கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
சிங்கள அரசின் இனவழிப்பின் போது காணாமல் போனவர்களை மீள் கொணர்தல் என்று உறவுகள் நடாத்தும் போராட்டம் தீர்வுகள் கிடைக்காமல் நீண்டு கொண்டே போகிறது. சிறீலங்கா அரசாங்கம் நீதியைப் புறம் தள்ளி தனது அதிகாரத்தை முன்னெடுத்துத் தொடர்ந்தும் போக்குக் காட்டிக் கொண்டே இருக்கிறது. பிள்ளைகளுக்காகப் போராட்டம் நடத்தும் பெற்றோர்களில் பலர் இறந்தும் விட்டார்கள். சமீபத்தில் நான் வாசித்த யேர்மன் நாட்டுச் செய்தி ஒரு தந்தை நடத்திய போராடத்தைப் பற்றியதாக இருந்தது. யேர்மனியச் சட்டம் இப்படி இருக்கிறதா என என்னை ஆச்சரியப்பட வைத்தது. இறுதியாக ஒரு நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கையுடன் நாற்பது வருடங்களாக மோல்மன் காத்துக் கொண்டிருந்தார். 79 வயதான மோல்மனின் மகள் பிரடெரிக் அவளது 17வது …
-
- 1 reply
- 667 views
-
-
நீல நிற விழிகளை அசைத்து அந்த மனிதன் உணர்த்திய கணத்தில் ஆரம்பிக்கத் தொடங்கியது அவனது எஞ்சிய நாட்கள். நாக்கு உலர்ந்து வார்த்தைகள் வறண்டுவிட்ட அந்தக் காலத்தை மெல்லியதாகக் கிழித்து வெளியேற முயன்றான். அன்றையின் பின், எப்போதும் அந்த நீலக் கண்கள் பிடரிப் பக்கத்தில் படர்ந்திருப்பதைப் போல ஒரு கனம் அவனது மனதினில் இறுகத்தொடங்கியது. அவனால், எஞ்சியிருப்பது எவ்வகையான வாழ்வென்றே தஅனுமானிக்க முடியாதிருந்தது. பிடரியில் ஒட்டியிருப்பதான நீலநிற விழிகள் இரவுகளில், மரங்களில், சுவர்களில் அசைந்து கொண்டிருப்பது போலவும் பாம்பின் நாக்குப் போல அவ்வப்போது இடைவெட்டிக் கொள்வதாகவும் கண்டுகொண்டான். காற்பெருவிரல் நகத்திற்கும் தசைக்கும் இடையினாலான, இடைவெளியினூடாக ஊடுருவும் மெல்லிய குளிர் போ…
-
- 1 reply
- 1.6k views
-
-
"காலத்தினால் செய்த உதவி" "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது." காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும் என்கிறார் திருவள்ளுவர். ஆமாம் உதவி என்பது எப்படி செய்கிறோம், எவ்வளவு செய்கிறோம் அல்லது யாருக்கு செய்கிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதை என்றும் தன் நெஞ்சில் பதித்து வாழ்பவள் தான், ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில், வாழும் உடலாலும் மனதாலும் அழகிய இந்த இளம் பெண். அவளின் பெயர் 'அருள்மலர்'. பெயருக்கு ஏற்ற அன்பு, இரக்கம், மற்றும் எந்தநேரமும் உதவும் இயல்பு கொண்டவள். ஒரு சிறிய கருணை செயல்…
-
- 1 reply
- 966 views
-
-
"துரோகம்...!" துரோகம் என்றால் என்ன ? கூடவே இருந்து குழி பறித்தல் அல்லது நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுதல். அதே நேரம் வாழ்க்கை, காதல் இரண்டும் ரோசாக்களின் படுக்கை அல்ல! இது அவளுக்கு எனோ புரியவில்லை. அவள் தன் காதலனை அந்த ஆற்றங்கரை ஓரத்தில் இன்னும் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக காணுவாள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். அவள் ஒன்றாக கூடி வாழ்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. என்றுமே அவள் ஐயப்படும் மாதிரி அவன் நடந்ததும் இல்லை! என்றாலும் அவன், அவளுடன் கணவன் மனைவி உறவுடனே, காதல், காமம் இரண்டிலும் நெருக்கமாக அனுபவித்தே வாழ்ந்தான். அவளும் அவன் மேல் உள்ள நம்பிக்கையில், அவனின் விருப்பங்களுக்கு விட்டுக் கொடுத்தே தினம் தினம் வாழ்ந்தாள். ஒர…
