித்த கொடையாக அவை விளங்குகின்றன. பிரமிள் குறித்து விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக இருந்து வந்தது…
-
- 7 replies
- 2.7k views
-
-
யாழ்ப்பாணச் செலவு பெருமாள்முருகன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கை சென்று திரும்பிய திரு.வி.க. தம் பயண அனுபவத்தை ‘எனது இலங்கைச் செலவு’ என்னும் தலைப்பில் விரிவாக எழுதினார். தமிழ்ப் பயண இலக்கியத்தில் முக்கிய இடம்பெறும் கட்டுரை அது. அதில் ‘ஈண்டுச் செலவு என்னுஞ் சொல்லைப் பொருட் செலவென்னும் பொருளில் பெய்தேனில்லை. தரை – நீர்ச் – செலவு என்னும் பொருளில் அச்சொல்லைப் பெய்தேன்’ (ப.57) என்கிறார். செலவு என்னும் சொல் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பயின்றுவருகிறது. செல்லுதல் – பயணம் என்னும் பொருளுடையது. தலைவன் பொருள் தேடிப் பிரிந்து செல்லுதலைச் ‘செலவு’ என்றும் தலைவியின் துயர் கண்டு அவன் தம் பயணத்தை நிறுத்திவிடுதலைச் ‘செலவழுங்குதல்’ என்றும் அகப்பொருள் இ…
-
- 12 replies
- 1.6k views
- 1 follower
-
-
சுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ்.சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்துக்கொண்ட ராஜபாட்டையில் உல்லாச வலம் வந்தார் சுஜாதா. உற்சாகத்துக்கு மறுபெயர்சுஜாதா. அவர் எழுத்தில் அலுப்பைப் பார்க்க முடியாது. சுவாரஸ்யமே எழுத்தின் தாரகமந்திரம் அவருக்கு. சுவாரஸ்யமாக்கும் கவனத்தில் தன்னடையாளம் கூட அவருக்குரெண்டாம்பட்சம் என்று தோன்றுகிறது. கணையாழியில் ஒருவர் அவரை 'எழுத்துலகின்சிலுக்கு,' என்று குறிப்பிட்டார். புனைகதைகளில் அவர் எழுதிக்காட்டிய ஆபாச வசனங்களுக்கு அவரைசொந்தமாக்க முடியாத அளவு நல்ல மனிதராக நட்புபேணுகிறவராகஎளிமையானவராக அவர் இருந்தார். விளம்பரங்களில் சினிமாவில் கொஞ்சூண்டுஆபாசம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
எனது நீ கொன்ற எதிரி நான் தான் தோழா கவிதைப் புத்தகத்துக்காக, என்னை IBC தமிழ் நிறுவனத்தினர் நேர்காணல் செய்திருந்தனர். சர்மிளா வினோதினி அவர்களின் மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன். நன்றி தியா - காண்டீபன் நன்றி தியா - காண்டீபன்
-
- 0 replies
- 421 views
-
-
இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன் பிரபஞ்சன் நேற்றிரவு முழுக்க விடாமல் மழைபெய்து கொண்டேயிருந்தது. தூக்கம் வராத அந்த மழை இரவில் நினைவுகள், எழுத்தாளர் பிரபஞ்சனையே நிலை கொள்ளாமல் சுழன்று கொண்டிருந்தது. அவருக்கு சென்னை பீட்டர்ஸ் காலனியில் ஒதுக்கப்பட்ட வீடொன்று உண்டு. மூன்றாவது மாடி. இப்படியான மழைநாளில் முழுவீடும் ஒழுகும். தன் வாழ்நாளெல்லாம் தேடித்தேடி சேகரித்த பல அரிய புத்தகங்கள் மழையில் நனையும். ஒழுகாத இடம் தேடி, படுக்கவும் இடமின்றி, ஒரு தமிழ் எழுத்தாளனின் பல ஆண்டு கால அலைச்சல் யாராலும் கண்டு கொள்ளப்படாமலேயே போகிறது. போகட்டும். இதனாலெல்லாம் துவண்டுபோகாத படைப்புமனம் வாய்க்கப் பெற்ற படைப்பாளியாகத்தான் நான் பிரபஞ்சனைப் பார்க்கிறேன் இருபதாண்டுகளுக்கு முன் பாண்டிச…
-
- 3 replies
- 1k views
-
-
