கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
35வருடங்கள் சென்றாலும் மறக்கமுடியாத இந்தநாள்.. 15.05.1985 அன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்நோக்கி வந்த குமுதினிப் படகின் அன்றைய அரசின் கோரத்தாண்டவத்தினால் நீரினிலே நினைவிழந்த 36 உடன் பிறப்புகளுக்காக நினைவு சுமந்த எனது குரல் வடிவக் கவிதை தந்துள்ளேன். இந்தக்கவிதையை கேட்க click here <--
-
- 4 replies
- 1.3k views
-
-
பாரதிக்கு பிறந்த நாள் பறவைகள் பறக்கும் பொழுது தான் சுதந்திரத்தின் அருமை புரிந்தது பாரதியை படித்த பின்பு தான் தமிழின் அழகு தெரிந்தது.
-
- 0 replies
- 1.3k views
-
-
கவித்துளிகள்..! மனைவி..! ******** என்னை பெற்றெடுத்த தாய் தந்த முத்தமெல்லாம் உனக்கே தருகிறேன் ஏனென்றால்... நீயும் எனக்கு இரண்டாவது தாய் என்பதால். ஏழைத் தாய்..! **************** விடிதல் எல்லோருக்கும் இனிமை தருமாம் எனக்கோ விடிவு பயத்தையே தருகிறது. புதுயுகம்..! ************** எனக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம். பேராசிரியர்கள் ஆனாலும்-சிறு பேரனிடத்திலும் கற்கவேண்டியுள்ளது. நினைவுகள்..! ****************** சேமிப்பில் இருந்து சிறிது,சிறிதாக செலவு செய்யும் நேரங…
-
- 2 replies
- 1.3k views
-
-
இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும் ஈழத்தமிழனை-பா.உதயன் தேர்தல் வருகிறது தினம் ஒரு பொய் சொல்வர் கையில் பூக்களோடு காலையில் புத்தனுக்கு பூசை செய்வர் அறமோ கருணையோ இல்லாத மனிதர்கள் எல்லாம் அந்த புத்தனிடத்திலும் போய் பொய் உரைப்பர் இனவாதம் பேசுவர் இது சிங்கள தேசம் என்பர் தமிழர் அதில் படரும் கொடி என்பர் இனவாதம் என்றொரு பெரும் பூதம் இராணுவத்துணையோடு இலங்கையை ஆள்கிறது எப்பவும் இது சொல்வதே சட்டம் ஐக்கியத்துக்கு குந்தகம் அந்த தமிழரே காரணம் என்று அந்த தமிழரோடு சேர்ந்து ஒப்பந்தம் செய்வோர் ஒருமித்த எம் தேசத்தின் இறைமைக்கு எதிரி என்பர் குடும்ப அரசியல் வாதிகள் பதவிக்கும் பணத்துக்குமாய் பாலு…
-
- 5 replies
- 1.3k views
-
-
"அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" "அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 1.3k views
-
-
இழப்பும் நினைப்பும் வணக்கம், தமிழருக்கென ஒரு இறைமையுள்ள அரசு இல்லாத காரணத்தால் தமிழராகிய எமது பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்றன. இன்றைய நிலையில் தமிழ் மொழி தனது சுயத்தை இழக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறது. அன்னிய மொழி ஆதிக்க வெறி இதற்கு சான்றாக அமைகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் பறிபோய்கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்தில் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் ஒன்றாகிய வன்னிப் பிரதேசத்தைச் சேர்;ந்த ஒரு பகுதியின் பாரம்பரியச் செயற்பாடுகளை இப்பதிவில் கொண்டுவர முயற்சி செய்து, இழப்பும் நினைப்பும் என்ற தலைப்பில் இவற்றைத் தொகுக்க உத்தேசித்துள்ளேன். இரசனைக்காக காதலையும் இணைத்துள்ளேன். நீங்களும் இதற்கான ஆதரவை அளி…
