கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
இனிய பொங்கல் வாழ்த்துகள் ....... இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள் இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!! இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி..... இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து... இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க...... இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து...... இல்லறம் நல்லறமாக செழித்திட....... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு...... இல்லத்தாரோடும் உறவுகலோடும்..... இன்முகத்தோடு பொங்கலை உண்டு..... இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்...... இனிய உறவுகளுக்கு இனியவனின்...... இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்…
-
- 3 replies
- 719 views
-
-
வாழ்வு! ************* பூப்பதும் உதிர்வதும் பூலோகத்தில்.. அனைத்துக்குமுண்டு உதிர்வதைப் பற்றி ஓரம் கட்டுவோம் பூத்து சிரிப்பதே வாழ்வெனக் கொள்ளுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 717 views
-
-
"மண்ணைப் போல யாரு மில்லையே !" & "முதுமையும் இளமையும்" "மண்ணைப் போல யாரு மில்லையே !" "மண்ணைப் போல யாரும் இல்லையே மறந்து இன்று இப்படி சொல்லுகிறாய்! மண்ணும் பெண்ணும் வாழ்வின் சுவாசமே தாய்மை பண்பினை போற்றிடும் தெய்வங்களே!" "மண் இருந்தால் மரம் வளரும் மரம் வளர்ந்தால் நாடு செழிக்கும்! மங்கை இருந்தால் மழலை தவழும் மழலை மலர்ந்தால் உலகம் பிழைக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "முதுமையும் இளமையும்" "காவோலை விழ க…
-
- 0 replies
- 716 views
-
-
-
-
- 5 replies
- 715 views
-
-
ஒருநாள் சூரியன் பூமிக்கு இறங்கி வந்தான்! திறந்த விளையாட்டு மைதானம், ஆட்களற்று வெறுமையானது. மாணவர்கள் எங்கும் இல்லை! பறவைகள் அற்ற வனாந்தரமாய், தாயில்லாப் பிள்ளை போல், தனிமையில் கிடந்தது பாடசாலை. மரங்கள் நிழல்களைத் தின்று, ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தன. காகிதப் பறவைகள், காற்றில் சிறகு விரித்துப் பறந்தன. தூசி படிந்த பள்ளி மணி, அடிப்பாரற்று அநாதையாயிருந்தது. துண்டிக்கப்பட்ட இலைகள், காற்றின் அந்தரத்தில் நடம்புரிந்தன. பள்ளிகளைப் போர் சூழ்ந்த பின்னொரு நாளில், வகுப்பறை நாற்காலிகளை, கண்ணீர் பூக்கள் நிறைத்தன. கரும்பல…
-
- 2 replies
- 715 views
-
-
கடந்த இரண்டு வாரங்களாக இருமல் இருமல் இருமல் தொண்டை கழுத்து முதுகு தலை நுரையீரல் இதயம் எல்லா உறுப்புக்கும் இப்போது வேலை இருமல் இப்போது எனக்குக் கிடைத்த ஒரு நுட்பமான வார்த்தை விளையாட்டு நித்திரை தொலைந்தது மேல் மூச்சு வாங்குகிறது பகலை நீட்டிக்க இருமல் தகுதியானவர்களுக்கு மட்டுமே பரிசளிக்கப்படுகிறது தியா - காண்டீபன்
-
-
- 7 replies
- 714 views
- 1 follower
-
-
"பேராசை" "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும். ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன். நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நி…
-
- 0 replies
- 713 views
-
-
கொரோனாவுக்கு முன் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( கவியரசு கண்ணதாசன் ஐயா) கொரோனாவுக்கு பின் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீடு வரை மனைவி..... வீடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( சிரிப்போம் சிந்திப்போம்) இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இன்று ஒருவர் இறந்தால் அது கொரோனா எனப்படுகிறது யாருமே அவரை பார்க்க முடியாது எல்லோரும் வீட்டுக்குள்ளே அழுகை அரசு உடல் கூட கொடுக்காது
