கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
649 topics in this forum
-
1. ஆளில்லா விமானம் --------------------------------- அன்று ஒரு நீண்ட வார விடுமுறையின் நடுநாள். பலரும் அன்று விமானப் பயணமோ அல்லது எந்தப் பயணமுமோ செய்ய மாட்டார்கள் என்பதை அனுமானித்தேயிருந்தோம். ஆனாலும் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில், திருவிழா முடிந்து வெறுமனே காற்று வாங்கும் கோயில் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரின் நடமாட்டமே இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. தேர்த் திருவிழா போல எப்போதும் உள்ளேயும், வெளியேயும் கூட்டமும், இரைச்சல்கள் நிறைந்திருக்கும் இடம் இது. இந்த விமான நிலையத்தால் வந்து போகும் வெளிநாட்டவர்கள் நிறையவே குறைகள் சொல்லுவார்கள். அதனால் நான் சொல்லாமல் விடுகின்றேன், அத்துடன் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. எங்கள் கண்களுக்கு தெரிவது போல காகங்களின் இ…
-
-
- 83 replies
- 4.5k views
- 3 followers
-
-
கைரி ———— பிரான்சின் மெல்லிய குளிர்..இன்று லீவு நாள் . போர்வைக்குள் இருந்து எழுந்து வெளியே வர விருப்பமில்லாமல் படுத்திருந்தவனிற்கு எழும்பி வாங்கோ தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கு என்கிற மனைவியின் சத்தத்தையடுத்து பாதித் தூக்கத்தோடு வந்து அமர்ந்தவன் தேனீர் கிண்ணத்தில் இருந்து எழுந்த ஆவியில் இருந்த வந்த தேயிலை மணத்தை கண்ணை மூடி இழுத்து அனுபவித்தபடி குடிப்பதற்காய் வாயருகே கொண்டு போகும் போது தேனீர் ஆவியில் தனது காவிப் பற்கள் தெரிய சிரித்துக்கொண்டிருந்தாள் கைரி.அப்படியே அந்த ஆவியை சாம் உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தான். 00000000000000000000000000 1985 ம் ஆண்டின் இறுதிப் பகுதி பலாலி இராணுவ முக…
-
- 17 replies
- 2.8k views
-
-
Chapter 1 „ அரோகரா அரோகரா“ என்ற ஒரே கோஷம் எல்லா திசைகளிலிருந்தும் ஒலித்துக் கொண்டு இருந்தது . மக்கள் வெள்ளம் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக்கொண்டு முன்னேற படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தனர் . இப்போராட்டத்தில் பக்கத்தில் நிற்பவரை கூட தம்மை அறியாது காயப்படுத்தி விடுவோமோ என்ற எண்ணம் அவ்வேளையில் அவர்களுக்கு கொஞ்சமேனும் இருந்ததாக தெரியவில்லை . எப்படியும் தாங்கள் தாங்கள் முண்டியடித்து முன்னேறி முருகப் பெருமானுக்கு அருகில் சென்று தரிசனம் பெற்று விட வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. நல்லூர் ஆறுமுகப் பெருமானும் அழகாக பச்சை சாத்தி மெல்ல ஆடி ஆடி அசைந்து வரும் அக்காட்சி கண்கொள்ள காட்சியாக இருந்தது . ஆதித் அம் மக்கள் வெள்ளத்தில் அகப்படாமல் ஒரு ஓரமாக நின்று மிக சுவாரசியத்…
-
- 40 replies
- 13.5k views
-
-
