கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
புதிதாக வந்தவர்கள் -------------------------------- அந்த வீட்டின் முன்னால் அவ்வளவு ஆட்கள் இதுவரை கூடினதே இல்லை. இருபது வருடங்களுக்கு மேலாக இதே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே நான் இருக்கின்றேன். அந்த வீடும், அங்கு இருப்பவர்களும் அதைவிட இன்னும் அதிக காலமாக அங்கே இருக்கின்றார்கள். அங்கு இருப்பவர்கள் இருவரும் வயதான கணவன் மனைவி. நாங்கள் இங்கு குடிவரும் போதே அவர்கள் வயதானவர்களாக இருந்தார்கள். சில வருடங்களில், வருடம் முழுவதும் கூட, அவர்களின் வீட்டிற்கு எவரும் வருவதில்லை. ஆட்கள் வந்த வருடங்களில் கூட ஓரிருவரே இதுவரை வந்து போயிருக்கின்றனர். ஆரம்பத்தில் அவர் என்னுடன் அவ்வளவாகப் பழகவில்லை. பிள்ளைகளும், நானும் ஒருநாள் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். ப…
-
-
- 9 replies
- 485 views
- 1 follower
-
-
மரியானா அகழி ------------------------- அவன் அந்த ஒழுங்கையால் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வந்து கொண்டிருந்தான். போகும் போது என்னையும் வா என்று வலியவே துணைக்கு கூட்டிக் கொண்டு போனான். அந்த ஒழுங்கையின் முடிவில் ஒரு கோயில் இருந்தது. ஆனால் இருவரும் கோயில் போய் சாமி கும்பிடுகிற ஆட்கள் இல்லை. ஏன் இந்த ஒழுங்கையில் தினமும் வருகின்றோம் என்று பல நாட்கள் நான் நச்சரித்த பின், அவன் உண்மையைச் சொன்னான். அந்த ஒழுங்கையில் இருந்த பெண் பிள்ளை ஒன்றின் பின்னால் அவன் சுத்துகின்றானாம் என்று அவன் சொன்னான். அந்தப் பிள்ளையும் எங்களின் வகுப்பு தான். அந்தப் பிள்ளையின் குடும்பம் 83ம் ஆண்டுக் கலவரத்தில் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்து ஊருக்கு வந்தவர்கள். என்னை ஏன் கூட்டி…
-
-
- 12 replies
- 670 views
- 1 follower
-
-
ஆகஸ்ட் இரண்டு -------------------------- சந்தியில் நண்பன் ஒருவன் பலசரக்கு கடை வைத்திருந்தான். அந்த நாட்களில் ஒரு நாளின் சில பகுதிகளை அங்கே செலவிடுவதும் எங்களின் வழக்கமாக இருந்தது. பல சமயங்களில் நண்பனின் இரு சகோதர்களும் கூட அங்கே வியாபாரத்தில் நிற்பார்கள். எங்களுக்குள் ஒரு சில வயதுகளே இடைவெளி. கடை ஒரு அமைவான இடத்தில் இருந்தது. புதிய சந்தைக் கட்டிடத்தில் சந்தியை நோக்கிய திசையில் கடை இருந்தது. கடையில் இருந்து பார்த்தால் சந்தி முழுவதும் தெரியும். அப்பொழுது நான் சில தனியார் கல்வி நிலையங்களில் படிப்பித்துக் கொண்டிருந்தேன். மிகுதி நேரங்களில் இந்தக் கடை, பந்தடி, கடற்கரை, கோவில் வீதி, சந்தியில் மற்றும் ஊரில் இருக்கும் திண்ணைகள், கல்யாண வீட்டுச் சோடனைகள…
-
-
- 6 replies
- 614 views
-
-
கறுப்புச் சட்டை ------------------------ அறிவித்தலில் இருந்த திகதிகளை கழித்துப் பார்த்தால், அவருக்கு 55 வயதுகள் தான் ஆகியிருந்தது என்று வந்தது. அடப் பாவமே, இப்படி இடைநடுவிலேயே போய்ச் சேர்ந்து விட்டாரே என்ற மெல்லிய கவலை பற்றிப் பிடித்தது. அவரை சில தடவைகள் அங்கே இங்கேயென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் பழக்கம் எதுவும் இல்லை. ஒரு தடவை கூட அவருடன் உரையாடியதும் இல்லை. நல்ல மனிதன் என்று அவர் உயிருடன் இருக்கும் போதே பலரும் சொல்வார்கள். தோற்றத்தில் இன்னும் ஒரு பத்து வயதுகள் அதிகமாகவே தெரிந்திருந்தார். எப்படி இறந்திருப்பார் என்று அறிவித்தலில் போட மாட்டார்கள், ஆனால் காலமானார் என்று இருந்தது. அகாலமானார் என்று இல்லை, ஆகவே விபத்து என்று எதுவும் இல்லை. காலம…