-
- 2 replies
- 712 views
-
-
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலு…
-
- 0 replies
- 708 views
- 1 follower
-
-
புல்லை வெட்டுங்கோ ---------------------------------- நாலு நாள் ஆகிவிட்டது ஒவ்வொரு குழாயின் கீழும் அண்டா குண்டா என்று வைத்து தேனும் பாலும் இனி வீடு தேடி வரும் என்றனர் வைத்த அண்டாவும் குண்டாவும் அப்படியே காத்து வாங்கிக் கொண்டு காத்துக் கிடக்கின்றன தேன் எப்ப வரும் பால் எப்ப வரும் என்று கொஞ்சம் முன்னரே சொன்னால் தனி தனியே பிடித்து வீடு முழுக்க வைத்துக் கொள்வேன் எட்டு வருடம் முந்தியும் வரும் வரும் என்றீர்கள் வரவே இல்லை கடைசி மட்டும் பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள் இப்ப வந்து விட்டீர்கள் இந்த தடவை என்றாலும் ஓட விடுங்கள் பாலையும் தேனையும் …
-
-
- 11 replies
- 707 views
- 1 follower
-
-
வாழிய சென்னை - ஜெயபாலன் . மீண்டும் ஊரடங்கு. கொலம்பசுகள் கிராமங்களைத் தேடி கப்பற் பாய்களை விரித்தனர். ஏனையோர் கான்கிரீட் பொந்துகளுள். கொரோனாவையும் காவலரையும் தவிர வீதிகளில் யாருமில்லை என்கிறார்கள். மாலைக் கருக்கலில் நிழற்சாலைகளூடு பெசன்ற்நகரை சுற்றுகிற நான்கூட மொட்டைமாடியில் எட்டுப் போட்டபடி. ஜப்பான் குண்டுவீச்சுப் பீதியில் கூட சென்னை இப்படி முடங்கியதில்லையே. . கீழே தெருவில் வெண் பூஞ்சிரிப்பை இழக்கிற வேம்பு பிஞ்சுகளால் நிறைகிற அழகை பறவைகள் பார்த்துச் செல்கின்றன. சாலை ஓர மரங்களின்மீது குச்சியோடு காகங்கள் பறக்க கிளர்ச்சியடைகிற ஆண் குயில் ”கூடு கட்டி முடியப்போகுது…
-
- 8 replies
- 704 views
-
-
https://timesofindia.indiatimes.com/videos/toi-original/kolkata-doctors-last-words-before-horrific-rape-murder-revealed-i-want-to-be-watch/videoshow/112552183.cms?fbclid=IwY2xjawEv0CZleHRuA2FlbQIxMAABHbKHKGXNSWu7n7YWPY1GNOELchx1Bs1iz558QA-bMuJm0VQbs4taiGEesw_aem_lcxvXznR72fMYKeYy-gYXw கிழித்தெறியப்படும் கவிதைகள் இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம் புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட நெறி தவறாமல் நாம் எம் கவிதைகள் படித்தோம் காலம் உருண்டோடி இச்சைக் கருவிக்குச் சண்டை போட்டபோது கசக்கி எறியப்பட்டன பல கவிதைத் தாள்கள் …
-
-
- 2 replies
- 703 views
-
-
காலச்சக்கரம் சித்திரையில் கொட்டித் தீர்த்த பெருமழையில் சிந்திய விதைகள் வளர்ந்து பெருவிருட்ஷமாகி கோடையில் நல் நிழல் தந்து பச்சை பசேலென்ற வண்ணங்க்காட்டி மலர்தல் காய்த்து கனி தரும் என மக்கள் மனம் குளிர்ந்த வேளை "சட்டென மாறுது வானிலை "என அயலூரில் சுழன்று அடித்த சூறாவளியுடன் எங்கள் மண்ணிலும் மெல்ல குளிர் எட்டிப்பார்க்கிறது ."நேற்று போல் இன்று இல்லை என்றுமே மாற்றம்" தான் இனி மரம் கிளைகள் அனைத்து தாவரங்களும் அணையப் போகும் விளக்கு சுடர் விட்டு ஒளிர்வது போல பல வண்ணம் காட்டி நிற்கும்,மெல்லிய …
-
- 0 replies
- 702 views
- 1 follower
-
-
"அலையாடும் அழகு" "அலையாடும் அழகு குமரியின் வனப்பே விலையற்ற அவளின் கவர்ச்சிச் சிரிப்பே! உலை வைக்கும் மங்கையின் கண்ணே அலை எடுத்து எவரையும் மயக்குமே!" "சேலைத் தாவணியில் மனதைக் கவருதே மாலை அணிந்த அணங்கின் வடிவமே! சோலை நடுவில் எழில் பொழியுதே கலை மகளின் அன்புத் தோற்றமே!" "தலை முடி தோளை வருடவே சிலை போல அழகாய் நிற்கிறாளே! வாலைப் பருவம் தாண்டிய தருணியே தலைவனைக் காண ஏக்கம் எனோ?" "நிலை தடுமாற்றம் தரும் தையலே குலைந்து வீழ்த்தும் அணங்கும் நீயோ! ஓலை மடலில் எழுதும் கவிதையோ வலையில் சிக்கா மானும் நீயோ!" …