வேலையின் களைப்பு வீடு செல்லும் வேகத்தில் ரயில் தரிப்பிடம் நோக்கி வேகமா வந்து கொட்டாவி விட்டபடி கடிகாரம் பார்த்தேன் இன்னும் இரண்டு நிமிடம் வந்திடும் ரயில் சுற்றும் முற்றும் யாராவது தெரிந்த முகம் நிக்கும் என்னும் நினைவில் கண்களை எல்லா திசையிலும் சுழற்றி பார்த்த படி மனதில் நாட்டு நிலவரம் செய்திகளும் வந்து வந்து போனது அப்பொழுது பெரும் இரைச்சலுடன் தரிப்பிடம் வந்து நின்றது ரயில் . ஏறி நடுப்பக்கம் ஒரு சீட்டில் இருந்து விட்டால் எழும்ப வேண்டிய தேவை இருக்காது என்று எண்ணி முண்டி அடித்து இடம் பிடித்து அமர்த்தேன் பக்கத்தில் ஒரு ஆபிரிக்க நாட்டு இளையன் அவனின் காதுகளில் மாட்டி இருந்த மார்க்கான கேட்போனில் இருந்து வந்த பாடல் இரைச்சல் என் காதுகளுக்கு வண்டுகளின் சத்தமா கேட்டது ...அப்படிய…
-
- 9 replies
- 2.2k views
-
-
1995 ம் ஆண்டு, சாள்ஸ் அன்ரனி படையணி திருமலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். திரியாய்க் காட்டுப்பகுதியில் படையணியின் ஒரு பகுதி தங்கியிருந்தது. திருமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் மினிமுகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கான திட்டமிடல்கள் பூர்த்தியாகி, அப்பகுதிக்கு செல்வதற்காக அணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. நீண்ட தூரம் நடந்து சென்று, தங்கியிருந்து மறுநாள் தாக்குதலை நடாத்த வேண்டும், ஆகையால் தேவையான ஆயுதவெடிபொருட்கள், ஏனைய அத்தியாவசிய பொருட்கள், சமையல் உபகரணங்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஒரு வெடிச்சத்தம் காட்டை அதிரவைத்தது. மரங்களில் இருந்து குருவிகள் கீச்சிட்டுக்கொண்டு பறந்தன. குரங்குகள் சத்த…
-
- 4 replies
- 1.6k views
-
-
குறிப்பா புலம் பெயர்த்த ஈழ மக்கள் உங்களுக்கு இது உதவும் எவர் முதல் சொல்வது நம்ம கௌரவம் என்னாகும் மரியாதையை போயிடும் என்னும் சில அற்ப விசயங்களுக்கு பயந்து நீங்கள் உங்களுக்கு நடந்த இப்படியான சம்பவத்தை மறைத்து இருக்கலாம் .. ஆகவே விழிப்பாய் இருங்கள் மோசடிகள் பல கோணத்தில் பல மாதிரி நடக்கு அதில் இதுவும் ஒன்று ஓகே பிரச்சினைக்கு வருவம் .. (கற்பனை பெயர் அனைத்தும் ) வீட்டு தொலைபேசி அதிகாலை 5.30 மணிக்கு உறக்கத்தை கிழித்து அலறி தனது குரலை தயார் செய்கிறது நிசப்தம் உறக்கத்தை வேண்டி நிக்க தொலைபேசி தொந்தரவு கொடுக்கிறது மனதில் யாரா இருக்கும் என எண்ணியபடி எட்டி போனை எடுத்து காதினில் கொடுக்கிறாள் ஜெசி மறுமுனையில் .. ஹலோ ..ஹலோ . இவள் ..ம்ம் யாரு நிங்க எங்கிருத்து .. என்னை தெரியாதா வ…
-
- 16 replies
- 2.3k views
-
-
தலைப்பு : முக பவுடர் முக பூச்சு சாயங்களுடன் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தவள் திடீரெனகத்தினாள்கதை ; கண்ணாடி ^^^ஒரு வார்த்தை கதைகள் எழுத்துருவாக்கம் கே இனியவன் மேலும் தொடரும்
-
- 0 replies
- 1.7k views
-
-