-
- 0 replies
- 138 views
-
-
அடிப்படை அனுபவம் ---------------------------------- பல வருடங்களின் முன் மகனுக்கு எட்டு வயதாக இருந்தது. அன்று ஒரு பிள்ளை எட்டு வயதில் எட்டு வித்தைகளையாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தச் சூழலில் ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. எட்டு வயதில் ஒரு அஷ்டாவதானி போல. இன்று சூழலின் நிர்ப்பந்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு பிள்ளைகளையும் சதாவதானிகளாக மாற்றாமல் இது ஓயாது போல. எனக்கு இதில் துளியளவும் நம்பிக்கையும் இல்லை, கூட்டத்துடன் சேர்ந்து ஓடுவதற்கான பொறுமையும் அன்று இருந்திருக்கவில்லை. ஊரில் நீச்சலை நானாகவே தான் சிறு வயதில் கற்றுக் கொண்டேன். கடலில் தான். சேர்ந்து போயிருக்கின்றோம், ஆனாலும் அவரவரே நீந்திப் பழகினோம். ஒரு நாள் இரண்டு பாகம் கடலில் கீ…
-
-
- 8 replies
- 902 views
-
-
"பிரியமான தோழிக்கு [காதலிக்கு]" இலங்கை, யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில், அன்று மகிழன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பொதுவாக கருணையும், இரக்கமும் கொண்டவன். அவன் இளம் பொறியியலாளராக இருந்தும் எழுத்தின் மீதும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு இருந்தான். ஒரு நாள் யாழ் நூலகத்தில், இலக்கிய புத்தகங்களை அவன் கண் மேய்ந்துகொண்டு இருந்தபொழுது, தற்செயலாக அவன் கண்ணில் பட்டவள் தான், இன்று அவனின் பிரியமான தோழியான, அன்பு மனைவியான இலக்கியா. இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருக்கும் அழகான மற்றும் புத்திசாலி இளம் பெண் அவள். இருவர் கண்களும் அங்கு தங்களை அறியாமலே ஒருவரை ஒருவர் மேய்ந்தன. 'ஹாய்' என்று மகி…
-
- 0 replies
- 466 views
-
-
"என்ன தவம் செய்தேனோ...!" நான் சாதாரண வகுப்பு மாணவன். நான் எங்கள் சுண்ணாம்பு கல் வீட்டின் திறந்த விறாந்தையில் உள்ள குந்தில் இன்னும் படுத்து இருக்கிறேன். நேரம் காலை ஆறு மணி. கதிரவன் எட்டிப்பார்க்க தொடங்குகிறான். இன்னும் அம்மா தேநீர் போட அடுப்படிக்கு போகவில்லை. இன்று வெள்ளிக்கிழமை அது தான் அம்மா குளித்து, இப்ப எம் முற்றத்தில் உள்ள துளசியை வளம் வந்து பூசை செய்து கொண்டு இருக்கிறார். நான் படுத்தபடியே, தலைமாட்டில் நான் வைத்திருந்த பாக்கெட் ரேடியோவை இலங்கை, இந்தியா காலை செய்திகள் அறிய திருப்பினேன். "பாலியல் வன்கொடுமை வேகமாக அதிகரித்து வரும் இடங்களில் ஒன்று இன்று இந்தியா. சமீபத்திய ஆய்வின் படி இந்தியாவில் ஒருநாளைக்கு 106 பாலியல் வல்லுறவுகள் நடைபெறுகிறது.…
-
- 1 reply
- 313 views
- 1 follower
-
-
குரு பார்வை -------------------- அது எங்களின் பரம்பரைப் பள்ளிக்கூடம், அங்கே தான் படிக்க வேண்டும் என்று சொல்லியே அங்கே முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வீட்டிலிருந்து அந்தப் பாடசாலைக்கு போகும் வழியில் இன்னும் இரண்டு பாடசாலைகள் இருந்தன. ஆனாலும், அவை இரண்டையும் தாண்டிப் போய், பரம்பரையை தொடரும் கடமை எனக்கு அந்த தூரத்துப் பாடசாலையில் இருந்தது. அத்துடன் அங்கே சில ஆரம்ப வகுப்புகள் மட்டுமே இருந்தன. அந்த வகுப்புகள் முடிந்த பின்னர் என்ன செய்வதென்ற இக்கட்டான நிலை இந்தப் பரம்பரையில் இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கவில்லை. அந்த நிலை எனக்கு ஏற்படும் போல இருந்தது. பின்னர், வேறு வழியில்லாமல், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரிய பாடசாலைக்கு, பெரிய வகுப்புகளுக்காக …