-
- 4 replies
- 1.3k views
-
-
முள்ளி வாய்க்கால்..! ************* 2009.. மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழுக்கு கொள்ளி வைத்ததை-எம் மூச்சிருக்கும் வரையும் முடியுமா மறக்க.. அன்று.. கல்லும் கூட கரைந்தது கடலும் கூட அழுதது முள்ளிவாய்க் கால் எரிந்தது-உலகம் முதளைக் கண்ணீர் வடித்தது. முப்பது வருடமாய் நடந்தது முதலில் அகிம்சை தோற்றதால் இப்புவி தன்னில் தமிழுக்கு-ஒரு இருக்க இடம்தான் கேட்டது. அப்பாவித் தமிழரைக் குவித்து வைத்து அகிலத்தில் சிலநாட்டை சேர்த்து வைத்து ஆயுதகுண்டாலே கொட்டித்தீர்த்து அழித்தாயே வீரனா? நீயே சொல்லு. பச்சிளம் பாலக குஞ்சு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாறுமா? *********** தேர்தல் திருவிழாக் காலமிது-தன் தேவைக்கு வாக்குறுதி மழை கொட்டும் நேரமிது. வாசலுக்கு வந்துநிற்கும் வருங்கால.. தலைவர்களைப் பாருங்கள் வாக்குறுதிப் பொட்டலத்தை வாங்கிப்பிரியுங்கள்-உள்ளே தேன் இருக்கும் தினைமா இருகும் தித்திகும் பண்டங்கள் நிறைந்திருக்கும்-தமிழ் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்வதாய்-பல திட்டங்கள் எம்முன்னே கொட்டிக் கிடக்கும். வாக்குதனை வாங்கிப்போனபின்னோ? உங்களிடம்வெறும் வாய் மட்டுமேயிருக்கும். பசியிருக்கும் கியூவிருக்கும் பட்டினியே தொடர்திருக்கும் அரசமரத்தடியில் புத்தர் சிலையிருக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
"நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா பிள்ளையை அணைத்து போறாள் ஒருநிலா வள்ளி தெய்வானை திருமண விழா துள்ளி குதித்து கொண்டாடினம் தம்பதியர்." "குட்டி எலியில் தொந்தி பிள்ளையார் முட்டி உடையுமோ ஏங்குது குழந்தை? கொட்டி மேளத்துடன் இரு மனவியரை தட்டி வாழ்த்துறாள் ஒரு கண்ணகி ?" "மஞ்சு விரட்டு ஒரு மிருகவதை அஞ்சி நசுங்கும் எலி தெய்வவாகனம்? பஞ்ச பாண்டவருக்கு ஒரு திரெளபதி நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.3k views
-
-
வாழ்வு தந்தவள் இவளே! ***************************** எழில் கொஞ்சும் மலைகள் தந்தாய் ஏர் பூட்ட வயல்கள் தந்தாய் பயிர் வளர மழையும் தந்தாய் பார் சிறக்க பல்லுயிர்கள் தந்தாய். அழகான அருவி தந்தாய் அகிலம் சுற்றி கடலும் தந்தாய் எரிகின்ற தீயும் தந்தாய் இளவேனிற் காற்றும் தந்தாய். உயர்வான வானம் தந்தாய் உருண்டோடும் மேகம் தந்தாய் வளமான காடு தந்தாய் வலிமைமிகு மரங்கள் தந்தாய். சூரியன்,மதியும் தந்தாய் சுதந்திர பறவைகள் தந்தாய் கடல் நிறைந்த உயிர்கள் தந்தாய் கரையோரம் காட்சிகள் தந்தாய். கலர்,கலராய் மலர்கல் தந்தாய் கண்குளிர பலவும் தந்தாய் இரவு பகல் எமக்குத் தந்தாய் …
-
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