ஒர் அகதியின் கதை என் ஈழத்திரு நாட்டிலே யுத்தகால வேலைகளில் ...நம்மவர்கள் அடைந்த துயரங்கள் உயிரிழப்புகள் சொத்து இழப்புகள் உறவுகளைத் தொலைத்த சோகங்கள் சொல்ல வார்த்தையில்லை . சொந்த மண்ணிலே அகதியாகிய சோகம் ஏழேழு தலைமுறைக்கும் வரலாறாய் இருக்கும். கண்ணீரோடும் செந்நீரோடும் கலைந்து போன உறவுகள் . உயிரிலும் மேலாக மதிக்கும் போராளிகள் அவர்களை ஈந்த பெற்றோர் கணவனை இழந்த மனைவி , தந்தையை ,தாயை இழந்த குழந்தைகள், உறவுகளை இழந்த உள்ளங்கள் , படட துன்பங்கள் வார்ததையில் வடிக்க முடியாத சோகங்கள் இத்தனையும் சந்தித்த ஒரு அகதியின் கதை. 1990இல் ஒரு ஆவணி மாதத்தில் யாழ் நகரையும் அதன் சூழ உள்ள தீவுகளையும் இலங்கையின் ராணுவத்தினர் தரையாலும் கடலாலும் ஆகாயத்தின் பரப்பி…
-
- 2 replies
- 1.8k views
-
-
இந்தியாவுக்கு போனால் அதிகமாக கோவிலுக்கு போவது வழமை நான் ஒரு கோவிலுக்கு போவம் என்று நினைத்தால் என்ட பெட்டர்காவ் நாலு கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லுவார்.அது மட்டுமல்லாது இந்த மனித சாமிமார் அவர்களின் ஆச்சிரமம் அது இது என்று போவதும் வழக்கம். முதல் தடவையாக புட்டபத்திக்கு போனேன் .காரில் போகும் பொழுதே சாரதி இது சாய் பல்கலைகழகம் ,இது சாய் சங்கீதபாடசாலை,சாய் மருத்துவமனை,சாய் விமான நிலையம் என ஒரு பெரிய நகரத்திற்க்கு தேவையான சகல கட்டமைப்புக்களும் இருப்பதை காட்டிக்கொண்டே வந்தார் .ஒரு தனிநபரால் எப்படி இது சாத்தியம் என்று மனதில் கேள்வி எழுந்தது ,நான் அந்த கேள்வியை கேட்டிருந்தால் நிச்சமாக சாரதியின் பதில் அவர் கடவுள் அவரால் இதுவும் செய்யமுடியும் இதற்கு மேலும் செய்ய…
-
- 17 replies
- 5k views
-
-
ஓடிப் போனவள் .. -சிறுகதை-சாத்திரி வேலை முடிந்து வெளியே வந்ததும் கைத்தொலைபேசியை எடுதுப்பர்தேன். நாங்கள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம் என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. ‘பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா.’ என்கிற மகிழ்ச்சி மனதில் துள்ளியது. கோடை விடுமுறை மனைவியும் மகளும் ஊருக்கு போய் விட்டார்கள். எனக்கு புதிய வேலைஎன்பதால் லீவு எடுக்க முடியவில்லை. இல்லையில்லை, லீவு எடுக்க விரும்பவில்லை என்றும் சொல்லலாம். அவர்களை ஊருக்கு அனுப்பி விட்டுக் கொஞ்சம் தனிமையாக இருக்க மனது விரும்பியது. இன்று பிரான்சின் குடியரசு தினம். பொதுவிடுமுறை நாள். ஆனால் எனக்கு மட்டும் சரியான வேலை. நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே விடுமுறையானாலும் உணவு விடுதிகளி…
-
- 19 replies
- 6.4k views
-
-
ஊர்களில் பெரும்பாலும் பேசப்படும் சொல் இந்த ஓடிப்போதல் எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லுவா யாராவது பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது, அவன் அவளோட எல்லோ ஓடி போனவள் என்று .அல்லது இன்னாரின் பெடியன் அவற்ற பேத்தியோட ஓடிப்போனவன் என்று ,சொல்லும் போது அறியாத வயதில் விபரம் தெரியாத நாம் என்ன இது ஓடிப்போறது என்று குழம்பி போய், என்ன கிழவி ஓடுறான் ஓடுறாள் என்று சொல்லுற என்ன அது என்று கேட்டா உனக்கு இப்ப முக்கியம் போடா போ போய் வாய்ப்பாடு எடுத்து பாடமாக்கு என்று கிழவி கலைக்கும் .. பிறகு கொஞ்ச காலம் போக எங்க வீட்டுக்கு பக்கத்தில ஒரு கலியாணம் நடந்தது ஊரே ஒரே பரபரப்பு, இந்தா அவனின் மாமன் வாறான் ..மூத்த அண்ணன் வாறன் சரி அடிபாடு தொடங்க போகுது என்று, எல்லோரும் ஆளையால் மாறி மாறி கதையும் ஓடி ஓ…