-
-
- 4 replies
- 642 views
-
-
"ஆசையில் ஓர் காதல்" மலை அடிவாரத்தில் உஷா என்ற அழகிய இளம் பெண், தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் நீண்ட கருங் கூந்தலையும் பிரகாசிக்கும் அழகிய கண்களையும் கொண்டு இருந்தாள். அவள் ஒரு உண்மையான காதல் தனக்கு கிடைக்க வேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஏங்கி வந்தாள். ஆனால் இப்ப அவள் பல்கலைக்கழகம் போன பின்பும், இன்னும் அப்படியான ஒரு காதலை அவளால் அடைய முடியவில்லை. ஒரு நாள், பல்கலைக்கழக விடுமுறை நாளில், தன்னந்தனிய சிறு பத்தைகள் நிறைந்த காட்டுப்பகுதியில், இயற்கையின் அழகையும் அங்கு பறந்து திரியும் பறவைகளையும் ரசித்தபடி நடந்து சென்றாள். அப்பொழுது அவளுக்கு எதிராக நல்ல உயரமும் அழகிய வலிமை பொருந்திய உடல் அமைப்பும் கொ…
-
- 0 replies
- 156 views
-
-
ஆதித்தாயின் மொழி --------------------------------- 'ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று. விளையாடி விட்…
-
-
- 9 replies
- 794 views
- 1 follower
-
-
"நிலவே முகம் காட்டு .. " ஞாயிறு, செப்டம்பர் 23, 2018, நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக சென்னை நகரம் இரண்டு மணித்தியாலத்துக்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தது. பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் இருந்தனர். அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" எனக் கூறி பரவசப்பட்டனர். ஒருசிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்து விட்டனர். எனக்கு இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது, நான் உயர் வகுப்பு படிக்கும் கூலித் தொழிலாளியின் மகன். எங்கள் குடிசைக்கு கொஞ்சம் அருகில் தான், ஒரு மாட மாளிகையில் ஒரு கோடீஸ்வரர் வாழ்ந்து வாரார். அவர் குடும்பமும் தமது மொட்டை மாடியி…
-
- 0 replies
- 413 views
-
-
"காதல் கடிதம்" காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று! “என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்? எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான் தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்! உன்னுடைய இனிமை நிறைந்த தனி…
-
- 0 replies
- 366 views
-
-
ஆரண்ய காண்டம் ---------------------------- இராமன் நாடு விட்டு காடு போய், அங்கு காட்டில் வாழ்ந்த நாட்கள் தான் ஆரண்ய காண்டம் என்று படித்திருக்கின்றோம். அங்கே காட்டில் கொடிய அரக்கர்களும், அசுரர்களும் இருந்தார்கள். அவர்கள் வனத்தில் தவமிருந்த அப்பாவி முனிவர்களுக்கு தொல்லைகளும், கஷ்டங்களும் கொடுத்தார்கள். இராமன் அந்த துஷ்டர்களைக் கொன்று அழித்தார் என்று அந்த ஆரண்ய காண்டத்தில் இருக்கின்றது. அப்படியே இராவணன் வந்து சீதாப்பிராட்டியை கவர்ந்து சென்றதும் அதே ஆரண்ய காண்டத்தில் தான். 'ஆரண்ய காண்டம்' என்னும் படம் தான் தமிழில் வந்த மிகச் சிறந்த பாதாள உலகம் பற்றிய, தாதாக்களை, சண்டியன்களை, ரவுடிகளை பற்றிய படம் என்று பல வருடங்களின் முன் ஒரு எழுத்தாளர் எழுதியிருந்த…