சிறு ஓட்டையால் கப்பலும் கவிழும்! ************************* போன் அடித்தது.. என்னைக்கேட்டால் இல்லையென்று சொல்லென்றார் அப்பா.. அம்மாவையும் அப்பாவையும் படித்துக்கொண்டிருந்த ஆறு வயது மகன் பார்த்து முளித்தான். மறுநாள்.. அம்மாவின் கைபேசி அலறியது.. நாங்கள் வீட்டில் இல்லை வெளியில் நிற்கிறோம் என்றாள் அம்மா வீட்டில் விளையாடி கொண்டிருந்த பிள்ளை பார்த்து வெருண்டான். பிள்ளையின் வெள்ளை உள்ளத்தில்.. கறுப்பு புள்ளிகள். காலங்கள் உருண்டன அவனின் கைபேசியும் இப்போது பொய்பேசியாகவே மாறிவிட்டது. …
-
- 4 replies
- 1.3k views
-
-
-
- 5 replies
- 1.3k views
-
-
நாட்டில் நின்ற காலம் தொடர்-2 பஸ் பயணம்! ************* பஸ்.. நிக்கமுன்னே ஏறச்சொல்லி நடத்துனரோ கத்திறார் நாங்கள் ஓடி ஏறமுன்னே சாரதியோ இழுக்கிறார் யன்னல் சீற்று அத்தனையும் தண்ணிப்போத்தல் கிடக்குது நாம் இருக்க போனாலே-அருகில் ஆள் இருக்கு என்கிறார் அத்தனைக்கும் காசு வாங்கி ஆளைப் பின்பு ஏற்றுறார் ஆரம்பத்தில் ஏறியவர் அவலப்பட்டுத் தொங்கிறார். ஏறிவரும் அனைவர் முதுகிலும் சாக்கு பைகள் தொங்குது என்னொருவர் இடத்தை கூட அந்தபைகள் பிடிக்குது இறங்கிப் போகும் போதுகூட கையில் எடுப்பதில்லை இழுத்திழுத்து அனைவருக்கும் இடஞ்சல் கொடுத்து போகுறார். …
-
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
உயிரில் கலந்த உறவே.....! முழங்கால் மடித்து இருந்து முழங்கையை முன் நீட்டி முழுசாய் பறித்த ரோசாவைத் தர முத்தமொன்று தந்திடுவாள் மறு கரத்திலோர் பரிசும் பார்த்து கட்டியணைத்திடுவாள் கண்மணியும் சேர்ந்து நடக்கையில் விலகி நடந்தவள் விரலோடு விரல் பின்ன உடையோடு உரசுகின்றாள் முடியை கோதிவிட்டு முன்வந்து முறுவலிப்பாள் கண்ணால் பலகதை சொல்லி பல்லால் இதழ் கடித்திடுவாள் அஞ்சும் மலர் அருகிருக்க நெஞ்ச மலர் மலர்ந்திருக்கும் கெஞ்சும் விரல் கொஞ்சம் தயங்க முந்தும் முகம் முத்தாடும் தேனின்றி குவளைமலர் பூத்திருக்க தேனுடன் வந்த வண்டு சுத்திப் பறக்கும் தேன் இல் மலரில் மகரந்தம் சுவைத்…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
உலகுக்கே சோறுதந்த ஊர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன் . புயலால் விழுந்தவரை மழை எறி மிதிக்கிறதே அயலும் தொலையும் ஆறு குளம் சேறாக தரை வீழ்ந்த மீனாய் என் தமிழ்சுற்றம் துடிக்கிறதே. ஊர்கூடி கடா வெட்டி உறவாடும் பேரூர்கள் சிறாருக்கும் பாலின்றி துணியின்றித் தவிக்கிறதே மாழையும் குளிர் காற்றும் வாளாய் சுழல்கிறதே உலகுக்குகே சோறு தந்த ஊர் பசித்துக் கிடக்கிறதே வங்கக் கடல் நடு நடுங்க மரீனாவைக் கடந்த புயல் எங்கென்று வாடிவாசல்சீமை ஏங்கி ஏங்கி அழுகிறதே
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
உறவுகளின் உயிர்ப்பை நுட்பமாய் தீர்மானிக்கிறது தேவை சரவிபி ரோசிசந்திரா
-
- 3 replies
- 1.3k views
-
-
கவிப்புயலின் கஸல்கள் ---------------------------- சில நேரங்களில்.... கனவுகள் பலித்தால்.... வலியென்ன என்பதை.... உன் காதலில் கற்றுக்கொண்டேன்.....! நீ..... நினைவில் வரும்போது..... தலைவலி தருகிறாய்.... கனவில் வரும் போது.... தலைவிதியாகிறாய்......! நீ போன ஜென்மத்தில்.... பட்டாம் பூசியாய்.... இருந்திருக்கிறாய்...........! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 01
-
- 4 replies