-
- 5 replies
- 1.8k views
-
-
க..பூ..க..போ . (சிறுகதை) க..பூ..க..போ . இம்மாத அம்ருதாவில் . சாத்திரி .. இந்தத் தடவை தமிழ்நாட்டுப் பயணம் என்பது ஒரு திட்டமிடல் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அமைந்து விட்டது .அதனாலேயே நான் சந்திக்க திட்டமிட்டிருந்த பலரையும் சந்திக்க முடியாமலும் போனதில் வருத்தம் .முதலில் ஓசூரில் இருந்து சேலம் வழியாக தஞ்சை ..கும்பகோணம் செல்வதே எனது திட்டம் ஆனால் திடீரென கும்பகோணம் செல்லும் திட்டம் கைவிட வேண்டி வந்ததால் சேலத்திலிருந்து கிருஸ்னகிரி வழியாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது .சென்னை செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டு நேரத்தைப் பார்த்தேன் மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது .சென்னைக்கு போய் சேர எப்படியும் இரவு பத்து மணி…
-
- 14 replies
- 4.1k views
-
-
கக்கூஸ் கதையல்ல கலாய் ... ஜீவநதிக்காக..சாத்திரி . வாஷிங்டன் சிட்டிசியில் வானுயர்ந்து நிற்கும் உலக வங்கி தலமையக கட்டிடத்தின் அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்.. பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள் நித்தியானந்தாவின் வருகைக்காக காத்திருக்கும் பக்தர்களைப் போலவே உலக வங்கியின் தலைவர் எப்போ வருவார் என ஆவலோடு வாசலைப் பார்த்தபடியே பர பரப்பாக காத்திருந்தனர்.கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்ற சில நிருபர்களை காவலர்கள…
-
- 1 reply
- 2.2k views
-
-
வினோத்தின் நேர்கொண்ட பார்வையை தவிர்க்கவே அடிக்கடி உடையை சரி செய்வது போல கீழே குனிந்து கொண்டேன். இதை வினோத் அறிந்திருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாது தவித்தது. அந்த இத்தாலிய உணவகத்தின் யன்னைலினூடே வெளியே பார்க்கிறேன். சவர்க்கார கரைசலை வாயிலே வைத்து ஊதும் வெள்ளை இன சிறுவன். அவன் ஊதும் குமிழி போலவே, என் எண்ணங்களும் வளர்வதும் வெடித்து சிதறுவதுமாக இருந்தன. கடவுள் நிறைய நேரங்களில் எங்கள் எண்ணங்களை எம் கண்முன்னே காட்சி ஆக்குவதில் வல்லவர் என்று யாரோ சொன்னது எனக்குள்ளே வந்து போனது. ஐரோப்பாவில் இருந்து உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளவந்திருந்த வினோத்தை சந்திப்பதற்கான ஒழுங்கை மதி ஏற்படுத்திவிட்டு, பழைய நண்பர்களை சந்திக்க என்னை அழைத்தபோது, எனக்குள்ளே ந…
-
- 8 replies
- 1.5k views
-
-