-
-
- 5 replies
- 610 views
-
-
"பார்வை ஒன்றே போதும்" திடீரென எதேச்சையாக இருவர் சந்திக்கும் பொழுது அவர்களின் கண்கள் அப்படியே ஒருவரை ஒருவர் அசையாமல் கணப்பொழுது நின்றுவிட்டது என்றால், அதுவும் இளம் ஆணும் பெண்ணும் என்றால், 'கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!' என்பதைவிட அது வேறு ஒன்றாக இருக்க முடியாது. இதை பட்டாசு வெடிப்பது போல இதயங்கள் வெடிக்கின்றன என வர்ணிப்பார்களும் உண்டு. இருவரின் தனித்துவமான வெளிப்படையான இயல்புகள் ஒருங்கினையும் பொழுது மின்சாரம் பாய்வது போல அந்த உணர்வு தானாக ஏற்படுகிறது. அது அப்படியே இருவரையும் விழுங்கிவிடுகிறது என்று நான் முன்பு படித்த கவிதை ஒன்று எ…
-
- 0 replies
- 155 views
-
-
"உதவும் கரங்கள்..!" நாம் ஒரு இருட்டில் தொலைந்து போனால், யாராவது ஒருவர் கொஞ்சம் வெளிச்சம் தந்து பாதுகாப்பான வழியை காட்டினால் நல்லது. ஆமாம் ஒரு சிறிய ஒளி, எங்கள் வீட்டிலும் நாம் வாழும் உலகிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், முதலில் நாம் அதற்கு உடந்தையாக இருக்கவேண்டும். அன்பான சொற்களால், இதயத்தை மகிழ்வாக தொடுவதால், காது கொடுத்து கேட்பதால், அல்லது இதயபூர்வமாக உதவும் கரங்களால் இதை செய்யமுடியும். அதையும் பணத்தை விட, விளம்பரம் செய்வதை விட, முழுக்க முழுக்க அன்பினால் செய்யவேண்டும். அங்கு ஆடம்பரமான மேன்மை அல்லது பாசாங்குத்தனம் இருக்கக் கூடாது. மற்றவர்கள் வேண்டும் என்றால், உங்களை பெருமையாக கூறட்டும். எதோ தன் சுய பெருமைக்கு, பெரிதாக செய…
-
- 0 replies
- 380 views
-
-
"குடும்பம் ஒரு கோயில்" "கோவில் கூடாது என்று சொல்லவில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது" - பராசக்தி உண்மையில் கலைஞர் மு கருணாநிதியின் இந்த வசனம் அன்று எனக்கு விளங்கவில்லை. நான் அதை பெரிதுபடுத்தவில்லை. எதோ சந்தையில் வாங்கும் தலையணையில் கவர்ச்சியாக எழுதி இருக்கும் ஒரு வசனம் போல் அதை எடுத்துக்கொண்டேன். வீடு என்பது நான் இரவில் உறங்கும் இடமாக, வீட்டு புறா மாதிரி, தினம் திரும்பும் ஒரு வசிப்பிடமாக கருதினேன். வீடு என்பது கட்டாயம் ஒரு குடும்பத்தின் அடையாளம் என்று கூட கருதலாம். ஆமாம் நான் பாதுகாப்பாக, குடும்ப வலைக்குள் அகப்பட்டவனாக, அதே நேரம் பொதுவாக மகிழ்வாக, அன்பு விளையும் ஆலயமாக உணர்ந்தேன். ஆமாம் ’ஆ’ என்றால் ஆன்மா.’லயம்’ எ…
-
-
- 2 replies
- 583 views
-
-
லுங்கி டான்ஸ் ---------------------- புதுச் சாரம் தான் புது உடுப்பு என்ற எண்ணம் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது என்றால் சிலருக்கு அது ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். உண்மையில் ஆச்சரியம் என்னவென்றால், இன்றும் 'புது உடுப்பு ஒன்றைப் போடுங்கோ...........' என்று வருட நாளிலோ அல்லது தீபாவளி அன்றோ சொல்லப்படும் போது, என்னையறியாமலேயே ஒரு புதுச் சாரத்தை கட்டிக் கொண்டு வந்து நிற்பது தான் ஆச்சரியமாக இருக்கின்றது. புதுச் சாரம் மடங்காமல், இடுப்பில் அப்படியே ஒட்டாமல், கோதுமை மா களி பூசின மாட்டுத்தாள் பேப்பர் போல நிற்கும் அந்த உணர்வை வேறு எந்த புது உடுப்பும் கொடுப்பதில்லை. ஒரு வருடம் முழுவதும் பாடசாலைக்கு வெள்ளை சேட் இரண்டு, நீலக் காற்சட்டை ஒன்று போதும். அடுத்த வருடம்…