-
- 0 replies
- 702 views
-
-
கனவெனப்படுவது நினைவும் நிஜமும் கூட்டி மகிழ்தலும் கொடுந்துயர் உழத்தலும் ஆழ் மனத்தாழ்ந்த உள்ளுணர்வெழுந்து மீள் நினைவாற்றலை உயிர்ப்பிக்கும் நிகழ்வது!!! ஆற்றிய நிகழ்ச்சியை முற்றும் மறந்துளம் சுற்றியதொன்றின் பான்மையை நிகழ்வுகளால் அழகுறக்காட்டி அணைக்கும் மகிழ்வைப் பழகுநற் கூட்டும் பான்மையுடையது எண்ணமே மலர்ந்தோட உயிர்ப்புற்று வருதலால் வண்ணமாக எழுந்துயிர் பெறும் நிகழ்வது!!! உணர்வினில் உயிரினில் உடலினில் நரம்பினில் புணர்ந்த நிகழ்வுகள் எண்ணரும் வகையால் ஒழுகு மெய்யுணர்வின் ஊற்றொடு கலந்து ஆழ்ந்த நினைவினை முகிழ்த்தும்... இற்றைக்கியலும்.... இயம்பும்..... நிகழ்வது!!! -…
-
- 0 replies
- 701 views
-
-
இறந்த காலத்தில் வாழ்பவன் நிகழ்கால பிணம் ஆவான்.... எதிர்காலத்தில் வாழ்பவன் நிகழ்கால ஏமாளி ஆவான்.... நிகழ்காலத்தில் நிகழ் காலமாக வாழ்பவனே மனிதனாவான் @ கவிப்புயல் இனியவன் இறந்த காலத்தில்வாழ்பவன் நிகழ்கால பிணம் ஆவான்.... எதிர்காலத்தில் வாழ்பவன் நிகழ்கால ஏமாளி ஆவான்.... நிகழ்காலத்தில் நிகழ் காலமாக வாழ்பவனே மனிதனாவான் @ கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 701 views
-
-
அன்னையர் தினத்தைக் கொண்டாடி அம்மாவை அடுத்த வேளை உணவுக்குத் திண்டாட வைக்கும் பிள்ளைகளும் உள்ளனர் இந்தப் பூவுலகில்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 695 views
-
-
புலனங்களில் கடலை போடும் உரையாடல் படிப்புக்கான தகவல் தேட மறந்திடல் பிறர் நசை நிலையை தகுதி பக்கத்தில் 30 நிமிடம் குறும்படமாக காணாமல் தவிர்த்தால் சிலர் உறவுகள் முறிந்திடல் விடலை பருவத்தில் விளையும் உணர்வுகள் வன்மமும் திகைக்கும் மோதல்கள் காமமும் பகைக்கும் பலருடன் பாலியல் உறவுகள் கிளை இல்லாத மரங்களா வலைதளத்தில் வரதா தகத விளம்பரங்களா நற்பண்புகள் வளர்வது நாம் கொண்ட எண்ணங்களாளா தீமைகள் விளைவது உள்ளுணர்வை கட்டமைக்காததளா பாலையின் கானலில் நீரில்லை பாலும் கல்லும் ஒன்றில்லை இலையின் நிறம் பச்சை என்றுமே நீரின் மீது அதற்கில்லை இச்சை அதே போல் என் மனசாட்சியை மதிப்பிடல் செய்திடுங்கள் பரிச்சயம் இல்லாமல் பா…
-
- 0 replies
- 695 views
-
-
ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்! ************************* உயிருக்கு பயந்து ஒழித்தோடிப்போனவர்கள் என்று கேலி செய்கிறார்கள் அம்மா… அன்று நீதானே சொன்னாய் ஓடித்தப்பு பின் ஊர்களைக் காப்பாற்றவேண்டுமென்று. அதனால்.. வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்து விட்டோம். எங்களை.. ஏற்றுக்கொள்ள எத்தனை கேள்விகள் எத்தனை விசாரணைகள் எத்தனை இழுத்தடிப்புகள் இப்படியே எத்தனை வருடங்கள் காத்துக்கிடந்தோம். அகதியென்ற பெயருடனும் கையில்.. அன்னத் தட்டுடனும் அவர்களின் முகாங்களில் அலைந்தபோது கூட எங்கள் துன்பங்களை உனக்கு சொல்ல நாம் விரும்பியதேயில்லைத் தாயே…
-
-
- 5 replies
- 692 views
-
-
