கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது 1968, ஒன்பதாவது வகுப்பு. இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு. அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்…
-
-
- 6 replies
- 394 views
-
-
மனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும். மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான். பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல. ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜. ******************************************************************…
-
-
- 76 replies
- 4k views
-
-
அண்மையில் தேசிய பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலை கடித தாளில் (லெட்டர் ஹெட்டில்)பாழைய மாணவ சங்கங்களுக்கு "கிளீன் (விரும்பிய பாடசாலையின் பெயரை போடவும்) கல்லூரி"என்ற திட்டத்தை அமுல் படுத்த பணம் தேவை என கடிதம் அனுப்பியிருந்தார் . நல்ல விடயம் கேட்ட தொகை கிட்டதட்ட 3லட்சம் ... கிளீன் சிறிலங்கா என ஜனாதிபதி பாடம் நடத்த இவர்கள் புலம்பெயர் மக்களிடம் கிளீன் பாடசாலை என வெளிக்கிட்டினம் ..சிங்கள பாடசாலையிலும் இது நடை பெறுகிறது. தேசியம் பேசுகிறார்கள், தேசிய ஒற்றுமை என கூவுகின்றனர்.பாடசாலைகளுக்கு குப்பை தொட்டி வாங்குவதற்கு ஏன் புலம் பெயர் தமிழ் தேசிய மக்களிடம் கை ஏந்துகின்றனர் இந்த இடதுசாரிகள்...விகாரை கட்டுவதற்கு ,,இராணுவ கட்டமைப்புக்கு என பணத்தை வாரி இறைக்கின்றனர் ஏன் குப்பை தொட…
-
-
- 12 replies
- 615 views
- 1 follower
-
-
"இளமொட்டு மனது" யாழ்ப்பாண அரசு காலத்தில் தென்மராட்சியின் நிலப்பரப்பு மிகப் பெரியதாக இருந்தது. அப்பொழுது 'கச்சாய்த் துறைமுகம்' முக்கிய இடத்தை பெற்றிருந்தது. அப்படியான யாழ்ப்பாணத்தின் பசுமையான வயல்களின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கச்சாய் என்ற பண்டைய கிராமத்தில், கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகில் முத்துச்செல்வி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அன்பின் உருவகமாக இருந்ததுடன் அவளுடைய ஒளிரும் கண்கள் ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தை பிரதிபலித்தும், அதை உறுதிப்படுத்துவது போல அவளுடைய புன்னகையும் நடத்தையும் கூட நிறைந்திருந்தது. ஆயினும்கூட, அவளுடைய கண்கொள்ளா வெளிப்புற அழகுக்குக் கீழே ஒரு துளிர்விட்ட பூவைப் போல, இளமைப் பருவத்தின் சிக்கல்களால் கறைபடாத ஒரு மனமும் அவளு…
-
- 0 replies
- 189 views
-
-
"ராசாத்தி மனசுல" காதல் !! ஏழை பணக்காரன் , சாதி மதம் , நிறம் குணம் இவை எதையும் பார்த்து வருவது அல்ல, சொல்லமுடியாத இன்பத்தையும் தாங்க முடியாத துன்பத்தையும் கொடுப்பது தான் காதல் !! என் மனதில் அவள் மேல் காதல் இன்னும் இருக்கிறது. ஆனால் அவள், ராசாத்தி மனசுல ? கீதையில் கிருஷ்ணன் चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ் ... (அத்யாயம் 4 - ஸ்லோகம் 13) குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது என்கிறார். கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்ற எண்ணம் ஆத்திக வாதிகளிடம் நிலை…
-
- 0 replies
- 258 views
-
-