முந்தைய இரவின் மெல்லிய பனித் தூறலிலும் சில்லென்று வீசும் காற்றிலும் மெல்லிதாக அவனுக்கு குளிரத் தொடங்கியது. ஆனாலும் அவனது நோக்கம், எண்ணம் எல்லாம் அந்த வீடு பற்றியதாக இருந்தமையால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக நடக்கிறான். இன்னும் அந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக மெழுகுவர்த்தியோ அல்லது ஏதோ ஒன்றின் வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் அங்கும் இங்குமாக அசையும் விம்பம் மட்டும் யன்னலூடாகத் தெரிந்தது. *** பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இன்னும் அந்த வீட்டில் வசந்த காலத்துக்குரிய எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. பனிப்பொழிவு தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தடவை கூட அவளைக் காணவில்லை என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகியது. அவ…
-
- 5 replies
- 2.3k views
-
-
அன்பு வாசகர்களுக்கு, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அதிகம் எழுதவில்லை. காணாமல் போயிருந்தேன் என்றே சொல்லலாம். அவ்வப்போது முகநூலில் மட்டுமே உலவியிருந்தேன். பழையபடி நான் வேகம்பூட்டி ஓடத் தொடங்கியிருக்கிறேன். 2017 புத்தாண்டு என்னை புதுப்பித்திருக்கிறது. பலருக்கு என்பற்றிய பல கேள்விகள் சநதேகங்கள் ஆச்சரியங்கள் இப்ப நிறைய...., ஏன் காணாமல் போனேன் ? எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். புத்தாண்டு எனக்கு புதிதாக ஒளியாக பிறந்திருக்கிறது. இனி நேசக்கரம் பணிகளும் விரைவடையப்போகிறது. கடந்து வந்த தடைகள் துயர்கள் கண்ணீர் புன்னகை யாவையும் இனி எழுதுவேன். கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு..., …
-
- 7 replies
- 3k views
-
-
கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 விடுமுறை நாட்களில் தாத்தாவும், பேரனும் ஒன்றாக பொழுதைக் கழிப்பது உண்மையில் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அதற்காக நான் மூத்த மகளிடம் விடுதலைக்கு வருவது வழக்கம். ஒன்றாக விளையாடுவது, கதை சொல்வது மற்றும் பல சின்ன சின்ன செயல்களில் பேரப்பிள்ளைகளுடன் ஈடுபடுவேன். என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் படிப்பு இலங்கை என்பதால், இங்கு பாடமுறை வித்தியாசம் என்பதால், அதை பெற்றோர்களே பார்த்துக்கொள்வார்கள் அப்படி ஒரு விடுமுறையில், கனடா, ஒட்டாவாவில் ஒரு சூடான ஆகஸ்ட் முன் இரவுப் பொழுது, மகளுக்கும் பேரனுக்கும் பெரிய வாக்குவாதம் வந்து விட்டது. மகள் தொலைபேசியில் முக்கிய வேலை விடயமாக கதைக்கும் பொழ…
-
- 3 replies
- 328 views
-
-
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர். அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட, அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வ…
-
-
- 7 replies
- 427 views
- 1 follower
-
-