கைக்கூ வடிவில்... நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி ஐஸ் மழை கொட்டுகிறது நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள். “போதை” ************************************************* ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள் ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள். “விபத்து” *************************************************** பட்ட மரமும் துளிர் விடுகின்றது பார்ப்பதற்கு யாருமில்லை. “முதியவர்கள்” ***************************************************** எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை தலையில் கொட்டுகிறார்கள். “வடி” **************************************************** நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன “மரக்கறிச் சந்தை” **********************…
-
-
- 18 replies
- 689 views
-
-
குப்பையிலிருந்து குப்பை --------------------------------------- நல்ல எழுத்தா........... அதை யார் வாசிப்பார்கள் ஏதாவது கேளிக்கையாக இருந்தால் சொல் என்றோம் முடிவு: இன்றைய எழுத்து எதுவும் நாளை நிற்காது. கலைப் படமா.................. இருக்கிற பிரச்சனை போதாதா ஜனரஞ்சகமா ஏதாவது வந்தால் சொல் என்றோம் முடிவு: வந்தது கங்குவா. அரசியல்வாதியா............ அவர் நல்ல பகிடி ஆளும் பார்க்க நல்லா இருக்கின்றார் அவரே பிரதிநிதி என்றோம் முடிவு: எல்லாமே பகிடி எதுவுமே வெற்றி இல்லை. கருத்துச் சொல்கின்றாயா......... அதெல்லாம் போதும் ஏதாவது சிரிக்க சிரிக்க இருந்தால் சொல் என்றோம் …
-
- 7 replies
- 687 views
-
-
https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fresize.indiatvnews.com%2Fen%2Fresize%2Fnewbucket%2F1200_-%2F2023%2F08%2Fchandrayaan-3-5-1691547437.jpg&tbnid=cJLSHrbC4Cr1ZM&vet=12ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ..i&imgrefurl=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fnews%2Findia%2Fchandrayaan-3-update-isro-spacecraft-performes-significant-manoeuvre-closer-to-moon-lunar-surface-2023-08-14-886607&docid=WRXkMNPWYsENMM&w=1200&h=696&q=chandrayaan-3&ved=2ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ சந்திரயானின் வெற்றி மேலைத் திசையினன் அம்புலி சென்று விரைந்து திரும்புகையில் - இங்கு பாலைக்கறந்ததைக் கல்லினில் வார…
-
- 2 replies
- 687 views
-
-
-
- 2 replies
- 686 views
- 1 follower
-
-
மேலைத்தேச நண்பரே! எதை நீங்கள் இன்று பார்க்கிறீர்களோ, அதை நாங்கள் பார்த்திருக்கிறோம் நண்பரே! உண்மையான உணர்ச்சிகள் கொப்பளிக்கின்ற, சோகத்தின் ஆழத்தை நாம் அனுபவித்திருக்கிறோம். போரின் நடுவே, வளர்ந்த குழந்தைகள் நாம்! ஆதலால் பலமுறை நாம், சொர்க்கத்தை உணர்ந்துள்ளோம் நண்பரே. மரணத்தின் வேதனையை, தனிமையின் கொடுமையை, கொடிய வறுமையை நாம் எதிர்கொண்டோம். பசியின் உக்கிரத்தில் பலநாள் தவித்திருக்கிறோம். போரின் நடுவே நம் இளமையைத் தொலைத்தோம். தினமரணத் துக்கத்துள் தவித்தோம். நாம் விடும் ஒவ்வொரு மூச்சிலும், எம் மண்ணின் ரணம் கலந்துள…
-
- 5 replies
- 681 views
-
-
ஏமாந்த கடிகாரம் ----------------------------- கையில் கட்டுவதெல்லாம் கடிகாரமே என்னும் பழைய ஒரு பிறவி நான் கடிகாரம் ஒன்றும் இருந்ததும் இல்லை எந்த வேளையிலும் இரவலாகவும் கட்டினதும் இல்லை மாமனார் கொடுத்த ஒன்று தங்கம் போல தகதகத்தது கல்யாணம் முடிந்த அன்றே கழட்டி வைத்தேன் இப்ப அது எங்கேயோ மாமாவிற்கு கடைசிக் காலத்தில் இதுவும் ஒரு கவலை ராத்திரி ஆழ்ந்த தூக்கம் இல்லை என்கின்றான் ஒருவன் எப்படி என்றால் அவனின் கடிகாரம் சொன்னது என்கின்றான் விளையாட்டின் நடுவிலேயே அய்யோ........... இதயம் எக்கச்சக்கமாக துடித்து விட்டது என்று அலறுகின்றான் இன்னொருவன் அதுவும் கடிகாரம் தான் சொன்ன…
-
- 0 replies
- 679 views
-