"யுத்த வடுகளுக்கு மத்தியில் ஒரு காதல்" 25 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலை கட்டமைப்புகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதோடு அவை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவில்லை. அது மட்டும் அல்ல, 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் வன்னி பிரதேசத்தின் முழு உட்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்பட்டு இரண்டரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டதுடன் 40,000க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சூழலில் தான், போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரில், குழப்பம் …
-
- 0 replies
- 259 views
-
-
"விழிமூடித் துயில்கின்ற வேங்கைகள்" இன்று கார்த்திகைத் திங்கள் இரண்டாம் கிழமை, முல்லைச்செல்வி தனது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு, தனது வீட்டில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தாள். வானம் இருண்டுபோய் இருந்தது. குளிர் காற்றுப் பலமாக வீசிக்கொண்டிருந்தது. அவள் வாய் "தீபங்கள் அணையாலாம் தீ அழிவதில்லை தேசத்தை காத்த உயிர் ஓய்ந்து அழிவதில்லை" என்று முணுமுணுத்தபடி, காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை நோக்கிச் சென்றாள். அவள் பேருந்துவால் இறங்கி, நடக்கத் தொடங்கிய போது, அவளுடைய ஊன்றுகோல் சீரற்ற மண் பாதையில் உறுதியாக அழுத்தியது. ஒரு காலத்தில் மாவீரர் விழிமூடித் துயில் கொண்ட அமைதியான அந்த இடம், இப்போது, உடைத்து எறியப்பட்டு ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தது. அன்று பல உயிர்களைப் பறித்த …
-
- 2 replies
- 344 views
-
-
"ஆடம்பரம்" போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரின் நடுவே, எழுச்சிமிக்க ஒரு தமிழ்க் குடும்பம் கம்பீரமும் ஆடம்பரமும் நிறைந்து காணப்பட்டது. அவர்களைச் சூழ்ந்து இன்னும் சவால்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் இருந்தபோதிலும், அவர்கள் அதன் மத்தியிலும் தமக்கு இயல்பான, பழக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடிந்தது. உண்மையில் ஆடம்பரம் என்பது பார்ப்பவரின் பார்வையில் தான் உள்ளது. நேற்று (கடந்த காலம்) ஆடம்பரமாகக் கருதப்படுவது இன்று (தற்போது) ஆடம்பரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்று ஆடம்பரமானது ஸ்மார்ட்போன்கள், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய சொகுசு வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் வீடுகள் போன்ற உயர் தொழில்நுட்ப கேஜெட்டுகளை உள்ளடக்கியது. விரைவான இணைப்புக…
-
- 1 reply
- 303 views
-
-
"உறவு சொல்ல ஒருத்தி" இலங்கை உள்நாட்டுப் போர் 27 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது. இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த நிகழ்வு என்பவற்றின் பின் 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, யூலை 2006 இல் மீண்டும் வெடித்தது. புளியங்குளத்திலும் முகமாலையிலும் மணலாறிலும் அதன் நாலாபுறமும் அனல்பறக்கும் சண்டைகள் அடிக்கடி நடந்தன. வன்னி முழுவதிலும் இப்படியான நிகழ்வுகள் நாளாந்தம் நடக்கத்…
-
- 0 replies
- 241 views
-
-