-
- 1 reply
- 324 views
-
-
கக்கூஸ் கதையல்ல கலாய் ... ஜீவநதிக்காக..சாத்திரி . வாஷிங்டன் சிட்டிசியில் வானுயர்ந்து நிற்கும் உலக வங்கி தலமையக கட்டிடத்தின் அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்.. பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள் நித்தியானந்தாவின் வருகைக்காக காத்திருக்கும் பக்தர்களைப் போலவே உலக வங்கியின் தலைவர் எப்போ வருவார் என ஆவலோடு வாசலைப் பார்த்தபடியே பர பரப்பாக காத்திருந்தனர்.கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்ற சில நிருபர்களை காவலர்கள…
-
- 1 reply
- 2.2k views
-
-
திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அறைகட்டி சேமிக்கும் தேனி. அலகால் தும்பெடுத்து அந்தரத்தில் கூடமைத்து உள்ளே குஞ்சு பொரித்து உயி வாழும் தூக்கணாம் குருவி. சுறு சுறுப்பாக எழுந்து வரிசைகட்டி வாழ்வதற்காக உணவெடுத்த…
-
- 1 reply
- 1.9k views
-
-
"திருந்தாத உள்ளம்" "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!" எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர். நான் ச…
-
- 1 reply
- 374 views
-
-
"என்னைத் தேடாதே" மதியழகன் எப்போதும் எளிமையுடனும் எல்லோரிடமும் பாசமாக வாழ்ந்து வந்தான். அவனின் குடும்பம் வசதியான குடும்பம் என்றாலும், செல்வமும் புகழும் அவனது ஒரு முக்கிய காரணியாக என்றும் இருந்ததில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு, விசுவாசம் மற்றும் நேர்மை ஆகியவற்றை அவன் மதித்தான். அவன் ஒரு இளம் மருத்துவனாக அவனது நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடமை புரிந்தும் வந்தான். அவனது இதயம், இளநிலா என்ற ஒரு இளம் பெண்ணால் ஒருமுறை தற்செயலாக ஈர்க்கப்பட்டது. ஒருமுறை அவனது மருத்துவமனைக்கு இளநிலாவின் தாய் சளிக்காச்சலால் அவதிப் படுவதால், முறையான சிகிச்சை பெறுவதற்கு, அங்கு கூட்டி வந்தாள். அப்பொழுது தான் அவன் தற்செயலாக அவளைக் சந்தித்தான். அவளுடைய இளமை பூக்கும் அழக…
-
- 1 reply
- 486 views
-
-
"மர்ம காடு" 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' பற்றி அலசி ஆராய, அதன் மூலப்பிரதியான மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலின், ஆங்கில பிரதியை [1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படட] வாசிக்கத் தொடங்கினேன். ஆறாம், ஏழாம் அத்தியாயத்தில், இலங்கைக்கு விஜயனின் வருகை மற்றும் அவனின் ஆட்சி மிக சுவாரசியமாக பல பொய்களையும் நம்ப முடியாத நிகழ்வுகளையும் கொண்டு இருந்தன. விஜயனும் தோழர்களும் இலங்கைத் தீவில் கரை ஒதுங்கி இலங்கைக்கு வந்தேறு குடிகளாக நின்ற போது 'அங்கு பெண் நாய் உருவில் குவேனியின் பரிவாரத்தைச் சேர்ந்த ஒரு யக்ஷினி (Yakshini) தோன்றினாள் என்றும், குவேனி 'பதினாறு வயதுப் பருவ மங்கை…