ரி.எம். கிருஷ்ணா: கர்நாடக இசையின் கலகக்குரல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலகளாவிய ரீதியில் சிந்தனைகளை மாற்றி, மாற்றங்களைக் கொண்டு வந்த அனைத்துக்கும் கலகக்குரல்களே காரணம் ஆகும். அச்சமூட்டுவனவாயும் சங்கடத்தை ஏற்படுத்துவனவாயும் உள்ள குரல்களே, காலப்போக்கில் மாபெரும் மாற்றங்களின் அச்சாணியாகி உள்ளன. அவ்வகையில் கலகக்குரல்கள் வரவேற்கப்பட வேண்டியவை. அவை மாற்றத்துக்கான குரல்கள்; அடக்கப்பட்டவர்களின் குரல்கள்; கவனத்தை வேண்டிநிற்போரின் குரல்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக, நியாயத்துக்கான குரல்கள் என ஓங்கி ஒலிக்கின்றன. இக்குரல்கள் …
-
- 0 replies
- 423 views
-
-
தமிழ் மின்னிலக்கியம் - அலைபேசி எழுத்தும் கிண்டில் வாசிப்பும் சுரேஷ் பிரதீப் எழுதுவதற்கான உந்துதல் எந்தச் சூழலிலும் வரலாம் என்ற நம்பிக்கை பதின்மத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்துவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு கதையை கணித குறிப்பேட்டின் கடைசி மூன்று பக்கங்களில் எழுதினேன். அதைப்படித்த நண்பனொருவன் என்னை அப்போது எழுத்தாளன் என்று ஒப்புக் கொண்டான். வகுப்பு பெண்களிடம் அந்தக் கதையை காட்டப்போவதாக அடிக்கடி பாவனையாக மிரட்டுவான். நானும் "காட்டிடாதடா" என்பது போல பதறுவேன். இருந்தாலும் உள்ளுக்குள் அந்தக்கதையை எங்கள் வகுப்பிலேயே அதிகமாக பெண் தோழிகளுடைய அவன் கொண்டுபோய் அவர்களிடம் காண்பிக்கமாட்டானா என்றிருக்கும். பள்ளி முடியும் வரை அவன் அந்தக் கதையை காண்பிக்கவில்லை. கல…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு சின்ன கேள்வி.. நீங்கள் பொன்னியின் செல்வன் வாசித்துவிட்டீர்களா? இது பழுவேட்டரையர் எனும் பெயரில் உள்ள ஐடியினால் Twitter ல பல நாட்களிற்கு முன் கேட்கப்பட்ட கேள்வி கேள்வியை இப்பிடி கேட்கனும் "பொன்னியின் செல்வன் எத்தனை முறை வாசித்திருக்கிறீர்கள்"? என comment உடன் Re Tweet பண்ணி இருந்தேன் பிந்தைய நாட்களில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக்க இருப்பதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் பொன்னியின் செல்வன வெப்சீரிஸ் ஆக எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. பொன்னியின் செல்வன் எடுப்பதில் உள்ள சிக்கலே பொன்னியின் செல்வனின் வாசகர்களின் கற்பனையில் இருக்கும் கதாபாத்திரங்களிற்கு வடிவம் கொடுப்பதற்கான நடிகர்கள் எவரும் இங்கு இல்லை என்பதே.. ஆழ்வார்க்கடியான் பாத்திரத்த…
-
- 11 replies
- 2.1k views
-
-
-
-
- 0 replies
- 421 views
-
-
சிம்பொனியின் தோற்றமும் வளர்ச்சியும் இளையராஜா லண்டன் சென்று சிம்பொனி இசை அமைத்தது பற்றி மட்டும் நமக்குத் தெரியும். ஆனால் சிம்பொனி இசையின் தோற்றம், பின்னணி அதன் மதச்சார்பற்ற தன்மை ஆகியவை நமக்குத் தரப்படவில்லை. இவ்விசையைப்பற்றி சில செய்திகளை முன்பு எமது இதழில் வெளியிட்டிருந்தோம். தற்போது இதைப் பற்றி பேராசிரியர் செ.அ. வீரபாண்டியன் அவர்களின் விரிவான ஆய்வுக் கட்டுரையிலிருந்து சுருக்கித் தருகிறோம். மனிதன், சமூகம், இயற்கை ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றியதே இசையாகும். மனிதர் தம்மைவெளிப்படுத்திக் கொள்வது (Expression) தொடர்பான சில தேவைகளின் அடிப்படையில் இசை தோன்றியது என்ற கருத்தை மேற்கத்திய இசை அறிஞர் டேவிட்டி பாய்டன் முன்வைக்கிறார். எனவே மனித சமூக வரலாற்றுடன் பின்னிப்பி…
-
- 0 replies
- 1.2k views
-
-