"ஏமாற்றும் காதல்" ஒரு காலத்தில் இலங்கையின் ஒரு அழகிய கடற்கரை நகரத்தில் ராஜ் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு அன்பான மற்றும் பாரம்பரிய குடும்பத்தின் ஒரே குழந்தை. ராஜ் தனது வசீகரம், புத்திசாலித்தனம் கடலின் மீது ஆழ்ந்த அன்பு, தாராள மனப்பான்மை மற்றும் அன்பான புன்னகைக்காக அவனது கிராமம் முழுவதும் அறியப்பட்டான். ராஜ் உள்ளூர் புத்தகக் கடையில் சுமாரான வேலையில் இருந்தான், அங்கு அவன் தனது நாட்களை புத்தகங்களில் மூழ்கி, வாடிக்கையாளர்களுக்கு சரியான வாசிப்பைக் கண்டறிய உதவினான். சமீபத்தில் அவனது கிராமத்திற்குச் சென்ற அழகிய பெண்ணான மாயாவை சந்தித்த ராஜின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. மாயாவை சுற்றி ஒரு மர்மம் இருப்பது அவனுக்…
-
- 0 replies
- 359 views
-
-
"சாதிக் கொடுமை" சாதி அமைப்புகளின் வரலாற்றைக் கொண்ட பல ஆசியா சமூகங்களில், உதாரணமாக, தெற்காசியாவில் உள்ள பல்வேறு சமூகங்களிடையே இருந்ததைப் போலவே, சாதி அடிப்படையிலான பாகுபாடும் கொடுமையும் இலங்கைத் தமிழர்களிடையே பிரச்சினையாக இருந்த காலம் அது. இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் பெரும்பாலும் இந்துக்களிடம் சாதி அமைப்பு பாரம்பரியமாக அவர்களின் சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டு இருந்தது. என்றாலும் சாதி அடிப்படையிலான பாகுபாடு முன்பு இருந்ததைப் போல பரவலாகவோ அல்லது வெளிப்படையாகவோ இல்லாவிட்டாலும், அது தமிழ் சமூகத்தின் பல பகுதிகளில் இன்னும் ஓரளவு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்தில் "உயர்குடி…
-
- 0 replies
- 230 views
-
-
"புரிதலின் போது" "புரியாத கர்வம் பலரைத் தள்ளிவைக்கும் அறியாத உண்மை உன்னைச் சிதைத்துவிடும் நெறியான வாழ்வு இல்லாமல் போய்விடும் 'புரிதலின் போது' எல்லாமே தேடிவரும்!" கதிரழகி ஒரு அழகின் தரிசனம். அவளுடைய இருப்பு எவரையும் சலிப்படைய முடியாதவாறு, அது எந்த இடமாக இருந்தாலும் அதை ஒளிரச் செய்வது, அவளுடைய அற்புதமான உடல் அம்சங்கள் அவளைப் பார்த்த அனைவரையும் கவர்ந்திழுக்கும். தினமும் காலையில், அவள் தன் உருவத்தை கண்ணாடியில் பார்க்கிறாள், அது அவளுக்கு ஒரு மகிழ்ச்சி, ஒரு தற்பெருமை! அவளது தோள்களின் மேல் படர்ந்திருக்கும் அவளது நீளமான, கருமையான கூந்தலையும், அவளது பெரிய, மான் போன்ற மயக்கம் தரும் கண்களையும், அவளது குறைபாடற்ற உடலின் முழுத் தோற்றத்தையும் மீண்டும் …
-
- 0 replies
- 228 views
-
-
ஆறுமுகம் இது யாரு முகம்? விதியின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் சில விடயங்களை வாழ்க்கையில் சந்திக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட முகங்களே எப்பொழுதும் எங்களைச் சுற்றி இருக்கின்றன. சில முகங்கள் எப்பொழுதாவது அபூர்வமாகத் தென்படுகின்றன. ஒரு சில முகங்கள் முன்னர் எங்கேயோ பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்தி விட்டு விலகிப் போய் விடுகின்றன. இன்னும் சில கொஞ்சக் காலம் உறவாடி விட்டு தொலைந்து போய்விடுகின்றன. இந்த முகத்தை இனி வாழ்க்கையிலேயே பார்க்கக் கூடாது என்று கோபத்தோடு சொல்ல வைக்கும் முகங்களும் கொஞ்சமாக இருக்கத்தான் செய்கின்றன. யேர்மனிக்கு நான் புலம் பெயர்ந்த காலகட்டத்தில் கிழக்கு-மேற்கு என யேர்மனி இரண்டாக வேறு பட்டு இர…