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01 பகுதி: 01 - ஒட்டாவாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை முதன் முதலில் “கடற்கரை அலைந்து திரிந்தோர்” (Beachcombers) ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதர்களே ஆகும். கடற்கரைகளைக் கடந்து, கடலின் வளங்களை உணவாகக் கொண்டு அவர்கள் மெதுவாக ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பின்னர் உலகின் பல பகுதிகளுக்குப் பரவினர் என்பது வரலாறு ஆகும். இதனால், மனித வரலாற்றின் முதல் “நெடுஞ்சாலை”யாக கடற்கரை அமைந்து இருந்தது. அதனாலோ என்னவோ, தாத்தாவும் தன் வெளிநாட்டில் பிறந்து வளரும் பேரப்பிள்ளைகளுக்கு அந்த பெருமை பெற்ற “நெடுஞ்சாலை” வழியாக இலங்கை சுற்றிலாவை ஆகஸ்ட் 2025 இல் ஆரம்பிக்க முடிவு செய்தார். ஆக…
-
-
- 9 replies
- 399 views
- 1 follower
-
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01 பகுதி: 01 - நல்லூர் திருவிழாவுக்கு வருகையும் & சந்திப்பும் ஆகஸ்ட் 2025 சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது பொன்னிறமாக பிரகாசித்தது. அதன் குறுகிய பாதைகளில் மாலைகள், இனிமையான கற்பூரப் புகை மற்றும் தவில் மேளங்களின் இன்னிசை ஒலிகளால் அதன் அரவணைப்பு நிரம்பியிருந்தது. நல்லூர் முருகன் திருவிழா அதன் உச்சத்தை எட்டியிருந்தது - ஆயிரக்கணக்கானோர் பிரகாசமான வேட்டிகளையும் அழகு மின்னும் புடவைகளையும் அணிந்து கொண்டு தெருக்களில் திரண்டனர். அவர்களின் கண்கள் அலங்காரமாக அலங்கரிக்கப்பட்ட தமிழ் கடவுளான, 'அலங்காரக் கந்தனைச்' சுமந்து செல்லும் தேரை நோக்கி உயர்ந்தன. “பஞ்சம் படை வந்தாலும் பட்டினி தான் வந்தாலும்…
-
- 4 replies
- 263 views
-
-
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 01 / In English & Tamil யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மதிய வேளைகளில் வழமைபோல் சுறுசுறுப்பாக இருந்தது. மருத்துவப் பீட மாணவர்கள், குறிப்பாக மூத்த இளங்கலை மாணவர்கள், உடற்கூறியல் குறிப்புகளாலும் தூக்கமில்லாத இரவுகளாலும் சூழப்பட்டு, அந்த சுமைகளுடன் வேகமாக நடந்துகொண்டு இருந்தார்கள். அதேவேளை, குறிப்பாக இளைய கலைப்பீட இளங்கலை மாணவர்கள் புத்தகங்களை கைகளில் ஏந்தி, இலக்கியம், அரசியல் மற்றும் வாழ்க்கைக்கு இடையே அலைந்து திரிந்த எண்ணங்களுடன் மெதுவாக நடந்துகொண்டு இருந்தார்கள். உயரமான, அமைதியான, எதையும் கேள்விகேட்டு அதன் உண்மைத் தன்மையை அறிவதில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டவனாக, ஆனால் அதே ந…
-
- 1 reply
- 76 views
-
-
இந்தக் கதைக்கும், கதைசொல்லியான எனக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று, இந்தப் பிரதியை வாசிக்கும் போது நீங்கள் நினைக்கக் கூடும் என்ற நினைப்போடுதான் இப்பிரதியினை உருவாக்கத் தொடங்குகிறேன். எவ்வகையானதொரு நோக்கு நிலையில் நின்று நீங்கள் இதனை வாசிப்பீர்கள் என்ற ஒரு சந்தேகமும் என்னுள் எழாமல் இல்லை. ஏனென்றால் நான் கூட புதிய கதைசொல்லிகளின் கதைகளை, வாசிப்பின் ஆரம்ப காலங்களில் அதிகளவு ஈடுபாட்டுடன் வாசித்ததில்லை. பின்நவீனத்துவம் ,பெருங்கதையாடல்களின் முடிவு, பிரதியினை கட்டுடைத்தல், மையசிதைவு அல்லது மையமின்மை போன்ற பல்வேறு உத்திகளுடன் ஒரு கதையை ஆரம்பித்து நகர்த்துதல் என்ற பல்கோட்பாட்டு நிலையில், ஒரு சிறுகதைக்கான கட்டமைப்பு மீதான கரிசனம் அதிகரித்தபின் கண்ணில் படும் எந்த ஒரு பிர…