செல்வம் அருளானந்தம்- நேர்காணல் திராவிடமணி மே 25, 2025 செல்வம் அருளானந்தம் எனும் இயற்பெயரையுடைய இவர் ‘காலம் செல்வம்’ என்றே இன்று எல்லோராலும் அழைக்கப்பெறுகின்றார். இவர் 1953ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் நாள் யாழ்ப்பாணம் சில்லாலையில் சவேரிமுத்து, திரேசம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தமது தொடக்கக்கல்வியை சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், பின்பு புனித ஹென்றி கல்லூரியிலும் முடித்தார். மேலும், பிரான்ஸ் நாட்டில் பாரிஸில் உள்ள செயின்ட் அகஸ்டின் பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பிரெஞ்சு மொழியையும் கற்றுத் தேர்ந்தார். பிற்பாடு கனடாவில், டொரொண்டோவில் உள்ள செயின்ட் டேனியல் கல்லூரியில் நர்சிங் டிப்ளோமா பெற்றுள்ளார். இவர் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாள் தேவராணி என்…
-
- 0 replies
- 144 views
-
-
கல்வலைக்கோடுகள் July 19, 2021 எனக்கு மூன்று வயதிருக்கும், அன்றெல்லாம் எங்கள் வீட்டில் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, மலையாள மனோரமா, மாத்ருபூமி ஆகியவற்றை வாங்குவார்கள். அனேகமாக தினமும் ஒரு வார இதழ். அன்று வந்தது விகடன் தீபாவளி மலர். பேப்பர்போடும் மாமாவிடமிருந்து இதழை வாங்கி கொண்டுவந்து ஒட்டுத்திண்ணையில் வைத்து பிரித்து படம்பார்க்கலானேன். நடுப்பக்கத்தில் நான் கண்ட ஒரு கோட்டோவியம் இன்றும் மூச்சடைக்கவைக்கும் துல்லியத்துடன் நினைவிருக்கிறது. சில்பி வரைந்த அகோரவீரபத்ரன். அதன்பின் பலமுறை நான் மதுரை சென்று அகோரவீரபத்ரரின் முன் நின்றிருக்கிறேன். உக்கிரமும் குழைவும், கொடூரமும் அருளும் ஒன்றே என முயங்கும் அச்சிற்ப அற்புதம் ஒரு கனவு அழியாமல் அசைவிலாமல் நிலைகொண்டிருப்பதுப…
-
- 0 replies
- 738 views
-
-
38வது பெண்கள் சந்திப்பு (பேர்லின்) பற்றிய ஒரு குறிப்பு December 8, 2025 38வது பெண்கள் சந்திப்பு: — விஜி – பிரான்ஸ் — இம்முறை பெண்கள் சந்திப்பு ஜேர்மனி பேர்லின் நகரில் ஒக்டோபர் மாதம் இரண்டு நாட்கள் (24-26) தொடர்ச்சியாக நடைபெற்றது. இம்முறை பெண்கள் சந்திப்பு முழுவதும் “பெண் ஒடுக்குமுறையை ஊடறுத்துச் செல்லும் ஒடுக்குமுறைகள்“ (Intersectionality) என்கின்ற கருப்பொருளின் கீழ் விடயங்கள் பேசப்பட்டன. அதாவது பலவிதமான இன, மத, சாதி, வர்க்க, நிற, பாலின ஒடுக்குமுறைகளுக்குள் பெண்கள் மீதான பன்மைத்துவ அதேநேரம் ஒருமித்த ஒடுக்குமுறைகள் பற்றிய அவதானங்களும், ஆய்வுகளும் தலைப்புகளாகக் கொண்டு உரைகளும், உரையாடல்களும் அமைந்திருந்தன. முதல்நாள்: வழமைபோல் “பெண்கள் சந்திப்பு” இன் முதலாவது…
-
- 0 replies
- 78 views
-
-
மேட்டிமைவாதமா? jeyamohanDecember 26, 2023 அன்புள்ள ஜெ உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் சொல் ’மேட்டிமைவாதம்’ என்பது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இந்தப்பிரச்சினை உள்ளது. சமூகத்தையோ அல்லது சுற்றியிருக்கும் நண்பர்களையோ எதாவது குறைசொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்கிறார்கள். வரும் ஜனவரி 1 அன்று மெரினாவில் குடித்துவிட்டு பைக் ஓட்டி கூச்சல்போட திட்டம்போட்டு பட்ஜெட் போடுகிறார்கள். அது ஒரு வகை கேனத்தனம் என்று சொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஒன்றரை லட்சம் ரூ கொடுத்து ஐஃபோன் வாங்குபவர்கள். முப்பதாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்குபவர்கள். ஆனால் ஒரு பு…