-
-
- 45 replies
- 3.2k views
-
-
கோட்பாட்டின் சதி ----------------------------- வார இறுதி நாட்களில் ஏதாவது ஒன்றின் பெயரால் ஒன்றாகக் கூடுவதும், அன்றைய அரசியலை, சினிமாவை, விளையாட்டுகளை அலசி ஆராய்வதும் புலம்பெயர் சமூகத்தின் ஒரு அடையாளம் ஆகிவிட்டது. சமூக ஊடகங்களை விட நேரில் ஒன்றாகக் கூடி விடயங்களைப் பகிர்வது மிக இலகுவான, சுமூகமான ஒரு செயல். இன்டெர்நெட்டில் அவர்களுக்குள் ஆவிகள் புகுந்தது போல சுற்றிச் சுழன்று அடிக்கும் பலர் நேரில் ஒரு வார்த்தை கூட கதைக்கமாட்டார்கள். ஒரு கருத்துமே அவர்களிடம் இருக்காது. அவர்களா இவர்கள் என்றும் தோன்றும். நிதானமான நிலையில், நேரிலும், இன்டெர்நெட்டிலும் தீ மிதிப்பின் போது வருவது போல கடும் உருக் கொண்டு உலாவுகின்றவர்கள் மிகச் சிலரே. எங்களின் வகுப்பு படித்…
-
-
- 16 replies
- 648 views
-
-
"அதுவொரு கனாக்காலம்" [அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது] ஒரு காலத்தில், இலங்கையின் வெப்பமண்டல சொர்க்கத்தில், தமிழ் சிங்கள வேறுபாடுகள் இன்றி பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் இலங்கையன் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்தனர். இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையையும் நிலத்தின் மீதான அன்பையும் பகிர்ந்து கொண்டு இணக்கமாக வாழ்ந்தனர். இலங்கைத்தீவு வளங்கள் நிறைந்ததாக இருந்தது மட்டும் அல்ல, அதன் மக்கள் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒற்றுமையில் மகிழ்ச்சியடைந்தனர். உதாரணமான சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டது மட்டும் அல்ல, 1911 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சட்ட சபை உறுப…
-
-
- 2 replies
- 684 views
-
-
கள்ளப்பந்து ------------------ கட்டுப்பந்தில் தான் ஆரம்பத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒரே பந்தை தைத்து தைத்து ஒரு வருடம் கூட வைத்திருப்போம். காற்று உடனேயே போகுது என்று தெரிந்தால், உள்ளுக்குள் இருக்கும் பிளாடரை வெளியே எடுத்து, தண்ணீர் வாளிக்குள் அமுக்கி, எங்கே ஓட்டை என்று கண்டுபிடித்து ஒட்டுவோம். ஒரு பந்தின் மேற்பகுதி முப்பத்தி இரண்டு துண்டுகளால் ஆக்கப்பட்டிருக்கும். அதில் இருபது அறுகோண துண்டுகள், பன்னிரண்டு ஐங்கோண துண்டுகள். ஒவ்வொரு துண்டையும் நாங்கள் 'ஓ' என்ற பெயரில் தான் சொல்லுவோம். 'ஓ' பிய்ந்து விட்டது, 'ஓ' மாற்ற வேண்டும், இப்படித் தான் முப்பத்தி இரண்டில் எந்த துண்டும் குறிப்பிடப்படும். ஏன் ஒரு துண்டை 'ஓ' என்று சொல்கின்றார்கள் என்று இன்று…
-
-
- 4 replies
- 551 views
-
-
"பெண்ணை மதித்திடு" கி.மு. 500க்கு முன்னர் திருகோணமலையில் பாரிய சனத்தொகையையோ, கட்டமைக்கபட்ட ஆட்சிமுறையையோ கொண்டிருந்திருக்காத சில மனித குழுக்கள் - அவர்களை இயக்கர், நாகர் என்ற இனமாக - தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். மேலும் 1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்…” …
-
-
- 3 replies
- 625 views
-
-