-
- 1 reply
- 283 views
-
-
"தீர்ப்பு" இந்தியப் பெருங்கடலின் நீலமான அலைகள் மற்றும் இலங்கையின் செழிப்பான பசுமைக்கு மத்தியில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரமான காலியில், பிரகாசமான கண்களை தன்னகத்தே கொண்ட லோசனி என்ற இளம் பெண்ணும் மற்றும் இரக்கமும் அழகுமுடைய அன்பழகன் என்ற வாலிபனும் ஆழமாக ஒருவரை ஒருவர் காதலித்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆயினும், அவர்களின் காதல் குளிரான கடற்கரை காற்றில், நிலாவின் மங்கலான ஒளியில், பண்டைய காலி கோட்டையின் எதிரொலிக்கும் சுவர்களுக்குள் மலர்ந்தது. லோசனி ஒரு சிங்கள பெண், அவளது சிரிப்பு பாறைக் கரையில் மோதும் அலைகளைப் போல இனிமையாக இருக்கும். அதில் சிலைத்து சிதைந்து விழுந்தவன் தான் தமிழ் வால…
-
- 1 reply
- 290 views
-
-
"ஆடம்பரம்" போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரின் நடுவே, எழுச்சிமிக்க ஒரு தமிழ்க் குடும்பம் கம்பீரமும் ஆடம்பரமும் நிறைந்து காணப்பட்டது. அவர்களைச் சூழ்ந்து இன்னும் சவால்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் இருந்தபோதிலும், அவர்கள் அதன் மத்தியிலும் தமக்கு இயல்பான, பழக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடிந்தது. உண்மையில் ஆடம்பரம் என்பது பார்ப்பவரின் பார்வையில் தான் உள்ளது. நேற்று (கடந்த காலம்) ஆடம்பரமாகக் கருதப்படுவது இன்று (தற்போது) ஆடம்பரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்று ஆடம்பரமானது ஸ்மார்ட்போன்கள், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய சொகுசு வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் வீடுகள் போன்ற உயர் தொழில்நுட்ப கேஜெட்டுகளை உள்ளடக்கியது. விரைவான இணைப்புக…
-
- 1 reply
- 310 views
-
-
பள்ளியில் விஞ்ஞான கண்காட்சி நடக்கவிருக்கிறது. தயார்ப்படுத்தல்கள் களேபரப்படுகின்றன. அனைத்து மாணவர்களிற்கும் ஏதேனும் ஒரு விஞ்ஞான விளக்கம் தரும் காட்ச்சிப்பொருளினை எடுத்துவரச் சொல்லப்படுகிறது. ஓவ்வொரு வகுப்பிலிருந்தும் எப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமென்பதை விஞ்ஞான ஆசிரியர் தெரிவுசெய்கிறார். இரண்டு லீற்றர் கொக்கோகோலாப் போத்தலின் விஞ்ஞான அவசியம் தாயாரிற்கு எடுத்தியம்பப்பட்டு அவன் வீட்டில் அது வாங்கப்படுகிறது. தங்கைகளிற்கும் தாயாரிற்கும் பகிர்ந்து பானம் அருந்தப்பட்டு முடிந்ததும், வேலை ஆரம்பிக்கிறது. போத்தலின் கீழ்ப்பகுதி சீராக அரிந்து நீக்கப்படுகிறது. ஒரு குமிழ்முனைப் பேனாவின் உடலும் இரண்டு றீபிள்களும் எடுக்கப்படுகின்றன. குளாயாக்கப்பட்ட முமிழ்முனைப் பேனாவின் உடலில் இரண்ட…
-
- 1 reply
- 2k views
-
-