-
- 8 replies
- 3.2k views
-
-
ஆளையே அடையாளம் காணமுடியாதளவுக்கு பயங்கர இருட்டு, கையில் அரிக்கன் லாம்புடன் அருகில் இருக்கும் வைரவர் கோயிலுக்கு தனிய நான் போய்க்கொண்டிருக்கிறேன். பென்னாம் பெரிய புளியமரம் அது கீழே ஒரே ஒரு சூலம் அதற்கு நாற்புறமும் சூழ சீமெந்தால் சுற்றிக்கட்டிய அரைச் சுவர். பனங்குற்றியாலான தூண், ஓட்டுக்கூரை நேர் எதிரே ஒற்றைப்பனை மரம் ஒன்று. கீழே ஒரு நடுகல் அது காளியின் சிலை. இது தான் அந்தக் கோயிலுக்குரிய அடையாளம். சற்று அகன்ற ஒற்றையடிப் பாதையும், சுற்றி வர பனங்கூடலும்,சிறுபற்றைக்காடுகளும் ஆங்காங்கே தெரியும் சிறு வீடுகளும் பகலில் கூட அமானுஸ்யத்தை உணர்த்தும். அரிக்கன் லாம்பை வைத்து விட்டு வைரவருக்கு விளக்கை ஏற்றிவிட்டு காளிக்கும் கற்பூரம் ஏற்றி விட்டு வருகிறேன். என்றைக்குமில்லாதவாறு அன்ற…
-
- 7 replies
- 1.3k views
-
-
கப்டன் தாரகன் தாரகையாய் ஒளிர்கிறான்....! கப்டன் தாரகன் வீரனாய் :- 03.04.1974வித்தாய் :- 01.02.2000 சொந்த இடம் - முள்ளியவளை. வன்னியின் வளங்களையெல்லாம் தன்னகத்தேயும் கொண்டமைந்ததே முள்ளிவளைக் கிராமம். அடங்காப்பற்றின் வீரமும் வரலாறும் முள்ளியவளை நிலமெங்கும் பரவியிருப்பதை வன்னியர்களின் வரலாறு சொல்கிறது. வீரமிகு வரலாற்றையும் வீரத்தையும் கொண்ட முள்ளியவளைக் கிராமம் தமிழீழ மீட்பிற்காக தனத புதல்வர்களையும் புதல்விகளையும் ஈந்த பெருமைக்குரிய கிராமங்களில் ஒன்றாகும். 03.04.1974 தம்பு தம்பதிகளின் பிள்ளையாகப் பிறந்தான் பார்த்தீபன். அக்கா , அண்ணா , தங்கையின் அன்பிற்கு அவன் ஆதாரம். சிறுவயதுக்கேயுரிய இயல்புகள் அவனையும் ஆட்கொண்டிருந்தது. வயல்களும் வரப்புகளும் இயற்கையி…
-
- 7 replies
- 1.1k views
-
-
கப்டன் ரவி காலம் எழுதிய வரிகளில்...! இந்திய ராணுவம் ஈழமண்ணுக்குத் தந்து சென்ற வடுக்கள் எங்கள் மனங்களில் நூற்றாண்டுகள் போனாலும் கரையாத துயரங்கள்; அவை. ஓவ்வொரு ஊருக்குள்ளும் ஒரு குடும்பமேனும் இந்தியப் படைகளால் சிதைவுற்ற கதைகளைச் சுமந்து கிடக்கிறது வரலாறு. அந்தக் கொடிய நாட்களில் எங்கள் ஊர்களில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த புலிவீரர்கள் பலரது கதைகளையும் காலம் மௌனமாகச் சுமந்து கொண்டு நகர்கிறது. 1989ம் ஆண்டின் ஓரிரவு எங்கள் வீடுகளில் அத்துமீறி நுளைந்து நிரந்தரமாய் எங்களோடு உறவாகி நினைவுள்ளவரை தங்கள் ஞாபகங்களைத் தந்து சென்றவர்களுள் கப்டன் றவியண்ணாவும் ஒருவர். ஊரில் உலாவிய போராளிகளுள் றவியண்ணா வித்தியாசமான போராளி. அமைதியென்றால் அது றவியண்ணாதான். அதிகம் கதையில்லை …
-
- 16 replies
- 2k views
-