-
-
- 12 replies
- 787 views
- 1 follower
-
-
"பொண்டாட்டி ராஜ்ஜியம்" இலங்கையின் வடமாகாணத்தில் ஒரு அமைதியான புறநகர் பகுதியில், அகிலா மற்றும் துகிலன் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக மகிழ்ச்சியாக, அவர்களின் காதலின் அடையாளமாக ஒரு அழகிய பெண் குழந்தையும் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். என்றாலும் நாளடைவில் மூடிய கதவுகளுக்குப் பின்னால், ஒரு இருண்ட மற்றும் ஒரு 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' மெல்ல மெல்ல தலை தூக்க தொடங்கியது. அகிலம் எல்லாம் தன் கையில் என்ற ஒரு திமிர் அகிலாவிடம் வளர்ந்துவிட்டது. துகிலன் அவளின் காதலிலும் அழகிலும் தன்னை இழந்து, அதை கவனிக்காமல் தூங்கி விட்டான் போலும்! இதைத்தான் தலையணை மந்திரம் என்கிறீர்களா? அகிலா ஒரு வலுவான விருப்பமும்…
-
- 0 replies
- 289 views
-
-
வாடியிட்டபுலம் வாடியிட்டபுலம் இயற்கை அழகு, பரவிக் கிடக்கும் வயல்வெளிகள், சுற்றிவர இருக்கும், பசுமையான காடுகள், கோடையிலும் வற்றாத குளம் கொண்ட அழகிய கிராமம். வானவில்லின் நிறங்களில் பூத்திருக்கும் வண்ணமயமான பூக்களுடன் கூடிய நெல் வயல்கள் கண்களுக்கு விருந்து படைக்கும். வயல்களுக்கு இடையே உள்ள சிறிய நீர்நிலைகள் கதிரவன் ஒளியில் மின்னி, கிராமத்தின் அழகை மெருகூட்டுகின்றன. தென்றல் காற்று, பறவைகளின் கீச்சுக் குரல்கள் என வயல்வெளி நமக்கு அளிக்கும் அனுபவங்கள் எண்ணிலடங்கா. கிராமத்தின் இதயமென இருக்கும் குளம் மனிதருக்கு மட்டுமல்ல பலவித உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமே இந்த குளம் தான். வயல்வெளியில் ஓடி விளையாடும் குழந்தைகளின் சிரிப்பு ஒலி, குளக்கட்டில் நீச்சலடிக்கும் சிறுவர்களின் …
-
-
- 7 replies
- 519 views
-
-
"காதல் பரிசு" இலங்கையின் பரபரப்பான நகரமான கொழும்பில், நெடுங்குழலி என்ற தமிழ் பெண்ணும் அஜந்தா என்ற சிங்கள வாலிபனும் பக்கத்து பக்கத்து வீட்டில் மட்டக்குழி என்ற இடத்தில் வாழ்ந்து வந்தனர். நெடுங்குழலி உயர் வகுப்பில் தமிழ் மொழியிலும், அஜந்தா சிங்கள மொழியிலும் கல்வி கற்றுக்கொண்டு இருந்தாலும், இருவரும் தாராளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர்களாகவும் இருந்ததால், அவர்களுக்கிடையில் ஒரு நட்பு இலகுவாக எற்பட்டது. தங்கள் பாடங்களைப்பற்றி ஒருவருக்கொருவர் அலசுவதுடன் நாட்டு நடப்புகள் பற்றியும் விவாதிக்க தவறுவதில்லை. அவர்களுக் கிடையில் மலர்ந்த புரிந்துணர்வுகள் அவர்களின் சமூகம் வெவ்வேறாக இருந்தாலும், அவ்வற்றைத் தாண்டி, நாம் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் பின்னிப்பிணைந்த…
-
- 0 replies
- 198 views
-
-
"தீர்ப்பு" இந்தியப் பெருங்கடலின் நீலமான அலைகள் மற்றும் இலங்கையின் செழிப்பான பசுமைக்கு மத்தியில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரமான காலியில், பிரகாசமான கண்களை தன்னகத்தே கொண்ட லோசனி என்ற இளம் பெண்ணும் மற்றும் இரக்கமும் அழகுமுடைய அன்பழகன் என்ற வாலிபனும் ஆழமாக ஒருவரை ஒருவர் காதலித்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆயினும், அவர்களின் காதல் குளிரான கடற்கரை காற்றில், நிலாவின் மங்கலான ஒளியில், பண்டைய காலி கோட்டையின் எதிரொலிக்கும் சுவர்களுக்குள் மலர்ந்தது. லோசனி ஒரு சிங்கள பெண், அவளது சிரிப்பு பாறைக் கரையில் மோதும் அலைகளைப் போல இனிமையாக இருக்கும். அதில் சிலைத்து சிதைந்து விழுந்தவன் தான் தமிழ் வால…