"தவறான தீர்ப்பு" அக்டோபர் / நவம்பர் 2022 இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எட்டாவது ரி 20 உலகக்கோப்பை தொடரில், 06/11/2022 அன்று பாகிஸ்தான் பங்களாதேஷ் துடுப்பாட்டம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது. யார் வெல்லுகிறார்களோ அவர்கள் அரை இறுதி ஆட்டத்துக்குப் போக தகுதி அடைவார்கள். இந்த சூழ்நிலையில் தான் பங்களாதேஷ் அணித் தலைவரும் சிறந்த துடுப்படி வீரருமான சகிப் அல் ஹசன் மைதானத்துக்குள் சென்றார். அப்பொழுது, பங்களாதேஷ் நல்ல நிலையிலும் இருந்தது. அவர் முதல் பந்தை தடுத்த பொழுது, பந்து மட்டையில் பட்டு காலில் பட்டது. அதை சரியாக கவனிக்காமல், மூன்றாவது நடுவர் கூட தவறான தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்புத்தான் பாகிஸ்தானை அரை இறுதிக்கு இட்டுச்சென்றது. இதை பார்த்துக்கொண்…
-
- 1 reply
- 308 views
-
-
முதல் மாசம் சம்பளம் வந்ததும் 10ம் திகதிக்கு முதல் காசை எடுத்து அண்ணாச்சி கடையில எல்லாரும் குடுத்திச்சினம். தாய் சீட்டு அவருக்கு, அதாவது முதல் சீட்டு அவருக்கு. அதால 20 பேருக்கும் தலா 4‘000. தன்ர கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டார். வியாபாரம் ஓரளவு ஓடிச்சு. வேற மலிகைசாமான் கடைகளும் பக்கத்தில இருக்கிறதால அவருக்கு கஷ்டம் தான். அண்ணாச்சி ஒரு பிழை விட்டிட்டார், அதின்ர விழைவு இன்னும் தெரியேல்ல. சில பேருக்கு வீட்டில இறுகீற்று. 4‘000.- பெரிய காசு. வாங்கிற சாமான்கள விலைய பார்த்து வாங்குற நிலை. சீட்டெண்டா சும்மாவா, அதுவும் 80‘000 பிராங் சீட்டு. வாயை கட்டி வைத்தை கட்டி வாழ வேண்டும். சரி பெரிசா வரும் எண்ட எண்ணம் மனசுக்க இருந்தது. வீடு வாங்கலாம் அது இது வாங்கலாம் என்கிற கற்ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
மேமாத நினைவும் இருகண்களை இழந்த போராளியின் கதையும். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Sunday, May 19, 2013 தாயகத்தில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலம் அது. 08.06.2003 மகளின் 5வது பிறந்தநாள். அந்தமுறைப் பிறந்தநாள் செஞ்சோலையில் காலையும் , மாலை காந்தரூபன் அறிவுச்சோலையிலும் , மதியம் நவம் அறிவுக்கூடத்தில் பல்துறை அறிவுசார் கற்கை நெறிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஊனமுற்ற போராளிகளோடும் அன்றைய பொழுதை செலவிடுவதென முடிவாகி காலை 8மணிக்கு வள்ளிபுனம் செஞ்சோலைக்குச் சென்று மதியம் 12மணிக்கு விசுவமடுவில் அமைந்துள்ள நவம் அறிவுக்கூடத்திற்குச் சென்றோம். ஏற்கனவே இருமுறை நவம் அறிவுக்கூடம் போயிருந்ததில் ஏற்பட்ட அறிமுகம் பல பாடகர்கள் , இசைக்கலைஞர்கள் , கவிஞர்கள் , எழுத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
