கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
பாடா அஞ்சலி தமிழ் மூலமும் கவிஞர் வாசுதேவனின் பிரஞ்சு மொழிபெயர்ப்பும். 1. பாடா அஞ்சலி ( வ.ஐ.ச.ஜெயபாலன்) -------------- உதிர்கின்ற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன் ? சுணாமி எச்சரிக்கை கேட்டு மலைக்காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்தப் புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் அஞ்சலிகளை எழுத இந்த உலகிலும் பெரிய இடுகாடெது ? பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து புதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய …
-
- 1 reply
- 1k views
-
-
நேற்று(25.06.20) எங்கள் வீட்டில் இருந்து (நெதர்லாந்து) 20 கிலோமீற்றர் தூரத்தில்அமைந்துள்ள கெர்சன்பழமரத்தோட்டம் (நெதர்லாந்து மொழியில் Kers ஆங்கிலத்தில்Cherry) போய் நாங்களே புடுங்கி பழத்துக்கான பணம் கொடுத்து வந்தோம். வரும்போது ஊரின் பழய நினைவுகள் வந்து என்னை வாட்டியது… கெர்சன்பழமே?எனிக்கிடைக்குமா எங்கள் பழம்..! கைப்பான வேம்பதிலும் கனி மஞ்சல் பழம் இனிக்கும் வெய்யில் எரிகையிலும் வேம்பேறிப் பழம் தின்ற.. அக்கால நினைவு வந்து அழுகிறேன் இவ்வேளை. கரும்பனையின் பனம் பழத்தை “காடி”யினில் குளைத் தெடுத்து விரல் இடுக்கில் தேன் வடிய விரும்பி உண்ட.. அக்கால நினைவு வந்து …
-
- 18 replies
- 2.7k views
-
-
உறைந்த உலகம் உருள வேண்டும்..! ***************************** நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீழ் துயர் எமை விட்டு அகலவேண்டும் உலகத்து நாடனைத்தும் உயர வேண்டும் உயர்வான எண்ணங்கள் தோன்ற வேண்டும். அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம் அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும் உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும் ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும். விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். விண் மேகம் கடலோடு உரச வேண்டும்-பூமி விளைநிலத்தில் தென்றலது பாடவேண்டும் இருள் வெளுக்க சூரியனும் ஒளிர …
-
- 2 replies
- 918 views
-
-
-
- 6 replies
- 2k views
-
-
“நினைவு வணக்கமோ?" [படக்கவிதை] "கார்த்திகை தீபம் ஏற்றும் காந்தையே காலத்தின் கட்டாயம் இது என்றாயோ? காரணம் கேட்டு நீதிக்குப் போராடிய காணா உயிரின் நினைவு வணக்கமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] காணா - காணாமல் போன
-
- 0 replies
- 262 views
-
-
தீராவிடம் தெள்ளுதமிழினுக்கு திராவிடமென்றொரு தீக் கொள்ளியை வைத்தாரடி கிளியே கொடுமை புரிந்தாரடி உள்ளத்தில் நாம் தமிழர் உண்மை அதை உணர்ந்தும் பள்ளத்தில் வீழ்ந்தோமடி கிளியே பற்றை இழந்தோமடி ஆரியச் சங்கரரும் ஆங்கிலக் கால்டுவெல்லும் பேரிதை வைத்ததனால் கிளியே பெருமையிழந்தோமடி ஆரிவர் எங்குளரென் றனைவரும் விழித்திடத் தா கூரும் அழைத்தாரடி கிளியே கூற்றிடம் வீழ்ந்தோமடி நாம்தமி ழர்கள் என்று நம்மினத் தார்க்கும் சொல்ல நாத்தடுமாறுதடி கிளியே நகைப்புக்குள்ளானோமடி ஏன் தமிழர்க்கு இந்த இழிநிலை என்றுலுகம் எம்மை இகழுதடி கிளியே இதுவென்ன மாயமடி சாதிகள் தன்னைக்கொண்டு சமத்துவம் என்னும் பேரில் மோதிட வைத்த…
-
- 2 replies
- 1.9k views
-
-
கனவு பலிக்குமா? ********************** கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தி…
-
-
- 3 replies
- 1.3k views
-