-
- 1 reply
- 288 views
-
-
"என்னைத் தேடாதே" மதியழகன் எப்போதும் எளிமையுடனும் எல்லோரிடமும் பாசமாக வாழ்ந்து வந்தான். அவனின் குடும்பம் வசதியான குடும்பம் என்றாலும், செல்வமும் புகழும் அவனது ஒரு முக்கிய காரணியாக என்றும் இருந்ததில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு, விசுவாசம் மற்றும் நேர்மை ஆகியவற்றை அவன் மதித்தான். அவன் ஒரு இளம் மருத்துவனாக அவனது நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடமை புரிந்தும் வந்தான். அவனது இதயம், இளநிலா என்ற ஒரு இளம் பெண்ணால் ஒருமுறை தற்செயலாக ஈர்க்கப்பட்டது. ஒருமுறை அவனது மருத்துவமனைக்கு இளநிலாவின் தாய் சளிக்காச்சலால் அவதிப் படுவதால், முறையான சிகிச்சை பெறுவதற்கு, அங்கு கூட்டி வந்தாள். அப்பொழுது தான் அவன் தற்செயலாக அவளைக் சந்தித்தான். அவளுடைய இளமை பூக்கும் அழக…
-
- 1 reply
- 479 views
-
-
முதிர்கன்னி [மலர்குழலி] இன்றைய வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோகம் குறிப்பிடத்தக்க வயதில் திருமணமாகாமல் வாழ்க்கையைக் கழிப்பது. வேலை பார்ப்பதினாலோ அல்லது நிறையவே படிப்பதினாலோ அல்லது திருமணம் செய்து கொள்வதற்கான பொருளாதார மற்றும் சூழ்நிலை வசதியின்மையினாலோ பெண்களில் சிலர் முதிர்கன்னிகளாக வாழ்கின்றார்கள். அப்படியான ஒருவர்தான் மலர்குழலி. இவள் இலங்கை கிளிநொச்சி என்ற பகுதியில் பசுமையான வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். இவள் 40களின் முற் பகுதியில் ஒரு அழகான முதிர்கன்னி, கருணை நிறைந்த இதயம் மற்றும் அரவணைப்பை வெளிப்படுத்தும் ஒரு ஆன்மா. மலர்குழலி தனது வாழ்நாள் முழுவதையும் தனது குடும்பத்தினர், நண்பர்க…
-
- 0 replies
- 239 views
-
-
"வாழாவெட்டி" இலங்கையின் யாழ்பாணத்தில் ஒரு அமைதியான கிராமத்தில் நன்முகை என்ற ஒரு இளம் பெண் கனவுகள் நிறைந்த இதயத்துடன் உயர் வகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஆசிரியர் ஆகும் எண்ணத்துடன் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று வந்தார். நவம்பர் 28, 2022 அன்று யாழ்பாணத்தை ஆண்ட இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் குடும்பப்படம் தேசிய கல்வியியற் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது. சங்கிலிய மன்னனின் குடும்பப்படத்தை சித்திரத்துறை மாணவ ஆசிரியர்களின் மூலம் கல்லூரியின் சித்திரத்துறை விரிவுரையாளர் நெறிப்படுத்தியிருந்தார். அதேவேளை கல்லூரியின் நுழைவாயிலில் தனிக்கருங்கல்லால் ஆன 13.5 அடி சங்கிலியன் உருவச்சிலை இருப்பதும் குறிப்பிடத் தக்கது. அன்று…
-
- 0 replies
- 294 views
-
-
"பெண்ணே புயலாகு” இலங்கைத் தீவானது, தொன்மை வாய்ந்த இரு நாகரீகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்கின என்பது வரலாற்று உண்மையாகும். என்றாலும் சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியதை அடுத்து, சிங்களப் புத்த பேரினவாதம் மேலாண்மை பெற்றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை குரூரமான வன்முறை வடிவமாக, கொஞ்சம் கொஞ்சமாக 1956, 1958, 1966, 1977, 1981, 1983, 1985, கலவரமாக மாறத் தொடங்கி, அது 2009 உச்சகட்டத்தை அடைந்தது வரலாறு ஆகும். வன்னி அடிப்படையில் நீர் மேலாண்மைக் குடியிருப்பு ஆகும். ஆறுகளும், கடல்களும், குளங்…