"திருந்தாத மனிதர்கள்" அது ஒரு காடை ஒட்டிய குக்கிராமம். அந்தக் குக்கிராமத்தில், வயல் வெளிகளுக்கு இடையில் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக நாற்பதோ, ஐம்பதோ வீடுகள் தான் இருந்தன. அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு சிறு கடையும், ஒரு சிறுவர் பாடசாலையும் ஒரு சிறு ஆலயமும் இருந்தன. உயர் வகுப்புக்கு கொஞ்சம் தள்ளித் தான் போகவேண்டும். அந்த ஆலயத்திற்கு பக்கத்திலும், வயலுக்கு, குளத்தில் இருந்து போகும் வாய்க்காலை ஒட்டியும், அந்த கிராமத்தில் கொஞ்சம் வசதியான ஒரு கல் வீடு இருந்தது. அங்கு மூன்று மகனுடனும், மூன்று மகளுடனும், ஒரு தலைமை குமாஸ்தா வாழ்ந்து வந்தார். அவருக்கு, அந்த கிராமத்தில் கொஞ்சம் செல்வாக்கு, ஓரளவு படித்தவரும், ஓரளவு செல்வந்தவரும் ஆவார். அவரின் குடும்பத்தில் முதல…
-
- 1 reply
- 399 views
-
-
"வறுமையிலும் நேர்மை...!" இலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடியில், வறுமை வீதம் 2021 ஆண்டில் இருந்த 13.1% இல் இருந்து 2022 ஆண்டு, 25.6% அடையும் என்று உலக வங்கி கூறியது. இப்படியான ஒரு சூழலில் தான் நானும் மனைவியும், விடுதலையின் பின் யாழ்ப்பாணம் இருந்து கொழும்புக்கு சொகுசு பேரூந்தில் போய்க் கொண்டு இருந்தோம். எமது பேரூந்து வவுனியாவில் சிறு ஓய்விற்காக தரித்து நிற்கும் பொழுது, ஒரு சின்ன பெண், ஒரு கூடையில் மாம்பழத்துடன் ஏறி, அதை விற்கத் தொடங்கினார். அவள் எம் அருகில் வரும் பொழுது இன்னும் அறைக்கூடைக்கு மேல் மாம்பழம் இருந்தது, அதை எடுத்து மணந்து பார்த்த என் மனைவி, அது நல்ல பழம் என்றும், விலையும் மலிவாக இருக்குது என்று என் காதில் மெல்ல சொன்னார். என்னிடம…
-
- 1 reply
- 553 views
-
-
நாவினால் சுட்ட வடு( சிறுகதை) அன்று வெளியூரில் இருக்கும் அவரது நண்பர் ஒருவர் அவரைப்பார்க்க வருவதாகப்போனில் சொன்னார். இவரும் சரி வாருங்கள் பஸ்விட்டு இறங்கியபின் போன் செய்யுங்கள் என்று சொன்னார். அவரும் சரி இன்று மாலை வருவேன் வந்து இறங்கிவிட்டுப் போன் செய்கிறேன் என்று சொன்னார். அவரும் சொன்னதைப்போலவே அன்றுமாலை வந்து பஸ்சில் இறங்கியபின் இவருக்குப்போன் செய்தார். அப்போது இவர் சொன்னார் போனில் லொக்கேசன் அனுப்பியிருப்பதாகவும் அதை அருகில் இருக்கும் ஆட்டோகாராரிடம் சொல்லி ஆட்டோபிடித்து வந்து சேருமாரும் இவர் சொல்ல அவர் சரி என்று சொல்லி விட்டு போனை கட்செய்தார்சிறிதுநேரத்தில் அவர் மீண்டும்தொடர்புகொண்டு “ அவன் 300 ரூ கே…
-
-
- 1 reply
- 513 views
- 1 follower
-
-
மரணம் கொன்ற மாவீரர்களின் அப்பா. அப்பாவை அன்புச்சோலை முதியோர் இல்லத்தில் சமாதான காலத்தில் சந்தித்தேன். மகள் என்று சொல்லி தனது இருப்பிடம் பிள்ளைகளின் படங்களையெல்லாம் காட்டினார். எனது பிள்ளைகளை தன்னோடு கூட்டிச்சென்று தனது உணவிலிருந்து பங்கு கொடுத்தார். அன்புச்சோலையில் இருந்த பல அப்பாக்கள் அம்மாக்களில் அந்த அப்பாவும் ஒருவர். தலைவரிடம் கவுரவம் பெற்ற படமொன்றை தன்னோடு வைத்திருந்தார். அன்புச்சோலைக்கு பொறுப்பாயிருந்த டிஸ்கோ அண்ணா அங்கிருந்த பலரது சோகக்கதைகளை கதைகதையாகச் சொன்னார். அன்புச்சோலையை விட்டு வெளியேறும் போது பலரது பாசத்தையும் சுமந்து கொண்டே திரும்பினேன். யுத்தம் முடிந்து அனாதைகளான பலரைத் தேடியது போல அன்புச்சோலையின் அம்மாக்களை