தங்க மீன்கள் -------------------- சுவாமி விவேகானந்தர் அவரது புகழ்பெற்ற சிகாகோ சொற்பொழிவில் ஒரு தவளைக் கதை சொல்லியிருப்பார். கடலில் இருந்து கிணற்றுக்குள் விழுந்து விடும் ஒரு தவளை, அங்கேயே இருக்கும் தவளைகள், அவைகளின் உரையாடல்கள் என்று அந்தக் கதை போகும். இது எங்கேயும் எடுத்து விடுவதற்கு நல்ல வசதியான ஒரு கதை. 'என்னையே தவளை என்று சொல்கிறியா..........' என்று எந்த விவாதத்தையும் வாக்குவாதமாக மாற்றக் கூடிய தன்மையுள்ளது சுவாமியின் இந்தக் கதை. கதையின் சாராம்சத்தை, அதிலுள்ள தத்துவத்தை விட, எனக்குப் பிரச்சனையாகவே இருந்தது கடல் தவளை ஒன்று கிணற்று நீருக்குள், அந்தச் சின்ன வட்டத்திற்குள் உயிர் வாழுமா என்னும் உயிரியல் சந்தேகமே. கலர் கலரான கடல் மீன்கள் வட்டி என்று சொல்லப…
-
-
- 2 replies
- 632 views
-
-
பூவரசம் வேர் -------------------- எனக்குத் தெரிந்து பூவரசு மரத்திற்கு ஒரே ஒரு பயன் தான் அன்று இருந்தது. இலையைப் பிடுங்கி, நுனியைக் கிள்ளி விட்டு, அதைச் சுருட்டி, பீப்பீ செய்து ஊதுவது தான் எனக்குத் தெரிந்திருந்த அந்த ஒரு பயன். ஆட்டுக்கு போதிய குழை இல்லாத நாட்களில், கிடைக்கும் சில முள்முருங்கை, கிளிசரியா குழைக்குள் நடுவில் பூவரசம் குழையை வைத்து ஆடுகளைப் பேய்க்காட்ட சில தடவைகள் முயன்றிருக்கின்றேன். பூவரசங்குழை வீட்டிலும், வெளியிலும் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஆடுகள் அறிவுள்ளவையாக இருந்தன. பூவரசம் குழை குப்பைக்குள் மட்டுமே போய்க் கொண்டிருந்தது. பின்னர் ராதிகா 'பூவரசம் பூ பூத்தாச்சு.................' என்று அறிமுகமானார். பூவரசு திடீர…
-
-
- 11 replies
- 965 views
- 1 follower
-
-
நளபாகம் --------------- நல்ல கைப்பக்குவம் உள்ளவர் வாழ்வில் துணையாக கிடைத்தால் அது பெரும் அதிர்ஷ்டமே. மூன்று வேளைச் சாப்பாட்டிற்காகத் தான் வாழ்க்கையில் இந்த ஆட்டம் எல்லாம் என்று நடிகர் சிவாஜி கணேசன் சொன்னதாகச் சொல்லுவார்கள். அவரையும், அவருடைய மகன்களையும் பார்த்தால், அவர்கள் மூன்று வேளைகள் தான் சாப்பிட்டிருக்கின்றார்கள் என்று சொல்ல முடியவில்லை. 'எந்தக் கடையில் நீ அரிசி வாங்கினாய்.......' என்ற பாடல் வரிகள் அவர்களுக்காகவே எழுதப்பட்டும் இருக்கின்றது. இதில் இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால், கைப்பக்குவம் உள்ளவர் அவசரமாக சில வாரங்களுக்கு வேறெங்கும் போக வேண்டி வந்தால், வீட்டில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்ன என்பது தான். அக்கம்பக்கத்தில் நண்பர்கள், உ…
-
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
"வேலைக்காரியின் திறமை" வேலைக்காரி என்ற சொல்லுக்கு நாம் பணிப்பெண், ஏவற்பெண் அல்லது தொழுத்தை இப்படி பலவிதமாக கூறினாலும் சிலவேளை அவள் ஒரு அடிமை போல நடத்தப்படுவதும் உண்டு. இது மலருக்கு நன்றாகத் தெரியும். அவள் சாதாரண வகுப்பில் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது, தாயையும் தந்தையையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். அவளுக்கு இரண்டு தம்பியும் இரண்டு தங்கையும் உண்டு. ஒரு சிறு குடிசையில், அப்பா, அம்மாவின் கூலி உழைப்பில் ஒருவாறு சமாளித்து குடும்பம் இன்றுவரை போய்க்கொண்டு இருந்தது. இந்த திடீர் சம்பவம், அவளுக்கு முழுப்பொறுப்பையும் சுமத்திவிட்டது. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கூலி வேலைக்கு போகும் பக்குவம் அனுபவம் அவளுக்கு இன்னும் இல்லை என்றாலும், சமையல், த…
-
- 3 replies
- 396 views
- 1 follower
-