-
தண்டனையே! தரமுயர்த்தும் நாட்டை! ********************************************* அன்று.. பசியில் பாண் திருடி தம்பி தங்கைக்கும் பசியாற்றிய பாலகிக்கு திருடியெனும் பட்டம் கொடுத்து மரத்தில் கட்டிவைத்த செய்தி…. இலங்கையின் இரக்கமற்ற நீதி இன்றோ.. மக்கள் பணத்தை கோடி கோடியாக திருடி கொள்ளையடித்த வெள்ளை வேட்டி கள்ளர்களை விட்டுவைத்த-பழய அரசர்களையும் திருடர்களையும் அதியுச்சத் தண்டனை கொடுப்பதே! நாட்டு மக்களுக்கான இன்றைய மனுநீதியாகும். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 4 replies
- 526 views
-
-
“பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி..” “பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி இளந்தாரி வயலைக் கிளற ஆடிப்பட்டம் தேடி விதைக்க காணி ஏங்கும் பயிர்கள் முளைக்க கூடிக் குலாவி மகிழ்வாக இருக்க பூத்து குலுங்கும் வாழ்வு தந்தானே!" "பத்தாது காணாது இனி இல்லையே மெய்யாச் சொல்லுகிறேன் கேளடா கதிரையில் காய்பவன் நாமல்ல கடுதாசியில் திட்டம்போடும் சோம்பேறி வேண்டாம் பெட்டை பெடியன் வெளிக்கிட்டு வெள்ளாமைசெய்ய கெதியாய் பூக்கும் வன்னி மண்ணே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 733 views
-
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
நாய்களுக்கும் நரிகளுக்குமான போட்டியில் ஒவ்வொரு முறையும் குயில்கள் பலியாகின்றன குயில்களுக்கு தெரிவதில்லை தாம் தான் தூண்டிலில் கொழுவப்பட்ட புழுக்கள் என.. பேய்களுக்கும் பிசாசுகளுக்குமான போரில் ஒவ்வொரு முறையும் வண்ணாத்திப் பூச்சிகள் கொல்லப்படுகினறன வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தெரிவதில்லை தாம் தான் வலையில் சிக்க வைக்கப்படும் சிறு கண்ணிகள் என.. மனிதர்களுக்கும் மனிதமற்றவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒவ்வொரு முறையும் கடவுள்கள் கொல்லப்படுகின்றனர் கடவுள்களுக்கு தெரிவதில்லை தாம் தான் மனிதர்களின் பொறியில் வைக்கபடும் இரைகள் என யார் யாருக்கோ இடையிலான யுத்தத்தில் எப்போதும் தோற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை எப்பவுமே …
-
-
- 5 replies
- 678 views
-
-
"அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ" "சூரியன் மறைய, தனிமை வாட்டுதா சூனிய வாழ்வில், வெளிச்சம் வேண்டுமா சூதுவாது தெரியா, அழகு தேவதையே சூசகமாய் கேட்கிறேன், ஏமாற்ற வேண்டாம்" "நேர்த்தியான சுருள்முடி, தோளைத் தழுவ நேரே வந்து, புன்முறுவல் எனோ நேரார் வருமுன், நான் அணைக்கவா நேசம் கொண்டு, என்னிடம் வந்தாய்" "புத்தன் சொன்ன, கருனை இரக்கம் புரிந்தோர் சொற்பர், இன்று இருக்கினம் புருவம் நெளித்து, கண்சிமிட்டி நீ புங்கலம் குளிர, கருணை பொழிகிறாய்" "அரசு தராத, பேச்சு சுதந்திரம் அழகி உன்னில், நான் காண்கிறேன் அக்கம் பக்கம், யார் இருந்தாலும் …
-
-
- 2 replies
- 983 views
-
-
நெடுந்தீவு ஆச்சிக்கு கவிதை எனது முன்னோரின் மண்ணான நெடுந்தீவு படைகளின் கட்டுபாட்டில் இருந்த போது 1985ல் எழுதியது. குமுதத்தில் வெளிவந்தது. . நெடுந்தீவு ஆச்சிக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் . அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு. தருணங்களை யார் வென்றாலும் அவர்களுடைய புதை குழிகளின்மேல் காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி. என்ன இது ஆச்சி மீண்டும் உன் கரைகளில் நாங்கள் என்றோ விரட்டி அடித்த போத்துக்கீசரா ? தோல் நிறம் பற்றியும் …