அப்பாக்களையும் தேடினேன். வவுனிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்' இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில், முல்லைத்தீவு ஒரு சிதைந்த நிலமாக, ஆனால் இன்னும் நம்பிக்கையின் கல்லறையாக இருந்தது. பசி குண்டுகளை விட சத்தமாக அலறியது. என்றாலும் சரியான உணவின்றி, ஆனால் இன்னும் நம்பிக்கையில் உயிர் வாழும் மக்கள் அங்கு நிறைந்து இருந்தனர். மருந்தின்றி துடிக்கும் குழந்தைகள், குண்டுகளின் வெடிப்பினால் ஏற்பட்ட நஞ்சு கலந்த காற்றினாலும் மக்களுக்கு பயம் கலந்து இருந்தது. வீடுகளும் நிலங்களும் எரிந்தன. குழந்தைகள் பால் இல்லாமல் அழுதனர். வயதான பெண்கள் மருந்து இல்லாமல் மயக்கமடைந்தனர். மௌனம் கூட பயமாகத் தோன்றியது. அங்கே விழுந்து கிடந்த பிணங்களை அகற்றவோ அல்லது யார் எவர் என்று அடையாளம் காணவோ அல்லது எத்தனை என்று எண்ணு…
-
- 1 reply
- 177 views
-
-
"பொய் சாட்சி" ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக் கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/2009 பின் மக்களின் போராட்டம் தீவீரம் அடைந்த…
-
-
- 1 reply
- 462 views
- 1 follower
-
-
"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை) மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின. அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்க…
-
- 1 reply
- 193 views
-
-
"விடியலைத் தந்த பொங்கல்" கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பொங்கலிலும் விடியலைத் தேடுகிறேன். நம்பிக்கையும் முயற்சியும் என்னிடம் நிறைய முன்பு இருந்தது, என்றாலும் நம்பிக்கை இப்ப மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. ஆனால் நான் முயற்சியை, மாற்று வழிகள் தேடுவதை என்றும் நான் கைவிடவில்லை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஆண்டாண்டு காலமாக தமிழன் சொல்வதை, அதில் இப்ப எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ, நான் அதை மறக்கவில்லை. இன்று ஜனவரி 14, 2023 சனிக்கிழமை, மூன்றாவது இலங்கை இந்தியா ஒருநாள் சர்வதேச துடுப்படி ஆட்டம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு அதில் சலிப்புத்தான் வந்தது, இந்தியா 390 ஓட்டங்கள் எடுத்தவேளை, இலங்கை 75 ஓட்டமே பெறமுடியாமல் திண்டாடிக்க…
-
- 1 reply
- 476 views
-
-
முதலாளித்துவம் ------ பணப்பலம் உள்ளவனும் பணம் படைத்தவனும் பணத்தாசை பிடித்தவனும் ஒன்று சேர்ந்தார்கள் "பிறந்தது பொருளாதாரம்" ^ எழுத்துருவாக்கம் கே இனியவன்
-
- 1 reply
- 1.3k views
-
-
சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.நன்றி ;சுஜாதா -------------சுஜாதா கொடுத்த உதாரணக் கதை கீழே ;-------------தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?கதை: முதலிரவில் கேள்வி-------------- என் கதைகள் தொடருது -------------- தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில் குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் . கதை ; செலக்சன் சரியில்லை
-
- 1 reply
- 1.7k views
-