-
- 0 replies
- 218 views
-
-
"விடியலைத் தேடி" கிளிநொச்சி இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். எனினும் கிளிநொச்சியில் கிராஞ்சி, வலைப்பாடு, பள்ளிக்குடா, இரணைமாதா நகர் மற்றும் நாச்சிகுடா கிராமம் போன்றவை மீன்பிடிக் கிராமமும் ஆகும். இந்த நிலவளம், நீர்வளம் நிரம்பிய கிளிநொச்சி பிரதேசம், வன்னி நிலத்தின் முக்கிய பகுதியாக, வடமுனையில் இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலே, இந்த வன்னிப் பகுதியில், குறிப்பாக கிளிநொச்சிப் பிரதேசத்தில், ஆங்ஆங்கே சில குடியிருப்புகளே இருந்தன. அதைத் தவிர்த்து அநேக இடங்கள், அடர்ந்த காடுகளான வனப் பகுதியாகவே காணப்பட்டது. அந்தக் காலத்தில் பிற இடங்களில் இருந்து இந்த அ…
-
- 0 replies
- 219 views
-
-
"வரன்" உப்பு கலந்த கடல்காற்றில் செந்நிற பூமியின் வாசனை கலந்த யாழ்ப்பாணத்தின் இதயத்தில், மேல் தட்டு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கதிரழகி, நட்சத்திரங்களுக்குப் போட்டியான அழகு கொண்ட பெண்ணாகக் காணப்பட்டாள். அவள் தன் வீட்டின் நீண்ட பொது அறையில் இருந்த சாளரத்தை ஒட்டி நின்று கொண்டு இருந்தாள். சாளரத்தின் ஊடாக தெரிந்த மேகம் மழை வருவதற்கு அறிகுறியாக சற்று மூட்டமாகக் காணப்பட்டது. அவள் மனதைக் கவர்ந்த அந்த காட்சியை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்த அவளின் மனம், பின்னோக்கி நகர்ந்தது. கதிரழகி, மூத்த மகளாக, கணனி கற்கையில் இளநிலை பட்டம் பெற்றிருந்தாள். அடுத்து முதுகலை பட்டம், வெளிநாட்டில் ஒன்றில் பெறவேண்டும் என்பது அவளின் ஆசையாக இருந்தது. ஆனால் பெற்றோர்கள் அவளுக்கு தி…
-
- 0 replies
- 196 views
-
-
"விவசாயி" இலங்கையில் உடவலவ நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசமாக இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இங்கு விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக இந்த நீர்த்தேக்கம் உள்ளது. கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தான் இரத்தினபுரி ஆகும். இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை இன்ற…
-
-
- 2 replies
- 272 views
-
-
"நட்பதிகாரம்" "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு." இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றான கண்டி நகரத்தை அண்டிய ஒரு சிறிய கிராமத்தில், உருளும் மலைகளுக்கும் மின்னும் நதிக்கும் இடையில் இரண்டு பிரிக்க முடியாத நண்பிகளாக, ஒளவை மற்றும் வள்ளி வாழ்ந்தனர். அவர்களின் பந்தம் அந்த கிராமத்தின் ஆற்றங் கரையில் உயர்ந்து பத்தையாக ஒன்றாக நிற்கும் மூங்கில் மரங்களைப் போல நீடித்தது. அது கருங்கூந்தலை வாரிச் செல்லும் மென் காற்றைப் போலவும் குளிர்ந்த மாலையில் ஒரு சூடான அடுப்பு போலவும் அவர்களுக்கு ஆறுதலளித்தன. ஒரு இதமான சூரிய ஒளிமிக்க மதியம், மென்மையான காற்று தேயிலைச் செடிகளுடன் விளையாடிக்கொ…
-
- 0 replies
- 175 views
-