- 1.3k views
-
-
கனவு பலிக்குமா? ********************** கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தி…
-
-
- 3 replies
- 1.3k views
-
-
கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 36 minutes ag திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இழப்பும் நினைப்பும்… நீலத் திரைக் கடலில் நீராடி வந்த பகலவன்; மஞ்சள் பூசி எழுந்து மனதுக்கு மகிழ்ச்சி தந்தான். கோழிகள் குருவிகள் இரை தேட கொண்டைச் சேவல்கள் பின்தொடர ஆடுகளை மாடுகளை வெளியேற்றி அப்பா சென்றார் கோடிப்; பக்கம் இவற்றைப் பார்த்து இரசித்தபடி எனது பணியைத் தொடர்வதற்கு வேப்ப மரத்தில் குச்சி பிடுங்கி – அதன் வேரில் இருந்து பல் தேச்சேன். செம்பில் கொஞ்சம் நீரெடுத்து தெளித்து மெதுவா முகம் கழுவி காய்ந்த சேலை யொன்றினைக் கையிலெடுத்து முகம் துடைத்தேன் அடுப்பில் காச்சிய ஆட்டுப் பாலை ஆவி பறக்க ஆற்றி எடுத்து மூக்குப் பேணியில் முழுதாய் நிரப்பி முற்றத்தில் தந்தார் அப்பாச்சி. முண்டி முண்டிக் …
-
- 0 replies
- 1.3k views
-
-
சன்னல்: -இது ஒஸ்லோவில் 1990 டிசம்பர் எழுதப்பட்ட கவிதை. நண்பர் பேராசிரியர் ஒய்விண்ட் புக்ளரூட் சன்னல் கவிதையை நோர்வீஜிய மொழியாக்கம் செய்தார். சன்னலின் நோர்வீஜிய மொழியாக்கம் நோர்வீஜிய வெளிவிவகார அமைச்சின் ’நோராட்’ இதழில் வெளிவந்தது. இலக்கிய ஆர்வமுள்ள பெண்மணி செல்வி. நினி ரொப் எனது விசா அலுவலராக அமைந்தது அதிஸ்ட்டம் என்றே சொல்ல வேண்டும். சன்னல்கவிதை அவரைக் கவர்ந்ததது. அதனால் அவர் இக்கவிதையை குடிவரவு திணைக்கள் அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சு நீதி அமைச்சு அதிகார்களுக்கு பிரதி அனுப்பினார். இதனால் என் செல்வாக்கு உயர்ந்ததது. மட்டக்களப்பு அபிவிருத்தி தொடர்பான என்கட்டுரையின் பங்களிப்பின் அடிப்படையில் நோராட் என்னை தென்னாசிய நிபுணர் என கடிதம் தந்தது, அதன் அடிப்படையில் எனது கலைஞர்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
15.05.2021 36 ஆண்டுகள் போனாலும் குமுதினிப்படுகொலையின் கோரத்தாண்டவத்தை எப்படி எம்மால் மறக்கமுடியும். இதுபற்றிய எனது உணர்வை துக்கத்துடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன் நன்றிகள்.
-
- 4 replies
- 1.3k views
-
-
உன் நினைவே..! எனது கிராமத்தில்.. கள்ளிச்செடிகூட முள்ளுக்குத்தாது காகிதப்பூக்கூட வாசனைதந்தது கடல்கற்கள் கூட காலில் குத்தாது காய்ந்த நிலம் கூட காவியம் தந்தது. உப்பு நீர்கூட இனிமை தந்தது உவர்க்காற்றுக்கூட தென்றலாய்த் தொட்டதது வளரும் மரம் செடி மூலிகையானதது வயதெல்லை முதியோற்க்கு நூறைக்கடந்தது சாமை வரகு நெல் சக்தி கொடுத்தது சத்துணவானதை பனை தென்னை தந்தது சரித்திரம் படைத்த- பல பெரியோர்கள் வாழ்ந்தனர். இப்போ… வெளிநாடு வந்து விறைத்துப்போகிறேன் வேலையும் குளிரும் வேசம் இழந்திட்டேன் பசுமைநாடே பாலைவனமானது படுக்கை மெத்தைக்குள் பல ஊசி குத்துது ஊரை நினைத்தே உறங்கிக் கொள்ளுறேன் ஒருநாள் வருவேன் உன்மடி தூங்க. -பசுவூர்க்கோபி-
-
- 1 reply
- 1.2k views
-