-
- 0 replies
- 1.9k views
-
-
கலைந்த ஆடையை உடுத்திக் கொள்ள மறுக்கிறது அப்பால்... சற்று தாமதமாக வந்தால் பொங்கி வழிகிறது முழு ஆடை... தெரியாதுபோல் சில நேரம் தெரிந்ததே தெரியாமல் போகிறது பலநேரம். .. சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 1.1k views
-
-
மூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன் அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல் போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன் இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன் எனக்காக தனி ஆளும…
-
-
- 4 replies
- 503 views
-
-
காலை புலர்ந்தது- காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கனவுகள் உயிர்த்தது கதிரவன் எழுந்தான் பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த ஈசனை எண்ணுக மனமே எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா எழுக தமிழா இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் எங்கும் பூக்கட்டும் வாழ்வு வண்ணமாய் வசந்தம் வீசட்டும் எங்கும். ஆலய மணிகள் கோவிலில் ஒலிக்க அழகிய குயில்கள் கூவி பாடின காலையில் மல்லிகை கோலம் போட்டாள் கதிரவன் வாசலை த…
-
- 2 replies
- 1.4k views
-
-
"முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!" "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!" "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!" "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!…
-
- 0 replies
- 286 views
-
-
ஊதாரி ஊடகங்கள் ************************ எங்கு பார்த்தாலும் வலையொளித்தளங்கள் எதையெடுத்தாலும் எம்நாட்டுச் செய்திகள். உழைப்புக்காக ஊடக தர்மத்தை-சிலர் விலைக்கு விற்கும் வேடதாரிகள். தலைப்பில் மட்டும் உழைப்பை தேடுவார்-உள்ளே தரமில்லா செய்தியால் மடையராக்குவார் ஒருவரை உயர்வாய் ஓங்கியே கத்துவார் ஒருசில நாட்களில் ஏறியும் மிதிப்பார். செய்திகள் பற்றி கவலையே இல்லை சேரும் பணம்தான் அவர்களின் எல்லை ஆளுக்கொரு கமறா கிடைத்தால் அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார். ஏழை மக்களின் படங்களைக் காட்டி எல்லோர் மனதிலும் நெருடலை மூட்டி புலம்பெயர் பணத்தை தன்வசப்படுத்தும்-சில போக்கிரியர்களும் இணையத்தில்…
-
-
- 12 replies
- 915 views
-
-
சில அடிகளை கடக்க பல நதிகளை தாண்ட வேண்டி இருக்கு பல நதிகளை கடக்க சில அடிகளே போதுமாகவும் இருக்கின்றது சில நதிகளைக் கடக்க பல கடல்களை தாண்ட வேண்டி இருக்கு பல கடல்களைக் கடக்க ஒரு நதியே போதுமாகவும் இருக்கின்றது சில தருணங்களை கடக்க ஒரு வாழ்வே தேவையாக இருக்கு சில தருணங்களே பல வாழ்க்கை வாழ்ந்த நிறைவை தருகின்றது ஒரு விரல் தொடுகைக்காக பல உறவுகளை இழக்க நேரிடுகிறது பல உறவுகளை தக்க வைக்க சில விரல்களை நிராகரிக்க சொல்லுது வாழ்வு வாய்க்கும் என நினைக்கும் போது வரள்கின்றது வரண்டு சுடுகாடாகும் எனும் போது…
-
- 8 replies
- 792 views
-
-
கோடை காலம் —————————————————————————————————— என் வீட்டு வாசலில் பூக்கள் விரியும் முற்ரத்து மரங்களில் மூச்சுகள் கேக்கும் காலையில் வந்து இனி காக்கையும் குருவியும் பாடும் என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் கானகம் போல் ஒரு சோலை விரியும் காலத்தின் பிறப்பு ஒன்றை சொல்லி சிரிக்கும் கள்ளமாய் வந்து இனி தேனீக்கள் காலை பூக்களில் காதல் கீதம் இசைக்கும் கண்ணை பறித்திடும் கன்னியின் கூந்தலில் காலை மலர்ந்திட்ட மல்லிகை வாசம் எண்ணக் கனவினை சொல்லி சிரித்திடும் எங்கள் மங்கையர் கோலங்கள் வாசலில் பூத்திடும் தென்னம் தோப்பினில் தொட்டிலை கட்டி சிட்டு குருவின் சிரிப்பு ஒலி கேக்கும் வானை திறந்து ஒரு வானவில் ப…