-
-
- 13 replies
- 1.5k views
-
-
பொதுரசனைச் செவ்வியல் உருவாகும் தருணம் jeyamohanNovember 7, 2025 அண்மையில் ஒரு துயரமான மனநிலையில் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது எண்ணங்களை மாற்றும் பொருட்டு இசையை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். வெவ்வேறு கவிஞர்கள் முருகனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பற்றி பேச்சு சென்றது. பூவை செங்குட்டுவன் எப்படி ஒரு பக்தி கவிஞர் ஆனார் என்பதை அவர் ஒரு உரையாடலில் சொன்னதை நான் நினைவு கூர்ந்தேன். 2006ல் அவர் இளையராஜாவை சந்திக்க வரும்போது ஒருமுறை சந்தித்திருக்கிறேன். இளையராஜா அவரை ஒரு முனிவரை எதிர் வருவது போல வணங்கி எதிர்கொள்வதை பார்த்தேன். அதன் பிறகு தான் அவர் எவர் என்று விசாரித்து தெரிந்து கொண்டேன். தமிழ் விக்கியில் அவரைப் பற்றிய ஒரு பதிவு போடும்போது மீண்டும் அவருடை…
-
- 1 reply
- 121 views
-
-
நிகழாத விவாதமும், நிகழும் சர்ச்சையும் - ராஜன் குறை நவீனத்துவ இலக்கியவாதிகளும் திராவிட இயக்கமும் – ஒரு விவாதம் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் திராவிட இயக்கத் தலைவர் அண்ணா குறித்து தான் உட்பட பல எழுத்தாளர்கள் பேசாமல் போனது குறித்து சில கருத்துகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியதை ஒட்டி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. சிறுபத்திரிகை தளம் எனப்படும் நவீனத்துவ இலக்கிய தளத்தில் பிராமணீய சார்பு அல்லது அழுத்தம் இருந்தது அப்படி அண்ணாவைக் குறித்துப் பேசாமல் போனதற்கான ஒரு பின்புலமாக அவர் ஏற்றுக்கொள்வதே சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது. நான் அறிந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இப்படிப்பட்ட சர்ச்சைகள் அவ்வப்பொழுது பொதுவெளியில் எழுந்தா…
-
- 3 replies
- 1.9k views
-
-
பட மூலாதாரம்,குட்டி ரேவதி படக்குறிப்பு, இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர். கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 ஆகஸ்ட் 2023, 05:44 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர். பண்டிதர் என்ற பெயருக்கு ஏற்ப தமிழிசை, இயற்கை விவசாயம், சித்த மருத்துவம், புகைப்படத்துறை என பல்வேறு துறைகளில் வல்லவராக திகழ்ந்தவர் ஆபிரகாம் பண்ட…
-
- 2 replies
- 576 views
- 1 follower
-
-
"கலித்தொகையில் வாழ்வியல்" / Kalithogai 133 - An Ethical poem" நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகள், ஒவ்வொன்றும் ஒரு நவரத்தினம்! அகத்திணை கருத்துக்களே பெரும்பாலும் இடம்பெறும் கலித்தொகையில் இப்பாடல் வாழ்வியலுக்குத் தேவையான ஒன்பது அறக்கருத்துக்களை ஒரே பாடலில் சொல்லியிருத்தல் ஒரு பெரும் சிறப்பு ஆகும். "'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; 'போற்றுதல்'என்பது, புணர்ந்தாரை பிரியாமை; 'பண்பு'எனப்படுவது, பாடு ஒழுகுதல்; 'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை; 'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்; 'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை; …
-
- 0 replies
- 1.1k views
-