-
- 5 replies
- 1.8k views
-
-
"சித்திரம் பேசுதடி" "சித்திரம் பேசுதடி சின்ன பெண்ணே சிறிதளவும் உனக்கு இதயம் இல்லையோ? கோத்திரம் கேட்கிறாய் காதலித்த பின்பு கோலம் ஒன்றை நீரில் போட்டேனோ? பாத்திரம் அறியாமல் காதலை ஏற்றேனோ பாவியாய் இன்று அலைய விட்டாயோ?" "சாத்திரம் பார்க்கும் அழகு மாதே சாந்தமாய் கதைத்து கவர்ந்தது ஏனோ? ஆத்திரம் வருகுதடி ஏமாந்து போனேனே ஆசையை வார்த்து மோசம் செய்தாயோ? காத்திரமான உறவு என்று நான் காலத்தை வீணாக்கி உன்னை நம்பினேனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 308 views
-
-
"கார் கூந்தல் சரிந்து விழ" "கார் கூந்தல் சரிந்து விழுந்து காற்றோடு அது அலை பாய காதணி குலுங்கி இசை அமைத்து கார்த்திகை அதற்கு ஒளி வழங்க காகொடி தரும் நஞ்சை விடவும் காமப் பால் நெஞ்சில் வடிய காசனம் செய்யும் விழிகள் திறந்து காகோதரம் போல் நெளிந்து வந்தாள் !" "காசினி மேலே அன்னநடை போட்டு கால் கொலுசு தாளம் போட காஞ்சனி உடலில் தொய்யில் எழுதி காருண்யம் காட்ட என்னை அழைத்து காதல் தெளித்து ஈரம் ஆக்கி கானல் உள்ளத்தை சோலை ஆக்கி கார் மேகமாய் அன்பு பொழிந்து காலம் அறிந்து காரிகை வந்தாள் !" "காதோரம் மெதுவாய் செய்தி கூறி …
-
- 1 reply
- 888 views
-
-
"நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] & "முத்துக் குளிப்போம்" "நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] "புரிந்துணர்வு மலர நண்பர்கள் தழைத்து ஓங்கும்! பொறாமை சூழ எதிரிகள் வளர்ந்து பெருகும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................. "முத்துக் குளிப்போம்" "ஆழத்தில் மலரும் முத்து சிற்பிகள் அழகு கோலத்தில் வண்ணக் கற்கள்! ஈழ நாட்டின் சிலாபத் துறையில் அலைகளுக்கு அடியில் பலபல இரகசியம்!" "ஓடுகளின் அரவணைப்பில் ஆழமாக கிடக்குது வண்ணவண்ண நிறத்தில் கண்களைக் கவருது! தூங்கும் புதையலை வெளியே எடுக்க வாருங்கள் நாம் முத்துக் குளிப்போம்!" [கந்தையா தில்லைவிநா…
-
- 0 replies
- 369 views
-
-
படம் சொல்லும் வரிகள் (உயிப்பு) **************************** கல்லறையில் மாண்டாலும் கனிதருவோம் கயவர் எமையழித்தாலும் துளிர் விடுவோம். நல்லவர்கள் ஒருபோதும் இறப்பதில்லை-இந்த நானிலத்தில் அவர் புகழோ குறைவதில்லை. -பசுவூர்க்கோபி.
-
- 4 replies
- 1.1k views
-
-
"அள்ளக் குறையாமல் அன்பிருக்கு அத்தானே" "அள்ளக் குறையாமல் அன்பிருக்கு அத்தானே வெள்ளம் போல பாசம் அழைக்குதே குள்ள நரிகளும் பின்னால் தொடருதே வெள்ள மச்சான் துணைக்கு வாராயா?" "கிள்ள கிள்ள குறையாத அன்பே துள்ள துள்ள இன்பம் பெருகுதே பள்ளிப் பருவத்தில் பின்னால் அலைந்தவனே உள்ளம் துடிக்குதே காதல் மெய்யே?" "இளந்தாரிப் பெடியனே கட்டிளம் காளையே இளவட்டப் பொண்ணு காத்திருப்பது தெரியாதா மேளம் கச்சேரி வைப்பமா கல்யாணத்துக்கு தாளம் தப்பாமல் முத்தம் போடுவோமா?" "பொய் பறையாதே கண்டு கனகாலம் பொருத்தம் இருவருக்கும் அயத்துப் போனாயா பொம்பிளை இங்கே காத்து நிக்குதே பொறுத்தது போதும் சங்கதி சொல்லையா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்…
-
- 0 replies
- 263 views
-